23/07/2017

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

மாசம் ஒரு கிறுக்கு பய வந்துடுறான் இந்த பாஜகவிலிருந்து....... எங்க போயி முடிய போகுதோ தெரியல?


இந்தியமும் திராவிடமும் உன்னை அழிக்கிறது விழித்தெழு தமிழா...


http://dhunt.in/2AVzp?s=a&ss=pd

தக்காளி விலை உயர்வு எதிரொலி , துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் விற்பனை...


தக்காளிகள் திருடப்படுவதை தடுக்க மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் துப்பாக்கி ஏந்திய காலவர்கள் முன்னிலையில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் மும்மைபயில் 300 கிலோ தக்காளி திருடப்பட்டது குறிப்பிடதக்கது...

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலத்தில் போராடிய ஜெயராமனின் தந்தை காலமானார்...


போர் வந்தால் பத்தே நாட்களில் இந்தியாவின் ஆயுதங்கள் தீர்ந்துவிடும் - தலைமை தணிக்கை கணக்காயர் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்...


சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

மக்களுக்காக தான் திட்டங்கள்... திட்டங்களுக்காக மக்கள் இல்லை - தேமுதிக விஜயகாந்த்...


கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசியை விரட்டுவதுதான், எனது அடுத்த வேலை...

விளைநிலங்களை அழித்து பெட்ரோலிய மண்டலமா? பாமக தொடர் போராட்டம் - பாமக மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...


தமிழ்நாட்டின் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கிராமங்களில் 23,000 ஹெக்டேரில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் இத்திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களை எண்ணெய்க் கிணறுகளாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது; அதற்காகவே காவிரியில் தண்ணீர் வழங்காமல் அப்பகுதியை நிரந்தரமாக வறண்டு போக வைக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன்.

அந்தக் குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு தூண்டுதலின் பேரில் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களில் இந்த மண்டலம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக அந்த கிராமங்களில் உள்ள 22,938 ஹெக்டேர், அதாவது 57,345 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில் பல நிறுவனங்கள் ரூ.92,000 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், எண்ணெய்க் கிடங்குகளையும் அமைக்கும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த மண்டலத்தில் எண்ணெய்க் கிணறுகளோ, எரிவாயுக் கிணறுகளோ அமைக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எண்ணெய் எடுக்காமல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கப் போவதாக கூறுவது நம்பும்படியாக இல்லை.

ஒருவேளை சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே அமைக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் அது சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான சீரழிவை ஏற்படுத்தும். மொத்தம் 57,345 ஏக்கர் நிலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அதைச் சுற்றியுள்ள பல லட்சத்திற்கும் அதிகமாக விளைநிலங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் பயனடைவதற்காக அப்பாவி மக்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் மொத்தம் 110 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டிருப்பதையும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கும்படி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறித்தும் தொடர்ந்து கூறிவருகிறேன்.

ஆனால், தமிழக மக்கள் நலனை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறிக் கொண்டே இத்தகைய ஆபத்தான திட்டங்களுக்கு கொல்லைப்புறக் கதவுகளை தமிழக அரசு திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் சாலைகள் மற்றும் தொடர்வண்டிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.1146 கோடி செலவழிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பலி கொடுக்கப்படும் ஆட்டின் கழுத்தில் அணிவிக்கப்படும் மாலைக்கு ஒப்பானது தான். இதனால் அப்பகுதி மக்களுக்கு ஆக்கப்பூர்வ பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதிகள் அனைத்தும் கொள்ளிடம் மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகள் ஆகும்.

இப்பகுதிகளில் ஏற்கனவே கடல் நீர் உள்ளே புகுந்து விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் கிட்டத்தட்ட அழித்து விட்டது. கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தில் கலந்ததால் அங்கு விளையும் இளநீரிலும், நிலத்தடி நீரைக் குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டையாக்சின் என்ற வேதிப்பொருள் உள்ளது.

அதேபோல் பரங்கிப்பேட்டையில் சாயத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் அங்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 5 அனல் மின்நிலையங்கள் உள்ளதால் சுற்றுச்சூழலும், காற்றும் மோசமாக மாசுபட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் பெட்ரோக்கெமிக்கல் திட்டமும் செயல்படுத்தப்பட்டால்மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதைப்ற்றியெல்லாம் கவலைப்படாமல் மிகக்கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் பெட்ரோக்கெமிக்கல் திட்டத்தை அறிவிக்க மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

தமிழக அரசுக்கு அத்துணிச்சல் கிடையாது. ஆனால் மத்திய அரசின் மிரட்டல்களுக்கு பணிந்து இத்தகையத் தீயத் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்கிறது.

