26/07/2017

பிராணாயாமம்...


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது..

மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது..

இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன..

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றை கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்..

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்..

இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது..

நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...

தமிழினம் எப்படி எல்லாம் இந்தியத்தால் அழிக்கப்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...


பாஜக எச்ச. ராஜா சர்மாவும் அண்டை புளுகும்...


இந்த வருஷம் தான் பரீட்சையே நடந்துச்சி, அதுவும் தமிழகத்தில் கடைசி நேரம் வரை இழுபறி நிலை...

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?


தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத (ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை) நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்த போது, அவர் பெயரை ஆசிரியர் வினவ "உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன்" என்று பதிலளித்தாராம்.

உடனே அந்த ஆசிரியர் "பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று” என்றாராம்.

‘வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே' என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?

முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு 'ஏழுகுண்டலவாடு' என்று ஆக்கி ஏமாற்றியது தான், இன்றும் ஏமாற்றுவதை "நாமம் போட்டு விட்டான்" என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது.

அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்...

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை.
3.காந்தம்.
4.காரம்.
5.கந்தகம்.
6.பூரம்.
7.வெள்ளை பாஷாணம்.
8.கௌரி பாஷாணம்.
9.தொட்டி பாஷாணம்.

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.

நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்து விடும்...

அதிரவைக்கும் புதிய தகவல்கள்: பெங்களூரு சிறையில் சசிகலா நடத்திய சட்டவிரோத சாம்ராஜ்யம்...


சசிகலா பெங்களூரு சிறையில் எந்தெந்த அதிகாரிகளை வளைத்துப் போட்டு எப்படியெல்லாம் சட்டவிரோத சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார் என்கிற அதிரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வந்ததை முன்னாள் டிஐஜி ரூபா அம்பலப்படுத்திய நிலையில் புதிய கடிதம் ஒன்றில் ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு சிறையில் சசிகலா மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரி கங்காராம் படேரியா, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஜெயச்சந்திரா உள்ளிட்ட பலரும் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனராம்.

குறிப்பாக சிறை அதிகாரிகளுக்கும் சசிகலா குடும்பத்தினர் மற்றும் அதிமுகவினருக்கும் புரோக்கராக செயல்படுவது கர்நாடகா தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கஜராஜ் மாகனூர்தானாம். இந்த கஜராஜ், சிறையில் பார்வையாளர்கள் பகுதிக்கான வாயிலின் பொறுப்பாளர்.

இவர்தான் அதிமுக தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், சசிகலாவை சந்திப்பதற்காக கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவராம். அதுவும் சிறையில் பார்வையாளர்கள் நேரம் முடிவடைந்த பின்னரே இந்த சந்திப்புகள் நடைபெறுவது வழக்கமாம்.

சிறை கண்காணிப்பாளர் அறையை சசிகலா கட்சி அலுவலகம் போல பயன்படுத்தி சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இப்படி சசிகலாவை சந்திக்க வரும் விஐபிகள் பெயர்கள் ரெஜிஸ்டரில் இடம்பெறுவதும் இல்லையாம்.

தினகரன், விவேக், கர்நாடகா புகழேந்தி, வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் தினந்தோறும் இரவு 7 மணிக்கு பின்னர் சசிகலாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதிமுகவினர் நேராக கஜராஜை சந்திப்பர்.. அவர்தான் அதிமுக பிரமுகர்களை சசிகலாவிடம் அழைத்துச் செல்வார்.

மேலும் சசிகலாவின் சமையலறைக்கான காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களை இந்த கஜராஜ் சிறைக்குள்ளேயே ஒரு தனியறையில் வைத்து பராமரித்து வருவதும் வாடிக்கையாம். சசிகலாவின் சமையலறையில் பிரிட்ஜ் இருந்ததையும் ரூபா ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தார்.

கஜராஜ் மாகனூர் மூலமே சிறை அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாவும் அந்த கடிதம் கூறுகிறது. முன்னாள் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், மாகனூர் மறும் முன்னாள் உள்துறை அமைச்சரும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பரமேஸ்வரின் பிஏ பிரகாஷ் ஆகியோர் சசிகலா குடும்பத்திடம் லஞ்சப் பணம் பெற்றிருக்கின்றனராம். இவர்கள் மூலமே முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக அந்த கடிதத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

மாணவி வளா்மதிக்கு நக்சல் பின்புலம் உள்ளது பாஜக பயங்கரவாதி தமிழிசை...


