23/10/2021
சித்தராவது எப்படி - 31...
குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஏழு...
கால ஆளுமையில் அளவற்ற காலம் மிக விசித்திரமான பதில் மனிதர்களிடம் இருப்பது என்னவென்றால் காலம் இன்மை என்பது தான்..
சோம்பலுக்கும் வீண் விவகாரங்களுக்கும் கால விரையம் பண்ணும் மனித குலம் தன்னை தாங்கும் உயிரை வளர்க்க துளியும் காலம் இல்லை என்று சொல்லுவது வியப்பிலும் வியப்பானது...
உலகம் ஏற்று கொண்டாலும் ஏற்றுக் கொள்ள வில்லை யென்றாலும் உலகத்திலேயே மிக வியப்பான விசயம் இது தான்..
வாழ்வில் வெற்றி கொண்டவர்கள் எவரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை...
அதிலும் சுவாச ஒழுங்கு பண்ணக் கூடியவர்கள் சொல்லுகின்ற பதில் மிக மிக வியப்பானது..
எனக்கு நேரம் கிடைக்கவில்லை.. விடியற்காலையில் நான் பண்ணும் போது பல சமயம் தவறி விடுகிறது.. இரவில் என்னால் பண்ண முடியவில்லை.. நான் வாகனத்தில் செல்லும் போது பண்ண முடிவதில்லை.. வேலை செய்யும் போது பண்ண முடிவதில்லை... அந்த சமயங்களில் தான் பண்ண வேண்டும் என்பது மனதின் சுத்தமான விளையாட்டு..
ஏகப்பட்ட ஓய்வு நேரங்களை மனம் தனக்காக ஒதுக்கி விட்டு வேலை நேரத்தை மட்டும் சுவாச ஒழுங்கிற்கு மனம் ஒதுக்குவதின் இரகசியம் வேலை நேரங்களில் புத்தியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அந்த நேரங்களில் தன் ஜம்பம் பலிக்காது என்பதாலும், அந்த நேரத்தில் சுவாச ஒழுங்கிற்கு மனம் மிகவும் அக்கரை எடுத்துக் கொள்ளும்.. தான் அனுபவிக்கும் நேரத்தை முற்றிலும் மறைத்து விடும்..
புத்தி பலப்பட்டால் எங்கே தன் ஆதிக்கம் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மனம் தன்னை காத்துக் கொள்ள என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய தொடங்கும்...
ஆகையால் தான் மனம் அது கொண்டாடும் நேரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை..
அது தனக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு அதை நம் விழிப்பு நிலைக்கு தெரியாமல் மறைத்தும் வைத்துக் கொள்கிறது..
அப்படி அது மறைத்து வைத்துக் கொள்ளும் நேரம் யோகியர் அல்லாத சாதாரண மனிதர்களுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் காட்டிலும் அதிகம் ஆகும்..
இது சத்தியமாக மிகை படுத்தப் பட்ட ஒன்று அல்ல... முற்றிலும் உண்மை..
இதை சற்று உணர்ந்து பயிலுகிறவர்கள், உண்மையை தெளிவாக அறியக் கூடும்...
சுவாச ஒழுங்கினை தினமும் 2 மணி நேரம் பயின்றாலே இந்த மண் உலகில் வல்லவர்கள் ஆகலாம்..
அப்படி 20 மணி நேரம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகலாம் என்பதை கற்பனைக்கும் எட்டாத ஒன்று..
அதனால் தான் காலம் இன்மை என்பது மிக விசித்திரமான பதில் ஆகும்..
சுவாச ஒழுங்கில் சந்திர கலை எடுத்துக் கொள்ளும் கால அளவிலேயே நெருப்பின் மீதும் நடக்கலாம்..
சந்திர கலை உலக விவகாரங்களில் தலையிடும் மனதிற்கு சொந்த மானது.
அது சந்திர கலையில் இல்லாமல் வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் கால அளவிலே ஆக்கிரமிப்பு செய்கிறது..
அதனால் தான் சூரிய கலை சந்திர கலை என பிரியாமல் விழிப்பு நிலை காணாமல் போய் விடுகிறது..
நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், வெளிவிடும் மூச்சில் விழிப்பு நிலையை தொலைத்து விட்டால், அதனை சூரியகலை என சொல்லவே கூடாது.. அது வெளியே போகும் மூச்சு.. அவ்வளவே..
வெளி விடும் மூச்சில் எப்பொழுது விழிப்பு நிலை ஆகிய தோன்றா நிலை உருவாகிறதோ, அப்பொழுது தான் அது சூரிய கலை என பெயர் பெறுகிறது...