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய இத்தகையத் திட்டங்களுக்கு பொதுமக்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவித்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் கதிராமங்கலம் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு அடுத்தக்கட்டமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் குபேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கங்காணி வேலையும், அடியாள் வேலையும் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெட்ரோகெமிக்கல் திட்டம் திடீரென உருவான ஒன்றல்ல. பத்தாண்டுகளுக்கு முன் முந்தைய திமுக ஆட்சியில் இத்திட்டத்திற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2012&ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2014&ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்ட மேற்குவங்க அரசு பின்னர் மக்கள் எதிர்ப்புக்கு பணித்து பின்வாங்கி விட்டது.

கேரள மாநிலம் இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டது.

ஆனால், தமிழக அரசு மட்டும் வளமை வாய்ந்த பூமியை பாலைவனமாக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனுக்கு கேடான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். இதுதொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, கடலூர் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அதற்கான கால அட்டவணை மற்றும் போராட்ட இடங்கள் விவரம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்...

தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்...


படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி..

Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit
representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)
.
பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை -
வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய்
(எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண்
கயிறு என்று சொல்லுவதை நினைவில்
கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல்
(திருமணத்திற்கு பெற்றோர்
சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்

இதை விட பல சொற்கள் உள்ளன.

ஆங்கிலத்தின் 60%சொற்களின் மூலம் நம் தமிழ்மொழியே...

பாஜக நிர்மலா சீதாராமன் அசால்ட் பதில்: தமிழகத்தின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை...


தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தமக்கு தெரியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தகுதித் தேர்வு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்த போது, நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வுக்க விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி வருகிறது. நீட் விலக்கு கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றியிருப்பதையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசு நீட் மசோதாவை ஒப்புதலுக்கு அனுப்பியும், அதை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், தற்போது அந்த மசோதா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது குறித்து விசாரித்து பதில் சொல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தகவல் வருகிறது. இது குறித்து ஆய்வு செய்து மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று கூறினார்...

டெல்லி பொருளாதார மாநாட்டில் பாஜக அருண்ஜேட்லி குமுறல்: கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை...


தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ரொக்க பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பணமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன என்ற அவர், கருப்பு பண புழக்கம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

அதே சமயம் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கருப்பு பண புழக்கம் பற்றி குறைசொல்வதை விட்டு அதை தடுப்பதற்கான யோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

இது குறித்து அரசியல் கட்சிகளுக்கு தாம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர் இதற்கு எந்த கட்சியிடம் இருந்தும் பதில் வரவில்லை என்று கூறினார்.

கருப்பு பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும் இப்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகிறதா என்று அவர் வினவினார்.

டெல்லி பொருளாதார மாநாட்டில் சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மர் சண்முகமும் கலந்து கொண்டார்...

எடப்பாடி பழனிச்சாமி: டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம்...


எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தக்க பதில் கொடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக என்றைக்கும் ஒரே அணி தான் என்றும், எங்களுக்குள் பிளவி இல்லை என்றும் தெரிவித்தார்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்...

குண்டலினி யோகம்...


எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்...

காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்...

புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும்..

ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு.

அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்..

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள்.

அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது.

உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.

அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது.

பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது.

இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினை சக்கரம் : உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.

தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.

மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.

ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்...


தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது..

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.(இன்றுவரை நடந்தும் வருகிறது).

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன் (CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க..

அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.

அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.

எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.

ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்

அனைவரும் இதில் கூட்டாளிகள்...

இந்த நாட்டில் எப்போது இந்து, இந்துமதம் என்ற சொல் உள்ளே வந்தது தெரியுமா நண்பர்களே...


1921 April 14ம் தேதிக்கு முன்பு இந்தியா வரலாற்றில் இந்து என்ற வார்த்தையே கிடையாது.. ஏனென்றால் அப்போது british அரசாங்கம்..

