12/06/2017

தமிழகத்தை கூறு போட்டு விற்ற அதிமுக எம்எல்ஏ க்கள்...


நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தலா 10 கோடி பணம் வாங்கினர், எனக்கு ஒரு கோடி கூட இன்னும் வரல - டைம்ஸ் நவ் ஸ்டிங் ஆப்பரேஷனில் உளறிய பண்ணீர் செல்வம் அணி எம்எல்ஏ சரவணன்...

தமிழகத்தை கூறு போட்டு விற்ற எம்எல்ஏக்கள்...

விலை கொடுத்து வாங்கிய இரு அணிகள்...

வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்...

பின் புறம் இவ்வளவு அசிங்கத்தை செய்து கொண்டு இரு அணிகளின் தலைவர்களும் மீடியா முன்பு வீர வசனம் பேச நா கூசவில்லையா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

அதிமுக எம்எல்ஏ விற்கு பணம் கொடுத்த இரு அணிகள், மாபெரும் பேரம், உளறிக் கொட்டிய எம்எல்ஏ டைம்ஸ் நவ் வின் ஸ்டிங் ஆப்பரேஷன் வீடியோ...


கடந்த 3 மாதங்களாக ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்திய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தற்போது Tamilnadu Sold என்ற பெயரில் ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி அதிமுகவின் இரு அணிகளையும் கதிகலங்க வைத்துள்ளது.

பன்னீர் செல்வம் அணிக்கு தாவிய எம்எல்ஏ சரவணன் பன்னீர் செல்வம் , சசிகலா இரு அணிகளும் எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள் இவருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை உளறியுள்ளார்.

இரு அணிகளின் எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டை கூறு போட்டு விற்றதை டைம்ஸ் நவ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துள்ளது.

குறிப்பாக கருணாஸ் தமீமுன் அன்சாரி போன்றவர்களுக்கு 10 கோடி கொடுக்கப்பட்டதாக சரவணன் எம்எல்ஏ கூறுகின்றார்...

கதிராமங்கலம் மக்களின் நிலை.. மக்களை அச்சுறுத்தும் காவல்துறை எனும் ஏவல்துறை...


தமிழக விபச்சார ஊடகங்களுக்கு கதிராமங்கலத்திலிருந்து ஒரு பெண்ணின் கேள்வி...


நம் சூரிய குடும்பத்தின் கதை...


சூரியன் (sun) : நம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

வயது 500 கோடி ஆண்டுகள் இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.

நம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கிறார் .

நம் தலைவரின் மேற் புற வெப்பம் 6000 டிகிரி கெல்வின். தினமும் நம் சூரியன் சாப்பிடும் உணவு 39,744 தன் ஹைட்ரோஜென் அணுக்கள். அவை இணைந்து ஹீலேயும் ஆகிறது.

வியாழன் (jupiter) : நம் சூரிய குடும்பத்திலேயே பெரியவர் ஒரு தராசில் ஒரு பக்கம் வியாழனையும் மறு பக்கம் மற்ற 8 கோள்களையும் வைத்தல் கூட அவை வியாழனின் எடைக்கு நிகர் ஆக முடியாது.
நம் பூமியை விட 318 மடங்கு பெரியவர்.

ஆனாலும் தன்னை தானே சுற்றி கொள்ள 9.9 மணி நேரமும் , சூரியனை சுற்றி வர 11.86 வருடமும் எடுத்து கொள்கிறார்.

வியாழனுக்கு 16 துணை கோள்கள் உள்ளன . அவற்றில் 4 மிக பெரியது.

புதன் (mercury) : சூரியனுக்கு மிக அருகில் உள்ளவர் சூரியனை 87 .97 நாட்களில் சுற்றி வந்து விடுகிறார்.

ஆனால் தன்னை தானே சுற்றி கொள்ள 5 நாட்கள் எடுத்துகொள்கிறார் பூமியை ய விட 3 மடங்கு சிறியவர்.