சூரிய கலை உருவானால் மட்டுமே சந்திர கலை தோன்றும்.. அப்படி இல்லையென்றால் அது வெறும் உள்வாங்கும் மூச்சே..
சூரிய கலை தோன்றா நிலை அடைந்தால் மட்டுமே சந்திரன் தோன்றும்.. உலகியலிலும் அப்படியே..
சூரியன் மறைந்தால் தான் சந்திரன் கலைகளின் வடிவமாக தோன்றும்..
இதனை நினைவில் கொள்ளவே உள் வாங்கும் மூச்சுக்கு சந்திர கலை என்றும் வெளிவிடும் மூச்சுக்கு சூரிய கலை என்றும் பெயர் வைத்தனர்..
மற்றபடி விண் கோள்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் மூச்சோடு எந்த சம்பந்தமும் இல்லை...
நாம் நினைக்கின்ற சுவாச ஒழுங்கு அவ்வளவு எளிதான ஒன்று அல்ல..
முன்னால் காதலியே...
சேர முடியாது
என தெரிந்தும்..
தண்டவாளம்
தொடர்ந்து பயணிக்கிறது..
உன்னோடு நான்
சேரமுடியாது என தெரிந்தும்....
காதலோடு பயணிக்கிறேன் நான்...
உன் நினைவுகளை சுமந்து...
முக்தியும் மனமும்...
ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.
அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.
பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.
ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.
நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.
பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.
எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்...
சித்தராவது எப்படி - 30...
குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஆறு...
விழிப்பு நிலையின் விரிவு விளக்கம் சுவாச ஒழுங்கிலே பெற்ற ஆற்றலை முறை படுத்துவதின் மூலம் பிடரி ஆதாரத்தில் ஆசைகளின் ஏக்கங்களின் தாக்கங்களை தணித்த அல்லது நீக்கிய நிலையில் மேலும் அந்த ஆற்றலை தலையின் உச்சி வழியாக புருவமத்தியை அடையும் போது என்ன பிரமாண்டமான மாற்றங்கள் வருகின்றன என்பதை கவனிப்போம்..
சிவனாரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் இந்த புருவ மத்தி ஆதாரம் அக்னியால் ஆனது..
முதலில் விழிப்பை பற்றி சற்று ஆழமாகப் பார்ப்போம்..
புத்தி என்பது தோன்றா நிலையாகிய பேரண்ட பேரறிவிலிருந்து உதிப்பது..
மனமோ தோன்றும் நிலையாகிய தேகத்தில் இருப்பது..
புத்தி காற்றின் அம்சமாகிய 'வ' என்ற பூதம்.. மனம் நெருப்பின் அம்சமாகிய 'சி' என்ற பூதம்...
இந்த புத்தியும் அறிவும் சேர்ந்த நிலைதான் விழிப்பு நிலையான சிவ நிலை..
ஆதாவது 'சி' யும் 'வ' வும் சேர்ந்த நிலை..
இந்த சிவநிலையான விழிப்பு நிலையில் மட்டுமே ஆற்றலும் ஆக்கமும் ஒருங்கே இணைந்து சீர் நிலைக்கு அதாவது சீரான முறையான பழுது இல்லாத நிலைக்கு எதையும் அழைத்துச் செல்லும்..
வ என்ற காற்று பூதம் அறிவையும், ஆற்றலையும் வழிகாட்டும் அக குருவான ஒரு இயக்கசக்தி.. சி என்பது செயல் பட பயன் படும், மனம் என்ற ஒரு இயங்கும் சக்தி..
இயக்கும் ஒன்றும் இயங்கும் ஒன்றும் இணைந்தால் தான் எது ஒன்று செயல் படும்.. இயக்குவது இயங்க முடியாது... இயங்குவது இயக்க முடியாது..
இது தான் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்.. 'ச்' வும் 'வ்' வும் இணைந்தால் மட்டுமே எல்லாம் சீர் ஆகும்..
சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்றார் திருமூலர்..
புத்தியும் மனமும் இணைந்தால் மட்டுமே சீர் கெட்ட செயல்கள் தொலையும், அதாவது தீவினை மாளும் என்றார். பின்னர் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் என்றார் திருமூலர்..
ஆம் புத்தியும் மனமும் இணையும் போது நம் உயிரும் சீர் பட தொடங்கி தேவர் நிலைக்கு உயர்த்தபடுவர் என்றார்..
சரி.. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது எதுவென்றால், புத்தியாகிய விழிப்பு நிலை தான்.. மனிதனுக்கு இயல்பாய் இருப்பது மனம்.. பெற வேண்டியது புத்திதான்.. அதனால் தான் புத்தி முக்கியமாயிற்று...
