07/05/2018
தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...
1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் எழுதியது..
புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும் - பஞ்சமரும் -ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.
ஹும். இந்த பாஷை சரிப்படாது.
நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.
தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும் தெலுங்கர்கள் என்றும்தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்..
(பாரதி தமிழ்: பக்.403)...
கிருஷ்ணகிரியில் குடியிருப்புகள் அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாண மாவு போடூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள், ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக சுற்றி வருகின்றன. ஏரி, விவசாய நிலங்கள் வழியே உலாவரும் யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் நுழைவதை தடுக்க, யானைகளை தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்...
குறிக்கோள்கள் எவ்வாறு வெற்றியை தீர்மானிக்கின்றன...
குறிக்கோள்கள் இல்லாத வாழ்கைப் பயணம் என்பது இலக்கை நிர்ணயிக்காமல் எய்த அம்பினைப் போன்றது.
நீங்கள் இப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்று எடுத்துக்கொள்வோம்.
அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டிலுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
இங்கே தான் நம்மில் பலர் தவறு செய்கின்றனர்.
இலக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால் பலர் நான் சச்சின் டெண்டுல்கர் போல மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று தனது இலக்கிணை தீர்மானிக்கின்றனர்.
நாம் சச்சினைப் போல சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற இலக்கிணை நிர்ணயிக்கும் போது வெற்றியை நோக்கி நமது இலக்கிணை தீர்மானிக்கின்றோம்.
அது நம்மை தோல்விப் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவ்வாறு இல்லமால் நம்முடைய இலக்கிணை நம்முடைய செயலில் அதாவது இங்கே கிரிக்கெட் ஆட்டத்தில் வைக்க வேண்டும்.
இலக்கிணை செயலில் எவ்வாறு நிர்ணயிப்பது?
முதலில் இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் அது மாறிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அதாவது நீங்கள் ஒரு மலையினை முழுவதுமாக உடைக்க எண்ணினால் அந்த மலையையே இலக்காக வைத்து செயல்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றி பயத்தினை ஏற்படுத்தும்..
மாறாக நீங்கள் அந்த மலையை கற்களாகவும், சிறு சிறு பகுதிகளாகவும் இலக்கிணை நிர்ணயித்து உடைத்து வந்தால் உங்களால் அந்த முழு மலையையும் உடைக்க முடியும்.
உதாரணமாக உங்களுக்கு பிடித்த செயலான கிரிக்கெட்டில் நீங்கள் இலக்கிணை எவ்வாறு தீர்மானிப்பது என்று பார்போம்.
முதலில் நீங்கள் சிறந்த பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உங்களைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் அதிகம் விளையாட வேண்டும், அதிக நேரம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், பல மாறுபட்ட சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்த்து பயிற்சி செய்ய வேண்டும், பல்வேறு தன்மை கொண்ட ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடலினை வலிமையாக ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இப்படி உங்களின் இலக்குகள் முழுவதும் உங்களின் செயலினைத் தொடர்ந்தே இருக்க வேண்டும்.
இலக்கை நோக்கி பயணிக்கும் போது சில சமயங்களில் சிலரின் எதிர்மறை எண்ணங்கள், அல்லது சிறு தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யலாம்...
அதை பற்றிக் கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து சென்றால் வெற்றியை அடைந்து விடலாம்...
நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது.. நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை... தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை...
இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு! இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புகள் அதிகமாகத் தமிழ்நாட்டைத்தான் பாதிக்கின்றன.
இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் திணித்த “நீட்” தேர்வு கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிவாங்கியது. இந்த ஆண்டும், பலரை அத்தேர்வு பலி வாங்கி வருகிறது.
கடந்த 26.04.2018 அன்று, சேலம் தமிழ்ச் சங்க சாலையைச் சேர்ந்த மாணவர் கெவின்ஹரி என்பவர், நீட் தேர்வுக்குப் பயின்றுவந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 01.05.2018 அன்று, “நீட்” தேர்வுக்குப் படித்து வந்த புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 17 அகவை மாணவி சிவசங்கிரி, “நீட்” தேர்வு மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இப்போது, திருத்துறைப்பூண்டி விலக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பலியாகியுள்ளார்!
