18/03/2018

முத்தம் பசியின்மையை போக்கும்...


முத்தத்தால் பசியின்மையை சரிசெய்ய முடியும் என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுக்கப்படுகிறது, இதுமட்டுமல்லாது பல்வேறு நன்மைகளும் விளைகின்றன என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது முத்தம் பசியின்மையை போக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்...

முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஊக்கிகள் (Hormones) சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.

அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது, கோபம் மறைகிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...

திமுக தெலுங்கர் ஸ்டாலினும் மானங்கெட்ட பொழப்பும்...


கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்...


கோலார் மாவட்டத்தில் கன்னடர் பெரும்பான்மையாக இருந்தனர்...

ஆனால் அதற்கு அருகே இருக்கும் தங்கச் சுரங்கமான கோலார் தங்க வயல் பகுதி தமிழர் பெரும்பான்மை பகுதியாகவே இருந்தது. இருக்கிறது.

தமிழர் உழைப்பில் தங்கம் அனைத்தும் எடுக்கப்பட்டு கன்னடரும் ஹிந்தியரும் பங்குபோட்டுக் கொண்டனர்.

1982 ல் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடியதால் இப்பகுதியில் கன்னட அரசின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கைக்கு 4 தமிழர்கள் பலியாயினர்...

கடனில் தத்தளிப்பதாக பொய் கணக்கு காட்டும் பாஜக மோடி நண்பர்களின் நிறுவனங்கள்...


காவிரிப்பூம்பட்டினம் - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம்...


பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம்...

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.

ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள்..

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த காவிரிப்பூம்பட்டினம். பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்..

காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது.

இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்.. இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது..

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.

ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".

இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது..

இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது..

அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்.. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி"...

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது.. இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்.. இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர்..

பட்டினப்பாக்கம்...

இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர்.

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன...

(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்...

(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர். நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.

அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது.

தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை...

திமுக தெலுங்கர் ஸ்டாலினுக்கு செருப்படி...


கால வாய்ப்பாடு...


நல்ல நீரூற்று என அறிவது எப்படி...?


மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.

முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய் விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று... கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

Lic பணம் பத்திரமா இருக்கா.?


அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்...


ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மையம்...

அதிமுக அடிமை எடப்பாடி கலாட்டா...


ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்...


நம்மில் ஒவ்வொருவரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதில் அற்புத சக்தியை நம் வாழ்க்கையில் கண்டிருப்போம்.

நாம் ஒருவரைப் பற்றி எண்ணி அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம் அல்லது அவரிடமிருந்து phone call வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதேவேளையில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். Phone call வந்தவுடன் இவராகத்தான் இருக்கும் என எண்ணி receiver ஐ எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த விடயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றைப் பெரிதாக நினைப்பதில்லை.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பல தரப்பட்டவை. அவை...
 
Psycho kinesis : இது வெளிப்பொருட்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு, பொருட்களை பார்வையிலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை.

நினாகுலாகினா என்ற ரஷ்யப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்தது.

Extra sensory Perception (ESP) : இது நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறியமுடிவது ஆகும்.
                       
உதாரணமாக; Cards ஐ வைத்து Josep pernks  செய்த ஆராய்ச்சிகள் அவர்  எடுத்த  cards  எது  என்பதை  பார்க்காமலேயே  சொல்ல  முடிந்தது.

Telepathy : இது ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது ஆகும். இது ஆழ்மன ஆராய்ச்சி  வகையில் சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே காணலாம். தாய்-குழந்தை, கணவன்-மனைவி, நெருங்கிய நண்பர்களிடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மில் காணமுடியும். வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

Claivoyance or Remote viewing : இது வெகுதொலைவில் உள்ளதை காணக்கூடிய சக்தி ஆகும். ஆபிரிக்கக்  காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்ச ரேகை, தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை உதாரணமாகக் கொள்ளலாம்.
         
ஆவிகளுடன் பேசமுடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

Psychometry : இது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விடயங்களையும் மனிதர்களையும் அறிய முடிவதாகும்.

இதற்கு உதாரணமாக Petter heerkoes என்ற டச்சுக்காரரை சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்தச் சக்தியை எதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும்  தடயப் பொருட்களினைக் கொண்டு குற்றவாளிகளை விபரிப்பதில் வல்லவராகயிருந்தார். 

Precognition : இது நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியாகும்.

உதாரணமாக Chrittus என்ற ஞானி பல விபத்துக்களை நடப்பதற்கு முன்கூட்டியேசொன்னார்.

Post cognition : இது என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தியாகும். சில வெளிநாடுகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Astrol projection or out of Body experience (OBE) : உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தியாகும். இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள்.

இது குறித்து Dr. Charls dard ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதிவைக்கப்பட்டிருந்த 5 இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

Psychic Healing or Spiritual Healing : இது மருந்துகளின் உதவியின்றி நோய்களைக் குணப்படுத்தும் சக்தி ஆகும். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்திவகையில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது மாற்று சிகிச்சை சக்தி வகைகளிலே சேர்க்கின்றனர். ஆனாலும் இது ஆழ்மன சக்திகளில் சேர்ப்பது மிகப் பொருத்தமானது.

ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த 9 வகைகளில் அடக்கிவிட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை எனலாம்...

புறக்கணிக்கப்படும் தென்னிந்தியா.. களம் இறங்கிய ஆந்திர, கர்நாடக முதல்வர்கள்...


இப்போதாவது வாய் திறப்பார்களா அதிமுக ஊழல் அடிமைகள்...

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை...


திராவிட கன்னடன் சுட்டுக் கொன்ற தங்கத் தமிழர்... மறைக்கப்பட்ட தமிழினக் கொலைகளில் ஒன்று...


1982 சூலை மாதம் கர்நாடகாவில் உள்ள தமிழர் தாய்நிலமான கோலாரில் தமிழ்மொழிக் கல்விக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழர், காணாமல் அடிக்கப்பட்ட 15 தமிழர்.

அறிக்கை: கர்நாடகத்தில் மொழிக் கொள்கை,கன்னடர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில்முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்தமறைந்த குண்டுராவ் தலைமையிலானகாங்கிரஸ் கட்சி அரசு 1982-ம்ஆண்டு அமல்படுத்தியது.

இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது.

இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்கஉரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத்தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழர்கள்அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில்இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாகநடந்தது.

அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்கமுயன்றது.

