05/11/2018
திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...
இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் கன்னட ஈ.வெ.ராவினால் செய்யப்பட்டதாம்..
உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.
இப்படித் தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.
அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.
மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.
வழைமை போல் திராவிடக் கட்டுக்கதையே இது...
இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.
அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி..
என்னவொரு கட்டுக் கதையப்பா..
ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?
தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்!
திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு..
தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...
திராவிடத்தை வீழ்த்துவோம்...
100 வருட திராவிட இயக்கம்
60 வருட திராவிட ஆளும் கட்சி எதிர்கட்சி, மூன்றாம் கட்சி என்று முழு ஆட்சி அதிகாரத்தில் இன்றும் இருந்து கொண்டு....
எத்தனை பிராமணர்களை திராவிடம் அழித்தது ?
எத்தனை தமிழர்களை அழித்தது?
1. 3 லட்ச்சம் தமிழர்கள் இனப் படுகொலை, 1000 தமிழ் மீனவர்கள் படுகொலை..
2. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஸ்டிரா, பர்மா, மலேசியாவில் தமிழர்களுக்கு அடி உதை..
3. தேவிகுளம், பீர்மேடு, காலகஸ்தி, திருப்பதி, சித்தூர், கோளார், வெங்களூர்.. ஆயிரக்கணக்கான தமிழர் நிலம் திராவிடர்களின் அபகறிப்பு..
4. கோடிக் கணக்கான தமிழர் நீர்நிலவளத்தை ஊழல், திருட்டு திராவிடர்களால் கொள்ளை, காவேரி, முல்லை, கிருஸ்ணா, கூடங்குளம், கச்சதீவு, மீத்தேன், பாறை எரிவாயுவு என்று நூற்றுகணக்கான ஆபத்து ?
தமிழர்களே சிந்தியுங்கள்....
திராவிடத்தையும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும் காப்போம் என்பது தெலுங்கு கன்னட மலையாளி ஆட்சியை காப்பதற்க்கா ?
அல்லது தமிழர் ஆட்சி அதிகார வளர்ச்சியை அழிப்பதற்க்கா ?
கன்னட ஈ.வெ.ரா அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...
ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது..
ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால்..
அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்..
ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்..
- ஆதாரம்: விடுதலை 02.03.1969..
வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதை விட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?
மேலும்.....
விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது.
முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.
இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..
- ஆதாரம் - தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973)..
கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...
மனதை ஒருமுனைப்படுத்துங்கள்...
நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அந்தக் கருவிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த முடிவது தான் உங்கள் எஜமானத்துவத்திற்கு அத்தாட்சி என்பதை உணருங்கள்.
உடலை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். அது பழுதடைந்து விட்டால் மனதில் உடலைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் பலமாக எழ வாய்ப்பு குறைவு. உதாரணத்திற்கு கடுமையான தலைவலியோ, பல்வலியோ, வேறு பெரிய உபாதைகளோ இருக்கும் போது வேறு எதைப் பற்றியாவது சீரியசாக எண்ணி செயல்பட முடிகிறதா என்று பாருங்கள். அந்த உபாதைகள் சரியாகும் வரை அது முடியாது. எனவே உடல் பாதிக்கப்படும் போது மனமும் நாம் நினைத்தபடி இயங்க மறுக்கிறது என்பதால் இரண்டுமே நமக்கு எண்ணியபடி பயன்படாமல் போகின்றன. எனவே உடலை நமக்கு இடைஞ்சல் தராத அளவுக்காவது நல்லபடி வைத்துக் கொள்வது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு மிக முக்கியம்.
அடுத்ததாக மனம். சூரிய ஒளியை லென்ஸ் மூலமாக காகிதத்தின் ஒரு புள்ளியில் குவிக்கும் போது அந்தக் காகிதம் பற்றி எரிவதை பெரும்போலோர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம். மனம் என்னும் கருவி சக்தி வாய்ந்ததாக மாறுவது நாம் விரும்பும் விதத்தில் அதை ஒருமுனைப்படுத்தும் போது. மனம் அதற்குப் பிடித்த செயலில் ஒருமுனைப்படுவது பெரிய விஷயமல்ல. பிடித்த சினிமா பார்க்கும் போது, நாவல் படிக்கும் போது, இசையைக் கேட்கும் போது எல்லாம் மனம் தானாக ஒருமுனைப்படும். பிடித்த அந்தக் காரியம் முடிந்த பிறகு தான் மனம் வேறு விஷயத்திற்கு நகரும். அப்படி பிடித்த விஷயத்தில் தானாக ஒருமைப்பட முடிந்த மனத்தை நம் கட்டளைப்படி நாம் சொன்ன விஷயத்தில் ஒருமைப்படுத்த முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோர் பெற வேண்டிய அடுத்த பயிற்சி.
