17/05/2018

முதுமையை தடுக்கும் தண்ணீர்.. தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது...


உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.

இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். ஒரு தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.

ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரி, இப்போது அந்த தண்ணீரினால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைப் பற்றி பார்ப்போமா..

நல்ல மாய்ஸ்சுரைசர்...

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தை...

தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

பொலிவான கண்கள்...

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

நல்ல க்ளின்சிங்..

முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

பருக்களைக் குறைக்கும்...

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பிம்பிள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இதனை தினமும் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பொலிவான சருமம்...

தண்ணீர் பிணி நீக்கல் (therapy) எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

முதுமையை தடுக்கும்...

இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்...

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.

மென்மையான சருமம்..

சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

எடை குறைய...

தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

சரும தொற்றுகள்..

ச(ஷ)வரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

உடல் முழுவதற்கும் நல்லது...

உடல் ஆரோக்கியத்தை சருமத்தை வைத்து சொல்லலாம். இத்தகைய சருமம் அழகாக இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்...

தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

உடல் துர்நாற்றத்தைப் போக்கும்...

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்...

பாஜக வி.கே.சிங்.. வட கொரியா திடீர் சந்திப்பு...


இவ்ளோ தான் பாஜக தேர்தல் வெற்றி.


ஜெகதீஷ் ஷெட்டர் மட்டுமா. இன்னும் பிடிபடாத பயலுக பிஜேபி காரன் எத்தனை பேர்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்...

பதிவான வாக்குகளும் வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகளும் ஒரே மாதிரி எண்ணிக்கை  இல்லன்னா தப்பா சார். இதுக்கு பேரு தான் கோல்மாலா சார.. என நகர்ந்தார் அந்த தேச பக்தர்...

பாஜக அருண் ஜெட்டிலிக்கு முன்பே தெரிந்தது தான்...


பாஜக வும் கர்நாடக தேர்தல் பேரமும்...


அதுக்கு பிறகு ஒருநாள் ராத்திரி அந்த ராஜா கருப்பு பணத்தையெல்லாம் ஒழிச்சிட்டாராம், மக்கள் எல்லாம் கருப்பு பணம் ஊழல் எதுவுமே இல்லாம சந்தோசமா வாழ்ந்தங்களாம்...

அதுக்குள்ள தூங்கிடீங்களா.. தூங்குங்க தூங்குங்க..

ஆயுத வியாபாரம் பாதிக்க கூடாது அதில் என்றுமே அமெரிக்கா பின் வாங்காது...


இயற்கை வாழ்வியல்முறை - கேரட் நன்மைகள்...


ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்...

ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும்.

மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்று ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான்.

சரி, இங்கு கேரட்டை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இனிமேல் கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வீர்கள்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்...

ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்...

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

செரிமானம்...

கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.

வயிற்று கோளாறு...

கேரட்டை ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும்.

கொலஸ்ட்ரால்...

ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.

ஆரோக்கியமான கண்கள்...

கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்..

கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

 பல் பராமரிப்பு...

கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வலியுடைய மூட்டு வீக்கம்...

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

புற்றுநோயை தடுக்கும்...

கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்..

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.

நீரிழிவு...

நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

 மலச்சிக்கல்...

குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள்.

ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்.

இரத்த அழுத்தம்...

கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

நன்றி பெருசங்கர் ஈரோடு...

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் சதி திட்டம்...


மனோசக்தியின் திறவுக்கோள் ஆல்ஃபா...


நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது? ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே. இது எப்படி சாத்தியமாகிறது? என்று சிந்திக்கும் போது, பலரும் விடையாக கூறும் சொல் அதிர்ஷ்டம்.

ஆனால் அதிர்ஷ்டம் தொடர்ந்து வருமா.. என்றோ, ஒருவரின் தொடர் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை குறித்தோ, யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் ஒருவரின் வெற்றியும், அதனால் ஏற்படும் விளைவு களை மட்டுமே நாம் கருத்தில் கொள்கிறோம்.