போராட்டம் நடத்திய தமிழர்கள்ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.

காவல்துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு உரிமைக்காக தமிழர்கள்தொடர்ந்து போராடினர்.

இதனால் குண்டுராவ்அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை அடக்கஉத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்துதங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன்ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர்.

பலர்காயம் அடைந்தனர்.

போலீஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட பலர்இன்று வரை வீடு திரும்பவில்லை.

அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15பேர்...

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளி விழாவில் பங்கேற்ற மாணவர்கள் உள்பட 100 பேருக்கு கண்பார்வை பாதிப்பு...


மேடையில் அமைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த விளக்கு  வெளிச்சத்தால் கண் பார்வை பாதிப்பு என புகார்...

புற்று நோயை குணமாக்கும் பீட்ரூட்...


நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் உணவு முறையகளில் உள்ள காய்கறிகள் அதிக மருத்தவத் தன்மையை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

அதிலும் பீட்ரூட் அதிக அளவிளான சத்துகளை கொண்டுள்ளது.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில்

பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்...

பாஜக மோடி டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த சதி திட்டம்...


கடவுள் உங்கள் நம்பிக்கை சார்ந்ததாக இருக்கட்டும், வம்சங்கள் உங்கள் வரலாற்றை அறிவதற்காக இருக்கட்டும்...


எப்போது நீங்கள் கடவுளை மற்றொரு கடவுள் சார்ந்த காழ்ப்புணர்ச்சிக்காக மதமாக மாற்றினீர்களோ, வம்சங்களை சாதி ரீதியாக மாற்றினீர்களோ அன்றே நாம் மனிதனாக வாழ்வதற்கு தகுதியை இழந்து விட்டோம்..

ஏனெனில் உலகம் தோன்றி பல லட்ச ஆண்டுகள் ஆகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..

ஆனால் சாதி, மதங்கள் உருவாகி 5000 ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை.. சாதி, மதத்தை விட மனிதமே சிறந்தது...

இமயமலைக்கே சீனியர்.. மேற்கு தொடர்ச்சி மலை 1600 கி.மீ. நீள இயற்கை பொக்கிஷம் - உலக பாரம்பரிய சின்னமானதால் கூடுதல் கம்பீரம்...


இமயமலையை விட வயதில் மூத்தது, மொத்தம் ஆறு மாநிலங்களை கடந்து, 1600 கி.மீ. தூரம் நீண்டு பல அதிசயங்களை, பொக்கிஷங்களை தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தேக்கு உள்பட பல அரிய மரங்கள், ஏராளமான உயிரினங்கள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்கள், சபரிமலை, பழநி கோயில் போன்ற இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேற்கு தொடர்ச்சி மலை. இவ்வளவு பெருமைகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

குஜராத்தின் தாபி பள்ளத்தாக்கில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம்,  கேரளா, தமிழ்நாடு வழியாக இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் முடிகிறது மேற்கு தொடர்ச்சி மலை. 6 மாநிலங்களை தாண்டி மொத்தம் 1,600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இது ‘சாயத்ரி மலை’ எனவும், தமிழகத்தில் பொதிகை மலை, ஆனைமலை, நீலகிரி மலை எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மிக உயரமான சிகரமாக கேரளாவில் உள்ள ஆனைமுடி விளங்குகிறது. 2 ஆயிரத்து 695 மீட்டர் உயரத்தில் உள்ள இதுதான் தென்னிந்தியாவின் உயரமான சிகரம்.

புவியியல், வரலாற்று அறிஞர்கள் இந்த மலை ‘கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி’ என கூறுகின்றனர். பண்டைய காலத்தில் இந்த மலை தற்போதைய ஆப்ரிக்கா, மடகாஸ்கர், செஷல்ஸ் தீவுகளுடன் இணைந்திருந்தது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் மாற்றம் ஏற்பட்டபோது கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென்னிந்திய பகுதிகள், ஆசிய கண்டம் நோக்கி இடம் பெயர்ந்தன. இதோடு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவான புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலை என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு, காலப்போக்கில் அங்கு அரிய தாவரங்கள், உயிரினங்கள் உருவாக காரணமாக அமைந்தது. இங்குள்ள பல ஆயிரம் வயதுள்ள அடர்ந்த சோலை காடுகளை போன்று உலகில் வேறு எங்கும் காண முடியாது.

இந்த மலையில் உருவாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகின்றன. பல்வேறு சிறிய ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. அதில் சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கல்லாறு, பெண்ணாறு, பெரியாறு ஆகியவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு, நீர் பாசனத்துக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள கோபாளி, கோய்னா, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர், கேரளாவின் பரம்பிக்குளம், தமிழகத்தில் மேட்டூர் ஆகிய பெரிய அணைகள் முக்கியமானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மிளா போன்ற மிருகங்கள், மான், சோலை மந்தி, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட 139 வகையான பாலூட்டி இனங்கள், 508 வகை பறவைகள், நிலத்திலும் நீரிலும் வாழும் 176 வகை உயிரினங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் 119 வகை பட்டர் பிளை, பறக்கும் அணில், பறவை கீரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும்.

இந்த மலையில் தேக்கு மரக்காடுகள் அதிகம் உள்ளன. தேக்கடி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் பூக்கும் மலர்கள், மலையின் அழகை ரம்மியமாக்குகிறது. தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. இதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி அன்னிய செலாவணியை அள்ளித் தருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

