13/08/2017

ஆக்சிஜன் சிலின்டருக்கான 68 லட்சம் பணம் கொடுக்க மாதக்கணக்கில் வக்கில்லாத உத்திரபிரதேச பாஜக அரசாங்கம் தான் பசுக்களை பாதுகாக்க 60 கோடி ஒதுக்கியது...


60 பிஞ்சு குழந்தைகள் இரண்டே நாளில் இறந்துள்ளார்கள். தன் குழந்தையின் முதல் அழு குரல் கேட்க பத்து மாதம் சுமந்த தாயின் கனவும், ஓடியாடி உழைத்து தன் குடும்பம் தன் பிள்ளை பற்றிய தகப்பனின் கனவும் இந்த கேடுக்கெட்ட உத்திர பிரதேச அரசின் வக்கற்ற ஆட்சியில் கலைந்துவிட்டது.

என் முதல் பிள்ளையை கையில் ஏந்திய நொடி இன்றும்  நான் வாழ்வில் மறக்க முடியாத முதல் தருணம். பெரும் துக்கத்தை சுமக்கும் அத்தனை பெற்றோருக்கும் எமது பக்கத்தின் அனுதாபங்கள்.

பாசகவிற்கு ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறோம் - சாதியோ , மதமோ வெறும் அடையாளமே அது தனி மனிதனின் அந்தரங்க நம்பிக்கை அதை பிடித்துக்கொண்டு அரசியல் செய்யும் கேடு கெட்டதனத்தை விட்டுவிட்டு மனிதாபிமானத்துடன் மக்களுக்கான அரசியல் செய்யுங்கள்.

Encephalitis என்ற நோயால் தான் குழந்தைகள் இறந்ததாகவும் இது வரை 25000 குழந்தைகள் அந்நோயால் இறந்துள்ளதாகவும். யோகி வந்து தான் அதனை தடுக்க தடுப்பூசி போடுவதாகவும் கேடுக்கெட்ட சில பாசக மனிதர்கள் சப்பைகட்டுகட்டுகிறார்கள். அடே ! Encephalitis மூளையை வீக்கமுற செய்யும் . ஆக்சிஜனை தடுத்து நிறுத்தும்.

அப்படிப்பட்ட நோய் இருக்கிறது என்றால் முதலில் செய்ய வேண்டியது மருத்துவமனையில் ஆக்சிஜன் எப்போதும் வைத்திருப்பது. தன் தொகுதியில் இந்த நோய் இருக்கு என்று தெரிந்து இருந்தால் ஆக்சிஜன் கையிருப்பு இருக்கா என்று சரிபார்த்து இருக்க வேண்டாமா ? குழந்தைகள் சாவிலும் பொய்யா ?

இதெல்லாம் எவ்வளவு கேவளம் தெரியுமா எடப்பாடி ...


இது தான் கதிராமங்கலம் போராட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் பதில்...


மக்கள் போராட்டத்தை காதில் வாங்காத மத்திய அரசும் தமிழக அரசும்...

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ...


புரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாளில் இருந்து அதிபர் பதவியே நாட்டின் உயரியது என மாற்றியமைக்கப்பட்டது. அப்போதில் இருந்து 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை கியூபாவின் அதிபர் பதவியில் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.

ஸ்பெயின் நாட்டின் குடியேற்ற நாடாக இருந்த கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாடிஸ்டாவின் ஆட்சியை அகற்றுவதற்கு வழக்கறிஞரான ஃபிடல் காஸ்ட்ரோவும், அர்ஜெண்டினாவின் மருத்துவரான சே குவேராவும் இணைந்து மக்களைத் திரட்டிச் செய்த புரட்சியே காரணமாகும்.1954ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராக இருந்து பண்ணையார்களிடம் இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். ஃபிடலின் தந்தை 1940 ஏக்கர் கரும்புத் தோட்டத்தை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டைப் பொதுவுடைமைப் பாதையில் வழிநடத்தி அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார் ஃபிடல். தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தினார்.  தன் நாட்டு வளங்களைக் கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ.

கியூபாவின் வளர்ச்சியைப் பொறுக்காத அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோதும் பொதுவுடைமை சோவியத் ஒன்றியத்துடன் வணிக, பொருளாதார, ராணுவத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார். வேளாண்மை மற்றும் சர்க்கரைத் துறை வளர்ச்சியால் கியூபா உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைக்கப்படுகிறது. மக்களின் நலவாழ்வில் அக்கறையுடைய காஸ்ட்ரோ, உலகத்திலேயே மக்கள் மருத்துவர் விகிதத்தில் கியூபாவை முதலிடத்தில் இடம்பெறச் செய்தார்.