கதிராமங்கலம் விவகாரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளா்மதியை தமிழிசை சௌந்தரராஜன் நக்சல் அமைப்புடன் தொடா்பு படுத்தி பேசியுள்ளது சா்ச்சையை கிளப்பியுள்ளது......

பணத்திற்கும் பதவிக்கும்.. இனத்தையும் மண்ணையும் அழித்துக் கொண்டிருக்கும் தமிழின துரோகிகள்...

என்.ஆர்.ஐ. தொழிலதிபரை கடந்த முயன்ற பாஜக தலைவர் கைது...


கேரளா மாநிலம் மல்லாபுரத்தில் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடந்த முயன்ற பாஜக தலைவர் உட்பட 7 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்......

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி -3...


ஒரு கேள்வி... உயிர் இன்றி உடல் தனித்து இயங்குமா?

என்னங்க கேள்வி இது... அது எப்படி உயிர் இல்லாம உடல் மட்டும் தனித்து இயங்கும். சின்னப் புள்ளைய கேட்டாக் கூட உயிர் இல்லாம உடல் இருக்காதுன்னு தெளிவா சொல்லிடுமே" என்று நீங்கள் கூறலாம்.

உண்மையும் அதுதான். உயிர் இன்றி உடல் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இது பலருக்கும் தெரியும்.

ஆனால் இதே உண்மையை நமது மொழி மௌனமாய் பறைசாற்றிக் கொண்டு இருப்பதை நாம் அறிந்தும் அறியாமல் இருக்கின்றோம். நம் மொழி எவ்வாறு அந்த உண்மையைத் தன்னுள் அடிப்படையாகக் கொண்டு உள்ளது என்றுப் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்கள் இரு வகைப்படும்.

௧) முதல் எழுத்துக்கள் - அ , ஆ என்று ஆரம்பிக்கும் 12 உயிர் எழுத்துக்களே முதல் எழுத்துக்கள் ஆகும்.

௨) சார்பு எழுத்துக்கள் - க், ங், என்று ஆரம்பிக்கும் 18 மெய் எழுத்துக்களே சார்பு எழுத்துக்கள் ஆகும்.

மெய் எழுத்துக்களால் தனித்து இயங்க முடியாது. அவை முதல் எழுத்துக்களான உயிர் எழுத்துக்களைச் சார்ந்தே இயங்குவன. எனவே தான் அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.

இப்பொழுது அந்த 'மெய்' என்னும் சொல்லை நாம் சற்று கூர்ந்துப் பார்ப்போம்.

தமிழில் 'மெய்' என்னும் சொல்லுக்கு 'உடல்' என்னும் அர்த்தமும் உண்டு.

மெய் = உடல்.

எனவே, மெய் எழுத்துக்களில் 'மெய்' என்பதற்கு பதிலாக 'உடல்' என்று வைத்துப் பார்த்தோமானால், உயிரைச் சார்ந்தே உடல் இருக்கும் என்பதே தமிழ் கூறும் எழுத்துக்களின் விதி என்று நாம் அறியலாம்.

இவ்வாறு மெய் எழுத்துக்களை உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இருக்கும் எழுத்துக்கள் என்றும் அவை தனித்து இயங்கும் தன்மையை பெற்றவை அல்ல என்றும் தனது அடிப்படை எழுத்துப் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருக்கும் தமிழ் , அதன் மூலம் 'உயிர் இன்றி மெய் (உடம்பு) இல்லை' என்ற அறிவியல் கருத்தினை அமைதியாக உரைத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் இந்த உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேருவதன் மூலம் நமக்கு உயிர்மெய் எழுத்துக்கள் என்னும் 216 எழுத்துக்கள் கிடைக்கின்றன.

இந்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் உணர்ச்சிகள் என்று வைத்துப் பார்த்தோம் என்றால் இன்னொரு உண்மை நமக்கு விளங்கும்.

