21/08/2018

தமிழகத்தை அழிக்கும் பாஜக - அதிமுக...


அளவிற்கு அதிகமான நீர் திறப்பின் போதும் இன்று வரை  கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததை கண்டித்தும்...

உடனடியாக கடைமடைப் பகுதிகளுக்கு நீர் திறக்க வலியுறுத்தியும்…

நீர்நிலைகளில் தண்ணீர் தேக்க கோரியும்...

திருமேணி வாய்கால் வடிகால்களை முறையாக தூர்வாரி அதன் வழியாக ஏரியில் நீரை தேக்க கோரியும்...

திருமக்கோட்டை கடைத்தெரு பகுதியில் திருமேணி ஏரி பாசன உழவர்கள் சாலை மறியல் போராட்டத்தை தோடங்கினர்...

துரோகத்தின் மறு உருவம் தான் கேரள மலையாளிகள்...


துரோகத்தின் மறு உருவம் தான் கேரளா...


அதிக மழை பொழிவால் முல்லை பெரியாறு 142 அடிக்கும் மேல் 150 அடிக்கு நீர் தேக்கும் வாய்ப்பு உருவானது.

இதை எதிர்பார்த்த கேரளா அழுகுணி ஆட்டம் ஆடி 139 அடியாக குறை என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இப்போது 142 அடியை தக்கவைக்கவே தமிழ்நாடு போராட வேண்டிய நிலை.

இதனால் அணையிலிருந்து  23,000 கன அடி நீர் வீணாக வெள்ளம் உள்ள இடுக்கிக்கும், 2500 கன அடி நீர் மட்டும் தமிழ்நாட்டிற்கும் வருகிறது.

தொடர்ந்து தென் மாவட்டங்களில் வறட்சியே நிலவுகிறது.

இதுக்கா பென்னி குயிக் அணை கட்டினார்?

தெளிவாக காய் நகர்த்தும் ஸ்டெர்லைட்...


62 தடுப்பணைகள் புதிய திட்டமா ? மக்களை ஏமாற்ற வேண்டாம்: பணிகளை தொடங்குவீர் - பாமக அறிக்கை...


தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளின் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் அவற்றின் குறுக்கே 62 தடுப்பணைகள் ரூ.292 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் ஏதோ புதிய திட்டத்தைப் போல அறிவித்து ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர், பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படாததாலும், வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு  பதில் கூற முடியாமல் தான் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளியாக இருப்பதால், அங்கு ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடியாது என்று கூறி வந்த முதல்வர், இப்போது உண்மையை உணர்ந்து கொண்டு தடுப்பணைகளை கட்ட முன்வந்திருப்பது ஆறுதலான விஷயமாகும்.

ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள 62 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த திட்டத்தை தான் புதிய திட்டமாக அறிவித்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாற்றுகிறேன்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், அதைத் தடுக்க இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட ஆணையிட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 09.06.2014 அன்று உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள், தளமட்ட சுவர்கள், கதவணைகள் என 61 சிறு அணைகளை ரூ.117 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசன, குடிநீர் வசதிகள் மேம்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது 2013-ஆம் ஆண்டுக்கு முன்பே இறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

இந்த தடுப்பணைத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே செயல்படுத்தப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றிருக்கும். வீணாக கடலில் கலந்த நீரை முழுமையாக தடுத்திருக்க முடியாது என்றாலும், அதிகபட்சமாக 30 டி.எம்.சி நீரை தேக்கி வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் மூலம் மேலும் 30 டி.எம்.சி தண்ணீரை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்திருக்க முடியும். தமிழக அரசின் அலட்சியம் காரணமாக சுமார் 60 டி.எம்.சி தண்ணீர் வீணாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.117 கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தத் திட்டத்தின் மதிப்பு இரு மடங்காக, அதாவது ரூ. 292 கோடியாக அதிகரித்திருக்கிறது. குறித்த காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக இது மிகவும் சாதாரணத் திட்டம். கல்லணைக்கு கீழே ஓடும் காவிரி ஆற்றிலும் அதன் சிறிய கிளை ஆறுகளிலும் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த தடுப்பணைகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக அரை டி.எம்.சி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். இது போதுமானதல்ல. கொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் குறைந்தது 5 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதற்குத் தனியாகத் திட்டம் வகுத்து செயல்படுத்தினால் தான் காவிரி பாசன மாவட்டங்களை வளமானதாக மாற்ற முடியும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 62 தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டத்தையும் விரைவாக வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரிப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்...