கேரள மாநிலம் – எர்ணாக்குளத்தில் மாணவர் மகாலிங்கம் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் எர்ணாக்குளத்திற்கு நிற்கக்கூட இடமில்லாமல், கழிவறைக்குள் ஒண்டிக் கொண்டே நீண்ட தொலைவுக்கு விடிய விடிய தொடர்வண்டிப் பயணம் செய்தனர். இதனால், கிருஷ்ணசாமி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, தங்கியிருந்த விடுதியில் மாரடைப்பால் இறந்துள்ளார்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் உயிர் ஈ – எறும்பு உயிர்களைவிடவும் மலிவானவை! இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்து, இந்திய அரசின் உரிமைப் பறிப்புகளால் நேர்ந்த தமிழர் உயிர்ப் பறிப்புகள் ஏராளம்! ஏராளம்!
1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததால், சிங்களப் படையினால் கடலில் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் 600 பேருக்கு மேல்! இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத்துக்கு இந்தியா உதவி செய்ததைக் கண்டித்து தீக்குளித்து மாண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏராளம்! காவிரி உரிமை மறுக்கப்பட்டு, வேளாண்மை செய்ய வழியின்றி தற்கொலை செய்து கொண்ட தமிழ்நாட்டு உழவர்கள் பல நூறு பேர்!
இப்பொழுது, எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்க இளம் பிஞ்சுகள் – இந்தியாவின் நீட் தேர்விற்கு வரிசையாக பலியாகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
நடுவண் பாடத் திட்ட வாரியம் (சி.பி.எஸ்.இ.) என்பது, பெரும் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ள பாடத்திட்ட நிறுவனம்! தனியார் ஆதிக்கமும் வடநாட்டுத் தலைமையும் கொண்ட நடுவண் பாடத்திட்ட வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?
நீட் தேர்வை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்ப்பதால், தமிழ்நாட்டு மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை இராசத்தானத்திலும், கேரளத்திலும் தேர்வெழுத மேற்படி வாரியம் அலைக்கழித்துள்ளது. சனநாயகமற்ற இந்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, இயற்கை நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை இனியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் உடனே தர வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். ஆளுங்கட்சியே முன்வந்து நீட் தேர்வு விலக்கு கேட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து நிரந்தரமாக நீட் தேர்வை விரட்டும் வகையில், ஒருங்கிணைந்த போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும் முன்னெடுக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்...
தாஜ்மகால், பத்தேபுர் சிகிரி கட்டடங்கள் புழுதிப்புயலால் சேதம்...
உத்தரப்பிரதேசத்தில் வீசிய புழுதிப்புயல் காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் இரண்டாவது முறையாக சேதம் அடைந்துள்ளது.
கடந்த மாதம் 11ம் தேதி புழுதிப்புயல் வீசியபோது தாஜ்மகால் மற்றும் பதேபுர் சிக்ரி (Fatepur Sikri) போன்ற புகழ்மிக்க கட்டடங்கள் சேதம் அடைந்தன.
தாஜ் மகாலில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க வல்லுனர்கள் முயன்று வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை வீசிய புழுதிப் புயலால் மீண்டும் சேதம் அடைந்துள்ளன.
தாஜ்மகாலின் அரச வாயில் கதவு, கோபுரம் மற்றும் தூண்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மகால் வளாகத்தில் ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்துக் கிடக்கின்றன...
கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...
திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?
தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப் பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.
சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார்.
ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.
திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ் (திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்து விடுகிரார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள் (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556).
என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.
திராவிடர் என்று நம்மைக் சொல்லிக் கொள்ளவே பெரும்பாடாக இருக்கும் போது, தமிழர் என்று எல்லாரையும் ஒன்றினைக்க முயற்சி எடுப்பதால் இன்னல்கள் கூடும்.
இங்கேயே பாருங்கள். கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் ( அண்ணாதுரை தெலுங்கர்) இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும் (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550).
இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ, தெலுங்கர்களோ, மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும்.
இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.
தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை
'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார் (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்...
தமிழே தூய்மையான தென்மொழி என்றும் ..
ஆரியங்கலந்த கொடுந்தமிழே திராவிட மொழிகளாய் - தெலுங்கு,
கன்னடம், மலையாளம், துளுவாய் - திரிந்ததென்று அறியவும்.
வடமொழிக் கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது, திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார்.
அரை ஆரியமும், முக்கால்
ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால் அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போல் தமிழும் கெடும், தமிழனும் கெடுவான்.
ஆதலால்,
தமிழ் - தமிழன்- தமிழ்நாடு என்ற சொற்களன்றி,
திராவிடம் - திராவிடன் -
திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.
தமிழ் வேறு திராவிடம்வேறு என்பதுடன்
ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.
திராவிடம் என்பதே தீது...
- மொழி ஞாயிறு பாவாணர்...
ஓம் மந்திரம் சிறுவிளக்கம்...