உயிரும் உடலும் இணைந்து இருந்தால் தானே உணர்ச்சிகள் தோன்றும், அதேப் போல் தான் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உணர்ச்சியான உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிரோ அல்லது மெய்யோ இல்லாது போனால் உயிர்மெய் எழுத்துக்கள் இருக்காது... அதேப்போல் உணர்ச்சியும் இருக்காது..

இதுவே நம் தமிழ் கூறும் உண்மை...

அறிவியல் ஆராய்ந்துக் கூறும் ஒன்றை நம் மொழி அதன் ஆதாரமாகவே வைத்து இருக்கின்றது.

நினைக்கவே சிலிர்க்கின்றது....

சிஐஏ யும் அவர்களின் கொடூர கொலைகளும் (Central Intelligence Agency) அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனம்...




1941 ல் (Office of Coordinator of Information-COI) என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் துவக்கினாலும் 1947 ல் அமெரிக்க அதிபர் ட்ருமன் என்பவரால் சி.ஐ.ஏ (Central Intelligence Agency) என பெயர் மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது.

கொலைகாரர்களின் நிறுவனம்
என்றழைக்கப்படும் இந்த உளவு நிறுவனத்தால் 1987 வரை மட்டுமே 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


1. 1953 ல் ஈரானில் அந்நிய பிரிட்டிஷ் எண்ணை நிறுவனத்தை தேசிய மயமாக்க முயன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் முகம்மத் மொசாதேக் (Mohammed Mossadegh) தூக்கி எறியப்பட்டு சர்வாதிகாரி ஷா என்பவர் அதிபராக அமெரிக்காவால் நியமிக்கப்படுகிறார்.


2. 1961 ல் ஐ. நா. வின் தலைமைச்செயலர் ஹம்மர்ஸ்ஜொல்ட் (Dag Hammarskjold) என்பவர் ஜாம்பியாவில் கனிமச்சுரங்கங்களை ஆக்கிரமிக்க நினைத்த பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு எதிரான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால்  "விமான விபத்தில்" கொல்லப்பட்டார்.


3. 1967 அக்டோபர் 9 ல் அர்ஜென்டினா நாட்டுக்காரரான போராளி சே குவேரா பொலிவியா நாட்டில் கொல்லப்பட்டார்.


4. 1973 ல் சிலி நாட்டின் மக்கள் அதிபர் அலண்டே (Salvador Allende) கொல்லப்பட்டு பினோச்சே (Augusto Pinochet) என்ற சர்வாதிகாரி அதிபராக்கப்படுகிறார்.

5. எண்ணை நிறுவனங்களை தேசியமயமாக்க முனைந்த இராக்கின் சதாம் ஹுசேன், வெனிசூலாவின் ஹுகோ சாவேஸ் மற்றும் லிபியாவின் கடாபி வரை காலனியத்தை எதிர்க்கும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின்  தலைவர்களுக்கும் நிகழ்வது இந்த சதிவலையால் ஏற்படும் கொலைதான்.

6. தென் அமெரிக்காவில் மக்களுக்காக பாடுபட்ட சமூக சிந்தனை கொண்ட தலைவர்கள் சமீப காலமாக இறக்க காரணமாய் இருப்பது புற்று நோய். சர்வாதிகாரிகளுக்கு வராமல் அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் சமூக சீர்திருத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த புற்று நோய் வருவது ஒரு நவீன தொழிநுட்ப அமெரிக்க சதி என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

2008 ல் சி.ஐ.ஏ பராகுவே (Paraguay) நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அந்நாட்டு அதிபர் பெர்னாண்டோ லுகோ வினுடைய டி.என்.ஏ படிமங்களைப் பெற்றதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுருக்கிறது.
   

1. 2010 ஆகஸ்டில் பராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லுகோ (60 வயது) புற்று நோயால்  மரிக்கிறார்.
   
2. 2011 அக்டோபரில் பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா தா சில்வா (66) புற்று நோயால் மரிக்கிறார்.
   
3. 2013 மார்ச் 5 ல் வெனிசூலா நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸ் (59) புற்று நோயால் மரிக்கிறார்.
   
4. 2012 ஜனவரியில் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்நெருக்கும் (58) புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
   
5. கியூபா முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ மீதான 12 முறைக்கும் மேற்பட்ட சி.ஐ.ஏ வின் கொலை முயற்சிகள்.

