02/07/2021
நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.
பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.
ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..
1.சாதிலிங்கம்.
2.மனோசிலை.
3.காந்தம்.
4.காரம்.
5.கந்தகம்.
6.பூரம்.
7.வெள்ளை பாஷாணம்.
8.கௌரி பாஷாணம்.
9.தொட்டி பாஷாணம்.
இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.
நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.
நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.
பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.
இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.
இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்து விடும்...
என்னால முடிஞ்சது...
ஏதேதோ சொல்ல
நினைக்கிறேன்...
ஏதேதோ சொல்ல
வருகிறேன்...
ஆனால் முடியவில்லை...
ஏன்னா...
பல்வலிங்க........
ஆஆஆஆஆஆ....
😃😃😃🤣
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்
பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...
மரணமே என்னை அழைத்துக்கொள்...
உனக்குள்ளும் காதல் வந்தபோது
நீ எனக்கே சொந்தமாய்...
உனக்கு
பசி வந்தால்...
உன் கன்னத்தில்
முத்தமொன்று கேட்பாய்...
உறங்கும் நேரத்தில் தலையணை
நானே என்று அனைத்து கொள்வாய்...
உனக்கு சோகம் என்றால்
என்தோளில் ஆறுதல் தேடுவாய்...
வெட்கத்தையும் அச்சத்தையும்
என்னிடமே உணர்ந்தேன் என்றாய்...
நீ உடுத்தும் ஆடையை கூட
என்னிடமே விருப்பம் கேட்பாய்...
என் மகிழ்ச்சியிலும் சோகத்திலும்
நீ எனக்கு மடித்தந்தாய்...
நமக்குள் ஏற்பட்ட
பிரிவுக்கு
காரணம் தெரியவில்லை...
என்னிடம் நீ
சொல்லாமலே பிரிந்துவிட்டாய்...
என் இதயம் உடைந்தது
என் வாழ்வும் இருண்டு போனது...
ஒவ்வொரு நாளும்
முடியாத பொழுதாகவும்...
விடியாத
இரவாகவும் நீள்கிறது...
நமக்குள்
ஏற்பட்ட இந்த பிரிவில்...
காத்திருக்கிறேன்...
மரணமே என்னை அழைத்துக் கொள்...
சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
குண்டலினி யோகம்...
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்...
காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்...
புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும்..
ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு.
அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்..
மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள்.
அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது.
உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.
அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது.
பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது.
இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.
ஆக்கினை சக்கரம் : உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.
அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.
ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.
புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.
தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.
தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.
மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.
ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...
புற்று நோயைத் தடுக்கும் வாழை இலைச் சாப்பாடு...
நம் அடையாளங்களில் ஒன்றான வாழை இலைச் சாப்பாடு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனா நம்புவீங்களா?. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான நம் சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை எண்ணி நம் முன்னோர்களின் அறிவியலை நினைத்து நம்மை மீண்டும் ஒருமுறை வியக்க வைக்கிறது.
சமீப காலமாக க்ரீன் டீ அருந்துவது ஃபேஷனாக உள்ளது, க்ரீன் டீயில் இருக்கும் Epigallocatechin gallate (EGCG) போன்ற பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிக அளவில் உள்ளன. இது பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது. இன்று பலரின் பயமாக இருக்கும் நோய்க்கு அன்றே தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த இலையை நேரடியாக உண்பது நம் ஜீரண சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகளில் சில:
பெரும்பாலும் ஆண்களுக்கு வரும் புரோசுட்டேட் புற்றுநோய் எனப்படும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயைத் தடுக்கும் பாலிபினால்ஸ் (Polyphenols) வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அபரிவிதமான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant) இருப்பதால் பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
வாழை இலை ஒரு இயற்கை கிருமி நாசினி, இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சு தன்மையை போக்குவதுடன் நம் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
நாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பழமையின் அரிய நன்மைகளை மறந்து இயற்கையை பாழ்படுத்தாமல், மூடநம்பிக்கையை அகற்றி அதில் பொதிந்திருக்கும் ரகசியங்களைக் கண்டு கடைப்பிடிக்கலாமே.. நல்ல விஷயங்களை ஏத்துகிறது நல்லது தானே. இயற்கையான முறையில் வளர்ந்த வாழை இலைக்குதான் இத்தனை மகிமையும், பேப்பர் வாழைக்கு இல்ல...
உன்னை மறப்பது எப்படி சொல்லிவிட்டு போ...
போதைக்காக
மது அருந்தவில்லை
நான்...
சில மணித்துளிகள்
உன்னை மறக்க
மது அருந்துகிறேன்...
மது கோப்பையிலும்
உன் உருவம் நிழலாடுகிறதே..
அதை மீறி மது அருந்தினாலும்
என் உதடுகள் உன் பெயரையே
உச்சரிக்குதே..
என்ன செய்ய உன்னை மறக்க...
உனக்கு மட்டும்
இது எப்படி சாத்தியம்
அதையாவது எனக்கு சொல்வாயா...
திமுக செந்தில் பாலாஜி Vs அணில்...
செந்தில் பாலாஜி : கம்பிய புடிச்சு இழுத்தியா..
௮ணில் : ௭ன்ன கம்பிய புடிச்சு இழுத்தியா..
ஏன் தம்பி ஓடுற கரண்டு கம்பிய புடிச்சு இழுத்தியா...
௭ன்ன ஓடுற கம்பிய புடிச்சு இழுத்தியா..?
தொடரும்... 😀
என்ன செய்ய போகிறேன்...
என் கண்கள் இரண்டும்
ஈரமானது
அவள் என்னைவிட்டு
தூரமானதால்...
நானே எனக்கு
பாரமானேன்
அவள் வேரொருவனுக்கு
தாரமானதால்...
உன் நினைவுகளை அழித்துவிட்டு போ...
என் இமைகள் இமைக்கும்
நேரத்தில் கூட...
உன் நினைவுகள் ஈரமாய்
கசிந்துகொண்டுதான் இருக்கிறது...
தினம் இரவில் வரும் கனவுகளில்
உன் நினைவுகள் மட்டுமே...
விடை தெரியவில்லை
உன்னை வெறுக்க...
கைபேசியை
எடுக்கும் போதெல்லாம்...
சிரித்த முகத்துடன் நீ
என்னருகில் இருக்கும் புகைப்படம்...
பொங்கி வரும் காவிரியாய்
என் கண்களில் வெள்ளம்...
நிலையான நினைவிலும்
நிலையில்லா கனவிலும்...
உன்னை நினைத்து
என் மனம் தவிக்கிறது...
இருட்டான
என் இதய அறையில்...
துடிப்பாக இருப்பது
நீ மட்டும் தானடி...