அரபிக் கடலில் வீசும் குளிர்ந்த காற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி மழை தருகிறது. இதுதான் தென்மேற்கு பருவ மழையாகும். தென்னிந்தியாவின் நீர் ஆதாரமே இந்த மலைதான். இத்தகைய சிறப்புமிக்க மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு முன்பு மத்திய அரசின் நிபுணர் குழு ஆராய்ச்சி நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. அதில் ‘மேற்குத் தொடர்ச்சி மலையில் 60 சதவீதம் பகுதி புலி, யானைகள் காப்பகம், சரணாலயங்கள், தேசியப் பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக ஏற்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய வனப் பகுதி 25 சதவீதம். இதை பாதுகாக்க யுனெஸ்கோ பல ஆயிரம் கோடி நிதி அளிக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை வளத்தை மேம்படுத்த வேண்டும். மழை வளம் தொடர்ந்து கிடைக்க மலை வளம் காக்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த மலையின் மைந்தர்களாக வாழும் பளியர், படுகர், இருளர் போன்றவர்களை சுற்றுச்சூழலை காரணம் காட்டி மலைப்பகுதியில் இருந்து விரட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு என்ற குற்றச் சாட்டையும் சிலர் எழுப்பியுள்ளனர். உண்மையில், பல நூறு ஆண்டுகளாக இந்த மலையில் வாழும் இவர்கள்தான் உண்மையான சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள். இவர்களையே மேற்குத் தொடர்ச்சி மலையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மலையை குடைந்து குவாரி அமைத்து கனிம வளத்தை அழிப்பதில் கர்நாடகாவும், புதிய அணை, மின் உற்பத்தி திட்டமிடுவதில் கேரளாவும் முனைப்பு காட்டுவதுதான் நம் நெஞ்சில் வேல் பாய்ச்சுகிறது. மழை குறைவுக்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதுதான் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குழு தலைவர் அப்பாஸ் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து பாரம்பரிய பட்டியலில் அறிவிக்கப்பட்டு இருப்பது இந்திய நாட்டுக்கே பெருமை. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதன்மூலம் மலையில் கேரளா, கர்நாடகம் புதிய அணை கட்ட முடியாத நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மலையின் சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்பட அனுமதிக்க கூடாது. மலையில் மரங்கள் உள்ளிட்ட இயற்கை செல்வங்களை அழியாமல் காக்க முன்வர வேண்டும். உலகில் எங்குமில்லாத அரிய உயிரினங்களுக்கு ஆபத்து நேரக் கூடாது. இதன் மூலம் மலை வளம் காக்கப்படும்’’ என்றார்.

உற்பத்தியாகும் ஆறுகள்..

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள்: பத்ரா, பீமா, சாலக்குடி, சித்தாறு, கோதாவரி, கபினி, காளி, கல்லாயி, காவிரி, கோய்னா, கிருஷ்ணா, குண்டலி, மகாபலேஷ்வர், மலபிரபா, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, பரம்பிக்குளம், வைகை, பெண்ணாறு, சரஸ்வதி, சாவித்ரி, ஷராவதி, தாமிரபரணி, தபதி, துங்கா, வீணா.

அருவிகளும் ஆன்மீக தலங்களும்...

குற்றாலம், அகஸ்தியர், சுருளி, அப்பே, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி என இந்த மலை தொடர்ச்சியில் உள்ள அருவிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. கோவா, பாலக்காடு போன்ற கணவாய்களும் அமைந்துள்ளன.

ஆன்மிகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலை புகழின் உச்சியில் நிற்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில், பழநி மலை, கற்புக்கரசி கண்ணகி கோயில் போன்றவை இதில்தான் அமைந்துள்ளன. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் குளு குளு ஊட்டி, இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களும், சுற்றுலா பயணிகளை கவரும் தேக்கடியும் அமைந்துள்ளன.

களக்காடு முண்டந்துறை, பிடிஆர் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், அகத்தியமலை, நீலகிரி உயிர்க்கோள காப்பகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பூங்கா, பந்திப்பூர் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர், தலைக்காவிரி, வயநாடு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் காட்டுயிர் வாழ்விடங்கள் மற்றும் பறவைகள் வாழ்விடங்களும் அமைந்துள்ளன.

----- மேலும் தகவல்களுக்கு visit http://nammacoimbatore.in/ அல்லது "நம்ம கோயம்புத்தூர்" Android App - ஐ playstore - ல் nammacbe என search செய்து Download செய்யுங்கள்,

https://play.google.com/store/apps/details?id=com.bysoft.nammacbe&hl=en

விவசாயிகள் இடதுசாரிகள் தலைமையில் கிளர்ந்தெழுந்து நடத்தும் போராட்டத்தை திசை திருப்ப பாஜக வின் ஸ்லீப்பர் செல் அன்னாஹசாரே டில்லியில் சத்தியாகிரக நாடகம் அறிவிப்பு...


செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...


பாபர்மசூதியை இடித்தவன் வரான்..

மாட்டிறைச்சி பெயரால் பல கொலைகளை செய்தவன் வர்ரான்...

செத்து போன மாட்டு தோழை உரித்ததற்காக தலீத் மக்களின் தோழை உரித்தவன் வர்ரான்...

உயர்ஜாதியின் குடிக்கும் கிணற்றில் நீர் குடித்தற்காக தலித் சிறுவர்களை கொன்றவன் வர்ரான்...

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...

அம்பேத்கர் உருவபடத்தை யானைமீது வைத்து ஊர்வலம் போனதற்காக நான்குபேர்ரை ரத்தம் சொட்ட சொட்ட தெருவில் அடித்து இழுத்து சென்றவன் வர்ரான்...

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...

இந்தியாவை உலகரங்கில் தலைகுனிய செய்தவன் வர்ரான்...

சாதிகளின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கியவன் வரான்...

அஜ்மீர் தர்ஹால குண்டு வைத்த வடநாட்டு Rssகாரன் வர்ரான்...

முஷாபரில் கலவரத்தை தூண்டியவன் வர்ரான்...

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...

மலைவாழ் பெண்களை நிர்வாணமாக்கி எட்டி உதைத்தவன் வர்ரான்...

கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை பெட்ரோல் ஊற்றி எறித்தவன் வரான்...

போலி லவ் ஜிஹாத்னு சொல்லி முதியவரை உயிரோடு எரித்தவன் வர்ரான்...

இந்துத்துவாவதி வர்ரான்...

ராமர் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ரத்த ஆறு  ஓட செய்ய வர்ரான்...

உஷார்  பொதிகைமலைக்கு சொந்தக்காரர்களே பொழப்பில் மண்ணஅள்ளி போடப் போரான் உஷார்...

இவர்களே தயாரித்து இவர்களே பரப்ப போகிறார்கள்...


ஆல்ஃபா அலைவரிசை...


எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும், அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.

முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்துக்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை "ரிலாக்ஸ்" (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான
மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.

முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம்.

சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்...

ஆதார் அட்டையும் உண்மைகளும்...


தமிழக அரசியலில் அமமுக மாற்றத்தை ஏற்படுத்தும்: டி.டி.வி.தினகரன்...


தமிழக அரசியலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது...

சரக்கு மற்றும் சேவை வரியால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.

ஜிஎஸ்டி மூலமாக தமிழகத்துக்கு ரூ.682 கோடி வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றிய விவரங்கள் இல்லை.