உண்மையில் எல்லா வெற்றியாளர்களும் ஒரே சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர். அது தன்னை உணர்தல். இதற்காக அவர்கள் எந்தவித விசேட பயிற்சியையும் மேற்கொள் வதில்லை. தியானத்தை மட்டுமே பின்பற்று கிறார்கள். அதிலும் ஆல்பா என்ற தியான பயிற்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்த வெற்றிகளை தொடுகிறார்கள். இதை வாசிக்கும் போதே நம்மில் பலருக்கு ஆல்பா என்றால் என்ன? அறிய ஆவலாக இருக்கும். ஆல்பா மைண்ட் பவர் என்றால் என்ன?

நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதனை அடிப்படையாக கொண்டு அறிவியலாளர் கள் ஆய்வு செய்து, மூளையின் வேகத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்.

இதற்கு பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பீட்டா என்பது நாம் அனைவரும் வேகமாக பேசுவது, சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளை செய்வதை குறிக்கிறது என்றும், இந்நிலையில் மூளையின் செயல் வேகம் 14 சைக்கிள் வேகத்திற்கு மேல் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இதே சமயத்தில் நமது மூளையின் வேகம் 14 சைக்கிளிலிருந்து 7 சைக்கிள் என்ற வேகத்தில் இயங்கினால், அதற்கு ஆல்ஃபா என்றும், ஏழு முதல் நான்கு சைக்கிள் வேகத்தில் இயங்கி னால் அதற்கு தீட்டா என்றும், 4 முதல் பூஜ்ஜி யம் வரை இயங்கினால் அதற்கு டெல்டா என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நான்கு நிலைகளில் மனிதனுக்கு சக்தி தரும் நிலை எது எனில் ஆல்பா நிலை தான். ஏனெனில் இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல.

இதை எளிமையாக சொல்ல வேண்டுமா னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கை யாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத் தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

ஆல்பா மைண்ட் நிலைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் எவ்வகையான தொடர்பு உள்ளது? மனிதனுக்கு பயம், தயக்கம் ஏற்படும் போதும், தொடர் தோல்விகளை சந்திக்கும் போதும் தன்னம்பிக்கையும், ஊக்கமும் குறை யும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை, இந்த ஆல்பா தியானத்தை தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோ ஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சி யும் தானாகவே ஏற்படும்.

ஒரு மனிதனின் பலம், பலவீனம் இவற்றில் நீங்கள் கூறுகின்ற ஆல்ஃபா பவர் எதை மேம்படுத்தும்? இரண்டையுமே மேம்படுத்தும். மனம் சோர்வடைந்தால் உடலும் சோர்வாகி விடும். ஆல்பா தியானத்தை பழகப் பழக, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகு வதைக் காணலாம். இதனால் இருமல், ஜுரம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமடைவதாக இப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் கூறியுள் ளனர். அதாவது இந்த தியான முறையை பின்பற்றுவதால், உடல்ரீதியாக எந்த குறை வும் ஏற்படுவதில்லை என்று ஊறுதியாக கூறமுடியும். மேலும் மன பலம் அதிக ரித்து, சிந்திக்கும் திறன், முடிவெடுக் கும் திறன் ஆகியவை சிறப்பாக அமை வதை பழகப் பழக உணரலாம். உதாரணமாக மேடைப் பேச்சு என்றாலே ஒருவித தயக்கம் கொண்டவர்கள், இந்தப் பயிற்சியை செய்தால், சரள மாகவும், சாதூரியமாக வும் பேசுவதைக் காணலாம். ஒருவருக்கு எந்த நிலையில் இந்த ஆல்ஃபா தியானம் அவசிய மாகிறது?

தங்களது உடலில் இது போன்ற சக்தி இருக்கிறது என்பதை உணர, தினசரி 15 முதல் 20 நிமிடம் வரை இந்த பயிற்சியை பழகினாலேயே நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உணரலாம். இதன் மூலம் நாம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனோபலம் பெறுவதையும், நமது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகரிப்பதை யும், நமக்குள் ஏதோ சக்தி இருப்ப தையும், இது உணர்த்துவதால் ஒவ்வொ ருவ ருக்கும் இது அவசியமாகிறது.

ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியவற்றிலிருந்து ஆல்பா நிலை எவ்வாறு மாறுபடுகிறது? ஆல்பா நிலை தியானம் இவை இரண்டிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெஸ்மரிசம் என்பது பிறர் மனதை தன்வசப்படுத்தி, தான் நினைப்பதை அவர் மூலம் செய்யவைப்பது. இது பெரும்பாலும் நல்லெண்ண அடிப்படையில் செயல்படுத்து வதில்லை. மேலும் இது ஒரு தவறான முறையும் கூட. ஹிப்னாடிசம் என்பது ஒரு மனோதத்துவ சிகிச்சை முறை. மனநல மருத்துவர் தனது நோயாளியின் மனதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை ஹிப்னாடிசம் முறையை அளிப்பதற்கானது. சிலர் ஆல்பா நிலையை செல்ப்ஹிப்னாடிசம் சுயஹிப்னாடிசம் என்கின் றனர். இது தவறு. ஏனெனில் அறிவியல் பூர்வமாக பார்த்தால், ஆல்பாவின் நிலை 7முதல் 14 சைக்கிள், ஹிப்னாடிசத்தின் நிலை என்பது 0 முதல் 7 சைக்கிள், அதாவது தீட்டாவின் நிலை.

ஆல்பா நிலை வெறும் பயிற்சி கிடை யாது. ஆன்மிக வளர்ச்சிக்கும், தன்னை உணர்வதற்கும், நாம் ஏன் பிறந்தோம் உள் ளிட்ட சிக்கலான கேள்விகளுக்கும் தெளி வான முறையில் விடை பெறுவதற்கு உதவு வது.

சுய முன்னேற்றக் கட்டுரை எழுது பவர்கள், படிப்பவர்கள் சொல்வது என்ன வென்றால் இது போன்ற தியானங்களை பழகுவதால் சுய முன்னேற்றம் இருக்காது, போதும் என்ற மனதை உருவாக்கும் என் கிறார்கள். இது எந்த வகையில் உண்மை? அது உண்மை தான். போதும் என்ற மனநிலை வந்தால் நமக்கு உழைக்கப் பிடிக்காது. முயற்சியும் செய்ய மாட்டோம். ஆனால் ஆல்பா நிலை தியானத்தில், ஆழ் மனது திறந்திருக்கும் போது, மனம் அமை தியடைந்த சூழ்நிலையில், நமது பொருள் ஆசைகள், கனவுகள், பொருள் சார்ந்த இலட் சியங்கள் என்று எதை விரும்பினாலும் நிறை வேறும். இதை விட ஆழ்நிலையான தீட்டா, டெல்டா நிலைகளுக்கு நமது சித்தர்கள் சென் றார்கள். டெல்டா என்பது சமாதி நிலை, அவர்கள் ஆசை அற்றவர்கள். இந்த ஆல்ஃபா நிலையில் இருக்கும் போது, ஒரு தனி மனிதன் தனக்கு என்னென்ன தேவையோ அது குறித்து சிந்தித்தால், அது ஆழ்மனதில் தங்கி, நமக்கு அந்த இலக்கை அடைய பெருமளவில் உதவும். அதனால் இந்த தியானத்தில் போதும் என்ற மனதை உருவாக்குகிறோம் என்று கூற முடியாது. நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளை தொடங்கும்போது, கூட்டு தியானத்தை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். இதனால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. 

ஆல்பா மைண்ட் நிலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா? எம் மாதிரியான விழிப்புணர்வு தேவை? விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துள்ளது. பல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நாம், அதற்குரிய தீர்வை நோக்கி, நமது தேடலைத் தொடருகிறோம். இதற்காக சில சாமியார் களிடமும், மந்திரவாதிகளிடமும் செல் கிறோ ம். ஆனால் இந்த முறையை விட, ஆல்பா தியானத்தை தொடர்ந்தோமானால், நாம் எங்கும் செல்லாமலே, நமக்குள் உள்ள சக்தி யை உணர்ந்து, சுயமாக சிந்திக்கத் தொடங்கி விடுவோம். இதற்குரிய சக்தி ஆல்பாவிற்கு உள்ளது. * ஆல்பா தியானம் எந்த வயதில் பின்பற்றலாம்? நாம் தியானம் செய்யும் போது, குழந் தையை அருகில் அமர வைத்து, தியானம் செய்வதைக் கவனிக்கச் செய்யலாம். பத்து வயதாகும் போது, முறைப்படி கற்றுக் கொடுக் கலாம்.

