கைப்புள்ள கடம்பூர் ராஜீவுக்கே இந்த நிலைமைனா.. நாளைக்கு தூத்துக்குடி போற நம்ம மிக்சர் பன்னீரு நிலைமை...
27/05/2018
எங்கள சுடுறதுக்கு எவ்வளவு பணம் வாங்குனீங்க.. மக்கள் கேள்வி...
கைப்புள்ள கடம்பூர் ராஜீவுக்கே இந்த நிலைமைனா.. நாளைக்கு தூத்துக்குடி போற நம்ம மிக்சர் பன்னீரு நிலைமை...
உலகில் நடந்த வித்யாசமான திருட்டுகள்...
இறந்த உடலை திருடிய வரலாறு...
உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..
இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..
இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..
மோனலிசா மர்ம ஓவியம்...
உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..
மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...
அதே போன்று உலகை மிரளச் செய்த
திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...
அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய்
அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..
இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..
அதில் பாதிக்கப்பட்டது முக்கியமான இரு நபர்கள்...
முதலாமவர் சார்லி சாப்ளின்...
பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..
ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..
உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.
செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....
ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..
கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..
2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..
இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...
ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..
1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள் தகர்த்தனர்.
இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..
இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள
சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..
அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..
எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...
அறிவு சார் தளங்களில் தமிழர்கள்...
ஸ்டெர்லைட் வேதாந்தா பிரச்சினையை தமிழ்நாடு இந்தியா என்று குறுகிய எல்லைக்குட்பட்டு வெறுமனே அரசியல் பிரச்சினையாக மட்டும் சுருக்காமல்
வணிக ரீதியாக சர்வதேச பங்குச் சந்தை மற்றும் அனில் அகர்வால் வசிக்கும் பிரித்தானியாவில் போராட்டங்கள் கூடவே பிரித்தானிய எதிர்கட்சியை பேச வைத்து இந்த பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக்கி வணிக ரீதியாக அனில் அகர்வாலை தாக்கும் சரியான உத்திகளை கையாண்டு கொண்டிருக்கும் உலக தமிழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
காசிருப்பதால் எடப்பாடிகளையும் நாய் போலீசையும் மோடிகளையும் விலைக்கு வாங்கி தான் நினைத்ததை சாதித்து விடலாம் என்று எளிமையான கனவு காண்பவனுக்கு போராட்டங்களைத் தாண்டி உன்னைய எங்க அடிச்சா உனக்கு எப்படி வலிக்கும் என்று புரிய வைத்துக் கொண்டிருக்கும் அறிவு சார் தளங்களில் இயங்கும் தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
போராட்டங்கள் என்னும் ஜனநாயக வழி மட்டுமல்ல. அறிவு சார் ஆயுதங்களையும் தூக்குவதிலும் தமிழர்கள் எடுத்துக்காட்டு தான்...
எல்லாமே அதிர்வு தான்...
நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.
இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.
கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது. காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.
மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது. வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.
மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.
அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு வகையான அதிர்வுகள்தான்.
நாம் எல்லோரும் Frequency generatorதான். சுபக்கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும்போது உணர்வுகள் சுகமாகவும்.
அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.
இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்றுவிக்கிறது.
வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.
பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.
ஆக நம் உணர்வுகள்தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி,
எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.
நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்றபிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.
ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்துவிட்டோம் என்று நம்பி அடைந்தபிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.
அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள். மனத்திரையில் காட்சிகளை எப்படி காண்பது என்பதை பற்றி அடுத்த பதிவுகளில் அளிப்போம்...
டிகே பாசு Vs மேற்கு வங்க அரசு 1996...
