22/08/2018

Shiva shiva shankara song...


Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…

Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara

Shiva shiva shankara hara hara shankara
Jaya jaya shankara digiraaraa
Priya thandava shankara prakata shubhankara
Pralaya bhayankara digirara

Om parameswara paraa
Om nikileswara haraa
Om jeeveswareswara kanararaa
Om manthreswara swaraa
Om yuktheswaraa sthiraa
Om nandeswaraamaraa raavetaa ||Shiva||

Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Aakasalingamai aavahincharaa
Dama damamani damarukha dwani salipi jadathani vadilinchara
Sri vayulingamai sancharinchara
Anuvanuvuna thana thanuvuna nilichi chalaname kaliginchara
Bhasmam cheesy asurulanu agni lingamai layakaara
Varadai munchey jalalingamai ghoraa
Varamai vasamai prabalamou bhulingamai balamidara
Jagame nadipe panchabhutha lingeswara karunichara ||Shiva||

Viswesa lingamai kanikarinchara
Vidilikhithamunika bara bara cheripi amrutham kuripinchara
Ramesa lingqamai mahima choopara
Palu shubhamulu gani abhayamulidi hithamu sathathamu andinchara
Grahanam nidhanam baaparaa kalahasthi lingeswaraa
Pranam neevai alinganameera
Edalo koluvai hara hara athma lingamai nilabadaraa
Dhyuthivai gathivai sarva jeevalokeswara rakshindaraa ||Shiva||

Sarva pravitha darpa prabhava vipra preritha para

Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…

Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara...

திமுக பகுத்தறிவு கலாட்டா...


கொய்யாப் பழம் மருத்துவம்...


கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

முழு அளவு காட்டு கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப் பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்...

அரசியல் நாடக மேடை உண்மைகள்...


சங்க இலக்கியமும் நீர் நிலை உண்மைகளும்...


சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானுற்றில் குடபுலவியனார் என்ற புலவர் பாடிய "முழங்கு முந்நீர்' எனத் தொடங்கும் பாடலில், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு அவர் அறிவுரை கூறுகிறார்...

தன்னையொத்த வேந்தர்களைப் போரில் வென்று ஒப்புயர்வற்றவனாக விளங்க விரும்பினாலும், இவ்வுலகத்தில் புகழை நிலைநிறுத்த வேண்டினாலும் அவற்றிற்கான தகுதிப்பாடு யாது என்பதை எடுத்துரைக்கிறார் புலவர். அவற்றிற்கான ஒரே வழி நீர்வளம் பெருக்குதலே ஆகும் என்கிறார்...

தமிழனின் ஆயிரம் ஆண்டு சரித்திரத்தை அழிக்க அமைதியாக வேலைகள் நடைப்பெறுகின்றது...


திமுக தெலுங்கர் ஸ்டாலினும் ஏமாற்று வேலையும்...


இந்த வியாபார தந்திரத்தைகூட புரிந்து கொள்ள முடியாத முட்டால் மக்களல்லடா எம் தமிழினம்...

இனியும் உங்கள் அரசியல் நாடகம் பழிக்காது...

பேய் அருகில் இருப்பதை எப்படி கண்டறிவது? அதற்கான அறிகுறிகள்…


பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர்.

ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆன்மா, மனித உலகத்தை விட்டு போகாமல், இருந்தாலோ அவர்களை நாம் பேய் என்று அழைப்போம்.

இந்த பேய்களில் பல வகை உண்டு.

இப்படி மரணித்த பின்பும் மனித உலகில் வாழும் ஆன்மாக்கள், வஞ்சம் தீர்ப்பதற்காகவும், சிலரை சொந்தமாக்கி கொள்வதற்காகவும், மனிதர்களை பாடாய்படுத்தும்.

அவ்வாறு அருகில் அமானுஷ்ய சக்திகள் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படும்.

1. திடீரென காரணமே இல்லாமல் உடல் நடுங்கினாலோ அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ, அங்கு ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யலாம்.