அப்போது தான் இந்தியாவில் மொத்தமாக எத்தனை கிருஸ்துவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பிய பிரிட்டிஷ் அரசாங்கம்.. மதரீதியான கணக்கெடுப்பை நடத்தியது..

கிருஸ்துவர்கள் முஸ்லிம்களை தனித்தனியாக எளிதாக பிரித்த ஆங்கிலேய அரசாங்கத்தால் அதன் பிறகு ஒரு பெரிய மக்கள் தொகையை பிரிக்க முடியாமல் திணறியது ஏனென்றால் அவர்களுக்கு மதம் என்ற ஒன்றே கிடையாது..

அப்போது தான் பிராமணன்கள் தாங்கள் இந்துக்கள் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டது.. மற்றவர்கள் எல்லாம் யார் என்று கேட்டபோது அவர்களைப் பற்றி எங்களுக்கு தெரியாது என்று சொன்னது இந்த பிராமண கும்பல்..

இந்துக்களாக இருக்க இந்த பிராமணன்கள் அனுமதித்தால் இந்துக்களாக இருக்கலாம்..

அதனால் தான் மற்ற எல்லா ஜாதிக்காரர்கள் ஜாதி சான்றிதழிலும் இந்து செட்டியார்.. இந்து வன்னியர் என்று தான் எழுதியிருக்கும். ஆனால் பிராமணன்கள் ஜாதி சான்றிதழில் வெறும் பிராமணன் என்று தான் எழுதியிருக்கும்..

ஏனென்றால் நம் நாட்டு சட்டப்படி பிராமணன் தான் இந்து.. மற்றவர்கள் எல்லாம் இந்து அல்ல..

நம்பிக்கை இல்லையென்றால் தகவல் அறியும் சட்டத்திலேயே தகவல் கேட்டு உறுதி படுத்தி கொள்ளலாம்..

இதைவிட ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால்..

Who is a hindu என்று கேட்டால் நம் சட்டம் சொல்வது என்ன தெரியும.. யாரெல்லாம் முஸ்லிம்கள் இல்லையோ யாரெல்லாம் கிருஸ்துவர்கள் இல்லையோ யாரெல்லாம் சீக்கியர்கள், பார்சிக்கள் இல்லையோ அவர்கள் தான் hindu என்று சொல்கிறது..

இது எப்படி இருக்கிறதென்றால்.. மாடு என்றாலென்ன என்று கேட்டால் எதெல்லாம் நாய் இல்லையோ எதெல்லாம் பூனையில்லையோ எதெல்லாம் கழுதை இல்லையோ அதெல்லாம் மாடு என்று சொல்வது போல் உள்ளது...

திருட்டு விபச்சார ஊடகங்கள்...


தமிழக ஊழல் எடுப்பாடி அரசு... தேவை என்றால் பதவிக்காக குடும்பத்தை கூட விற்பார்...


கமல்ஹாசனின் தீடீர் அரசியல்.. உத்தம வில்லன்...


திரைப்படங்கள் மூலம் சாதி , மத பேதங்களை முன்னிலைப்படுத்தி பலவித சர்ச்சைகள் ஏற்படுத்தி அமோக வசூல் செய்தவர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன்.

தேவர் மகன் பட தலைப்பு கொடுத்து படம் எடுத்த கமல்ஹாசன் தலித்துகளை கொந்தளிக்க விட்டுவிட்டு படத்தின் முழு கதை கருவையும் தேவர் இன மக்களுக்கு எதிராக  கொடூரமானவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு அமைதியின்மையால் சாதிய வெறியர்களை உருவாக்குபவர்கள் என்கிற புது தத்துவத்தை தமிழகத்திற்கு முன்மொழிந்தவர்.

தேவர் மகன் போல பல படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்...

அதே போன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக உன்னை போல் ஒருவன், விஸ்வரூபம் போன்ற படங்கள் மூலம் மத கலவரங்களை ஏற்படுத்த முயன்றவர்.

விஸ்வரூபம் மூலம் இஸ்லாமியர்களை கலாச்சார தீவிரவாதிகள் என்ற பட்டம் கொடுத்த உலக மகா நடிகன்.

இப்படி மத சாதிய கொள்கை முன்னிறுத்தி படம் எடுத்து கலாச்சார சீர்கேடுகளை தமிழகத்தில் விதைத்தவர்.