நகர்வுகளை உற்று நோக்குங்கள்...


மகாசமாதி நிலை...


புத்தர் தன் கடைசி நேரத்தில் கூறினார்...

என் உடலை இயற்கைக்கு மீண்டும்
ஒப்படைக்கப் போகிறேன்.

நான் அனேக உடல்களைப் பயன்படுத்தி உள்ளேன்.

ஆனால் இதற்கு முன்பு இயற்கைக்கு நன்றி சொல்லியது இல்லை.

இதுதான் கடைசி இனி நான் உடலுக்குள் புக மாட்டேன்.

இதுதான் நான் வாழ்கின்ற கடைசி வீடு கடைசி இருப்பிடம்.

நான் என் உடலைத் திருப்பித் தர வேண்டும்.

இது அனேக வேலைகளைச் செய்து விட்டது.

இது என்னை ஞானத்திற்கு இட்டுச் சென்றது.

இது நல்ல சாதனமாக இருந்தது.

இது எல்லா வகையிலும் எனக்கு  உதவியாக இருந்தது.

ஆகவே இயற்கைக்கு நன்றி சொல்லி விட்டு இந்த வீட்டை திருப்பி கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இந்த உடல் இயற்கை எனக்கு கொடுத்த வெகுமதி.

நான் முழு உணர்வுடன் இதைக் கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு அவர் தன் உடலை ஒப்படைத்தார்.

அவர் உடலைச் சுற்றி ஒரு ஒளி இருந்தது
அவர் உடல் சக்தியாக மாறி இந்தப் பிரபஞ்சத்துடன் கலந்து விட்டது.

அவருடைய மரணம் உள்ளுணர்வுடன் கூடிய மரணம்.

பிறகு அவர் தனது மனதை ஒப்படைத்தார்.

அப்பொழுது நறுமணம் பரவியது
புத்தரின் மனம் ஒரு நறுமணம் தான்.

கள்ளங் கபடமற்ற தூய்மையான வாழ்க்கையின் நறுமணம்.

பிறகு அவர் தன் ஆன்மாவை ஒப்படைத்தார்.

இந்த மூன்று விஷயங்களும் ஒப்படைக்கப்பட்ட பின்னரே அவர் இறந்தார்.

இதுதான் மகா பரி நிர்வாணம்
இதுதான் மகாசமாதி...

ஸ்டெர்லைட் கைகூலியாக மாமா வேலை செய்யும் அதிமுக அரசு...


பாஜக அதிமுக வின் தமிழக அழிப்பு... காவிரி கடைமடை நிலவரம்...


2 லட்சம் கன அடி திறந்தும் நீர் வராத காவிரி கடைமடை பகுதி: மணல் கொள்ளைக்கு முடிவு கட்டாவிடில் விவசாயம் அழிவது நிச்சயம்....

பாஜக - திக வின் இரகசிய கூட்டு...


பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்..

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.

அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்..

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர்.

பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும்.

அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும்.

அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

பாஜக அடிமை அதிமுக அரசு... வெள்ளத்தை பார்வையிட்டு நீர்நிலைகளை தூர்வாரிய போது...


ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?


காலை...

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்...

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு...

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது...

இதய ஓட்டையை இருபது நாளில் சரி செய்யும் செம்பருத்தி சாறு செய்யும் முறை...


மானிட மனம் பற்றி ஓஷோ சொன்னவை...


மனம் எது இருந்தாலும் ஒரு கணமும் நிறைவு இல்லையே.

எல்லாம் கிடைத்தும் இல்லையே அமைதி.

ஏதேதோ காரணம்பற்றி எழுகுதே கவலைகள்.

அதுஇல்லை இதுஇல்லையென அவதிக்கு அலையுதே.

அந்தத் தொல்லை இந்தத் தொல்லையென இம்மனம் அழுகுதே.

இது.. சூதும் வாதும் சோதிப்பதாய் சொல்லிக் குமுறும்,

எல்லோருமெனை ஏய்ப்பதாய் ஏமாற்றம் அடையும்,

அடிபட்ட நாயாய் அடி வயிறில் ஊளையிடும்,
அவமானத்தில் குன்றி சோகத்தில் மூழ்கும்,

கோபத்தில் சீறி படபடப்பாய் எகிறும்,
இருப்பது நிறைவாய் இல்லாமல் ஆக்கும்,

இல்லாததை முன் வைத்து இடித்துக் கொண்டே இருக்கும்,

இழந்ததை நினைத்து எப்போதும் வருந்தும்,
தவறு செய்துவிட்டதாய் தன்னையே ஏசும்,

கோட்டை கட்டி சிம்மாசனம் போட்டு குதூகலித்துக் கொள்ளும்,

இடியுமே கோட்டையென இடிந்து போகும்.

