24/10/2018

பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க.. இதயத்திற்கு நல்லது...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார்.

ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதி
கமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.

சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா..

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.

பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.