பிரதமர், அதிபர் என ஐம்பதாண்டுகள் நாட்டுக்குத் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவை முதலாளித்துவ நாடுகள் சர்வாதிகாரி என்று அழைத்தன.தான் சர்வாதிகாரி அல்ல என்றும் மக்கள் நலனே முதன்மையானது என்று உணர்த்தும் வகையில் உடல்நலக் குறைவு, முதுமை ஆகியவற்றின் காரணமாக 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகி உலகுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்று முதல் ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் பதவியில் உள்ளார். அமெரிக்காவின் உளவுப்படையான சிஐஏ திட்டமிட்டுச் செயல்படுத்திய 638 கொலைமுயற்சிகளில் இருந்து உயிர்தப்பிய ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில்  காலமானார்.

கியூபாவைப் பொதுவுடைமைப் பாதையில் வளர்ச்சி பெறச் செய்த இந்தச் சிற்பி அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைவராகவும் இருமுறை இருந்திருப்பது குறிப்பிடத் தக்கது...

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகரை சேர்ந்து சிறுவன் மர்ம காய்ச்சலால் பலி...


தொடரும் மர்ம காய்ச்சல் பலிகள்...

மஹாராஷ்ட்ராவில் உள்ள சனி சிங்கனாப்பூர் கோவிலில் ஆதரவாளர்களுடன் சென்று சிறப்பு பூஜை நடத்திய பன்னீர் செல்வம்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இதையே காரணம் காட்டி ராணுவம் தளவாடங்களை தனியாரிடம் ஒப்படைப்பார்கள் பாருங்கள்...

வேறுயாருக்கு பார்பனிய தரகு முதலாளி அம்பாணி அதாணி போன்றவர்களில் ஒருவர்க்கு தான்...

ஓட்ட ஒடசல் பழைய இரும்பு சாமான்
ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்...

தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...


அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......

திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.

இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....

தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...

நோய்களை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்...

                                               
மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.

ஒட்டவே ஒட்டாது:

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கொழுப்பு சத்து அதிகரிக்கும்:

உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள்:

மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலரும் சற்று சிந்தித்து உணவு தயாரிக்கும் முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதர்க்காகவே இந்த பதிவு.

உங்களை திரும்பவும் மண்சட்டியில் சமைக்க சொல்லவில்லை ஆனால் மண்சட்டியில் தயார் செய்யும் உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பது மட்டும் முற்றிலும் உண்மை...

ஆரியம் மாயை என்ற முழக்கத்துடன் வந்த திராவிடர்கள்...


தமிழர்களின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டதோடு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி போன்ற அனைதுக் கூறுகளையும் இழிவு படுத்தி சிதைத்தனர்..

இத்தோடு நில்லாமல், உலக ஆட்சி அதிகாரச் சூட்சுமமான பெரும்பான்மை சிறுபான்மை ஆளும் என்ற அடிப்படையைக் கூட தமிழர்கள் உணராதவாறு திராவிட இன பிறமொழியாளர்கள், பெரும்பான்மை தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே "திராவிடர்கள்" என்ற அடையாளத் திணிப்பைச் செய்து சிறுபான்மை திராவிடத்தை பெரும்பான்மைச் சமூகமாக்கி தலைமையை கைப்பற்றிக் கொன்டனர்...

தமிழர், தமிழினம் என்றதொரு தனித்த ஓர்மையையும் குலைத்தனர்..

சமகாலத்தில் நம் கண்முன்னேயே போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவர், சேரன், சோழன், பாண்டியன், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருது சாகோதரர், போன்ற தமிழின ஆளுமைகளின் அடையளங்களை செயற்கை கலவரம் மூலம் துணிச்சலாக தூக்கினர்..

தமிழர்களின் திருநாளான பொங்கலை "திராவிடர் பொங்கல்" என்ற பெயர் மாற்ற   முயற்சியும் நடைபெற்றது.. பின் முறியடிக்கப் பட்டது.. தற்போது மீண்டும் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது...

இப்பொழுது, பெரியார் பிறந்த மண் என்றெல்லாம் பேசி, வந்தேறி கட்சிகளெல்லாம் அரசியலில் எதிரெதிராக நின்றாலும், இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக பகை மறந்து ஒன்று படக் கூடிய நேரம் வந்து விட்டதென வெளிப்படையாகக் கொக்கறிக்கும் நிலையையும் கண்டோம்..