இப்பிரபஞ்சிற்கு வெளியே உள்ள பாழ்வெளியில் அதாவது சூன்யத்தில் ஆங்காங்கே ஏற்படும் ஒரு நுண்ணிய குவாட்ரிக்(மின்) அதிர்வே ஓம் எனும் மகாமந்திரம் உருவாக காரணம்.
அந்த ஆதி அந்தமில்லா நாதம் தான் இந்த மொத்த பிரபஞ்ச உருவாக்கத்திற்கு காரணம்.
இந்த பிரபஞ்சம் 99.99 சதவீதம் வெற்றிடத்தால் ஆனது. ஒலியும் ஒளியும் தான் இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்திற்கு காரணம்.
LIGHT BECOMES ENERGY, ENERGY BECOMES MATTER.
ஓம் என்ற நாதத்தின் மாறுபட்ட அதிர்வலைகளால் இந்த பிரபஞ்சம் அதிர்ந்து கொண்டு இருக்கிறது. இதையே பிரபஞ்ச இயக்கம் என்கிறோம்.
அந்த மகாமந்திரத்தை நாம் பற்றிக் கொண்டாலே ஆதி அந்தமில்லாத அந்த நியூட்ரான் தளத்தை அடைய முடியும்.
எந்த கனம் உங்கள் உடல் அணுக்கள் முழுவதும் ஓம் மந்திர அதிர்வுகளுக்கு ஒத்துப் போகிறதோ அந்த கனம்தான் நிர்விகல்ப சமாதி நிலை. அதாவது தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது...
தீர்க்க தரிசி எரிக் ஜான்...
எரிக் ஜான் ஹனுசென் 1889 இல் யூத தந்தைக்கு பிறந்த இவரின் உண்மையான பெயர் ஹெர்மான் ஸ்டெய்ன்நேடர், இவருடைய தந்தை ஒரு நாடக நடிகரும் கூடுதலாக யூத ஆலயத்தை கவனிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார்.
பள்ளி கல்வியை கைவிட்ட எரிக் சர்க்கஸில் இணைத்து கத்தி எறிவது, நெருப்பினை உண்பது போன்ற சர்க்கஸ் சாகசங்களை நன்கு கற்று தேறினார்.
முதலாம் உலக போரில் படை வீரனாக இருந்த எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய சக்திகளை செய்து காட்ட தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் எரிக்கின் குழாமிற்கு நீர் தட்டுபாடு ஏற்பட்ட பொது அனைவரும் நம்பிக்கை இழந்த தருணத்தில் எந்த உபகரணங்களும் மந்திரகோலும் இன்றி தனது நண்பர்களுக்கு நீரினை வரவழைத்தார் எரிக் , எரிக்கின் அசாத்திய ஆற்றலும், அனைவரையும் கவரும் தோற்றமும், அவரை சாதாரண சிப்பாய் என்ற நிலையில் இருந்து படை வீரர்கள் கூட்டத்தின் முன் நிகழ்ச்சிகளை செய்து காட்டும் அளவு உயரத்தில் ஏற்றி விட்டது.
போர் முடிந்த பின்னர் எரிக் தனது தூரத்ருஷ்டி (clairvoyance ), அடுத்தவரின் மனதில் உள்ளதை அப்படியே படித்து காட்டுவது (mind reader ), போன்ற சக்திகளை மேலும் வளர்த்து கொண்டு ஜெர்மன் அதனை சுற்றி உள்ள தேசத்திலும் தனது அபூர்வ சக்தியை பற்றிய நிகழ்வுகளை நடத்தி கொண்டு வந்த போது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அவரை மேலும் சிக்கலிலும் ஆழ்த்தியது. ஆனாலும் மேலும் பிரபலமாகவும் செய்தது.
ஆம்., ஒரு கொலையை பற்றி தனது நிகழ்ச்சியில் அத்தனை செய்திகளையும் விளக்கினார். ஆனால் அந்த செய்தி எரிக் கூறியதன் பின் தாமதாகவே பத்திரிகைகளில் வெளியானது, இதன் மூலம் எரிக்கின் மேல் சந்தேக பார்வை விழ தொடங்கியது, இவருக்கும் கொலை கூட்டத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா பத்திரிகை அல்லது காவல்துறை மூலம் இந்த செய்தியை அறிந்து கொண்டாரா என்று ஆனாலும் பலர் இந்த முன்னறிவிப்பை கண்டு ஆச்சர்யம் கொண்டானர்.
