30/09/2020

பாஜக மற்றும் அதிமுக ஓபிஎஸ் & சேகர் ரெட்டி மூவர் கூட்டணி கொள்ளை...

 


எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர் - நீதிபதி எஸ்.கே யாதவ்...

 


நீதிபதி எஸ்.கே. யாதவ் க்கு ஒரு ஆளுநர் பதவி பார்சல்...

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை - தேர்தல் ஆணையம்...

 


தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இப்போது இல்லை.

மேலும், அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்ட 6 மாதத்தில் நடத்தப்பட வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் என பல மாநில தலைமைசெயலர்கள் கடிதம் எழுதியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது...

பாஜக யோகி யின் ராம ராஜ்யம் 😡

 


உண்மையை சொல்லி அதிமுகவை மாட்டி விட்ட பாஜக பொன்.ராதா...

 


புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர்...

 


நான் பலமுறை கிருஷ்ணசாமி அருந்ததியர் அவர் ஒரு தமிழர் போர்வையுள்ள தெலுங்கர் என்று சொல்லியும் நம்பாமல் முட்டு கொடுத்துக் கொண்டிருந்த அடிமைகளே...

அவனே தன்னை தெலுங்கன் என்று நேரடியாக சொன்னால் கூட நீங்கள் முட்டு கொடுத்து தமிழனாக்கி விடுவீங்க போல...

பிரணாயாமம்...

 


பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்...

அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்.

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்.

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன.

சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.

புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.

தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.

நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம்.

இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்.

மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.

கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும். 

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாகக் தகவல். மீண்டும் தர்ம யுத்தமா.?

 


சமாதி பக்கம் வந்த செப்பல்ஸ் பிஞ்சிரும் ரேஸ்கல்ஸ் - மம்மி ஆன்மா...

இசை அறிவியல்...

 


மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா?

உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் எமது உடலுக்குள் நடைபெறும்போது எமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது.

உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் எமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம்.

ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் எமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

இதே போன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும்.

அத்துடன் எமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…?

நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விடவில்லை.

போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது எமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக எமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது.

பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர்.

ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான்.

72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம்.

உதாரணத்திற்கு அம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன...

பாஜக மோடி... அடிமை சிபிஜ...

 


கன்னட வியாபாரி கமலை செருப்பால் அடித்த மலையாளி லஷ்மி மேனன்...

 


குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர்கள் கொள்கையே...

 


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்

இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

அடேய் குப்புசாமி 🙌😂🤣

 


நவம்பர் மாதத்துக்குள் திமுக வின் 2ஜி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்குமாறு சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. அதனை எதிர்த்து கனிமொழி, ஆ.ராசா தொடர்ந்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை வெளியிடவுள்ளது...

 


முதல் இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவர்..

 


ஈ.வெ.ரா.பெரியாரா? சோமசுந்தர பாரதியாரா?

10.8.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவிப்பு.

27.8.1937இல் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் உமா மகேசுவரனார் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

29.8.1937இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்பு சங்கம் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

5.9.1937இல் சென்னை செளந்தர்ய மண்டபத்தில்  முதல் இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் தலைமையேற்று சோம சுந்தர பாரதியார் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்.

4.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாபெரும் கண்டனக் கூட்டம். சோமசுந்தர பாரதியார் இதில் பங்கேற்பு.

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு. இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் தான் ஈ.வெ.ராமசாமி பெரியார் முதன் முறையாக பங்கேற்பு.

21.4.1938இல் மீண்டும் முதல்வர் இராசாசி கட்டாய இந்திப் பாடம் நடைமுறைக்கு வரும் என்று ஆணை பிறப்பிப்பு.

28.5.1938இல் திருச்சியில் மந்திராலோசனைக் கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார் சட்டமறுப்பு இயக்கம் தொடங்க வேண்டுகோள். உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதமும், உறுப்பினர்களாக உமா மகேசுவரனார், செளந்தர பாண்டியனார், ஈ.வெ.ரா. பெரியார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு.

இந்தி எதிர்ப்பு வாரியம் சோமசுந்தர பாரதியாரின் வழி காட்டுதலில் இராசாசி வீடு முற்றுகை, சட்ட மன்ற முற்றுகை என்று பல்வேறு தளங்களில் போராட்டம் வீறு கொண்டது.

