19/06/2017
சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...
சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.
ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.
இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.
இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம். தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.
1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.
தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகபடுத்தபட்டு இருக்கிறது.
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது. சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.
MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது. இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.
2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).
ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...
மருத்துவ குறிப்புகளைத் தாங்கி வந்த தமிழர் பழமொழிகள்...
தமிழர்களால் வழி வழியாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன.
இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்…
1. இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு.
எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.
2. ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்.
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.
வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.
3. வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.
4. மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்.
மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.
5. ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி.
ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.
6. அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்.
சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.
7. இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்.
உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும். இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.
8. ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.
9. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்.
அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.
10. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும்.
ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.
11. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.
12. விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.
13. ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ.
ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.
இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன.
உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம்...
கோனாரும் யாதவரும்...
திராவிடவாதிகள் தங்களின் சுய லாபத்திற்க்காக வடுக, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் அரசியல் மேலாதிகத்தை நியாயப்படுத்திட தமிழர்களை பல கூறுகளாக வெட்டி சிதைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டுள்ளனர்.
ஆரியமும் இம் மண்ணில் தமிழின ஓர்மையை அழித்துவிட்டு, முழுமையாக ஆரிய கலப்பு செய்ய முடியாவிட்டாலும் ஆரிய கலப்பினமான வடுக, கன்னடர் தெலுங்கர் மலையாளிகள் செய்யும் சூழ்ச்சி தமிழின ஓர்மையை சிதைத்து விட செய்யும் முயற்சி,
இந்திய தேசிய மாயையை வலுப்பெற செய்கிற படியால், ஆரியமும், திராவிடமும் எப்பொழுதும் தமிழர்கள் முன் சில நேரம் பகையாளிகள் போலவும், சில நேரம் நண்பர்கள் போலவும் தோற்றம் தந்தாலும் தங்களுக்குள் கள்ளக்கூட்டும், கள்ளக்காதலும் கொண்ட ஓர்மைப் பட்ட இரு வகை வழி முறை என்பதை நாம் அறிவோம்.
கோனார் சமுதாய மக்கள் முல்லைத்திணையின் பூர்வீக மக்களாவர். தூய தமிழரான இடையர் குடியினரை எப்படியேணும் மடை மாற்றம் செய்து ஆரியமயப் படுத்திவிட துடிக்கிறது ஆரியமும், திராவிடமும்.
கோனாரை யாதவராக்குவதால் இந்திய மாயைக்குள் இழுத்துச் செல்ல முடிகிறது பிராமணியத்தால் சாதி, சாதியாய் சிதைத்துவிட்ட தமிழ் இனத்திற்க்குள் பெரிய அளவில் இனக் கலப்பு செய்ய முடியாவிடினும், அடிமை என்பதை விட ஆள்பவன் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமையை ஆசைக் காட்டி இந்திய தேசியம் என்கின்ற மாய வலைக்குள் சிக்கவைத்து விட்டது ஆரியம்.
கோனார் என்கின்ற தன் வம்ச வழி தமிழின தொழிற்ச்சார்ந்த அடையாளத்தை அடிமையெனக் கருதி யாதவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட வைத்து விட்டது.
இதற்க்கு கோனார் சமுதாய மக்களில் டில்லிக்கு விசுவாசமுள்ள, திராவிடத்திற்கு துணை போகின்ற அல்லது திராவிட தலைமையில் உள்ள யாதவ வந்தேரிகளோடு கை கோர்த்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் துரோகிகள் யாதவர் என்று மடை மாற்று செய்து வருகின்றனர்.
“கோனாருக்கும், யாதவருக்கும் இன ரீதியாக யாதொரு சம்பந்தமும் இல்லை”
இந்த யாதவர்கள் யார்?
எங்கிருந்து எப்பொழுது தமிழகத்திற்க்குள் நுழைந்தார்கள்.
தமிழன் வந்தவனையெல்லாம் வாழ வைத்துவிட்டு, தன் அடையாளத்தை துறந்து, வந்தவனின் அடையாளத்தை தன் அடையாளமாக கொண்டாடி கோமாளியாய் போனதன் பின்னனிதான் என்ன என்பதை பார்ப்போம்..
வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாதவர் என்னும் இடையர் குடியினர் தெற்க்கு நோக்கி நகர்ந்து தக்காண பீட பூமி பகுதியில் ஓர் எழுச்சிப் பெற்ற அரசாக கி.பி.12 ம் நூற்றாண்டு வாக்கில் ஓர் அரசை நிறுவினர்.
அப்படி எழுச்சிப் பெற்ற யாதவர்களின் அரசுகளில் குறிப்பிடதக்க அரசு தேவகிரியின் யாதவர்களின் அரசாகும்.
ஆரம்பத்தில் மேலை சாளுக்கிய அரசுக்கு திறை செலுத்தி வந்தவர்கள், மேல சாளுக்கியரின் வீழ்சிக்குப் பின்னர் தனித்துவம் பெற்ற அரசாக நிலைப் படுத்திக் கொண்டனர். இவர்கள் மராட்டியப் பகுதியில் நாசிக்கில் இருந்து தேவகிரிவரை தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக்கிக் கொண்டு ஆண்டனர்.
கி.பி.12 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டுகள் இறுதி வரையிலும் ஆண்டனர்.
கி.பி. 14 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் சுல்த்தானிய அரசுக்கு கப்பம் கட்டுபவர்களாக இருந்து இறுதியில் கப்பம் கட்ட தவறியமைக்காக ஆட்சி அதிகாரத்தை இழந்து இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்டு, யாதவர் அரசு முடிவடைந்தது.
இவர்கள் கிருஷ்ண பகவானின் முன்னோரான “யாடு” என்னும் கடவுளின் வழிவந்தவர்கள் என இவர்கள் தங்களை சொல்லிக் கொண்டதால் யாதவர் என அழைக்கப் பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் தவிர ஹொய்சாளர்கள் மற்றும் காகத்தியர்கள் தக்காணத்தை ஆண்டனர். இம்மூன்று அரசுகளுமே இந்து சமயத்தை பேணி பாதுகாத்தன.
தென்னகத்தில் காகத்தியர்கள் இஸ்லாமிய சமயம் பரவுவதை பெரும் முயற்சி செய்து தடுத்து வந்தனர். காகத்தியர்கள் ஆரிய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்தனர்.
காகத்தியர்கள் பேணி வந்த இந்து சமயப் பற்று பின்னாளில் விஜய நகரப் பேரரசு எழுச்சிப் பெற தூண்டுகோலாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏற்கனவே அலை, அலையாய் வந்து நம் தமிழ் மன்னர்களை முட்டாள்களாக்கி சுகம் அனுபவித்து வந்த கன்னட, வடுக, மராட்டிய பிராமணர்கள் தமிழகத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர அரசுகளை பலவீனமடையச் செய்தனர்.
அவர்கள் தூண்டி விட்டு மூவேந்தர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளச் செய்து பலவீனமான அரசுகளாக ஆக்கி ஒற்றுமையைக் குலைத்தனர்.
இந்நிலையில் காகத்தியர்கள் டில்லி சுல்த்தானியர்களிடம் வீழ்ச்சி பெற்றப்பின், உருவான விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்க்குள் ஊடுருவி தமிழ் மன்னர்களை வீழ்த்தி, தமிழகத்தை சூறையாடி, தமிழின மக்களை கொன்று குவித்து வடுக ஆட்சியை அமைத்தது.
மராட்டியர்களும் தங்கள் பங்குக்கு தமிழகத்தின் தஞ்சை போன்ற முக்கிய பகுதிகளை கைப் பற்றி ஆண்டனர்.
இப்படி பரவலாக தமிழகத்திற்க்குள் அமைந்த அன்னிய ஆட்சியின் விளைவாக மராட்டிய மொழி மற்றும் வட மொழி பேசும் யாதவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வாழ தழைப்பட்டனர்.
இவ்வாறு தமிழகத்துக்கு அன்னியமான நாடோடிக் கூட்டமான யாதவர்கள் தமிழகத்தின் அரசியலையும், திராவிடக் கருத்தியலையும் சாதகமாக்கிக் கொண்டு ஆளுமைக் கூட்டமாக பரிணமிக்கலாயினர்.