எரிக்கிர்க்கு தொல்லைகள் இல்லாமலும் இல்லை. ஒரு முறை எரிக் கைது செய்யபட்டார் காரணம் எரிக் பணத்தை பெற்று கொண்டு தவறான தகவல்கள், அதாவது இவரது கணிப்ப்புகள் தவறானது என்ற வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யபட்டார். ஆனால் தனக்கு எதிரான இந்த வழக்கின் மூலம் எரிக் எவரும் தொட இயலாத நட்ச்சத்திர அந்தஸ்த்தை பெற்றுவிட்டார்.
செக்கொலோஸ்கியாவில் நடை பெற்ற வழக்கில், எரிக்கின் அசாத்திய ஆற்றல்கள் குறித்த முன்னறிவிப்புகள் குறித்த சந்தேகம் கிளம்பியது, ஆனால் எரிக் வழக்குரைஞரின் சட்டை பையில் இருக்கும் பொருள்களையும் நீதியரசரின் வழக்கு பேழையில் இருந்த பொருள்களையும் மிக சரியாக கூறியபோது நீதியரசர் இவை எரிக்கின் நிகழ்ச்சியில் நடத்தப்படும் கண்கட்டு வித்தை என்று புறந்தள்ளினார்.
எரிக் தனது ஆற்றலின் மகத்துவத்தை புரியவைக்க ஒரு திருட்டினை திருடன் நிற்க்குமிடம் போன்றவற்றை துல்லியமாக கூறினார். கமெர்சியல் வங்கியில் கொள்ளையடித்த திருடன் லேய்ட்மேரிட்ஸ் ரயில்வே நிலையத்தில் 2 எண் ரயில்வே பிளாட்பார்மில் நிற்பதகாவும், அவனது கைப்பெட்டியில் இருக்கும் பணத்தையும் பற்றி சரியாக கூறினார். ரயில்வே நிலையம் சென்ற காவலர்கள் அந்த கொள்ளையனை கைது செய்து அழைத்து வந்தனர், எரிக் சொல்லியது போலவே .விடுதலை செய்யப்பட்ட எரிக்கின் புகழ் இந்த நிகழ்வின் பின் இன்னும் அதிகமானது.
மற்றுமொரு முறை பெர்லினில் செயின்ட் ஸ்காலா என்ற இடத்தில் மேடை நிகழ்வை நடத்தியபோது எரிக் கூறிய இன்னொரு முன்னறிவிப்பும் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்து.
பார்வையளர்கள் கூட்டத்தில் இருந்த வங்கியாலரிடம் எரிக் அவருடைய வங்கியின் பாதுகாப்பு அறையில் தவறான மின் இணைப்பு காரணமாக தீ பரவபோவதாகவும் 360000 மார்க்ஸ் பணம் சேதமேர்ப்படலாம், என்றும் மிக விரைவாக தீயணைப்பு துறையினை அழைக்குமாறு எரிக் அவரிடம் கூறுகிறார். அந்த வங்கியாளரும் அவ்வாறே செய்ய அங்கு சென்ற தீயணைப்பு குழுவினர் எரிக் கூறியதை போல தவறான மின் இணைப்பு இருப்பதை கண்டு ஆச்சர்யமுற்றனர்.
எரிக் பற்றி மேலும் தொடர்வோம்...
மகாபாரதம் - பாண்டவர் பாண்டியரே.. கௌரவர் குரவரே...
காந்தாரி அம்மன் யார்?
காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும்.
மகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும்.
அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும்.
காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கி விட்டனர்.
இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர்.
தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம்.
அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார்.
அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார்.
இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார்.
அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது.
அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.
கருத்தினன் --> கிருத்தினன் --> கிருட்டினன் --> கிருஷ்ணன்.
குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது.
மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே..
துரியோதனன் என்பது துர்+ஓதனன் என்றிருந்து மருவியது.
துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள்.
இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும். இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன்.
இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே.
வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல.
திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே. திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே.
இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை காந்தம் போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி.
அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது.
இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது.
மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.
இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்கு முன்பே பொன்னையும் அறிந்தவன்.
காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி.
அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி --> சங்குனி --> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது.
சம் என்றால் அனைத்தையும் அல்லது ஒட்டுக்க அல்லது கூட்டாக என்று பொருள்.
ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச் சொல்லே..
பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும்.
மருத நிலத்தைக் குறிக்கும்.
ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது.
அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள்.
அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி --> த்ரௌபதி --> திரௌபதி) திரௌபதி ஆனாள்.
அதாவது குரவர், கௌரவர் ஆனது போல.
திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே. அவளே மீனாட்சியும் ஆகும்.
அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?
குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது.
சகுனிக்கும் கோயில் உள்ளது.
இது இன்றும் குறவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.
அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.
அதே போல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது.
யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குறவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்பட வேண்டும்.
காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே.
ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே.
ஆதி நற்புரம் என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது.
ஆதிச்ச நல்லூரும், ஆதி நற்புரமும் ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
குரவர் சேர் தரை தான் குருஷேத்திரம் ஆனது.
சேர் + தரை --> சேர் + த்ர --> சேர்த்ர --> ஷேத்ர --> ஷேத்ரம்.
மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம்.
குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் --> குரஷேத்ரம் --> குருஷேத்ரம் ஆனது.
ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.
ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே.
அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக் கொண்டனர் யூத பிராமணர்கள்.
ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி.
குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது.
குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை.
தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்பட வேண்டும்..
- முனைவர் வே.பாண்டியன், தமிழர் உலகம்..
தாமிரபரணி ஆற்றங்கரையில் பாரதப்போர் நடைபெற்றது என்பதற்கு நம் முன்னோன் பெருஞ்சோற்று உதயன் சேரலாதனின் வரலாற்றுக் குறிப்பே ஆதாரம்.
ஆதித்த நல்லூரில் இன்னும் பாண்டவர் சமாதி, கௌரவர் சமாதி என்றுள்ளது...
மகாவம்சத்தில் பாண்டியரை பாண்டு என்றே அழைக்கின்றனர்...
சித்தராவது எப்படி ? - 24...
சுவாச ஒழுங்கில் சூரிய கலை சந்திர கலை...
இன்று ஒரு அன்பர் கேட்ட கேள்வியின் விளைவாக சுவாச ஒழுங்கினை பற்றி மேலும் விவரிக்க வேண்டிய அவசியமாகிறது...
சுவாசத்தோடு இருக்கின்ற நாம் அதில் செம்மையாக இருக்கும் போது அதாவது ஒழுங்காக இருக்கும் போது ஏற்படுகின்ற உயர்வுகள் முன்னேற்றங்கள் அளவிட முடியாதது..
அப்படி பட்ட உயர்வுகளை தன்னிடமே வைத்துக் கொண்டுள்ள அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது அவ்வளவு எளிதா என்ன?
ஆமாம் அது சற்று என்ன மிகவும் கடினமே.. அதற்கு இடையூறு செய்கின்ற தடைகளை வெல்லுவது என்பது ஒன்று சேர்ந்து வரும் மிக பெரிய பூதங்களை வெல்லுவதற்கு இணையானது.. கவர்ச்சி என்பது துளியும் இல்லாத இந்த சுவாச ஒழுங்கு மனதிற்கு புலப்படாத ஒருநிலை நோக்கி நகர்ந்து ஒரு தோன்றா நிலை என்ற அதி உன்னத நிலை நோக்கி நகர்த்தி செல்லுவதால் அந்த தெய்வநிலைக்கு இடையூராக பூத கணங்கள் என்ற எண்ண தடைகள், தடை செய்வது சகஜமே..
சரி இந்த சுவாச ஒழுங்கில் சூரியகலை சந்திர கலை என்று வெளி விடுகின்ற மூச்சும் உள்வாங்குகின்ற மூச்சுமாக பார்த்தோம்.. ஆனால் சந்திர கலை சூரிய கலை என தனித்தனியாக உணர முடிந்ததா ?
இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பொழுது எந்த முன்னேற்றமும் காண முடியாது.. ஆனால் தனித்தனியாக உணர வேண்டும் என்றால் வெளி விடுகின்ற சூரிய கலை முழுமையும் தோன்றா நிலையாக இருந்தால் மட்டுமே சூரிய கலை சந்திர கலை தனித் தனியாக பிரியும்.. அதற்கு ஓம் நமசிவய என்ற மந்திரத்தின் கால அளவினை பிடித்துக் கொண்டு சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலை உணரவும் அதே நிலையில் சந்திர கலையும் அந்த தோன்றா நிலைக்கு சென்று விடாமல், நம் மனதின் திறனை இழந்து விடாமல் சந்திர கலையில் உள் வாங்கும் மூச்சை நம் மனதால் பற்றி நாமே உள் வாங்க வேண்டும்..
இதில் நாம் என்பது மனதாக உள்ள நாம் தான்... அந்த சந்திர கலையில் நம் அதி தேவையான ஒன்றை நினைக்கும் போது அந்த தேவைக்கான தடைகள், அந்த தோன்றா நிலையில் கரைந்து போகும் அதிசயம் நடக்கிறது... தடைகள் கரைந்து நீங்கிய நிலையில் அந்த தேவை நிறைவேற்றப் படும் அதிசயமும் நடைக்கிறது...