2. இரவில், அமைதியான இடத்தை கடக்கும் போது, விசித்திரமான சத்தத்தை கேட்டாலோ, அல்லது பெயரை சொல்லி அழைத்தாலோ, சட்டென்று திரும்பி பார்க்க கூடாது. காரணம் அது பேய்கள் நம்முடன் வருவதற்கு நாமே அழைப்பு விடுப்பது போன்று ஆகிவிடும்.

3. நம்மை சுற்று விசித்திரமான விஷயங்கள் நடந்தால் நமது 6வது அறிவு செயல்படும். நம்மை யாராவது உற்று பார்ப்பது போல் இருந்து, அங்கு யாரும் இல்லை என்று புரிந்தால் அங்கிருந்து உடனே சென்று விட வேண்டும்.

4. இருளில் சிகப்பு நிற உடையிலோ, அல்லது வெள்ளை நிற உடையிலோ யாராவது தென்பட்டால், அது நிச்சயம் அமானுஷ்யம் தான். அதை மோகினி , காட்டேரி என்று சொல்வர். ஆகையால் இளம் ஆண்கள் அவ்வாறு எதையாவது பார்த்தால் அங்கிருந்து உடனடியாக சென்று விட வேண்டும்.

5. பெரும்பாலும் நீர்வீழ்ச்சி அருகே மோகினி பிசாசை உணர முடியும் என்று பலர் கூறுகின்றனர். இவைகளை மந்திரவாதிகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமாம்.

6. மோகினி பிசாசுகள், மற்றும் ரத்த காட்டேரிகள் காற்றில் உலாவுமாம். இவை அருகில் இருப்பதை ஒரு வகை துர்நாற்றத்தால் அறியலாம். இவை வீட்டின் அறையில் நம் அருகிலேயே கூட இருக்குமாம். அப்படி சம்பந்தம் இல்லாமல் வீட்டில் ஏதேனும் கெட்ட நாத்தம் வந்தால் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை அறியலாம்...

ஆரிய திராவிட திமுக கலாட்டா...


என்னடா ஒரு பிராமணன் பத்திரிகை இப்படி செய்தியை போட்டிருக்கே என்று யோசிக்கிறீர்களா...

முட்டாள் தமிழர்களே...

இந்த பிராமணன் பத்திரிகை தொழிலாளர் சங்கத்தின் தலைவரே திமுக கனிமொழி தான்...

இப்போது புரிகிறதா.. ஆரியமும் திராவிடமும் பங்காளிகள் என்று...

தெலுங்கு திமுக கட்சியும்... தமிழின அழிப்பும்...


உலகம் முழுவதும் ஆர்த்தெழுந்த தமிழர் போராட்டத்திற்கு இணையாக தமிழகத்தில் பள்ளி சிறார் முதல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வரை இனப்படுகொலைக்கு எதிராகத் திரண்டு எழுந்த சக்தியை ஆட்சியாளர் ஒடுக்கியது எதனால்?

தமிழ் ஈழம் மலர்வதை மத்திய மாநில அரசுகள் அறவே விரும்பாதது தான் முதல் காரணம்.

தமிழக முன்னால் முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மாவீரன் பிரபாகரனையும் எந்தக் காலத்திலும் ஆதரித்தது கிடையாது, ஈழம் மலர்ந்தால் தனக்கு மரியாதை குறைந்து விடும் என்னும் மனப்பான்மை கருணாநிதிக்கு உண்டு.

எனவேதான் இலங்கைத் தமிழருக்குத் தன்னைவிட யாரும் தலைமைத் தாங்கி போராடுவதை அவர் விரும்பவில்லை.

இதனால்தான் மனித சங்கிலி போராட்டம், சட்டமன்ற தீர்மானம், 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் என்று தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

இதையும் மீறி பீறிட்டுடெழுந்த மாணவர் போராட்டத்தைப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுதலை அளித்துப் பிசுபிசுக்க வைத்தார்.