இப்படி வந்தேரிகள் வாழ, ஆட்சி செலுத்த, அதிகாரம் பறிக்கப் படாமல் இருக்க ஈ.வெ.ராமசாமி என்னும் கன்னட தெலுங்கர் பல்வேறு வகையில் தமிழக மக்களை பிளவு படுத்தும் வேலையை செய்தார் என்பது, நாம் கவனிக்கத் தக்கது.
இம் மண்ணின் முல்லைத்திணை மக்களான கோனார் சமுதாய மக்களுக்கும், யாதவர் என்னும் நாடோடி ஆரிய, திராவிட கலப்பு இனக் கூட்டத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
கோனார் சமுதாய மக்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் பாரம்பரிய அப்பன், பாட்டன், முப்பாட்டன், பூட்டன், ஓட்டன் என காலம் காலமாய் வழங்கி வந்த திணை பகுதி அடையாளப் பெயரான கோனார் என்னும் சொல்லை கேவலமாகக் கருதி யாதவர் ஆக முயற்சிப்பது இழிவான செயலாகும். சர்வ தேசத்தமிழனும் வெட்கி தலைகுனிய தக்கதாகும்...
வாழ்க தமிழ்.. வெல்க தன்னுரிமை.. அடைவோம் மண்ணுரிமை...
பாஜக மோடி அம்பானிக்கும், அதானிக்கும் கூலிக்கு மாரடித்தால் இப்படித்தான் நடக்கும்...
மோடி அரசு இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எதிர்பார்த்த அளவில் செயல்படுத்த முடியவில்லை.
இதனால் இத்திட்டங்களின் நோக்கத்திற்கு எதிர்மாறாக இந்த அறிவிப்புகள் வேலையின்மை அதிகரியிருத்திருக்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது வேலையின்மையே.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டியது பாஜக.
கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.
தொழில்முனைவோர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இந்த நிலையில் இரயில்வே துறையில் தனியார் பங்களிப்புகளை அதிகப்படுத்தியதின் விளைவாக 11,500 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இனியாவது மத்திய அரசு வேலையின்மைக்கான காரணிகளை கண்டறிந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மாற்று திட்டங்களை செயல்படுத்தி வேலையில்லாத இளைஞர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கித்தந்திட வேண்டும்...
ஓடிப்போனது ஒரு மல்லையா… ஓடாமல் இங்கே இருப்பதோ 12 மல்லையாக்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...
மல்லையா தான் ஏதோ கடனை வாங்கிவிட்டு கட்டாமல் வெளிநாட்டிற்கு ஓடி விட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
மல்லையாவையே தூக்கி சாப்பிட இங்கே 12 தலைகள் வரிசையில் நிற்கின்றன.
பொதுத்துறை வங்கிகளில் 12 பேர் வாங்கிய வாராக்கடன் மட்டும் 175000 கோடி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கான வராக்கடன்கள் குறித்து ஆய்வு செய்ய, ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக்குழு சமீபத்தில் பரிந்துரை செய்தது.
அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேர், பொதுத்துறை வங்கிகளில் தலா 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வர வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், கடன் வாங்கி செலுத்தாத 12 பேரின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாடு முழுவதும் வங்கிகளில் வாராக் கடனாக 7 லட்சம் கோடி உள்ளது. அதில் 12பேரின் கணக்கில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனாக இருப்பது குறிப்பிடத்தக்கது...
ஜவ்வரிசி...
இந்த வார்த்தை தமிழும் கிடையாது...
அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..
இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..
ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..
ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...
நியூட்ரினோ திட்டத்தில் விடை தெரியாமல் இருக்கும் பல கேள்விகள் உள்ளன, அவற்றுள் முக்கியமான கேள்வி கோலார் பற்றியது...
60 களின் தொடக்கத்தில், இந்திய விஞ்ஞானிகள், கோலார் தங்க சுரங்கத்தில் நியூட்ரினோ தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் நியூட்ரினோவை பிடித்து வெற்றிகண்டார்கள்.
குறிப்பாக முவான் வகைகளை பற்றிய விசயங்களை கண்டறிய முடிந்தது. 1992 ஆம் ஆண்டு வரை அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன, கோலார் சுரங்கம் மூடப்பட்டதால் நியூட்ரினோ ஆராய்ச்சியும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நம்முடைய கேள்விகள் என்னவென்றால், அன்று அறியப்பட்ட நியூட்ரினோ குறித்த தகவல்களால் இந்தியாவிற்கு என்ன நன்மை கிடைத்தது? நாங்கள் ஏதோ நேற்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு இன்றைக்கு பலன்கள் என்ன, என்று கேட்கவில்லை, ஆனால் கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் கழித்து தான் பலன்கள் குறித்த கேள்விகளை எழுப்புகிறோம்.