ஏதாவது ஒரு சாதாரண பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தினம் பார்க்கக்கூடிய பொருளாக இருக்கட்டும். உதாரணத்திற்கு பென்சிலை எடுத்துக் கொள்வோம். இனி அடுத்த சில நிமிடங்களுக்கு பென்சிலைத் தவிர நீங்கள் வேறு எதையும் நினைக்காமல் பென்சிலைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்கட்டும். சில வினாடிகளுக்கு மேல் அதில் கவனத்தைக் குவிப்பது ஆரம்பத்தில் முடியாத செயல். மனம் பென்சிலில் கவனம் வைக்க என்ன இருக்கிறது என்று சொல்லி சுவாரசியமான மற்றவற்றிற்குச் செல்ல அலைபாயும். ஆனால் மனதை திரும்பவும் பென்சிலிற்கே கொண்டு வாருங்கள். அதன் உருவம், நிறம், அளவு, உபயோகங்கள், என்று மனம் பென்சிலை சார்ந்த, பென்சிலை மையமாகக் கொண்ட விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள். சில வினாடிகளில் மனம் இதைப் பற்றி முழுவதும் நான் சிந்தித்து முடித்து விட்டாயிற்று. இனி சிந்திக்க வேறொன்றும் இல்லை என்று சொல்லும். ஆனாலும் விடாமல் பென்சிலுக்கு மனதைக் கொண்டு வாருங்கள். உங்கள் முழுக் கவனமும் பென்சிலைப் பற்றியதாக, பென்சிலிலிலேயே இருக்கட்டும். ஓரளவு மனம் ஒருமுனைப்பட ஆரம்பித்த பின் பயிற்சி நேரத்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே வாருங்கள். புதிது புதிதாக பென்சிலைப் பற்றிய அதிக விவரங்களை அறிய ஆரம்பிப்பீர்கள்.
கவனிக்கும் திறனின் முக்கியத்துவத்துவம் அறிய ஒரு நிகழ்வைச் சொல்லலாம். தாவரம், விலங்கு முதலான உயிரின ஆராய்ச்சியாளரான லூயி அகாசிஸ் (Louis Agassiz) என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்கியவர். அவரிடம் கற்ற மாணவர்கள் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதிலும், நுண்ணிய அறிவிலும் வல்லவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரிடம் கற்க ஒரு புதிய மாணவன் வந்தான்.
அகாசிஸ் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்கவாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து அகாசிஸைத் தேடினான். அவரைக் காணவில்லை.
மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த அகாசிஸிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அகாசிஸ் திருப்தியடையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த அகாசிஸிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித்தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.
அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். ”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”.
பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.
மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.
எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.
அடுத்ததாக மிக முக்கியமான வேறொரு பயிற்சியைப் பார்ப்போம்.
மேலும் பயணிப்போம்....
முடி அடர்த்தியா வளரணுமா?
வீட்டிலேயே இருக்கு அருமையான மருந்து..
இவ்வுலகில் தலைமுடி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்களே இருக்க முடியாது.
ஆனால், இன்றைய அவசரமான காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மிகுந்தளவில் மாசடைந்துள்ளது.
இதனால் ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை சந்தித்து, முடியின் அடர்த்தியை இழந்து இளம்வயதிலேயே வழுக்கை வந்துவிடுகிறது.
இதைத் தடுக்க பல ஹேர் லோசன்களை உபயோகப்படுத்தியும் பயனில்லாமல் மனமுடைந்து போயிருப்போம்.
ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு போடும் ஹேர் மாஸ்க்குகளில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு கிடைக்கிறதா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.
இயற்கை பொருட்கள் கொண்டு வீட்டிலேயே ஹேர் லோசன்கள் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்..
ஆரஞ்சு/எலுமிச்சை - 1
வாழைப்பழம் - 1
பால் -2 லிட்டர்
அலுமினியத்தாள்
செய்முறை..
