08/10/2017

உங்களுக்கு இந்த நோய் இருக்குமா?


அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.

அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்...

நாசத்தின் தொடக்கம் திமுக கருணாநிதி..


முதன்முதலாகக் கண்மாயை ஆக்கிரமித்து அரசு கட்டடம் கட்டி இன்றைய அவல நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டவன் யார்?

வேறுயார், 1967-69 பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி தான்...

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?


தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை) நூலில் குறிப்பிட்டுள்ளார்..

அவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்த போது,

அவர் பெயரை ஆசிரியர் வினவ
உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன் என்று பதிலளித்தாராம்.

உடனே அந்த ஆசிரியர் பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று என்றாராம்.

வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?

முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு ஏழுகுண்டலவாடு என்று ஆக்கி ஏமாற்றியது தான்..

இன்றும் ஏமாற்றுவதை நாமம் போட்டு விட்டான் என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது..

அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்...

எப்போது கேட்டாலும் தமிழனா நீங்கள்? இல்லை இல்லை இந்தியன் என சொல்லுவார் கமல்...


நடிகர்சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று வைக்கலாமா? கேட்டால். இல்லை இல்லை இந்திய நடிகர் சங்கம் என சொல்லுவார்.

ஆனால் இப்போது மட்டும் வாய்க்கு வாய் தமிழர்கள் தமிழர்கள் கூவுது. அப்போ அது வேற வாயா? இது நாற வாயா? கமல்...

நியூட்டனின் 3ம் விதியும் - தமிழரின் தலை விதியும்...


தமிழன் போராடவே மாட்டான்.
தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது.
தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது.
தமிழனுக்காகப் போராடினால் நல்லசாவு கூடக் கிடைக்காது.

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு.

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.

எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்..

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும் தானே,

எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்..

இதை விளங்க ஒரு கைத் துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள்.

(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப் போவது தான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.

இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

சரி தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும் விட வரலாற்றில் வலுவாகத் தடம் பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக் கொள்கின்றனர்..

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும் தானே?

அதுதான் தமிழரின் மந்தப்போக்கு..

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே!

தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்?

என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத் துப்பாக்கிக்கோ அல்லது தோள் துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்க வைப்பது எளிது. ஆற்றலும் குறைவு..

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்..

வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்து போகும்..

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்..

அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம் (5லட்சம்) தமிழர்.

தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே.

ஆனால், இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர்,

மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி,

இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம் (25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேர் என்றால்?

நாம் இந்த உலகில் 14 கோடித் தமிழர் இருக்கிறோமே ?

நாம் ஒன்றிணைந்தால்..

நினைக்கவே நடுங்கிறது இல்லையா?

அதானி குழுமத்திற்கு தடை விதிக்க கோரி ஆஸ்திரேலியாவில் வெடித்தது போராட்டம்...


பிரதமர் மோடி தமது பதவியை கொண்டு தமது நண்பர் அதானி ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய சிபாரிசு செய்தார்.

அதானியின் தரமற்ற நிறுவனம் மற்றும் ஊழலினால் தங்கள் நாட்டில் அதானி முதலீடு செய்யக்கூடாது. அவரது நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் மக்கள் புரட்சி வெடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழன்...


ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்த தமிழனின் சாம்பலைக் கூட கொண்டு வராமல் அசட்டை செய்த இந்தி'யா...

நேதாஜிக்கு முன்பே ஆங்கிலேயரின் கீழ்  போர் செய்து ஜெர்மனிடம் தோற்று கைதியாக இருந்த இந்திய சிப்பாய்களை திரட்டி,

இந்தியாவை விடுவிக்க முதன்முதலாக படை அமைத்தவர்..

ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர்..

'எம்டன்' கப்பலின் தலைவராக சென்னைவரை வந்து கோட்டையைத் தாக்கியவர்..

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ்சந்திர போஸ் ஆகியோர் தாமே சென்று சந்திக்கும் அளவுக்கு பெரிய மனிதர்..

வீரத்தமிழன் செண்பகராமன்...

1934ல் மரணிக்கும் முன்பு கடைசி விருப்பமாக நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவிவிடு என்று மனைவியிடம் கூறியிருந்தார்...

இந்தியா 1947ல் போலி விடுதலை அடைந்த பிறகும் கூட பல ஆண்டு காலம் (மணிப்பூரைச் சேர்ந்த) அவரது மனைவி அலையாய் அலைந்து தான் அதை 1966ல் நிறைவேற்றினார்..

இந்தியர்களும் வரலாற்றில் நம் செண்பகராமன் பெயரையே இல்லாமல் அழித்துவிட்டனர்..

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல் தான் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது (தமிழகத்தில்தான்)..

