31/12/2017
ரஜினி அரசியல் வருகையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது; மதவாத அரசியலாக இல்லாமல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என ரஜினி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது: விசிக திருமாவளவன் அறிவிப்பு...
விசிக என்றுமே தமிழின விரோத கட்சி என்பதை நிருபித்துக் கொண்டே இருக்கிறது...
இறுதி வரை தமிழனாக தனித்தும் நிற்காமல்.. தமிழர்களுடனும் இனையாமல்.. தமிழர்களை முட்டாளாக்கி.. தான் மட்டும் பணம் பதவி சொகுசாக வாழ மாற்றானின் காலி விழுந்து பிழைக்கிறது...
இந்த கேடுகெட்ட பிழைப்புக்கு எழுச்சி தமிழர் என்ற பட்டம் வேறு...
முகர்சிங் இசைக் கருவி...
முகர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளில் ஓர் உன்னத இடத்தைப் பிடித்திருந்தது "முகர்சிங்" வாத்தியம். அந்தக் காலத்தில் சில வித்துவான்கள் தங்கள் கச்சேரிகளில் மிருதங்கத்தைப் பக்கவாத்தியமாக வைத்துக் கொள்வது போன்றே, முகர்சிங், கடம், கஞ்சிரா , கொன்னக்கோல், கெத்து போன்ற மற்ற உப பக்கவாத்தியங்களையும் வைத்துக் கொண்டு கச்சேரி செய்வது வழக்கமாகும்.
இதுபோன்று பக்கவாத்தியம், உப பக்கவாத்தியம் என்று எல்லா வித்துவான்களையும் இணைத்துக் கொண்டு கச்சேரி செய்வதைப் புல்பெஞ்ச் கச்சேரி" என்று பெயர்.
சமீபகாலம் வரை சீர்காழி கோவிந்தராஜன் அவரது பாட்டுக் கச்சேரியிலும், குன்னக்குடி வைத்தியநாதன் அவரது வயலின் கச்சேரியிலும் முகர்சிங்கை ஒரு பக்கவாத்தியமாக வைத்துக் கொண்டு கச்சேரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று பாட்டுக் கச்சேரியிலும், வாத்தியக் கச்சேரியிலும் ஏன் தாளவாத்தியக் கச்சேரிகளிலும் கூட இந்த முகர்சிங் இசைக்கருவி அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்பதே உண்மை நிலையாகும்.
ஒரு சிறிய கம்பியினாலான மோர்சிங் என்ற இசைக்கருவி ஓர் அருமையான கனவாத்தியமாகும். இதனை "மூர்ச்சங்க்" என்றும் கிராமங்களில் அழைப்பதுண்டு. இந்த இசைக்கருவியை வாயினால் பற்றிக்கொண்டு வாசிக்கப்படுவதால் இதனை ஹிந்தி மொழி இலக்கியங்களில் (சதுர்புஜதாஸ், சிர்தாஸ் ஆகியோரின் கவிதைகளில்) "முகர்சங்க்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
அகோபிலர் எழுதிய "சங்கீத பாரிஜாதம்" என்ற வடமொழி நூலிலும் இது "முகசங்க்" என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இதனை முகத்தின் அருகில், வாயில் வைத்து வாசிப்பதாலும், இது சங்கு போன்ற அமைப்பில், சங்கு வடிவத்தில் உள்ளதாலும் இதனை "முகச்சங்கு" என்றும், முகச்சங்கம், நுகர்சங்கு , முகர்சிங், மோர்சிங் என்றும் அழைக்கின்றனர். இதனை ஆதிகாலத்தில் மூங்கிலால் செய்துள்ளனர். மலைவாழ் மக்கள் மற்றும் கிராமியச் சிறுவர்கள் இதனை மூங்கிலால் செய்த விளையாட்டாக வாயில் வைத்து இசைத்து மகிழ்ந்துள்ளனர். சுமார் ஏழு அல்லது எட்டு சென்டிமீட்டர் நீளம் கொண்டது இச்சிறு இசைக்கருவி. இது இரும்பு எஃகினால் செய்யப்படுகின்றது.
