29/05/2018
அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு...
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை, என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.
இம் மூலிகை காடுகள், வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும். சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு, நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.
நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.
உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுசய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் பார்வை, தோசங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.
ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள்...
இதன் முக்கிய குணம் விசத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விசங்கள், தேள், பூரான் விசங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும், மலம் கழியும் உடனே விசமும் முறிந்து விடும்...
பேய்களுக்கு கால்கள் உண்டா?
சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்..
கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது..
பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.
ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.
உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.
இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.
ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல..
அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு.
தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன.
எனவே பேய்களுக்கு கால் உண்டு..
பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்.
நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...
அசகளத்தூர் To கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை...
இரண்டு மாதங்கள் ஆகியும் அசகளத்தூர் To கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பாக போடப்பட்ட சாலையில் பாலம் குறுகியதாக இருப்பதால் சில மாதங்களுக்கு முன் சங்கராபுரம் நெடுஞ்சாலை துறை சார்பாக பாலம் அகலப்படுத்துவதற்கு பைப் லைன் ஜல்லிகள் போடப்பட்டு இதுவரை பாலம் கட்டப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பாலமே குறுகிய நிலையில் இருப்பதால் அதில் ஜல்லி கொட்டிவைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர் நெடுஞ்சாலைத் துறையினர்.
இலுமினாட்டி யும் பொம்மைகளின் உளவியலும்...
பெற்றோர்களே குழந்தைக்கு என்ன பொம்மை வாங்க போறீங்க..?
நாமெல்லாம், குழந்தையாக இருந்த போது ஒரு சில பொம்மைகளே கடைகளில் விற்கப்பட்டன, நம் அப்பாக்களால் என்ன பொம்மை வாங்கி தர முடிந்ததோ அதை நாம் பொக்கிசமாக கருதி விளையாடினோம்..
அப்போதெல்லாம் நமது பாரம்பரிய விளையாட்டு பொம்மைகள் பல புழக்கத்தில் இருந்தது .
(எ.கா) மரப்பாச்சி பொம்மை, சொப்பு சாமான், கிலுகிலுப்பை, இராட்டினம் மற்றும் பல, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு தாயாரிப்பு பொம்மைகளான ரோபோ பொம்மைகள், நெகிழி உறுவ பொம்மைகள் இருந்தன.
இவைகளையே நாம் பெரும்பாலும் பயன்படுதினோம்..
ஆனால் 1995குப் பிறகு பிறந்தவர்கள் , பொம்மைகளால் மாபெரும் உலக அரசியலுக்கும், உலகவர்த்தகத்துக்கும் உள்ளானாவர்கள்..
பொம்மைகளை வைத்து வர்த்தகம் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் அரசியல் எப்படி என்று தானே சிந்திகிறீர்கள்..?
ஆம் நம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு பின்னால் ஒரு மறைக்கப்பட்ட அரசியல் உண்டு.
அதுவும் சாதாரண அரசியல் அல்ல, நம் சமுதாயப் போக்கையே மடை மாற்றிய அரசியல்..
நான் விடயத்திற்கே வருகிறேன் , இந்த அரசியலுக்கு பெயர் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை (Hypersexualization or children).
இந்த காலத்து குழந்தைகள் ஊடகங்கள் மூலம் பாலியல் சார்ந்த தவறான புரிதலால் வளர்கப்படுகிறார்கள்.
அதாவது ஒரு பெண் குழந்தை ஆறு வயது நிறைவடையும் போதே பாலியல் வெளிப்பாடு (sexual appeal) தான் அவர்களது மதிப்பை முடிவு செய்கிறது என்ற சிந்தனை கொள்கிறார்கள்.
பெண்களை ஒரு பாலியல் பதுமைகளாக உணர வைப்பதே இந்த அரசியல்.
இதை திட்டமிட்டு ஊடகங்கள் மூலமாக பரப்புகிறார்கள்..
அதாவது குழந்தைகள் பார்க்கும் கார்டூன் படங்களில் கூட பெண் கதாபாதரங்களை மிகவும் கவர்ச்சியாக (அறைகுறை ஆடைகளுடன்) காட்டுகிறார்கள்.
இதன் விளைவாக சராசரியாக ஒரு ஆறு வயது பெண் சுய பாலின கவர்ச்சி உணர்தலுக்கு (self-sexual realization ) ஆளாகிறார்கள்.
அதாவது தனது பாலியல் வெளிப்பாடே அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கி தரும் என்ற நம்பிக்கைக்கு உள்ளாகிறார்கள்.
இது இளம் பெண்களிடமும் (teen age), பெண்களிடம் தற்போது இயல்பாக பார்க்க இயலும்.