ஆன்மிகம், மூட நம்பிக்கை, மதம் இம்மூன்றின் விளைவுகளிலிருந்து ஆல்பா எம்மாதிரியாக வேறுபடுகிறது? ஆல்பா நிலை, எந்த மதக் கோட்பாடுகளுக் குள்ளும் வராது. மதம் சாராதது. கர்ம வினைகளின்படி தான் நாம் ஒரு குறிப்பிட்ட மதபின்னணியில் பிறக்கிறோம். மதம் என்பது ஒரு டிசிப்ளின். கோட்பாடு. எல்லா மதமும் நல்லனவற்றைத் தான் வலியுறுத்துகின்றன. மதம் மனிதனுக்கு சில சடங்கு, சம்பிரதா யங் களை மட்டுமே கற்பித்திருக்கின்றது. ஆனால் இப்படி தான் சிந்திக்கவேண்டும் என்று வலியு றுத்தவில்லை. பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒரே நாள் தான். அது தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கிறது. ஒரே நாளில் பல வகுப்புகள் எடுத்து, அவர்களையே இதற்கான செயல் முறையை, நடைமுறைப் படுத்த பயிற்சி அளித்து விடுகிறோம். ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த திறமைகள் வேண்டும். ஆன் மிகம் அப்படி அல்ல. இந்தத் துறையில் ஈடுபடுவது என்பது நான் எடுத்த முடிவு அல்ல. எனக்குள் இருக்கும் சக்தி எடுத்த முடிவு. நான் பல விட யங்களையும், அனுபவங் களையும், தியானத்தால் கற்றுக் கொண்டேன், தியானத்தால் பல விடயங்கள் நடந் தன. இதையே மற்றவர்களுக்கும் சொல் லிக் கொடுத்து அவர்கள் வாழ் க்கை யிலும் மாற்றம் கொண்டு வரலாம் என்ற எண்ணம் 2005-ல் வந்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பயன்ப டுத்திக் கொண்டி ருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது ஏழுவிதமான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கின்றோம்.

ஆயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்று பலன் அடை கின்றார்கள். இதற் காகத் தான் நான் பிறந்தேன் என்று எண் ணுகி றேன். மற்ற துறைகளில் நான் ஈடுபட்ட போது இல்லாத திருப்தி, இந்தத் துறையில் தான் ஏற்பட்டுள்ளது. எனக்குள் மாறுபாடான எண்ணம் ஏற்படவில்லை. ஆன்மா, ஆன்மிகம் இரண்டிற்கும் ஆண், பெண் பேதமில்லை, என்னால் வீட்டையும், குடும்பத் தையும் பார்த்துக் கொண்டு, இதையும் பார்த்துக் கொள்வது என்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு சக்தி பெறுகிறது. அதனால் எண்ணங்களை செழுமைப் படுத்த வேண்டும். தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கக் கூடாது...

இந்திய தேர்தல் கலாட்டா...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு- உச்சநீதிமன்றம் அதிரடி...


திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை நாளை சமர்ப்பிக்க உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்...

இதில் ஐபிஎல்- வேண்டாம், காவேரி வேண்டும் என கூறியவர்களின் நண்பர்கள் அதே ஐபிஎல்-ல் வர்ணனையாளர்கள்...


சமீபத்தில் வந்த ஒரு படம், பெரும்பாலான இளைஞர்களை திசைதிருப்பிய படத்தில் நடித்தவர் காவேரி வேண்டாம் என்றார்,

மே-18 நினைவுகொள் என அனைவரும் பேசுகிறார்கள்,

ஆனால் மே-19 நவீயுக ரத்தக்கண்ணீர் என்னும் நாடகத்தை நடத்துகிறார்கள்..

இவர்களின் ஆகச்சிறந்த நோக்கம் சென்னையை ஒருபோதும் சிந்திக்க விடகூடாது என்பதே,


நம் இனத்தை தடம் தெரியாமல் அழித்த நாளுக்கு, அடுத்த நாள் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன..?

இப்போது சிலர் வந்துவிடுவார்கள் அவர்கள் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்கள், அவர்களை கொச்சை படுத்தாதீர்கள் என்று..

இங்கு நாம் அனைவரும் இன்றும் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கைக்காக போராடி கொண்டுதான் இருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்...

கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? - ப.சிதம்பரம்...


இந்தி திணிப்பை வரவேற்கிறாரா?அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம்போடுகிறாரா?

கொழும்பு வந்து அமெரிக்கா ஒழிக, அது சனியன், அது திருந்தாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருகின்றார், இலங்கை அதிபரும் சிரிக்கின்றார்...


