01/01/2021
போலி என்கவுண்டரில் தொடர்ந்து கொல்லப்படும் இந்த மகன்களுக்காக நீங்கள் வெளியே வராவிட்டால் நாளை உங்கள் மகன்களுக்காவும் யாரும் வரப்போவதில்லை என காஷ்மீர் முழுதும் அறைகூவல்...
காஷ்மீரி அன்னைகள் நாளை ஸ்ரீநகரை ஆக்கிரமிக்கிறார்கள்...
காட்டுமிராண்டிகளின் கைகளில் அதிகாரம் இருப்பதால் மானுட வரலாறு மிகவும் தாழ்வானதொரு நிலையை அடைந்திருக்கிறது. இது இந்தியாவிற்கான அவமானம் இல்லை, மானுட வரலாற்றின் அவமானம்.
மனிதம் இன்னும் காட்டாண்டி நிலையில் இருந்து முற்றிலும் விடுதலை அடையவில்லை.
சமீபத்தில் 'aggression, warfare' பற்றியெல்லாம் ஒரு செமினாருக்காக வாசிக்க நேரிட்டது.
உலகில் மனிதன் தவிர வேறு எந்த உயிரினமும் சக உயிரினத்தை (conspecifics) கொல்வதில்லை என வாசித்த போது ஒரு உயிரியாய் வெட்கப்பட்டேன்.
அந்த வெட்கம் கமேண்டர் விஜயகுமாருக்கும், அவரை கொண்டாடிய சிவக்குமார் பளுவாரங்களுக்கும், இவர்களின் டெல்லி ஓனர்களுக்கும் இருக்குமா என தெரியவில்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களை கொல்லும் சிந்தனை கொண்டோரை தேர்தலில் தோற்கடிப்பது அந்த சிந்தனையை கொல்லுமா என தெரியவில்லை.
விஜயகுமார் தமிழ்நாடு கேடரில் இருந்து வந்தவர் என காஷ்மீரிகளுக்கு தெரிய விடாது பார்த்துக் கொள்ளுங்கள், நபிகளே...
பாஜக அன்றும்.. இன்றும்...
பாஜக அன்று : எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கக்கூடாது. இது காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்வோம்...
பாஜக இன்று : பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்யட்டும். வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு பதில் தினம் தினம் விலையை நிர்ணயம் செய்து கொள்ளட்டும்...
தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப் படுத்திய ஈ.வெ.ரா...
தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு..
ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத் தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார்.
அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலை மறையாகச் சொல்லிவிட்டார்.
இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் உரிமை’ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கி விட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்).
அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டது தான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர்.
இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது.
சென்னையில் சில அம்பேத்கர் வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்.
(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963).
இதிலிருந்து தெரிவதென்ன?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா.
தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள்.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையும் கேவலமாகப் தான் பேசியிருக்கிறார்...
திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்.. ஞாபகப்படுத்துவோமே…
1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை.
2.1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே..
3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே..
4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் தானே முதல்வரானார்.
5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?
6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர். எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு..
7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக் கொண்டார்..
8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சி தான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடு பொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே?
10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே.
11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது.
12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி..
13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?
14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?
15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி தானே. இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே?
16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?
17. கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும்தான் தெரியும் போல..
இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே..
ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி...
தமிழர் என்பவர் ஒரு தேசிய இனம்.. தமிழர்களின் தாய் மொழி தமிழ்...
தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய இனக்குழுவைச் சேர்ந்தவராவர் மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும்.
உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும் இலங்கையுமே ஆகும்..
1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள்.
இவ்வாறே மொரிசியசு தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர்.
1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.
1983-இல் இலங்கை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா பிரான்சு யேர்மனி சுவிற்சர்லாந்து டென்மார்க் நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள்.
உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது...
ஏப்ரல் முட்டாள்கள் நாள்...
ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வரலாறு..
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாத போதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது..
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது.
பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.
இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு.
அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது...
பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு கன்னட தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி கூறுகிறார்...
பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக் கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா? (விடுதலை 20-04-1962)..
தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?
தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடை பிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயூடுக்கு என்ன தகுதியிருக்கிறது?
நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?
இந்த கன்னட தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி தான்.. தமிழ்க்காகவும் தமிழனுக்காகவும் பாடுபட்டார்...
அட சொன்னால் நம்புங்கள்...
இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியே தான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)..
காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்..
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)...
நோயே இல்லை என்றாலும் இவர்கள் திட்டம் தடுப்பூசி போடுவது தான் போல..அப்போ அந்த தடுப்பூசியில் என்ன இருக்கிறது?
மக்களுக்கு எதிரான ஆளும் அரசு கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் எதிர்க்கும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஆபத்தான_தடுப்பூசி திட்டத்திற்கு தன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை ஏன்?
கிராமங்களில் சோறு இல்லை என்பது ஹாசனுக்கு தெரியவில்லை, கிராம பள்ளிகளில் படித்த பிள்ளைகளுக்கு மருத்துவ சீட்டு இல்லை என்பது ஹாசன் கண்களுக்கு தெரியவில்லை...
கிராமங்களில் வேளாண்மை இல்லை என்பது நாக்பூர் ப்ராடக்டுக்கு தெரியவில்லை.
