24/10/2018

வேர்சொல்லாய்வு தமிழின் ஆயுதம்..


தமிழ்நாட்டில் அகழ்வு செய்து கண்டுபிடிக்கப்படும் தொல்லியல் பொருட்கள் அனைத்தும் மைசூரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே.

அங்கே கேட்பாரற்றுக் கிடக்கும் நிலையில் பல ஓலைச் சுவடிகளும், கல்வெட்டுக்களும் உள்ளன..

நடுவண் அல்லது தமிழ் மாநில அரசுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தால் இவை இவ்வாறு அங்கே இருக்காது என்று அங்கலாய் போரும் உண்டு.

ஐயகோ தமிழ்ப் பராம்பரியம் பறிபோகிறதே என்று புலம்புவோரும் உண்டு.

இந்திய நடுவண் அரசின் சதி புரியாதவர்கள் தான் இவ்வாறு புலம்புவார்கள்.

தமிழ் மொழி தான் பழமையானது என்பதை நாம் அனைவரும் அறிகிறோம்.

தமிழ் மொழியோடு சமணத்தின் பிராக்ரிதமும், பௌத்தத்தின் பாழியும், வைதீகத்தின் சமற்கிருதமும் கலந்து உருவான மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு,துளு மற்றும் மலையாளம்.

ஆனால் கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகள் தமிழை விட மூத்தவை என்று நிரூபிக்க இந்தியப் பிராமனீயம் செய்யும் சதிகளுள் ஒன்றுதான் போலி ஆவணம் உருவாக்குவது.

மண்ணில் தோண்டி எடுக்கப்படும் ஆதாரத்தை மட்டும் நம்பு; மரபறிவை நம்பாதே; கிராம நம்பிக்கைகள்,கதைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே என்று ஆங்கிலேயனும் அவன் அடிவருடிகள் விதைத்த நச்சுக் கருத்தியல் தான் நமக்கு மிகப் பெரிய ஆப்புவைத்துள்ளது.

தமிழ்மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் தொல்லியல் பொருட்களை  இந்திய அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் கன்னட மண்ணில்  புதைத்து விடுவார்கள்.

ஒரு பத்து, இருபது வருடங்கள் கழித்து, அங்கே சென்று தோண்டுவார்கள்.

கன்னட மொழியின் தொன்மைக்கு மிகப் பெரிய சான்று கிடைதுவிட்டதென அறிவிப்பார்கள்.

தமிழி எழுத்துக்களுக்கு முன்னோடியாக இவை இருந்தன என்றும் கதைகட்டப்படலாம்.

இந்திய அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் துறையை இம்மண்ணில் தொடங்கியவர்கள் ஆங்கிலேயர்களே. மண்ணைத் தோண்டி அதன் மூலம் வரலாறைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுத்தவனே வெள்ளையன் தான்.

அதற்கு முன்புவரை  ஊர்ப் பெரியார்கள்  வாயால் கதை கேட்டுத் தான் நம் பிள்ளைகள் வரலாறு தெரிந்து கொண்டார்கள்.

ஒரு மொழியின் வேர்ச்சொல்லாய்வே அம்மொழியின் தொன்மையை அறியவைக்கும்.

அவ்வாறு சொல்லாய்வு செய்து பார்த்தால் கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய மொழிகளின் தாய் தமிழ் மொழிதான்.

செப்புப் பட்டயங்களும், கல்வெட்டுக்களும் நம் முடிவை உறுதிப்படுத்தி கொள்ள மட்டும் பயன்பட்டாலே போதுமானது.

தமிழின எதிரி சற்றும் எதிர்பார்க்காத ஒரு ஆயுதம் தான் சொல்லாய்வு.

இதை இத்தலைமுறைக்கு கொடுத்துச் சென்ற பாவாணருக்கே எல்லாப் புகழும் சேரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.