இவை அனைத்தும் அமெரிக்க சி.ஐ.ஏ வின் அதிநுட்ப அறிவியல் படுகொலைகளே (Scientific Assassinations) என்கிறது சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்.


8. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ப்ரெஞ்சுக்காலனியாக இருந்த அப்பர் வோல்டா (Upper Volta) என்ற நாட்டை நேரியவர்களின் நாடு (Land of Upright Men) என்ற பொருள் பொதிந்த புர்கினா பாசோ (Burkina Faso) என்ற பெயருள்ள நாடாக மாற்றிக்காட்டிய தாமஸ் சங்கரா என்ற இளம் போராளி ஆப்ரிக்காவின் சே குவேரா என்றழைக்கப்பட்டார். அவருடைய 5 வருட ஆட்சிக்குள்ளாக, 37 வது வயதிலேயே கொல்லப்பட்டார்.  

தொடரும் கொலைகள் அடுத்த பதிவில்....

மிகப்பெரிய மாஃபியா அரசியல் இல்லை. அதை விட பெரியது மருத்துவ துறை...


உலகில் நாளுக்குநாள் புதிது புதிதாக நோய்கள் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் புற்றுநோய் பல வருடங்களாக மனிதர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல வகைகள் உள்ளன.

இதற்கு அதிகம் பயன்படுத்தும் முறை கீமோதெரபி. பல்வேறு வேதி பொருள் கலவை இதில் பயன்படுத்தப்படுகிறது.

நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என கூறவில்லை. நம் அனைவருக்கும் பகுத்தறிவு உள்ளது. அதை பயன்படுத்துங்கள்...

ஆதாரம்...

https://www.google.com/patents/US20130059018

https://www.leafly.com/news/health/can-cannabis-cure-cancer

http://chemocare.com/chemotherapy/what-is-chemotherapy/types-of-chemotherapy.aspx

https://www.cancer.org/treatment/treatments-and-side-effects/treatment-types/chemotherapy/chemotherapy-side-effects.html

http://scienceblog.cancerresearchuk.org/2014/08/27/mustard-gas-from-the-great-war-to-frontline-chemotherapy/

அமைதியான மனதை அடைய என்ன வழி ? தியானம் தான்...


தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். "

விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும்.

அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம்.

இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது.

பிரமிட் தியானம் இந்தச் சக்தியைக் கொடுக்கிறது.

இதை ஆனாபானா சதி என்ற பெயரில் அழைக்கின்றனர்.

இதை ஒழுங்காகச் செய்தால் இந்த விடக்கா என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.

ஆனாபானாசதி, பாலி மொழியில் "ஆனா" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. "அபானா" என்றால் வெளியே விடும் முச்சு. "சதி" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைச் செய்யும் முறை :

வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.

மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம்.

இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.

எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.

விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது.

பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.

தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது.

சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான்.

இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும்.

இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே...

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: வந்தே மாதரம் பாடலை பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த கூடாது...


திருக்குறளைப் போல தமிழகத்தில் வந்தே மாதரம் பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதேநேரத்தில் பாட விரும்பாதோரை கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு நாட்டின் மீது வெறுப்பு அதிகரிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கான கீ ஆன்சரில் சமஸ்கிருதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்ட நிலையில் கீ ஆன்சர் தவறாக இருந்ததால் தமக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என கூறி வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருதப் பாடல் என புரியாத பதிலளித்தார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என ஆதாரங்களை தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் சுஜாதாவை பாராட்டுகிறோம்.

ஏற்கனவே திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும் பள்ளிகளில் திருக்குறள் கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த வரிசையில் தேசபக்திப் பாடலான வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறையும் அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒருமுறையும் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்றார்.

அதேநேரத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; அப்படி செய்வர்களிடம் உரிய விளக்கம் பெறலாம்; கட்டாயப்படுத்தினால் நாட்டின் மீதான வெறுப்புணர்வு அதிகரித்துவிடும் எனவும் நீதிபதி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்...

2வது நாளாக அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு...


கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக அறந்தாங்கி அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்......