இந்தி எதிர்ப்புப் போரில் மறியல் செய்து சிறை சென்ற சர்வாதிகாரிகள் பதிமூன்று பேர். இந்தப் பட்டியலில் பெரியார் பெயர் இல்லை.

13.11.38இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, 14.11.38இல் பெத்து நாயக்கன் பேட்டை கூட்டம் ஆகிய இடங்களில் பெரியார் அரசுக்கு எதிராக பேசியதாக போடப்பட்ட அவதூறு வழக்கில் தான் பெரியார் 5.12.1938 அன்று கைது செய்யப்பட்டார்.

தமிழறிஞர் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போரில் இடையில் புகுந்து  பெரியார் தலைவரான கதை இது தான் என்பதை எத்தனை தமிழர் அறிவாரோ?

மோடியின் கருப்பு பணம் ஒழிப்பு 😒

 


தமிழ்நாடு இல்லத்தில் திமுக துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்திடம் விசாரிக்க உளவுத்துறையினர் யாரும் வரவில்லையென்றும், அவர் சொன்னது பொய் என்பதும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபணம்...

 


தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்...?

 


நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.

இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் வறட்சி நீங்க குறைந்தபார்வை சரியாக பளபளப்பான தலைமுடி பெற மெருகூட்டப்பட்ட சருமம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். முழங்கால் வலி குணமடைய இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். 

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். 

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்? 

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது. 

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது...

ஒரு கேமரா போதும்யா...

 


இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் அடிமைகளா...

 


தவம்...

 


விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டால்...

மற்றவைகளுடைய எண்ண அலைகள் நமக்கு தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்..

உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பனவாக இருந்தாலும்..

அவை நம்மை பாதிக்காது..

உதாரணமாக ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள் உண்டு என்றாலும் எதை நாம் தேர்ந்து எடுக்கின்றோமோ அவை மட்டுமே நமக்கு கேட்கும்.

மற்ற அலைவரிசைகள் வந்து மோதும் , ஆனால் நமக்கு கேட்காது அது போல நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நினைப்போம்.

நாம் எங்கு போனாலும் நமக்காக மற்றவர் தானாக அந்த அலைவரிசையில் கட்டுப் பட்டு நம் மதிப்பை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள்.

எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது தடை ஏற்பட்டாலும் அது நமக்கு கெடுதல் இல்லை நம்மை திருப்பி விடுவதனால் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது.

எந்த நேரத்தில், எந்த காலத்தில், எந்த சூழ்நிலையில் நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.

உலகில் எந்த இடத்திலாவது நம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் நேரமும் வரும் அது தானாக நடந்து விடும்.

எனவே நல்ல சிந்தனைகளையே மனதில் வளர்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும். நாம் நினைப்பது தான் நடக்கும்...

எந்த ஆதாரமும் இல்லையாம்...

 


மற்றவர்களை பிறகு குறை சொல்லலாம்.. முதலில் நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை எழுப்புங்கள்?

 


மெமரி கார்டு பற்றிய தெரிந்துக்கொள்ள வேண்டிய ரகசியம்...

 


நாம் எடுக்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் போன்ற டேட்டாக்களை பதிந்து வைக்க பயன்படுவதே மெமரி கார்ட் எனப்படுகிறது.

4,6,8,10 போன்ற எண்கள் மெமரி கார்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழே வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும். இந்த எண்களானது மெமரி கார்டுடைய CLASS எண்கள் எனப்படும். இது மெமரி கார்டின் டேட்டா டிரான்ஸ்பர் வேகத்தை குறிப்பவை ஆகும்.

4 என்ற எண் அதில் எழுதப்பட்டிருந்தால், அது நொடிக்கு 4MB வேகத்தில் DATA FILE ஐ டிரான்ஸ்பர் செய்யும் பலம் பொருந்தியதாகும்.

இதே போலவே 6 எண் நொடிக்கு 6MB வேகத்திலும், 8 எண் நொடிக்கு 8MB வேகத்திலும், 10 எண் நொடிக்கு 10MB வேகத்திலும் செயல் புரியும் என்பது அதன் அர்த்தமாகும்.

இந்த டேட்டாக்களின் வேகத்தை பொருத்தே மெமரி கார்ட்டின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது...?

சிந்தியுங்கள்...

 


மோடியின் விவசாய மசோதா 😒

 


யார் சரி ? யார் சரியில்லை..?

 


எப்போதுமே நீங்கள் நினைப்பது சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமா ? 

என்கிற இரண்டு நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. 

நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. 

மற்றவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. 

அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறலாம்...