ஆணவம் இழக்க அஞ்சி நடுங்கும், ஆபத்து வருமென அரணரணாய் கட்டும்,

புகழ்ச்சிப் பேச்சுக்கு பல்லிளித்து அலையும்,
இகழ்ச்சி வருமோவென பதுங்கி ஒதுங்கும்,

ஆணவம் தருவது நோக்கி காந்தமாய் இழுக்கும்,
அதிகாரம் அடைய சதி செய்யச் சொல்லும்,

பணத்தைப் பிடுங்க பகை பாராட்டும்,

செல்வம் சேர்க்க நட்பைத் தேடும்,
சொத்தைச் சேகரிக்க சொந்தத்தை நாடும்,

அடுத்தவரைக் கவிழ்த்து தன்னை உசத்தும்,அடி சறுக்கினால் ஆதரவுக்காக அடி பணிந்து போகும்,

சுலபமாய் இருக்க பொய்யைப் பேசும்,சுகமாய் இருக்க திருட்டைச் செய்யும்,
அடுத்தவரை ஆள அன்பைக் கெடுக்கும்,

கொடுத்ததை வாங்க மிரட்டிப் பார்க்கும்,
இல்லாதவனைக் கண்டால் ஏளனம் செய்யும்,

இருப்பவனைப் பார்த்தால் சலாம் அடிக்கும்,
தேவையென வந்தால் குழைந்து கெஞ்சும்,

தேவையில்லை என்றால் அதிர்ந்து நடக்கும்,
தனிமையில் இருந்தால் தனைப்பார்த்தே அஞ்சும்,

பலபேர் இருந்தால் பகைவனைத் தேடும்,
மதிப்புக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும்,
சொந்த வாழ்வில் கஞ்சனாய் இருக்கும்,

சூழ்பவர் இடையே வேஷம் கட்டும்,நாடகம் நடத்தி காதலை வெல்லும்,
கௌரவம் கெடுமெனில் கொலையும் செய்யும்,

தேவை முடிந்த பின் தூரமாய் வீசும்,
செய்வது எதற்கும் நியாயம் சொல்லும்,வெற்றி பெற்றால் பீற்றிக் கொள்ளும்,

தோல்வி அடைந்தால் அடுத்தவரைச் சொல்லும்,
எது இருந்தாலும் இடைவிடாது சூழ்ச்சி செய்யும்,
எது கிடைத்தாலும் தனக்குமட்டுமே எனக்கேட்கும்,

அடுத்தவர் வாழ்ந்தால் அவதூறு சொல்லும்,
தான் வாழ்வதே சிறப்பென தம்பட்டம் அடிக்கும்,
குறைக்குக் காரணம் சுற்றம் என்கும்,

நிறைக்குக் காரணம் தானே என்கும்,
எது இருந்தபோதும் போதுமென்று இருக்காது,
உடல்பசி எடுத்தால் உன்மத்தம் கொள்ளும்,

காமம் கொண்டு கயவனாய் ஆகும்,
பேராசை பிடித்து நேசத்தை அழிக்கும்,

பணத்தின் ஆசையில் பண்பை துறக்கும்,
இதயத்தைக் கொன்று செல்வத்தை காக்கும்,
அறிந்ததை வைத்து ஆணவமே வளர்க்கும்,

திறமை இருந்தால் திமிர் கொண்டு ஆடும்,
அன்பு எழுந்தால் அபாயம் என்கும்,
மனிதபண்பு கொண்டால் பயனிலை என்கும்,

வருவதை ஏற்றால் கோழை என்கும்,
சிரித்து மகிழ்ந்தால் சீற்றம் கொள்ளும்,
அமைதியாய் இருந்தால் குத்திக் கிளறும்,

மனதின் அலைகழிப்புக்கு தினத்தில் முடிவு ஏது?குருவே, மனமின்றி இருக்க மாட்டேனா?எனையற்று உனை உணர முடியாதா?

தளைவிட்டு நிலை அடைய இயலாதா?
என்று தணியும் இந்த தாகம்?
என்று முடியும் இந்த சோகம்?

இப்படிக்கு
மனம்

சர்வதேச சிலை கடத்தல் உண்மைகள்...


சிரிப்பு...