இது சமுதாயத்துக்கு ஒரு தவறான வழிகாட்டுதலை தருகிறது.
குறிப்பாக ஆண்களுக்கு பெண்கள் மீதான பார்வையை மாற்றுகிறது.
சொல்லவா வேண்டும், இப்போது வரும் தமிழ்ப்பாட்டுகளின் சாரமே பெண்களை இழிவுபடுத்துவதும், கேலி செய்வதும், திட்டுவதுமாகவே உள்ளது இல்லை என்றால் அவர்களின் உடல் அழகை போற்றுவதாக உள்ளது..
தற்போதுள்ள குழந்தைகள் இணையம், ஸ்மார்ட் போன், டேபிலட், போன்று பலசாதனங்களை பயன்படுத்துகிறார்கள், இவர்கள் இவைகளால் பெரிதும் தாக்கத்துக்குள் உள்ளாகிறார்கள்.
இவர்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் குழந்தைகளை தவறான பாதையில் இட்டு செல்கிறது..
தற்போதுள்ள குழந்தைகள் இந்த கார்டூன் ஊடகங்களில் வரும் பொம்மைகளை தான் பெரிதும் விரும்பி வாங்க ஆசைபடுகிறார்கள்..
(எ.கா) காமிக் கதாபாத்தரங்கள், இல்லை என்றால் பெண் குழந்தைகள் பார்பி பொம்மைகளை வாங்குகின்றனர்..
காமிக் பொம்மைகள் குழந்தைகளுக்குள் வக்கிரத்தை, கோபத்தை, திமிரை உருவாக்கும் .
பார்பி பொம்மைகள் உங்கள் பெண் குளந்தைகளை கவர்ச்சிப் பாதையில் இட்டு செல்லும்.
அவர்களுக்கு இவைகள் பொருப்பு, அன்பு போன்ற நல்ல குணங்களை தருவதில்லை..
முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு விலங்கினங்கள் சார்ந்த பொம்மைகள் (stuffed toys that resemble animals ) எ.கா டெடி பொம்மைகள்.. இல்லை என்றால் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் எதாவது வளருங்கள், அது உங்கள் குழந்தைக்கு அன்பு , இயற்கையை பற்றிய புரிதல், அறிவியல் தெளிவு, போன்றவற்றை உருவாக்கும்.
முடிந்த வரை நீங்கள் தொலைக்காட்சியில் நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள்.
இந்த சூப்பர் சிங்கர் மற்றும் நடன நிகழ்ச்சி போன்ற போட்டிகளில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க்க வைக்க எண்ணாதீர்கள்.
முடிந்த வரை அந்த நிகழ்சிகளை தவிருங்கள், இது போன்ற நிகழ்சிகளில் வரும் குழந்தைகளை அதீத கவர்ச்சி, பகட்டு வாழ்கை வாழ்வது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.
அந்த குழந்தைகளை பார்த்து வளரும் குழந்தைகள் அதே போன்ற அர்த்தமற்ற வாழ்கையை தேர்வு செய்கிறார்கள்.
இந்த தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரங்கள் பலர், பருவ வயதில் திரைத்துறையில் கவர்ச்சி நடிகைகள் ஆவார்கள் ( wait and watch, every pop star has become one in Hollywood ).
இதை பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும் தவறாக வழிநடத்தப் படுவார்கள்.
தற்போதுள்ள தொலைக்கட்சிகளில் பெற்றோர்களை மதிக்காத பையனோ. பெண்ணோ தான் கதாநாயகன் , கதாநாயகி மற்றும் அப்பா , அம்மாவை கிண்டல் கேலி செயும் காட்சிகள் பல இடம் பெறுகிறது.
இது உங்கள் குழந்தைக்கு உங்களை மதிக்கணும் என்ற எண்ணத்தை சுத்தமாக இல்லாமல் செய்துவிடும்.
நிறைய குழந்தைகளிடம் பேசுங்கள் , ஒரு நாளைக்கு ஒரு தமிழ் கதை சொல்லுங்கள், அது வரலாறு மற்றும் பஞ்சதந்திர தத்துவக் கதைகலாக கூட இருக்கலாம்.
கல்வி என்பது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது , பள்ளிக்கூட , அடிமை உளவியல் மெக்காலேயின் பாடத்திட்டம் அல்ல என்பதை மறக்காதீர்கள்.
உங்கள் மகள்களுக்கு கற்பும் , தமிழ்ப் பண்பாடும். உங்கள் மகன்களுக்கு ஒழுக்கமும், வீரம் சார்ந்த கருத்துக்களை புரிய வையுங்கள்..
திருக்குறளை மனபாடம் செய்ய வைப்பதை தவிர்த்து, அதன் அற்புதமான கருத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.
பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தருவதை உங்கள் குழந்தைகளிடம் பகிறாதீர்கள்.
முடிந்த வரையில் அன்னியர்களின் எந்த ஒரு கருத்தையும் உங்கள் குழந்தைகளிடம் பதிய வைக்காதீர்கள் .
உங்கள் குழந்தைகளின் எதிர்காலமே தமிழர்களின் எதிர்காலம், அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் .
உங்களைச் சுற்றி நடக்கும் இலுமினாட்டி (illuminati) அரசியலை தேடுங்கள், விடைகள் கிடைக்கும்.
அதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள், உலக அரசியல் நம்மை தாக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை...
உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது...
களப்பிரர்கள் வரலாற்றில் மறைந்து வாழ்ந்ததின் மர்மம் என்ன.?
ஏற்கனவே சொன்ன களப்பிரர்கள் ஆட்சியில் எந்த புலவர்களும் இவர்களை புகழ்ந்து பாடவும் இல்லை எழுதவும் இல்லை..
அசோகர் காலத்திலையே கல்தூண்களை வைத்து வீரத்தை நிரூபித்தார் அசோகர்..
அப்படி பார்க்கப்போனால் அசோகருக்கும் இவர்களும் சில நூற்றாண்டு வித்யாசங்கள் உண்டு, அப்படி இருக்கையில் ஏனோ களப்பிரர்கள் செய்ய தவறியது பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.
சரி களப்பிரர்கள் காலத்தில் தோற்றுப் போன சேர சோழ பாண்டியர்களின் நிலை என்ன அவர்கள் களப்பிரர்களால் ஒடுக்கப்பட்டு செய்வதியாமல் இருந்துளார்களோ என்று அந்தப்பக்கம் யோசித்தால்.
பெரிய திருப்பமாக பாண்டியர்களின் ஒருவர் இலங்கையில் சில இடங்களை வென்று அங்கே ஆட்சி அமைத்ததாக தெரிகிறது.
சோழர்களும் இரேணாட்டில் ஆட்சி அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.
அப்படியாயின் சேர சோழ பாண்டிய மன்னர்கள் வலிமையிழந்து விடவில்லை..
அப்படியாயின் எதனால் களப்பிரர்களின் பக்கம் இவர்கள் சீண்டவே இல்லை இது தான் கேள்விக்குறி ?
இதற்கு காரணம் மறு உலகப்பயணம் ?
அதாவது பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிராவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கூற்றுப்படி...
அறநெறியை வலியுறுத்தி பிறவா நெறியான அதாவது இறப்பு பிறப்பு இல்லாத நிரந்தர மறு உலக வாழ்வுக்கு இவர்கள் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது..
அதெல்லாம் இல்லையென்று வாதிட்டால், வேறு என்ன காரணத்தையும் எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை..
இந்த காலகட்டத்தில் தான் புத்த மதமும் உருவாக்கிக்கொண்டு இருக்கும் நேரம் அவைகளும் மறு உலக வாழ்க்கை ஒன்றுள்ளது அதன் காரணியாகத்தான் இந்த உலக இன்பங்களை ஒதுக்கி துறவறம் மேற்கொண்டு மறு உலக வாழ்க்கைக்காக தம்மை தயார் படுத்தி கொள்ளல் வேண்டும்.. என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது..
அதன் காரணமாக தமிழக பகுதிகளில் விகாரைகள் எழும்ப தொடங்கின..
ஆனால் இந்த களப்பிரர்கள் இதனை ஆதரிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை காரணம் இவர்கள் ஆதரித்தால் இன்றைய புத்தமத வரலாற்றில் களப்பிரர்கள் பற்றிய செய்தி வந்து இருக்கும் ஆனால் வரவில்லை..
ஆகவே இவர்கள் துறவறத்தை ஆதரிக்கவில்லை அதேசமயம் மறு உலக வாழ்க்கை என்பதை ஆணித்தரமாக நம்பி இருக்கின்றனர்.
அதனால் தான் இவர்கள் ஒரு பாரம்பர்ய தொன்மையான தமிழகத்தை ஆண்ட பொழுது கூட நாங்கள் அரசர்கள் என்ற சின்ன கர்வம் கூட இல்லாமல் எந்த கல்வெட்டையும் செதுக்காமல் எந்த கட்டிடத்தையும் கட்டாமல் சிறந்த ஆட்சி செய்து விட்டு..
இன்று வரலாற்றில் நாங்கள் யார் என்றே தெரியாமல் மறைந்து வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர்..
இவர்களது கூற்றை மக்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் ஆதரவு அளித்ததால் தான் சேர சோழ பாண்டியன் கூட இவர்களை நெருங்க விடாமல் தடுத்துள்ளது..
ஆதாரம் நூட்கள் : களப்பிரர்கள் காலத்தில் தமிழகம்.