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தோன்றா நிலையினை சூரிய கலையில் பெற்ற உடன் நம் சந்திர கலை சுத்தமாக தோன்றா நிலையை பூரணமாக கவ்விக் கொண்டு அமாவாசை போன்ற சந்திரகலையும் தோன்றா நிலைக்கு சென்று மறைந்து விடுகிறது..
பயிற்சியில் தொடரும் போது, தோன்றாநிலை நீங்கிய பிறைகளாக சந்திர கலை வளர்ந்து வளர்ந்து பௌர்ணமியான முழு நிலவு ஆகிறது.. அந்த முழு மதிநிலையில் மட்டுமே நமது ஆசைகள் ஒழிந்து தேவைகள் முன் நிறுத்தப் படுகின்றன.. ஆசைகள் வேறு தேவைகள் வேறு என்பதை முன் பகுதிகளில் தெளிவாக கூறி இருக்கின்றது.. அனைத்துக்கும் ஆசைபடு என்ற கருத்தை விட்டு விட்டு அனைத்து தேவைகளையும் உணர் என்ற சத்தியத்தை பிடித்தால் பெரும் நன்மை அடையலாம்...
நோய் நீங்குதல், தரித்திரம் நீங்குதல், தன்னை சார்ந்தவர்களுக்கு உதவாத அவலநிலை, பாதகமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளல் போன்ற, மிக அவசியமான தேவைகள் மட்டுமே இந்த சந்திர கலை மதியான நிலையில் உதிக்கும்.. அந்த தேவைகளின் தடைகளை இந்த சூரிய கலை போக்கும் அதிசயத்தை இந்த மனம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை... இல்லவே இல்லை..
ஆனால் தேவைகள் பூர்த்தியாகும் அதிசயத்தை நீங்கள் விரைவில் உணரலாம்.. சந்திர கலையை மதி ஆக்குவதற்கு மிக சிரமமா என்ற கேள்விக்கு பதில் சராசரி மனிதனுடைய திறமையில் சற்று தீவிரமாக பயின்றால் மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் இது சாத்தியமாகும்...
உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற இந்த சுவாச ஒழுங்கு முற்றிலும் கவர்ச்சி அற்ற ஒன்று என்பது மிக முக்கியமான தடை..
மதியிலே வைக்கப் படும் தேவைகள் கண்டிப்பாக சூரிய கலையின் தோன்றா நிலையால் நிறைவேற்றப் படும் என்பது சத்தியமான உண்மை.. தெய்வத்திடம் பக்தியோகத்தில் முறையாக நிற்கும் மனிதன் முதலில் அந்த தெய்வத்திடம் தோன்றா நிலையினை உணர வேண்டும்.. தெய்வத்தின் இயல் நிலை என்ற தோன்றா நிலையை உணராமல் செய்யும் பக்தியோகம் ஒரு பலனும் அளிக்காது.. தெய்வத்திடம் முறையிட்டு பல தோல்விகளை கண்டு துவண்டு போன மனிதன் தானாக அனுபவப் படும் தோன்றா நிலை மூலமாகவும் அதன் பின் சந்திர கலையை முழு மதியாகவும் அனுபவப் படும் போது மட்டுமே தெய்வதிடமிருந்து பலன் பெறப் படுகிறது.. அந்த நிலைக்கு வர பல ஆண்டுகள் ஒடி விடும்.. அதற்கு காரணம் ஆன்ம இலாபம் துளியும் இல்லாத நிலை.. காட்டில் வாழ்ந்த கண்ணப்பருக்கு தன்னுடைய அப்பாவித்தனம் மூலம் ஏழே நாட்களில் தோன்றா நிலைக்கு சென்று அன்பு என்ற முழு மதி நிலை அடைந்ததால், இறை தரிசனம் கிடைத்தது.. அவருக்கு அப்பாவி தனம் மிகவும் உதவியது.. ஆனால் அப்பரோ தனது என்பது வயதில் கடினமான கைலாய மலையில் பயணப் பட்டு அதில் அடைந்த சோர்வில் துவண்டு தோன்றா நிலைக்கு தள்ளப்பட்டு பின் தன் ஒரே குறிகோளான இறை தரிசனம் என்ற ஒரே தேவையால், கலைகள் நிரம்பிய மனம் ஒரே தேவையான இறைதரிசனம் என்ற ஒன்றால் மதியாகி, அந்த கைலாயமே தன் சொந்த ஊரிலேயே காணும் வல்லமை பெற்றார்.. அதற்குள் அவர் காலம் எண்பதற்கு மேல் தாண்டி விட்டது..