எழுமிச்சை/ ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து கொண்டு வாழைப்பழம் மற்றும் பாலை அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு, அரைத்து வைத்திருப்பதை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக 3 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, தலையில் அலுமினியத் தாளை சுற்றி குறைந்தது 30 நிமிடம் ஊற விட வேண்டும்.
30 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி குளிக்க வேண்டும்.
இவ்வாறு வாரம் 2 தடவை செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்...
திராவிட புரட்சி இது தான்...
அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....
அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...
ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாய மணம் முடித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்றுக் கொள்ளவும் இல்லை ஏன் மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..
திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...
பாஜக மோடி மற்றும் அமித்ஷா வின் கொலைகள்...
அமித் சா - மோடி ரத்த கறை பக்கம்...
Sameer Khan (shot dead Sep 2002)
Sadik Jamal (killed 2003)
Ishrat Jahan and three others (shot dead 15 June 2004)
Sohrabuddin Sheikh (shot dead Nov 2005)
Sheikh's wife Kausar Bi (killed in Vanzara's village)
Tulsiram Prajapati (killed in 28 December 2006)
இவர்களெல்லாம் யார் தெரியுமா? மோடி ஆட்சியில் D G Vanzara , குஜராத் போலீஸ் டிஐஜியாக இருந்த போது நடந்த போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள்.
இவர்களை கொன்ற போது இவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு வந்தவர்கள் என்று சொல்லி மறைக்க பார்த்தார்கள் ஆனால் இது திட்டமிட்ட கொலை என்று பின்னர் தெரிய வந்தது.
இந்த வன்சாரா மோடியின் செல்ல பிள்ளை. அமித் சா நினைப்பார் வன்சாரா செய்வார் என்று குஜராத் பேசியது.
இப்போது அதற்கென்ன என்கிறீர்களா ? குஜராத்தில் ஹரேன் பாண்டியா என்ற அமைச்சர் இருந்தார். மோடிக்கு நிகரான மக்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. நல்லவர் , நேர்மையானவர் என்ற பெயரும் இருந்தது.அவர் பட்டப்பகலில் நடை பயிற்சியின் போது கொல்லப்பட்டார். அந்த கொலையை செய்தது மோடியும், அமித் சாவும் என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி குற்றம் சாட்டினார்.
இத்தனை வருடம் கழித்து சுராபுதின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சாட்சியாளர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
அதில் சுராபுதின் ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்பு இருக்கிறது. அதை அவர் என்னிடம் சொன்னார். அவரை அந்த கொலையில் ஈடுபடுத்தியது டிஐஜி வன்சாரா என்றும் சொல்லியிருக்கிறார்.
வன்சாரா ஏற்கனவே ஒரு முக்கிய விடயம் சொல்லியிருக்கிறார். என்னை விசாரத்தால் என்னை வழி நடத்திய ஆட்சியாளர்களையும் விசாரிங்க என்று..
https://www.news18.com/news/india/sohrabuddin-killed-haren-pandya-witness-tells-trial-court-1
கேரளா வில் பாஜக வின் கேவலமான மத வெறி அரசியலை இப்போ கழுவி ஊத்தப்பட்டு வருது. அது என்ன?
ஐயப்ப பக்தர் நெஞ்சி மேல(ஐயப்ப மாலை) ஷூ காலோடும் லத்தியால் அடிப்பது போல், மற்றும் கத்திய வைத்திருப்பது போல் போட்டோ சங்கிகளால் ஷார் செய்யப்பட்டு வந்தது. ஏன்னா மதத்தை வைத்து கேரள கம்யூனிச அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்ப.
ஆனா அப்புறம் தான் தெரிந்தது அது போட்டோ சூட்டிங் செய்து எடுக்கப்பட்டது என்று. புகைப்படத்தில் இருக்கும் நபர் பெயர் "Rajesh Kurup" RSS இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
எப்படி மாட்டினார்கள் னா அந்த போட்டோல "Mathu Krishnan photography" னு கேமரா மேன் பெயர் மற்றும் ஸ்டூடியோ பெயர் கொண்ட logo நீக்க மறந்துட்டானுங்க மூன்றாவது போட்டோ வட்டம் போட்டுருக்கு பாருங்க. அப்புறம் அந்த கேமரா மேன விசாரிக்கபட்டதும் உண்மை வந்துள்ளது.
