09/12/2021

யோகா ஆசனங்கள்...

 


யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.

யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால் உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.

பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.

அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை "கன்ட்ரோல்" செய்கின்றன தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.

உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.

வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.

உடல் எடையை குறைக்கும். தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.

யோகாவின் சிறப்பு...

அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது.

யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதராணம்-விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது.

உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் "சிம்பதெடிக்" மற்றும் "பாராசிம்பதெடிக்" எனும் நரம்புகளை "நார்மல்" நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.

யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை போக்குகின்றன. மனதை, உடலை, ரிலாக்ஸ்.. செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள்-சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.

முன்பு சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.

ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப் பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்...

பாஜக ஆதரவு துள்ளக் பத்திரிகை கிழித்து விவசாயிகள் போராட்டம்...

அடேய் BBC Tamil, இப்படி பாஜக வை சல்லி சல்லியா போட்டு நொறுக்கீட்டியே டா 😂

பயமுறுத்துகிறதா பருமன்?

 


கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்..

அதிக அளவு உணவு எடுத்துக் கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்...

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்...

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்...

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்...

இனிய மாலை வணக்கம் 😁

கூடன்குளம் அணுஉலை உண்மைகள்...

விபச்சார ஊடகமே.. அரசியல் வியாபாரிகளே... எங்கே சென்றீர்கள்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து 11 பேர் சடலமாக மீட்பு...

பேய்களுக்கு கால்கள் உண்டா?

 


சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்..

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது.

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல..

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு..

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன..

எனவே பேய்களுக்கு கால் உண்டு..

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்..

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

எட்டாவது அறிவு ஜீவியின் தப்பாட்ட தமாசு....

பிராடு பாஜக மோடி கலாட்டா...

முன்ஜென்மம் அறியும் எளிய முறை...

 


ஒருவரை வசதியாக தளர்ந்த ஆடையோடு படுக்க சொல்ல வேண்டும்.

பின் பிண்ணனி இசை ஏதாவது இருந்தால் போட்டுவிட்டு, அவரை இரண்டுமுறை ஆழ்ந்த சுவாசம் எடுக்க சொல்ல வேண்டும்.

பின் அவர் கண்களுக்கு நேர் மேலே செயினில் தொங்கும் மினுங்கும் பொருளை மெதுவாக சுழட்ட வேண்டும்.

அவர் கண்கள் சோர்ந்து போகும் வரை அதையே உற்று பார்க்க சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஒருசில நிமிடங்கள் தொடர்ந்து சுழட்டி கொண்டே, சில கட்டளைகள் கொடுக்க வேண்டும்.

உங்கள் கண்கள் சோர்ந்து விட்டது. உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வருகிறது.

உங்கள் மொத்த உடலும் தளர்வாக இருக்கிறது. நீங்கள் மிகவும் நல்லவர்.

நீங்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளீர்கள். உங்கள் கண்களை இனி திறக்க இயலாது.

உங்கள் கைகால்களை இனி அசைக்க இயலாது. உங்கள் உடல் மரக்கட்டை போல் அசைவற்று கிடக்கிறது.

இதுபோன்ற கட்டளைகளை மறுபடி மறுபடி சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு கூற கூற சிறிது நேரத்தில் அவர் நீங்கள் கூறியபடியே உடலை அசைக்க முடியாமல் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்று விடுவார்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் வயதை குறைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

இருபது வயதில் என்ன நடக்கிறது? பதினைந்து வயதில் என்ன நடக்கிறது? பத்து ஐந்து ஒரு வயது என கேட்டுவிட்டு பிறகு அம்மாவின் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என கேட்டு அறிய வேண்டும்.

அதன்பின் அம்மாவின் வயிற்றுக்க்கு வருவதற்கு முன் எங்கு எப்படி இருக்குறீர்கள் என கேட்க வேண்டும்.

இவ்வாறு படிப்படியாக வருடங்களை குறைத்து கொண்டே போக வேண்டும்.

இதுவே முன்சென்மம் அறியும் முறை.

குறிப்பு : எப்படி வயதை குறைத்துக் கொண்டே சென்றோமோ அதே போல் வயதை அதிகரித்துக் கொண்டே வந்துதான் அவரை எழுப்ப வேண்டும். அதாவது சென்ற வழியிலேயே திரும்பி வர வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பாதியிலேயே எழுப்பிவிட கூடாது.

அதேபோல் எந்த வயதிலாவது அவர் கடுமையான வலியை அனுபவித்திருந்தால் அதே வலியில் தற்போதும் துடிப்பார். உடனே அவர் வயதை குறைத்துவிட வேண்டும்.

இதயம் பலவீனமானவர்களை ஹிப்னாடிசம் செய்ய கூடாது. சில சம்பவங்கள் நடந்த தருணத்திற்கு அவர் செல்லும் போது அவர் இதயம் தாங்காது.

எக்காரணம் கொண்டும் அவரிடம் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

இதில் ஏதேனும் தவறு நேர்ந்தாலும் மீண்டும் அதை சரி செய்து விடலாம் கவலை வேண்டாம்...

மீண்டும் ஒரு சாத்தான்குளமாக மாறிய ராமநாதபுரம்...

 


முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் இறந்த தகவல் அதிர்ச்சியாக உள்ளது. 

அதை விட அதிர்ச்சி மீடியா எந்த விவாதமும் இல்லாமல் கடந்து செல்வது. திமுகவிற்கு உற்ற துணையாக மீடியாக்கள் உள்ளன..

எனவே எந்த குற்றமும் மறைக்கலாம் திமுக?

முதல்வர் துறை ஆகப் பதிலளிப்பது அவர் பொறுப்பு...

தண்ணீரில் கால் வைக்க நடுங்கி, நாலு பேர் தூக்கி செல்லும் நபர்களெல்லாம் எழுச்சித்தமிழர்னு விளம்பரம்.. கொடுமை..🤦

இலுமினாட்டி களும் கடல் வணிக அரசியலும்...