ரயில் ல டிக்கெட் எடுத்துதான் வரணும்னு சட்டமா என்ன 🤣🤣
HBD Father Of Corruption
தாழ்த்தப்பட்ட மக்கள் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று கேட்டவர் எப்படி சமூகநீதி போராளி..?
10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் விடுதலை என்று சட்டம் இயற்றிவிட்டு.. 7தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொருந்தாது என்றவர் எப்படி சமத்துவ போராளி..?
HBDFatherOfCorruption
முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.
1) பரு உடல் 2) நுண்ணுடல் (astral body ) 3) காந்த உடல் ( causal body ).
1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.
2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும் நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.
3). காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் . சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம். உயிரிலிருந்து. வெளியாகும் ஜீவ காந்த ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.
கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.
சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில் மனதை வைத்து தவம் செய்யும்போது கூடுவிட்டு கூடு பாயலாம்.
இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன் இரகசியத்தை அறிவது கடினம். உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய்விட்டது.
யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.
பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.
விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.
எல்லாம் நன்மைக்கே...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர
உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்..
இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகள் குணப் படுத்தி ஜீரண சக்தியை கொடுக்கும்...
தமிழகம் என்பதும் இதன் பெயர். அது ஒரு துணைப் பெயர், சிறப்புப் பெயர். அதுவும் நம்முடையதுதான்.
ஆனால், இயற்பெயர், தமிழ்நாடுதான். அரசியல்பெயர் தமிழ்நாடுதான்.
மூளை முழுக்க துரோகமும் தமிழ் விரோதமும் நிரம்பியிருக்கும் மாலன்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது.
ஈராயிரம் ஆண்டுகளாக எத்தனையோ வேந்தர்களாலும் வேளிர்களாலும் சிற்றரசர்களாலும் இதன் பகுதிகள் தனித்தனியே ஆளப்பட்டிருந்தாலும் உலக வழக்கு இதை தமிழ்நாடென்றே கூறியது.
சேர நாட்டினர் பிரிந்துபோயிருந்தாலும் எல்லையில் பல சேதாரங்கள் நடந்திருந்தாலும் இது தமிழ்நாடாகவே இருந்துவருகிறது.
வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகமாகவே இது நீடித்துவருகிறது.
11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இருந்தார்கள், பாண்டியர்கள் இருந்தார்கள், சேரர்கள் பிரிந்துகொண்டிருந்த நேரம். வேறு பல சிற்றரசர்களும் இருந்தார்கள். அந்தக் காலத்தில் இளம்பூரணர் என்கிற இலக்கண ஆசிரியர் எழுதுகிறார்: "நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்" என்கிறார். உன்னுடைய நாடு எது என்று கேட்டால், சோழ நாடு என்று சொல்லாதே, பாண்டிய நாடு என்று சொல்லாதே தமிழ்நாடு என்று சொல் என்று சொல்கிறார். 11 ஆம் நூற்றாண்டில்!- ராஜ்யங்கள் வேறு, நாடு வேறு என்கிற புரிதல் நமது புலவர்களுக்கு இருந்தது. இளங்கோவடிகளுக்கும் இளம்பூரணருக்கும் இருந்தது. பெரியாருக்கும் திருவிகவுக்கும் சங்கரலிங்கனாருக்கும் ஜீவாவுக்கும் அண்ணாவுக்கும் தம்பிகளுக்கும் இருந்தது.
வெளிப் பேரரசுகள் ஆண்டிருந்தாலும் காலனிய காலத்தில் நாம் முகமிழந்திருந்தாலும் இதை மாற்றமுடியவில்லை. நாம் அதிகாரமில்லாதபோது நமது அடையாளத்தை மாற்றி வைத்திருந்தார்கள். நாம் அதிகாரம் பெற்றபோது மீண்டும் அதை தமிழ்நாடாக்கிக்கொண்டோம். சென்னை மாநிலம் தமிழ்நாடு என அதிகார பூர்வமானப் பெயரை அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் பெற்றது.
இது தமிழ்நாடுதான். சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று ஏன் பெயர்சூட்டவேண்டும் என தமிழறிஞர்கள் பலர் (அறிஞர் அண்ணா மட்டுமல்ல) எழுதியிருக்கிறார்கள். போராடியிருக்கிறார்கள். சங்கரலிங்கனார் உயிர்துறந்தார். அவர்களின் வாதங்களை அறிவாரா மாலன்? அறிந்திருப்பார். ஆனால் தமிழ் விரோத மனப்பான்மை இப்படியெல்லாம் அவரைப் படுத்தியெடுக்கிறது.
மாலன்களின் நோக்கம் "தமிழகம்"கூட அல்ல. இதைத் தட்சிணப்பிரதேசமாக மாற்றவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற அடையாளங்களைக் கண்டு நடுங்கிறார்கள் மாலன்களைப் போன்றவர்கள்.
ஆனால் சிலப்பதிகார வரிகளைச் சொல்லி எச்சரிப்பதாக இருந்தால் இப்படிச் சொல்வேன்: இமிழ்கடல் வேலி சூழ்ந்திருக்கும்வரை இது தமிழ்நாடு தான்...
இன்னும் திங்குறதையும், தூங்குறதையும் மட்டும் தான் இவனுங்க கொரோனா அறிகுறியா இருக்கும்னு சொல்லல...
அதையும் சொல்லிட்டா நாமளா போயிட்டு ஒரு குழியை தோண்டி உள்ள படுத்துக்கலாம்...
🤣🤣🤣🤣