வெள்ளி (venus) : அடுத்து நாம் பார்க்க இருப்பது நம் அண்டை வீட்டார் வெள்ளி அவர்கள்.

இவர் தன்னை தானே 243 நாட்களில் சுற்றி கொள்கிறார் அனால் சூரியனை 227 .4 நாட்களில் சுற்றி விடுகிறார்.

அதாவது அவருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட அதிகம்.

செவ்வாய்(mars) : அடுத்து நாம் காண இருப்பவர் செவ்வாய் அவர்கள் இவர் மிகவும் அழகானவர்.

சிவப்பாக தோன்றுகிறார் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் போய் குடியேற வாய்ப்புகள் அதிகம்
இவர் தன்னை தானே சுற்றி கொள்ள 10 மணி நேரமும் சூரியனை சுற்றி வர 29 .5 ஆண்டுகளும் ஆகின்றன.

சனி (saturn): வியாழனுக்கு அடுத்து நம் குடும்பத்தில் பெரியவர் இவர் .

வெப்ப நிலை -285 டிகிரி சனி கிரகத்தில் பருவ நிலை 7 .5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது.

தற்போது அறிந்த வரை இவருக்கு 23 துணை கோள்கள் உள்ளன.

இவருடைய ஒரு துணை கோளான தைடனில் (titan) சில நுண் உயிரிகள் வாழ கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

uranus: அடுத்த நம் சூரிய குடும்ப உறுப்பினர் நம் uranus அவர்கள்.

பூமியை விட 15 மடங்கு பெரியவர்.

இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 84 ஆண்டுகள். 6.81 கி.மீ./விநாடி வேகம்.

இவருக்கு 20 துணை கோள்கள் உள்ளன

இவருக்கு எடை இல்லை..

நெப்டியூன் : இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 160 ஆண்டுகள் 5 .43 கி.மீ./விநாடி வேகம்.

இவருக்கு 13 துணை கோள்கள் உள்ளன.

நேப்டியுனை உங்களிடம் தரமான பயினகுளர் இருந்து மெகா மூடம் இல்லாதிருந்து, உங்களுக்கு பொறுமையும் இருந்தால் உங்கள் வீடு மாடியில் இருந்தே பார்க்கலாம்.

ப்ளுட்டோ : இவர் தன நம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் தூரத்தில் உள்ளவர் மற்றும் மிகவும் சிறியவர்
இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 250 ஆண்டுகள் 4 .7கி.மீ./விநாடி வேகம்

1930 இல் கண்டறிய பட்டது.

நேப்டியுனும், யுரனுசும் ஒழுங்கான நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதே அடுத்து ஒரு கிரகமும் அதற்கு ஈர்ப்பு விசையும் உள்ளது என்பதற்கு சாட்சி.

அதே போல் இதுவும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால், அடுத்தும் ஒரு x கிரகம் இருக்கலாம் அனால் இன்னும் கண்டறிய படவில்லை.

இருபினும் நிறைய பெரியதும் சிறியதுமான பொருட்கள் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன புளுடோ வுக்கு அப்பால்...

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்...


பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.

எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது.

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம்.

ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக் குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது.

முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது..

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான்.

தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக் குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது.

மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன.

காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது.

அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும்.

அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக் குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்..

தாய்க் கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை..

அந்த தாய்க்கழுகின் அறிவு முதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே.

தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே...

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்...

அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்..

ஆனால் ... கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல..

வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.
அது சாத்தியமும் அல்ல..

கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.

கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிற்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.

நம் பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?

நீந்த கற்று கொடுப்போம்...
நீந்துவது அவர்கள் கடமை...

திமுக கருணாநிதி ஆட்சியில்...


1972ல் மவுண்ட் சாலையில் kattur கோபால் தலைமயிலான தி.மு க தொழிற்சங்கம் நடத்திய கொலைகள் எத்தனை?