அதேபோல, ஆளுநர் உரையின் போது மத்திய அரசிடம் இருந்து ரூ.6 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபற்றியும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை.

வடசென்னையில் தொடர்ந்து 3 நாள்கள் மழை பெய்தால் வெள்ளம் சூழக்கூடிய நிலை தான் இப்போதும் உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படும் என அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையைப் பொருத்தவரை குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஏதோ சம்பிரதாயத்துக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே அவர்களுக்கு கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும். தமிழக அரசின் அடுத்த நிதிநிலை அறிக்கையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதி அமைச்சர் தாக்கல் செய்வது உறுதி.

நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு விரைவில் வீட்டுக்குச் செல்வது உறுதி.

கடந்த 1967-இல் அண்ணா, 1972-இல் எம்ஜிஆர், 1991-இல் ஜெயலலிதா எப்படி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ அதேபோன்ற மாற்றத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது இதைத் தான் கூறினேன்.

பத்திரிகையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இதை நம்பவில்லை. இப்போதும் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறுகிறேன். பேரவைத் தேர்தலில் அது நிகழ்வது உறுதி.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அதிமுக கொடியைப் போல இருப்பதாகக் கூறி நீதிமன்றம் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்யக் கூடிய இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு சாதகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கும்போது கொடி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு துணை விதியை அமைத்திருக்கிறார்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறேன் என்று சொல்பவர்கள், அந்த துணை விதிகளில் சொல்லப்பட்ட விஷயங்களைத் தெரியாமல், எங்களது கொடியையும் பார்க்காமல் நீதிமன்றத்துக்குச் செல்வது வேடிக்கையாக இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடைக்கால ஏற்பாடு தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது நீதிமன்றத் தீர்ப்பில் தெரியவரும்.

எங்களது அமைப்பின் பெயரில் திராவிடம் இல்லை என்கிறார்கள். அம்மா (ஜெயலலிதா) என்பதே திராவிடம் தான் என்றார்...

இந்தியமும் - திராவிடமும் நம்மை அழிக்கிறது விழித்துக்கொள் தமிழா...


நடக்கப் போவது என்னனா...

இந்தியா நம்மை தொடர்ந்து நசுக்க அனைத்து நாசகார திட்டங்களும் அரங்கேறும்...

பின்னர் தனி திராவிட நாடு கோரிக்கை அமராவதியை தலைநகராகக் கொண்டு போராட்டம் தொடங்கப்படும்...

நம் நிலங்களும் நாமும் அழிக்கப்பட.. அதே நாசகார திட்டங்கள் வளர்ச்சி என்ற பெயரில் மீண்டும் திணிக்கப்படும்..

இன்று திமுக தெலுங்கர் ஸ்டாலின் விட்ட அறிக்கையையும் நினைவில் கொள்க...

நடப்பு பட்ஜெட்டில் மருதையாறு குறுக்கே அணை கட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத தைக் கண்டித்து கரைவெட்டி பரதூர் கிராம மக்கள் விவசாயிகள் சாலைமறியல்...


மருதையாறு குறுக்கே அணை கட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு சுமார் 20 கி்.மீ. தூரம் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் அரசிடம் கோரிக்கை வைத்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை.

கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியிட வில்லை. சமீபத்தில் அரியலூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவின் போது முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என விவசாயிகள் எதிர்பார்த்தனர் அப்போதும் அறிவிப்பு வெளியிட வில்லை.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து கரைவெட்டி பரதூர் கிராம விவசாயிகள் ஆத்திரமடைந்து இந்த திட்டத்திற்கு ரூ. 10 கோடி மட்டுமே செலவாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள் குறைந்த பட்ச நிதியைக் கூட அரசு ஒதுக்க முன் வராத தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது விவசாயிகள் 50000 ஏக்கரில் விவசாயம் செய்ய இயலும். கரைவெட்டி பரதூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தூத்தூர் வரை 36 பஞ்சாயத்துக்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது...

உடனே நாம் இப்போது அணியும் பேண்ட், ஷர்ட், கோட் தமிழ் கலாச்சார உடையா என்று கேட்காதீர்கள் அதையும் நமக்கு அறிமுகப்படுத்தியது தொ(ல்)லைக்காட்சி தான்...


மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர் அடங்கிய அசீமானந்தாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் இருந்து மாயம்...


2007 ஆம் ஆண்டு மே மாதாம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் போது நடைபெற்ற மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் படுகாயமடைந்தனர்.

இதன் பின்னர் நடைபெற்ற போராட்டத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்த மேலும் பலர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தான் தான் என்றும் அதில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு உள்ள பங்கு குறித்தும் சுவாமி அசீமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தார். இவர் அளித்த வாக்குமூலம் அடங்கிய ஆவணம் கீழ் நீதிமன்றத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இது தலைமை விசாரணை அதிகாரி மற்றும் சிபிஐ எஸ்பி T.ராஜா பாலாஜி அவரது ஆதாரங்களை பதிவு செய்த போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு NIA விற்கு மாற்றப்படுவதற்கு முன்பு இவ்வழக்கு தொடர்பாக முதல் குற்றப்பத்திற்கை தாக்கல் செய்தவர்.

தற்போது இந்த வழக்கின் முக்கிய ஆவமனான அசீமானந்தா வாக்குமூலம் மாயமானது குறித்து பாலாஜி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு பக்கங்களை கொண்ட “Memo of Disclosure” No88 என்று NIAவினால் குற்றப்பத்திர்கையில் குறிப்பிடப்பட்ட இந்த ஆவணத்தில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான சதித்திட்டங்கள் குறித்தும் அதில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பங்கு குறித்தும் அவர்களின் பெயர் குறிப்பட்டு அசீமானந்தா தெரிவித்திருந்த தகவல்கள் அடங்கியிருந்தது.

மேலும் இந்த ஆவணம் அசீமானந்தா மற்றும் இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் இன் தொடர்பை உறுதி செய்ய மிக முக்கியமான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பு விசாரணையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உட்பட 160 க்கும் மேலான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இதில் சிபிஐ விசாரித்த 68 சாட்சியங்களில் DRDO விஞ்ஞானி வட்லாமணி வெங்கட் ராவ் உட்பட 54 பேர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது கூடுதல் மெட்ரோபொலிடன் செஷன்ஸ் நீதிபதி K.ரவீந்தர் ரெட்டி, இந்த வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் மாயமானத்தை குறிப்பட்டு நீதிமன்ற அதிகாரிகளை கடுமையாக சாடினார். அதில் சிலவற்றை கண்டு பிடிக்க நீதிமன்ற அலுவல்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அசீமானந்தா ஹைதராபாத் மற்றும் செகுந்தராபாத் ஆகிய பகுதிகளை விட்டு செல்லக்கூடாது என்ற அடிப்படையில் அசீமானந்திற்கு பிணை வழங்கப்பட்டது...

அதிமுக பன்னீர் செல்வம் 200கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு தான் எடப்பாடியூடன் இணைந்தார் - கே.சி பழனிச்சாமி...


திருப்பூரில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஓட்டும் நபர்களின் அட்டகாசம் ரொம்ப அதிகரித்துவிட்டது...


சாலை பெயர் பலகை, போக்குவரத்து எச்சரிக்கை அறிவிப்பு, திசை காட்டும் பலகை, மின்கம்பங்கள், பள்ளி சுவர்கள், சாலை தடுப்புகள் என எங்கு பார்த்தாலும் கண்டபடி ஒட்டி தள்ளுகின்றனர்.

அரசியல் கட்சிகள் கூட ஓரளவு கட்டுப்பாட்டுடன் சாலை நடுவில் உள்ள சிமென்ட் தடுப்புகளில் மட்டும்  ஓட்டுகின்றனர். ஆனால் வர்த்தக ரீதியில் சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் மிகவும் அத்துமீறி  கண்ணில் கண்ட இடங்களில் எல்லாம் ஓட்டிவருகின்றனர்...

உணர்ந்தவணுக்கு மட்டுமே வார்த்தைகள் புலப்படும்...


இயற்கை வாழ்வியல் முறை...


இயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன... அதன் அவசியங்கள் என்ன ?

அதனை திரும்ப அடையும் வழிகள் என்னென்ன ?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொல் தமிழர்கள் ஒரு காலகட்டத்தில் நாகரீகம் அடையத் தொடங்குகின்றனர். அப்போது அவர்கள் முதன் முறையாக நிலையான, சமூக வாழ்வை மேற்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் இதனை ஒட்டி அவர்கள், தனி மனித அளவிலும்,சமூக அளவிலும் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சனைகளுக்கு, தீர்வுகளை தேடி பின்வருமாறு தேடல்களும், ஆராய்ச்சிகளும் தொடங்குகின்றன.

முதலில் அவர்கள் இயற்கையை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறார்கள்.பிறகு மெல்ல மெல்ல இயற்கையைப் பற்றி நல்ல புரிதல் ஏற்படுகின்றது.

மனிதனால் அடிப்படையில் எதையுமே புதிதாக படைக்க முடியாது என்பதை அறிகின்றனர். மனிதன் தனது ஒவ்வொரு தேவைகளுக்கும், இயற்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருப்பதை அறிந்து கொள்கின்றனர்.

உடல் இயங்கத் தேவையான வெப்பம், காற்று, குடிநீர், உணவு ஆகியன இயற்கையிலிருந்தே பெறப்படுவது புரிகின்றது.

இது தவிர மனிதன், தன் செயல்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற சிறிய, பெரிய ஜீவராசிகளை அறிந்தோ, அறியாமலோ சார்ந்திருப்பதை தெரிந்து கொள்கின்றார்கள். இந்த அம்சம் மனிதனை போன்றே, மற்ற எல்லா உயினங்களுக்கும் பொருந்துவது தெரிய வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு உயிரினமும்,பிற உயிரினங்களுடன் கொண்டுள்ள உயிரியல் தொடர்புகளை உணர்ந்து கொள்கின்றார்கள். இவைகளை அடிப்படையாக் கொண்டு,  சமூக வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, இயற்கையிடமிருந்தே பெற முனைகின்றனர்.

மேலும் இதே வழியில், அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் வழிமுறைகளையும் கண்டறிகின்றனர்.

இந்த அடிப்படையில் பல ஆண்டுகள் ஆராய்ந்து, நன்கு திட்டமிட்டு தமக்கான வாழ்வியலை வடிவமைக்கின்றனர். அது பல்வேறு துறைகளை உள்ளடக்கி முற்றிலும் இயற்கை சார்ந்ததாக அமைகின்றது.

அவைகள் இயற்கை சார்ந்த வானியல், இயற்கை சார்ந்த உணவுமுறைகள், இயற்கை சார்ந்த மருத்துவம், இயற்கை சார்ந்த வேளாண்மை, இயற்கை சார்ந்த தமிழ் மொழி, இயற்கை சார்ந்த uஉடற்பயிற்சி முறைகள் , இயற்கை சார்ந்த நீர் மேலாண்மை முறைகள், இயற்கை சார்ந்த கலைகள் மற்றும் பிற இயற்கை சார்ந்த அறிவியல் முறைகள் என்றவாறு பட்டியல் நீள்கின்றது.

இவ்வகையான வாழ்வியலை பின்னர், சில ஆயிரம் ஆண்டுகள் வரை சிறப்பாக கடைபிடித்து வந்துள்ளனர். இந்த அமைப்பே இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதாகும். இவை அனைத்தும் எந்த வகையிலும் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, முற்றிலும் இயற்கை சார்ந்த, அறிவு பூர்வமான வழிமுறைகள் ஆகும்.

சரி, மேற்சொன்னவைகளுக்கு என்ன ஆதாரம் ?.

தமிழில் உள்ள அற இலக்கியங்களின் ஒவ்வொரு வரிகளுமே இதற்கு சான்றாக அமைகின்றன. இவ்வாறான ஒரு அமைப்பு இல்லையென்றால் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கவே முடியாது.

மேலும் தொல்தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் இயற்கை சார்ந்து சிறந்து விளங்கியதைக் குறிப்பிடலாம். எஞ்சியுள்ள சான்றுகளாக சென்ற தலைமுறைவரை இருந்த வாழ்வியலைக் கொள்ளலாம். மற்றபடி ஏராளமான ஆதாரங்களை கால ஓட்டத்தில் நாம் இழந்து விட்டோம் ( அப்ப நடுவுல நிறைய பக்கத்த காணோமா?). இனி வருங்கால ஆராய்ச்சிகள் தேவையான ஆதாரங்களை கண்டெடுக்கும் என நம்புவோம்.

ஆனால் வருந்தக் கூடிய விஷயமாக இன்றைய நிலையில் நாம் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதை விடுத்து,இயற்கையை விட்டு விலகிய வாழ்வியல் என்ற நிலையையும் கடந்து, இயற்கைக்கு எதிரான வாழ்வியல் எனும் நிலையை அடைந்து விட்டோம்.