மாறாக, தனது பிரச்சாரத்துக்கு எலிகாப்டர் வசதி செய்து தரும் அம்பானியின், அதானியின் தொழில் கிராமங்களில் அபிவிருத்தி ஆகவில்லை என வருந்துகிறார்.
நல்லவேளை ஈவிஎம் காசன்.. Xvideosம், porn hubம் சரியாக ஸ்ட்ரீம் ஆவதில்லை என சொல்லாமல் போனார்.
மாணவர்கள் வாழ்நாள் முழுதும் ஆன்லைனில் கல்வி கற்க போகிறார்களா? கொரோனா நம்மை விட்டு அகலவே அகலாதா?
அப்படியானாலும் ஆன்லைன் கல்விக்கு ஏன் அழவேண்டும்? தொலைதூர கல்வியில் கட்டணமின்றி பயின்று விடலாமே?
ஈவிஎம் ஹாசன் ஒரு காரியாக்கார கிறுக்கன். ரசினிகாந்தைவிட பன்மடங்கு ஆபத்தானவன். ஈவிஎம் இருக்கும்வரை அரசியலில் இருப்பான..
அட.. இந்த மானங்கெட்டவனா தமிழர் தலைவர்...
25வயதில் காசியில், இவருக்கு ஒருவன் கூட பிச்சை போடமாட்டேன் என்று துரத்தியடித்தான். அவ்வளவு நல்லவர்.
பின், இடுப்பில் அரைஞான் கயிற்றில் ஒரு பவுன் மோதிரத்தை மாட்டிக் கொண்டு, பிராமணன் போட்ட எச்சில் இலையை வழித்து தின்றேன் என்று மார்தட்டிக் கொண்ட, இவர் எல்லாம் பகுத்தறிவுவாதியா?
இந்த அறிவு கெட்ட செயலை எந்த தமிழனும் செய்யமாட்டான். நீ தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று நீயே நாடகமாடினாய்..
தமிழருக்கு வரலாறு இல்லை,
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி,
தமிழை படிக்காதே ஆங்கிலத்தை படி,
தமிழன் எதற்கும் லாயக்கு அற்றவன் என்று தமிழனை இழிவு படுத்தி, கேவலப்படுத்திய இவரும், தமிழனை இழிந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலபடுத்திய பிராமணனும் ஒன்று தானே...
அதையும் விட மேலாக தமிழனின் முதுகில் குத்திய துரோகி..
பிச்சை எடுப்பவனை பிச்சைக்காரன் என்று கூறலாம், மற்றவன் தின்று தூக்கிப் போட்ட எச்ச இலையை தின்றவரை என்ன வென்று அழைப்பது?
33 என்ற எண் (number 33)...
பல இடங்களில் நீங்கள் 33 என்ற எண்ணை கடந்து சென்றிருப்பீர்கள் அதன் சிறப்பு தான் என்ன ?
இயேசு 33 வயதில் சிலுவையில் அறையபட்டார்.
இசுரேயலில் முதல் அரசர் தாவீது 33 ஆண்டுகள் அட்சி செய்தார்.
எருசலேம் கோவில் 33 ஆண்டுகளுக்கு பின் இடிக்கப்பட்டது.
சுகாடிசு ஒழுங்கு ஃப்பிரீ மேசனரியில் உச்ச நிலை 33.
நமது முதுகெலும்பின் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை 33.
நமது மக்களிடையே இந்த எண் பற்றி செய்தி உள்ளதா என தெரியவில்லை. நீங்க தெரிந்தா சொல்லலாம்.
முதுகெலும்பில் 33 நிலைகள் ஏறி சென்று மண்டை ஓட்டில் இறைவனின் திரவ புதையலை பெறுங்கள்..
இயேசு 33 வயதில் மண்டை ஓடு என்னும் இடத்தில் பலியானார்.
அதாவது குண்டலினி...
இதேபோல தொடர்ந்து மதவாதத்தை எதிர்த்து களமாட இஸ்லாமியரே திருட்டு திமுக வை ஆதரியுங்கள்..
நீங்கள் அனைவரும் இந்துக்களாக மாற்றப்படும் வரையிலோ, அல்லது மீதியே இல்லாமல் போகும் வரையிலோ ஆதரியுங்கள்...
மறவோம்.. நினைவில் வைத்திருப்போம்...
மறவோம்.. நினைவில் வைத்திருப்போம். இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.
யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள். தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.
தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு. அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.
அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார். நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி இஸ்ரேல் என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.
தமிழின மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல், தொடர்ந்து போராடி தமிழீழத்தை தமிழகத்தையும் வெல்வோம் என்று தினமும் சூளுரைப்போம்...
தெலுங்கர் வைகோ நாயூடு வும் சாதி வெறியும்...
வைகோ நாயுடு தனது சாதியை சேர்ந்தவரான விசயகாந்த்க்கு ஒரு பிரச்சனை என்றவுடன் கருணாநிதி மேல் சாதி வெறியோட பாய்ந்தார் 2016 தேர்தலில்...
வைகோவின் உண்மை முகத்தையும் திராவிடத்தின் சாதிய அரசியலையும் 2016 தேர்தலில் மக்கள் உணர்ந்தார்கள்..
தனது இனத்தவராய் கருணாநிதி இருந்த போதும் அவர் மீது சாதிய நஞ்சை கக்கிய வைகோ நாயுடு.
தமிழர்கள் மீது எவ்வளவு வன்மம் கொண்டு இருப்பார் என்பதை உணர்த்திய 2016 தேர்தல் களம்...