25/02/2018
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...
ஏனென்றால் அது ஒன்றுதான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது.
நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.
யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.
உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.
இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.
உன் தனித்தன்மையை மதி.
பிறர் தனித்தன்மையையும் மதி.
எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.
அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.
அப்போதே நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலர முடியும்.
மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.
மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....
சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு,
சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,
ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள் - அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,
மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.
நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.
உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.
அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.
உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.
யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.
தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.
எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.
ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.
மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.
மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...
பசிக்காக கொஞ்சம் அரிசியை திருடியதற்காக அடித்து கொலை செய்யபட்ட தமிழர்... அவரை அடித்து கொலை செய்த படித்த முட்டால் மலையாளி இவனே...
ஆந்திரா கர்நாடகா கேரளா என அடிவாங்கி சாகும் தமிழ் இனம்...
தமிழகத்தில் திராவிடம் - இந்தியம் என்று சொல்லி தமிழனை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும்...
இந்த மலையாளி, தெலுங்கர், கன்னடர்களிடம் அனைத்து உரிமைகளையும் கொடுத்து விட்டு.. கை கட்டி நாம் அடிமையாக வாழுவோம்... முட்டாள் தமிழினமே...
திருப்பி அடித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் நினைவில் கொள்...
சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?
நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.
அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.
இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.
உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார் வைத்தியர்.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:
நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்து விடும். அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.
மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்...
தமிழர்களுக்கு ஈடு இவ்வுலகில் யாரும் இல்லை...
200 ஆண்டுகள் பழமையான ஒரு அக்ரகார வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது...
அப்போது சுவர் அலமாரி ஒன்றைப் பெயர்த்துக் கொண்டிருந்தார்கள். சுவற்றின் மேல் காகிதம் போல் ஏதோ ஒட்டப்பட்டிருந்தது.
இடித்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் அது தாமரை இலை என்று சொன்னார்கள்.
தாமரை இலையை சுவற்றில் ஒட்டி அதன் பின்பே அலமாரியைக் கட்டுவார்களாம்.
காரணம் என்னவென்றால் கரையான் அரிக்காதாம்.
கடைசி புகைப்படத்தில் இருப்பது 200 ஆண்டுகளுக்கு முன் சுவரில் ஒட்டப்பட்ட தாமரை இலை...
இது போல் மிகப் பெரிய வாழை இலைகளையும் இடிக்கும் போது பார்த்திருக்கிறார்களாம்.
கரையான் அரிக்காத தொழில் நுட்பத்துடன் வீடு கட்டுவது எப்படி? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது அன்று....
4-வது நாளாக அரசு ஊழியர்களின் தொடர் மறியல் போராட்டம்...
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை
ஏற்க வேண்டும்: அடக்குமுறை கூடாது...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் சென்னையில் தொடர்மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். இதுதொடர்பான அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.
இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் அதன் பதவிக்காலம் 3 தடவை நீட்டிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து சாந்தா ஷீலா நாயர் விலகிய நிலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி புதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் குழு அறிக்கை தாக்கல் செய்ததா? அக்குழு தொடர்கிறதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த 2011=ஆம் ஆண்டு முதல் கூறி வரும் அதிமுக அரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அநத வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு தொகுப்பூதியத்தை நீக்கிவிட்டு காலமுறை ஊதியம் வழங்குவது 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை அளிப்பது என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படாதது நியாயமல்ல.
அரசு ஊழியர்கள் அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தும்போது, அது தொடர்பாக அவர்களை அழைத்துப் பேசுவது தான் சரியான அணுகுமுறையாகும். மாறாக போராட்டம் நடத்தும் பணியாளர்களை கைது செய்வது எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக போராட்டத்தையும் சிக்கலையும் பெரிதாக்கவே வகை செய்யும். எனவே, அடக்குமுறைகளை கைவிட்டு, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்...
தப்பித்தது.... தகவல் அறியும் உரிமை சட்டம்...