ஆழமான சிரிப்பில் மனம் கரைந்து விடுகிறது.

சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.

உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும் போது அது உனது மையத்திலிருந்து வருகிறது.

அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல.. உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.

சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

நீ உன்னைப் பார்த்து சிரிப்பது தான் உண்மையான சிரிப்பு.

எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவது தான் உண்மையான சிரிப்பு.

நீ சிரிக்கும் போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.

சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்...

அரசாங்கம்னு ஒண்ணு இருக்கிறத எல்லாரும் மறந்துட்டு எல்லாரும் தங்களுக்கு தேவையானத தாங்களே பூர்த்தி செஞ்சுக்கங்க...


கன்னட ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?


சில வந்தேறி திராவிடர்ஸ் அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக்கொடியைக் கொளுத்தினார் என்றும்..

இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும்
இரண்டு பொய்களைக் கூறுவார்கள்..

ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தியெதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலைவெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்..

திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.

(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...

காய்ந்து போன கடைமடை...


பாஜக விற்கு கூட்டிக் கொடுத்து பிழைக்கும் ஊடகங்கள்...


ஏதோ சில பா.ஜ.க அல்லக்கைங்க வந்து மனு கொடுத்தா ஆக்சன் எடுத்திருவீங்களா...?

த்தா.... நாலு பேர் வந்து கொடுத்த மனுவ ஒரு கிராமமே கொடுத்த மாதிரி எழுதி இருக்கான் பார் இந்த எச்ச ஊடகம்...

பாஜக - அதிமுக இனைந்து தமிழக விவசாய நிலங்களை அழிக்கின்றனர்...


காவிரி நதியில் நொடிக்கு 2,30,000 கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டும் காவிரிப் படுகையின் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை என்கிற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது...

இது எப்படி சாத்தியம்? ஒரு நேரத்தில் 12,000 முதல் 15,000 கன அடி அளவிற்கு மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் முறை வைத்து 3,000 முதல் 4,000 கன அடி வரை நீர் திறந்துவிடப்பட்ட போதெல்லாம் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு பாய்ந்து அதன் மூலம் பாசன வசதிப் பெற்று வேளாண்மை செய்த நிலை இன்று எப்படி மாறியது?

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நொடிக்கு ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமாக மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பெருமளவிற்கு கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு கடலிற்கு சென்று சேர்கிற அவலத்தை கண்டு கொண்டிருக்கின்றோம். ஒரு கட்டத்தில் நீர் வரத்து 2 இலட்சம் கன அடியை எட்டிவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீர் 66,000 கன அடியாகவும், பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்லும் கல்லணைக் கால்வாயிலும், திருச்சி மாநகருக்குள் பாய்ந்து அங்கிருந்து வாழவந்தான் கோட்டை ஏரி வழியாக தஞ்சாவூரின் சேராண்டி ஏரிவரை பயணிக்கும் உய்யக்கொண்டான் கால்வாயிலும் திறந்துவிடப்படும் நீரின் அளவு 10,000 கன அடிக்கும் குறைவாகவும், ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் – இப்போது ஒன்றரை இலட்சமாக உயர்த்தப்பட்டு கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு கடலில் சென்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது.

காவிரி நீரின் ஒரு பகுதி கடலில் சென்று கலப்பதை எதிர்ப்பவர் அல்ல நாம், அது இயற்கையின் நீரியல் சுழற்சிக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை நிலைப்படுத்தலுக்கும் அவசியமானது, எனவே அவ்வாறு கலப்பது ஏற்றது என்பதை உணர்ந்தவர்கள். ஆனால் நொடிக்கு ஒன்றரை இலட்சம் கன அடி நீர் எதற்காக கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட வேண்டும் என்பதே கேள்வி. ஏன் குறைந்த அளவிற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணை, உய்யக்கொண்டான் கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறது?