ஆசிரியர் : மயிலை சீனி வெங்கடசாமி.
இரண்டாவது ஆதாரநூல் : வேதமும் சைவமும்.
ஆசிரியர் :சு கோதண்ட ராமன்...
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் பணி அற்புதமானவை...
1) 3 நாட்களில் 200க்கும் மேற்பட்டோரை சொந்த ஜாமினில் விடுவிக்க வைத்துள்ளனர்.
2) சித்ரவதைகளை தலையிட்டு தடுத்து..
3) சிறைப்பட்டவர்களை பார் தனது செலவிலேயே வண்டிவைத்து அழைத்து வந்து கையோடு உறவினரிடம் ஒப்படைத்துவருகின்றனர்..
4) ஞாயிற்றுக்கிழமையிலும் கோர்ட் செயல்படுகிறது..
5) சட்டப் பணிகள் உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன..
6)மருத்துவமனைகளில் உள்ளவர்க்கு உதவி...
மேலும்...நீதித்துறை நடுவர்களுடன் இணைந்து..
7) மருத்துவ சிகிச்சை அளித்த பின்பே ரிமாண்ட் கோரிக்கையை பரிசீலனைக்கே எடுத்துக் கொண்டனர்.
8 ) குற்றம்சாட்டப்பட்டவரின் உடைமைகளையும் காயங்கள் சித் ரவதைகளை அக்குவேர் ஆணிவேராக பதிவு செய்துகொண்டனர்.
9) குண்டடி, படுகாயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கே சென்று நடுவருடன் அறிக்கை எடுத்துக் கொண்டுள்ளனர்.
10) நள்ளிரவு, அதிகாலை என நேரம் பாராமல் வழக்கறிஞர்களும் நடுவர்களும் உழைத்து வருகின்றனர்.
11) நடுவர்களையே நேரடியாகவே காவல் அதிகாரகள் மிரட்டி வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது. எதற்கும் அடிபணியாமல் சட்ட விதிகளை சரியாக கடைபிடித்து வருகின்றது தூத்துக்குடி நீதிமன்றம்.
12) பலியான 13 குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றனர் அங்குள்ள முற்போக்கு வழக்கறிஞர்கள்.
மக்கள் வழக்குரைஞரான தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு நமது பாராட்டுகளை தெரிவிப்போம்...
இந்தி படிக்கச் சொல்பவனுக்கு பதில்...
தென்னாப்பிரிக்கத் தமிழர் பற்றி காந்தி எழுதியது...
No other Indians can equal the performance of the Tamils in this fight.
It therefore occurred to me that I should read Tamil with close attention, if for no other reason than to tender sincere thanks to them at least mentally.
Accordingly, the last one month was devoted mostly to the study of Tamil.
The more I learn it, the better I appreciate the beauties of this language.
It is a very fine and sweet language, and from its structure and from what I have read in it, I find that the Tamils have produced, and still produce, a large number of intelligent thoughtful and wise men.
Moreover, since India is going to be one country, some Indians outside Madras should also learn Tamil.
-Gandhi ‘Indian opinion’ (5 june 1909)..
உடனே இந்திய உணர்வில் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்..
தென்னாப்பிரிக்காவில் தமிழர் அதிகம் வாழும் KwaZulu-Natal பகுதியில் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுவது 2014ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது.
இதுதான் இந்திய ஒன்றியத்தின் விடுதலைக்கு உழைத்த தென்னாப்பிரிக்கத் தமிழனுக்கு கிடைத்த பரிசு.
காந்தியும் கடைந்தெடுத்த பிழைப்புவாதி.
கப்பலோட்டிய தமிழன் நடுத்தெருவுக்கு வந்தபோது தென்னாப்பிரிக்கத் தமிழர் அப்போதே 1000ரூபாய் திரட்டி காந்தியிடம் கொடுத்து அனுப்பினார்கள். ஆனால் காந்தி அதை அமுக்கிவிட்டார்..
அதை தான் இன்று வரை காந்தி கணக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்...
சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை...
அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம்...
முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக்கொண்டே போகும். பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து உறுப்புககளிலும் புதுப்புது நோய் வரும். இப்படி உடலில் வந்த நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பை குணப்படுத்துவது தான் வைத்தியம். கடைசியாக மாத்திரையின் டோஸ் அதிகமாகி பிறகு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோஸ் கொடுக்க முடியாது என்ற போது இன்சுலின் என்ற திரவத்தை ஊசி வழியாக செலுத்தச் சொல்வார்கள்.
மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மாத்திரை கணையத்திடம் சென்று கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்து கெட்ட சர்க்கரைக்கு கொடுக்கும். இன்சுலின் என்ன செய்யும் என்றால் கணையத்திடம் போகாது, கேட்காது. நேரடியாக இரத்தத்திலுள்ள கெட்ட சர்க்கரைகளுக்கு இசுளின் கொடுத்து விடும். எலி, பன்றி போன்ற விலங்குகளிடமிருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து கடைகளில் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி நமது உடம்புக்குள் செலுத்திக் கொள்கிறோம்.
இப்படி சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறோமோ அவர்கள் எல்லாமே கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரை என்ற சர்டிபிகேட் கொடுத்து உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கெடுக்கிறோமே தவிர இதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது. போகப்போக நோய் அதிகமாகிக் கொண்டே வருகிறதா? இல்லை குணமாகிக் கொண்டு வருகிறதா?
சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் மத மதப்பு, எரிச்சல், குத்துதல், குடைதல் போன்றவை ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு பாட்டிலின் அடிப்பகுதியில்தான் அதிக நேரம் தண்ணீர் இருக்கும். பாட்டிலின் மேல் பக்கத்தில் குறைந்த நேரம்தான் தொட்டுக் கொண்டிருக்கும்.
அதை போல நமது உடல் ஒரு பாட்டில் போன்றது. இரத்தம் நீர் போன்றது. உடலிலுள்ள இரத்தம் முதலில் உள்ளங்காலை நோக்கித்தான் பாய்ந்து செல்லும், புவியீர்ப்பு விசையின் காரணமாக நமது உடலின் உள்ளங்கால்தான் இரத்தத்தில் உள்ள பொருட்களை முதன் முதலில் எடுக்கும். பிறகு மூட்டு, பிறகு இடுப்பு, பிறகு வயிறு, இப்படி மேல் நோக்கி செல்லும்.
எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரை இன்சுலினின் மூலமாகக் கிடைக்கும் கெட்ட சர்க்கரைகளை முதன்முதலில் உள்ளங்கால்தான் சாப்பிடுகிறது. கெட்ட சர்க்கரையைச் சாப்பிடுவதால் உள்ளங்காளலுக்கே முதன்முதலில் நோய் ஏற்படுகிறது. இது உள்ளங்காலில் இருக்கும் செல்கள் கெட்டுப் போவதால் ஏற்படுவதில்லை. உள்ளங்காலில் இருக்கும் செல்கள் செத்துப் போவதால் ஏற்படுகிறது.
கெட்டுப் போவதற்கும் செத்துப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், நாம் உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, முத்ரா, ரெய்க்கி போன்ற மருந்தில்லா மருத்துவத்திற்குச் செல்வோம்.
ஆனால், மருந்து மாத்திரையை மட்டும் விடமாட்டோம். சிறிது காலத்திற்குப் பிறகு இந்த மருந்தில்லா மருத்துவத்தை நாம் திட்டுவோம். நான் யோகாவுக்குச் சென்றேன். அக்குபஞ்சருக்குச் சென்றேன். ஆனால், கால் வலி குறையவில்லை என்று ஆனால் நீங்கள் மருந்து மாத்திரையை நிறுத்தி விட்டீர்களா? இல்லையா?
சர்க்கரை மருந்து, மாத்திரைகளை நிறுத்தாத வரையில் எந்த மருந்தில்லாத வைத்தியத்தாலும் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. மருந்து மாத்திரைகள் மூலமாக உடலைக் கெடுக்கும் வேலையை மட்டும் சரியாக செய்து விட்டு மருந்தில்லாத வைத்தியத்திற்க்குச் சென்று ஏன் அதைக் குறை கூறுகிறீர்கள்?
கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலில் புண் தோன்றும். உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் ஆறிவிடும். ஆனால், உள்ளங்காலில் வந்த புண் மட்டும் ஆறாது. ஏனென்றால், உயிரைக் காப்பாற்றி கொள்ளவே முடியாத செல்கள் புண் வந்தால், நோய் வந்தால் எப்படித் தன்னை குணப்படுத்தும்? பிறகு அந்த புண்ணிற்கு ஆப்பரேஷன் செய்வதற்கும், நாம் அதே மருத்துவரிடம்தான் செல்கிறோம்.
சில பேருக்கு உள்ளங்கால் மோசமாக பாதித்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். அதன் பிறகு, கட்டை விரலிலுள்ள செல்கள் அழுகிப் போய் கட்டை விரலுக்கு நோய் ஏற்படும். மருத்துவரிடம் சென்று காண்பித்தால் உங்களுக்கு சுகரினால்தான் கட்டை விரல் அழுகிப் போச்சு என்று கட்டை விரலை அறுத்து எடுப்பதற்கு ஆபரேசனுக்கு நாள் குறிப்பார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று நான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம்தான் வந்தேன். நீங்கள்தான் சர்க்கரை நோய் வந்துவிட்டதென்று சிறிய மாத்திரையைக் கொடுத்தீர்கள். நானும் சாப்பிட்டேன். சுகரை டெஸ்ட் செய்ய சொல்லி எனக்குக் கற்று கொடுத்தீர்கள். நானும், தினமும் டெஸ்ட் செய்து வந்தேன். மருந்து மாத்திரையின் டோஸ் அதிகமானது. நானும், அதிகப்படுத்திக் கொண்டேன். அன்று முதல் இன்றுவரை தினமும் சரியாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.