கடந்த 17-09-2014-ஆம் தேதி நமது சென்னை உயர் நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக முக்கியத் தீர்ப்பு ஒன்றை பகர்ந்தது. அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உயிரோடு குழிதோண்டிப் புதைக்க முனைந்த தீர்ப்பு என்று சொன்னால் மிகையாகாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி தகவல் கேட்பவரிடம் எதற்காக தகவல் தேவைப்படுகின்றது என்பதற்கான காரணங்களை பொதுத் தகவல் அலுவலர் கேட்கக் கூடாது. மனுதாரர் கேட்கின்ற தகவல் இருக்கும் பட்சத்தில் அதனை காரணம் ஏதும் கோராமல் பொதுத் தகவல் அலுவலர் வழங்க வேண்டும். இந்த ஒரு சிறப்பான வகைமுறை காரணமாக மக்கள் உரிமைச் சட்டங்கள் பலவற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிரீடமாக விளங்குகின்றது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் The Public Information Officer, The Registrar (Administration), High Court, Madras Vs. The Central Information Commission, rep. by its Registrar, New Delhi and Mr. B.Bharathi (W.P. No. 26781 of 2013 & M.P. No. 1 of 2013) என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில் தகவல் கேட்டு மனு செய்பவர் அதற்கான குறைந்தபட்ச காரணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அதிரடியான, ஆனால் பிரிவு 6(2)-அய் மீறிய தீர்ப்பை வழங்கி எல்லோரையும் கதிகலங்க வைத்தது.
பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரி மனு செய்தார். அவர் கோரிய தகவல்கள் யாவும் அவர் தொடுத்த வழக்கு மற்றும் புகார் தொடர்பானவை. அவர் கோரிய தகவல்களை அவருக்கு வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு மைய தகவல் ஆணையம் ஆணையிட்டது. இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தார்.
அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான காரணத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க, தகவல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் கோருவது சொந்த நலனுக்கா அல்லது பொது நலனுக்கா என்பது குறித்து குறைந்தபட்ச காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று மாண்பமை நீதியரசர்கள் என்.பால்வசந்தகுமார், கே.இரவிச்சந்திர பாபு ஆகியோர் கருத்துரைத்தனர். அவ்வாறு சொல்லாத நிலையில் அவரது மனு தகவல் அறியும் சட்ட வகைமுறையை நிறைவு செய்ததாக கொள்ள முடியாது என்றும் கூறினார். அதாவது பிரிவு 8(1)(j)-இன் கீழான விதிவிலக்கை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டுகின்றது. மனுதாரர் கோரும் தகவல்கள் அவரிடமே உள்ளன. அப்படியிருக்க அவர் மீண்டும் இச்சட்டத்தின் கீழ் தகவல் கோரி பொது அதிகாரஅமைப்பின் பணிச்சுமையை அதிகப்படுத்துகின்றார்; இது பொது அதிகாரஅமைப்பின் வளஆதாரங்களை பொருத்தமில்லாத வகையில் மாற்றி விடக்கூடியதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் கூறுகின்றது. இங்கு பிரிவு 7(4) சென்னை உயர் நீதிமன்றம் கைக்கொள்கின்றது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விடயத்திலிருந்து தகவல் வேண்டும் என்றால், நகல் மனு தாக்கல் செய்து அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரக்கூடாது என்றும் கூறுகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொறுத்தவரை, அதன் வகைமுறைகளுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்றால் அங்கு "இசைவமைந்த பொருள் விளக்கம்"தான் (Harmonious Construction) எடுபடும். இது பொது மக்களின் நலன் கருதி இயற்றப்பட்ட சட்டமே (Beneficial Legislation) தவிர, அரசின் நலன் கருதி அல்ல.எனவே குடிமக்களுக்கு "பயன்தரும் முறையில் பொருள் கொள்ள வேண்டும்" (Beneficial Construction). நாடாளுமன்றத்தின் உள்ளக்கிடக்கையை (Intention of the Legislature) ஒட்டி பொருள் தர வேண்டும்.
இச்சட்டத்தின் பிரிவு 6(2) தான் இதன் அச்சாணி. இதன்படி தகவல் கேட்பதற்கான காரணங்களை மனுதாரர் தெரிவிக்க வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமை, குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். இவற்றை மையமாக கொண்டே பிரிவு 7-இன்படி தகவல் கோரும் வேண்டுகோளை முடிக்க வேண்டும். அவ்வாறே பிரிவு 8-இன் கீழ் வரும் விதிவிலக்குகளை பொருள் கொள்ள வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம் பிரிவு 6(2) எனும் அச்சாணியை கழற்றி விட்டு தீர்ப்பு வழங்கியதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிலைகுலைந்தது. பொது தகவல் அலுவலர்கள் மகிழ்ந்தனர். அரசு அலுவலர்கள் மறுபடியும் மெத்தனப் போக்குக்கு தாவ திட்டமிட்டனர். நல்ல வேளையாக ஒரே வாரத்தில் அதாவது 23-09-2014-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை மறுஆய்வுக்கு எடுத்து தனது தீர்ப்பை மாற்றிவிட்டது. பிரிவு 6(2)-ஐ கவனிக்காமல் தீர்ப்பு வழங்கிவிட்டதாக நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். "குறைந்தபட்ச காரணம் தெரிவிக்க வேண்டும்" என்ற வரிகளை இரத்து செய்வதாகவும் தங்கள் புதிய தீர்ப்பில் குறிப்பிட்டனர். புதிய தீர்ப்பு நகலை வெளியிடவும் பதிவகத்திற்கு ஆணை பிறப்பித்தனர்.