உயர்நீதிமன்றத்தில் ஆர்த்தெழுந்து போராட்டம் நடத்திய இனவுணர்வுள்ள வழக்கறிஞர்களை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்குக் காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்து ஒடுக்க முயன்றார்.

உணர்ச்சியுடன் ஈழத்திற்கு ஆதரவாக எழுச்சியுரை ஆற்றிய சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் போன்றவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தார்.

தமிழ் இன எழுச்சி ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கும் பதவிக்கும் ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்த காரணத்தால் ஒடுக்கினார்கள்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


காவல்துறை உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு கொடுக்கிறதா? நீதிபதி..


இவர்கள் பாவம் அரசு சொல்வதை அப்படியே செய்யும் கூலிக்காரர்கள். இவர்களை இயக்குகிற அரசை நீங்கள் தண்டீப்பீர்களென்றால் சொல்லுங்கள் நான் உண்மையை சொல்லுகிறேன்.

கூலிக்காரர்களை தண்டிப்பதில் (மெல்லிய சிரிப்பு) எனக்கு உடன்பாடில்லை.

மெல்லிய புன்னைகை -நீதிபதி.

நீதிமன்றம் பல விசித்திரமான நபர்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அடுத்து 03.09.18 அன்றும் பார்க்கும்...

மக்களை ஒன்றிணைக்க மழையால் முடியும் என்றால் மழை இன்னும் பெய்யனும் சார்...


பிரபஞ்சமும் உணர்வுகளும்...


தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்  மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURA) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: நாய் என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன.

தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன.

தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். மானசிக ஒலிபரப்பினால்  வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும்.

 நண்பர் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் அவருக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்வோம்
அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன். அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுவோம்.

மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்.
தெரிவிக்கவில்லையென்றாலும் நமது நல்லெண்ண உணர்வுகள் ஆக்க சக்தியை பெருக்கும்.

நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம்  வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து  ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும்...

அனைத்து உரிமைகளையும் இழந்த ஒருவனின் வலிகள்....


இதையும் ஏளனமாக நகைப்பீர்கள் என்றால்...

உங்களின் வருங்கால வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள்...

கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்...


கேரள வெள்ள நிவாரணத்துக்காக திருப்பூரை சேர்ந்த திருநங்கைகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி மாவட்ட மையத்தில் வழங்கினர்.

இடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்திற்கும் அதிகமானோர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். எனவே கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த பணத்தையோ, உணவுப் பொருட்களையோ வழங்கி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று 50 லட்சம்ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் 60 திருநங்கைகள் ஒன்றிணைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அத்தியாவசிய உணவு பொருட்கள், உடைகள் மற்றும் மருந்து பொருட்களை வாங்கியுள்ளனர்.

அவற்றை மாவட்ட வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில் சமூகநலத்துறை அலுவலரிடம் வழங்கினர்.

இது கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது...

திருட்டு அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...


இந்தியாவே தமிழினத்தின் முதல் பகை...


இந்தியர் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய சுபாஷ் சந்திரபோஷ் புரச்சியாளர்...

ஆனால்.. தமிழர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய என் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டும் தீவிரவாதியா?

நேற்று முளைத்த இந்தியர்களே...

தமிழனின் வரி பணத்தில் வாழும் இந்தியர்களே.. பதில் சொல்லுங்கள்...

அமைதியான சிரியா...


சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்...


1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை. ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை.

அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார்.

பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர்.

இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே...

இயற்கை உண்மையும்... கேரளா வின் அழிவும்...


https://tamil.oneindia.com/news/india/kerala-floods-urbanization-is-the-reason-behind-disaster-says-327804.html

கன்னடர்களின் தாயகத்தில் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறதா..? இல்லை...