பிறகு உடலில் பல உறுப்புகளில் நோய் வருகிறதென்று புதுப்புது மருந்து மாத்திரையைக் கொடுத்தீர்கள். பிறகு இன்சுலின் என்ற ஊசியும் கொடுத்தீர்கள். தினமும் வாக்கிங் போகச் சொன்னீர்கள். நான் போய் கொண்டிருக்கிறேன். இனிப்பு சாப்பிடக் கூடாதென்று கூறினீர்கள். நான் கடந்த பாத்து வருடமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒழுங்காகச் செய்தேனே, என்னுடைய கட்டைவிரல் ஏன் அழுகிப் போனத் என்று யாராவது உங்கள் மருத்துவரிடம் கேட்டீர்களா?
உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்கள் மருத்துவர் சொன்ன அனைத்தையும் ஒழுங்காக நீங்கள் செய்ததால்தான் உங்கள் கட்டை விரல் அழுகிப் போய் விட்டது.
கட்டை விரலை எப்பொழுது வெட்டி எடுக்கிறீர்களோ, தயவு செய்து இப்போதிருந்தே பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் காலை வெட்டியெடுக்க வேண்டியது வரும். ஏனென்றால், நீங்கள் சர்க்கரை மாத்திரையை மட்டும் விடுவதில்லையல்லவா?
அடுத்து மூட்டு காலை வெட்ட வேண்டியது வரும். அடுத்தது தொடை அருகே வெட்ட வேண்டியது வரும். இப்படி எத்தனையோ பேர் தொடைகளை, கால்களை வெட்டி வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள்.
இன்னுமாங்க புரியல சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த முடியாது என்று. சர்க்கரை நோய் என்பது நோயே கிடையாது. இதற்கு ஒரேயொரு தீர்வு வாயில் சாப்பிடும் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய், வயிறு, சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம் வாய்ந்த வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக செய்து இரத்தத்தில் கலக்குவது எப்படி என்ற ஒரு சுலபமான ஒரு (டெக்னிக்கை) வித்தையைத் தெரிந்து கொள்வது மூலமாக மட்டுமே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.
நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாதென்கிறார்களே? பத்து வருடமா சாப்பிடாமல் இருக்கிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா? சர்க்கரை நோய்க்கும், இனிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
எனவே, நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாபிட்டால் மட்டுமே சர்க்கரை வியாதி குணமாகும். அதாவது, சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நோய் வருவதில்லை. சர்க்கரையின் தரம் குறைவதால் மட்டுமே நோய் வருகிறது. எனவே, நாம் இனிப்பு, எண்ணெய் பலகாரம், உருளைக்கிழங்கு போண்டா, சாப்பாடு, சப்பாத்தி எதுவாக இருந்தாலும் எப்படி சாப்பிட வேண்டுமென்ற வித்தையைக் கற்றுக் கொண்டு அதன்படி சாபிட்டால் நல்ல சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் பொழுது இயற்கையாகவே இன்சுலின் சுரந்து விடும். எனவே,சர்க்கரை நோயை உடனடியாக குணப்படுத்த முடியும்.
எனவே, சர்க்கரை அதிகமாக உள்ளதென்று தயவு செய்து பயப்பட வேண்டாம். யாருடைய உடம்பில் நிறைய சர்க்கரைகளைச் சேர்த்து வைக்கிறீர்களோ, உங்கள் உயிர் காப்பாற்றப்படும். ஒருவர் இரவு 10 மணிக்கு ஒரு காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகி ரோட்டில் கீழே விழுந்து கிடக்கிறார். அவரைக் காப்பாற்ற யாரும் கிடையாது. காலை பத்து மணிக்கு அவரை பார்த்து காப்பாற்றினால் அவருடைய உடம்பில் கிளைக்கோஜன் என்ற சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்திருந்தால் அவர் இரவு பத்து மணி முதல் காலைபது மணி வரை அந்த சர்க்கரை இரத்தத்தில் விநியோகம் செய்வது மூலமாக உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். யாருடைய உடம்பில் அதிக சர்க்கரை சேமித்து வைக்கப்படுகிறதோ, அவர்களுக்குப் பல மணி நேரம் ஆபத்தின் பொழுது உயிரை காப்பாற்ற முடியும்.