இப்படி ஒரு தீர்ப்பு வந்தததும் நல்லதுதான். ஒரு புறம் தகவல் அறியும் உரிமை சட்டம் தப்பித்தது. அதே நேரம் தனது தீர்ப்பை தகவல் அறியும் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உயர் நீதிமன்றம் திருத்திக் கொண்டதால், அச்சட்டத்தின் வலிமை மேலும் கூடியுள்ளது என்றும் கொள்ள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மேலும் புடம் போட்டதாக மாறியுள்ளது.
நன்றி : சட்டப்பார்வை...
சக்தி... The Power...
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்..
இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள்,இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.
சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதை மட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.
வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.
நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?
எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...
1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி
1. அன்புச் சாவி...
உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்து விடலாம்.
ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டைமட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுடகுலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.
நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.
அதன் மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.
2. நன்றிச் சாவி...
வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.
நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும்.உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.
3. விளையாட்டுச் சாவி...
வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வ தென்றால், ‘சும்மா பூந்து விளையாடுங்க..
சிறுவயதில் நாமெல்லாம்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.
அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.
சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும் போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.
கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக்கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓடவிடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.
‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது பைபிள். நம் ஊரிலும் ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்று ஒரு வாசகம் உண்டு.
நான் சொல்லும் இந்த மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று நமக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்...
தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. தோழமை கட்சியான தமிழக மக்கள் கழகம் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு இளந்தமிழர் முன்னணி கழகம் முழு ஆதரவு அளித்துள்ளது. இளைய சமுதாயமே நம் மக்களை காப்பாற்ற ஒன்றிணைவோம் வாரீர்..
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்,சென்னை
நாள்: 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3:30 மணி..
என்றும் அன்புடன்
டாக்டர்.செ.செல்வகுமார்
கழக பொதுச்செயலாளர்
இளந்தமிழர் முன்னணி கழகம்
9788927926 / www.itmk.in /...
திருட்டு கம்யூனிச த்தின் நாசவேலையும் தவறான சித்தரிப்பும்...
20.02.2018 அன்று தூத்துக்குடியில் கலவரம் செய்ய விறகு கட்டைகளுடன் வந்த இரவுடிகளை கதற விட்ட தூத்துக்குடியின் நேர்மையான, இளம்தைரியமான ASP செல்வநாகரெத்தினம் IPS அவர்களுக்கு இராயல்சல்யூட்..
இவரை பற்றி தெரியாதவர்களுக்கு...
இவர் 2010 ம் ஆண்டு IPS வெற்றி பெற்று வடமாநிலத்தில் (மணிப்பூர்) SP யாக நேர்மையாக பணிசெய்து அந்த மாவட்டமக்களால் அன்புடன் அனைவராலும் நேர்மையானவர் என்று ஆழைக்கபட்டவர், வடகிழக்கு மாவட்டங்களுக்கு சவாலாக இருந்த நக்சல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர். மணிப்பூர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி அமைதியைப் பேணியதால் DGP யிடம் மெச்சத்தகுந்த பணிக்கான விருதினை குறுகிய காலத்தில் பெற்றவர்.
பிறகு தமிழக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று மீண்டும் IPS எழுதி 2014 ம் ஆண்டு வெற்றி பெற்று தற்போது தூத்துக்குடியில் தன்னுடைய தமிழகமக்களுக்காக நேர்மையான பணியை செய்ய வந்த காவல் துறையின் திரு.செல்வநாக ரத்தினம் I.P.S, தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.