அடிக்கடி இவர் சொல்லும் தத்துவம் நானும் பெரியாரின் கொள்கை பின்பற்றுபவன் என்கிற போலி வேதாந்தம்..

சரி பெரியாரின் கொள்கை பின்பற்றும் நபராக கமல்ஹாசன் இருந்தால் ஆர் எஸ் எஸ் பாசிச சிந்தனைக்கு எதிராக ஏன் படம் எடுக்கவில்லை?

இதுவரை இவரின் படம் வெளிவர சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்கவில்லையா ?

இவர் எடுக்கும் படத்தின் மூலம் வரும் வருமானத்தை திருட்டு கணக்கு காட்டாமல் உண்மையான வருமான வரி செலுத்தி உள்ளாரா ?

கமல்ஹாசனின் நற்பணி மன்ற அகில உலக தலைவராக இருந்த குணா என்கிற குணசீலன் தன் வாழ்க்கையே அர்ப்பணித்தவருக்கு நீங்கள் என்ன சம்பலம் வழங்கி கெளரவித்தீர்கள்?

பார்பனியத்தை உயர்த்தி பிடித்து படமெடுத்து பணம் சம்பாதிக்கும் கமல்ஹாசன் ஊழல் பற்றி பேசுவதே வேடிக்கை...

இப்படி பல டஜன் கேள்விகள் உள்ளன.

அதிமுக ஆட்சியின் மீது உள்ள வெறுப்பை கலாச்சார சீர்கேட்டு நாயகனிடம் மண்டியிடுவது எப்படி என்றால் காங்கிரஸ் ஆட்சி மீது இருந்த வெறுப்பை அன்னா ஹசாரே முன் மண்டியிட்டு பாசிச பிஜேபி ஆட்சிக்கு உதவியது போல் ஆக கூடாது...

பாஜக மோடியின் சாதனை...


எங்களை இந்து மதத்திலிருந்து விடுவியுங்கள்.. லிங்கா சமுதாய மக்கள் பேரணி...


இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்களை தவிர ஏனைய மதங்களை சேர்ந்தவர்களையும், கடவுள் மறுப்பாளர்களையும் இந்து என்றே அரசியல் சாசன சட்டத்தில் வரையறுத்துள்ளனர்.

அந்த வகையில் லிங்கா சமுதாய மக்களையும் இந்து என்றே வரையறுத்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் லிங்கா சமுதாயத்தை சேர்ந்த 1 லட்சம் பேர் பேரணியில் கலந்து கொண்டு தங்களை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்...

கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் லிங்கா சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.

இந்துக்கள் 33 கோடி கடவுள்களை வணங்கி வருகின்றனர். அவர்களில் 33 கடவுள்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக வணங்கப்பட்டு வருகின்றனர். கடவுள்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் லிங்கா சமூகத்தை பொறுத்தவரை ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டதாகும். அந்த ஒரு இறைவனுக்கும் உருவம் இல்லை,

நாங்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல..

லிங்கா சமூக மக்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் லிங்கா சமூக மக்கள் வாழ்கிறார்கள்.

லிங்கா சமூகம் இந்து மதத்தின் ஒரு பிரிவாக கூட இருந்ததில்லை, மாறாக எதிர் எதிர் கொள்கையில் உள்ள கொள்கையாகும்.

எனவே லிங்கா சமூகத்தை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பிரம்மாண்டமான பேரணியை நடத்துகிறோம். என்றார்கள்...

தமிழக விவசாய நிலங்களை நாசமாக்க மேலும் 45 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க தமிழக ஊழல் எடப்பாடி அரசு அனுமதி...


இதனை எதிர்த்து போராடினால் மக்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற மிரட்டல்...

எதற்காக அக்காலத்தில் தமிழர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பேணிப் பாதுகாத்து வாழ்ந்தனர்?


கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.

அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது....

அதனால் தான் தமிழர்கள் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக்காத்தனர்...

ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெருங்காப்பியங்கள்...


சிலப்பதிகாரம்:

சிலம்பு என்பது மகளிர்அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு).

மணிமேகலை:

ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இக்காவியம் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும்.
இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு).

குண்டலகேசி:

குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல்அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு).

வளையாபதி:

வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)

சீவகசிந்தாமணி:

சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும்.

மணிக்கல் - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)...