யாம் சில சமயங்களில் சில யோக பயிற்சிகளை குறை கூறுவது ஆன்மா இலாபம் துளியும் கிடைக்காது முடிவில் தோல்வி ஒன்றையே தழுவும் படியாக தருவதை தான்.. அதில் கற்றுக் கொள்பவர்கள் மேலும் மேலும் இடர் படக் கூடாது என்ற அன்பின் காரணமாகதான்... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை...
தோன்றா நிலை வெளிப்படாத வெளி சுவாசம் சூரியகலை அல்ல.. அதன் பெயர் வெளி சுவாசம் மட்டுமே.. தோன்றா நிலை உடைய வெளி சுவாசம் மட்டுமே சூரிய கலை எனப்படும்... உள் வாங்கும் சுவாசத்தில் மதி நிலை தோன்றா விட்டால் அதன் பெயர் உள் சுவாசம் என்றே கொள்ள வேண்டும்.. அது சந்திர கலைகள் நிறைந்தது.. பலவித ஆசை என்ற எண்ண ஆதிக்கங்களால் நிரப்பப்பட்டது.. ஆனால் ஒரே எண்ணமான தேவையை மட்டும் உடைய மதியான உள் சுவாசத்தை ஏக கலையான பௌர்ணமியை சந்திர கலை எனலாம்.. இப்படியாக சுவாச ஒழுங்கின் மூலம் சந்திரகலை சூரிய கலை பெற்று நம் உடல், வாழ்க்கை தேவைகளை பூர்த்திசெய்து பின் சித்தராகும் உயர்ந்த குறிகோளை நோக்கி நகருவோம்...
உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்...
ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்...
பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை?
இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்.
உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை.
இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்?
இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்..
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று..
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று.
ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்.
தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள், டாதி ஒன்பது எழுத்துக்கள், பாதி ஐந்து எழுத்துக்கள், யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31 எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்.
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை.
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை.
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது.
உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர்.
ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்..
இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது. எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது.
பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்) இவ்வளவு, இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள். அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது. கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?
சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு. அதுவும் ஒரு வகை விஞ்ஞானம். வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.
ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள். இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்து கொண்டு வாழ்த்துகிறது.
இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை. அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி...
தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...
முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.
அதன்கோட்டின் அமைவிடம்..
தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.
அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் பக்றுளி ஆறு என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக் குறுமுனி என்று அழைக்கப்பட்ட அகத்தியர் தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.
தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்
இவர்களை அகத்தியரின் பன்னிருமாணாக்கர் என அழைக்கிறோம்.'
கபாடபுரத்தில் அகத்தியர் தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு, முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது அகத்தியம் என்னும் இலக்கண நூல் ஆகும்.
அகத்தியம் கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச் சொன்னார் அகத்தியர்.
இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.
தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்,vபொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.
பணம்பாரரின் கருத்து..
தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்...
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து.
இதன் விளக்கம் யாதெனில்..
மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.
இளம்பூரணரின் கருத்து...
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதி உள்ளார்.
அடைமொழி இன்றி தனிமொழியாக அதங்கோடு என்கிற ஊர் திகழ்கிறது.அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் அதங்கோடு என உறுதி செய்யப்பட்டுள்ளது...
இலுமினாட்டி ராக்கி பெல்லர்...
நான் தொடக்கத்திலிருந்து கூறிவரும் ஒரு விடயத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இலுமினாட்டிகளை பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கலாம் ஆனால் தமிழை அறிந்தால் மட்டுமே அவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் இனம் ஒடுக்கப்படுவதிலும் தமிழ் அழிக்கப்படுவதிலும் பெரிய சதி உள்ளது. நம்ம இப்போ இன்றைய பதிவுக்கு போகலாம்..
ராக்கிபெல்லர் இது ஓர் குடும்ப பெயர். இவர்கள் ரோத்ஸ்சைல்ட்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர்கள்.
இவர்களின் நேடியான வேலைகள் மற்றும் கணக்கில் காட்டப்படுகிற சொத்து மற்றும் நிறுவனங்களை மட்டும் பார்ப்போம்.
மறந்துவிடாதீர்கள் பதிமூன்று குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே இலுமினாட்டிகள். ராக்கர்பெல்லர் அக்குடும்பங்களில் ஒன்று.
முதல் மற்றும் இரண்டாவது உலகப்போருக்கு பண உதவி மற்றும் பல ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் இவர்கள் செய்துள்ளார்கள்.