பெருமளவு காடுகளை அழித்து விட்டோம்; ஓசோன் படலத்தில் ஒட்டையை ஏற்படுத்தி விட்டோம்; புவி வெப்பத்தை அதிகரித்து விட்டோம்; எல்லா வகையிலும் இயற்கையை சீரழிக்கத் தொடங்கி விட்டோம்;

இதன் பலனை பல்வேறு நோய்களாகவும், அழுத்தம் நிறைந்த,மகிழ்ச்சி குறைந்த வாழ்க்கையாகவும் நாம் அனுபவித்து வருகின்றோம்; இன்னும் அனுபவிக்க போகின்றோம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை வளங்கள் நிறைந்த பூமியை நமக்கு பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் நாம் நமக்கு பின்வரும் சந்ததியினர்க்கு, மிக மோசமாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பூமியினை பரிசாக கொடுக்கும் சூழ்நிலையினை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில், இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது இன்றைக்கு மிக அவசியமாகின்றது.

ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் நாம், ஒவ்வொரு துறையிலும் Nano technology
என்ற அளவுக்கு மிக நுணுக்கமாக வளர்ந்து வருகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் பின்பற்றுவது, பல நூற்றாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி செல்வது போல் ஆகாதா என நீங்கள் கேட்கலாம். நாம் இன்று, வளர்ச்சியில் Nano ( பத்து லட்சத்தில் ஒரு பங்கு ) அளவுக்கு நுணுக்கமாக முன்னேறினால், எதிர் கொள்ளும் பிரச்சனைகள் Tera ( பத்தாயிரம் கோடி ) அளவுக்கு பெருகி விடுகின்றன.

மேலும் இயற்கை ஏராளமான வளங்களை நமக்கு அள்ளி அள்ளி தருகின்றது.இயற்கை அளிக்கும் இத்தகைய எண்ணற்ற நன்மைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்வதே சிறந்த வாழ்வியலாக அமையும்.வானம் பொழிகின்றது; பூமி விளைகின்றது.நாம் வெறும் பயன்பாட்டாளர்களே.எனவே நம்முடைய உயர்ந்தபட்ச குறிக்கோளே, இயற்கையின் சிறந்த பயன்பாட்டாளர் என்ற நிலையை அடைவதாகத்தான் இருக்க முடியும். இதுதான் நம் வாழ்க்கையை வளப்படுத்தும்; மேலும் இயற்கைக்கு நாம் திருப்பி செலுத்தும் கைம்மாறாகவும் அமையும். ஆகையால் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது தவிர்க்கவே முடியாதபடி அவசியமாகின்றது. இதுவே நம் முன்னோர்கள், இன்றைய வணிகம் சார்ந்த சூழ்நிலையில் நமக்கு விட்டு சென்ற செய்தியாக அமையும் என்றால் அது மிகையாகாது.

சரி, இயற்கை சார்ந்த வாழ்வியலை எவ்வாறு திரும்ப அடைவது? நம் முன்னோர்கள் பல ஆண்டுகள்,பல மனித ஆயுட்காலங்களை செலவழித்து தங்கள் வாழ்வியலை வடிவமைத்தனர். இப்போது அதனை மீட்டெடுக்க, நாமும் அவ்வாறு பல ஆண்டுகளை செலவு செய்ய முடியாது. ஆகவே தொல்தமிழர்களின் வாழ்வியலை தொடர்ந்து ஆராய்ந்து, அதனை சிறிது சிறிதாக நம் வாழ்க்கையில் நடைமுறை படுத்துவது தான் மிகவும் எளிமையான, சிறந்த தீர்வாக அமைய முடியும்.

இவ்வகையில்...

முதல் படியாக நாம் இயற்கையை புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும்.

நாம், நம் அன்றாட வாழ்க்கையை சிறிது சிறிதாக இயற்கை சார்ந்து வாழ ஆரம்பிக்க வேண்டும்.

அடுத்த்தாக இதனை சிறு ,சிறு குழுக்களாக இணைந்து சமூக அளவில் நடைமுறைப் படுத்த வேண்டும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தனி மனித மற்றும் சமூக பிரச்சனைகளுக்கும், முன்னோர்களின் வழிமுறைகளை துணைக் கொண்டு, அவற்றுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெற வேண்டும்.

நம் முன்னோர்கள் தங்கள் அனுபவ அறிவின் மூலமே இயற்கையின் ஒவ்வொரு கூறுகளையும் உறுதி செய்தனர்.ஒவ்வொரு முறையும், நாமும் நம் அனுபவ அறிவைக் கொண்டு வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.

இந்த வகையில் நம் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள்;அவர்களுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலையில்,நாம் சிற்றறிவு படைத்தவர்களே.எனவே நம் அனுபவத்தால் அறிந்து கொள்ள முடியாத செய்திகளை அறிவியலின் துணை கொண்டு உறுதி கொள்ளலாம்.

இயற்கையை நாம் எவ்வளவுதான் சீரழித்துவிட்டாலும்,மீண்டும் அவற்றை ஓரளவுக்கு புதுப்பிக்க முடியும்.இந்த அடிப்படையில் இயற்கையை அழிவிலிருந்து காத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை வளங்களை மேம்படுத்த வேண்டும்.

இந்த முயற்சிகளின், அடுத்தடுத்த கட்டங்களை வருங்காலம் தீர்மானிக்கும் என நம்புவோமாக.

எது எப்படியிருந்தாலும், இன்றைய நெருக்கடி நிறைந்த,பற்றமான வாழ்க்கைச் சூழலில் இயற்கை பற்றிப் பேசுவது இன்பம்; படிப்பது இன்பம்; சிந்திப்பது இன்பம்;எழுதுவது இன்பம்;மொத்தத்தில் இயற்கையோடு தொடர்பில் இருத்தல் மன அமைதியைத் தரும்.

இந்த அடிப்படையில் இனி வரும் காலங்களில், இந்த பக்கத்தில் இயற்கை சார்ந்த வாழ்வியலை திரும்ப மேற்கொள்வதில் உள்ள சாத்தியக் கூறுகளைப் பற்றி விவாதிக்கலாம்; நாம் இயற்கையை சீரழித்ததை நினைத்து குற்ற உணர்ச்சியில் வருந்தலாம்; இயற்கையையும், அதனை சிறப்பாக பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவையும் எண்ணி,எண்ணி வியக்கலாம்; இதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், சிறிய எல்லைக்குள்ளேயே முரண்படலாம்; நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்ளலாம்.