செம்பகராமன் யார் என்று பெரும்பாலான தமிழருக்கே தெரியாது ..

பெருமையில் வெடித்ததே நெஞ்சம்
செந்தமிழ் வீரனே செண்பகராமனே..

உலகின் 99 வீதமான நாடுகளிலும் அவர்கள் மொழியை கட்டாயம் படித்தாலே, அந்த மொழியில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் நாட்டு குடியுரிமை வழங்கப்படுகின்றது...


ஆனால் எம் மொழியை பாதுக்காக,
எம் இனத்தவருடன் நாம் தமிழில் பேசுவோம் என்றால், நாம் அனைவரும் தமிழர் என்றால், எம் மொழி காக்கப்பட வேண்டும் என்றால், எம்மை தமிழ் நாசிக்கள் என்று கூறுகின்றது, வந்தேறி திராவிடமும், ஆரியமும், அவற்றுக்கு சொம்படிக்கும் முறைதவறி பிறந்த கும்பல்...

அதனால் நான் கவலை கொள்ளவில்லை , தமிழ் நாசிக்களில் ஒருவனாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன், தமிழர்களே நீங்களும் இருங்கள்...

மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மாநில தன்னாட்சி வேண்டும்...


இந்திய அரசியல் சட்டம் 370 – இது தமிழகத்திற்க்கு ஏன் வேண்டும்..

இதுவரை தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த ஒரு வகையிலும் பாதுகாப்பு கொடுத்ததில்லை.

தமிழன் கர்நாடாகாவில் தாக்கபட்டாலும் சரி..

கேரளாவில் தாக்கபட்டாலும் சரி..

சிங்கவர்களால் கொல்லபட்டாலும் சரி..

ஆந்திரவால் கொல்லப் பட்டாலும் சரி..

இந்திய அரசு துளியும் கவலைபட்டதில்லை அப்பறம் என்ன புடுங்கின பாதுகாப்பு கொடுத்துட்டானுங்க.

மத்திய அரசின் அதிகாரம் என்பது என்ன?

இந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது.

தமிழ் தெரியாத வடநாட்டவர்களை தமிழ்நாட்டில் இருக்கும் துறைகளில் பணியில் அமர்த்துவது?

தமிழ் மொழியை புறக்கணித்து முற்றிலும் கிந்தி, ஆங்கில மையமாக மாற்றுவது.

மேலும் தமிழகத்தில் இருக்கும் எண்ணற்ற இந்திய அரசின் துறையில் வடநாட்டவர்களே பெரிய பதவிகளில் அமர்த்தபடுகிறார்கள்.

பணியில் கீழ்நிலையில் இருந்து மேல் நிலைவரை வடநாட்டவர்கள்..

எந்த பதவியில் தமிழகத்தில் இருந்தாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது..

ஆனால் தமிழன் இந்திய அரசு துறையில் பணி செய்ய வேண்டுமானால் கிந்தி நேரடியாகவும், முறைமுகமாகவும் கட்டாயமாக திணிக்கபடுகிறது.

எ-டு... இந்திய தேர்வுகளில் இந்திக்கு மட்டும் அனுமதி உண்டு, தமிழ் மொழியில் நடத்த அனுமதி கிடையாது?

தமிழகத்தில் இருக்கும் வழக்காடு மன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கிடையாது?

அன்று,

வெள்ளையனுக்கு கப்பம் கட்டி கொண்டு அவன் நம் மேல் திணித்த ஆங்கிலத்தை பொருத்து கொண்டு அடிமையாக வாழ்ந்தோம்...

இன்று,

வடநாட்டவர்களுக்கு வரி பணம் செலுத்தி கொண்டு அவர்கள் நம் மீது திணிக்கும் கிந்தியை பொருத்து கொண்டு அடிமையாக வாழந்து வருகிறோம்?

இதற்க்கு பெயர் விடுதலையா?

இந்திய அரசியல் சட்டம் 370 ..

இது தமிழகத்திற்க்கு ஒரு முழுமையான விடுதலை இல்லை என்றாலும் ஒரு தற்காலிகமான பாதுகாப்புகாகும்...

தமிழ் குடியரசு ஒன்றே முழுமையான மெய்யான விடுதலை...

370 வது பிரிவு உருவானது எப்படி?


இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன?

அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்...

சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்து வந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.

அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார்.

அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் பேசி, அம்பேத்கருடன் கலந்து பேசி பொருத்தமான அரசியல் பிரிவை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், கடைசியில் கோபாலஸ்வாமி அய்யங்காரால் தான் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது.

கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள் திவானாகவும் பதவி வகித்தார்.

370 வது பிரிவு சொல்வதென்ன...?

இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது.

இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.

இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.

இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்து விடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்..

