அவர் அவிழ்த்து விடுகிற பீலா கதைகளை நீங்கள் நம்பினால்... அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்..???
- வங்கி மற்றும் EMI நிதி நிறுவனங்கள்...
கடந்த வருடம் இதே நாளில்... ஊரடங்கை அறிவித்த மோடி... 3 மாதத்திற்கு யாரும் EMI தொகைகளை செலுத்தவேண்டாம். அதை மத்தியஅரசே பார்த்துக்கொள்ளும் என்று அறிவித்து இருந்தார்.
என்றாலும் கூட அதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லாததால்... முதல்மாத தொகை 1,950ஐ செலுத்திவிட்டேன்.
பிறகு மற்றவர்கள் யாரும் பணம் கட்டவில்லையே.. என்று அடுத்த 2மாதங்களுக்கான தொகை 3,900ஐ கட்டாமல் விட்டுவிட்டேன்.
நிதி நிறுவனங்களும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு... அதற்கு அடுத்த அடுத்த தவனைகளை கேட்டு வீட்டிற்கே வந்து வசூலித்துச் சென்றனர்.
எனக்குள் ஒரு அளப்பறிய மகிழ்ச்சி....!
இந்த மோடி பரவாயில்லையப்பா... ஏற்கனவே 20ஆயிரம் கோடி'யை ஒதுக்குவதாக கூறி நம்மை ஏமாற்றி விட்டாலும்... இந்த EMIஐ தொகையை அவரே செலுத்திவிட்டாரே என்று.....
கடந்த ஒரு வருடமாக இப்படி... சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த போது...
இன்று காலை வீட்டுக்கு வந்த EMI நிதி நிறுவன வசூலிப்பாளர்கள்... வழக்கமான EMI ₹1,950ஐ வாங்கிக்கொண்டு...
அப்புறம் அந்த பாக்கி தொகை ₹5,900ஐ எப்போ கட்டுவீங்க?
உடனே கட்டிடுங்க...
இல்லேனா உங்க OD ரேட்டிங்கில் மார்க்கை குறைத்துவிடுவோம்.
அப்புறம் உங்க ஆதார் கார்டை காட்டி நீட்டி நீங்க எங்கயுமே கடன் வாங்க முடியாது பார்த்துக்கோங்க என்றார்..!
என்னப்பா... இது புதுசா கதை சொல்றீங்க?
நாங்க எதுக்கு 5,900 கட்டனும் என்று கேட்டதற்கு....
போன வருசம் 2மாத EMI செலுத்தாத தொகை 3,900 + அதற்கான அபராத வட்டித் தொகை 2,000 என்று உங்க கணக்கில், நாங்க இப்போ புதுசா சேர்த்து இருக்கோம் என்றார்..!
அதான் அந்த பணத்தை கட்ட வேண்டாம்னு பிரதமர் மோடி'யே சொல்லியிருந்தாரே...??
அவரு அந்த EMI தொகையை எங்களுக்கு தரலேனாலும் பரவாயில்லை, அதற்கான வட்டி தொகையை கூட அவரு எங்களுக்கு, அந்த மாதமே தரலை. அந்த வட்டிதான் இப்போ 2,000ரூபாயாக வளர்ந்து விட்டது, மோடியோட பேச்சையெல்லாம் நம்பி EMI கட்டாமல் விட்டது நீங்கதான்.
எனவே வட்டியும் முதலுமாக உடனே பணத்தை செட்டில் பண்ணுங்க.. இல்லேனா.. வேற எங்கயுமே நீங்க கடன் வாங்க முடியாதபடி OD ரேட்டிங்கை மைனஸ் பண்ணி விட்டுடுவோம் ஜாக்கிறதை என்று.. சொல்லிவிட்டுப் போகிறார்.
ஹலோ... ஒரு நிமிஷம் நில்லுங்க...
முடிஞ்சா OD ரேட்டிங்கை மைனஸ் பண்ணுங்க நானும் அதை பார்த்துவிடுகிறேன்..!
உங்களுக்கு தரவேண்டிய 2மாத EMI தொகையை மட்டும்தான் என்னால் தரமுடியும், அதற்கான அபராத வட்டியெல்லாம் என்னால் தரமுடியாது என்று... நாங்கள் சவுண்டு விட....
உங்களுக்காக'த்தான் நாங்களும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்..
ஒருவேலை அந்த அபராத தொகையை அரசு எங்களுக்குச் செலுத்திவிட்டால் உங்களுக்கு பிரச்சணை இல்லை, இல்லேனா அதை நீங்கதான் தரனும் என்று கூறிவிட்டு போய்விட்டார் அந்த வசூலிப்பாளர்..!
மேலே சொன்ன அந்த நிதி நிறுவனம் ஏதோ ஒரு லோக்கல் கம்பெனி அல்ல... இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான L&T நிறுவனம்.
இப்படித்தான்... தொழில் வளர்ச்சிக்காக 20ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்று மோடி அறிவித்தவுடன், ஏற்கனவே வங்கியில் நாங்கள் வாங்கியிருந்த 90ஆயிரம் தொழில் கடனை உடனடியாக முடித்துவிட்டு.....
இரண்டாம் தவனையாக 1லட்சம் கேட்டு விண்ணப்பித்தபோது.. மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் IOB வங்கி இனி கடன் தரும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லையென்று சொல்லி ஏமாற்றிவிட்டது.
தொழில் வளர்ச்சிக்காக...
20ஆயிரம் கோடியை மோடி ஒதுக்கி இருக்கிறாரே என்று நாங்கள் கேட்டபோது...
மோடி எந்த பேங்கின் மேனேஜாராக இருக்கிறார் என்று தேடிப்பார்த்து அந்த பேங்கிலேயே போய் தொழில் கடன் கேளுங்கள், உடனே தூக்கி கொடுப்பார், ஆனால் இந்த கிளியனூர் வங்கிக்கு நான்தான் மேனேஜர், எனவே என்னிடம் பணம் இல்லாததால் உங்களுக்கு கடன் தரமுடியவில்லை, என்று சொல்லிவிட்டார்.
மூன்று மாத EMI தெகையின் வட்டியையாவாது... மோடி அரசு அன்றே செலுத்தியிருந்தாலும்... அந்த வட்டி இப்படி குட்டிமேல் குட்டி போட்டு குடும்பத்தோடு வந்து நின்றிருக்காது,
அந்த வட்டியை இனி மக்கள் கட்டினாலும், அரசே கட்டினாலும்.. பொருளாதார இழப்பு என்னவோ இந்தியாவுக்குத்தான்.!!
நானும் என் வயதில்... எத்தனையோ பிரதமர்களை பார்த்துவிட்டேன்..!
இப்படி விதவிதமாக வடை சுடுவதையே தனது பிழைப்பாக கொண்ட ஒரு பிரதமரை இப்பதான் பார்க்கிறேன்..!!
- Abubakkar Gpm