சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 10-ம் பகுதியாகும். இது பல்வேறு குறிப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனப் பகுதியாகும்.
இந்த 10-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கத்தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றங்கள் 90% இருக்கும் எனவும், இது வடதமிழகம், தென்தமிழகம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் புயல், மழை, சூறாவளிக் காற்று, கடல் சீற்றம் என இருக்கும்படி அமைய உள்ளதாக இந்த 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவில் மழை பொழிந்து பலத்த சேதங்களை அங்கு ஏற்படுத்தும் என்றும், இது ஒரு வரலாற்று சோகம் போல் அமையும் என சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
அமெரிக்க நாட்டில் வரலாறு காணாத அளவு மழையும், பனியும் இருக்கும் எனவும், கடல் பொங்குதல் போன்ற நிகழ்வுகள் இனி அங்கு அதிகமாக காணப்படும் என்றும், மக்களின் இறப்பு சதவீதம் அங்கு அதிகமாக காணப்படும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
உக்ரைன் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
தமிழக அரசியலில் இனி பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும் என்றும், தமிழக நடிகர்களின் பங்கீடுகள் அதிகமாகவே காணப்படும் என்றும், இதனால் நாட்டு மக்கள் வேதனைப்படும் அளவிற்கு கூச்சல், குழப்பங்கள் தற்போது நிலவ உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் தமிழகத்தின் அவல நிலையை படம்பிடித்து காட்டுகிறது.
பாமரனும் பதவி ஏற்கும் ஆசையில் பல வினோத கருத்துகளை இணையதள வாயிலாக அறிக்கைவிடும் படுகேவலமான அவல நிலை இனி தமிழக அரசியல் களத்தில் நிகழ உள்ளதாகவும், இனி தமிழகத்தில் புதுப்புது கட்சிகள் நிறைய உதயமாகிட உள்ளதாகவும், இதனால் உலக மக்களே தமிழகத்தை திரும்பி பார்க்கும்படி பல மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.
வரும் ஆவணி மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக தமிழக மக்கள் எண்ண வேண்டும் என்றும், இந்த மாதத்தில் தமிழகத்தில் பல தெய்வீக அதிசய நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்க இருப்பதாக தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மிகுந்த மழை சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், 35 % வீதம் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை இழக்கும் சூழல் உருவாக இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.
இனி தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தற்போது வரக்கூடிய “சத்திய யுகத்தை“ பற்றி விளக்கங்கள் கூறும் கல்வெட்டுகளாக இருக்கும் என 10-ம் தீர்க்கதரிசனம் இங்கே தமது கருத்தை பதிவு செய்கிறது.
பதஞ்சலி எனும் அமைப்பு இனி மக்களால் அடையாளம் காணப்படும் என்றும், அதனுடன் கைகோர்த்துள்ள பிற அமைப்புகளைப் பற்றி குறிப்புகள் இனி செய்தி ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிடுவார்கள் என்றும், இதனால் இந்திய தேசத்தில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாக இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
வீர மன்னன் சிவாஜி வாழ்ந்த ஊரில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்படும் என்றும், அக்கல்வெட்டில் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும், அதில் மிகப்பெரியதாக ஒரு குறியீடு இருக்கும் என்றும், அது ஆதிசக்தியின் இரகசிய குறியீடாக அமைந்திருக்கும் என்றும், அதனை மக்கள் இனி எங்கு, இந்த குறியீடு காண முடியும் என்று தேடுவார்கள் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
சோழவந்தான் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு இனக்கலவரங்கள் அதிகம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
ஜப்பான் நாட்டில் ஆழிப்பேரலைகள் தாக்கும் மிக கொடுரமான சோகச் சம்பவம் ஒன்று தற்போது ஏற்பட போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
கோடைவாசஸ்தலம் ஒன்று மிகப்பெரிய பூமி அதிர்வால் பூமிக்குள் அமிழப் போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது.
