25/01/2022

நீல நிறமும் இரகசியமும்...

 


ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால்..

நீல நிறம் உங்களின் பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக‌ நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள்.

அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது.

ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது..

எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளுவே...

இதுக்கு நீங்க தேடாமலே இருக்கலாம்🤣

நீதிபதி ஆறுமுகசாமி கலாட்டா...

டாடா Vs பாஜக மோடி...

உலகில் நடந்த வித்யாசமான திருட்டுகள்...

 


இறந்த உடலை திருடிய வரலாறு...

உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..

இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..

இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..

மோனலிசா மர்ம ஓவியம்...

உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..

மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...

அதே போன்று உலகை மிரளச் செய்த திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...

அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய் அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..

இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..

அதில் பாதிக்கப்பட்டது  முக்கியமான இரு நபர்கள்...

முதலாமவர் சார்லி சாப்ளின்...

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..

ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு  உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.

செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....

ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..

கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..

2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..

இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..

1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள்  தகர்த்தனர்.

இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..

இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள

சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..

எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...

திருட்டு திமுக உ.பி.ஸ் கலாட்டா...

பாஜக மோடியின் அடுத்த வடை...

தடுப்பூசி வியாபாரிகள் கலாட்டா...

நன்மைகள் பல தரும் நுங்கு...

 


மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைரமும் ஒன்றாக உள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.

வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம்...

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.

பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.

நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.

நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே.

மேலும் நுங்கை சாப்பிட்டவுடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்த சோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.

நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.

வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு...

நண்பன் Vs மீ...


நண்பன் : இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்...

பணமும் புகழும் உனது கண்ணை மறைகிறதே...

மீ : இந்த நாய விட்டு ரெண்டு சின்ன சமோசா சாப்பிட்டேன்..

அதுக்கு ஸ்டேட்டஸ் பாரு...

🤣🤣🤣🤣

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்...

 


அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அதே போல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து,  செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில்  எரிச்சல் குறைந்து விடும்.

அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை  மற்றும் வழுவழுப்பு தன்மை  குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது...

திருட்டு திமுக வும்.. விபச்சார இந்தியா டூடே வும்...

நிம்மதியா சாப்பிட விடுங்கடா..

நீதிமன்றம் எனும் நிதி மன்றம்...

தமிழ் மொழிக்காக உயிரை விட்டவர்கள் ❤️