இது டிரம்ப் கோஷ்டிக்கு கண்களை சிவக்க வைக்கின்றது...

இனி பாருங்கள், அமெரிக்காவில் மே 17, 18 எல்லாம் அணல் பறக்கலாம், பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என பிரபல வெளிநாட்டு பத்திரிகை எழுதலாம், இங்கும் பலர் பயங்கர வேடிக்கை காட்டலாம்...

தொப்பை குறைய எளிய பயிற்சி...


தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.

கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும்.

பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்...

வீட்டிற்கு ஒரு சிந்தனை செய்பவர் போதும்...


அவர் வீட்டை அவர் பார்த்துக் கொள்வார்.. அந்த ஒருவரை தேடியே உவனின் பயணம்...

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் பகிர்ந்த S.V.சேகர் தேடப்படும் நபர் என சென்னை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது...


உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்து இருந்தது குறிப்பிடதக்கது...

பாஜக வை கலாய்க்கும் சிவசேனா...


கொராபோரீ ராக் ஆவி – 1959...


இந்தப்படம் ஆஸ்திரேலியாவின் கொராபோரீ என்ற இடத்தில் 1959ம் ஆண்டு ஆர்.எஸ்.ப்ளேன்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டு இன்றளவும் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது...

நீ எத்தனை வடிவம் பெற்றாலும், தமிழனின் எண்ணம் ஒன்றுதான். உன்னை தள்ளி வைப்பது...


இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார் குமாரசாமி...


கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சிகுள்ளான பாஜக, மஜத தலைமைக்கு மிரட்டல் விட தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பு காங்கிரசை முறியடிக்க சில தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவு கொடுத்ததை அக்கட்சியின் டெல்லி தலைமை குமாரசாமிக்கு சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த உங்கள் தேர்தல் செலவையும் நாங்கள் கவனித்துக்கொண்டோம் என மிரட்டல் விடுத்ததோடு ரகசிய உடன்படிக்கையை மீறக்கூடாது என்று கூறியிருக்கிறது.


அதில் பாஜக, காங்கிரஸ் கட்சியைவிட குறைவான தொகுதிகளை பெற்றிருந்தால் அப்போது ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் உதவும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அப்போது துணை முதல்வராகத்தான் ஏற்றுக்கொள்வோம் என்றும் பாஜக ரகசிய பேச்சு இருந்துள்ளது. ஆனால் இப்போது காங்கிரஸ் குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியே கொடுத்துள்ளது. இதனால் குமாரசாமி காங்கிரஸ் கட்சியோடு உடன்பட்டு ஆட்சி அமைக்க உள்ளார். கடுப்பான பாஜக டெல்லி தலைமை சில மிரட்டல்களை குமாரசாமிக்கு கொடுக்க, உங்கள் வேலையை என்னிடம் காட்ட வேண்டாம். இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார் குமாரசாமி...

கர்நாடக தேர்தல் அறிந்து கொள்ள வேண்டியது...


ராக்கெட் ராஜா கைதுக்கு எதிர்ப்பு.. நெல்லையில் பேருந்து தீ வைத்து எரிப்பு...


 நெல்லை பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நெல்லையை அடுத்த வடக்கு தாழையூத்து கிராமத்துக்கு அரசு டவுண் பஸ் வந்துள்ளது. அந்தப் பேருந்தை வழிமறித்த கும்பல் ஒன்று, பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தது. அத்துடன், ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பியது...

நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள்...


அனைத்து காவல்துறையும் கெட்டவர்கள் அல்ல...


உங்களை போன்ற நல் உள்ளங்கள் இருக்க தான் செய்கிறார்கள்...

என்ன செய்ய சில கெட்டவர்களால் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது...

தமிழக பாஜக ஆளுநர் தில்லு முல்லு...


விரைவில் தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு ஆளாகப் போகிறது. மற்றும் தண்ணீருக்காக கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை..


இப்படி நாம பயந்து கொண்டு இருக்கும் நிலையில் வாட்டர் கேன் விற்கும் கம்பனிகளுக்கு மட்டும்  தண்ணீர் தட்டுப்பாடற்று கிடைக்கிறது இது எங்கோ இடிக்கிறது ?

விழிப்புணர்வு தேவை ...

புதின் - பாஜக மோடி சந்திப்பு...