அவ்வாறு திறந்துவிடப்படும் நீரும் கடைமடைக்கு வராததைக் கண்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட கல்லணைக் கால்வாயோடு பிணைக்கப்பட்ட பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நாகை மாவட்ட மக்களும் ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றியெல்லாம் பத்திரிகைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ செய்தியோ அல்லது விவாதங்களோ நடைபெறவில்லை

கேரள வெள்ளத்தைப் பற்றி நாள் முழுவதும் செய்திகளைக் கொடுத்து விவாதங்கள் நடத்தும் தொலைக்காட்சிகள், இரண்டரை இலட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டும் அது கடைமடைப் பகுதிகளுக்கு சென்று சேராத்த்து ஏன் என்பது பற்றிய விவாதிருக்க வேண்டும் அல்லவா?
மக்களின் போராட்டங்கள் பற்றி தமிழக அரசும் வாய் திறக்க மறுக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிதி நிலை அறிக்கையிலும் ஏரிகள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் தூரெடுப்பதற்கு என்று பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதே, அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளதாகவும் கணக்கு காட்டப்படுகிறதே, அப்படியானால் இந்த அளவிற்கு நீர் திறந்துவிடப்பட்டும் பல பகுதிகளுக்கு நீர் சென்று சேராத காரணம் என்ன?

தூர் வாரப்படவில்லை என்றாலும் நீர் சூழ்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே? அதுவும் ஏற்படவில்லையே! நீர் சுத்தமாக வரவில்லை என்றால் திறந்துவிடப்பட்ட நீர் எங்கு சென்றது? மதகுகள் சீர் செய்யப்படாமல் ஆங்காங்கு திறந்துவிடப்பட்டு வந்த நீர் தேங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறதே, அப்படியானால் மதகுகளைக் கூட சீர் செய்யாமல் இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எதற்காக செலவு செய்யப்பட்டது? கணக்கை காட்டுமா தமிழக அரசு?

இந்நாட்டின் உணவுத் தேவையை அளவிடற்கரிய அளவிற்கு ஈடேற்றிடும் காவிரிப் படுகையில் விவசாயத்தை வேறருக்கும் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ?  ஏனென்றால் காவிரிப் படுகையின் பாசனத் தேவையை முழுமையாக நிறைவேற்றக்கூடிய அளவிற்கு கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட பாசனக் கட்டமைப்பை சீர்குலைக்கும் சதியாகவே தூர் வாரப்படாமையும், மதகுகள் சீர் செய்யப்படாமையும், அதிகமான அளவிற்கு நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு கடலில் கலக்க வழி செய்யப்பட்டிருப்பதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எமது மக்களின் இந்த ஐயப்பாட்டை போக்க வேண்டிய கடமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உள்ளது. ஏனெனில் இந்திய ஒன்றிய அரசு தனது ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டத்திற்கு காவிரிப் படுகையையும், தமிழ்நாட்டின் கடற்பகுதியையும் குறிவைத்துள்ளது என்பதை காவிரிப் படுகை மக்கள் அறிவார்கள். காவிரிப் படுகையில் – குறிப்பாக நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்கனவே ஏலம் விடப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் பெரும் திட்டங்களை வேதாந்த நிறுவனமும், ஒ.என்.ஜி.சி.யும் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுப்பை தடையின்றி எடுக்க வேண்டுமெனில் அங்கு விவசாயம் நடந்தால் முடியுமா? எனவே வேளாண்மையை அழித்து தனது ‘வளர்ச்சி’த் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்பதும் எமது மக்களுக்குத் தெரியும்.

எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை, இங்குதான் பல கச்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்கு கசடாகி குடிக்கவோ பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘மன நிலை’யை உருவாக்கி வருகிறார்கள் – இதற்கு மாவட்ட நிர்வாகங்களும் முழுமையான ஒத்துழைப்பை (!) தருகின்றன. இந்திய ஒன்றிய அரசின் இந்த மறைமுக விவசாய அழிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறதா என்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நாம் எழுப்பும் கேள்வியாகும். இந்த அரசு அம்மாவின் பாதையில் நடைபோடுகிறது என்கிறாரே, அம்மா ஜெயலலிதா இருந்தால் இது நடக்குமா? 

இன்றைக்கு காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை எத்தனையோ நீர் மேலாண்மைத் திட்டங்களை திட்டமிட்டப்படி நிறைவேற்றியிருந்தால் காவிரி வெள்ளப் பெருக்கு தமிழ்நாட்டிற்கு கொடையாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் – இது வெறும் ௹.250 கோடி செலவிலான திட்டம் -  இன்றைக்கு பெரும் பகுதி வெள்ள நீர் அந்த இணைப்புக் கால்வாயில் திறந்துவிட்டிருக்கலாம். அதன் மூலம் புதுக்கோட்டையின் பகுதிகள் பலவும் நீர் வளம் பெற்று விவசாயம் செழித்திருக்கும். ஆனால் திட்டங்கள் தீட்டுவதோடு எல்லாம் நின்றுவிட்டக் காரணம் இப்போதல்லவா புரிகிறது.