சொந்த கட்சிலே நடத்திய கொலைகள்?

இறந்த  தன்  சொந்த மகனையே இல்லை என்று சொல்ல வைத்து டாக்டர் பட்டம் வாங்கியது யார்?

மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் கூலி படை வைத்து கொள்வதை காட்டிலும் மோசமான கொலைகள் நடத்திய ஆட்சி தி மு க  ஆட்சி...

பழந்தமிழர் அளவைகள்...


ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.

ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்).

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.

இரண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.

ஏழரை நாழிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.

இரண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

இரண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்...

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா இதோ..


சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI).

chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது (தி.நகர்).

புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.

தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.

வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது...

இதயத்தின் நண்பன் சிவப்பு முள்ளங்கி...


வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு, மஞ்சள், வெள்ளை, முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.

முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.

மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.

ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

புற்றுநோய் தடுப்பு...

சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.

சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன.

சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.

உறுதியான எலும்பு...

ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

பார்வைக்கு பலம்...

தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும்.

லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது.

இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்...

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது.

சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

எடை குறைப்பு...

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.

குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.

எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.

ஆஸ்துமாவிற்கு நிவாரணம்...

நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன.

தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.

தோலுக்கு நண்பன்...

பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.

சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.

இரத்த அழுத்தத்திற்கு மருந்து...

நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.

மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது...

அற்புதமான பிரபஞ்ச சக்தி...


பிரபஞ்சம் என்றால் என்ன?

இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.

கற்பனைக் கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.

எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?

அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.

பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம்.

ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்?

மிக மிகக்  குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப்  பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?

தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள்  வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப்  பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?

கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ன கிழித்தார்?


ஆந்திரன், கன்னடன், மலையாளி பிரிந்த பின்னும், எஞ்சிய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க பார்ப்பானும், வட இந்தியனும் தடுக்கிறான். இதனை தமிழன் எப்படி சகிப்பான்.

அவன் சகித்தாலும் நான் எப்படி சகிப்பேன். தமிழ்நாடு பெயர் வைக்க முடியவில்லையென்றால், நானும் என் கழகமும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்?

இந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் வைக்க இந்திய அரசு மறுத்தபோது ராமசாமி ஆற்றிய உரை..

ஆனால் ஒரு தமிழன் களத்திலே இறங்கினான். அவன் சங்கரலிங்க நாடார்.

விருதுநகரில், 1956 ஜூலை 27..
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வை என சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினான்.

எத்தனையோ அறிஞர் சொல்லியும் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. எழுபத்தாறாம் நாள் உடல்நிலை மோசமாகி உயிரையும் இழந்தான்..

கேள்வி..

இனத்தின் மானம் பெரிது என சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்த சங்கரலிங்க நாடாரின் எழுபத்தாறு நாள் போராட்டத்தில்,

ராமசாமி அவனை சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தாரா?

தன் பத்திரிக்கையில் உண்ணாவிரதம் பற்றி தினமும் உணர்ச்சி பொங்க தலையங்கம் எழுதினாரா?

அல்லது இறுதிச்சடங்கில் தான் கலந்து கொண்டாரா?

தமிழ்நாடு என பெயர் வைக்க உயிரையே இழந்த சங்கரலிங்க நாடாரின் போராட்டத்தில்,...

தமிழ்நாடு பெயரிடாவிட்டால் உயிரோடு வாழ்ந்து என்ன பயன் என சொன்ன போலி புரட்சியாளர் ராமசாமி என்ன கிழித்தார்?

நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் இந்தி...


பாண்டே பார்த்துக்க உங்க ஹிந்தியை படிச்சா இப்படித்தான் horn please க்கு porn please னு போடத்தோனும்...

இப்போ தெரியுதா ஏன் பிளாஸ்டிக் அரிசி புரளி வருதுன்னு...