அந்த விழிப்புநிலை இல்லையேல் நெருக்கடி நிறைந்த சாலையில் சில அடி தூரம் கூட வாகனத்தை ஓட்டி செல்ல முடியாது...
புத்தியின் முக்கியத்துவத்தை கருதியே வாசி யோகப் பயிற்சி முக்கியமாக விழிப்பு நிலையை பெருக்கக் கூடிய முறையில் வடிவமைக்கப் பட்டது...
புத்தி பெருக்கத்தில் உணர்வும் பெருகி உணர்வின் கூர்மையால் எதையும் முன் கூட்டியே அறியும் திறமையால் எந்த பிரச்சனையும் முளையிலே கிள்ளி எறியக் கூடிய அறிவும் பெறுகிறோம்..
நுண் உணர்வால் நுண் அறிவு.. நுண் அறிவால் பிரச்சனையும் நுட்பமாக இருக்கும் போதே எளிதாக அதற்கு தீர்வு காணப் படுவதால் பிரச்சனையே இல்லாதது போல் தோற்றம் ஏற்படுகிறது..
எந்த செயலோடும் விழிப்பு நிலையும் தொடரவில்லையென்றால் அந்த செயல் நிலைக்காது..
தெய்வ தரிசனம் கண்ட பக்தர்கள், கடவுளை கண்டேன் கண்டேன் என்று புலம்புவார்களே தவிர, கண்டு கொண்டே இருக்கிறேன் என்று ஒருவரும் சொல்வார் இல்லை..
இதற்கு காரணம் சிவ கலப்பில் இல்லாததே காரணம்..
விழிப்பு நிலையை தொலைத்து விட்டதாலும் அதை தக்க வைக்க முடியாததாலும், இறை தரிசனமும் இழந்து விடுகிறார்கள்..
சொர்க்கத்தையும் பெற்று இழந்து விடுகிறார்கள்..
பேர் ஆற்றலையும் பெற்று பின் இழந்து மரணம் அடைந்து தானே போய் விட்டார்கள்..
விழிப்பு நிலை இல்லை என்றால் சித்தர் நிலையையும் இழந்துதான் போய் ஆக வேண்டும்...
விழிப்பு நிலை தொலைந்தால் சிவகலப்பும் பிரிந்து உடைந்து விடும்.. பின் சவம் தான்.. அதாவது அநித்தியம் தான்...
இப்படியான உயிருக்கு நாடியாக திகழும் விழிப்பு நிலை எப்படி சுழிமுனையில் மிகுந்த பெருக்கம் அடைந்து உயிர் ஆற்றல் விரிவடைகிறது என்பதை வரும் பகுதியில் பார்ப்போம்...
என்ன வாழ்கை டா இது...
வாழ்க்கை நம்மள
செருப்பால அடிச்சிருச்சேனு
நண்பனை பார்க்க போனா..
வாழ்க்கை அவன ஒரு ஓரமா
படுக்க வச்சி
வாயில உலக்கைய வச்சி
குத்திக்கிட்ருக்கு...
🤣🤣🤣
இந்த உலகம் பிரபஞ்சம் ஒரு முப்பரிமான கனவுலகமா ? மூளை என்னும் சிறையில் ஆடைக்கப்பட்டு உள்ளோமா ?
புரிந்து கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம் இந்த கோட்பாடு..
நாம், நம்மை சுற்றி உள்ள அனைத்தும் உண்மையா இல்லை நமது மூளை கற்பனை செய்து கொள்ளும் உணர்வா ?
மனிதன் தனது புலன்கள் அனைத்தையும் இழந்துவிட்டன என்று வைத்து கொள்ளுங்கள்..
புரியவில்லையா கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒரு மனிதனுக்கு பார்வை திறன், கேட்க்கும் திறன் , தோடு உணர்ச்சி ,நுகர்வு உணர்ச்சி போன்ற உணர்ச்சிகளை இழந்து விட்டான் என்று வைத்து கொள்ளுங்கள் ?
என்ன நிகழும் ? அவனுக்கு எதுவுமே உண்மை கிடையாது இந்த அண்டம், அசைவு, ஓசை அனைத்தும்..
இது அனைத்தும் உண்மையில் உள்ளதா அல்லது இல்லாத ஒன்றை முப்பரிமான வடிவில் நமது மூளையே உருவாக்கி காட்டுகிறதா..
யோசித்து பாருங்கள் பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் இருந்து நம் அனைவரின் மூளையையும் கட்டுபடுத்தி நமது புலன்களுக்கு இல்லாத ஒன்றை உணர வைக்க முடியும் அல்லவா ?