இதுல இன்னொரு கவனிக்க வேண்டிய விடயம் என்னன்னா பெண்கள் ஐயப்ப கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது oct 17 ம் தேதித்தான் ஆனா சங்கி குரூப் oct 6ம் தேதியே திட்டமிட்டு இந்த போட்டோக்களை எடுத்திருக்காணுங்க.
அரசியலை வைத்து மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். கடவுள் நம்பிக்கை உள்ள அரசியல் பிழைப்புக்காக ஐயப்ப மாலை மீது கால் வைத்து போட்டோ எடுக்கிறார்கள்.
பெரும்பான்மை சாதாரண மக்களை ஏமாற்றி அவர்களை மத அடிப்படை வாதிகளாக மாற்றும் வேலை தான் இதுவும்.
இப்படித்தான் மதத்தை வைத்து பல fake பதிவுகள் பக்தாள்ஸ்களால் வாட்சப் FB னு ஷார் செய்யப்படுகிறது. சாதாரண மக்களும் ஏமாந்து இதை நம்பிவிடுவர்கள்.
மதங்களை வைத்து மக்களை ஏமாற்றுபவர்களை அம்பலப்படுத்துவோம்...
தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் - பாமக அறிக்கை...
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் ஆய்வாளர் உள்ளிட்ட 23 வகையான பணிகளில் காலியாக உள்ள 1199 இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் தொகுதித் தேர்வுகள் வரும் 11-ஆம் தேதி தொடங்க உள்ளன. இத்தேர்வுகள் உட்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து நிலை போட்டித் தேர்வுகளுக்குமான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப் பட வேண்டும். ஆனால், இப்போது அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல தாள்களுக்கு தமிழில் வினா தயாரிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும், அதனால் பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னையில் நேற்று தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் தொகுதி தேர்வு எழுதும் 6.26 லட்சம் பேரில் 4.80 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதற்கான முதனிலைத் தேர்விலோ அல்லது முதன்மைத் தேர்விலோ அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் தமிழில் கேட்கப்படாமல், ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்பட்டால் அது தமிழில் தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களுக்கு மிகக்கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தும். எந்தவொரு போட்டித் தேர்வாக இருந்தாலும் குறைந்தது 25 முதல் 30% மதிப்பெண்களுக்கு இந்த பாடங்களில் இருந்து வினா கேட்கப்படும். அந்த வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் அது தமிழை விருப்பப்பாடமாக எடுத்த 4.80 லட்சம் பேரின் வாய்ப்புகளை பாதிக்கும். மற்ற போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் தமிழில் விடைத்தாள் தர மறுப்பது நியாயப்படுத்த முடியாத சமூக அநீதியாகும்.
தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்குத் தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். தேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப் போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுவது இயல்பான ஒன்றாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கு எதிரான சதியாகவே தோன்றுகிறது. அண்மையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் பணிக்கான போட்டித்தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்பட்டது. விரைவில் நடைபெறவுள்ள கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் தொகுதி தேர்வுகளும் திட்டமிட்டு ஆங்கிலமயமாக்கப்படுகிறது.
தேசிய அளவிலான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்துகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் கூட தமிழில் தேர்வெழுதி இ.ஆ.ப. அதிகாரி ஆனவர் தான். அவ்வாறு இருக்கும் போது மாநில மொழியில் தேர்வெழுதுவதற்கான வினாத்தாள்களை தயாரிக்க முடியாதது அவமானம் ஆகும்.
பொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்போரில் பெரும்பான்மையினர் தமிழில் தேர்வெழுதவே விரும்புவர். ஆனால், அந்த வாய்ப்பைப் பறித்து ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி, அனைத்து போட்டித் தேர்வர்களையும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புவது தான் அந்த சதியாகும். போட்டித் தேர்வர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பணியாளர் தேர்வாணையம் தனியார் பயிற்சி நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கத் துடிப்பது நியாயமானதல்ல.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். எனவே, சொத்தைக் காரணங்களைக் கூறி ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக, அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுக்கான வினாத்தாள் முழுமையாக தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்...
தமிழகத்தில் அழிவது அமெரிக்காவில் வளர்கிறது...