இப்படி சர்க்கரை நார்மல் என்ற பெயரில் யார் யாரெல்லாம் சர்க்கரையை ஒழுங்காக வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ உங்கள் உடம்பில் சேமித்து வைக்கப்பட்ட சர்கரையே இருக்காது. சர்க்கரைக்குப் பல வருடங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவமனையின் முன்பாக விபத்து ஏற்பட்டால் உள்ளே செல்வதற்குள் உயிர் போக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீங்கள் உங்கள் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நகை வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு இடம், சொத்து வைத்திருக்கிறீர்கள் என்பது வெளி உலகத்திற்கான சொத்து. உடலில் எவ்வளவு கிளைகொஜன் என்ற சேமிக்கப்பட்ட சர்க்கரை இருக்கிறதோ, அதுதான் உயிரின் சொத்து.
எனவே, தயவு செய்து நன்றாக சாப்பிடுங்கள். சர்க்கரை உள்ள பொருட்களை நிறையாக சாப்பிடுங்கள். கிளைக்கோஜன் நிறைய சேர்த்து வையுங்கள். உங்கள் உயிர் காப்பாற்றபடுமே தவிர உங்களுக்கு நோய் வராது. சர்க்கரை அதிகமானால் நோய் அன்று கூறுகிறார்களே அவசர காலத்தில் யாரவது உடலுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால் வெளியில் வரும் பொழுது பெருமையாக சொல்கிறீர்களே மருத்துவமனையில் எனக்கு 16 பாட்டில் குளுகோஸ் டப்பா மாட்டினார்கள் என்று.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உயிரை காப்பது குளுகோஸ் டப்பாதானே! அப்பொழுது உயிரைக் காப்பது சர்க்கரைதானே. ஒவ்வொரு செல்லுக்கும் அடிப்படை தேவையான ஒரு சர்க்கரையை சேர்த்து கொள்ள கூடாதென்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்...
மிதிவண்டி உருவான வரலாறு...
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ சிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே?
நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன சிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார்.
அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.
சிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த சிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட மிதிவண்டி ஒன்றை வடிவமைத்தார்.
இந்த மிதிவண்டி ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி மிதிவண்டியை முனனோக்கி உருளச்செய்ய வேண்டும்.
‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகை மிதிவண்டிகளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்சு நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி சிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது
கோம்டி சிவ்ராக்கின் மிதிவண்டி தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு யேர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைசு(ஸ்) (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார்.
ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டிகளில்தான் முதன் முதலாக திசைமாற்றி (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி மிதிவண்டி முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த மிதிவண்டி 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிசில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.
அன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிசு(ஸ்) ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர்.
கார்ல் வோன் ட்ரைசின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிசு ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார்.
இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.
உலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan)என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார்.
ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake)மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
இந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது.
இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே.
அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.
தையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார்.
இவரது கடும் உழைப்பின் பயனாக1863-ஆம் ஆண்டு கிராங் (Crank) மற்றும் பால் பியரிங் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு மிதிவண்டி தயாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார்.
மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் மிதிவண்டி தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் (Company) ஆகும்.
மிதிவண்டியின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட மிதிவண்டியின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing)என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து மிதிவண்டியின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார்.
முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் விளிம்பு(Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள்.
விளிம்பில்(rim )டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.
இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய மிதிவண்டி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த மிதிவண்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த மிதிவண்டியைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்த தொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட மிதிவண்டி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
மிதிவண்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு கென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket)மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.
இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த மிதிவண்டியை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த மிதிவண்டிகள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் மிதிவண்டி வடிவமைக்கப் பட்டிருந்து.
பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி மிதிவண்டியை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது.
இதைதொடர்ந்து இன்றைய நவீன மிதிவண்டிகளின் சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் கென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய மிதிவண்டி ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.
இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது மிதிவண்டிகளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த காலால் இயக்கப்படும் பாகம் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
இயந்திரத்தில் காலால் இயக்கப்படும் பாகம் (pedal) மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது.
அவர் வடிவமைத்த இந்த வகை மிதிவண்டிதான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.
1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் வண்டிச் சக்கரத்தின் ரப்பர்க் கட்டு (tyre) மற்றும் குழல்(tube) ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார்.
இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் சு(ஸ்)டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் கெ(ஹெ)ர்குலிசு(ஸ்) என்ற மிதிவண்டி கம்பெனியை துவங்கினார்.
கெ(ஹெ)ர்குலிசு(ஸ்) மிதிவண்டி கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் மிதிவண்டி தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது...