இதேபோல் நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இப்பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் நண்பர் ஒருவரின் பதிவின் மூலம் தெரியவருகிறது!
இப்படியெல்லாம் வேறு எந்த ஒரு நாட்டிலாவது நடக்குமா? தன் நாட்டு மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வாதாரமான விவசாயத்தை அழித்துவிட்டு அங்கு எண்ணெய் எடுப்பது, கனிம வளங்களை எடுப்பதற்காக விவசாய விளை நிலங்களை சிதைப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? விவசாய பணியாளர் ஒருவருக்கு புற்று நோய் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் மான்சாண்டோ நிறுவனம் விற்ற ரவுண்ட் அப் எனும் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்டதுதான் என்றும் அதில் கலந்திருந்த கிளைக்கோபோஸ்ட் எனும் ரசாயணமே புற்று நோயை உருவாக்கவல்லது (carciogenic) என்று வழக்கு தொடரப்பட்டு, ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டு, அந்த விவசாயத் தொழிலாளருக்கு மான்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது. இங்கேயும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதே கிளைக்கோபோஸ்ட் பயன்பாட்டால் பல விவசாயிகள் புற்று நோய்க்கு ஆட்பட்டுள்ளனர், ஆனால் அரசுகள் கண்டுகொள்ளவில்லை! உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடல்லவா இந்தியா? எனவே எத்தனை விவசாயிகள் செத்தாலும் மான்சாண்டோ நிறுவனத்தின் பிசினஸ் இலாபகரமாக தடையின்றி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இதற்கு எதற்கு ஜனநாயகத்தை இழுக்கிறாய் என்று கேட்கிறீர்களா? ஆம், இங்கு அதைப் பற்றிய புரிதல் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. தங்களுடைய பலம் வாக்குரிமையில் தான் இருக்கிறது என்பதை உணராத நம் நாட்டு மக்களே ஜனநாயகத்தை வைத்து பிழைப்பு நடத்துவோருக்கு அரசியல் மூலதனமாக இருக்கின்றனர். இங்கே மணலை கொள்ளையடித்து விற்பவனுக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது, வாழ்வாங்கு வாழ்கிறான், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி ஆற்றைக் காக்க போராடிய முகிலன் சிறையில் வாடுகிறான்..

இதற்குக் காரணம் என்ன? அரசியல்வாதிகளா?

இல்லை, மக்களிடையே ஜனநாயகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாததே காரணம். இந்நிலை நீடிக்கும்வரை நம்மை பீடித்துள்ள அவலமும் நீடிக்கும், அதைச் சார்ந்த சுரண்டலும் நீடிக்கும். எச்சரிக்கை.

கா. ஐயநாதன், சென்னை, ஆகஸ்ட் 19, 2018...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


வியாதிகளுக்கு விடைகொடுக்கும் அருகம்புல்...


அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்கல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்...

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தாயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது.

இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

அவற்றையும் வாங்கிப் பருகலாம்...

வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்றை வழிபாடாக மாற்ற நினைக்கும் அத்துனை தற்குறிகளுக்கும் இந்த பதிவு பொருந்தும்...


சிலப்பதிகாரம் உண்மைகள்...


இந்திய சதி கோட்பாடு - 5...


ஷிவ்கார் பாபூஜி டால்பேட் அவர்களின் விமான டிசைன் பற்றியது...


ரைட் சகோதரர்கள் உலகின் முதல் விமானத்தை கண்டுப்பிடித்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரான ஷிவ்கார் பாபூஜி டால்பேட் விமானம் ஒன்றை உருவாக்கியதாகவும், அது சுமார் 1500 அடி உயரம் வரை பறக்க கூடியது என்றும் கூறுகிறது ஒரு சதி கோட்பாடு.


1895-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்திற்கு எந்த விதமான நிதி உதவியும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பரோடா மகாராஜாவிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கிறது அந்த சதி கோட்பாடு.


முதல் விமான தொழில்நுட்பம் இந்தியரிடம் இருப்பதா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த வரலாற்று துரோகத்திற்க்கும், அப்படி ஒரு விமானம் பறந்தது என்பதற்கும் எந்த விதமான சான்றும் இல்லை என்பது குறிப்பிடத்தககது.


மேலும் ஷிவ்கார் பாபூஜி டால்பேட் (Shivkar Babuji Talpade) அவர்களின் விமான டிசைன் என்று கூறப்படும் அந்த விமான டிசைன் ஆனது மிகவும் பலவீனமானது போன்றும் தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது...