05/05/2017

திண்டுக்கல் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 6 பேர் பலி...


திண்டுக்கல் மாவட்டம் சின்னலாம்பட்டி அருகே சரக்கு லாரியும் அரசுப்பேருந்தும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில்பட்டி அருகே மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்குலாரியும், அதன்பின் வந்த அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. அரசுப்பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக பேருந்து சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

காயாமடைந்தவர்களில் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் 3 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 59...


பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு...

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

மேலும் பயணிப்போம்....

துரோகி விசிக திருமா...


2009 மற்றும் 2010 கால கட்டத்தில் நமக்கு சாவு பறை கேட்ட போதெல்லாம், திருமாவிற்கு மஞ்சள் துண்டு மகராசனுடன் சேர்ந்து மங்கள இசையை காட்டி மயக்கியது திராவிடம்....

ரத்த வாடை ஆறாத நிலையிலும், கொத்தடிமை கூட்டத்தோடு இலங்கை சென்று கொலைகாரன் ராஜபக்சே கை குலுக்கி சிரித்து மகிழ்ந்தார் திருமா...


மே மாதம் வரும் போதெல்லாம் மானமுள்ள தமிழனின் மனநிலையின் நாடி துடிப்பை அறியாத திருமா, அதே காங்கிரசு கட்சியை சேர்ந்த நாரவாயன் நாராயணசாமிக்கு பட்டு குஞ்சம் சாத்துகிறார் திருமா...

இந்த இனத்தின் சாபக்கேடு திருமா...

பாஜக தமிழகத்தில் கட்சி வளர்த்துக் கொண்டிருக்கும் போது...


நிர்பயா கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...


6 குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான், மற்றொருவன் 18 வயதிற்கு குறைவாக இருப்பதாக் கூறி சீர் திருத்தப்பள்ளியில் உள்ளான்...

மாபெரும் தொடர் முற்றுகைப் போராட்டம்...


மே 29,30,31 ஆகிய நாட்களில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து திருச்சியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம்...

விவசாயிகள், கீழடி, காவிரி மேலாண்மை வாரியம், ஹைட்ரோகார்பன்..

உள்ளிட்ட கோரிக்கைகைளை முன் நிறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 59...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 59-ம் பகுதியாகும். இந்த 59-ம் தீர்க்க தரிசனப் பகுதி பல்வேறு இறை உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட உள்ளன.

59-ம் தீர்க்கதரிசனம் இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்டவுடன் இந்த பூமி எனும் கிரகத்தில் முதல் மனித வித்தாக கடவுளே அனுப்பப்பட்டார் என தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அதாவது இவ்வுலகத்தின் ஆதிமூலம் அன்னை ஆதிபராசக்தியே ஆவார். அவரின் உள் ஒளியிலிருந்து ஜோதியாக தோன்றியவர் ஆதிசிவனார் ஆவார். அவரின் தோற்ற வடிவமே கடவுளின் அம்சங்களாகும். அவ்வகையில் இப்பூமியில் முதல் மனித வடிவாக அவதரித்தவர் ஈசனே என்று 59-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அவரின் வழித்தோன்றல்களே ஆதி மனித சமுதாயம் என்ற கோட்பாட்டை 59-ம் தீர்க்க தரிசனம் இங்கு முன் வைக்கின்றது. ஈசனின் அம்சமாக அவதரித்த மனித சமூகத்திற்கே மனுசன் (மனு + ஈசன்) என்ற பெயர் வந்தது என 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


இந்த பரந்த பூமியில் மனிதன் முதல் படைப்பாக படைக்கப்பட்ட இடம் இந்திய தேசம் என்றும், அதுவும் பண்டைய தமிழகமான லெமூரியா கண்டம் (குமரிக்கண்டம்) என்று 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய முக்கிய குறிப்பை இந்த தீர்க்க தரிசனத்தின் வாயிலாக தெரிவிக்கின்றது. மனிதகுலத்தின் ஆதி தோற்றம் சிவம் என்றும், அதுவே ஈசனாக இவ்வுலகில் வலம் வந்த ஆதிசிவன் என்றும், இவரே படைக்கும் கடவுளான பிரம்மனையும், காக்கும் கடவுளான திருமாலையும் தோற்றுவிக்க மூலகாரணமாக இருந்தார் என்றும் 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. அன்னை ஆதிபராசக்தியின் அம்சங்களே கடவுளின் ஒட்டு மொத்த நிலைகள் என்றும், இவைகளின் இயக்க நிலைகள், முடிவு நிலைகள் யாவும் நான்கு யுகங்களை பொறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் 59-ம் தீர்க்க தரிசனம் கடவுளின் நிலைகளைப் பற்றியும், முதல் மனித வர்க்கத்தை பற்றிய முக்கிய இரகசிய குறிப்பையும் இங்கு வெளியிடுகிறது.


