26/01/2018
தமிழா இனமே எல்லை.. அதுவே அரண்...
மலையாளிகளுக்கு அமைப்புகள் இருக்கின்றன... தமிழரையோ தெலுங்கரையோ மற்றவர்களையோ அதில் பார்க்க முடியாது.. சேர்க்க மாட்டார்கள்...
தெலுங்கருக்கு அமைப்புகள் இருக்கின்றன.. நூல் பிடித்தது மாதிரி தெலுங்கர்கள் மட்டும் தான் உள்ளே இருப்பார்கள்.. ஒரு தமிழரையோ மற்றவர்களையோ உள்ளே விடமாட்டார்கள்...
கன்னடர், பஞ்சாபியர், வங்காளியர். இத்தாலியர், இங்கிலாந்தியர் என்று
எல்லோருமே அப்படித்தான் இருகிறார்கள். அதாவது, மிகச் சரியாக இருகிறார்கள்..
ஆனால் எல்லா தமிழ் அமைப்புகளுக்குள்ளும் தெலுங்கர்கள் இருகிறார்கள் மற்றவர்களும் இருகிறார்கள்...
இருகிறார்கள மட்டுமல்ல.. பெரும்பாலானவற்றில் அவர்களே பொறுப்புகளில் இருகிறார்கள்..
இந்த இழிவுக்கு முட்டுக் கொடுக்க அந்தகாலத்துப் பராசக்தி படம் முதலே நமக்கு உசுப்பேத்திக் கொண்டே இருகிறார்கள்..
வந்தாரை வாழவைத்த தமிழ் நாடு என்று.. இதைக் கேட்டு கேட்டு மெய் மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள் நம் தமிழர்கள்.. மயங்கிய நிலையில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து எல்லாவற்றையும் உருவிக் கொண்டிருக்கிறார்கள்...
தமிழ்நாட்டிலுள்ள தமிழத் தேசிய அமைப்புகளின் தொடர் தேய்மானத்திற்கு பின்னணியில் இருப்பது திட்டமிட்ட ஊடுருவலே...
மார்சியம் பேசுவார்கள், பெரியாரியம் பேசுவார்கள், பொதுவுடைமை பேசுவார்கள், விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள், ஈழம் பற்றி உருகுவார்கள், திராவிடம் பேசுவார்கள், தமிழ் பற்றிப் பேசுவார்கள்...
ஆனால் தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்..
விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..
நாடும் மொழியும் நம் இரு கண்கள்...
தமிழர் நாடு நமது இலக்கு....
கார்ப்பரேட் சதி...
பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி...
நேர்த்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி...
தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி...
தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி...
தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி...
உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி...
தாய்ப்பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி...
மாட்டுப்பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி...
சுகப்பிரசவம் என்பது இயற்கையின் விதி...
சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி...
யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி...
சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக்கூடாது என்பது கார்ப்பரேட் சதி...
யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி...
இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக்கூடாது என்பது கார்ப்பரேட் சதி...
பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி...
எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி...
ஆரோக்கியகிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி...
அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி...
நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி...
நோயைக்காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி...
எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி...
எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி...
மொத்ததில்...
மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி...
அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி...
இலுமினாட்டி ரோத்ஸசீல்டும் இந்திய வங்கிகளும்...
1934 ம் ஆண்டு ரூபாய். 100 மதிப்புள்ள பங்குகளாக முதல் பெறப்பட்டு இந்தியா ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.. கீழ் உள்ள படத்தில் உள்ளவர்கள் தான் அதன் பங்குதாரர்கள்.
ஆனால் 1949 ம் ஆண்டு பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை இந்தியா ரிசர்வ் வங்கி திரும்ப வாங்கி கொண்டது. அன்று முதல் இந்தியா ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பித்ததது.
1947 ம் ஆண்டு அமெரிக்கா டாலருக்கு இணையாக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று 63 .91 பைசாவுக்கு மாறி உள்ளது. இதன் அர்த்தம் இந்திய மதிப்பு குறைந்துள்ளது.
இரண்டாம் உலக போருக்கு பணம் தேவை பட்டதால், பங்குதாரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியானது, போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட IMF (International Monetary Fund)யின் கீழ் வருகிறது.