ஆரியம் மாயை என்று வந்த திராவிடக் கூட்டத்தின் கருத்தியல் முழுதும், வெறும் வாய் ஜால பேச்சுக்கள். இதுவும் மாயையே என புரிந்து புறந்தள்ளும் விளிம்பு நிலையிலுள்ளோம் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து பயணித்தால் தமிழ் தேசியம் சென்று சேரலாம்...

கேரளா கண்ணூரில் பாஜக டெப்பாசிட் காலி...


கேரள ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வின் பொய்ப் பிரச்சாரம், மத்தியிலிருந்து கடுமையான அரசியல் நெருக்கடி, அரசியல் கொலைகள், பந்த் இவைகளுக்கு மத்தியில் மட்டனூர் நகராட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது மற்றும் 19 வார்டுகளில் பா.ஜ.க வுக்கு டெப்பாசிட் காலி...

கம்யூ : 28    காங் : 07   பாஜக : 00...

நடிகர் திலகம் சிவாஜி யை மிஞ்சிய பாஜக ராம சுப்ரமணியனின்...


இந்த மீடியாகார நாய்கள் சரியா இருந்திருந்தா ஏன் நாட்டுக்கு மோடி மாதிரி பிரதமரோ இல்ல யோகி மாதிரி முதலமைச்சரோ வரப்போறானுங்க....


காசு வந்தா போதும் அவனுங்க நல்லா இருந்தா போதும்... அவ்ளோ தான் மீடியா தர்மம்...

இந்த பாஜக காவி பயலுகளுக்கு எல்லாம் மூளைக்கு பதிலா மாட்டுச்சாணி தான் என்பதற்கு இந்த யோகியே சிறந்த உதாரணம்....


இதை மூளை இல்லாத நீ சொல்ற பாத்தியா... அதான்டா....

அது எப்டிடா ஒரே காலகட்டத்தில் 60 குழைந்தகளுக்கும் மூளையில் வீக்கம்?

அப்புறம் எதுக்குடா கேஸ் ஏஜென்ஸி மேல் FIR?

சோழப் பேரரசு...


சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கலாம்...

இராசேந்திர சோழனுக்குப் பிறகு முதலில் இலங்கை, பிறகு இந்தோனேசியா, பிறகு மலேசியாவின் வடக்குப் பகுதியும் பர்மாவும், அதன் பிறகு வடயிந்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் என சோழர்கள் கையை விட்டுப் போய்விட்டன..

சோழ அரசு தஞ்சாவூரை மட்டும் கொண்டதாக சுருங்கி பிறகு மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றது...

இதுநாள் வரை ரஷ்யா வழங்கிய ஆயுதங்கள் அனைத்துமே போலியானவை…


காலாவதியானதை இந்தியாவிற்கு கொடுத்து, சீனாவுடன் கைகோர்த்தது அம்பலம்...

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இராணுவ டாங்குகளுக்கான உலக டாங்க் பையாத்லான் போட்டி நடந்து வருகின்றது. இதில் ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து  அந்தந்த நாடுகளின் சார்பாக டாங்குகள் போட்டிக்கு அனுப்பப்படும்.

கார் பந்தையத்தை போன்று சவால் மிகுந்த ஓடுதள பாதை அமைக்கப்படிருக்கும். இதில் டாங்குகள் ஏறி இறங்கி தனது இலக்கை சென்றடைய வேண்டும்.

நிஜத்தில் ஒரு போர்க்களத்தில் என்ன மாதிரியான பாதை இருக்குமோ அதை விட மிக மோசமான அளவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓடுதள பாதை.

இதன் போது டாங்குகளின் முழு திறனும் பரிசோதிக்கப்பட்டு விடும். எந்த அளவிற்கு தாக்கு பிடிக்கும், என்ன மாதிரியான பிரச்சனை வரும், என்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும், உள்ளிட்ட பல விவரங்கள் சேகரிக்கப்படும்.

இதில் இந்தியா சார்பாக ரஷ்ய தயாரிப்பு  டி-90 டாங்கு அனுப்பப்பட்டது. போட்டியின் போது விரைந்து சென்ற டாங்கு பாதி வழியிலேயே இயந்திர கோளாறினால் நின்று விட்டது.

மேலும் இந்தியா சார்பாக சென்ற இரண்டு டாங்குகளும் இதே போல பாதி வழியில் இயந்திர கோளாறினால் நின்று விட்டன.

இவை இரண்டுமே ரஷ்ய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஷ்யா சார்பாக பங்கேற்ற டாங்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்று விட்டது.

இந்தியாவின் உள்நாட்டு தாயாரிப்பான அர்ஜுனா டாங்கியை அனுப்பாமல் இந்தியா ரஷ்ய தயாரிப்பை அனுப்பி வைத்து அவமானப்பட்டுள்ளது.