படைக்கும் கடவுளான பிரம்மா அன்னை ஆதிசக்தியின் அவதாரப் பெருமைகளை மக்கள் சமுதாயம் உணர வேண்டும் என்பதற்காக சத்திய யுகத்தின் பிரஜைகளாக இவ்வுலகம் முழுவதும் பல புனித ஆத்மாக்களை மனிதர்களாக பிறவி எடுக்கும்படி செய்துள்ளார் என்றும், அவர்களின் வாழ்வியல் தர்மங்களையும், நீதிகளையும் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவும்படி செய்ய அன்னை ஆதிபராசக்தியானவர் தனது யுகப்பயணமான சத்திய யுகத்தில் அன்னை ஆதிசக்தியாக அவதாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும், அவரே கலியுகத்தில் அன்னை ஸ்ரீ சமயபுரத்தாளாக அவதாரத்தை மேற்கொண்டு மக்கள் இனத்தை காத்திட்ட தாயாக இருந்தவள் என்று 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.


சத்தியயுகம் தற்போது பிரபஞ்சம் முழுவதும் வெளிப்பட துவங்கி விட்டது என்றும், அன்னை ஆதிபராசக்தியானவர் ஆதிசக்தியாக அவதாரம் கொள்ள இப்பூமியின் மீது முழுமையாக தனது சக்திகளின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த உள்ளார் என்றும், ஏற்கனவே இந்தியாவில் உள்ள அவரின் 51 சக்தி பீடங்களின் சக்திகள் அனைத்தும் மீண்டும் அவர் அவதாரம் மேற்கொள்ளும் ஆதிசக்தி என்ற வடிவத்துக்குள் முழுமையாக ஒன்று சேரும் என்றும், அப்பொழுது அன்னை ஆதிசக்தியானவர் இந்திய பூமியில் அதுவும் தமிழ்நாட்டில் தனது இறை அவதாரத்தை ஏற்படுத்திட உள்ளார் என்று 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை வெளிப்படுத்திட உள்ளது.

அன்னை ஆதிபராசக்தியானவர் அன்னை ஆதிசக்தியாக அவதாரம் மேற்கொள்ளும் சமயத்தில் அவர் வெளியிட்ட அனைத்து தீர்க்க தரிசனங்களும் இப்பூமியில் நடந்து முடிய உள்ளன என்றும், இனி சத்திய யுகத்தின் ஆட்சியே உலக நாடு முழுவதும் இருக்கும் என்றும், இச்சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளை விட பன்மடங்கு பெருகும் என்றும், இந்திய நாடே உலகில் வல்லரசு நாடாக விளங்கும் என்று 59-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


அன்னை ஆதிசக்தியானவர் இந்தியாவில் அதுவும் நமது தமிழகத்தில் அவதாரத்தை மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தியினை அனைத்து நாடுகளிலிருந்தும் இனி செய்திக் குறிப்புகளாக வெளிவர உள்ளன என்றும், இனி மக்கள் சமுதாயம் இறைவனை காண தயாராகும் என்றும் 59-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்து ஆலயங்களும் இயற்கை சீற்றத்தால் தாமாகவே அழியும் என்றும், வரலாற்றுக்காக ஒரு சில ஆலயங்களே இப்பூமியில் நிலைத்து நீடித்து இருக்கும் என்றும், இது அன்னை வந்துவிட்டாள் என்பதற்கான முன் அறிகுறி என்று 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது.


அன்னை ஆதிசக்தியின் அவதார நோக்கம் மக்களையும், அவர்கள் வாழும் இப்பூமியையும் கலியுகம் முடியும் இச்சமயத்தில் பிரபஞ்சத்தின் அழிவுலிருந்து காக்க வேண்டும் என்பதற்காகவே என்றும், அதேசமயத்தில் அன்னை ஆதிசக்தியின் அவதாரத்தின் முக்கிய நோக்கம் சத்திய யுகம் என்பது இறைவன் பூலோகத்தில் அமர்ந்து ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆட்சி செய்து, தனது சத்தியத்தையும், நீதிகளையும், தர்ம நெறிகளையும் மக்கள் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் அன்னை அவதரிக்க உள்ளார் என்று 59-ம் தீர்க்க தரிசனம் அன்னை ஆதிசக்தியின் அவதாரக்கோட்பாட்டை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது.