உளறாதே என்று கூறாதீர்கள் .. பெரும் அறிவியல் வல்லுநர் Nicole Tesla அடிக்கடி எனது மூளைக்கு இந்த பிரபச்ச்தின் எதோ ஒரு மூலையில் இருந்து தகவல்கள் வருகின்றன அதன் படியே நான் செயல் படுகிறேன் என்று கூறு உள்ளார்..
இவர்தான் X RAY AC current போன்றவற்றை கண்டு பிடித்தவர் .
ஒரு முறை ஐசக் நியூட்டன் னிடம் இந்த உலகின் மிக பெரிய அறிவாளியாக உள்ளிர்கள் அதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அதை என் என்னிடம் கேட்கிறீர்கள் NIcole Tesla விடம் கேளுங்கள் என்று கூறினார் .
நாம் வாழ்வது வெறும் மாயையா ? ஒரு சிறு கற்பனை..
உங்களால் ஒரு சிறு பந்தை கற்பனை செய்து அதை மூளையில் நிறுத்தி கண்களால் ஒரு இடத்தில் இருப்பது போல் பார்க்க முயற்சி செயுங்கள்..
உங்கள் அருகிலோ தரையிலோ ஒரு பந்து இருப்பது போல் கற்பனை செய்து அதை உங்களால் உங்கள் மூலையில் நிறுத்தினால் பார்க்க முடியும் அல்லவா ?
இப்பொழுது அதே பொருளை உங்கள் தோடு உணர்ச்சியால் தொடுவது போல் உங்கள் மூளைக்கு கட்டளை இட்டு அந்த உணர்ச்சியை அடைந்தால் .நீங்கள் உண்மையில் ஒரு பொருளை உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்..
ஆம் ஒரு பந்து இருக்கிறது என்றால் அது உண்மை அல்ல அது எப்பொழுது உண்மை ஆகிறது என்றால்.. உங்கள் கண்கள் அதை கண்டு உணரும் பொழுது அதை உங்கள் தோடு உணர்ச்சியால் உணரும் பொழுதும் தான்..
இப்பொழுது ஒரு கற்பனையான பந்தை நீங்கள்பார்த்து அதை தோடு உணர்ச்சியால் உணர்ந்தால் அது நிஜமாகி விடும்.
இது எப்படி சாத்தியம் ? கற்பனை சாத்தியமாகுமா ?
கண்டிப்பாக மூளை நமது முழு கட்டுபாட்டில் இருந்தால் இது நிச்சயமாக சாத்தியமே..
அனைத்தும் மாயையே இந்த மாயையை உறுப்புகளால் உணரும் பொழுது நிஜம் ஆகிறது..
உண்மையில் பார்வை ,கேட்டும் திரன், தொடுதிரன் இது மட்டும் தான் உணர்ச்சிகளா ?
இன்னும் நம்மை சுற்றி உள்ள பல மாயைகளை உணர கூடிய உறுப்பு நம்மிடம் இல்லை என்று கூறலாம்..
உதாரனத்திற்க்கு ஒரு புல்லிற்கு மிருகம், மனிதன் போன்ற உயிர்கள் அது வாழும் அதே உலகத்தில் வாழ்வது தெரியாது ஏன் ? அதை உணரும் உறுப்புகள் அந்த புல்லிடம் இல்லை..
அதே போல் தான் நாமும் நம் அருகிலேயே ஒரு உயிரினம் வாழலாம் ஆனால் அதை உணரும் உறுப்பு நம்மிடம் இல்லாமல் போகலாம்..
Pineal Gland கூட ஒரு உணரும் உறுப்பு தான் ஆனால் அது இன்றைய நிலையில் செல்பாடு மிகவும் குறைவு..
இனி யாரையும் பைத்தியம் என்று கூறாதீர்கள் அவர்கள் மூளை அவர்களுக்கு காட்டும் பரிணாமத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்..
மூளையை பற்றியே நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை.. பல இடங்கள் மூலையில் எதற்காக உள்ளது என்பே நமக்கு தெரியாது..
பொதுவாக நமது மூளையின் Consious memory யை மட்டுமே நாம் பயன் படுத்தி வருகிறோம்..
Subconsious Memory பகுதியில் தான் மனிதனுக்கு sublingual முறையில் எண்ணங்களை பல Corporate நிறுவனங்கள் மற்றும் நிழல் உலக அரசர்கள் விதை கிறார்கள்..
Superconsious Memory இது Astral travel, காலங்களை கடப்பது , ஆன்மாவை அடைவது சம்பந்த பட்ட பகுதியாகும்.
புலன்கள் மற்றும் பரிணாமத்தை பற்றி இன்னும் நிறைய இருக்கின்றன மனிதன் உணராதவை...