இயற்கை வாழ்வியல் சார்ந்த வாழ்க்கை வாழ  முயற்சிப்போம் அதில் வெற்றியும் காண்போம் என்ற நம்பிக்கையில் இயற்கை சார்ந்து தேடலை  தொடருவோம்...

மக்களை சாவடிக்கும் உங்க துறைக்கு உள்ள மதிப்பை உணர மாட்டேங்குறீங்களே...


அமெரிக்காவில் திருவாரூர் மாணவன் சாதனை...


திருவாரூர் மாவட்டம், கொடிக்கால் பாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட  முகம்மது முன்தஸீர் என்ற மாணவன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

அமெரிக்க மாநில அளவிலான அறிவியல் ( science project) திட்டத்தில்
US AIRFORCE ACADEMY AWARD
BROADCOM MASTERS AWARD
FINALIST AWARD FOR STATE FAIR ஆகிய மூன்று விருதுகளை  பெற்றுள்ளார்.

இன்னும் பல சாதனைகள் புரிய  வாழ்த்துக்கள் முகம்மது முண்தஸீர்...

பாஜக பினாமி அதிமுக அடிமைகளின் சாதனை...


உழவனும், உழைப்பவனும், தீவிரவாதி என்றால் வாரி கொண்டு வெளிநாடு செல்பவன் யார்...


உ.பி : லக்னோ நோக்கி அணி வகுக்கும் விவசாயிகள் – பீதியில் பாஜக ஹிந்துத்துவா தீவிரவாதி யோகி ஆதித்யநாத்...


லக்னோ, மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில்  விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி லக்னோ நோக்கி நடை பயணமாக அணிவகுப்பை தொடர்வது என முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி இன்று மாநிலத்தின் 60 மாவட்டங்களில் இருந்து பேரணிக்காக குவியத்துவங்கியுள்ளனர்.

அகில இந்திய விவசாயிகள்  சங்கத்தின் தலைமையில் உத்திரபிரதேசத்தில்  உள்ள விவசாயிகள் செங்கொடியேந்தி தங்களது உரிமைகளை மீட்டெடுப்பது என முடிவு செய்திருக்கின்றனர்.

இதற்காக உத்திரபிரதேசத்தில் உள்ள 60 மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தற்போது திரண்டிருக்கின்றனர்.

குறைந்த பட்சம் 22 ஆயிரம் விவாசயிகள் லக்னோ நோக்கிய நடைபயண பேரணியில் பங்கேற்பதாக தெரிவித்திருக்கின்றனர். விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவில் இருந்து  ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக  தள்ளுபடி செய்யவேண்டும். மின்கட்டண உயர்வு மற்றும் மின்துறையில் தனியார் நிறுவனங்களின் தலையீடு கூடாது, மாடுகளை விற்கவும், வாங்கவும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுமையாக அகற்ற வேண்டும். 60 வயதைக்கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.

தற்போது நடைபயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், அசோக்தாவ்லே, சுபாஷினி அலி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

இதற்கிடையில் தற்போது இந்த பேரணிக்கு தடை விதிப்பது குறித்து யோகி ஆதித்யநாத் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது...

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டே...


புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற விழாவாக உலங்கெங்கும் உள்ள கிருஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

இன்றைக்கு  கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உண்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா?

அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா?

புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா?

என்பதை எல்லாம் பைபிளின் வார்த்தைகளின் படி  ஆராய்வோம்...

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது...

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார்.

இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், என்கிறது பைபிள்.

இயேசுவை சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று 3ம் மணி வேலையாக இருந்த போது அவரை சிலுவையில் அறைந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றது.

அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. - மாற்கு 15:25.

அதன்பிறகு சில மணி நேரம் கழித்து அவர் இறந்து விடுவதாகவும், அதன் பின்னர் அரிமத்தியாக்காரனான யோசேப்பு என்பவன் வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையத் தொடங்கிய பின் இயேசுவின் உடலைக் கேட்டதாகவும், பின்னர் அவரது உடலைப் பெற்றுக்கொணடு அடக்கம் செய்ததாகவும் பைபிளில் சொல்லப்படுகின்றது.

யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 23:50-54.

அதாவது இயேசு கல்லறையில் வைக்கப்படும் போது இரவு ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (அதாவது சனிக்கிழமை ஆரம்பமாயிற்று) என்று இங்கே சொல்லப்படுகின்றது.

ஏனெனில் பைபிளின் படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32).

WBTC மொழிப் பெயர்ப் பின் மாற்கு 15:42ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது...

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இரஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களின் மூலம் இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு என்பது மிகத் தெளிவாக விளங்கும்.

ஏனெனில் யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்கும் போதே சூரியன் மறையத்தொடங்கிவிட்டது - இருட்டத் தொங்கிவிட்டது - என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின் அவன் யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக இரவு வந்துவிடும் - அடுத்தநாள் தொடங்கிவிடும் என்பது தெளிவாக விளங்கும்.

அதன் பின்னர் இயேசு எப்போது உயிர்த்தெழுந்தார் என்பதை பைபிளில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள் - யோவான் 1:20.

உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், - லூக்கா 24:3.

அதாவது இந்த வசனங்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே - சூரியன் உதயமாவதற்கு முன்பே - இயேசு உயிர்த்தெழுந்ததாக பைபிளின் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வசனங்களின்படி பார்த்தால் இயேசு பூமியின் இருதயத்தில் - கல்லறையில் எத்தனை நாட்கள் இருந்திருப்பார்?

அவர் முன்னறிவித்ததன்படி இருந்தாரா அல்லது அதற்கு மாற்றமாக இருந்தாரா?


அதை ஒரு இலகுவான கணக்கின்படி பார்ப்போம்...

இயேசு உடல் கல்லறையில் இருந்த நாட்கள்..

வெள்ளிக்கிழமை -- பகலில் இல்லை -  இரவு--11

சனிக்கிழமை- 1  பகல் - 1 இரவு

ஞாயிற்றுக்கிழமை- பகலிலும்      இல்லை  - இரவிலும்  இல்லை

மொத்தம் -1 பகல்---  2 இரவு - 3 நாட்கள்
                                                                                             
மேலே நாம் பார்த்த கணக்கின்படி இயேசு பூமியின் இருதயத்தில் (அதாவது கல்லறையில்) இருந்தது வெறும் 1 பகல் 2 இரவுகள் மட்டுமே என்பது தெளிவாக விளங்கும்.