பணத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்கும் விலைபோகாத மக்களின் காவலரான இவரின் நேர்மையான செயலில் இன்னல் ஏற்படுத்த வேண்டி, சிவப்புத் துண்டு ஆதரிக்கும் விதமாக "சினிமா போலீஸ்" என்று கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் ஊடக செய்தியாளர்கள்
துப்பாக்கி வைத்திருக்கும் அவர் எதற்காக திரும்பி ஓடினார் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
1.இந்த கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மாநாடு என்ற பெயரில் பள்ளி மாணவர்களையும், மாணவிகளையும் சிவப்பு உடை அணிவித்து மாலை 3மணி வெயிலில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், இவ்வாறு சென்றால் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் என தெரிந்து, ASP ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்து விட்டார், அனுமதி பெறாமல் ஊர்வலமாக சென்றது தவறு. அனுமதி பெற்றதாக ஊடகத்தில் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.
2.வெறும் 30 மீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஊர்வலத்திற்காக இடைமறித்ததோடு, தாமதமாக வழிவிட்டனர்.
3.ஊர்வலம் என்ற பெயரில் மாலை பள்ளி விடும் வேளையில் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோரையும், ஆசிரியர்களையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
4.அங்கே பாதுகாப்பில் ஈடுபட்ட SI யை கெட்ட வார்த்தைகளால் பேசியதோடு ஊர்வலத்தை நடுவழியில் நிறுத்தினர்.
சற்று நேரத்தில் அங்கு சென்ற ASP, ஏன் பிரச்சினை செய்கிறீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ASP மற்றும் அவர்களுடன் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி மேலும் பிரச்சினையை உண்டு செய்தனர்.
5.பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி நகர டெல்டா போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தி ASP Gunman யின் துப்பாக்கியை பறிக்க முயன்றனர் எனவே இவர்களின் மீது லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த 2000 பேர் கொண்ட கம்யூனிஸ்டுகள்,10 காவலர்களுடன் வந்த ASP மற்றும் படையினரை திருப்பி தாக்கி கொல்ல முயன்றனர்.
ஊர்வலத்தில் அனேகம் மாணவ மாணவிகளை அனுமதியின்றி அழைத்து வந்ததால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடாமல் , அமைதியான முறையில் தன்னுடைய படையினரை அழைத்து திரும்பி சென்றார் ASP.
இதனை தீர விசாரிக்காமல் ஊடக செய்தியாளர்கள் கம்யூனிஸ்டு தாக்கியதால் ASP ஓடுகிறார் என தவறான தகவலை மக்களிடம் பரவ செய்துள்ளனர்.
மேலும் கம்யூனிஸ்டுகள் வெறிகொண்டு தாக்கியதில் 4 காவலர்களின் மண்டை உடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு மாகாண நக்சல்களை ஒடுக்கியவருக்கு உங்களை ஒடுக்குவது கடினமல்ல...
உண்மையறிந்தோர் இவரை பாராட்டுவோம்...
சென்னை கிண்டியிலுள்ள அறிவியல் நகரத்தில் நடைபெறும் பொருட்காட்சியில், ஐயா சகாயம் அவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலப்பை அங்காடியில் உழவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்கள் பொது மக்களிடமும் நேரடியாக சந்தைப்படுத்தப்படுகின்றன...
விற்பனையில் கிடைக்கும் லாபம் முழுமையும் உழவர்களிடமே திருப்பி அளிக்கப்படுகிறது.
அழிவின் விளிம்பில் இருக்கும் உழவர் பெருமக்களின் வாழ்வுயர, வாழ்க்கைத்தரம் மேம்பட மேடையேறிக் குரல் கொடுப்பதும் போராட்டங்களும் ஒருபுறம் இருந்தாலும் இது போல் ஆக்கப்பூர்வமாக நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையும் செய்வோம்...
விதியை மதியால் வெல்ல முடியுமா.?
நம் விதியும் மாறக் கூடியது...
வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..
வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..
கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்.. இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.
நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம்.
பிறகு சொல்கிறோம்: எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது.
வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்.
பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.
நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..
நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது.
காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.
அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.
நோய் வேண்டாம் என்று எண்ணுவதைவிட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.
சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.
கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.
எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி.
என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..
உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.
எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்.
எண்ணம் மாறக் கூடியது என்றால் செயலும் மாறக் கூடியது. நம் விதியும் மாறக் கூடியது.
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்..
மந்திரி தரப்பு கேட்ட 4000 கிலோ கறி...
செய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜு தன் மகள் திருமணத்தை 19ம் தேதி திருப்பதியிலும், ஆளும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை 21-ம் தேதியன்றும் வைத்தவர், உள்ளூர் மக்களும் தென் மாவட்டத்திலுள்ள அவரது நண்பர்களும் கலந்துகொள்ளும் விதமாக கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் 25-ம் தேதியன்று நடத்துகிறார்.