அடுத்த கேள்வி, ஆய்வுகள் எங்கே நடைபெறுகிறதோ அங்கேயே தான் விரிவுபடுத்தியிருக்கவேண்டும் ஆனால் அங்கே செய்யாமல் தேனி மாவட்டத்திற்கு வர வேண்டிய அவசியம் என்ன?
கோலார் தங்க சுரங்க ஆராய்ச்சி கூடத்தை மூட ஏன் அனுமதித்தார்கள் என்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
சில தரவுகளில் கோலாரில் இருந்த ஆராய்ச்சி கூடத்தில் "நீர் கசிவு" அதிகமாக இருந்ததால் அங்கே தொடர முடியவில்லை என்ற பதிவுகள் இருந்தன, அந்த தகவல்கள் உண்மையென்றால் "நீர் கசிவை" சரி செய்வது தான் சரியான தீர்வாக இருந்திருக்கும்.
அதைவிட்டு, பாதுகாக்கவேண்டிய மேற்கு தொடர்ச்சியை உடைத்து, குடைந்து, பல்லாயிரம் கோடிகளை செலவு செய்யும் தேவைகள் என்ன, நோக்கம் என்ன ?
கேள்விகள் தொடரும், பதில்கள் தருவதற்கு தான் ஆட்கள் தேவை. ....
கதிராமங்கலம் சிறப்பு என்ன?
ஒட்டுமொத்த தஞ்சை மண்ணில் நீர் ஊற்று அதிகம் நிறைந்த வட்டம் திருவிடைமருதூர் வட்டம் மட்டுமே.
இப்போது மீத்தேன் அதிகமாக எடுக்க போகிற இடம் இந்த வட்டத்தில் தான் அதிகம்.
தமிழ்நாட்டில் மூன்று போக விவசாயம் செய்கிற ஒரே வட்டம் திருவிடைமருதூர் சுற்றியுள்ள பகுதி மட்டுமே.
இப்போ மீண்டும் சொல்லி பாருங்க ஏன் மீத்தேன் எடுக்கிறார்கள் என்று...
சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?
நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.
ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம்.
அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.
அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.
அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்.
அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.
இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.
உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:
நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.
மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்து விடும்...
திராவிட தொழிலான தேவதாசி முறைக்குள் 5 வயது சிறுமியை தள்ளிய கன்னட பெற்றோர்: பொதுமக்கள் ஆத்திரம்...
கர்நாட மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை தேவதாசி பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளி விழா கொண்டாடிய சாமியார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மாவின்சுர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தேவதாசி பட்டம் கட்டி மதச்சடங்குகளை பெற்றோர் மற்றும் அந்த ஊரில் உள்ள கோவில் சாமியார் நடத்தியுள்ளனர்.
தற்போது பத்து வயதாகும் அந்த சிறுமி தேவதாசியாக வாழ்ந்து வருவதாகவும் குழந்தைகள் நல குழுவினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சிறுமியை தேவதாசி முறையில் இருந்து மீட்ட குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை தேவதாசியாக பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளிய அவரது பெற்றோர், இதற்கான சடங்கு சம்பிரதாயங்களுடன் விழா நடத்திய சாமியாரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த இரு பள்ளி ஆசிரியைகள் மற்றும் அங்கன்வாடி பெண் பணியாளர் ஆகிய மூவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்...
அகரத்தில் ஓர் இராமாயணம்...
இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது...
அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாகஅறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களைஅரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியைஅடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்குஅனுப்பினாள். அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம். அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல். அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே...
இலுமினாட்டி யும் இளவரசி டயானா மரணமும்...
The Huge Secret is exposed now இளவரசி டயானா இறந்ததற்கான காரணம் இந்த பேட்டியே. புரியாதவர்கள் சப் டைட்டிலை கவனமுடன் படிக்கவும்...
Subscribe to:
Posts (Atom)