அன்னை ஆதிபராசக்தியின் அனைத்து அம்சங்களும் அன்னை ஆதிசக்தியின் ஒரே உருவத்தில் அமிழும் நிகழ்வு ஒன்று பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக நடக்க உள்ளதாக 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தந்துள்ளது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை...

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு.. கொடைக்கானல் மலையில் குள்ள மனிதர்களா?


கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் குள்ளமனிதர்கள் வாழ்வதாக அப்பகுதி மக்கள், இந்த நவீன காலத்திலும் நம்புகிறார்கள்.

பெருமாள்மலையிலிருந்து பழனி செல்லும் மலைச்சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில், முதன்மை சாலையிலிருந்து விலகிச் செல்கிறது பேத்துப்பாறை என்கிற ஊர்.

இங்கிருந்து மேலும் கீழே 6 கி.மீ. பயணம் செய்தால் கணேசபுரம். இதனை அவ்வூர் மக்கள் அஞ்சுவீடு என்றும் அழைக்கிறார்கள்.

அஞ்சுவீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் மலையேறிச் சென்றால், யானைகள் வலசை செல்லும் பகுதியில் அமைந்திருக்கிறது பத்து ஏக்கர் எனும் குள்ளர் குகைப் பகுதி.

மலையின் விளிம்பில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 30 மீட்டர் சுற்றளவில் ஆறு குகைகளைக் கொண்ட தொகுப்பும், அதற்கு அருகில் முந்நூறு மீட்டர் தொலைவில். மேற்கண்ட அதே சுற்றளவில் ஐந்து குகைகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பும், இதற்கு அண்மையில், அதே போன்று ஐந்து, நான்கு மற்றும் இரண்டு குகைகள் கொண்டு தொகுப்பும் காணப்படுகின்றன.

ஒவ்வொரு குகையும் நான்கு பக்கமும் பட்டையான பெரும் கற்களைக் கொண்டு மூடி ஒரு பக்கம் திறந்து விடப்பட்டிருக்கிறது. அதற்குள் நுழைந்தால் மூன்று பேர் உள்ளே அமர்ந்து கொள்ள முடியும்.

வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள், இறந்தவர் நினைவாக அமைத்துள்ள கற்குகைகள் (டால்மென்) என்பதை அறியமுடிந்தது.

அவ்வூரைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் கூறுகையில், 'இங்கு குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும், அவ்வப்போது அவர்கள் வந்து செல்வதாகவும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். ஒரு சாரார், இது பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது அமைத்த குகை என்ற அடிப்படையில் பாண்டவர் குகை என்றும் அழைக்கின்றனர்' என்கிறார்.

ஒவ்வொரு வட்டமும் மிகக் கடினமான பாறைகளைக் கொண்ட அடித்தளத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. குகை ஒவ்வொன்றும் 2 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளன. பெரும்பாலான குகைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

கற்கள் அனைத்தும் சரிந்து கிடக்கின்றன. சில குகைகளுக்குள் பாம்புகள் அதிகம் தென்படுகின்றன.

இதுகுறித்து தொல்லியல் அறிஞர் முனைவர் வெ.வேதாசலம் கூறியபோது, 'இது போன்ற கற்குகைகள் அனைத்தும் நீத்தாரை நினைவுபடுத்தும் பண்டைய மரபின் தொடக்கம் என்று கொள்ளலாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மரபு என்பதால், இது போன்ற கற்திட்டைகள், குற்குகைகள், கல்வட்டங்கள் உலகம் தழுவிய அளவில் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றன.

கொடைக்கானலைப் பொறுத்தவரை பரவலாக அதன் அனைத்து மலைப்பகுதிகளிலும், குறிப்பாக தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கூடலூர் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.

இதனை அந்தப் பகுதி மக்கள் குள்ளமனிதர்கள் வாழும் குகை, வாலியர் குகை, பாண்டவர் குகை என்று அழைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் தங்களோடு வாழ்ந்து இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்டு வணங்கப்பட்ட பண்டைய வழக்கம் காரணமாக அமைக்கட்டவையே இந்தக் கற்குகைகள். இதனை 'டால்மென் சைட்' என்று அழைக்கிறோம்' என்றார்.

இத்தனை பெரிய கற்களை தூக்கிக் கொண்டு வந்து, மலை விளிம்புகளில் மிக நேர்த்தியாக அமைத்து முன்னோர்களை வழிபட்ட நம் முன்னோர்களை நினைத்தால் பெருமையாகத்தான் உள்ளது...

தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்த...


பயன் தரும் மூலிகைகளும் செடிகளும்...