கோவில்பட்டி வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் ஆளுக்கொரு பங்களிப்பாக சிலவற்றை செய்கிறார்கள். உங்களின் பங்களிப்பாக 4000 கிலோ ஆட்டுக்கறி வேண்டுமென அமைச்சர் தரப்பிலிருந்து உள்ளூர் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் தரப்பிற்கு சென்றிருக்கின்றது.
ஒன்றாம் தேதியிலிருந்து கூலி உயர்வுக் கேட்டு வேலைக்குப் போகாமல் போராடிக்கிட்டு இருப்பவர்களிடம். இந்த நேரத்தில் மந்திரி மகள் திருமண வரவேற்பிற்கு 4000 கிலோ ஆட்டுக்கறி வேணுமாம். அப்படி கறி திங்கனுமா அடத்தூ...
அரசு பஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: சிவகங்கை வழக்கறிஞர்கள் 6 பேர் கைது- கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...
சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் செய்தபோது அரசு பஸ் குறுக்கிட்டதால் ஓட்டுநரை வழக்கறிஞர்கள் சிலர் அடித்து உதைத்தனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தில் ஓட்டுநர் செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக 6 வழக்கறிஞர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று அவர்களை கைது செய்தனர்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதற்கு திருப்பத்தூர் சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு பிரிந்து செல்லும் புதூர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி, சிவகங்கை வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் செய்தனர். அப்போது திருச்சியில் இருந்து பரமக்குடி செல்லும் அரசு பஸ்ஸை ஓட்டுநர் செல்வராஜ்(55) ஓட்டிச் சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வழக்கறிஞர்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பஸ்சை இயக்கியதால் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தங்கப்பாண்டியன் கீழே விழுந்து காயமடைந்தார்.
ஓட்டுநர் மீது தாக்குதல்...
இதனால் ஆத்திரமடைந்த மற்ற வழக்கறிஞர்கள் பஸ் ஓட்டுநர் செல்வராஜை சட்டையைப் பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அவரது சட்டை கிழிந்தது. அத்தோடு பரமக்குடிக்கு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். பின்னர், பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற செல்வராஜ், கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மயங்கிய நிலையில் இருந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு சேர்த்தனர்.
ஜாமீனில் விடுதலை...
சிவகங்கை நகர் போலீஸார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் தங்கப்பாண்டியன், வழக்கறிஞர்கள் ராஜாராம், செந்தில்குமார், மதி, வீரசிங்கம், வால்மீகி ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். இவர்கள் சிவகங்கை ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி லலிதா ராணி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இவர்களை ஜாமீனில் விடுவித்தார்...
கேரள அரசே.. மலையாள இனவெறியன் கிருஷ்ணன் குட்டி மீது நடவடிக்கை எடு...
தமிழக அரசு தண்ணீர் தர மறுப்பதாக பொய்யான தகவலைக் கூறி, கேரளாவைச் சேர்ந்த ஜனதாதளம் கட்சியைத் சார்ந்த சித்தூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் குட்டி என்பவர் சாலை மறியல் நடத்தி, தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து வருடம் தோறும் ஒப்பந்த அடிப்படையில் 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது.
தற்போது அப்பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் வருடம்தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விடுகிறது. இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீர் தான் வழங்க வேண்டும். இதற்கு மே மாதம் வரை கால அவகாசம் இருக்கிறது.
ஆனால் அந்த ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில், தமிழக வாகனங்களை மறித்து போராட்டம் நடத்துவேன் என்றும் கேரள மாநிலம் சித்தூர் தொகுதி ஜனதா தளம் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணன் குட்டி அறிவித்தார்.
தற்போது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
இவர் நேற்று நள்ளிரவு முதலே சனதாதளம் கட்சியினரையும், சில குண்டர்களையும் திரட்டி தமிழக எல்லையை மறிக்க ஆரம்பித்தார்.
பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலும், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சி புரம் வழியாக திருச்சூர் செல்லும் கேரள எல்லை பகுதியிலும் சாலையில் அமர்ந்து இவனது கட்சியினர் தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் மறித்தனர்.
இதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் ஏற்றி சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
மேலும், இந்தப் போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 வாகனங்களின் கண்ணாடிகளை சனதா தள குண்டர்களால் உடைக்கப்பட்டன. இரு மாநில காவல்துறையினரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். . தமிழக வாகனங்களை கேளராவுக்கு செல்ல விடாமல் தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இதனால் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
தமிழர்களின் முல்லைப் பெரியாற்று அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும், கம்யூனிஸ்டு், காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அதனை ஏற்க மறுத்து வருகின்றன. அணை உடைந்து விடும் என்று கூறியே 30 ஆண்டுகளாக 136 அடிக்கு மேலே உயர்த்த மறுத்து வருகின்றன.