இது போன்று பல ஆயுதங்கள் ரஷ்யாவில் இருந்து வாங்குவது எல்லாம், காலாவதியான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது.

இது மட்டும் அல்லாது இந்தியாவில் ரஷ்யா சார்பில் அமைக்கப்படும் அணு உலைகளும், செர்பியாவில் மாபெரும் கோர விபத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பம் தான் என்பது உறுதி.

ஆயுத விவகாரத்தில் இரண்டு கம்யுனிஸ்ட் நாடுகள் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காது, இந்தியாவை போரில் பின்வாங்க செய்யும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது...

சாவல் விட்ட அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மேடை போட்டு காத்திருந்த பாமக அன்புமணி...


கல்விதுறை விவகாரம் குறித்து அன்புமணி விவாதிக்க தயாரா என அமைச்சர் செங்கோட்டையன் சவால் விட்டதை தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவையில் மேடை போட்டு அன்புமணி விவாதிக்க காத்திருந்தார்.

மாலை 5 மணி வரை அமைச்சர் வரவில்லை...

பிராமணர்களை அழைத்து திதி கொடுப்பதை நிறுத்துங்கள்...


மகன்கள் தன் தாயையே கொச்சைப்படுத்தும் திதி மந்திரம்..

தன் தாயையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...?

என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது.

ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத் தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா? 

மின்சாரமே உணவு அதிசிய மனிதன்...

         
ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) இவரை மின்சார மனிதன் என அப்பகுதி  மக்கள் அழைக்கிறார்கள்.

காரணம், நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதில்லை.

இதோடு, பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் பயமில்லாமல் வைத்து கொள்கிறார்.

இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம்.

ஒரு முறை ஏதேச்சையாக மின்சார ஒயரை தொட்டுள்ளார், ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவில்லை. இதிலிருந்து தான் தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நரேஷ்குமார் கூறுகையில், தொலைக்காட்சி பெட்டி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி என என எல்லா வகையான மின்சார பொருட்களையும் நான் வெறும் கையால் தொடுவேன்.

என் மீது மின்சாரம் பாயாது, வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை வாயில் வைத்து கொண்டால் பசி அடங்கி விடும் என கூறியுள்ளார்...

டெல்லியில் ஓபிஎஸ்-ஸை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு; அதிமுக அணிகள் இணைப்பில் சிக்கல்...


டெல்லி சென்ற முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினர் பிரதமர் மோடியை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.

அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புதிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில் எடப்பாடி அணியினர் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி டி.டி.வி தினகரன் ஆகியோர் நியமனம் செல்லாது, எனவே எங்களது அணியே உண்மையான அதிமுக என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் அணியின் இந்த திடீர் செயல் பாஜக மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளதால் அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இரு அணிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற முதல்வர் பழனிசாமியை ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், அணிகள் இணைப்பு குறித்தும், ஓபிஎஸ் செயல் குறித்தும் பேசியதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாகதான் பிரமர் மோடி பன்னீர் செல்வதை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் டெல்லியிக்கு சென்றிருந்தனர். பிரதமர் மோடி ஓபிஎஸ்ஐ சந்திக்காததால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் மற்றும் அணியினர் டெல்லியில் இருந்து திரும்பி விட்டனர்.

அவர்கள் டெல்லியில் இருந்து மும்பை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து ஒபிஎஸ்க்கு தலைமை பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓ.பி.எஸ்.ஐ சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்ததால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக முன்பு அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்...



அதிமுக கலாட்டா...


திராவிட மும்.. பிராமண எதிர்ப்பும்...


இந்தப்பதிவில் வராத மேலும் ஒரு உண்மை.... முரசொலி மாறனின் மனைவியும் பிராமணர் தான்..

அடுத்த உண்மை..

கி.வீரமணியின் மருமகளும் மலையாள பிராமணர் தான்...

Rajagopal Meenatchisundaram..

என்.ராமின் சகோதரி மகன் முரசொலி மாறனின் மகளை மணந்திருக்கிறார்..

என்.வி.என் சோமு இறக்கும் வரை தி இந்து நாளேடு தொழிற்சங்கத்தின் தலைவர்.
இப்போது கனிமொழி தலைவர்..

கனிமொழி கூட இந்து நாளேட்டில் சப் எடிட்டராக சில காலம் பணி புரிந்தவர் தான்.

கலாநிதி மாறன் தயாநிதி மாறன் இவர்கள் மனைவிகள் பிராமணர்கள்.

அதாவது முரசொலி மாறனின் இரண்டு மருமகள்களும் மருமகனும் பிராமணர்கள்.