காவிரி ஆறு கன்னடர்களின் தாயகத்தில் உற்பத்தி ஆவதாக ஒரு தவறான கருத்து நிலைநிறுத்தப் பட்டுள்ளது. காவிரி வரும் வழியில் பயன்படுத்திக் கொள்பவர்கள் தாம் கன்னடர்களும். குடகு இன மக்களின் தாயகத்தில்தான் காவிரி உற்பத்தியாகிறது.

கர்நாடகத்தில் குடகு ஒரு மாவட்டமாக உள்ளது. அவர்கள் மொழி குடகு. அவர்கள் தனித் தேசிய இனம். அவர்கள் கன்னட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். குடகு இன மக்கள் தனியரசு நடத்தி வந்தவர்கள். குடகு மொழி தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

1956 மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது குடகு மக்கள், தங்களுக்குத் தனிமாநிலம் கேட்டுப் போராடினார்கள். அம்மக்களின் தலைவர்கள் அப்போது தில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சர் நேருவிடம் விண்ணப்பம் கொடுத்துத் தனி மாநிலம் கோரினார்கள். தங்களைக் கன்னடர்களுடன் இணைத்து மைசூர் மாநிலத்தில் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

இப்பொழுதும் வழக்குரைஞர் நாச்சப்பா தலைமையில் குடகு இன மக்கள் மொழி அடிப்படையில் தங்களுக்கு தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறார்கள். குடகு மக்கள் தாயகம் இப்பொழுது கர்நாடகத்தில் ஒரு மாவட்டமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

மைசூருக்கு மேற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் பசுமை மிக்க மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் உட்கார்ந்திருக்கிறது குடகு மாவட்டம். குடகு மாவட்டத்தின் தலைநகரம் மடிக்கரை. கன்னடர்கள் இத்தமிழ்ச் சொல்லை "மடிக்கெர" என்று சொல்கிறார்கள். ஆங்கிலேயன் இதை "மெர்க்காரா" என்று உச்சரித்தான். மடிக்கரையிலிருந்து 34 கி.மீ. மலைமீது ஏறினால் தலைக்காவேரி, "தலக் காவேரி" என்று கன்னடத்திலும், குடகிலும் சொல்கிறார்கள். அந்தத் தலைக் காவிரியின் முகப்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையின் இப்பகுதிக்கு "சோழர்கள் காடு" என்று பெயர். சோழர்கள் காட்டில் உள்ள பிரம்மகிரி மலையில் தலைக்காவிரி உற்பத்தியாகிறது என்பதே அந்த பெயர்ப்பலகையில் உள்ள செய்தி. சோழப்பேரரசின் கீழ் இருந்ததுதான் அப்பகுதி.

சோழர்கள் காட்டில் தலைக்காவிரி உற்பத்தியாகி இரண்டு சிற்றாறுகளாக ஓடிவந்து கீழே உள்ள பாக மண்டலா என்ற இடத்தில் இணைந்து காவிரி ஒரு ஆற்றின் உருவம் பெறுகிறது. அங்கிருந்து ஓடி குசால் நகரைக் கடக்கும்போது, முழு ஆறாகி விடுகிறது. அதன் பிறகு, குசால் நகருக்கு வடமேற்கே ஓடிவரும் ஏரங்கி காவிரியில் கலக்கிறது. ஆரங்கியும் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

கபிலா ஆறு கேரளத்தில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கிறது. கபிலாவை மறித்து கன்னடர்கள் கட்டிய அணைதான் கபினி. கன்னடர் பகுதியிலும் சில துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. ஆனால் பெரும்பகுதி நீர் குடகிலும், கேரளத்திலும் உற்பத்தியாகி ஓடி வருகிறது என்பதே உண்மை.

வேற்று தேசிய இனமக்களின் தாயகத்தில் உற்பத்தியாகிப் பெருகி ஓடிவரும் காவிரியைக் கன்னடர்கள் வழிமறித்துத் தடுத்து வைத்துக் கொண்டு, தங்கள் தாயக மண்ணில் உற்பத்தியான நீர் என்று போலி வாதம் பேசுகின்றனர்.