2009 ஆம் ஆண்டு மாணவராக இருந்த போது மாணவர் போராட்டத்தில் பங்கு பெற்றதாக கக்கூஸ் ஆவண படத்தை இயக்கிய திவ்யா கைது..


பெண்பிள்ளைகளை கைது செய்து யாருக்கு போராடும் எண்ணமே வரக்கூடாது என்று அச்சுறுத்துகிறது அரசு..

பெண்பிள்ளைகளை போராட்டத்திற்கு வரவிடாமல் தடுத்துவிட்டால்.. ஆண்பிள்ளை களை எளிதாக அடித்து விரட்டி விடலாம்.. இது தான் அரசின் நோக்கம்..

ஒட்டு கேட்டு எங்ககிட்டத்தானே வரணும்.. அப்ப நாங்க பயம்புறுத்துகிறோம்...

மக்களை போராட தூண்டியதற்காக முதல்வர் எடுப்பாடி பழனிச்சாமி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி மனு கொடுக்கும் போராட்டம். கீழ்கண்ட மனு இன்று (24.7.17) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது...



பெறுநர்,
மாவட்ட ஆட்சியர்,
மதுரை மாவட்டம்,
மதுரை

பொருள்: எங்களை போராட தூண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவர்களை குண்டர் சட்டத்தில்  கைது செய்யவும் தமிழக மக்களை பேரழிப்பு திட்டங்களில் இருந்து காப்பற்ற கோரி மனு

மாவட்ட ஆட்சியருக்கு வணக்கம்

அன்புள்ள ஐயா வணக்கம். இந்தியா என்கிற மிகப்பெரிய குடியரசு நாடு, சர்வாதிகார நாடக மாறுகிறதே என்கிற அச்சத்தில் நாங்கள் வாழுகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, போராடும் உரிமை, கேள்வி கேட்கும் உரிமை உள்ளிட்டவைகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது. மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்த முனையும் எங்களுக்கு தடியடி, கைது, சிறை, குண்டர் சட்டம் என தண்டனைகள் வழங்கபப்டுகிறது. இதன் உச்சமாக "மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 19.07.2017 அன்று சட்டசபையில் பேசுகிறார். இது முற்றிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நினைவேந்தல் நடத்த முயன்றதற்க்காக, துண்டறிக்கை வழங்கியதற்காக என நமது இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தியதற்காக குண்டர் சட்டத்தை எங்கள் மீது ஏவுகிறார்கள். எங்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது.

"படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம்" என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் இப்போதிருக்கிற முதல்வர் எடப்பாடி அவர்களின் ஆட்சியில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. அத்தோடு நில்லாமல் மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களை நடுரோட்டில் வைத்து சட்டவிரோதமாக தாக்கிய துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவிக்கிறது இந்த அரசாங்கம். மதுக்கடை விவகாரத்தில் எங்களை தொடர்ச்சியாக போராட தூண்டுவது இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான்.

மக்கள் விரும்பாத எந்த அழிவுத்திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டசபையில், தேர்தல் காலத்தில் உறுதியளிக்கிற ஆட்சியாளர்கள், மக்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், அணு உலை உள்ளிட்ட பேரழிப்பு திட்டங்களை புதிதாக அமைக்கவும் திட்டம் போடுகிறது. அதன் உச்சமாக கதிராமங்கலம் கிராமத்தில் காவல்துறை படைகள் குவிக்கப்பட்டு, மக்களின் போராட்டங்களை ஒடுக்கி, எரிவாயு எடுக்கிறது எடப்பாடி அரசாங்கம். நாங்கள் இராணுவ ஆட்சியில் இருப்பதாகவே அஞ்சுகிறோம். இந்த நாடு சனநாயக நாடு என சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்களோ என்று எங்களுக்கு ஐயமாக உள்ளது. இந்த விவகாரத்தில் எங்களை போராட தூண்டியதும் முதலமைச்சர் எடப்பாடி அரசாங்கம்தான்.