IMF 1944 ல் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின் பேரில் 1949 ல் இந்தியா ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களுக்கு பணம் கொடுத்து, தனி சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு கீழ் வருகிறது.
ஆனால் IMF யின் அதிகபட்ச பங்குதாரர் United States Department of the Treasary.
United States Department of the Treasary யின் அதிகபட்ச பங்குதாரர் Federal Reserve Bank of New York.
Federal Reserve Bank of New York யின் பங்குதாரர் ரோத்ஸசீல்டு..
நேரடியாக ரோத்ஸசீல்டு, இந்தியா ரிசர்வ் வங்கி யோடு தொடர்பு படுத்தி கொள்ளவில்லை ஆயினும், ரோத்ஸசீல்டு வசமே, இந்திய வங்கிகளும் உள்ளன.
ரூபாய் , தங்கம் , பெட்ரோல் மட்டும் அல்ல , bitcoin உருவாக்கி அதன் மதிப்பு நிர்ணயம் செய்வதும் ரோத்ஸசீல்டு குடும்பம் மட்டுமே...
துன்பம் நிரந்தரமாய் நீங்க...
துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.
அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும். மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.
அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது. நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.
உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.
உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.
அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.
அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.
துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.
அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.
அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.
அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.
அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.
நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.
ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.
இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.
இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...
முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி மட்டுல்ல, இந்து கடவுள் தான் என்று அடித்துக் கூறுகின்றனர் சிலர்...
இந்து கடவுள் என்று கூறப்படும் விநாயகர், பார்வதி, சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், ராமருக்கு இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் கோவில்கள் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற இந்து மத பண்டிகையின் போது 29 மாநிலத்திலும் இந்துக்கள் அப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
விநாயகர் சிவப் பார்வதியின் மகன் என்று அனைத்து இந்து மதத்தைச் சேர்ந்த வடநாட்டுக்காரனும் கூறுகிறான். அப்ப, விநாயகர் இந்து கடவுள் தான்.
இந்து கடவுள் என்று கூறப்பட்ட முருகனுக்கு இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் தமிழ்நாட்டில் மட்டுமே கோவில்கள் உள்ளது. ஏன் மீதம் உள்ள 28 மாநிலங்களில் முருகனுக்குக் கோவில்கள் இல்லை? முருகன் உண்மையில் இந்து கடவுளாக இருந்திருந்தால், மற்ற இந்து கடவுள்களுக்கு எவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் கோவில் இருக்கிறதே, அவ்வாறே முருகனுக்கும் கோவில் இருந்துருக்கும் அல்லவா...
தைப்பூசம் இந்து மத விழா என்றால், இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர்த்து, மீதம் உள்ள 28 மாநிலங்களிலும் ஏன் இந்த இந்து மத தைப்பூசத்தைக் கொண்டாடுவதில்லை இந்துக்கள். தைப்பூசம் இந்து மத விழாவே கிடையது முதலில்... இது தமிழர்களுடைய பெருநாள். குறிஞ்சி நிலத்தை ஆண்ட மன்னன் முருகன் என்பதால் அவருக்கு விழா எடுக்கும் நிகழ்வே தைப்பூசம் (தொல்காப்பியம், திருமருகாற்றுப்படை)
ஒரு இந்திப் படத்தில் கூட முருகனைக் கடவுளாக காட்டியதில்லை வடநாட்டவர்கள் என்பது கூடுதல் சான்று. மேலும், முருகனைப் பற்றி வடநாட்டவரிடம் கேட்டால் தெரியவில்லை என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை சிவப் புத்திரன் என்றால் விநாயகர் மட்டுமே என்கின்றனர். இது என்ன புதுக் கதை என்கின்றனர். அப்படியென்றால், முருகன் இந்து கடவுள் இல்லை என்பது மட்டும் உறுதி.
முருகனைப் பொதுவாக தமிழ்க் கடவுளாகத் தமிழர்கள் எண்ணுகிறார். அதனால், தமிழர்கள் புலம்பெயர்ந்த இடங்களில் முருகன் திருத்தளத்தை நிறுவினர். முருகனைத் தமிழ்க் கடவுளாக வழிபடுகின்றனர்.
முருகன் கடவுளா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் குறிஞ்சி நிலத்தை ஆண்ட தமிழ் மன்னன் என்பதால், தமிழுக்கும் தமிழர்களுக்குத் தொடர்புடையவர் என்பது மட்டும் உறுதி...
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தினசரி வாகன சோதனை நடத்தி 100 வழக்குகள் பதிய வேண்டும் என்பது அதிகாரிகள் உத்தரவு...
வாகன தணிக்கை என்ற பணி இல்லையெனில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். இதை தடுக்கவே இந்த உத்தரவு ஏனெனில் காவல்துறையும் மக்களும் நட்புறவாக செயல்பட்டால் பலரின் போலி முகத்திரைகள் கிழியும். சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு செயலும் செய்ய முடியாது.
வாகன தணிக்கை செய்ய காவலர்களுக்கு விருப்பமே இல்லை ஆனால் அதிகாரிகளால் கட்டாயபடுத்தி அனுப்பபடுகின்றனா்...
ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை எப்போதோ அலட்டல் இல்லாமல் கண்டுபிடித்த தமிழன்...
நம் அனைவருக்கும் அரசன் கோச்சடையானை நம்மில் பலருக்கு தெரியும். அந்த அரசன் கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்றும் ஒரு பெயரும் உண்டு. இவர் தான் சோழர்கள், சேரர்கள் மற்றும் ஆந்திரர்கள் என்று இன்றைய தெற்கு பகுதியில் இருந்த அரசுகளை கைப்பற்றி பாண்டிய நாட்டை விரிவு படுத்தியவர்.
சோழர்களை வென்ற ஜடாவர்மன், அவர்களிடம் இருந்த விலை மதிப்பில்லாத செல்வங்களையும் கைப்பற்றினான். கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் தென்னகத்தில் உள்ள பல கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.
தொண்டை மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு எண்ணற்றத் திருப்பணிகள் செய்தார். சிதம்பரம் நடராசர் கோயில், மற்றும் திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவில் இந்த இரண்டு கோவில்களும் தான் ஜடாவர்மனின் திருப்பணிகளில் அதிகம் பலனடைந்த கோயில்கள்.
திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவிலுக்கு “துலாபார தானம் “ அதாவது ஒருவரின் எடைக்கு எடை தங்கம் என்கிற அளவுக்கு தானம் செய்தார்.
ஆனால் ஜடாவர்மன் செய்த தானம் சற்று விசித்திரமானது, ஒரு மனிதனின் எடைக்கு எடை தானம் தருவதை விடுத்து. இவர் தனது நாட்டில் இருக்கும் ஒரு யானைக்கு மேல் அம்பாரி வைத்து அந்த அம்பாரியில் தானும் தனது அரசியும் முழு கவசத்துடன் சேர்ந்து அமர்ந்துகொண்டான், இவர்களுடன் யானை பாகனும் முன் அமர்ந்து கொண்டான் இந்த மொத்த எடைக்கு எடை தங்கத்தை திருவரங்கம் கோயிலுக்கு தானம் வழங்கினார்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஒரு யானையை ஒரு தாராசில் ஏற்றி அதன் எடைக்கு எடை நிகர் நிற்க கூடிய தாரசை செய்திருக்க முடியுமா! பிறகு எப்படி இதை இவர்கள் செய்தார்கள் என்று கேள்வி எழுகிறாதா?
சரி அதை எப்படி செய்தார்கள், இதற்கும் இந்த கட்டுரையின் தலைபிற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போமா...
ஜடாவர்மன், இதை செய்ய முதலில் காவிரிக் கரையாரில் ஒரு குள மண்டபத்தை கட்டினான். அந்த மண்டபத்திற்கு அருகில் ஒரு தெப்பம் நீரில் மிதக்கும் பலகையை கட்டினான். அந்த தெப்பத்தின் மேல் அம்பாறி பூட்டப்பட்ட யானையும் அதன் மீது அரசனும் அரசியும் மற்றும் பாகனும் ஏறினர். இப்போது அந்த தெப்பம் இந்த மொத கனத்தையும் தாங்கி சிறிதளவு நீரில் அமிழ்ந்தது.
அதன் பிறகு யானையை இறக்கிவிட்டு அதற்கு ஈடாக தங்கங்களை வைத்தனர். இது அந்த யானை தெப்பத்தில் இருந்த போது எவ்வளவு உள்ளே தெப்பம் அமிழ்ந்ததோ அவ்வளவு உள்ளே அமிழும் வரை தொடர்ந்தது. இப்படியாக அந்த “துலாபார தானம்” நடந்தது.
இப்போது சொல்லுங்கள், ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை முதன் முதலில் கண்டவனும் செய்து காட்டியவனும் நமது முன்னோர்கள் தானே.
தமிழ் என்பதும் தமிழன் என்பது ஒரு மொழி மற்றும் அது சார்ந்த இனத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு இயங்கியல், அறிவியல் என்று உரக்கச் சொல்லுங்கள்...
தனது அடையாளங்களை தொலைத்து கொண்டிருக்கும் தமிழன்...
வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது.
நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
புதிய நாகரிகம் நல்லது தான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன்.
இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியை தான்.
தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.
குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால், நாமோ நவீன காங்கீரிட் கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்?
அதனால் தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது.
கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.
நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும்.
நாம் உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது.
பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே பருகுகிறோம்.
இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது.
முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட நாம் பாதுகாப்பது இல்லை.
வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும் தான்.
இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.
இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.
இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்...
இந்த புகை படத்தில் உள்ள kandy egg அட்டையில் 0-3 னு தவறு குறியீடு போட்டுருக்கு...
அப்போ இந்த குறியீட்டீன் அர்த்தம் 1வயது முதல் 3 வயது குழந்தை சாப்டகூடாது என்று அர்த்தம்.
இதை அந்த முட்டாய் உள்ள காகிதத்தில் அச்சடித்தால் யாரும் வாங்கமாட்டாங்குனு அதை அட்டையில் அச்சடித்திருக்கிறார்கள்.
இது வியாபார மூளை...
தயவு செய்து குழந்தைக்கு இது போன்ற விளம்பரம் வந்தாலோ சேனலை மாத்திருங்க முடிந்த அளவு குழந்தையை கடைக்கு கூட்டிட்டு போய் பழக்க வேண்டாம்...
பிப்ரவரி 10, 11-ஆம் தேதிகளில் சைக்கிள் பந்தயம்...
கோவையில் வரும் பிப்ரவரி 10, 11-ஆம் தேதிகளில் சர்வதேச சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது.
பினாக்கிள் விளையாட்டு நலச் சங்கம், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து 5-ஆவது எம்.வி.எஸ். சைக்கிளிங் கார்னிவல் 2018 என்ற சர்வதே சைக்கிள் போட்டியை நடத்துகிறது. செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகள் சைக்கிள் விளையாட்டு வீரர்கள், வீரர்கள் அல்லாத ஆடவர், பெண்கள், 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள், 35-வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகின்றன.
ஒட்டு மொத்த பரிசுத் தொகையாக ரூ.2.40 லட்சம் வழங்கப்படுவதாகவும், இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு WWW.MVSCYCLINGCARNIVAL.COM என்ற இணையதளத்தைக் காணலாம் என்றும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்...
தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனிதநேயம் தான் அதைவிடப் பெரியதாம்...
அப்படியே பார்த்தாலும்,பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது.
என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.
இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது.
ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது...
தமிழை அமர்ந்து திட்டும் ஆரியம்... தமிழை நின்று திட்டும் திராவிடம்...
சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் அவமதித்து விட்டார் என்று திராவிடர்கள் கூக்குரலிடுகிறார்கள்.
பெரியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்பார் என்று சொல்லும் திராவிடர்கள், அவர் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடலுக்கு எதிராக பேசியதை மூடி மறைக்கிறார்கள்.
தமிழருக்கு ஆரியம் வெளிப்பகை என்றால், திராவிடம் உட்பகையாகும்.
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து முதுகு பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்டாள் மீதான வன்மைத்தை வெளிப்படுத்தியவர்கள் பெரியாரிஸ்டுகள். அது மட்டுமல்ல, குல்லுக பட்டர் இராசாசி என்று திட்டிக் கொண்டே அவரை இந்துமதத்தின் பாதுகாவலராக சித்தரித்தவர்கள் பெரியாரிஸ்டுகள்.
(ஆண்டாள் கற்பனை கதை என்று இராசாசி கூறியது).
இப்போது தமிழின் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு சங்கராச்சாரியை திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் இராசாசி கிடைக்க மாட்டார். பெரியார் தான் கிடைப்பார். அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்தவர்கள் பட்டியலில் சங்கராச்சாரியையும், பெரியாரையும் குறிப்பிட்டேன்.
மேலும் சிலர் கேட்கிறார்கள். இப்போது பெரியாரை விமர்சிக்கலாமா? என்று.
இந்தக் கேள்வியை கேள்வி எழுப்புபவர்கள் ஆண்டாளை கொச்சைப் படுத்தி பெரியாரிஸ்டுகள் எழுதும் போதும், பேசும்போதும் எங்கே போனார்கள்?
ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் குருதி ஓட்டமாகும். இதை திராவிடர்களிடமிருந்து கற்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை.
அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்...
தமிழை அமர்ந்து திட்டும் ஆரியம்...
தமிழை நின்று திட்டும் திராவிடம்...
பல்லாங்குழிக்கு பின் இத்தகைய உளவியல் சிந்தனையா – ஆதி தமிழன் அற்புதங்கள்...
இப்போது நாம் பார்க்க இருக்கும் விளையாட்டு பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களாகவே இருக்கும்.
சரி பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களில் என்ன சமநிலை போதிக்கப்படுகிறது. நாம் பார்க்கவிருக்கும் விளையாட்டு பல்லாங்குழி, பல்லாங்குழியின் நோக்கம் பற்றி அறிந்து கொள்வோம்..
பல்லாங்குழி விளையாட்டு அதிகமாக பெண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது, இந்த விளையாட்டு பெண்களுக்கு பல உளவியல் நற்கருத்துக்களை போதிப்பவையாகவே உள்ளன.
ஆம்.. பல்லாங்குழி என்பது இரு வரிசையில், வரிசைக்கு ஏழு குழி என்ற வகையில் மொத்தம் 14 குழிகளோடும், குழிக்கு ஐந்து புளியங்கொட்டை என்ற வீதம் விளையாடப்படும் ஆட்டம்.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடுபவர் எதாவது ஒரு குழியில் இருந்து புளியங்கொட்டைகளை எடுத்து அக்குழியைத் தொடர்ந்து இருக்கும் அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொரு கோட்டையாக நிரப்ப வேண்டும்.
இப்படியாக எடுக்கப்பட்ட கொட்டைகள் முடியும் குழியை அடுத்த குழியில் இருந்து மீண்டும் கொட்டைகளை எடுத்து அதே போன்று மற்ற குழிகளை நிரப்ப வேண்டும்.
ஒரு தருணத்தில் கொட்டைகள் முடியும் போது ஒரு வெற்று குழி உண்டாகும், அப்போது அந்த வெற்றுக்குழியை துடைத்துவிட்டு அதனை அடுத்து இருக்கும் குழியில் இருக்கும் கொட்டைகளை தனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது தான் அந்த ஆட்டக்காரர் வெற்றி பெற்ற கொட்டைகள்.
இதை தொடர்ந்து அடுத்த ஆட்டக்காரர் இதே போன்று ஆடத்துவங்குவார்.
ஆட்டத்தின் இறுதியில் எவரிடத்தில் வெற்றி பெற்ற கொட்டைகள் அதிகம் உள்ளதோ அவரே வென்றவர் ஆவார்.
இந்த விளையாட்டின் நோக்கம் என்ன தெரியுமா...
கிடைத்ததை பெருக்கவும், பெருகும் போது பிறருக்கு கொடுக்கவும், கொடுப்பதையும் ஏற்ற இறக்கம் இன்றி சமமாக கொடுக்க வேண்டும், என்றாவது ஒரு தருணத்தில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாத நிலை வரும் போது, நிச்சயம் ஒரு புதையல் உன்னை வந்து சேரும் என்பதே இந்த ஆட்டம் உணர்த்தும் விதி.
ஈகை பண்பை நமது மகளிர்களுக்கும் சிறுவர்களுக்கும் போதிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த விளையாட்டு...
Subscribe to:
Posts (Atom)