இந்த காலத்திற்கு ஆங்கிலம் மட்டுமே போதும் என்று பெரும்பான்மையான தமிழர்கள் கருதி, தமிழை ஒதுக்கி வைத்து, தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பை அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே அழித்து கொண்டிருக்கிறார்கள்..
அதனால் தமிழகத்தில் தமிழ் மொழி அழியுது. அதே நேரத்தில் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி பயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது.
ஆனால் தமிழகத்தில் அழியும் தமிழ் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதை நான் சொல்லவில்லை அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நிறுவனமான என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது
Jun 30 2015, 9:10 am ET Tamil Language SchoolsOn the Rise in United States தமிழகத்தில் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது.
தமிழகத்தில் ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?
அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தமிழ் மீதான ஒரு வகையான அறுவருப்பு தமிழர்கள் மனதில் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது.
அதனால்தான் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மம்மி டாடி என்று சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறோம்.
ஆனால் அதே நேரத்தில் புலம் பெயர்ந்து ஆங்கிலம் பேச கூடிய நாடுகளில் வசிக்கும் மக்கள் தாய்மொழியின் அருமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர்
அது மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக அதிகம் இங்குள்ள குழந்தைகள் ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழக்த்தில் இருந்து வரும் ஆங்கிலம் அதிகம் தெரியாத தாத்தா பாட்டிகளிடையே பேசுவது கடினமாக உள்ளது.
தாத்தா பாட்டியை விரும்பாத குழந்தைகளே இல்லை. அதனால் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் தாங்கள் கற்றுதருவதைவிட ஏதாவது தமிழ் கற்றுக் கொடுக்கும் இடங்களில் படித்தால் மிக எளிதாக குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.
இதனால்தான் என்னவோ ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அநேக தமிழ் சங்கங்களும் அல்லது அங்குள்ள கோவில்களிலும் தமிழ் கற்று கொடுக்கப்படுகின்றன.
இப்படி கற்றுக் கொடுக்கும் குழுக்களில் 1998 ல் ஆரம்பிக்கபட்ட கலிபோர்னியா தமிழ் அகடமி மிக சிறந்த இடத்தை பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த பள்ளிகளில் தமிழ் பேசமட்டுமல்ல எழுத படிக்கவும் கற்று தருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இசை நடனம் நாடகம் போன்ற தமிழ் பண்பாட்டை போதிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து நடத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது..
California Tamil Academy was founded in 1998 in the Bay Area, and now has six branches, 40 affiliated schools http://www.catamilacademy.org/branches.html in 13 other states and two other countries, 5,500 students, and 700 volunteers including teachers and parents. California Tamil Academy provides academic and technical support to help those who want to start independent Tamil schools. Some public schools give students high school credit for studying Tamil at language schools.
இந்த நிலமை நீடித்தால் வருங்காலத்தில் தமிழகத்தில் வளரும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள அமெரிக்கா நோக்கி வந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை..
அது போல அமெரிக்கா குழந்தைகள் தண்ணி அடிக்க கற்றுக் கொள்ள தமிழகத்திற்கு தான் வர வேண்டி இருக்கும்... எப்படி ஒரு மாற்றம்...
இந்தியமா? திராவிடமா?
தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசிய மாயைகள் கட்டியமைக்கப் பட்டுள்ளன..
ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும்,
இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.
உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா?
இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும்.
முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குடும்பம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.
இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?
இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும்,
திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், தமிழர் மண் பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப் பட்டுள்ளது.
இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது.
இன்று இந்திய தேசியத்தை விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும்.
தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அழிவைத் தருவதாகும்.
இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின் மார்பையே அறுத்து விற்கும் கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.
இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன் குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை உண்டாக்கித் தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.
வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ, இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ, மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை.
கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.
மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.
இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.
இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர். இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது.
நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம், மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, வீரமணி, கிருட்டிண சாமி, இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.
ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.
அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.
கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார். தன் பேரன் தயானநிதிக்கு பாப்பாத்தியை தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.
மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார்.
புரட்சி புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல் நடத்துகிறார்.
திராவிட மடத்து பூசாரி வீரமணியோ செயலிலாதாவின் காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அம்மையாரின் காலில் தவம் கிடந்தவர்.
இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன் கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்!
என்னடா உங்கள் போர் உத்தி?
ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்!