மனிதன் எத்தனை வகை...


மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்...

1.Introverts  : மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..

2.Extroverts : எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts : மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்...

தைல புத்தி : ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத  புத்தி : நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி : விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பது போல வரும் போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும் போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது...

இலுமினாட்டி - விபத்தும் அல்ல விதியும் அல்ல திட்டம் சதி ஆபிரகாம் லிங்கனும் ஜாண்கென்னடியும்...


1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இது விபத்தும் அல்ல விதியும் அல்ல சதி..

இனி ஆதார் கார்டு இருந்தால் தான் திருப்பதி லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு...


அடேய் நீங்க யோக்கியனா இருந்தா.. உண்டியல்ல காணிக்கை செலுத்தவும் நன்கொடை வழங்கவும் ஆதார் கார்டு கேளுங்கடா பார்ப்போம்...

அய்யோக்கிய பயனுங்களா...

குடி நீரில் ஏமாற்றும் மால்கள்...


அரசு நிர்ணயித்த MRP விலையை விட பினிஸ் மால், பெங்களுருவில்  ஒரு லிட்டர் குடிநீரை 50ரூபாய்க்கு விற்கும் அவலம்...

முதல்வர். வித விதமாய் போஸ்டர் ஒட்டும் தினகரன் ஆதரவாளர்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு...


வரலாற்று சிறப்பையும் நீர் வழித்தடத்தை மீட்டெடுக்கும் இளைஞர்கள்...


கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கிணறு சிதிலமடைந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தூர்வாரி பாதுகாக்கும் இளைஞர்கள்.


மக்கள் ஒன்று சேர்ந்து கோவையின் நீர் வழித்தடத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை குளங்கள் பாதுகாப்பு, நமது கோவை நமது பசுமை மற்றும் பல அமைப்புகள் சேர்ந்து இதை நிகழ்த்தியுள்ளன...

கத்தாரை தாக்குவதற்கான உண்மையான 5 காரணங்கள்...


கத்தாரின் முதன்மை வரியே கார்ப்பரேட் வரி தான்.

குடிமகனிடம் மிகக் குறைந்த வரியே பெற்று வருகின்றனர் என்பது நிதர்சனம்.

மேலும் IMF அவர்களின் வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வர கூறியுள்ளது.

ஆதாரம் (doha news)...

https://dohanews.co/qatar-government-foots-642m-bill-for-electricity-each-year/

தமிழ் நாட்டின் பிரச்சனைகளின் போது நமது அமைப்புகள் இயங்கும் விதம் இது தான்...


நம்ப முடியாத உண்மைகள்...


கொடைக்கானல் என்ற நரகபூமி.....


அமெரிக்காவின்  வாட்டர்டவுனில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலை அமெரிக்காவின் சுற்றுபுற சூழ்நிலையை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டில்  அமெரிக்க அரசால் மூடுவிழா கண்டது.....

இப்படி மூடு விழா கண்ட  தொழிற்சாலையை தான் நம் அரசுகள் இருகறம் கூப்பி மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வரவேற்றுள்ளனர்...

(நமக்கு அமெரிக்காவின் சுற்றுச்சூழல் தான் முக்கியம்)..

1984ஆம் ஆண்டு பாண்ட்ஸ் இந்தியாவால் தொடங்கபட்டு.... பின்னர் இந்துஸ்தான் யூனிலீவர்  நிறுவனம் கையகப்படுத்த வெகு ஜோராக உற்பத்தி தொடங்கியது இத்தொழிற்ச்சாலை.....

அமெரிக்காவிலிருந்து பாதரசத்தை இறக்குமதி செய்து தர்மாமீட்டரில் அதை நிரப்பி மீண்டும் அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது  என்பது அது வெளிப்படையாக மக்களுக்கு சொன்ன தகவல்...

பாதரசம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு கூட மக்களுக்கு தெரியபடுத்தாத நிர்வாகம்....

