24/10/2018

இந்துத்துவாவின் இரண்டு தூண்கள் தான் திராவிடம் & தலித்தியம்...


கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?

பதில்: இது கொஞ்சம் பெரிய விடயம். அதை எளிய வடிவில் கதை போல் விசயத்துக்குள் செல்வோம்.

திருட்டு கூட்டாளிகள் :

தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.

ஆரியன் என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி?

தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.

திராவிடன் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான்.

பின்பு திராவிடன் 'உண்மை தான் தமிழரசா, ஆரியன் சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான்.

அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திராவிடன் ஆரியனுக்கு தான் துணை நிற்கிறான்.


தலித்தியன் என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான்..

'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான்.

இறுதியில் அந்த தலித்தியன் போட்டானே ஒரு போடு....

அடேய் தமிழரசா... நீ தமிழரசனே கிடையாதப்பா...... உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.. எல்லாமே ஆரியனுடையது தான் என்கிறான்.

திராவிடனாவது தமிழரசனின் உடமைகளை ஆரியனுடையது என்று கூறினான்.

ஆனால் தலித்தியன் ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான்.

கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆரியனுடன், திராவிடனும், தலித்தியமும் இருட்டறைக்குள் கை குலுக்கிக் கொண்டு செல்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.