தமிழனைப் பழித்தவன்,
தமிழ் மொழியைப் பழித்தவன்,
கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்!
தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணாநிதி உலகத் தமிழினத்தின் தலைவராம்!
தமிழரைச் சுரண்டி தமிழ் மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்.
தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்.
இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்.
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்.
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்.
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்.
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்.
சிந்திப்போம் தமிழர்களே..
தமிழால் ஒன்றுபடுவோம்.. தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..
தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அக நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்.. புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்...
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்...
நவம்பர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவழை வலுப்பெறும்; தென்தமிழக பகுதிகளில் கனமழை பெய்யும்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு.
மீனவர்கள் நவம்பர் 6,7,8 தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்.
தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி...
உலகத் தமிழினமே ஒன்றுபடுவோம்...
உலகத்தில் மொத்தம் 195 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....
அதில் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது...
ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....
வரும் காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்...
எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர்தேசம் அமைய போராடு....
இப்போது நாம் தமிழர்தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....
நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்.....
உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்....
நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்...
மனமும் நோயும்...
ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.
அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.
நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.
வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.
உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.
பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது.
உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.
புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர்.
ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள். வாழ்க வளமுடன்...
எது சிறந்த அரசியல்?
இங்கு நம் முன் வைக்கப்படும் அரசியல் தான் சிறந்தது என்று நம் மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது...
ஒவ்வொரு அரசியல்வாதியும் தன் கீழ் உள்ள உறுப்பினர்கள் தனித்து சிந்தித்து செயல்படகூடாது என்பதில் தெளிவாக தான் இருக்கிறார்கள்...
நாம் தான் அதனை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் தனித்தனி கட்சிகளின் சிந்தனைகளில் மூழ்கிவிட்டோம்...
சிறந்த அரசியல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெற வேண்டும்...ஆனால் இங்கு சூழல் அவ்வாறு கட்டமைக்கப்படவில்லை...
கட்சி தலைவன் கைசுழன்ற பக்கம் எல்லாம் கலவரம் செய்யும் அடியாட்களாகவே நீயும் நானும்...
கட்சி சார்ந்த கருத்தியலை விதைக்காமல் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை எவன் ஒருவன் விதைக்கிறானோ அவனே தலைவன் என்ற சொல்லாடலுக்கு தகுதியானவன்...
அப்படி இருந்தவர் ஒருவரே ,ஈழத்து அண்ணை மேதகு.வே.பிரபாகரன்... அவரை அடுத்து இதுவரை மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை விதைக்க எவரும் முற்றபடவில்லை...
(அவருக்கு பின் எந்த ஒரு அரசியல்வாதியும் ஈழத்தில் மக்களை ஒருமித்த கருத்தியலில் ஒருங்கிணைக்கவில்லை...)
மாறாக அவரின் கொள்கைகளை திருடி,அவரின் உருவ பட்ததை வைத்தே இங்கு பிழைப்பு நடத்தும் கட்சிகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்த வண்ணம் உள்ளன...
அரசியல் என்றுமே மக்களை கருத்தியலால் ஒன்றிணைய விடாது...
நாம் தான் ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணைய வேண்டும்...
இன்றைய இளையதலைமுறைதான் எதிர்கால அரசாங்கம்...
நாம் இன்று ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணைந்தால் எதிர்கால தலைமுறைக்கான விடியலை விதைத்து செல்லலாம்...
உடலுக்கு ஊட்டம் தரும் ஆளி விதை...
நாம் அன்றாட உணவுகளில் காய், கனி, இலை, பருப்பு, விதை போன்றவைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் உணவுகளாக பயன்படுத்தும் விதை வகைகளில் குறிப்பிடத்தக்கது, ஆளி விதை! ஆளி, கடுகு குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடி. 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.
ஆளி செடியின் விதையை ‘ஆளிவிதை’ என்று அழைக்கிறோம். இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது. சித்த மருத்துவ பாடல், இது உடலைத் தேற்றும் தன்மை கொண்டதாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும் என்றும் குறிப்பிடுகிறது.
மேலும் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கவைக்கும் ‘காமம் பெருக்கி’ என்றும் எடுத்துச் சொல்கிறது. ஆளி விதையில் கால்சியம், இரும்பு, போலிக்அமிலம், வைட்டமின் சி, கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் வாதத்தையும், கபத்தையும் சமன்படுத்தி, பித்தத்தை சரியான முறையில் இயங்கவைக்கிறது. இது சீரற்ற மாதவிடாயை சீர்செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறது.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும்.
ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.
ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பலப்படும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
ஒரு தேக்கரண்டி பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். வயிற்றுப்போக்கு சீர்படும். உடைந்த எலும்புகளை விரைவாக கூடவைக்கும் சக்தியும் ஆளிவிதைக்கு உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ஆளி விதை உணவுகளை கொடுக்கும் பழக்கம், பல்வேறு நாட்டு பழங்குடி மக்களிடம் உள்ளது.
ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவைகளோடு ஆளிவிதை பொடியை கலந்து சூரணம் தயாரிக்கலாம். இதனை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை சீர் செய்திட முடியும்.
அடிபட்டதால் உண்டாகும் வீக்கம், வலி மற்றும் சருமத்தில் உண்டாகும் அரிப்பிற்கு ஆளிவிதை பொடியை எலுமிச்சம் பழ சாற்றில் அரைத்து பூசலாம். ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ஆளி விதைக்கு உடல் எடையை குறைக்கும் சக்தியும் இருக்கிறது.
பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு எலும்புகள் உறுதியாக ஆளிவிதை பொடியை பாலில் கலந்து பருககொடுக்க வேண்டும். ஆளிவிதை பல்வேறு சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது...
கத்தி முனையில் செயின் பறிப்பு.. சிசி. டி.வியில் அதிர்ச்சி காட்சிகள்...
டெல்லியில், கடந்த 26 ஆம் தேதியன்று இரவில் தன் பேரக் குழந்தையின் கையை பிடித்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த இரு நபர்கள், திடீரென அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்று விட்டனர்.
சாதரணமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்மணியிடம் திடீரென கொளையன் கத்தியை காட்டி மிரட்டி தான் அணிந்து இருந்த செயின் மற்றும் வளையலை பறித்து சென்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, உயிர் பிழைத்தால் போதும் என குழந்தையை அழைத்து கொண்டு பயத்தில் வேகமாக நடந்து செல்வதை பார்க்க முடிந்தது...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
கெய்ரோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட 3,000ஆம் ஆண்டு வயதுடைய பண்டைய சுருள். ஒரு வினோதமான காட்சியை விவரிக்கிறது: ஒரு ஸ்பிங்க்ஸின் மேல் பிரகாசமானதாக வட்டு வடிவ பொருள் தறையிரங்குவது போல உள்ளது. இது உண்மையில் ஒரு வேற்றுகிரக பறக்கும் தட்டாக இருக்க முடியுமா?
பண்டைய எகிப்தியர்களின் கடவுளான "ரா". நட்சத்திரங்கள் வழியாக எகிப்தில் தரையிறங்கியதாகவும், ஒரு சக்திவாய்ந்த நாகரிகத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது.
கெய்ரோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 3000ஆம் ஆண்டு வயதான பாப்பிரஸ்ஸை. இந்த ரஃப் கப்பல் எவ்வாறு தோன்றியது என்பதைக் காட்டுகிறது. பிற பிற்போக்கு படங்களில் காணப்பட்ட பாரம்பரிய படகு போல இது இல்லை, அப்போது பண்டைய எகிப்தியர்கள் வானில் கண்ட "பிரகாசமான ஒளி கதிர்வீசும் ஒரு பறக்கும் தட்டு"! காட்சிகளால் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் நூல்களில் இவ்வாறு வரைந்து உள்ளனர்.
வெய்ன் ஹெர்ஷல் என்ற பண்டைய நாகரிகங்களின் நட்சத்திர தேவதை பூஜைகளை விளக்கும் ஒரு முற்றிலும் புதிய கருதுகோளை வழங்கிய "ஹிட்டன் ரெகார்ட்ஸ்" என்ற நூலின் தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். இந்த சித்திரத்தை எகிப்தின் சின்னமான விலங்கின் தட்டுக்குப் பின்னால் உள்ள இரகசியமாக வலியுறுத்துகிறார்.
எகிப்தின் வித்தியாசமான விலங்கியல் தட்டு உண்மையில் ஒரு பண்டைய பறக்கும் தட்டு என்று பரிந்துரை செய்த பல சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களை அவர் ஆதரிக்கிறார். ஆனால் இதை நிரூபிக்கும் பல சுருள்கள் காணாமல் போனது என்று நம்புகிறார். பாபிரஸ்ஸில் உள்ள ஒழுங்கின்மை என்பது சரியாக என்னவென்றால், சூரியனைப் போன்ற பிரகாசமான பறக்கும் தட்டு, ஒன்று நட்சத்திரங்களைக் கிழித்து கொண்டுவருகிறது.
மேலும் வெய்ன் ஹெர்ஷல் இங்கு நியாயப்படுத்த நிறைய சான்றுகள் இருப்பதாக கூறுகிறார். அது நட்சத்திரங்களிடமிருந்து வரும் ஒரு பறக்கும் தட்டு மட்டுமல்ல, ஆனால் பாபிரஸ் இன்னும் பிற மறந்த சின்னங்களுடன் ராக் குறிப்பிட்ட விண் நட்சத்திரத்துடன் நெருக்கமாக இருக்கும் விண்மீனைக் காட்டுகிறது. இங்கே நிறைய இருக்கிறது. வக்னெட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இன்னொரு முக்கிய விஷயம், டிஸ்க் தரையிறங்கியது. பண்டைய எகிப்திய பாபிரஸ்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு உண்மையான கப்பல்!
"இது ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுத்தும் ஒரு குவிமாடம் கொண்ட ஒரு தட்டு ... அது ஒரு முக்காலி போன்ற மூன்று கால்கள் மீது தயாராக உள்ளது. மேலும் வெய்ன் ஹெர்செல் ஒரு சிங்கத்தின் தலையை தெளிவாக விவரிக்கும் போது. ஒரு கல்லறையையும், ஒரு வளைந்த கதவும். சிங்க சிலையில் காணப்படுகிறது, அவை இப்போதும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும், ஸ்பிங்க்ஸின் தலையின் பின்புறத்தில் காணப்படுகின்றன என்றார்.
இந்த பாப்பிரஸின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வது பல ஆண்டுகளாக அறிஞர்களிடையே விவாதத்திற்கு உட்பட்டது. அது இன்னமும் விசித்திரமான நம்பிக்கையுடனான ஒரு வழிபாட்டு முறையாகவும், இன்னும் ஒரு மர்மமாகவும் விளங்குகிறது. முதலாவதாக, பூர்வ எகிப்து ஆரம்பத்தில் ஆரம்பிக்கத் தோன்றும் மரபணு pictoglyphs இன் குறைந்தபட்சம் ஐந்து வேறுபட்ட விளக்கங்களைக் கொண்டிருக்கிறது, எனவே முன்னோடிகள் கூட அதன் அர்த்தத்தை மறந்துவிட்டனர்.
"கிட்டத்தட்ட எல்லா பழங்கால நாகரிகங்களின் தெய்வங்கள் நட்சத்திர தொடக்கத்தோடு தான் இருந்தன. அந்த தெய்வங்களின் மக்கள். தரையில் நட்சத்திரங்கள் நிலைகளை குறிக்க பெரிய நினைவுச்சின்னங்களை உருவாக்கினர். மேலும் இந்த பறக்கும் வடிவங்கள் தரையிறங்கியிருந்தால். உண்மையில் பண்டைய எகிப்தின் மக்கள் இரவு வானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வணங்குகின்றன. வெய்ன் தனது ஆய்வு முடிவுகளில் நம்பிக்கையாக உள்ளார்., அது நம் மனித மூதாதையர்களிடமிருந்து நட்சத்திரங்கள் தோற்றுவிக்கும் ஒரு மிக சக்திவாய்ந்த நம்பிக்கையாக உள்ளது.
"3000 வருட பாப்பிரஸ் தான் ராட்சத கடவுளின்" ரா "என்ற அண்ட விலாசம், அவரது வானுலகம் எப்படி இருந்தது, அது எங்கே இறங்கியது ... இவை அனைத்தும் புராதன தொடக்கத்தின் ஒரு நன்கு அறியப்பட்ட எகிப்தின் ஆதியாகம சித்திரம் இது.
முந்தியவர்கள் நிச்சயமாக தங்கள் நட்சத்திர தெய்வங்களைப் பற்றி பொய் சொல்லவில்லை. அவர்கள் சூரியனை வணங்கினர் ...
ஆனால் அது நமது சூரியன் இல்லை...
Subscribe to:
Posts (Atom)