காவிரி நீரைத் தங்களுக்குப் பயன்படும்படி கர்நாடகம் திட்டங்கள் தீட்டவில்லை என்பதே குடகு இன மக்களின் குறைபாடு. காவிரிச் சிக்கல் எழும்போதெல்லாம் குடகு மக்கள் தமிழகத்திற்காகவே குரல் கொடுக்கின்றனர். கன்னடர்கள் தங்களையும் ஏமாற்றுகிறார்கள்; தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே குடகு இன மக்களின் குற்றச்சாட்டு.

மொழி அடிப்படையில் குடகுத் தனி மாநிலம் அமையத் தமிழ்நாடு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். காவிரிப் போராட்டத்தின் வியூகமாக இதைக் குறுக்கிப் பார்க்காமல் ஒரு தேசிய இன மக்களுக்குச் செய்ய வேண்டிய சகோதர உதவி என்று கருத வேண்டும்".

ஐயா பெ.மணியரசன் அவர்கள்
காவிரி உரிமை மீட்புக்குழு

காவிரி - நேற்று, இன்று, நாளை நூலில் எடுத்தது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


ஜாயின்ட் கவர்னன்ஸ் கவுன்சில்...
யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...
ரீபப்ளிக் ஆஃப் தமிழ்நாடு...

இவை அனைத்தும் போரின் இறுதியில்
உருவாகும்...

இந்திய சதி கோட்பாடு - 6...


இந்திய-சீன எல்லையில் யூஎஃப்ஓ (UFO) தளம் உள்ளது என்பது பற்றியது..


இந்திய - சீன எல்லை பகுதியான லாடக் பகுதியில், பறக்கும் தட்டு பார்த்தாக பல தகவல்கள் உண்டு.


ஆனால் அவைகள் வெறும் புரளிகள் என்றும், ஒருவேளை அவைகள் சீனாவின் தீ விளக்குகளாக (Chinese fire lanterns) இருக்கலாம் என்று விளக்கம் அளித்து வருகிறது இந்திய ராணுவம்.


கோங்கா லா பாஸ் (Kongka La Pass) பகுதிக்கு செல்ல யாருக்குமே அனுமதி வழங்கப்பட மறுப்பதின் மூலம் அங்கு யூஎஃப்ஓ தளம் இருக்கிறது உறுதியாகிறது...

33 என்னும் இயேசு வும்...


இயேசுவிற்கு பதில் வேறொருவர் பலியிட்டனர்.. இயேசு தப்பி சென்றார்...

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்கள...


வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.

வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.

கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?

பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.

கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா. இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம் தோசை இட்லி போலக்கூட இருக்கலாம் புதிய தனிமம், புதிய கிரகம், என்றெல்லாம் கூட அறியப்படலாம். அலைகளாக, கதிர் வீச்சாக கூட இருக்கலாம் ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம். வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.

பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்.

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது. பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்...

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்...


அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி
விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட்காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல.

உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்.

மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது.

விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டியூப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.

ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…வெரி சிம்பிள்.

இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்.

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது.

ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர் இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள் போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டியூப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது.

டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்.

வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டு பிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.

சாவு என்பது ஒருசாதாரண நிகழ்வு. தேவையில்லாமல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டது மரணத்திற்கு முன்னதாக முதுமைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம்.

வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல்.

முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார்கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீன எந்திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமா என்ற நம்பிக்கையில் கடந்த 18 ஆண்டுகளாக நூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கிறார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர் பஎன்றால், “எதையும் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானிகள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்கிய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமா என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவறவில்லை.

ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானிகளின் அருமை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்ய விஞ்ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங்களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

அடேங்கப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே...

இயற்கை...


சிவந்த கண்ணுக்கு செண்பகம் மூலிகை...


கண்களில் உள்ள வெண் விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும்.

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், 'கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும்.

இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது.

வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது.

சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்று அழைக்கப்படுகிறது.

அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகி விடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும்.

நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம்.

ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள்.

மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப் போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.

செண்பகப் பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம்.

இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

நாக முனிவர் என்னும் சித்தர் கண்ணோய் தோன்றுவதற்கான காரணங்களை தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை அறியும் போது வியப்பு தோன்றலாம்.

ஆனால், அந்த கருத்துக்களின் உண்மைகள் தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

நமது உடலில் தோன்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மிகுகொழுப்பு, மிகுஉப்பு போன்றவை ரத்தத்தில் மிகுந்த இந்த உபாதைகளை கண்களுக்கும் சென்று கண்களின் ரத்தக்குழாய்களில் தங்கி, கண்களின் பாகங்களை கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கின்றன.

கண்களில் தோன்றும் கூச்சம், வலி, சிவப்பு, உறுத்தல், கலக்கம், வீக்கம், பீளை, கனம், எரிச்சல், பார்வைகுறைவு போன்றவை மட்டுமின்றி குதிகால் வலி, வயிற்றுவலி மற்றும் தலைவலியும் கண்ணோய்களுக்கு பல காரணங்களாக நாகமுனிவர் குறிப்பிடுகின்றார்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


அழியும் தமிழகம் - பேரதிர்ச்சியான செய்தி...


அம்மாஆரோக்கிய திட்டம் என்ற பெயரில் 30 வயதுக்கு மேற்பட்ட 3.6 கோடி தமிழர்களுக்கு இலவச உடல் பரிசோதனை செய்யபட்டதில் பேரதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன..

50% தமிழர்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது..

75% ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், துவக்கநிலை உயர்ரத்த அழுத்தமும் உள்ளது..

56% பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், துவக்கநிலை உயர்ரத்த அழுத்தமும் உள்ளது..

57% தமிழ்பெண்கள் ஒபிசிட்டி எனும் உடல்பருமனால் அவதிபடுகிறார்கள்..

54% தமிழ் ஆண்கள் ஒபிசிட்டி எனும் உடல்பருமனால் அவதிபடுகிறார்கள்..

அதாவது சம்பாதிக்கும் வயதில் உள்ளவர்களில் இருவரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதியும், ஆண்களில் 75% பேருக்கு ரத்தகொதிப்பு வியாதியும் இருந்தால் அந்த இனத்தின் நிலை என்ன ஆகும்?

அரசு நம்மை பாதுகாக்காது.. நாம் தான் நம் உடலை பார்த்துக் கொள்ள வேண்டும்....

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


தமிழினமே விழித்தெழு...


இந்தியா என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடம்...

எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய இனங்களின் போரட்டத்தின் வளர்ச்சி நிலையும் வெவ்வேறு படி நிலைகளில் உள்ளது.

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறிய நிலையிலும், மற்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலும் உள்ளது.

எனவே இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் தேசமாக மாறுவதும், தேசிய அரசு அமைவதும் காலத்தின் கட்டாயம்...

கேரளா வெள்ளமும் நியூட்ரினோ திட்டமும்...


எந்தவொரு பொருளையும், அதன் தேவைகளை புரிந்துக் கொண்டு பயன்படுத்துங்கள்..


எதேச்சையாக நீங்கள் பயன்படுத்தும் பொருள்களை ஒரு பட்டியலிடுங்கள்..

தற்போதைய சூழ்நிலையில் அந்த பட்டியலில் வரும் பெரும்பாலும் நம் வாழ்வியலுக்கு தேவையில்லாதவையே அதிகம் இருக்கும்..

அதை நம் வாழ்வில் அத்தியாவசியம் எனக்கூறி கூறி, உளவியல் ரீதியாக நம்மை அதற்கு அடிமைப்படுத்தி விட்டனர் உலக வணிகர்கள்..

வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கிறோம், நமது அடிப்படை தேவைகளுக்காக..

ஆனால் உண்மை என்னவென்றால் மனிதர்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இந்த உலகம் கொடுத்திருக்கிறது...