விசாரணை மற்றும் சிறை கதிகளுக்கு காவல் துறையின் பிடியில் இருக்கும் போது நடக்கும் மரணங்கள் குறித்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானதை குறித்து, 1986 டிசம்பர் 26ஆம் தேதி, திரு. டிகே. பாசு அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஒரு கவன ஈர்ப்பு கடிதம் எழுதினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், அதன் முக்கியத்துவத்தை அறிந்து, 'காவலில் மரணங்கள் ' குறித்து விபரமாக ஆராயவும் , வேண்டிய சட்ட வழிமுறைகள் வகுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வழி செய்யவும், சட்டத்தை தன் கையில் எடுத்த காவல்துறை அதிகாரிகளை தங்கள் செய்கைக்கு பதில் சொல்ல வைக்கவும், ஆவன செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். பெரும்பாலும் சிறை மரணங்கள் மூடி மறைக்கபட்டு குற்றவாளி தப்புவதுடன் , அப்படிப்பட்ட சம்பவங்கள் பெருகி வளர்ந்து வருகின்றன.
இந்த பிரச்சனையின் தீவிரத்தையும் அதிகரித்து வரும் சிறை மரணம் குறித்த புகார்ளையும் உணர்ந்து, அந்த கடிதமே ஒரு "ரிட்" மனுவாக ஏற்கப்பட்டு , 09/02/1987 அன்று கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்க மேற்கு வங்க அரசு எதிர் மனு தாக்கல் செய்தது. அதில் சிறை மரணங்கள் குறித்து எதுவும் மூடிமறைக்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டது. மேலும் வாதியின் மனு புரிதல் இல்லாதது, திசைதிருப்புவது, மற்றும் ஆதாரமற்றது என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
14/8/1987 அன்று நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவை வழங்கியது:
"ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் இது குறித்த புகார்களும் , செய்தித்தாள்களில் 'லாக் அப் மரணங்கள்' என குறிப்பிடப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை. இது ஒட்டு மொத்த இந்திய சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதாலும், எல்லா மாநிலங்களையும் பாதிக்கும் விஷயமாக இருப்பதாலும், அனைத்து மாநிலங்கலுக்கும் நோட்டீசு அனுப்பி, அவர்கள் இது விஷயமாக சொல்ல விரும்புவதை அறிய வேண்டிதும் அவசியம். கூடவே இந்திய சட்ட ஆணையத்துக்கும் நோட்டீசு அனுப்பப்படட்டும். இதில் தேவையான ஆலோசனைகளை இன்றிலிருந்து 2 மாதத்திற்குள் அவை பதில் அளிக்கட்டும்
அதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்கம், ஒரிசா, அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, மேகாலயம், மகாராஷ்டிரம், மணிபூர், சண்டிகர் உள்ளிட்ட அரசுகளும், இந்திய சட்ட ஆணையமும் வாக்குமூலம் தாக்கல் செய்தன.
9 வருட விவாதங்களுக்கு பிறகு, 18/12/1996 அன்று, நீதிமன்றம், கைது மற்றும் காவல் சிறைவைப்பிற்கு கடைபிடிக்க வேண்டிய 11 முன்தேவைகள் அடங்கிய நெறிமுறையை வகுத்து, தக்க சட்ட உருவாக்கப்படும் வரை இதை அமலாக்கியது.
(1) கைது செய்யும் காவலரும் கைதானவரை விசாரிக்கும் காவலரும் சரியான, பார்வையில் படும்படியான தெளிவான, பெயர் மற்றும் பதிவி அடங்கிய அடையாள பெயர்குறிப்பை (பேட்ஜ் ) அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு விசாரணை அனைத்து காவலர்கள் குறித்த விபரமும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
(2) கைது செய்யும் காவல் துறை அதிகாரி, கைது செய்யும் நேரத்தில், கைது பற்றிய குறிப்பு ஒன்று தயாரித்து, அதில் குறைந்தது ஒருவரின் சாட்சி கையெழுத்தை பெற வேண்டும். அந்த சாட்சி கைதானவரின் குடும்ப உருப்பினராகவோ, கைது செய்யப்பட்ட பகுதியில் மரியாதைக்கு உரிய ஒருவராகவோ இருக்க வேண்டும். அதில் கைது செய்யப்படும் நபரும் கையெழுத்து இட்டு தேதி நேரம் உள்ளிட்ட விபரங்களையும் எழுதி ஊர்ஜீதப்படுத்த வேண்டும்.