மேலும் சிவபெருமானின் திரிசூலம் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் உடல் குதிரைலாடம் போன்ற வடிவம் உடையது. இதன் நடுவில் இரு புறங்களையும் விட சற்று நீளமான ஒரு நாக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர் மோர்சிங்கை இடது கையின் உள்ளங்கையினால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கிடுக்கிப் போன்ற பாகத்தைப் பற்களில் கடித்துக் கொள்கின்றனர். அப்பொழுது கம்பியினாலான நாக்குப் பகுதியை வலது கையின் ஆள்காட்டி விரலினால் தட்டி மீட்டப்படும். வாசிப்பவரின் வாய் ஒலியை உண்டாக்குகின்றது. அதை வெவ்வேறு விதமாக வாயில் வைத்துக் கொள்வதாலும், வாய் மூலம் விடும் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துவதாலும், நுண்மையான அழகிய ஒலிகள் இதில் உண்டாக்கப்படுகின்றன.
முகர்சிங் என்ற இந்த இசைகருவி இடைக்காலத்தில் தோன்றி வளர்ந்து வருகின்றது. மேலும் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், சில வெளிநாடுகளிலும் கூட இது வாசிக்கப்பட்டு வருகின்றது. இதில் அழகிய பல தாளச் சொற்கட்டுக்களை வாசிக்கின்றனர். தாளக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்களையும் இதில் இலாகவமாக வாசிக்க முடியும். மேலும் சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் இது கச்சேரிகளில் சுருதியை நிலைப்படுத்தும் செயலையும்கூட செய்கின்றது. பல்வேறு வகையான சுருதிகளுக்கு ஏற்ப 5 முதல் 10 வகையான சுருதிகளில் கூட பல முகர்சிங் இசைக்கருவிகளை வாசிப்பவர் வைத்திருப்பார். சில நேரங்களில் சுருதி அளவுகளில் சிறிது மாற்றம் செய்வதற்காக அதில் மெழுகினை வைத்து சுருதியை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்வர். நாக்கினால் தட்டியும், உதட்டின் மூலம் காற்றினை ஊதியும் வாசிக்கும்பொழுது சில நுண்மையான இசை ஒலிகளை உண்டாக்கி முகர்சிங் கலைஞர்கள் கைதட்டினையும், பாராட்டுதலையும் பெறுவதுண்டு. இதில் வெளிப்படும் இரும்பு எஃகின் வெங்கல நாதமும், சுருதி நாதமும் கேட்பதற்கு மிகவும் இரம்யமாக இருக்கும்.
கச்சேரியில் சுருதியின் நாதத்தையும், மிருதங்கத்தின் சுருதி நாதத்தையும் இது பாடகருக்குக் கூடுதலாகக் கொடுக்கும். மிருதங்கத்தில் வாசிக்க பெறும் ஜதிகளை இதில் வாசிக்கும் போதும், மிருதங்கத்தோடு இணைந்து இதில் சொற்கட்டுகளை வாசிக்கும்போதும் கச்சேரி வெகு ஜோராகக் களைகட்டும்...
எண்ண அலைகளின் சக்தியும் ஆழ்மன ஈடுபாடும்...
உலகில் நாம் காணும்அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன..
இந்த உண்மையை அணு
விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி
இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.
எதை சாதிக்க விரும்புகிறோமோ
அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்காண தீர்வு வழி முறைகள் ஆழ்மனம் பெற்றுத் தரும்..
ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அதுவெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை.
அந்த விருப்பமானது நிறைவேற்ற
முயற்சி தேவை. சரிமுயற்சி செய்கிறோம். எப்போது சாத்தியப்படும்.
விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்திய மாகிறது.
மின்அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.
அணைத்து பொருள்களும் அலை
வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.
நமது எண்ணங்களும் அலை வடிவில்
நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.
வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும்.
ஆழ்மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக
இருக்கிறது.
ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
மனிதனின் எண்ண அலைகள்
தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை. ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன்
தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம்.
உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.
ஆழ் மனசக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம்.
அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட..