நங்கை மூலிகை - சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக் கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்...

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து..

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து..

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்..

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது...

இலுமினாட்டி குறியீடுகள் 1 : ஒற்றை கண்...


இலுமினாட்டிகளை பற்றி நாம் பார்த்து வருகிறோம். இன்று நான் இவர்களின் அடையாளங்கள் பற்றி பதிவிடுகிறேன்.

இவர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களை நமக்கு பரீட்சியமான கட்டிடங்கள், புத்தகங்கள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,  ஆல்பம் பாடல்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் வழியாக நமக்கு காட்டுகிறார்கள். இவை நம்மை பயமுறுத்துவதற்காகவும் தங்கள் தெனாவட்டை காட்டுவதற்காகவும் இன்னும் சில விடயங்களுக்காகவும்.
இந்த பதிவில் முக்கியமான ஓர் அடையாளத்தை பற்றி மட்டும் பார்ப்போம்..


பிரமீடின் மீது ஒற்றை கண்..

இதுவே இவர்களின் பிரதானமான அடையாளச் சின்னமாக அறியப்படுகிறது.

பொருள் என்ன?

இந்த பிரமீடை நோக்குங்கள்.  இதன் முழுமையான பொருளை நான் தற்பொழுது சொல்லப் போவது இல்லை. ஏனெனில் அது உங்களை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த பிரமூடில் 13 வரிசையில் கற்கள் உள்ளன. இது 13 குடும்பங்களை குறிக்கும். மொத்தம் 72 கற்கள் நமக்கு தெரிகின்றன இது இவர்களின் இறைவனின் 72 பெயர்களை குறிக்கும் காபாலாவின் படி. இது யூதர்களின் ஓர் வழிபாட்டு முறை. மீண்டும் சொல்கிறேன் இலுமினாட்டிகள் யூதர்கள் அல்ல. யூதர்கள் இலுமினாட்டிகளின் சிறந்த பணியாளர்களாக இருக்கிறார்கள்.


அடுத்து மேலே உள்ள ஒற்றைக்கண் இது All seeing eye எல்லாவற்றையும் பார்க்கும் கண் என்று அழைக்கப்படுகிறது. இது எகிப்திய கடவுள் 'ரா ' வின் கண் எனப் பொதுவாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நாம் வரலாற்றில் எகிப்துக்கு முன் சென்று இதன் பொருளை அறியலாம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த கண் முக்கோண வடிவ அதிகாரத்தின் உச்சியில் அமைந்துள்ளது. தங்களுக்கு கீழ் தான் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் இதன் மூலம் காட்டுகிறார்கள். அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இந்த அடையாளம் முக்கியமாக எங்கே உள்ளது தெரியுமா? அமேரிக்காவின் ஒரு டாலர் நோட்டில்..

அடுத்தப் பதிவில் அடுத்த அடையாளச் சின்னத்தோடு சந்திப்போம் தமிழ் சொந்தங்களே..

இதனை நமது இசுலாமிய வழியை பின்பற்றும்  உறவுகள் தச்சால் என்கிறார்கள்.

நீங்களை தமிழை அறிந்தால் தான் இவர்களை முழுமையாக அறிய முடியும்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 58...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப்பகுதி 58-ம் பகுதியாகும். இது வருங்காலத்தின் உண்மைகள் என 58-ம் தீர்க்க தரிசனங்கள் குறிப்பை தருகின்றன.

58-ம் தீர்க்கதரிசனம் வருங்காலத்தில் ஒரு மகா அதிசயம் இவ்வுலகில் நிகழும் என்றும், அது இறைவனின் அவதாரப் பெருவிழா என்றும் கூறுகிறது. அனைத்து மக்களின் பிரதிநிதியான இறைவன் பூலோகத்தில் கடவுளின் வடிவாக அதாவது ஒரு ரூபமாக, ஒரு திருநாமத்தின் பெயரிலே அவதரிக்கும் அற்புதம் ஒன்று நடக்க இருப்பதாக 58-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

இறைவன் அவதாரம் மேற்க்கொள்ளும் தேசம் இந்திய தேசம் என்றும், இதனால் இந்தியாவில் பல இறை அதிசய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும், இது வரும் ஜூலை மாதத்திலிருந்து துவங்கி வரும் ஆண்டான 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முடிவடையும் என்று 58-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


பார் போற்றும் புதிய சகாப்தம் ஒன்று துவங்கப்பெறும் என்றும் அதற்கு சத்திய யுகம் என்றும், அந்த சத்திய யுகத்திற்கான அதிபதியாக இறைவன் அவதாரம் மேற்கொள்வார் என்றும், அவரின் அற்புதங்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இனி ஏற்படும் என்றும், இனி மக்கள் சுபிட்ஷமாக வாழும் சூழ்நிலைகள் உருவாகும் என்றும், அச்சமயத்தில் உலகத்தின் ஒரு மூலையில் உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு மலை பூமிக்குள் அமிழ்ந்து போகும் என்றும் 58-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை மெய்பட கூறுகிறது.

