13/02/2022

தொப்பையை குறைக்க வழிகள்...

 


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல.

ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

இனிய மாலை வணக்கம் 🚶

இம்பூட்டு தாங்க வாழ்க்கை...

இலுமினாட்டி...

 


நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியது தான் உலகம் என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.

நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது.

ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்­டிருக்கிரார்கள்.நம்மமுடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.

திடீரென­ ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம்.

இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/­அழிவு பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம். இவர்களுக்கு இலுமினாட்டிகள் என்று பெயர்.

இலுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்து வைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.

நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது.

அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்க­ள் என்பதல்ல. கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து, தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பது தான் புத்தகத்தின் நோக்கம்.

பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்க வேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்.. வாசித்துப் பாருங்கள்..

இனிய மாலை வணக்கம் 😁

வரி கொள்ளையன் பாஜக மோடி கலாட்டா...

எச்சரிக்கை மக்களே...

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?

 


இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனில் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...

இனிய உணவு வணக்கம்...

பிராடு பாஜக கலாட்டா...

திருட்டு திமுக கலாட்டா...

உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்...

 


அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…

சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது..

கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.

இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.

இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்…

அடுத்த சம்பவம்…

உண்மையிலேயே ஆச்சரியமானது தான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…

(சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்).

நீண்ட காலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.

மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.

முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.

அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.

இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.

அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…

மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் ..

இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.

அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை? என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்…

அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?… அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்… ஒப்பீடுகளுடனும்… அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்…

அதிமுக எடப்பாடி கலாட்டா...

நீதிபதிகள் Vs காவல் துறை...

கொரோனா கோ-வீ-ஷீ-ல்டால் 8402 பேருக்கு பக்கவிளைவு...