தனி மனிதனானாலும் சமூகமானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைப் பெறத் தொடங்குகின்றன.
மனதில் அன்பு இருந்தால், அன்பு
மிக்க சமுதாயம் உருவாகும்.
எண்ணுதல் முடிதல் வேண்டும்..
நல்ல சிந்தனை வளம் பெற வேண்டும்..
வெற்றி பெற்றிட வேண்டும்..
உலகிற்கு வேதத்தை உணர்த்திட வேண்டும்.
உடல்நலம் காத்திட வேண்டும்.
சிறந்த மருத்துவம் தேர்ந்திட வேண்டும்.
அன்பும் கருணையும் வேண்டும்.
அதற்கு அறிவை அறிந்திடல் வேண்டும்.
கலைகளை கற்றிட வேண்டும்.
நல்ல நட்பினை பெற்றிட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் பூரண
உடல்நலம், மனவளம் பெற வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், இயற்கையை பற்றியும் தெளிந்த அறிவை பெற வேண்டும்.
பேறாற்றலான இறைநிலைப் பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும் எல்லா மனிதரும் உணர வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை
உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கி உதவி செய்து வாழ வேண்டும்.
தனிமனித அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக அமைதி பெற வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய இறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். (வள்ளலார்).
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ..
எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம்
முறையாக இயங்குகிறதோ..
அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை...
குண்டலினி யோகம்...
விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது.
அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது.
திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவது போல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது.
அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்து கொள்ளும் முறையே தவம் எனப்படும்...
சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது.
எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.
அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது. அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்...
பேஸ்புக் பயன்படுத்த ஆதார் கார்டு அவசியமல்ல தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.. பேஸ்புக் விளக்கம்...
பேஸ்புக் கணக்கு துவங்க ஆதார் கார்டை கட்டாயமாக்கும் எந்த திட்டமும் எங்களிடமில்லை.
ஆதார் கார்டில் நீங்கள் கொடுத்த பெயரை பதிவிடலாம் என சோதனை ஓட்ட முறையில் சில இந்திய பயனர்களுக்கு கணக்கு துவங்கும் போது ஆப்ஷனலாக ஒரு text ஐ இடம் பெறச் செய்தோம். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த சோதனை ஒட்டமும் முடிந்து விட்டது.
இனி யாருக்கும் அது போன்ற ஆப்சன்களும் காட்டப்படாது என ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது...
அந்த பயம் இருக்கனும்...
அழிவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு...
அழிந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று ஒருமொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு
உண்டு. தமிழ் மொழிக்குள் ஆங்கில மொழியின் ஊடுருவல் ஆதிக்கமும்தான்.
ஒரு நாளைக்கு நீங்கள் பேசும் தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கலந்து பேசுகின்றீர்கள். யோசித்து பாருங்கள் அப்படி பேசுவதில் பெருமையாக நினைக்கின்றார்கள்.
இன்றைய தமிழர்கள் தமிழ் மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் காட்டுவதில்லை ஆங்கில கற்பதிலும் பேசுவதிலும் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். பல துறைகளில் ஆங்கிலம் மொழிகளின் ஆதிக்கமாகிவிட்டது. பேச்சு வழக்கிலும் ஆங்கிலம் தமிழோடு கலந்து விட்டது இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர் இருப்பதுதான். தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா
வெட்டி பெருமைக்கு தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை என்ன செய்யலாம்? இவர்களை பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா ?
வீடு நெறைய சோறு வைத்து கொண்டு வீதியில் நின்று பிச்சை எடுப்பது போல் உள்ளது இவர்கள் பேசுற தமிழ். இவர்களுக்கு தமிழும் முழுசா தெரியாது. ஆங்கிலமும் முழுசா தெரியாது. ஒன்று ஆங்கிலத்தில் பேசு இல்லை தமிழில் பேசு இரண்டு மொழியும் முழுசா தெரியாமல் ரெண்டுகெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
எதிலையும் கலப்படம் விரும்பாத தமிழன். மொழியை மட்டும் கலப்படம் செய்து பேசுவது ஏன் ?