இந்துவில் மாறன் குடும்பத்தினர் பெரும் ஷேர் ஹோல்டர்ஸ்.

அஷடு மாதிரி என்ன பேசிண்டிருக்கேள்? அவாள் பத்திரிக்கை இவாள் பத்திரிக்கைங்கறதெல்லாம் வெளில பேசறதுக்குண்ணா. அதுக்காக அவாளை விட்ற முடியுமா? அவாளும் நம்மல்ல ஒத்தர் தானே...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே... 

ஊடகம் உபி உத்தமன் யோகிக்கு சொம்புதூக்க ஆரம்பித்துவிட்டார்கள்...


மூளை அலர்ஜியால்தான் குழந்தைகள் இறந்து விட்டார்களாம்.

ஆக்சிஜன் குறைபாடு இல்லையாம்.

அதாவது 60 குழந்தைகளுக்கும் மூளை அலர்ஜி குறைபாடு..

புதிய தலைமுறை மற்றும் பாலிமர் செய்தியின் கண்டு பிடிப்பு...

இதற்கு பெயர் தான் விபச்சார ஊடகம்...


அதிமுக ஓபிஎஸ்சும் டூபாக்கூர் வேலையும்...


நாம் முன்பே சொன்னது தான்...


கமலஹாசன் முழுக்க முழுக்க திமுகக்காரர்...


கமலஹாசனின் அப்பா சீனிஹாசன்  பரமக்குடியில் ஒரு கோவிலின் அறங்காவலர். கோவில் காசு அவர் கையில் புரண்டு கொண்டு இருந்தது. தினமும் கோவில் சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கமலஹாசன். பட்டைசாதமும், உண்டக்கட்டியும் இல்லேனா கமலஹாசன் இல்லை. அப்படி கோவில் சோற்றில் வளர்ந்தவர் தான்  தன்னை நாத்திகர் போல காட்டிக்கொண்டு நடிக்கிறார். இதெல்லாம் வடுக திராவிட வந்தேறிகளுக்கே கைவந்த கலை.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் திமுகக் காரன் வக்கீல். திமுக அடித்த கொள்ளை,  செய்த கொலை அத்தனைக்கும் இவர் வக்கீலாக இருந்து ஆலோசனைகள் சொல்லி, காப்பாற்றி விட்டவர்.

விஞ்ஞானரீதியாக  ஊழல் செய்வது எப்படி என்று திமுகவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர். கருணாநிதியின் கருப்பு பக்கங்கள் முழுவதும் அறிந்தவர். கருணாநிதியின் எல்லா தவறுகளுக்கும் முழு அத்திவாரம்  போட்டுக்கொடுத்து காசு சேர்த்தவர் சாருஹாசன். இது பலருக்கு தெரியாது. கருணாநிதிக்கு மாலைநேர காரோட்டியாகவும் இருந்து இருக்கிறார் சாருஹாசன்.

தமிழர்களின் கோவில்கள்  வடுக வந்தேறிகளின்  கையில் இருக்கிறது. அப்படி அந்தக் கோவில் வடுகர் சீனிஹாசன்  கையில் இருந்தது. அந்தக் கோவிலில் தேவதாசிகள் இருந்தனர். அவர்கள் சீனிஹாசன் வீட்டுக்கும் வருவார்கள். அப்படி வருகையில் அவர்களோடு  கமலஹாசனுக்கும், அவரது அண்ணன் சாருஹாசனுக்கும் தேவதாசிகளின் பரிச்சயம் ஏற்பட்டு, அப்போது பிடித்த  பெண்மோகம் தான் இப்போது வரைக்கும் தீரவில்லை ஹாசன்களுக்கு.

கமல்ஹாசனும், சாருஹாசனும் பயங்கரமான பெண்பித்தர்கள். திரையிலும் வெளியிலும் பெண்களை வேட்டை ஆடினார்கள். கட்சிக்காரர்களுக்கு பங்கும் கொடுத்தார்கள்.

'உங்கள் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்தீர்களா?' என்ற கேள்விக்கு, 'நான் ஒரு ஆணுடன் படுத்துக்கிடந்து அதை  என் கணவர் சாருஹாசன்  பார்த்து இருந்தாலும், கதவை மூடிவிட்டு கம்மென்று போய் இருப்பார் ! என்று என் மனைவி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன் ' என்று சாருஹாசன் சொன்னார். இதுதான் இவர்களின் பெண் சுதந்திர இலட்சணம். அடுத்தவனோடு/அடுத்தவளோடு படுத்துக்கொள்வது தான் சுதந்திரம் இவர்களுக்கு.

