10/09/2021

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் என்றால் என்ன?

 


கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது.

இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை.

அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம்.

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள்.

மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது.

மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட்.

இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம்.

வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி நான் கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.

மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்..

இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.

3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.

4. இன்னொரு ஆச்சரியமான தகவல் - மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.

5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.

7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள்...

என்னுடன் பேச மறுப்பது ஏனடி...

 




மாலை பொழுதும்
வீசும் தென்றலும்...

எத்தனை சுகம்
சொல்ல வார்த்தையில்லை...

உன்
பிரிவில்தான் உணர்ந்தேன்...

வீசும் தென்றால் கூட
தணலாய் சுடுகிறது...

அந்திமாலை
பொழுதும் நள்ளிரவாக...

தொலைவில் கூவும்
குயிலின் ஓசைகூட...

என் இறுதி ஊர்வலத்தில்
ஓதும் ஓசையாக கேட்குதடி...

உன்னோடு சேர்ந்து ரசித்த
செக்க சிவந்த வானம்கூட...

எனக்கு
மட்டும் கருமையாகவே...

நீ இல்லாத வாழ்க்கையில்
பிரிவின் வலி மிக கொடியது...

தணலாய் வீசும் தென்றலில்
வேற்கிறதா என் மேனி...

உன் பிரிவின் வெப்பத்தால்
வேற்கிறதா தெரியவில்லை...

தினம் காற்றோடு
கலந்து பேசுபவள்...

என்னோடு நீ
பேச மறுப்பதென்னடி.....

சித்தி புத்தினு 2 பொண்டாட்டி காரன் கணபதிக்கு இந்த மொரட்டு சிங்கிஸ்ஸோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

 


தமிழர் யார் என்பதற்கான வரையறை...

 


கேள்வி: செம்மண், உவர் மண், களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...?

இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...?

அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை.

மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது.

காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி.

இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது.

இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை நான் இப்படி வரையறை செய்கிறேன்.

தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்...

இப்படி துல்லியமாக வரையறுக்கா விட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை..

குறிப்பு : இல்லாத இந்தியத்தை போலியாக உருவாக்க முடிந்தது என்றால்...

பல்லாயிரம் ஆண்டுகளாக வரலாறாக வாழும் தமிழினம் மீண்டும் தனக்கான தேசத்தை ஏன் உருவாக்க முடியாது.?

இப்போ தான் புரியுது எங்கே எந்த பெண் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாலும் பெண்ணின் ஆடையையும், அவளின் ஒழுகத்தையும் குறை சொல்லிட்டு வந்துடுவானுங்க கலாச்சாரக் காவலர்கள்...

 


தீவிரவாதிகளுக்கு முன் உதாரணமாக திகழும் மோடி 😂

 


சீக்கிரம் பெரிய ஆள் ஆவது எப்படி.??

 


நிறைய உழைக்கணுமா. 🤔

அதுதான் இல்ல..

சொந்தக்காரங்க கூடவும் நண்பர்கள் கூடவும் கொஞ்ச நாள் பேசாமல் இருங்க.. 

அவங்களே மத்தவங்க கிட்ட சொல்லுவாங்க அவனுக்கு என்னப்பா பெரிய ஆளா ஆயிட்டான் யார் கூடயும் பேச மாட்டான்னு...

🤣🤣🤣🤣

பங்காளி, அங்காளி என்றால் என்ன?

 


பங்காளிகள் - தந்தைவழி உறவினர்கள் ‘பங்காளி’ களாவும், தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளி.

அது போல நமது தகப்பன் வழி சகோதர்களின் வாரிசுகளான பெரியப்பா மகன், சித்தப்பா மகன், ஒன்றுவிட்ட , இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள் பங்காளிகள் ஆகும்...

அங்காளி - தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

நமது தாய்வழி உறவினர்கள் சகோதிகளின் வாரிசுகளான அதாவது சின்னம்மா மகன் பெரியம்மா மகன்களே அங்காளிகள் ஆகும்...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி 😁

 


காலை வணக்கம் மக்களே...

 


என் வயிற்றெரிச்சல் கிளப்பவே.. வருஷம் வருஷம் ஒரு 2 பொண்டாட்டிக்காரன் பிறந்தநாள் கொண்டாடுறான் 😞