ஆனால் கேரளாவிற்குச் செல்லும் ஆழியாற்று நீரை எப்போதும் தமிழகம் மறுத்ததில்லை. மழை குறைவு காரணமாக 5.5 டி எம்.சி. வரை நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 1.75 டி.எம்.சி. தான் நிலுவவையாக உள்ளது.
இந்த உண்மை தெரிந்திருந்தும் கிருஷ்ணன் குட்டி தமிழகம் நீர் தர மறுப்பதாகக் கூறி, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தமிழர்கள் மீது மிகப் பெரிய கலவரத்தை தூண்டி விட முயன்று வரும் கிருஷ்ணன் குட்டி மீது கேரள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
சூர்ய முத்திரை - உடல் எடை கூட உதவும்...
மோதிர விரலை மடக்கி அதை பெருவிரலின் அடியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெரு விரலால் மெதுவாக அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
இது பிருத்துவி "சாமக்" அல்லது சூரிய "வர்தக்"முத்திரை...
அதாவது பிருத்துவியை(மண்\பூமி) குறைக்கும் சூரிய அதாவது வெப்பத்தை அதிகரிக்கும் முத்திரை ஆகும்.
அதனால் பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதை குறைவாக அதாவது குறைவான நேரம் செய்ய வேண்டும். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
பித்தமும் இருக்கு உடல் குண்டாகவும் இருக்கு என்றால் குறைவான நேரம் செய்யுங்கள்.
பலன்கள்...
தைராய்டு சுரப்பியை சரிசெய்ய உதவும்.
உடம்பில் உள்ள கொழுப்பு , இரத்தக்கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகியவற்றை குறைப்பதால் உடல் எடை குறைய உதவிகிறது.
செறிமானம் நன்றாக நடக்க உதவுகிறது.
மனக்கலக்கத்தை குறைக்க உதவுகிறது...
தமிழர் ஆடற்கலைகள்...
தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.
அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது..
1) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்.
2) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.
3) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.
4) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்.
5) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்.
6) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும்.
7) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம்.
8) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்...
பிப்ரவரி 25 சென்னை எம்.ஜி.ஆர். நகரில்.. தமிழர் தற்காப்பு அரசியல்.. பொதுக்கூட்டம்...
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது.
அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது..
அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.
இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.
காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வரும் ஞாயிறு (25.02.2018) மாலை 5.30 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் உள்ளிட்டொர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்...
- தமிழ்த்தேசியப் பேரியக்கம்
கொய்யாவின் மருத்துவ குணங்கள்...
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
எவ்வாறு சாப்பிடவேண்டும்?
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்...
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...
தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு.. கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.
மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும். கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும். அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.? ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.
வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.
அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.
மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.
இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்"
- (வரி.26 - 28).
இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்" என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.
இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,
"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''.
- (புறம் - 18,28 - 30).
என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.
இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.
"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''.
- (புறம்.118).
எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.
ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.
இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.
சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,
"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்''. (83)
என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,
"யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்"
என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.
இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.
பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.
கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,
"
பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே''. (25)
என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.
சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.
பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு" என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை" என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''.
- (1384 - 87).
என்கிறார். "சுருங்கை" என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.
அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு" என்பதாகும்.
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு" அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.
இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை" எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது" (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.
தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...
என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவை தான்...
பார்க்கப் போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை.
ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல.
அவை வெறும் வித்தைகள் தான்.
ஆமாம் ஆபத்தானவை தான். எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.
மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே. ஆபத்தாகிப் போகும்.
சீடனாக நுழைந்து பார்.
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே. அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத் தான் இட்டுப் போகும்.
உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.
இல்லையேல் அப்படியே இருந்துவிடு..
ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால் தான் தோற்றுப் போவாய். என்னை கவனித்து கேட்டால் தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை.
நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல. நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை.
அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.
எது நடக்கும் எதில் தவறுகள் நடந்து போய் விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.
இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்தது தான். எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொருள்.
நான் சொல்வதைக் கவனித்தால், என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது. அப்படித்தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது...
Subscribe to:
Posts (Atom)