கமல்ஹாசன்  எடுத்த பல படங்கள் திமுகவின் நிதியினால் எடுக்கப்பட்டவை, திமுகவின் பின்னணி இல்லாமல் கமலஹாசன் இயங்கியது இல்லை. திமுக வோடு சேர்ந்து திட்டமிட்டு, எம்ஜிஆரை பல நேரம் ஏமாற்றி இருக்கிறார் கமல்ஹாசன்.

இராமசாமி  தொண்டன் என்று சொல்லிக்கொண்டு, தன் படங்களுக்கு சூரசம்ஹாரம், தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர்கள் வைப்பதும், சாதியை எதிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, தேவர் மகன், சபாஷ் நாயுடு  என்று பெயர் வைப்பது எல்லாம்  கமல்ஹாசனின் திருட்டுப்புத்தி !

ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு, மு.க. ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்து இருப்பது எல்லாமே போலியான வேலைகள்.

கௌதமிக்கு  பிறகு பெண்டாட்டியாக இருக்க, இன்னொரு பெண் குத்தகைக்கு கிடைக்காமல் இருப்பதே, அவர் இப்போது அரசியல் பேசுவதற்கான  நேரத்தை அவருக்குத்   தருகிறது. அபப்டி இன்னொரு பெண் குத்துகைக்கு கிடைத்துவிட்டால் அவர் அந்தப்பக்கம் போய் விடுவார். அதுவரையில் பொறுத்து தான் ஆகவேண்டும்...

மேட்டுப்பாளையத்தில் சைக்கிள் பைக் மோதி விபத்து, சைக்களில் வந்த நபருக்கு கால் முறிவு...


ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் காயமடைந்தவர் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன தான் சாதித்தது இந்த மோடி அரசு?


கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி திடுதிப்பன கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் அதனால் இனிமேல்  இந்திய ஒன்றியத்தில் 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மோடி அறிவித்தார்.

ஆனால் இன்றுவரை எவ்வளவு கருப்பு பணத்தை கண்டு பிடித்திருக்கிறீர்களென்று கேட்டால் கேட்பவர்களை தேசத்துரோகிகளென்றும் பிரிவினைவாதிகளென்றும் சொல்கிறார்களே ஒழிய  எவ்வளவு கருப்பு பணத்தை மீட்டோமென்று இதுவரை அரசும் சொல்லவில்லை ரிசர்வ் பேங்கும் சொல்லவில்லை.

அதுபோக  பணமதிப்பிழப்பு (Demonetization)  நடவடிக்கையால் ஒரு நன்மையும் ஏற்படவில்லையென்று பாராளுமன்ற நிலைகுழு கடந்த மூன்று நாளைக்கு முன்னால் அறிவித்து விட்டது.  இதுபோதக்குறைக்கு தற்போது வருட வருடம் ரிசர்வ் வங்கி எடுக்கும் சிக்கன நடவடிக்கையால் மிச்சமாகும் பணத்தை (surplus money)  அரசுக்கு அது கொடுக்கும். அதன்படி 2015 வருடம் 65,896 கோடி ரூபாயும் 2016 ஆம் வருடம் 65,876கோடியும் கொடுத்திருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு வெறும் 30,659 கோடியை தான் கொடுத்திருக்கிறது. இது 2016ஆம் ஆண்டு கொடுத்ததில் பாதியளவு தான்.

ஆனால் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது நிதியமைச்சர் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி கொடுக்கும் தொகை 75,000கோடியாக இருக்குமென தெரிவித்திருந்தார். ஆனால் அதில் பாதியளவுகூட கிடைக்கவில்லை. இதற்கு சரியான காரணத்தை ரிசர்வ் வங்கியும் சொல்லவில்லை. ஆனால் பொருளாதார நிபுணர்கள் தீடிரென்று நாட்டில் புழக்கத்தில் இருந்த  86% பணத்தை அரசு செல்லாது என்ற அறிவித்தபடியால் 86% புதிய நோட்டுகளை அச்சடிக்கவேண்டிய சூழல் வந்தது அதனால் இந்த வருடம் செல்வு அதிகரித்து விட்டதென்று சொல்கிறார்கள்.

ஒருபக்கம் எதற்காக இந்த நடவடிகையை எடுக்கிறோமென்று மோடி அரசு சொன்னதோ அதுவும் நடக்கவில்லை. மறுபக்கம் இந்த நடவடிக்கையால் அரசுக்கு வரவேண்டிய பணம்கிடைக்கவில்லை. ஆகமொத்தம் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தவறான நடவடிக்கை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி இவர்கள் ஏன் இதை கொண்டுவந்தார்கள் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. அதாவது

இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பல லட்சம்  பேருக்கு மேல் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது ஒரு புறமென்றால். நாட்டிலுள்ள 20 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 3.20லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது.

உதாரணமாக
அம்பானியின் சொத்துமதிப்பு 83,000கோடியும்,
லட்சமி மிட்டலின் சொத்துமதிப்பு 13,952கோடியும்
ஆசிம் பிரேம்ஜியின் சொத்துமதிப்பு 23,232கோடியும்
ஷிவ் நாடாரின் சொத்துமதிப்பு 9,088கோடியும் உயர்ந்திருந்திருக்கிறது.

ஆகவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்த கார்ப்ரேட் மோடி அரசு  என்ன சாதித்திருக்கிறதென்றால் பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்கியிருக்கிறது. ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக மாற்றியிருக்கிறது.

இதுவே ’மேக் இன் இந்தியா’ திட்டம்

இதுவே ’தேசபக்தி’

இதுவே ’வளர்ச்சி நாயகன்’ மோடியின் வளர்ச்சி...

ஆகஸ்ட் 12 முதல் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை...


சனி - வாரத்தில் 2 வது சனி விடுமுறை..
ஞாயிறு, திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி
செவ்வாய் - சுதந்திர தினம்...

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்...


மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்...

வில்லியம் ஜோன்ஸ் கற்பித்த சமஸ்கிருத வரலாற்றை முறியடிப்போம்...


நரேந்திரமோடி உள்ளிட்ட பல இந்துத்துவாதிகள் சமசுகிருதத்தை இந்திய துணைக் கண்டத்தின் முதன்மை மொழியாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு தமிழ்நாடு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டத்தின் முதல்மொழி என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்து வரும் வேளையில், சமற்கிருதத்தை இந்துத்துவ -தில்லி வல்லாதிக்க அரசு முதன்மைப்படுத்துவது வரலாற்று மோசடியாகும்.

முதன் முதலில் பிரித்தானிய வல்லாதிக்கம் தான் இந்த சமற்கிருதத்தை உயர்த்திப்பிடித்து வரலாறு எழுதியது. இந்த 'சமற்கிருத' நச்சு விதையை முதன் முதலாக விதைத்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த லில்லியம் ஜோன்ஸ் ஆவார். (படத்தில் இருப்பவர் வில்லியம் ஜோன்ஸ்)

இவர் இளம் வயதிலேயே கிரேக்கம், இலத்தின், பாரசீகம், ஹீப்ரு, அரபு மொழிகளை கற்றிருந்தார். 1783 இல் கல்கத்தா நீதிமன்றத்தின் நீதியரசாகவும் பணிபுரிந்தார். அவர் இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில்  மூத்தமொழியாக சமற்கிருதத்தை கருதி வந்தார். அதன் காரணமாக சமஸ்கிருத மொழியை வங்காளப் பார்ப்பன சமஸ்கிருத ஆசிரியர் ராம்இலக்சன் கவிபூசன் என்பவரிடம் கற்றுத் தெளிந்தார்.

இவர் மேலெழுந்தவாரியாக சில சமஸ்கிருத சொற்களுக்கும், கிரேக்கமொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக கண்டறிந்து சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதாகக் கருதினார். இதன் மூலம் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பக் கோட்பாட்டை வகுத்தார். இதை 1787இல் வங்கத்து ஆசிய சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் அறிவித்தார். இந்தக் கோட்பாடு ஆரிய இன மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கவே பயன்பட்டது.

இந்தியாவிலும், செர்மனியிலும் ஆரிய இனத்தின் ஆதிக்கத்தை தூண்டியதே தவிர எந்தமொழி வரலாற்று உண்மையையும் வலுவான சான்று காட்டி வெளிப்படுத்த வில்லை.

வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக்கு, எச்.எச்.வில்சன் போன்றோர் இக்கருத்தையே அதிகமாக பேசி வந்ததால்  சமஸ்கிருத முதன்மை மொழிக்கொள்கையும், இந்தோ ஐரோப்பிய மொழிக்கோட்பாடும் இந்திய வரலாற்றை தவறாக எழுதும் நிலைக்கு கொண்டு நிறுத்தியது.

இந்திய ஆட்சித்துறைப் பணிக்கு இங்கிலாந்தில் I.C.S. படித்த மாணவர்களுக்கு இந்திய வரலாறு தேவைப்பட்டது. 1815  சேம்சு மில் என்பவர் இந்திய வரலாற்றை எழுதி வெளியிட்டார். அவரைப் பின்பற்றியே தொடர்ந்து பலரும் எழுதலாயினர்.