இந்திய அரசியலில் மகா மாற்றம் ஒன்று 58-ம் தீர்க்க தரிசனங்கள் நடக்கும் சமயத்தில் நடக்கும் என்றும், இது இறைவனின் அற்புதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், இந்திய அரசியலைமைப்பின் சட்டதிட்டங்களில் அப்பொழுது பல மாற்றங்கள் உருவாகும் என்று 58-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கடவுளின் பிரதிநிதிகள் என மக்கள் பல தேசங்களிலிருந்து இனம் காணும்  ஒரு இறை அதிசயம் நடக்கும் என்றும், அச்சமயத்தில் அனைத்து நாட்டிலிருந்தும் மக்கள் கூட்டம் இந்திய தேசத்தை தேடி வருவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறைவனுக்கு ஒரு மகா பேராலயத்தை உருவாக்கிட முற்படுவார்கள் என்றும், அதற்கான அச்சாரத்தை இந்திய மண்ணில் மக்கள் முதன்முதலாக துவங்கி வைப்பார்கள் என்றும், உலக தலைவர்கள் இதற்காக முன்வந்து நிற்கும் வைபோகம் ஒன்று வெகு விமர்சையாக நடக்கும் என்று 58-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகளில் உள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மதம் என்பது தவத்தின் பயனாக அடைந்த மக்கள் சமுதாயம் என்பதை மக்கள் இனமே மறந்து விட்டது என்றும், அந்த மதத்தின் பெயரால் இனி வன்முறைகள் ஏதும் நடக்காது இருக்கும்படி அனைத்து மதமும் ஒன்றிணைந்து இறைவனின் அவதாரப் பெருவிழாவில் கலந்து கொண்டு தங்களை ஒரு மார்க்கத்தின் கீழ் வலம் வரும் மக்கள் சமூகமாக மாற்றிக் கொள்ளும் மாபெரும் விழா ஒன்று அனைத்து நாடுகளின் பெரும் முயற்சியால் நடக்கும் என்றும்,  இது மனித வரலாற்றில் நடக்கும் மாபெரும் அதிசயம் என்றும், இதுவே பிரபஞ்சத்தில் இறை வரலாறுகள் தெரிவிக்கும் மகா முதல் நிகழ்வு என்று 58-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

இந்தியாவின் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் உலக நாடுகள் முழுவதும் பரவி கிடக்கின்றன என்றும், அவைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகள் மூலம் இனம் கண்டறிந்து மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் நடக்கும் என்றும், இதனால் இறைவனின் வரலாற்று உண்மைகளையும், அவரின் படைப்பின் தன்மைகளையும் மக்கள் சமூகம் கண்டு வியப்படையும் அதிசயங்கள் இனி நிகழ உள்ளதாக 58-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


மகா அதிசயம் என்பது இவ்வுலகில் இதுவரை நிகழவில்லை என்றும், இனிதான் இந்த மண்ணுலகில் நடக்க உள்ளதாகவும் இது பிரபஞ்சம்  வியக்கும் ஒரு அதிசயமாக விளங்கிடப் போவதாகவும் 58-ம் தீர்க்க தரிசனம் ஒரு புரியாத உண்மையை மக்களுக்காக எடுத்துக் கூறுகிறது. அதாவது மனித அவதாரங்களிலேயே இப்படி ஒரு அவதாரம் இதுவரை படைக்கப்படவில்லை என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப இறைவன் மேற்க்கொள்ளும் ஒரு சிறப்பு அவதாரம், இந்த மண்ணுலகில் நிகழ உள்ளதாக 58-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகிறது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

பாஜக மோடி கலாட்டா...


பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ்களை விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் கூறிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்...


தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பேருந்துகளை எப்படி இயக்குவது என்பது குறித்து பேசுவதற்கு பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்த பகுதியை சேர்ந்த சட்டமன்ற துணை சபாநாயகர் ஜெயராமனும் கலந்து கொண்டுள்ளார்.


அப்பொழுது தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க துணை சபாநாயர், அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 பேருந்துகளை விடுவிக்குமாறு கூறியுள்ளார்.

இதில் அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னரே இது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளனர்...

அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...