(3) காவல் நிலையத்திலோ, அல்லது விசாரணை மையத்திலோ, அல்லது பிற சிறை இடத்திலோ இருக்கும் கைதான அல்லது விசாரணைக் காவலில் இருக்கும் நபர், அவருக்கு தெரிந்த அல்லது அவரது நலனில் விருப்பமுள்ள ஒரு நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ, யதார்த்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, கைது குறித்து தகவல் தெரியப்படுத்த உரிமை உண்டு. ஒருவேளை அந்த நலன் விரும்பி, சாட்சி கையெழுத்து இட்ட நபராகவே இருந்தால் அது தேவையில்லை.
(4) அந்த நலன்விரும்பி நண்பர்/உறவினர் வெளியூரில் அல்லது வெறியாட்டத்தில் இருந்தால் கைது நடந்த இடம், நேரம், தற்போது காவலில் இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களையும், அந்த காவல்நிலையத்தின்/மாவட்டத்தின் சட்ட உதவி அமைப்பு மூலமாக, கைது நடந்த 8 அல்லது 12 மணி நேரத்திற்குள் தந்தி மூலம், தெரியப்படுத்த வேண்டும்.
(5) கைது செய்த உடனே அல்லது காவலில் வைக்கப்பட்ட உடனே, கைதானவருக்கு, கைது குறித்து வேண்டியவருக்கு தெரியப்படுத்தும் உரிமை உள்ளதை, தெரிவிக்க வேண்டும்.
(6)காவலில் வைக்கப்படும் இடத்தின் டைரியில்(பதிவில்) கைதாகி காவலில் வைக்கப்படும் நபர், தகவல் தெரிவிக்கப்பட்ட அவரது நண்பர் , காவல் இடத்தின் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள், ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
(7) கைதானவர் கோரினால், கைதாகும் நேரத்தில், அவரது பரிசோதனை செய்து அந்த சமயத்தில் அவரது உடலில் உள்ள சிறிய மற்றும் பெரிய காயங்களை "ஆய்வு குறிப்பு" ஒன்றில் பதிவு செய்ய வேண்டும். அந்த ஆய்வு குறிப்பில் கைதானவர் மற்றும் கைது செய்த அதிகாரி இருவரும் கையெழுத்து இட்டு, அதன் நகலை கைதானவருக்கு கொடுக்க வேண்டும்.
(8) காவலில் இருக்கும் போது, 48 மணி நேரத்திற்கு ஒரு முறை, அந்த மாநிலம்/யூனியன் டெரிடெரியின் உடல்நல சேவை இயக்குனரால், அனுமதிக்கப்பட்ட, மருத்துவர் குழுவை சேர்ந்த ஒரு மருத்துவர், கைதானவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உடல்நல சேவை இயக்குனர் அனைத்து மாவட்டம் மற்றும் தாசில்களுக்கும் அப்படி ஒரு மருத்துவ குழுவை உருவாக்க வேண்டும்.
(9) மேலே குறிப்பிடப்பட்ட, கைது குறிப்பு உள்ளிட்ட அனைத்து கோப்பு நகல்களும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு, அவரது பதிவிற்காக, அனுப்பப்பட வேண்டும்.
(10) விசாரணையின் போது கைதானவர் தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் விசாரணை நேரம் முழுவதற்கும் அனுமதிக்க அவசியம் இல்லை.