இந்தியர்களுள் பெரும்பாலோர் காட்டு மிராண்டிகளாக இருந்ததால் ஆரியர் வருகைக்கு பின்னரே  பண்பாடு உருவானதாக  குறிப்பிட்டனர். இதன் மூலம் தவறான இந்திய வரலாற்றுக் கொள்கை அடித்தளமிடப் பட்டது.

அது மட்டுமின்றி, மேலை நாட்டினர் ஆளுவதற்கான கொள்கை வகுப்பாளர்களாகவும் இவர்கள் விளங்கினர். சமஸ்கிருதப் பராம்பரியத்திற்குப் புறம்பான இந்த காட்டுமிராண்டிகளை மேம்படுத்த வெள்ளையர்களுக்கு பொறுப்புண்டு என்றும், பண்பாடற்ற அவர்களை நெறிப்படுத்த கீழ்த்திசை யதேச்சாதிகாரப் போக்கிலேயே (Oriental despotism) ஆள வேண்டும் என்ற ஆளுமைக் கொள்கையையும் வகுத்தனர்.

சமஸ்கிருதம் முதன்மொழி என்பதற்கு எந்த வரலாற்றுத் தரவுகளையும் தரவில்லை. அவர்கள் வேதமொழியும், சமசுகிருதமும் வேறுவேறு மொழிகள் என்பதை அறிந்திலர்.

கி.மு.முதல் நூற்றாண்டுக்கு முன் சமஸ்கிருதம் தொடர்பாக எந்தக் கல்வெட்டும், நாணயமும், மட்கலப் பொறிப்புகளும், முத்திரை எழுத்துகளும் கிடையாது என்பதை அறிந்திலர்.

கி.பி. 350க்குப் பிறகே சமற்கிருத இலக்கியம் பிறந்ததையும் அறிந்திலர். பிறமொழி இலக்கியத்தை தமதாக்க கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் சமற்கிருத மொழி வரலாற்றில் ஒருமொழி பெயர்ப்பு இயக்கம் நிகழ்ந்ததையும் அறிந்திலர்.

சமற்கிருத மொழியின் முந்தைய நிலை பாகதமாகும். அதன் திருந்திய நிலையே சமற்கிருதம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழும், பாகதமும் சில இலக்கண விதிகளிலும், 90% உயிர் எழுத்துகளிலும் ஒன்று படுகின்றன. அதே வேளையில், இவை இரண்டும் ஒரே விதமாக சமற்கிருதத்திலிருந்து வேறுபடுகின்றன.

 தமிழும், பாகதமும்- தென் மொழி, வடமொழி என்ற நிலையில் கி.பி.350 வரை தொல்லியலில் காட்சியளிக்கும் போது அக்காலத்தில் சமற்கிருதம் குழந்தையின் தவழும் நிலையில் இருந்ததாக கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உண்மை வரலாறு இவ்வாறு இருக்க சமற்கிருதம் இந்தியமொழிகளின் முதல்மொழி என்பது தவறான வாதமாகும்.

சமற்கிருதம் தமிழைப் போன்றும், பாகதத்தைப் போன்றும் அ,இ,உ, அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. கிரேக்கம், இலத்தீன் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள் ஆல்பா, பேத்தா அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. இவ்விரு வகை மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தில் சேராதவை என நிரூபிக்க இது ஒன்றே போதுமான சான்றாகும். வில்லியம் ஜோன்ஸ் கூறிய இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப கோட்பாடும் அவரின் கற்பனையில் தோன்றிய ஒன்றாகும்.  .ஆரியர்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்பது ஏற்க இயலாது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியம் உருவாகி விட்டது. கடைச்சங்க காலத்தின் மூவேந்தர் வாழ்ந்த தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது.

உலகின் முதல் மாந்தன் பிறந்தகம் தென்தமிழகம் என்பதும்  முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ்மொழி என்பதும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்  உலகிற்கு உரத்துச் சொன்ன உண்மையாகும்.

இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து எழுதும் மரபு உடைத்தெறியப்பட வேண்டும். தெற்கிலிருந்து வரலாறு எழுதும் மரபு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் சமற்கிருத மேலாண்மைக்கொள்கை ஆட்டங்கண்டு ஓட்டமெடுக்கும்!

நூல் உதவி: வே.தி.செல்லம் எழுதிய தமிழகப் பண்பாடும் வரலாறும்...

சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...


ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது.

இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.

இந்த படம் , இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.

நகரின் வகைக்கு ஏற்ப , அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.

குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக்கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...