29/11/2020

தெலுங்கர் பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழினத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அனைத்தும் இதை போன்று தான்...

ஆங்கிலேயர்கள், இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களிடமோ, சிங்களவர்களிடமோ ஆட்சி அதிகாரத்தை அளிக்காமல், இந்திய தெலுங்கர்களிடம் அளிப்பது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என்று ஈவெ ராமசாமியிடம் எடுத்து சொல்லியும், அவர் தமிழர்களுக்கு தனியுரிமை தர இயலாது, இந்திய வம்சாவழி தெலுங்கர்களை அனுசரித்து போங்கள் என்று உதாசீனம் செய்து விட்டார்..

- தந்தை செல்வா இலங்கை இனக்கூறு (பக்கம் 150)...

சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும் தான்...

 


தமிழக மக்களின் நிலை 😂

 


வாழை இலையின் பயன்கள்....


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான்.

அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.

இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

 இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே...

மக்கள் விரோத பாஜக மோடி அரசும்.. அதிகாரத்தின் அடிமை காவல்துறையும்...

 


அதிமுக எடப்பாடியும்.. கொரோனா கொள்ளையும்...

 


உங்களுக்கு தெரியுமா ?

 


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு

ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

ஒரு காலத்தில் ரோமர்களுக்கே வேலை கொடுத்தவர்கள் இந்த தமிழர்கள் ஆனால் இப்போது..?

இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..

எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.

கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.

இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.

இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.

ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..

இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல் Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..

இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.

இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.

இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.

ம்ம் ரோமானியர்களுக்கே வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...

எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..

இன்றைய அரசியல்வாதிககளுக்கு மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...

இத்தனை நாளாக கத்தி கொண்டு இருக்கிறோம் யாரும் கண்டு கொள்ளவில்லை...

 


சிந்திக்காத ஆட்டு மந்தை கூட்டம் தான் அவர்களுக்கு தேவை...

அதிமுக அமைச்சர்கள் கலாட்டா 😁

 


பண்டைய தமிழர்கள் இன்றைய பாம்பேவை (மும்பை)...

 


வேள்புலம் வேணாடு என்று தான் அழைத்து வந்தார்கள்...

அதே தமிழக பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பிராமணர்கள்

தண்டகாரணியதேசம் என்று மும்பையை அழைத்து வந்தனர்...

இந்த தண்டகாரணியதேசம் என்பதற்கு அர்த்தம்.

ஆரியநாட்டிலுள்ளதோர் நாடு..

தமிழர்கள் அழைத்து வந்த வேள்புலம் வேணாடு என்பதற்கு அர்த்தம். நிறைய உள்ளது..

அதில் சிலதை மட்டும் பாருங்கள் .

வேணாடு = வேணர் மக்கள் வாழக்கூடிய நாடு.

புறநானூற்றில் கொண்கானங்கிழான் என்று வேளை பற்றி பண்டைய தமிழ் இலக்கியம் பேசக்கூடிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

வேல்புலம் =மற்றொரு அர்த்தம் தம்பிமாரின் நாடு.

ஆக மும்பையை. சகோதரத்துவ நாடு என்றும் வேணர் மக்களின் நாடு என்றும் தான் பண்டைய கால தமிழர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் ஆரியரோ ஆரியநாட்டில் உள்ள ஒரு பிரதேசம் என்று கூறும் போதே இதன் சூழ்ச்சி விளங்குகிறதா ?

தமிழன் தம்பிமார்கள் அண்ணன்மார் என்று அன்னியனை அன்போடுத்தான் அழைத்து வந்துள்ளான்...

எங்கோ உள்ள மும்பைகாரர்களை தம்பிகள் நாடு என்று அழைத்த தமிழனுக்கு.

கூடவே இருக்கும் ஆரியனை வந்தேறி என்று கூற வாய்கூசாதா ?

ஆரியனையும் அண்ணனாக தான் பார்தான்.

ஆனால் ஆரியன் சூழ்ச்சி அன்றே ஆரம்பித்து விட்டது என்பதற்கு மிக பெரிய ஆதாரம்....