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால். மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானா அழிந்து விடும் என்று சும்மாவா சொன்னார்கள், ஒரு நாளைக்கு நீங்கள் பேசுகின்ற தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுறிங்க என்று நினைத்து பாருங்கள். ஏன் இப்படி? ஒரு பக்கம் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வருகிறார்கள், இதை விட கொடுமை தமிழனே தமிழை வேறு மொழியோடு கலப்படம் செய்து எம் மொழியை அழித்து வருகிறார்கள்.
இவர்கள் என்னவோ வெள்ளைக்காரன் பரம்பரை போல வெள்ளைக்காரன் முன்பு நம் நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்தான் இப்போது நம் நாக்கை அடிமை படுத்தி வைத்திருக்கான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..
தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை…
தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால்
பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும்...
நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்...
நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத் தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது. என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...
நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. நாடி ஓட்டப் பாதை என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.
நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்..
பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.
இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.
இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்.
லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.
இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...
நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்.
நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்...
மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது...
சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி படத்தை பார்ப்போம்...
தமிழர்களை ஏமாற்றி அழிக்கும் இந்தியமும்.. திராவிடமும்...
ஒரு மாநிலத்தில் 30 %விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே சொல்லப்ட்டிருந்தும் , தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது...
அதில் மேலும் கொடுமை.. மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும், கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது..
இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது..
60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு..
சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது...
மொழி இழந்தோம்..
மானம் இழந்தோம்..
அரசியல் அறிவை இழந்தோம்..
நிலம் இழந்தோம்..
காடு மலை இழந்தோம்..
இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..
இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு..
இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ, அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும்..
அனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி..
ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அறையல்வாதிகளுக்கு வேண்டும்..
ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும்..
அனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு..
நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம்.. குறைந்த பட்சம், மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ?
சிந்தியுங்கள்...
இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..
இவை எல்லாம் மறந்து மானங்கெட்டு பாடுவோம் இந்தியனாய் ஜன கன மன என்று..
சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்...
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு...
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே.
சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.
சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன.
அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
அறுபது ஆண்டு கதை :
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி விய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940).
அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது.
ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது.
மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை.
எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள்.
இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை.
வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.
ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன.
இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது.
ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.
ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலிலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் புத்தாண்டு..
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் சில:
1. தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை).
2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை).
3. தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறநானூறு).
4. தைஇத் திங்கள் தண்கயம் போல (ஐங்குறுநூறு).
5. தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலிலித்தொகை).
தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை, முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன.
இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன...
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு...
நம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிர்ஷர் புள்ளிகள் உள்ளன. வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
அதனால் வலி குறைகிறது. உடலிலுள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்துத் தளர்த்துவதால் நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளைக் காணலாம்.
தலைவலி: நமக்குப் பிடிக்காத ஒரு வேலையைப் பிறர் நம்மைச் செய்யச் சொல்லும்போது தலை வலிக்கிறது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தால் தலைவலி குறைவதுபோல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் உட்கொள்வதால் அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படிப் போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்புப் புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலைக் குறிக்கும். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டைக் குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இரண்டு புள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். தளர்த்தும் போது மூச்சை வெளியே விட வேண்டும். 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்து விட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால் மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு.
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்துத் தளர்த்தும் போது அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். 10 விரல்களிலும் இவ்வாறு நாள்தோறும் இரண்டு முறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாகக் குறைகிறது.
மலச்சிக்கல், செரிமானமின்மை, அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் நெருக்கமாகச் சேர்க்கும் போது புறங்கையில் ஒரு கோடு தெரியும் அந்தக் கோடு முடியும் இடத்தில் ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் Fp.H.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்துத் தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும்.