ஊழியர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி  வெறும் கைகளால் கையாள செய்தது தான் கொடுமையின் உச்சம்..

ஆண்டுக்கு 90லட்சம் தர்மா மீட்டர்களை தயாரிப்பது  என்பது இலக்கு...

இதில் சராசரியாக 20 லட்சம் தர்மா மீட்டர்கள் உடைபடுவது வாடிக்கை என்றாலும்... அப்படி உடைபடும் தர்மா மீட்டர்களையும் அதன் கழிவுகளையும்  யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலையின் மணல் பகுதியில் ஆலை நிர்வாகம் ரகசியமாக புதைக்க...

சுமார் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கபட்டனர்...

ஊழியர்கள்.... கடுமையான தலைவலி.. சிறுநீரக பாதிப்புகள்.. மூளை மற்றும் நரம்பியல் பிரச்சனை.. மலட்டு தன்மை.. கற்பகால பாதிப்புகள்.. குறைபாடுகள் உடைய குழந்தைகள் பிறப்பு... பல் மற்றும் ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகள் இப்படி கடுமையான  பாதிப்புகளில் சிக்க..

பின்பு தான் பிரச்சனையின் பூதாகாரம் மக்கள் தெரிந்து கொண்டனர்...

மக்களின் தொடர் போராட்டத்தால் 2003ல் இத் தொழிற்சாலை தமிழகத்தில் மீண்டும் மூடு விழா  காணப்பட்டது...

இன்னும் இதன் வீரியம் பற்றி சொல்ல வேண்டுமானால்..

ஒரு லீட்டர் நீரில் 0.002 என்ற அளவில் பாதரம் கலந்து அருந்தினாலே கிட்னிபாதிக்கபட்டுவிடும்......

இப்போ  புரியியும்னு நினைக்கிறேன்.....

நீதிமன்ற உத்தரவுகளின் படி அனுசக்தி துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் மலைகளின் இளவரசி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பதை (ஏரிகள்... காற்று... மீன்கள்.. மண்) சத்தமில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறது...

இந்த தொழிற்சாலையின்  290 டன் அளவிற்கான கழிவுகளை  அப்புறபடுத்த இந்நிறுவனத்தின் தலைமையகம் ஒத்துக்கொண்ட போதிலும் அதற்கான நடவடிக்கை இன்று வரை மேற்கொள்ளபடவில்லை என்பதே அதிர்சியான உண்மை...

இந்த பாதரச கழிவுகளும்.. உடைந்த தர்மா மீட்டர்களும் தொழிற்சாலையின் பின்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஏழு டன் அளவிற்கு கொட்டப்பட்டிருப்பதை மத்திய மாநில அரசுகளும்  உறுதி செய்திருக்கின்றன....

ஆலை நிர்வாகமும் அரசும் இதை எப்படி அகற்றுவது என்ற விவாதமே இன்று வரை  போய் கொண்டிருக்கிறது...

அதாவது கிட்டதட்ட 15 ஆண்டுகள்....

அதைவிட இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த நிர்வாகத்தின்  மீது அரசு எவ்வித கிரிமினல் வழக்குகளையும் தொடுக்கவில்லை என்பதும்  கூடுதல் தகவல்....

ஒரு கிலோகிராம் மண்ணில் 1 மில்லி கிராம் என்ற விகிதத்தில் மட்டுமே இங்கிலாந்து போன்ற நாடுகள் அனுமதிக்கிறது...

நெதர்லாந்து போன்ற நாடுகள் ஒரு கிலோகிராமுக்கு 10 மில்லி கிராம் அளவில் அனுமதிக்கிறது...

ஆனால் கொடைக்கானலிலோ ஒரு கிலோ கிராமிற்கு 100 மில்லி கிராம் என்ற விகிதாச்சாரத்தில்  இந்த கழிவுகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்திருக்கின்றன ..