ராக்கர்பெல்லர் ஆராய்ச்சி மையத்தின் வழியாக Mindcontrol மனவசியம் குறித்த ஆராய்வுகள் நாசிப்படைகளுக்காக செய்துள்ளனர்.
அமேரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான Standard oil company இவர்களுடையது.
இதுவே 90% எண்ணெய் தேவையை அமேரிக்காவில் நிறைவு செய்கிறது.
Rocke feller research institute தான் உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம். இது தற்பொழுது Rocke Feller பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.
இவர்கள் உலக புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள்..
University of Chicago
Central Philippine University
Harvard University
Dartmouth College
Princeton University
University of California, Berkeley
Stanford University
Yale University
Massachusetts Institute of Technology
Brown University
Columbia University
Cornell University
University of Pennsylvania
Case Western Reserve university institutions overseas such as London School of Economics and University College London, among many others.[9]Senior (and Junior) also createdRockefeller University in 1901
General Education Board in 1902, which later (1923) evolved into
the International Education Board
Rockefeller Sanitary Commission in 1910
Bureau of Social Hygiene in 1913 (Junior)
International Health Division in 1913
China Medical Board in 1915.
Rockefeller Museum, Israel, 1925
இதன் வழியாக அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். அவை,
To help promote cooperation between physics and mathematics Rockefeller funds also supported the erection of the new Mathematical Institute at theUniversity of Göttingen between 1926 and 1929
வாசித்தீங்களா?
International Education Board இது தான் உலக முழுவதும் கல்வியை ஒழுங்கு படுத்துகிறது. இதன் வழியாக தான் நம்குழந்தைகளை முட்டாளாக மாற்றுகிறார்கள்.
மருத்துவ துறையும் இவர்கள் கையில் தான் சிக்கி நம்மை சின்னாபின்னம் ஆக்குகிறது. தடுப்பூசி மிக ஆபத்தான ஒன்று. நோய்கள் இவர்களாலயே உருவாக்கி பரப்பப்படுகின்றன.
இவன்க ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கின்றனர். அவற்றில் சில..
Rockefeller Center, a multi-building complex built at the start of the Depression in Midtown Manhattan, financed solely by the family
International House of New York, New York City, 1924 (Junior) {Involvement: John III, Abby Aldrich, David & Peggy, David Jr., Abby O'Neill}
Wren Building, College of William and Mary's, Virginia, from 1927 (Renovation funded by Junior)
Colonial Williamsburg, Virginia, from 1927 onwards (Junior, Abby Aldrich, John III and Winthrop), historical restoration
Museum of Modern Art, New York City, from 1929 (Abby Aldrich, John Jr., Blanchette, Nelson, David, David Jr., Sharon Percy Rockefeller)
Riverside Church, New York City, 1930 (John Jr.)
The Cloisters, New York City, from 1934 (John Jr.)
The Interchurch Center, New York City, 1948 (John Jr.)
Asia Society (Asia House), New York City, 1956 (John III)
One Chase Manhattan Plaza, New York City, 1961 (David)
Nelson A. Rockefeller Empire State Plaza, Albany, New York, 1962 (Nelson)
Lincoln Center, New York City, 1962 (John III)
World Trade Center Twin Towers, New York City, 1973-2001 (David and Nelson)
Embarcadero Center, San Francisco, 1974 (David)
Council of the Americas/Americas Society, New York City, 1985 (David)
In addition to this is Senior and Junior's involvement in seven major housing developments:
Forest Hill Estates, Cleveland, Ohio
City Housing Corporation's efforts, Sunnyside Gardens, Queens, New York City
Thomas Garden Apartments, The Bronx, New York City
Paul Laurence Dunbar Housing, Harlem, New York City
Lavoisier Apartments, Manhattan, New York City
Van Tassel Apartments, Sleepy Hollow, New York (formerly North Tarrytown)
A development in Radburn, New Jersey[5]
அடுத்து இவர்களின் மின்சார திட்டங்கள்
Smart power என்ற பெயரில் செயல்படுகிறது.
இந்தியாவிலும் இவர்களின் நிறுவனம் செயல்படுகிறது.
Rocke feller foundation india
Smart power india
இதே போல பல வங்கிகளும் சொந்தமாக வைத்துள்ளனர்.
மேலும் இவர்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அறிவியல் சாதணையாளர்களாக மாறுவர். இதுக்கு பின்னாடி உள் குத்து இருக்கு.
பசுமை புரட்சி என்னும் தானிய வகை அழிப்பிற்கு பின்னனியில் இருந்தவர்களும் இவர்களே..
அடுத்த பதிவில் விரைவில் மற்றொரு குடும்பத்தை பற்றி பார்க்கலாம்...
Subscribe to:
Posts (Atom)