24/10/2018

தமிழர் vs திராவிடர் : உரையாடல் 1...


தமிழர்: தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும்.

திராவிடவாதி: யார் தமிழர்?
அவனுக்கான வரையறை என்ன? தமிழர் என்ற ஒரு இனமே கிடையாதே?

தமிழர்: தமிழர் என்ற ஒரு இனமே கிடையாது என்றால், தமிழர் என்பவரை வரையறுக்க முடியாது என்றால், நீங்கள் ஈழத்தை தமிழரே ஆள வேண்டும் என்று சொல்கிறீர்களே, ஈழமே அதற்க்கு தீர்வு என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் நீங்கள் எந்த தமிழருக்காக போராடுகிறீர்கள்?

திராவிடவாதி: அது வந்து.... உணர்வுள்ள தமிழர்களுக்காக போராடுகிறோம்... அவர்களே ஆள வேண்டும் என்று சொல்கிறோம்....

தமிழர்: உணர்வுள்ள தமிழரை எப்படி அடையாளம் காண்பது?

ஒருவனுக்கு இன உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அளப்பது?

திராவிடவாதி: இந்த இனத்திற்காக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.

உதாரணமாக இங்கிருக்கும் மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் குரல்கொடுப்பது, போராட்டம் நடத்துவது, முடிந்தால் களத்தில் கூட நிற்பது, சிறை செல்வது போன்றவை.

தமிழர்: நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்தால் அவர் தமிழர் ஆகிவிடுவாரா...? அப்படி என்றால் தமிழருக்காக குரல் கொடுக்கும் டக்லஸ் தேவானந்தாவை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

தமிழருக்காக உயிரை நீத்த சிங்கள எழுத்தாளரின் வாரிசை நீங்கள் ஈழத்தமிழருக்கு தலைவராக அறிவிப்பீர்களா...?

தமிழருக்காக சிறை சென்றால் அவரும் தமிழர் தான் என்றால், சரத் பொன்சேகா உங்களின் வரையறை படி தமிழர் தானே...?

காரணம், ராஜபக்ஷேவுக்கும் பொன்சேகாவுக்கும் பிணக்கு வந்தபோது ஈழத் தலைவர்கள் பலர் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தனரே....?

ஆக, நீங்கள் சொல்லும் உணர்வுள்ள தமிழர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது. சொல்லுங்கள். ஈழத்தில் எந்த தமிழருக்காக நாடு வேண்டும் என்று போராடுகிறீர்கள்?

ஆக தமிழர் யார் என்றே வரையறுக்க தெரியாமல் உள்ள நீங்கள், ஈழத்தை தமிழர் ஆள வேண்டும் என்று சொல்லும் பின்னணியை கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன்.

திராவிடவாதி:_________

இந்த கேள்வி இன்னும் அப்படியே உள்ளது. தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.