பாஜக முதல்வர் மோடி vs பிரதமர் மோடி...


ஈ.வே. ராமசாமி நாயக்கரும் சாதி வெறியும்...


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா -ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதான சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது.

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்..

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 58...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே NO என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மேலும் பயணிப்போம்.....

திருச்சி மூக்கரெட்டியபட்டியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு , சாராயபாட்டில்கள் எடுத்து போட்டு உடைத்த பொதுமக்கள் , கடையை அடைத்து விட்டு இடத்தை காலி செய்த அதிகாரிகள்...




நம்ப முடியாத இலுமினாட்டி இரகசியம்...


திராவிடக் கொள்கை ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ எடுபடவில்லை...


கட்சியையும் சாதியையிம் மறந்து தெலுங்கரெல்லாம் ஆந்திர மகாசன சபாவின் கீழும், மலையாளிகள் கேரள சமாசத்தின் கீழும் ஒன்று திரண்டனர்.

கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழரை மட்டுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனப் பிளவுபடுத்தினர்..

இதனால் மற்றவர்கள் இன வழியல் ஒன்றுபட, தமிழர்கள் மட்டுமே சாதியால் மென்மேலும் கூறுபட்டனர்.

உள்ளபடியே தமிழ்ப்பார்ப்பனரை எல்லாம் அரசுப் பதவியிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் அந்த இடங்களில் போய் தாங்கள் அமர்வதற்கான ஒரு நொண்டிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்..

தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்..

தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்..

அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிறரை சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க...

இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.

தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...

திமுக கருணாநிதி பேசியது தான் இதுவும்...


தமிழா விழுத்தெழு...


தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்கின்ற கேரளா, கர்நாடகம் , ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான ஆற்று மணலை தமிழகத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறதே அதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இந்த திராவிட அரசுகள்?

இதற்கு பெயர் தான் இனப்பற்றோ.?

தங்களுக்குத் தேவையான ஆற்று மணலை தங்கள் ஆற்றுப் படுகைகளில் இருந்து எடுக்க யாரையும் மணல் அள்ள விடுவது இல்லை.

ஆனால் தங்களுக்குத் தேவையான மணலை இந்த மூன்று மாநிலங்களும் தமிழ்நாட்டில் இருந்து திருட்டுத் தனமாகவும், தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தும் மணலை கொள்ளையடித்துக் கொண்டு போய் கொண்டிருக்கின்றன.

இதில் கேரளா இங்கிருந்து மணலை வாங்கி மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் பெரும் பணம் சம்பாதிக்கின்றது.

இதற்கு இங்கிருக்கும் அவர்களின் உறவுகளான் திராவிட அரசியல்வாதிகள் பக்கபலமாக இருந்து பகல் கொள்ளைக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

நம் ஆற்றுவளம் , மணல் அனைத்தும் நம் கண்முன்னேயே கொள்ளை போய் கொண்டிருக்கிறது.

மீறி எதிர்ப்பவர்களைக் கொலை செய்யவும் இந்தக் கூட்டம் தயங்குவது இல்லை.

இதற்கு எல்லாம் தீர்வு தமிழர் நாட்டை தமிழனே ஆண்டால் தான் நம் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்...

தமிழக அரசின் கலாட்டா..


வள்ளுவனின் கடவுளைத் தொலைத்த தமிழர்கள்...


தலைப்பு அதிர்ச்சி தருகின்றதா? படித்து முடித்ததும் பதிவும் ஆதிர்ச்சி தரும், வள்ளுவர் அப்படி எந்த கடவுளை தன்னுடைய குறளில் குறிப்பிட்டுள்ளார்? எதை நாம் தொலைத்தோம்? அந்த கடவுளுக்கு அப்படி என்ன சிறப்பு?

நண்பர் Manick Rajendran மற்றும் சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் (Cardiology) பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவரோடு கடந்த வாரம் காஞ்சி கோயில்களை காணச் சென்றிருந்தேன், ஆயிரம் கோயில் நகரில் மிகவும் பழைய கோயிலான சுமார் 1300 வருடங்கள் பழமையான கைலாசநாதர் கோயிலுக்கு சென்றிருந்தோம்..

ஒவ்வொரு சிற்பமாக டாக்டர் அவர்களுக்கு விளக்கிக் கொண்டே வருகையில் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட சிற்பத்தின் எதிரே நின்று விளக்கி கொண்டிருக்கையில், நண்பர் மாணிக் இடையில் புகுந்து ஒரு அற்புதமான தகவலை கொடுத்தார்.

