17/08/2021

மாதுளையின் மகத்துவம்...

 


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

இவனை லாம் நம்பி ஓட்டு போட்டதுக்கு தான் ஆப்கன் மக்கள் அனுபவிக்குறாங்க...

 


மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?

 


மின்சாரத்தின் அருமை, மின்வெட்டு நேரமான இந்தக் கோடைகாலத்தில் நமக்கு நன்கு தெரியும். மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?

அதிகளவிலான மின்சாரத்தைப் பெற நாம் `ஜெனரேட்டர்’ எனப்படும் மின்னாக்கிகளைப் பயன்படுத்துகிறோம்.

மின்கலங்களில் இருந்து நம்மால் மிகக் குறைவான மின்சக்தியைத்தான் பெற முடியும்.

மின்னாக்கிகளில் எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

பெரும் மின்னாக்கிகளை இயக்க `டர்பைன்கள்’ பயன்படுகின்றன.

உலகில் மூன்றில் இரண்டு பங்கு மின்நிலையங் களின் மின்னாக்கி களில் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மற்றவற்றில், டர்பைன்களைச் சுழலச் செய்ய நீர் பயன்படுகிறது.

இவற்றை நீர்மின் நிலையங்கள் என்கிறோம்.

சில மின்னாக்கிகள், பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. சில பண்ணைகளில் காற்று டர்பைன்களை பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக இருக்கும் மின்நிலையங்களில், கொதிகலன்களை எரிபொருளை எரித்துச் சூடாக்கி, அதிக அழுத்தத்தில் நீராவியை உண்டாக்குகிறார்கள்.

வெளியேறும் நீராவி, டர்பைனை சுழலும்படி செய்கிறது. மிகப் பெரிய நீராவி டர்பைன் மின்னாக்கிகள், 500 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்னாற்றலை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்னாற்றல், 50 லட்சம் விளக்குகளை எரியவைக்கப் போதுமானதாகும்.

ஒரு மின்நிலையத்தில் இதைப் போன்ற பல டர்பைன்கள் இருக்கும்.

கொதிகலன்களை வெப்பப்படுத்த எல்லா வகையான எரிபொருட்களையும் பயன்படுத்துகிறார்கள்.

பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எல்லா மின்நிலையங்களிலும் எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட்டது.

இன்று நிலக்கரியை பெரும் துண்டுகளாக எரிக்கப் பயன்படுத்துவதில்லை.

மாறாக, அதை மென்மையான தூளாக்கிப் பயன்படுத்துகிறார்கள், நீர் மின்நிலையங்கள், உயரத்தில் இருந்து விழும் நீரின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

மேலிருந்து விழும் நீர், நீர் டர்பைன்களை சுழலச் செய்கிறது.

டர்பைன்கள் மின்னாக்கிகளை சுழலச் செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

உலகில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய மின்திட்டங்கள் எல்லாம் நீர்மின் திட்டங்கள்தான்.

பல மின்நிலையங் களில் எண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வாயு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

எளிதில் மின்சாரத்தைப் பெற இன்று டீசல் என்ஜின்களைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரண நீராவி டர்பைன்களை இயக்க முதலில் அவற்றை குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடுபடுத்த வேண்டும். ஆனால், டீசல் என்ஜின்களை உடனே இயக்க முடியும்.

அணுமின் நிலையங்களில், நீரை வெப்பப்படுத்தி நீராவி ஆக்குவதற்கான வெப்பத்தை அணுக்கரு உலையிலிருந்து பெறுகிறார்கள். அதன்பின் நீராவி, டர்பைனை இயக்கி மின்சாரத்தைக் கொடுக்கிறது.

அணுக்கரு உலையில், அணு உட்கரு சிதைவடைவதால் ஏராளமான வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. உட்கருவை ஒரு கட்டுப்பாடான நிலையில் சிதைவடையச் செய்து சீரான வெப்பத்தைப் பெறுகிறார்கள்.

அணுமின் நிலையத்தில் சில அடிப்படை அமைப்புகள் இருக்கின்றன.

அவை, அணுக்கரு உலை, உயிரியல் தடுப்பு வெப்ப மாற்றிகள் மற்றும் மின்னாக்கி ஆகும்...

ஒ... இதற்கு பெயர் தான் காதலா..?

 




என் தனிமையில்...

பேசிய வார்த்தைகளை
எல்லாம் பல முறை
பேசி பார்த்து கொள்கிறேன்..

எனக்குள்ளே...

நீ பேசாத தருணத்தில்...

தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்...

 


ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல் பட்டுவந்தது.

அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்!

அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து, யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.

குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.

மூன்று கால்களில் நிற்பது, முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன..

ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்து விடுகிறான்..

அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை.. அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.

அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது.

சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.

அவர்கள் மருந்து, மாத்திரைகளை கொடுக்கிறார்கள். ஆனாலும், அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை..

அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், யானையை நான் குணப்படுத்தட்டுமா? என்று கேட்கிறான்..

அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று, அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்..

யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.. உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது..

சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே அப்படி என்னதான் சொன்னீர்கள்? என்று கேட்டார்.

அந்த வழிப்போக்கன், இந்த யானை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது..

யானைப்பாகன் தமிழில் பேசி அதை பராமரித்து வந்தான்.

பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.

நானும் தமிழகத்தில் இருந்து வருகிறேன்.. அதனால் யானைக்கு என் தமிழ் மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவ ுதான்  என்றான்..

ஒரு யானைக்குக் கூட அதைப் பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது..

ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.

மரபும், தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை..

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது..

ஆனால், இங்கே மட்டும் தான் அது நடக்கிறது..

இங்கே தாய்மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்..

ஆனால், அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக் குறியே..

நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்..

அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும், அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்...

பாஜக மோடி எனும் தரித்திரம்...

 


அன்றாடம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் உருட்டுகள் 😉

 


எப்படி இருக்கீங்க? : i am fine 😂 

காய்கறி கடைக்காரர் : காலைல பறிச்சு வந்தது சார்…😁

டீக்கடைகாரர் : இப்ப போட்ட வடை தான் சார்..😂

மெடிக்கல் ஷாப்காரர் : பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..😂

சேல்ஸ் ரெப் : இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்..😂

மீடியா : ஆறே நாளில் சிகப்பழகு, அமேசான் காட்டின் மூலிகையில் தயாரானது..😂

கண்டக்டர் : வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்…😂

பள்ளிக்குழந்தை : வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா…😂

நண்பன் : கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா…😂

ஜவுளிக்கடை: பனியனை தண்ணில போட்டாலே உங்க சைசுக்கு சரியாக வந்துவிடும்..😂

கணவன் மனைவியிடம் : உன் சமையல் சூப்பரா இருக்கு😂

கடைசியா… உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது.. 

மனைவி கணவனிடம் : உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு.😂

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)...

 


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1) மூட்டழற்சி (osteo arthritis) : இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2) முடக்குவாதம் (rheumatoid arthritis) :  இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.

பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்...

New world order...

 


வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம்...

 


பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி (BOOMERANG) வீச கற்றுக் கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் வெல்ஷ்.

1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.

அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர்.

பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.

வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.

இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,

தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூஜைக்குரிய ஆயுதமாக இருப்பதாக சொல்கிறார்கள்...

இந்து என்ற சொல்... பிராமணர்களை இழிவு படுத்த வெள்ளக்காரனால் அறிவிக்கப்பட்ட சொல்...