ஆனால் மத்தேயு 12:39ம் வசனத்தின் படி இயேசு 3 பகல் 3 இரவு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று முன்னறிவித்தாரே? அப்படி இருந்தாரா?

பைபிளின் அவரது கடைசிகால நிகழ்வுகள் அப்படித்தான் இருந்தார் என்று சொல்லுகின்றதா? இல்லையே..

மாறாக 1 பகல் 2 இரவுகள் மட்டும் தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) இருந்ததாக ஒன்றல்ல நான்கு சுவிஷேஷங்களிலும் எழுதப்பட்டுள்ளது.

இது இயேசுவின் சிலுவை கொள்கையில் உள்ள அப்பட்டமான முரண்பாடு இல்லையா?

இப்படிப்பட்ட அப்பட்டமான முரண்பாடு வரலாமா?

இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்குமா?

புனித வெள்ளி கொண்டாடும் கிருஸ்துவர்களே சற்று சிந்தியுங்கள்...

இயற்கை அழிவுகளுக்கு பின்னாலுள்ள இலுமினாட்டி களின் மர்மம்...


சுமார் 13 வருடங்களுக்கு முன்னர், ஆசியாவின் தென் பகுதியை ஆட்டம் காண வைத்த ஒரு சம்பவம் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை இயற்கை சீற்றம்..

நாமும், உலக விஞ்ஞானிகளும் இது இயற்கை சீற்றம் என கூறிக் கொண்டாளும். அந்த பேரலைகளின் பின்னாலும் பல மர்ம முடிச்சுக்கள் உள்ளன.

26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரமூடாக தென் இந்தியாவரை பல உயிர்களை காவு கொண்டிந்தது.

24.12.2004 அன்று இந்து சமுத்திர தீவுகளில் கடமையில் இருந்த தனது நாட்டு காவலர்கள் அனைவரையும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு அழைத்திருந்தது அமெரிக்கா..

அதற்கு முன்னரும், பின்னரும் அவ்வாறு ஒட்டு மொத்தமாக விடுமுறை அளிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது..

அமெரிக்காவின் இந்த செய்கையில் இருந்து தான், இந்த புவி நடுக்கம் இயற்கையா செயற்கையா என்ற சந்தேகம் உருவானது.

Anti Illuminati ஆய்வாளர்களின் கருத்துப்படி..

சமீபத்தில் சுவிஸில் நிலத்திற்கடியில் செய்யப்பட்ட இலத்திரன் மோதல்களைப் போன்று, ஆனால் அறிவிக்கப்படாமல் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையின் விளைவு தான் அந்த திடீர் நில நடுக்கத்திற்கு காரணமாக இருக்கும் என உறுதி கூறுகின்றனர்.

மேலும் சிலர், அமெரிக்காவின் நவீன ரக அணுகுண்டு சோதனையின் விளைவே அது என கருத்து தெரிவிக்கின்றார்கள்.

2004 இல் ஏற்பட்ட சுனாமி விளைவு, ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டின் உடனடி விளைவைக் காட்டிலும் சுமார் 700 மில்லியன் பெரிய விளைவு என உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மேலே நான் சொன்னவை எல்லாம் அமெரிக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன.

இதற்கும் இலுமினாட்டிக்கும் என்ன சம்பந்தம்?

கீழ்வரும் படத்தை (படம் A) பாருங்கள்…


1991 இல் உருவான இலுமினாட்டி விளையாட்டு அட்டைகளில் இடம்பெற்ற ஒரு படம். மிகப்பெரிய அலைகள் செயற்கையாக உருவாக்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ள படம். இதனடிப்படையில் உறுதியாக அல்லாவிடினும் 2004 ஆசியாவை தாக்கிய சுனாமி ஒரு திட்டமிட்ட இலுமினாட்டியின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையாவது எமது மனதில் எழுப்பிவிடும் என நம்புகின்றேன்.

இச் சந்தேகம் இலுமினாட்டி என்ற நம்பவும் முடியாத மறுக்கவும் முடியாத சொல்லின் மீது சற்று நம்பிக்கை சார்ந்த சந்தேகத்தை உருவாக்கும்.


படம் B - போன பதிவில், இலுமினாட்டி விளையாட்டை உருவாக்கியவர் பற்றி சில தகவல்களை பார்த்திருந்தோம். அதில் நான் அவதானிக்க தவறிய ஒரு அருமையான பகுதியை Mohamed Riyaz என்பவர் தெளிவாக சுட்டிக் காட்டியிருந்தார்.

நான் பிரசுரித்த ஸ்டீவ் ஜக்ஸனின் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடையில் முக்கோணம்+கண் அடையாளம் கொண்ட இலுமினாட்டி சின்னம் இடம்பெற்றுள்ளது..

(புகைப்படத்தை (படம் B) தெளிவாக பார்க்கவும்.)

மேலும் அப் புகைப்படங்கள் இலுமினாட்டி அட்டை விளையாட்டை உருவாக்கிய பின்னர் எடுக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பாக நான் மேலும் தேடியதில்…

பல இடங்களில் அவருக்கும் இலுமினாட்டிக்கும் எந்த தொடர்பும் அடைப்படையில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எதிர்-இலுமினேட்டி ஆய்வாளர்கள் கூட கூறுகின்றனர். ஆனால், இலுமினாட்டி அட்டையிலேயே இதற்கும் ஒரு பதில் உண்டு…


படம் C ஐ பாருங்கள் - An Offer You Can’t Refuse என்ற வாசகம் மூலம்; இலுமினாட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக செயற்படுவோரும், அக் குழுமம் பற்றிய ரகசியத்தை கசிய விடுவோரும் இரண்டு முறைகளில் கையாளப்படுகிறார்கள்.

ஒன்று, அவர்களுக்கு பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் வாய் மூடப்படுகிறது. அல்லது அவர்கள் உணர்வு பூர்வமாக மிரட்டப்படுகிறார்கள்.

இரண்டு, மரணம். – எதிர்ப்பவர் யார் என்பதை பொறுத்து அவர்களின் அணுகுமுறை இருக்கும் எனலாம்.


படம் D - மேலும் நம்மை சூழ்ந்து நடைபெறும் பல ஆச்சரியமூட்டும் மர்மங்களை அறியலாம்…