சடுதி மரணம்...
சடுதி மரணத்தினால் மனிதனுக்கு ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்ததினால் தான் போலும் கிறிஸ்தவ தேவாலயங்களில், “பிதாவே, போர்முனை இறப்புகள், கொலைச்சாவுகள், சடுதி மரணங்கள் ஆகிய தீமைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று பிரார்த்திக்கின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனும் பூவுலகில் வாழவேண்டிய காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் தமது முற்பிறப்புகளில் ஏதோ பெருந்தவறுகள் புரிந்த காரணத்தினால் அவைகளின் பிரதிபலனாக கர்மாவின் நியதிகளுக்கேற்ப சடுதி மரணத்தை அடைய வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இயற்கையின் படைப்புகளில் பிறழ்வுகள் (Freaks) ஏற்படுவதுபோல நமது வாழ்விலும் நமது அறிவுக்குப் புலனாகாத காரணங்களின் வினைப்பயனாக விபரீதங்களும் விபத்துக்களும் நடைபெறுகின்றன.
சடுதி மரணம் அடைந்தவர் இவ்வுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவராகவோ, ஆன்மீக முன்னேற்றம் கிட்டியவராகவோ இருந்துவிட்டால் சிறிது காலம் அமைதியாக நித்திரை செய்வது போன்ற ஒரு உணர்வுநிலையில் சூட்சும உலகில் மிதந்து கொண்டிருப்பார்.
பின்னர் சாதாரணமாக இறப்பவர்கள் சூட்சும உலகில் பெறும் அனுபவங்களைப் பெறுவார். சடுதி மரணம் அடையும் பொழுது பயங்கர அதிர்ச்சி (குண்டுவெடிப்பு, திடீர்விபத்து, துப்பாக்கிச்சூடு போன்றவைகள்) அனுபவித்தவர்கள் மறுஉலகில் பிரக்ஞையைத் திரும்பப் பெற நீண்டநேரம் அல்லது இரண்டொரு நாட்கள் செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.
சடுதி மரணம் அடைந்த அநேகர் ஒரு குழப்பமான மனநிலையுடனேயே மறு உலகில் பிரவேசிக்கின்றார்கள். இவர்களை நேசக்கரம் நீட்டி வரவேற்று, ஆசுவாசப்படுத்தி மரணத்தின் பின் தொடரும் வாழ்வைப் பற்றிய விளக்கத்தையளித்து வழி நடத்துவதற்கென்றே மறுஉலகில் நல்லாத்மாக்கள் இருக்கின்றார்கள்.
பாவம், புண்ணியம், நல்வினை, தீவினை என்ற கோட்பாடுகளில் நம்பிக்கையின்றி எப்படியும் வாழலாம் என்றெண்ணி நீச வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் சடுதி மரணத்தால் கூடுதலான துயரத்தை அனுபவிக்கின்றார்கள்.
இவர்கள் தமக்குச் சடுதி மரணம் நிகழ்ந்த சூழ்நிலையைத் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி, அச்சம்பவங்கள் மறுபடியம் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருந்து கொண்டு அதன் பயனாக ஏற்படும் பீதி, பயம், ஆக்ரோஷம், வேதனை போன்ற உணர்வுகளை சிறிதுகாலம் அனுபவித்து அல்லற்படுவர்.
நுண்நோக்காற்றல் படைத்த பிரம்மஞானிகள் (Theosophists) சடுதி மரணம் அடைந்த சிலரின் உடனடியான உணர்வுநிலைகளை அவதானித்துக் கூறியதைப் பார்க்குமிடத்து இறக்கும் தறுவாயில் இறந்தவரைப் பீடித்திருந்த மனோநிலையைப் பொறுத்தே அவருடைய மறு உலக அனுபவங்கள் அமையும் என்று தெரிகிறது...
குஜராத் மாநில அதானியின் மருத்துவமனையில் 5 மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழப்பு...
குஜராத் வளர்ச்சி என்று சொல்லும் நமது பிரதமர் முதல்வராக இருந்த மாநிலத்தின் இத்தனை வருட நிலைமை...
குஜராத் அலகாபாத் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நடத்தும் ஜி.கே மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க அம்மாநில அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை ஜி.கே அரசு மருத்துவமனை ஒன்று நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2018-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மே 20-ஆம் தேதி வரை சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 18, 19 சதவிகிதங்களில் இருந்து, தற்போது, பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 14 சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ராவ் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 21 சதவிகிதமாக இருந்தது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
கர்ப்ப காலங்களில் பெண்கள் சத்தான உணவு கிடைக்காதது, தாமதமாக மருத்துவமனைக்கு வருவது ஆகியவையே குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக வல்லுநர் குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது...
Subscribe to:
Posts (Atom)