எரிவாயு எடுக்கும் திட்டங்களால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக போராடும் விவசாய மக்களின் எந்த கோரிக்கைகளையும் மதிக்காமல், இப்போது கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல கிராமங்களை உள்ளடக்கி "சிறப்பு பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம்" என்று அறிவித்துள்ளது எடப்பாடி அரசாங்கம். இந்த விவகாரத்தில் நாங்கள் போராட காரணமாக இருப்பதும் எடப்பாடி அரசாங்கம்தான். எனவே எங்களை போராடு தூண்டுகிற முதலமைச்சர் எடப்பாடி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

எங்கள் இயல்பு வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்டது. நாங்கள் இந்த பேரழிப்புக்கு எதிராக போராட வேண்டும். இல்லையென்றால் இதையெல்லாம் சகித்து கொண்டு சாக வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அணு ஆயுதங்களை பயன்படுத்தாமல் இப்படியான திட்டங்களின் வழியாக நாங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறோமா என்று எங்களுக்கு அச்சமாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என இந்திய அரசியலமைப்பு சொல்லுகிறது. ஆனால் எங்கள் மண்ணை, நீரை, வனத்தை, சுற்றுச்சூழலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. காப்பாற்றுவதற்காக போராடினால், நாங்கள் அதே இந்திய சட்டப்படி தண்டிக்கப்படுகிறோம். ஒன்று எங்களுக்கு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் அல்லது பேரழிப்புக்கு எதிராக போராடும் உரிமை வேண்டும் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எங்களுக்கு வழங்குகிற அடிப்படை உரிமைகளை, கடமைகளை திருத்தி இந்த நாட்டை சர்வாதிகார நாடு என்று அறிவிக்க வழிவகை செய்யுங்கள்.

எங்களை காப்பாற்றும் பொறுப்பும் பலமும் கொண்ட எதிர்க்கட்சிகள் அறிக்கை விடுவதோடு நின்றுவிடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.

இந்த நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்களை விட துண்டறிக்கை வைத்திருப்பவர்கள்தான் தீவிரவாதிகள் என சொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த மனுவை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு, அதிகார மையங்களுக்கு அனுப்பி, தமிழக மக்களை காப்பற்றுவதற்கான முயற்சிகளையும், எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். நன்றி

இப்படிக்கு,
தமிழக மக்கள் நலனில் அக்கறையுள்ள மாணவர்கள் இளைஞர்கள்
8778615815

இதே போல ஒவ்வொரு மாவட்டத்தில் சமூக அக்கறையுள்ள மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு நேரில் அல்லது அஞ்சலில் அல்லது ஆட்சியரின் அதிகாரபூர்வ முகநூல் / இணையதள கணக்குகளில் மனு கொடுப்போம். போராடுகிற மக்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவையும், போராட்டத்தை அடக்குகிற அதிகாரிகளுக் அழுத்ததையும் கொடுக்கும். தமிழகம் காப்போம்...

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.

(கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை)..

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.

(மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை)..

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல. அதில் வாழும் மக்களும், அவர்களின் வாக்குகளும், அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள், அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் ...


உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான்.

இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை, முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்!

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் எ மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.ஏ-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு.

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்!

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள்.

நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர்.

முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்).

தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம்.

2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்!

ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன.

ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.

நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர்.

5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான்.

நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி.

இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.  இது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார்.

ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது.

கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல்.

ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.ஏ-வை ஒத்த டி.என்.ஏ-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும்.

ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது...

கொடி மர தத்துவம்...


கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும்.

கொடி மரம்:

ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடிஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன.

நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.

பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.இது கோவிலுக்கு கோவில் மாறுபடும்.

ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன.

கொடி மரம் முழுவதும் பல்வேறுஇறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும்.

சில கோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும்.மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது.

இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும்.

பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடுமீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும்.

இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள். எப்படி தெரியுமா?

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது.

இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது. சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான்அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்யவேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது.

இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார்.

ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது.

கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடிமரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது. கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள்.

இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும். அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவே தான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்...

நாடு நாடாக பாஜக மோடி சுற்றியும்...


சீனா, பாகிஸ்தான் எல்லையில் இந்தியா போர் பதற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சர்வதேசநாடுகள் எதுவும் வெளிப்படையாக ஆதரவு தாராது ஏன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கேள்வி?