தசையின் மேல் இல்லாமல் எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம். மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு ஆன்டாசிட் மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலைத் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. L14 என்ற புள்ளியை இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாகத் தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்திலுள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தைக் குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இரண்டு புள்ளிகளிலும், மற்றொரு கையின் இரண்டு விரல்களால், 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் கட்டை விரலைக் கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில் 14 முறையும் சுழற்ற வேண்டும் இரண்டு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாகக் குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் நாள்தோறும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது சிறிதாக மாத்திரையின் அளவைக் குறைத்து கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்குக் கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது காற்று சக்தி அதிகரித்து இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறைகிறது. தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும், மூக்கிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுக்கும் போது படபடப்பு, மன அழுத்தம் இவை குறைவதால் இரத்த அழுத்தம் சீராகிறது. H9, GV20 இப்புள்ளிகளில், 14 முறை காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீரடைகிறது.
இதைத் தவிர காலில் பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறை அழுத்தம் கொடுக்கும் போது இரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறை மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால் இரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது...
பிரபஞ்ச சக்தி...
சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால் தான் தாங்கள் கண்டு அறிந்த உண்மை சாராம்சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தெளிவாக கூறி வைத்தனர்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை கோட்பாடு கொண்டவர்கள் தான் சித்தர்கள்.
ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறிந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழுதியுள்ளனர்.
அதிலும் மனிதனை ஆறறிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை பகுத்தறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற பல வழி முறைகளை குறிப்பிட்டுள்ளனர்.
ஆரோக்கியம் என்பது மருந்து மாத்திரை களைக் கொண்டது மட்டு மல்ல.
மனம் தெளிவடைந்து, புத்தி நன்கு கூர்மையடைந்து, ஆழ்ந்த சிந்தனைகளோடு, அமைதியாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்கின்றனர்.
அமைதியும் ஆனந்தமும் கொண்ட வாழ்க்கை முறை ஆரோக்கியமாக அமையும்.
இந்த ஆரோக்கிய வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை சித்தர்கள் தெளிவாக வகுத்துரைத்துள்ளனர்.
அதில் தியான முறை, சரசு வாசமுறை, வாழ்க்கை நெறிமுறை போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சரசுவாசத்தின் மூலம் தான் உடலில் ஒடுங்கியிருக்கும் சூட்சமங்களை கண்டறிய முடியும்.
இந்த சரசுவாசப் பயிற்சி பற்றி வர்ம மருத்துவத்தில் அகத்தியர் தெள்ளத் தெளிவாக குறி ப்பிட்டுள்ளார்.
இது போல் அனைத்து சித்தர்களும் அவரவர் நிலையில் விளக்கமாக கூறியுள்ளனர்.
இருப்பினும் அகத்தியர் தன்னுடைய வர்ம பரிகார முறையில் குறிப்பிடும் முறைகள் மனித உடம் பில் உள்ள நாடி நரம்புகள் உயிர் மூச்சு ஒடுங்கும் இடங்கள், நரம்பு நிதானம், மனநிலை, மனிதனை ஆட்கொள்ளும் சக்தி இவைகளைப் பற்றி மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சரசுவாசத்தினால், உயிர்நிலை ஒடுங்கும் இடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி தெளிவு படுத்தினர்.
இவற்றில் மனிதன் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகள், இல்லற வாழ்க்கை முறை, ஞானிகள் வாழ்க்கை முறை , தாய் சேய் நலம் முதலான வாழ்க்கை முறைகளையும், அவற்றை எவ்வாறு நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அகத்தியர் ஞானவெட்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சரநிலை சுவாசம் தெரிந்த வர்களால்தான் நரம்பியல், எலும்பியல் துறைகளையும், அபூர்வ சிகிச்சை முறைகளையும் துல்லியமாக கண்டறிந்து செயல்படுத்தும் வர்ம மருத்துவர்களாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
சரநிலை சுவாசம், நரம்பு நிதானம் இவைகளை அறிந்த பின் தான் வர்ம விளக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதாவது சரப்பயிற்சி,
சரநிலை சுவாசம், உச்சந்தலை சுவா சம் சித்தர்களால் கையாளப்பட்டு வந்த மாபெரும் சக்தி வாய்ந்த உன்னதமான நிலையாகும். இந்த நிலையை அறிந்தவர்கள் மிகவும் சிறப்பாக வர்ம மருத்துவத்தை கையாளுவார்கள் என்பது சித்தர் களின் கூற்று.
இதைத்தான் சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்
- என்றார்கள்.
வர்ம மருத்துவர்கள் பொதுவாக பிரபஞ்ச சக்தியை உணர்ந்து தான் வர்ம மருத்துவத்தைக் கையாண்டு வந்துள்ளார்கள்.
பிரபஞ்சத்திற்கும், மனித உடலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.
மேலும் அகத்திய பெருமான், பிர பஞ்சத்தை அறிந்தவர்களே மனித உடலை அறிய முடியும்.
மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து அவற்றை சீராக்க முடியும் என்கிறார்.
பிரபஞ்ச சக்தி தான், மருத்துவ உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகும்.
இதனால் சித்தர்கள் பிரபஞ்ச சக்தி கொண்டு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்...
எகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு கருவிகள்.. தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிப்பு...
திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் கிராமம், பழங்காலத்தில் இரும்பு கருவிகள் உற்பத்தி மையமாக இருந்துள்ளதை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இங்கிருந்து, எகிப்து பிரமிடுகளுக்கு இரும்புக் கருவிகள் கொண்டு சென்றதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.
கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை சார்பில், திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழங்கால வரலாற்று சான்றுகள், பொருட்கள் கிடைத்து உள்ளன. இக்கிராமத்தின் ஒரு பகுதி, 'கருமண் பள்ளம்' என, அழைக்கப்படுகிறது.
நாணயங்கள் - இங்கு இரும்பு தாதுக்கள் அதிகளவு இருந்ததும், வெட்டி எடுக்கப்பட்டதும், தெரியவந்துள்ளது.
கொல்லன் தோட்டம் என்ற பகுதியில், இரும்பு கழிவு அதிக அளவில் உள்ளது.
இரும்பைக் கொண்டு, போர் மற்றும் வேளாண் கருவிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இங்கு கிடைத்துள்ள மண்பாண்ட சிதறல்கள், சிவப்பு வண்ண மண்கல பண்பாடு இருந்துள்ளதை காட்டுகிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலை புதுப்பித்த போது, மருந்து சாத்துவதற்காக, மூலவர் சிலை அகற்றப்பட்டது. சிலையின் அடியில், பழங்கால பொற்காசுகள், நான்கு நவரத்தின கற்கள், இரு செப்பு நாணயங்கள், 16 பிரிட்டிஷ் நாணயங்கள், நவரத்தின கற்கள், யந்திர செப்பு தகடு ஆகியவை இருந்தன.
இவை, 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகவும், விஜய நகர பேரரசு ஆண்ட காலத்திய நாணயங்கள், 'வீரராய பொற்காசு' என, அழைக்கப்பட்டதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அபூர்வமானது - இதுகுறித்து, ஆய்வாளர் ரவி கூறியதாவது..
இடுவாய் நகரம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கியதும், மிகச்சிறந்த வணிக மையமாக திகழ்ந்ததும், ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. கொங்கு பெருவழியில், கிளை வழி ஒன்று உள்ளதும், போக்குவரத்து அதிகம் இருந்ததால், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
இது, ராணி மங்கம்மா ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. குப்தர்களின் தாக்கமும் இதில் உள்ளது.
அதேபோல், 3000 ஆண்டு களுக்கு முந்தைய, சாம்பல் மேடு பகுதியும், 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படுவது, அபூர்வமான ஒன்று.
பழங்காலத்தில், ஆயிரக்கணக்கான மாடுகளின் சாணங்களை ஒரே இடத்தில் குவித்து, அவற்றை தீ மூட்டி, மாடுகளை அதன் மேல் நடக்கவிட்டு உள்ளனர்.
கால்நடைகளை, நோய்கள் தாக்காமல் இருக்க, இது மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, குண்டம் திருவிழா, அதன் அடிப்படையிலேயே நடக்கிறது.
இரும்பு, எக்கு கருவிகள் தயாரிப்பில், சிறந்த தொழில் நுட்பம் இங்கிருந்துள்ளது.
எகிப்து பிரமிடுகளுக்கு, இங்கிருந்து இரும்பு கொண்டு சென்றதாக, வரலாற்று தகவல் உள்ளது.
இங்கு கிடைத்துள்ள இரும்பு கசடு, இரும்பு கால பண்பாட்டை நினைவுபடுத்துகின்றது.
பொதுமக்களின் வழங்காற்று பாடலில், ஒளி நகரம் என்ற பெயர் வழக்கில் இருந்தது அறியப்படுகிறது.
உலைப்பட்டறைகளில் இருந்து வரும் ஒளி வீச்சைக்கொண்டும், இரும்பு உருக்கும் தொழில், இரவு பகலாக நடந்ததால், சம்மட்டியில் ஒலி, இடி முழக்கத்தை போல் இருந்ததால், 'இடிவாய்' என்ற பெயர் மருவி, இடுவாய் என, காரணப்பெயர் உருவாகியுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்...
கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.
வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.
100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...
போலீசில் பொய் புகார் கொடுத்து, மாட்டிக்கொண்ட ஜெ.தீபா...
சென்னையில் உள்ள தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தை மர்மநபர்கள் தாக்கியதாக தெரிவித்த ஜெ.தீபா அளித்த புகார் பொய்யானது என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
தனது பேரவையின் முன்னாள் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரனை போலீசில் சிக்க வைப்பதற்காக தனது பாதுகாவலர்களை வைத்து தனது அலுவலகத்தை கல்வீசி சேதப்படுத்தி விட்டு, ராமச்சந்திரன் மேல் போலீசில் புகார் கொடுத்தது அம்பலம்...
அதிமுக சசிகலா வுக்கு இரண்டாவது புருஷனாமே நடராஜன்.. உண்மையா?
தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரானார் சசிகலா..
யார் இந்த சசிகலா?
33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி.. அதுக்கு முன்னாடி?
சென்னையில் கேசட்கடை நடத்தி வந்தார் சசிகலா.. அதுக்கு முன்னாடி?
எமர்ஜென்சியில் வேலை இழந்த மன்னார்குடி நடராசன் என்பவரின் மனைவி.. அதுக்கு முன்னாடி?
1973 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடராசனுக்கும் சசிகலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.. அதுக்கு முன்னாடி?
செய்தி தொடர்பு துறையின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும், திமுக கட்சிக்காரராகவும் இருந்த நடராசனுக்கு நிச்சயமானார் சசிகலா.. அதுக்கு முன்னாடி?
திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகனும், நடிகருமான மு.க.முத்துவின் மனைவி சிவகாமிசுந்தரியின் அக்கா மகன் மோகன சுந்தரத்தின் மனைவி.. சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே..
அதுக்கு முன்னாடியும் தெரியும்.. இப்போ இது போதும்..
ஒரு சாதாரண அரசு ஊழியராக இருந்த நடராசன்-சசிகலாவின் திருமணத்தை முதல்வராக இருந்த கருணாநிதி ஏன் நடத்தி வைத்தார் என்ற கேள்விக்கு விடை இது...
வரலாறு முக்கியம் அமைச்சரே...
30/12/2017
பாராளுமன்றத்தில் அதிமுக அன்வர் ராஜா பேச்சு...
முத்தலாக் சொல்வதை கிரிமினல் குற்றமாக பார்ப்பதை ஏற்க முடியாது.
மூன்றாண்டு சிறை தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை நீக்கிவிட்டு நீதிமன்றம் என்ன சொன்னதோ அதை சட்டமாக்குங்கள்.
மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டு குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை சட்டமாக்குங்கள்.
அப்படி கிரிமினல் குற்றம் என்று நீதிமன்றம் சொல்லவில்லை.
நாங்கள் ஷரீயத் சட்ட அடிப்படையில் வாழ்கிறோம்.
இந்த முத்தலாக் என்பது தவறென்றால் நாங்கள் எங்களுக்குள் கூடி முடிவெடுப்போம் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அதை மேற்கொள்ளும்.
முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இஸ்லாமிய பெண்களை பாதிக்கும்.
குர்ஆன் ஒன்டைம் செட்டில்மெண்ட் கொடுக்கச் சொல்கிறது அப்படி இல்லாமல் கணவனை சிறையில் அடைத்துவிட்டால் அந்தப்பெண் ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
- அன்வர் ராஜா எம்.பி அதிமுக.
இஸ்லாமிய விரோதிகளுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது என்ன இவ்வளவு அக்கறை. ஆயிரத்துக்கு அதிகமான பெண்களை குஜராத் கலவரத்தில் கற்பழித்த இந்துத்துவா ஆர்எஸ்எஸ் வெறியர்களுக்கு மோடி அரசு என்ன தண்டனை வாங்கி கொடுத்தது என்பதை சொல்லிவிட்டு பிறகு இஸ்லாமிய பெண்களுக்கு அக்கறை காட்டலாம்...
ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...
தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன...
முதல் படம் காலம் 1325 - 1499.
இரண்டாம் படம் காலம் 1499 - 1649.
மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை..
இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.
நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra
By Cynthia Talbot...
தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?
இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...
நாதசுவரம்...
தென்ஆப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில், உவுசலா என்ற இசைக்கருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இக்கருவி நாதசுவரம் போன்று இருக்கும். உவுசலா பிளாஸ்டிக்கால் ஆனது. நீல்வான் சால்விக் என்ற 37 வயது தென்ஆப்பிரிக்கக்காரர், 15 வருடங்களுக்கு முன் விளையாட்டாக கண்டு பிடித்த நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி நாதசுவரம் போன்ற இருக்கும். நாதசுவரம் வாசிக்க ஞானம் வேண்டும். உவுசலாவுக்கு அதெல்லாம் தேவை இல்லை.
நம்முடைய அனைத்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக் கொண்டு ஸாதகம் செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். நாம் திருமணம், திருவிழா போன்ற இடங்களில் மிகவும் பரவலாக காணும் ஓர் இசைக்கருவி நாதசுவரம். தவுலும் நாதசுவரமும் ஒன்றாகச் சேர்த்து வாசிப்பர்.
நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. மிகவும் இனிமையான இசையைத் தரவல்லது இக்கருவி.
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலன கோவில்களில் இந்தக் கருவி வாசிக்கப்படுவதுண்டு. நேரடியாக இசைக்காவிட்டாலும் பல ஆலயங்களில் இவ்விசைப் பதிவு செய்யப்பட்ட குருந்தட்டுகளைப் வழிபாட்டின் போது ஒலிபரப்புச் செய்கின்றனர்.
இதைத்தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.
நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் , உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி. உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.
நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.
பெரியமேளம்நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்...
இலுமினாட்டி யும் - ஐயா நம்மாழ்வார் மரணத்தின் சந்தேகமும்...
தமிழின தந்தை பெரியார் நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம்...
இலுமினாட்டிகளின் செயலாக இருக்க வாய்ப்புண்டு..
மீத்தேன் திட்டத்தை எதிர்க்க உண்மையான தலைமைத்துவம் கொண்ட ஒரே ஆற்றல் ஐயா நம்மாழ்வார்..
அவரின் வழிகாட்டல் இல்லாமல் மீத்தேன் எதிர்ப்பு தவறாக மடைமாற்றப்படுகிறது..
நம்மாழ்வார் இறந்த நாள் 30.12.2013 , இலுமினாட்டிகளின் கணக்கியல் இங்கே நன்றாக பொருந்துகிறது..
30 , 3+0= 3
12 , 1+2= 3
2013, 2+0+1+3=6
336
33 6 .
இங்கு எதோ ஒரு பொருத்தப்பாடு இருப்பது சந்தேகமே...
தமிழர்களே விரைவில் சயல்ப்படுங்கள் , நம்மை சுற்றி நடக்கும் அரசியல் மிகவும் தவறான, ஆபத்தான ஒரு விடயமாக இருக்கிறது..
நம் இனம் ஆபத்தில் இருக்கிறது, உங்களால் தான் உங்களை காத்துக் கொள்ள இயலும்...
Subscribe to:
Posts (Atom)