இரவு நேர வானில் தெரியும் நட்சத்திரங்களில் பதினாறாவது ஒளி பொருந்திய நட்சத்திரமாக Antares என்ற நட்சத்திரம் உள்ளது, இந்த நட்சத்திரத்தை தான் நம்முடைய ஆட்கள் இந்த சிற்பத்தில் கடவுளுடன் தொடர்பு படுத்தி அழைகிறார்கள் என்ற தகவலைக் கொடுத்தார்.

வீட்டிற்கு திரும்பியதும் இது குறித்து அவரிடம் தொலை பேசி செய்து மேலும் பேசுகையில், இந்த நட்சத்திரம் குறித்த தகவலை இணையத்தில்தேடச் சொல்லி இருந்தார் அப்படி தேடிய போது Antares (α Scorpii, α Sco, Alpha Scorpii) is a red super giant star in the Milky Way Galaxy, Its visual luminosity is about 10,000 times that of the Sun, but because the star radiates a considerable part of its energy in the infrared part of the spectrum, the bolometric luminosity equals roughly 65,000 times that of the Sun. என்ற கூடுதலான அதிர்ச்சியான தகவலைய கொடுத்தது.

இத்தனை தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் தெரிந்த ஒரு விஷயத்தை நம்முடைய ஆட்கள் அந்த காலத்திலயே கண்டு பிடித்து அதை வணங்கி இருப்பது பேரதிர்ச்சியாக இருந்தது.

சார் இந்த நட்சத்திரத்தின் தகவல் பிரம்மிப்பாக உள்ளது என்று அவரிடம் கூறுகையில், சசி திருமணம் முடிந்து அம்மி மிதித்து, அருந்ததி நட்சத்திரம் பார்பதற்கு கூட அர்த்தம் உள்ளது, நம்முடைய ஆட்கள் எதையும் பொழுது போக்கிற்காக சொல்லவில்லை, அனைத்திற்க்கு பின்னும் அறிவியல் உள்ளது என்றார்.

என்ன செய்வது பகுத்தறிவாளிகள் உள்ளே புகுந்து பலவற்றை அழித்து விட்டார்களே என்று எண்ணிக் கொண்டேன், சரி யார் அந்த கடவுள், அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது?

பிறரை வையும் போது மூதேவி என்ற வார்த்தையை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம், அந்த மூதேவி யார் என்று ஒருமுறையேனும் நாம் சிந்தித்திருப்போமா? இல்லை.

சரி இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள், மூதேவி என்பவள் திருமகளின் (லக்ஷ்மி) அக்காள், அதாவது லக்ஷ்மிக்கு மூத்தவள் என்பதால் மூத்ததேவி, அதை தான் நாம் சுருக்கமாக மூதேவி என்றழைக்கிறோம்.

வள்ளுவர் தன்னுடைய அறத்துப்பாலில் 167 வது குறளில் இந்த மூதவியை தவ்வை என்ற பெயரில் முதன் முதலாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (குறள்:167)

விளக்கம்: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

தவ்வை என்பவள் யார் என புரிந்தது, அவள் எப்படி இருப்பாள் என்று யோசிக்கிறீர்களா?

மேலே உள்ள படத்தை பாருங்கள் பெரிய வயிறுடன் காக்கைக் கொடியை கையில் ஏந்தி தன்னுடைய இடது பக்கம் மகள் அக்னியுடனும், வலது பக்கம் தன்னுடைய மகன் நந்தியுடனும் பல கோயில்களில் காணக் கிடைப்பார், பல கல்வெட்டுகள் இவரை ஜேஷ்டை என்ற பெயரிலும் அறிமுகப்படுத்துகின்றது.

ஜேஷ்டாவிற்கும் மேலே கூறிய அந்த நட்சத்திரத்திற்கும் என்ன தொடர்பு என்று இணையத்தில் தேடுகையில் Jyeshtha (The Eldest) (Devanagari ज्येष्ठा)(Telugu: ఝ్యెష్ఠా) (Tamil: கேட்டை) is the 18th nakshatra or lunar mansion in Vedic astrology associated with the heart of the constellation Scorpii, and the stars α (Antares), σ, and τ . என்ற அறிய தகவலும் கிடைத்தது.

சங்க கால தமிழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என அனைத்து மக்களும் கொண்டாடிய தெய்வம் இவள், கடைசியாக சோழர் காலம் வரை சிறப்புற்று இருந்த இந்த தெய்வத்தை, பிற்காலத்தில் நாம் தொலைத்து விட்டோம்.

ஆனால் இன்றும் பழங்கால கோயில்களில் பத்தோடு பதினொன்றாக தன்னுடைய மகன் மகளுடன் ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாமல் வருவோருக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.