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.

அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது..

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

முதலில் உருவாக்கப்பட்ட 370 வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என கூறப்பட்டிருந்தது.

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில், அதாவது 370 வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது.

அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது...

இது சதியா? அல்லது விதியா?



உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் கல்லணையை கட்டி கொண்டு இருந்தோம்.

அங்கே மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்.

பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்.

பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை என கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள் நாம்.

இவ்வளவு சாதித்த நம் இனத்தின் வாழ்வாதாரமே இன்று பல இன்னல்களோடு உள்ளது...

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்...


பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார்..

நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....

மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு.. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர, கர்னாடக, மலையாள நிலங்களை உள்ளடக்கியது... இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது... இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு... எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை --- பெரியார்...

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை..

அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே...

பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர்.

இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார்.

இது விஷயம் அல்ல. இனி பார்க்க போவது தான் விஷயம்.

மொழி வாரி மாநிலம் பிரிந்து போனதற்கு முன்பு இருந்த அதே சாதி பட்டியலை தான் இன்று வரை நாம் இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இந்த உண்மையை எந்த திராவிட அயோக்கியனாவது உங்களுக்கு சொல்லி இருக்காங்களா...?

தமிழர் அல்லாத சாதிகள் அந்த சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல்..

அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறான் திருட்டு திராவடர்கள்..

எவன் ஊட்டு சலுகையை எவண்டா அனுபவிக்கிறது...?

இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் எவனாவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தரானா...?

மாநிலம் பிரிச்ச உடனே அவன் அவன் அவனுக்கு புரோஜனமா சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு மாத்திகிட்டானே....?

ஏண்டா திராவிட சொம்புகளா, நீங்க ஏன் இன்னும் மாத்தாம இருக்குகீங்க...? கேட்டா, 'அவன் நம்ம ஆளு தான், கொடுத்தா என்னன்னு கேப்பீங்க. இதை பக்கத்து மாநிலத்தில் கேட்டு தமிழனுக்கு வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா...?

ஆனா தமிழன் மட்டும் பெருந்தன்மையா இருக்கணும்...? பரவா இல்லை. இருந்தாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றோம்..

இப்படி அயோக்கிய தனமான இட ஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்ததால் வந்த வினைகளின் ஒரு சில உதாரணங்கள் இவை...

ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.

MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?

முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலைமையும் இது தான்..

BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?

தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது?

இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே...

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே...

ஏம்பா திராவிட சிகாமனிகளா,
இப்படி என் தமிழ் சாதிக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பரிச்சிகிட்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....

எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...?

சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது...

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான்...

அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கை தூக்கி விட்டாங்க' என்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்...

தமிழா உனக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் செய்து தமிழகத்தை விட்டு உன்னை வெளியேற்றி வெளி நாட்டில் அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த திராவிடம்.!

தமிழனை சாதி வெறியனாக சித்தரித்து.. வந்தேறி திராவிடனுக்கு உன் அரசு பணியை கொடுத்து உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது...

உங்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள் - என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா...


ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா.

தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது.

2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, என்ன செய்து கொண்டிருக்கிறார் ?

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது சட்டப் பணியைக் கவனித்துக் கொண்டு வருகிறார் குன்ஹா.

அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார். 'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார்.

'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?'

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றுவிட்டார்.

பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரியாகவோ, தனி அதிகாரியாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்பக் கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது கர்நாடக அரசு.

அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்திக் கொண்டது கர்நாடக அரசு.

இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப்பித்தார்.

இந்தப் பதவியையும் சந்திரசேகருக்கு அளித்துவிட்டு, குமாரசாமியைக் குப்புறத்தள்ளியது அரசாங்கம்.

ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார்.

‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் போல...

செய்தி - Vikatan

ஸ்பெயின் நாட்டில் இருந்து கேட்டலோனியா தனி நாடக பிரிவதற்கு 92 % விழுக்காடு கேட்டலோனிய மக்கள் தங்கள் ஆதரவை அளித்திருக்கிறார்கள்...


இதுகுறித்த  முக்கியமான அறிவிப்பை வரும் திங்கட்கிழமை  அறிவிக்க இருக்கிறார்கள்...

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும்.

அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது.

அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும்.

ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு.

அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது.

அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.

இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.

நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்!

விசும்பு என்றால் ஆகாயம்;
வலவன் என்றால் சாரதி;
ஏவாத என்றால் இயக்காத;
வானவூர்தி என்றால் விமானம்.

விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம் பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய தொன்றாகும்.

விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்

என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது.

பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள்...

இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான்.

இது புளித்துப் போன செய்தி!

இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது.

அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள்.

ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன.

மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன.

ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.

ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.

விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தானே...

பரந்த தமிழ் மாநிலம்...


1930களில் மொழிவாரி மாநில உரிமைகள் அளிக்கப்பட்டபோது...

முற்கால வரலாறு அனைத்தும் மறந்துவிட்டு..

ஐனநாயக முறைப்படி நேர்மையாக
அன்றைய சூழலில் மக்களின் பெரும்பாண்மை மற்றும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டுதமிழ் மாநிலம் அமைக்கப் பட்டிருந்தால் அது இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்...

இது தவிர குடகு நம்முடன் இணையத் தயாராக இருந்தது..

அந்தமான் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவான பெரிய-அந்தமானில் தமிழர் பெரும்பாண்மை என்ற வகையில் அத்தீவுக்கூட்டம் முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கும்..

இது நடந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மலையகத் தமிழர் பிரச்சனை, அகதிப் பிரச்சனை என எந்த பிரச்சனையும் இருந்திருக்காது...

நாம் 1900களில் மற்ற இனங்களைப் போல அரசியல் விழிப்புணர்வும் இனவுணர்வும் பெற்றிருந்தால் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகள் இருந்திருக்காது.

மனம் சோராமல் இழந்ததை மீட்போம்...

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் செட்டிச்சிமிழி என்ற ஊரில் செயல்பட்டு வரும் ONGC நிறுவனம் எவ்வித எதிர்ப்புமின்றி நன்றாக விளைந்து நிற்கிற வயல்களை தோண்டி குழாய்களை பதித்துக் கொண்டிருக்கும் அவலம்...



செட்டிச்சிமிழியை காப்பாற்றுங்கள்...

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி...


சென்னையில் 160 ரூபாயும் மற்ற நகரங்களில் 140 ரூபாயும் உயர்த்திக் கொள்ளலாம்...

வேலியே பயிரை மேய்கிறதா, கொந்தளிக்கிறார்- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி...


தமிழ்நாட்டிலுள்ள பூர்வீக நாய்களுக்கு ஏற்பட்ட கொடுமை….


நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே திரிவதால் அந்த விலங்கின் பெயர் நாய்.

தமிழ்நாட்டில் நாய்களுக்கு நடுகற்கள் வைத்து வழிப்பட்டார்கள்.

மலைப்பகுதியில் யானைளை எதிர்த்து விரட்டும் நாட்டு நாய்கள் இம்மண்ணில் இப்பொழுதும இருக்கிறது.

தமிழர்க்கும் நாய்க்கும் 30000 ஆண்டுகள் தொடர்பு உண்டு.

தமிழகத்தில் நாய்களுக்காகவே பாரிவேட்டை என்ற போட்டியிருந்தது.

தமிழகத்தில் இராசபாளையம், கோம்பை, கன்னி, ஆலங்கு, என ஏராளமான நாட்டு நாய்கள் உள்ளது.

தமிழில் நாய்களுக்கு, எகினம், ஞாளி, கடிநாய், குக்கர், கூரன் என 25 பெயர்கள் உள்ளது.

நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (Cells) உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண்(16-20Hz) அதிகமான அதிர்வெண் (70 -100Khz) உணரும் .

ஆனால் இன்று நாட்டு நாய்களை வீட்டில் வளர்ப்பதில்லை.

நாய்களை Cross செய்து நாயின் குணத்தை உனக்கான மிருகமாக மாற்றியதே மனிதா உன் சிறப்பே.

Blue cross கூப்பிடுக்கப்பா?.

நாயின் குணத்தை மாற்றிய அறிவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்குமா, இந்த மனிதநேய Cross கள்?

பாமக அன்புமணி முதல்வராக வர வேண்டும் - கமலின் சகோதரர் சாருஹாசன்...


https://youtu.be/FDZnnXyBLE0

கோழையே சுடு...


1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றி வளைக்கப்படுகிறார்..

சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.

துப்பாக்கியை எடுக்க முயன்ற சேவின் கை சுடப்பட்டது.

குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது
(இப்போது அது நினைவிடம்)..

கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுகிறார் சே.

ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.

சேவை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.

பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.

1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.

அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.

கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலக வல்லரசுகள் நடுங்கும் சே?

இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச்சீமான்?

இவரா வெறும் 300போராளிகளை வைத்துக் கொண்டு விமானம் மற்றும் தாங்கி (tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?

இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?

இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?

இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?

நம்பமுடியவில்லை..

சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.

டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.

பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார்.

துப்பாக்கியை நீட்டினார்.

"கோழையே சுடு, நீ சுடுவது
தனி மனிதனைத் தான்"

சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.

ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.

மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்...