பாதிக்க பட்ட மக்களும் இன்று வரை நீதிக்காகவும்.. நிவாரணங்களுக்காகவும் நீதிமன்ற கதவுகளை தட்டிக் கொண்டிருக்க..

எஞ்சியுள்ள மக்களும் தங்கள் பங்குக்கு அந்த ஆலகால விஷத்தை பருக கொடைக்கானலுக்கு  படையெடுத்த வன்னமே உள்ளனர்...

தமிழகமும் விபச்சார ஊடகங்களும்...


கதிராமங்கலம் நெடு வாசல்ல கஷ்டப்படுற மக்களுக்கு இல்லாத லைவ்..

விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாத லைவ்...

இந்த குடும்ப சண்டைக்கு லைவ் வாம்...

ஏனென்றால் இது தான் நாட்டிற்கு முக்கியமாம்...

டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி...



சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 9 கிலோமீட்டர் நீளமுடைய எரிகல் ஆனது மெக்ஸிக்கோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் மோதியது. பூமி கிரகத்திற்கு நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இருந்து தான் டைனோசர்கள் இன அழிவானது தொடர்ச்சியான முறையில் அரங்கேறியது.

பூமி கிரகத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த எரிகல் மோதலில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அந்த மோதலில் மிஞ்சிய எரிகல் பாகங்கள் பற்றிய ஆய்வுகள் சாத்தியமில்லாமல் போனது ஏனெனில் மோதல் நிகழ்ந்த இடத்தின் பெரும்பாலான பிராந்தியம் மிகவும் இறுக்கமாக எண்ணெய் தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருப்பினும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்கள் மோதல் எரிகல் மோதல் நிகழ்ந்த இடத்தை தோண்டி ஆராய அனுமதி கிடைத்தது அங்கு இருந்து தான் டைனோசர் மீட்டெடுப்பு கதை மீண்டும் பலமாக ஆரம்பமாகிறது.

பூமி கிரகத்தில் விழுந்த அந்த எரிகல் ஆனது சுமார் 180 கிலோமீட்டர் விட்டம் மற்றும் 20 கிலோமீட்டர் ஆழமுள்ள பெரும் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது, அது சிக்சுலப் பள்ளம் (Chicxulub crater) எனப்டுகிறது.

அந்த பள்ளமானது முதல் முறையாக டைனோசர்கள் சார்ந்த ஆய்வுகளுக்காக தோண்டப்பட இருக்கிறது, இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய படிம கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏவியன் : கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தொன்மம் ஆனது ஏவியன் வகை டைனோசர்கள் அதாவது பறவை வகை டைனோசர்களின் பற்றிய பெரிய அளவிலான புரிதல்களை வழங்கியுள்ளது.

எரிகல் மோதலில் பெரும்பாலான டைனோசர்களின் இனம் அழிந்துவிட, தப்பிப்பிழைத்த சில இனங்களின் மூலம் உருவாகிய உயிரினங்கள்தான் தற்போது நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதை நன்கு ஆராய்ந்த சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள், கோழிகளை பயன்படுத்தி ஏவியன் வகை டைனோசர்களை மீட்டுக்க முடிவு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வழக்கமான கோழிகள் மரபணுக்களில் சில எவியன் வகை டைனோசர்கள் போன்ற மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன அதாவது கோழிகளின் கால்களில், டைனோசர்களின் கால் எலும்பு போன்ற ஒன்றை உருவாகியுள்ளனர்.