இது... ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆரிய நாடு என்று சொல்லும் அளவிற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது....?

ஆதாரம் : Dr bandarkar history of dekkan page 136...

பாஜக மோடியின் பினாமி சக்திகாந்த் தாஸ் பொய்கள்...

 


உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....

ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

இந்த சாலை முக்கியமா? 8 வழிச்சாலை முக்கியமா?

 


பொன்னேரி மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை டிஎஸ்பி என அனைவரையும் நாம்தான் நியமிப்போம் என மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்...

 


மருத்துவ மாப்பியா உண்மைகள்...

செக்கில் ஆட்டிய எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்த சமயத்தில்.... கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டு வந்த எண்ணெய் தீமையானது என்று எந்த மருத்துவர்கள் ஆவது சொன்னார்களா?

பிராய்லர் கோழிகள் வந்த சமயத்தில் பிராய்லர் கோழிகள் ஆபத்தானது என்று எந்த மருத்துவர்களாவது சொன்னார்களா?

குழந்தைகள் டயப்பர் அணிவது பின்னாளில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை எந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆவது சொன்னார்களா?

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் நாளை அவர்களுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் என்பதை எந்த மருத்துவர்கள் ஆவது சொன்னார்களா?

இந்த அடிப்படைகளை சொல்லாத இந்த மருத்துவர்களா...

நீங்கள் நம்பி சாப்பிடும் மருந்துகள் இருக்கக்கூடிய தீமைகளையா எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?

நீங்கள் போட்டுக்கொள்ளும் தடுப்பூசியின் பாதகங்களையா எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?

இந்த மருத்துவர்களையா மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்?

பழனிசாமி ஆட்சியில் எங்கும் எதிலும் அலட்சியம்...

 


தெலுங்கன் நியூஸ் 7 சேனலுக்கு செருப்படி 😁

 


வெள்ளையர்கள் செய்த அட்டூழியங்கள்...

 


அமெரிக்காவில் இந்த வெள்ளையர்கள் கருப்பு மக்கள் மீது செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

அவர்கள் ஆயிரக்கணக்கான  வெள்ளையர்களை வைத்து கருப்பர்களை கொல்வதற்காகவே அமைப்பை வைத்து இருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இன்றும் கூட அந்த அமைப்பு உள்ளது..

இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பங்களில் கூறுகிறேன்..

இன்று ஆப்பிரிக்காவில் இவர்கள் செய்த அட்டூழியங்களை சொல்கிறேன் வாசியுங்கள் ..

ஹெக்டேர் பீட்டர்சன்...

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வெள்ளையர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு கருப்பின மக்களை கொடுமை படுத்தி வந்தனர்.

அவர்களுக்கு உணவு நீர் இடம் எல்லாவற்றிலும் பாகுபாடு நடந்தது...

மீறி தட்டி கேட்பவருக்கு மரணமே பதிலாக வந்தது..

இதை எதிர்த்து இந்த பீட்டர்சன் சாலையில் அமர்ந்து மக்களுடன் போராடினார்.

அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது பொத்தென்று விழுந்தார் பீட்டர்சன்...

ஆம் அவரை இராணுவ குண்டு துளைத்தது.

இன்னொருவர் உடனே கை தாங்களாக பீட்டர்சனை பிடித்து தூக்கி கொண்டு அவரும் உயிர் பயத்தில் கலவர முகத்துடன் அந்த இடத்தில் இருந்து ஓடினார்...

இந்த சம்பவத்தை அருகே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்..

இது தான் பின்னர் இவர்கள் போராட்டத்தின் சின்னமாக அறிவிக்க பட்டது...

இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் அனுப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டது.

பீட்டர்சனை தூக்கி கொண்டு ஓடியது போன்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதே போன்று சிலைகள் வைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்த பட்டது...

பிறகு தான் சூழ்நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசாங்கம் இறங்கி வந்தது..