(11) அனைத்து மாவட்டம் மற்றும் மாநில தலைமையகத்திலும், கைதானவரின் கைது மற்றும் காவல்/சிறை வைப்பு குறித்த தகவல்களை, கைது செய்த அதிகாரி கைது நடந்த 12 மணி நேரத்திற்குள் தெரிவிக்க, காவல்துறை கட்டுப்பாட்டு அறை இருக்க வேண்டும். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அந்த தகவல்களை அனைவரின் பார்வையிலும் படும்படியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
மேலே விதிக்கப்பட்ட முன்தேவைகளை கடைபிடிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பிற்கு உண்டான தண்டனையும் வழங்கப்படலாம். அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சம்பந்தபட்ட இடத்தின் சட்டவரம்பிற்கு அதிகாரம் உள்ள உயர்நீதி மன்றத்தில் நடக்கும்...
அந்தரத்தில் தொங்கும் கோட்டை கதவு சங்ககால இலக்கியத்தின் வரலாறு...
சங்ககாலத்தில் மனிதனை கடவுளாக உயர்த்தவில்லை என்பதற்கு ஆதாரம்...
தூங்கெயில் கதவம்.?
இப்படி ஒரு பெயர் நாம் கேள்விப்பட்டதே இல்லை அப்படித்தானே..
பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்ற இந்த பெயர் நமக்கு தெரியும்.
ஏறக்குறைய மேலே சொன்ன தூங்கெயில் கதவம் என்ற வார்த்தையும் தொங்கும் தோட்டம் என்ற வார்த்தையும் ஒரே அடிப்படை விஷயத்தை சொல்வதாகவே உள்ளது...
சங்க காலத்தில் இந்த தூங்கெயில் கதவம் என்ற ஒரு அரண்மனை கதவு பற்றி வரலாற்றில் உள்ளது..
அதாவது நிறைய பேர் இந்த வார்த்தையை தவறாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது இன்றைய காலத்தில் பாபிலோனில் உள்ள தொங்கும் தோட்டத்தை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் எங்கள் மன்னர்கள் தொங்கும் அரண்மனையே அந்த காலத்தில் காட்டியுள்ளனர் என்று..
இது தவறு சங்ககாலத்தில் பிரமாண்ட அரண்மை கட்டியது உண்மை தான் அதற்கு கதவு இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் கட்டிய பிரமாண்ட கதவு தான் இந்த தூங்கெயில் கதவம்...
இதை கீழிலிருந்து மேல் நோக்கி பார்த்தல் அதன் பிரமாண்டத்தால் தொங்கும் அமைப்பில் இருப்பதால் வரலாற்றில் தொங்கும் கதவு, கால ஓட்டத்தில் வார்த்தை வளர்ந்து தொங்கும் அரண்மை ஆனது..
இப்படியும் இருக்கலாம்...
அடுத்து இன்றைய காலத்தில் மேல்நோக்கி செல்லும் கதவுகள் உண்டு அதாவது லிப்ட்.. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இது இருந்து இருக்கலாம் என்ற கருதும் உள்ளது..
கோட்டையில் உள்ள பிரம்மாண்ட கதவு திறப்பதற்காக மேல் நோக்கி செல்லும் பொழுது மேலே அந்தரத்தில் தொங்குவது போன்றே இருக்கும் ஒருவேளை இதை வைத்துகூட சங்க கால புலவர்கள் இப்படி தொங்கும் கதவு என்று எழுதி இருக்கலாம்..
இதை கட்டிய அரசனின் பெயர் தான் ஆச்சர்யமானது, அதாவது இன்று சேரன் சோழன் பாண்டியனை கூட நம்மில் சிலர் கடவுளாக வழிபடுகின்றனர்.. அவர்கள் நம் முன்னோர்கள் என்பதை தாண்டி கடவுள் அந்தஸ்தை கொடுப்பது தவறு, இதனால் தான் கடவுள் தன்மையை மனிதனுக்கு கொடுத்து கடவுள் நம்பிக்கையை நாம் கெடுத்துவிட்டோம் ...