இலுமினாட்டி - பூமியின் 33° இணைக்கோட்டின் அமானுஷ்யம்...


பூமியின் அச்சிலிருந்து 33° அளவெடுத்து ஒரு இணைக்கோடு வரைந்து அதில் குறுக்கிடும் இடங்களையும் அந்த இடங்கள் சார்ந்து வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பீர்களானால் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

பூமியின் 33° இணைக்கோட்டுப் பகுதி அத்தனை முக்கியத்துவமுள்ளது.

எண் கணித நிபுணர்களிடம் 33 ஆம் எண்ணின் சிறப்பு என்ன என்று கேட்பீர்களானால் அவர்கள் பல்வேறு காரியங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அமானுஷ்ய சடங்குகள் நிறைந்த ப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் மிக உன்னத நிலையாக 33-டிகிரி போற்றப்படுகிறது.

இந்த நிலையை எட்டியவர்களை 33° ஃப்ரீமேசன் என்றழைப்பார்கள்.

இவர்களது பழமை வாய்ந்த போனிக்ஸ் கோவிலும் சரியாக பூமியின் 33° இணைக்கோட்டில் தான் வருகிறது.

உலகின் ஆகப்பெரிய அமானுஷ்யங்களை சுமந்து கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணமும், அள்ள அள்ளக் குறையாத மர்மங்களை உள்ளடக்கிய கிரேட் பிரமிடும் இதே இணைகோட்டில் தான் இருக்கிறது.

செழிப்பான, நாகரீகமிக்க தேசமாயிருந்து முற்றிலும் கடலில் மூழ்கி அழிந்து போனதாக நம்பப்படும் அட்லாண்டிஸ் தீவும், விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான சைத்தானின் நகரமாக சொல்லப்படும் பாபிலோனும் இந்த 33° இணைக்கோட்டுப் பகுதியில் தான் இருந்தது.

சரி எல்லாம் இருந்துட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா?

33-ஆம் எண் சைத்தானுக்கு உகந்த எண்களிலேயே மிக முக்கியமான எண்ணாகும்.

எனவே தனக்கு மிகவும் உகந்த அந்த இடத்தில் தனக்கு இரத்த பலிகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சைத்தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

எனவே உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே சுய லாபத்துக்காக அந்த இடத்தில் விபத்துகளையும், யுத்தங்களையும் நிகழ்த்தி சைத்தானுக்கு நரபலிகளை கொடுப்பதாக சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆதாரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கும் போது நமக்கும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடவே செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி இந்த 33° இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் தலைநகரையோ அல்லது இராணுவ தளங்களையோ தானே தகர்க்க வேண்டும்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு வீசப்பட்டதேன், அது சைத்தானை திருப்திப்படுத்தத் தான் என்று சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வாதிடுகிறார்கள்.

வட ஆப்பிரிக்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்று அனுதினமும் மக்கள் இரத்தம் சிந்தி மரிக்கும் பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான். F.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது சரியாக 33 டிகிரி அளவுள்ள இடத்தில் தான்.

உலகம் முழுவதும் இந்த33° இணைக்கோட்டுப் பகுதியில் 600 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்கும் பகுதிகளான ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகின்றன.

1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற நகரத்தில் வேற்று கிரகவாசிகளின் விண்கலம் நொறுங்கி அதில் பயணம் செய்த ஏலியன்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடமும் இதே இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

விவிலியத்தில் இறைவனுக்கும் சைத்தானுக்கும் கடைசி யுத்தமாக அர்மெகதோன் நடைபெறப் போகும் இடம் என்று நம்பப்படும் மகிடோ மலையும் இந்த 33 டிகிரி இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தது தனது 33 வது வயதில் தான், சைத்தான் சொர்க்கத்தில் இருந்த இறை தூதர்களில் மூன்றில் ஒரு பங்கை தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக விவிலியம் சொல்லுகிறது. அது சரியாக 33.33 சதவிகிதமாகும்.

இந்த 33 என்ற எண் இலுமினாட்டிகளின் கடவுளுக்கு பிடித்த எண். பிரிமேசன் என்ற அமைப்பை பற்றி ஒரு பதிவில் சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்கா.

அதில் அதிகபச்ச உயர்நிலை 33° தான்.

இதை பற்றி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பார்க்கலாம்...