அதேபோன்று மற்றொரு ஏவியன் வகை டைனோசர் ஆன ப்கயோஸ்டைலியன்ஸ் (Pygostylians) என்ற இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவைகளை ஆராய்ந்து தற்கால பறவையின் கருக்கள் டைனோசர்களை போன்றே இன்னும் நீளமாக வளரும் அறிகுறிகள் கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஐஎச்எச் வகை மரபணு : நீளமான கால்கள் கொண்ட பறக்கும் வகை டைனோசர்கள் இனத்தில் இருந்து உருவான தற்கால பறவைகள் இனத்திற்கு ஏன் கால்கள் குறுகியது என்பது சார்ந்த ஆய்வில் ஐஎச்எச் (IHH) வகை மரபணு மீண்டும் நீளமாக வளர்க்கொடிய தன்மை கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பகரமான ஆய்வு தகவலில் இருந்து கோழிகளின் கால்களை பயன்படுத்தி முதன்முறையாக டைனோசரின் கால்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

இப்படியாக கோழிகளை கொண்டு டைனோசர்கள் மீட்டெடுக்கப்படும் முயற்சியானது ஒன்றும் முதல்முறை நடக்கவில்லை என்பதும், கடந்த ஆண்டு, இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவானது கோழி கருவில் இருந்து டைனோசர் அலகு போன்ற வடிவமைப்பை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது...

நேத்து நம்மள ஹிந்தி கத்துக்க சொன்னவங்கள இன்னிக்கு பாருங்க...


செல்லாத நோட்டை கொடுத்து ஏமாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி...


பழைய ஆயிரம் ரூபா நோட்டு வச்சு இருந்தா குற்றம் இல்லயா...


தந்தி மற்றும் பாண்டே விற்கு உங்கள் கண்டனங்களை பதிவு செய்யவும்...


பீகார் மாநிலத்தில் இருந்து பாணிப்பூரி விற்று பிழைக்க வந்த குடும்பம் கூறுகிறது. இந்தி படிக்காததால் தமிழகம் 50 வருடம் பின்தங்கிவிட்டதாம்...


தமிழ்நாட்டிற்கு வந்து தமிழில் பிழைப்பு நடத்திக்கொண்டு கூறுகிறார்கள் இந்தி படிப்பது அவசியம் என்று.

பாண்டே மட்டுமல்ல. துக்ளக் என்னும் பத்திரிகையை தமிழில் நடத்திய சோ வும் இறக்கும்வரை இதையே கூறினார். ஆனால் அவர் துக்ளக் இதழில் ஒரு பக்கம் கூட இந்தி மொழியில் எழுதியதில்லை.

நடிகர் எஸ.வி.சேகர் கூட இதேயே கூறி வருகிறார். ஆனால் அவர் ஒரு நாடகம்கூட இந்தி மொழியில்  போட்டு சம்பாதிக்கவில்லை.

இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மொழியில் சம்பாதித்துக்கொண்டு இந்தி மொழிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

இவர்களால் கேரளாவில் போய் இந்தி படிக்காததால் கேரளா 50 வருடம் பின்தங்கிவிட்டது என்று கூறமுடியுமா?

இவர்களால் கர்நாடகா சென்று இந்தி படிக்காததால் கர்நாடகா 50 வருடம் பின்தங்கிவிட்டது என்று கூறமுடியுமா?

தமிழ்நாட்டில் வந்து தமிழால் சம்பாதித்துக்கொண்டு தமிழ் மொழிக்கு எதிராக எப்படி இவர்களால் பேச முடிகிறது?

தமிழன் என்ன இழிச்சவாயன் என்று நினைக்கிறார்களா? என்ன சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு பேசாமல் இருப்பான் என்று நினைக்கிறார்களா?

தமிழன் தலை நிமிரும் காலம் இது. இனி இப்படியானவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை உணர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது.

அடி வாங்கிக்கொண்டு அடிமையாக இருந்த காலம் போய்விடட்டது. இனி திருப்பியடிக்கும் காலம் வந்து விட்டது.

தமிழா இன உணர்வு கொள்...

ஹலோ பாஜக பக்தாள்ஸ்...


தமிழக மக்கள் வரிப்பணத்தை ஹிந்திகாரனுக்கு கொடுக்கும் மோடி அரசை என்ன செய்யலாம் ?

காரி துப்பலாமா...