ஆனால் இந்த சேர சோழ பாண்டியன் அரசனுக்கெல்லாம் முன்னதாக வாழ்ந்த ஒரு அரசன் தான் இந்த தூங்கெயில் கதவத்தை கட்டினான்...
அவனின் பெயர் என்ன தெரியுமா ?
கடவுள் அஞ்சி ...
இந்த பெயரை இதுவரை நாம் கேட்டது கூட கிடையாது அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களை கடவுளாக சிலர் உயர்த்துகின்றன, அந்த முன்னோர்களுக்கெல்லாம் முன்னாள் வாழ்ந்த மூதாதையர்கள் கடவுள் உள்ளார் என்பதை நம்பி அந்த கடவுளுக்கு நம் பிள்ளை அஞ்சி குற்றமற்றவனாக வாழ வேண்டும் என்று கடவுள் அஞ்சி என்று பெயரிட்ட வரலாறு நம் சிந்தித்தால் விளங்கும்..
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்
பதிற்றுப்பத்து...
தமிழரின் முக்கிய உணவு நெல்லா?
தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது...
கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்..
நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம் தான் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது.
நெல் நமது முக்கிய உணவு இல்லை..
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம். இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.
ஆகவே, நமது பழைய தானிய உணவுமுறை மீட்கப்பட வேண்டும்.
தண்ணீர் குறைவாக எடுக்கும் உணவு வகையைப் பின்பற்ற வேண்டும்...
மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...
வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை..
வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.
வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.
மீ.மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..
திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன.
வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது.
(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,
அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.
military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49
நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...
வியக்க வைக்கும் செய்திகள்...
யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்து விடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது.
தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 200 முறை மரத்தை கொத்தும்.
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணி நேரம் பார்க்கும் தன்மையுடையது.
எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
நாம் நேற்று கட்டிய பள்ளி கூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.
லங்கா வீரன் சுத்ரா என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.
பன்னீர் பூ இரவில் தான் பூக்கும்.
இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.
காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.
குளிர் காலத்தில் குயில் கூவாது.
எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டு பிடிப்புகளை அறிமுக படுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டு பிடித்து விடும்.
மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்து விடும் ஒரே மீன் - சுறாமீன்.
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்.
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.
சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாக மாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது...
நன்மைகள் பல தரும் நுங்கு...
மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைரமும் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.
வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம்...
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே.
மேலும் நுங்கை சாப்பிட்டவுடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்த சோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.
நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு...
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது -- மாசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ரகசிய ஆய்வறிக்கை...
144 தடை விதித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதே அரசு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் மற்றும் அருகேயுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்திருப்பதை அறிவியல் ரீதியாக அறிந்தும் ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்துள்ளது. இது மக்களுக்கு எதிரான அரசின் போக்கை எடுத்துக்காட்டுகிறது.
மார்ச் 28-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் RDO உள்ளிட்ட குழு ஒன்று ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் ஏழு இடங்களிலிருந்தும், ஸ்டெர்லைட் அருகே உள்ள கிராமங்களில் 8 இடங்களிலிருந்தும் நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்து வாரியத்தின் ஆய்வகத்தில் ஆய்வு செய்துள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்ன அரசு, ஆய்வறிக்கை தயாரானதும் ரகசியமாகவே வைத்துள்ளது.
தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி பெற்ற அறிக்கையில் நீர் மாதிரி எடுத்த 15 இடங்களிலுமே நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியற்றவை என கூறப்பட்டுள்ளது. சல்பேட் (sulphate), கால்சியம் (calcium), மெக்னீசியம் (magnesium), ஈயம் (lead), பிளோரைட் (fluoride) போன்ற அளவுருக்கள் இந்திய தரநிலைகள் பணியாகத்தால் (Bureau of Indian Standards) நிர்ணயிக்க பட்ட குடிநீர் தர அளவுகளை விட பல மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.
குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை மட்டும் மூளை வளர்ச்சியை தாக்கும் ஈயம் அளவு பாதுகாப்பு தர அளவைவிட -- அதாவது 0.01 மில்லிகிராம்/லிட்டர் -- 4 மடங்கிலிருந்து 55 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.
தெற்கு வீரபாண்டியபுரத்தின் நீர் மாதிரியில் 0.55 மில்லிகிராம்/லிட்டர் அளவில் -- அதாவது தர அளவை விட 55 மடங்கு அதிகமாக -- ஈயம் காணப்பட்டுள்ளது.
குமரேட்டிப்புரம் பேருந்து நிலையத்தின் அருகே எடுத்துள்ள நீர் மாதிரியில் ஈயம் அளவு தர அளவைவிட 39 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.
காயலூரணியின் நீரில் ஈயம் 46 மடங்கு அதிகமாவும், பண்டராம்பட்டியின் நிலத்தடி நீரில் 40 மடங்கு அதிகமாகவும், சில்வர்புரம் மற்றும் மாடத்துரில் 21 மடங்கு அதிகமாகவும், மீளாவிட்டானில் 11 மடங்கு அதிகமாகவும் ஈயம் காணப்பட்டுள்ளது. ஈயம் சிறுநீரகத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தாக்கும் வீரியமான விஷ காரணியாகும்.
சில்வர்புரம், மீளாவிட்டான் மற்றும் மாடத்துரின் நிலத்தடி நீரில் எலும்புகள் மட்டும் மூட்டுகளை தாக்கும் பிளோரைட் என்ற காரணியின் அளவு பாதுகாப்பு தர அளவை விட அதிகமாக உள்ளது.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரியால் 2008-இல் வெளியிடப்பட்ட சுகாதார ஆய்வறிக்கையில் ஸ்டெர்லைட் வளாகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தசை மற்றும் எலும்புகளின் கோளாறுகள் அதிகமான அளவில் காணப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட அளவுருக்களில் கால்சியம், ஸல்பேட் (sulphate) மற்றும் பிளோரைட் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட மாதிரிகளிலும் அதிகமான அளவில் காணப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டில் குவிந்து கிடக்கும் பாஸ்போ சிப்ஸும் என திட கழிவை சரியான முறையில் கையாலாவிட்டால் அதிலிருந்து கால்சியம், ஸல்பெட் (sulphate) மற்றும் பிளோரைட் போன்ற ரசாயனங்கள் கசிந்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீரை மாசு படுத்த கூடும் என்பது பலரும் அறிந்த விஷயம்.
தனது உரிமம் ரத்து செய்ததை தாக்கி ஸ்டெர்லைட் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீடு அதிகாரத்துவதில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் பல ஆவணங்கள் வழங்கியுள்ளது. அதில் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டில் 16 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலுள்ள அதிகபட்ச மாசலவு 32 முடிவுகளாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஸ்டெர்லைட் தனது தொழிற்சாலையினால் எந்த மாசும் ஏற்படவில்லை என ஆதாரமாக கொடுத்துள்ளது. ஆனால் தகவலின் கண்டுபிடிப்புகளோ, ஸ்டெர்லைட்டின் வாதத்திற்கு நேர் மாறாக கூறுகிறது.
காண்பிக்கப்பட்ட 32 முடிவுகளில் 31 முடிவுகளில் மொத்த கரைந்துள்ள உப்பின் அளவு தர அளவை விட அதிகமாக காணப்பட்டுள்ளது.
காண்பிக்கப்பட்ட 32 முடிவுகளில் 30 முடிவுகளில் ஸல்பேட் அளவு தர அளவை விட அதிகமாக காணப்பட்டுள்ளது.
பிளோரைட் அளவு 6 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.
கால்சியம் அளவு 31 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.
மெக்னீசியம் அளவு 30 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.
இரும்பு அளவு 28 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது...
Subscribe to:
Posts (Atom)