இன்று தென் ஆப்பிரிக்கா சுதந்திரமாக இருக்க காரணம் பீட்டர்சனின் இறப்பு தான்...

போராட்டம் செய்து குண்டடிபட்டு இறக்கும் போது இந்த பீட்டர்சனுக்கு வயது என்ன தெரியுமா ?

வெறும் 12 வயது தான்....

ஆஸ்ரேலியாவில் பாஜக மோடியின் முதலாளி அதானி யின் நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிர்ப்பு...

 


முட்டாள் தமிழினமே...

 


தமிழர்கள் திராவிடம் பேசிய அழிந்து போவார்கள் என்பது உறுதியோ...

இங்கே நாம் தமிழகத்தில் மட்டும் தான் திராவிடம் என்று கூரி கொண்டிருகிறோம்...

ஆனால் ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ அவ்வாறு கூறி கொள்வதில்லை..

அப்படி அவர்கள் கூறியிருந்தால் திராவிட நாடு என்று திராவிட கட்சிகள் கேட்ட போதே உருவாகியிருக்கும்..

எந்த திராவிடனும் தமிழனை தவிர திராவிடத்தை பயன்படுத்தவில்லை..

நாம் முட்டாள்கள் என்பது இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்...

மக்கள் விரோதி பாஜக யோகி யின் உ.பி ஆட்சி லட்சணம்...

 


திண்டுக்கலில் இட தகராறில் மாற்றுத்திறனாளி பெண் தாக்கிய திமுக ஒன்றிய கவுன்சிலர்...

 


திராவிட ஆரிய மாயைகளில் சிக்கி சீரழிந்து போன தமிழன் எப்படி மீளபோகிறான்?

எப்போது நாட்டை ஆளபோகிறான்?

யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை..

மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..

பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமயகி போன தமிழன் தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்.

தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும், சொந்த மண்ணில் வேலை வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான்...

மக்கள் விரோதி பாஜக மோடியின் இந்தியா விற்பனை...

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், அம்பானி அதானி பனியாக்கள் விவசாயிகளோடு நேரடி ஒப்பந்தம் போடலாம்...

எவ்வளவு வேண்டுமானாலும் விளை பொருள்களை பதுக்கி கொள்ளலாம்.

பின் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று விற்கலாம் என மாநில அரசுகள், விவசாயிகளை பனியாக்களின் நிரந்தர அடிமைகளாக மாற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், உ.பி, அரியானா, உத்தரகாண்ட் விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கி உள்ளனர். 

பாஜக அரசு சாலையில் பள்ளம் வெட்டுவது, தண்ணீர் பீச்சி தாக்குவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என போலிஸ் ஒடுக்குமுறை செய்து வருகிறது.

மீறி டில்லிக்குள் நுழைந்தனர் விவசாயிகள். மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதன் உதாரணம் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்...

கன்னட கஞ்சா வியாபாரி ஜக்கியை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்...

 


திருட்டு திமுக சாராய வியாபாரத்திற்காக தடை செய்தது...

 


ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...

 


ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்..

இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.

இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.

இவரது பூர்வீகம்  கிரேக்கம்...

இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.

தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.

பைபிள் சொல்ல கூடிய நோவா.

குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.

இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.

கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...

இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..

எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த விஷயத்தையும் கூறுகிறார்..

அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..

அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..

ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...

இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...

பாவிகளின் பைபிள்...

 


புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..

பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..

ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..

இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..

இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...

ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?

1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..

கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..

கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.

பிரபலமான  பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.

ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..

என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....

பரவலாக பரவியது இந்த பைபிள்..

பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..

பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.

இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....

காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.

ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ..

இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...

இப்போது விஷயம் எனனவென்றால்..

ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...

அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..

சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..

இதன் சொர்ப அளவு  மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும் ....

கோவை திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சதீஷ், திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானதால் பதட்டத்தில் விஷயமறியா வாரிசு...

 


தாழ்த்தப்பட்ட இனத்தவர் மீதான பாஜக வின் நேரடித் தாக்குதல் இது...