ஒருவேளை யார் கண்ணிலாவது பட்டாலும் அங்கே செல்லும் மக்களுக்கு இவள் யார் என்பது தெரியாது, இவளுக்கு இப்படி ஒரு நீண்ட நெடிய வராலாறு இருப்பதும் புரியாது.

பணம் தான் வாழ்கை என்றாகிவிட்ட காலத்தில் தவ்வை நமக்கெதற்கு? அவளின் தங்கை திருமகளே போதும் என்கிறீரா?

யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் ஆனால் இத்தனை அறிவியல் வரலாற்றையும் ஈராயிரம் வருடங்களுக்கு முன் வாழ்கை நெறியை நமக்கு கற்பித்த வள்ளுவனும் கூறிய தவ்வையை மறந்து விடாதீர்கள் தமிழர்களே...

பதிவு - Sasi Dharan

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


பாஜக மோடியும் தேசப் பத்தியும்...


அங்கே எல்லையில்  பாக் தீவிரவாதிகளால் ராணுவ வீரர்கள் இருவர்  தலைதுண்டித்து  படுகொலை செய்யப்பட்டுள்ளனர்..

சட்டிஸ்கரில் 25 சி ஆர் பி எப் வீரர்கள் மாவோயிஸ்ட்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்..

ஆனால் அதற்காக ஒரு  இரங்கலோ கண்டனமோ பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இல்லை..

அது குறித்து கவலைபடாமல் பிரதமரோ தனியார் முதலாளியான பதஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்...

கொடிய பஞ்சத்தைப் போக்கிய சித்தர் கோரக்கர்...


பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம்; ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள்.

அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பதுதான்.

அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின.

ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர்; இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா அனைவரும் அதிர்ந்தனர்.

இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார். பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது.

இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார். தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும்; நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும் என்று கூறினார்.

உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத் து வங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்; தண்ணருளைப் பொழிந்தார். இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது. தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.

சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச் செய்பவர்களே சித்தர்கள்.

இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ‘ஆர்ஷ லிங்கம்’ என்பார்கள். இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே. கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களை எல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார்.

அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார். பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன. எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.

அன்னதானம்...

அத்ரிமலை யாத்திரை சுமார் 6 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும். மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரிதபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம். பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும். முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்; ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்து விடுங்கள்...

ஜெயேந்திரர் உட்பட விடுவிக்கப்பட்ட 21பேரும் கொலை செய்யவில்லை என்றால் சங்கரராமனை கொலை செய்தது யார் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 57...


உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்..

தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள். சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.

இனி பயிற்சிக்குச் செல்வோம்.

எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.

ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மீக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.

நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு
நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.

துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.

இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.

இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

நம் வாழ்விற்கு மிக மிக உதவும் சில சக்திகள் பெறும் வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....

மே 15ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு...


ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...


மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்...

அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.

பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார்.

திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார்.

காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது.

அப்போது ராவ்டிவ் நல்ல உடல் நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார்.

அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது...

2030 ல் மீண்டும் பனியுகமா ?


சரியாகப் இன்னும் 13 வருடங்கள் கழித்து சிறிய அளவில் பனியுகம் வரும் என அனுமானிக்கப்படுகிறது..

1646 மற்றும் 1715 ல் , இது போன்ற சிறிய அளவிலான பனியுகம் ஏற்பட்டதாம்..

அதில் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியே உறைந்து போனது...

இப்போது வரபோகிற பனியுகம் இதைவிட வலிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது..

2020 ல் சூரியனின் ஆற்றல் சற்று மட்டுப்படுவதால், இப்படிபட்ட பனியுகம் ஏற்படப்போகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்...

கருகிய பயிர், கடனை கட்ட சொல்லி நெருக்கியதால் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி பால்பாண்டி...


கொடைக்கானல் அருகே கோம்பை காமராஜபுரத்தில் நடந்த சோகம்...

கண்டு கொள்ளாமல் இருக்கும் விவசாயிகளின் சோற்றை உண்ணும் அனைவருமே இதற்கு ஒரு வகையில் பொறுப்பு தான் என்கின்றனர் விவசாயிகளுக்காக போராடும் இளைஞர்கள்...

சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வே.ரா...


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான்
தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கஇலவசமாக இடம்
கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக்
குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில்
தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்ஈரோட்டில்ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ்சென்றிருந்தேன்.
தென்னாட்டில்ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள்எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம்
ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...