மரித்தவர், எழுந்தவர், தோன்றியவர் என்ற சொற்களுக்கு (அடைமொழியாக) உரிய இயேசுவின் இரண்டாம் வருகை தமிழகத்தில் தான் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒரு விஷயம் என்றும், இது மிக, மிக அருகில் நடக்கும் ஒரு சுப நிகழ்வு என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
கடல்கன்னிகள் என்ற கதாபாத்திரங்கள் நிஜம் என்று நிருபிக்கும் வகையில் இந்த கடல்கன்னிகளை மக்கள் தங்களது புறக்கண்களால் காணும் பாக்கியத்தை அடைவார்கள் என்று 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது. கடல்கன்னிகள், அரிய கடல்வாழ் உயிரினங்கள், அவைகளின் வசிப்பிடங்கள் போன்ற செய்திகள் இனி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் சமயத்தில், வேற்று கிரகவாசிகள் இம்மண்ணில் நிலையாக இறங்குவார்கள் என்றும், இதனால் இப்பூமி பல வியத்தகு ஆச்சர்யங்களை சந்திக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை எடுத்துக் கூறுகிறது.
அலவாய் மலை இனி பிரசித்திப் பெறும் என்றும், அம்மலையில் சித்தர்களின் நடமாட்டத்தை இனி பல மக்கள் காண்பார்கள் என்றும், “குதம்பை“ எனும் சித்தரின் அற்புதங்கள் அங்கு இனி வெளிப்படும் என்றும், பல பக்தர்களுக்கு அவரின் தரிசனம் கிட்ட உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
குதம்பை சித்தரின் பிரவேசம் சேலம் மலைத்தொடர்களில் இனி அதிகமாக இருக்கும் என்றும், மலைகளில் உள்ள தெய்வீக தன்மைகளை மக்களுக்கு இவர் வழிமூலமே இனி தெரியவரும் என்றும், இது சத்திய யுகத்திற்கான வேலையாக மக்கள் கருத வேண்டும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.
கன்னியாகுமரி, வேதாரண்யம், விசாகப்பட்டினம் போன்ற கடல் சார்ந்த ஊர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று 10-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
இறைவன் இடம்பெறும் அந்த இறுதி சபையில் இறைவனின் அற்புதங்களை மக்கள் காணும்படி பல அதிசய சம்பவங்கள் துவங்கிட இருப்பதாகவும், அது துவங்கும் சமயத்தில் சென்னையில் உள்ள “மெரினா பீச்“ பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அது ஒரு வரலாற்றை பதிய வைக்க இருப்பதாக சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறை சார்ந்த குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
மன்னர்கள் ஆண்ட இப்பூமியை இனி மன்னர்கள் போன்ற மக்கள் ஆள்வார்கள் என்றும், அவர்களை இறைவனே தேர்ந்தெடுத்து அரியணையில் அமர வைத்து ஆட்சி செய்யும் பொற்காலம் இப்பூமியில் விரைவில் வந்துவிடும் என்றும், இனி இப்பூமியில் இறைவனின் இறையாட்சி துவங்கிட இருப்பதாகவும், அதன் தூதுவராக ஒரு யோகா அமைப்பு தமிழகத்திலிருந்து செயல்படும் என்றும், அதற்கு அறிகுறியாக இனி தமிழகத்தில் மழை அதிகமாக பெய்யும் என்றும், இனி காவேரியின் வரலாறு தமிழகத்தில் மட்டுமே பேசும் அளவிற்கு அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
கடலோர மாவட்டங்களுக்கு பலத்த கனமழை எச்சரிக்கைகள் தரப்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், மரணத்தின் ஓலம் மிகுந்த உச்சத்தில் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் நமக்கு வரக்கூடிய பேராபத்துகளை சுட்டிக் காட்டுகின்றன.
வரக்கூடிய “மாசி“ மாதம் மிகுந்த மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கும் என்றும், தமிழனின் பெருமைமிக்க ஆட்சியை இறைவன் இப்பூமியில் அமைக்கும் துவக்க காலமாக அக்காலம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
இனி புண்ணிய ஷேத்ரங்கள் யாவும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அதற்கான நிகழ்வுகள் இனி ஒவ்வொன்றாக துவங்கிட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
புகழ்மிக்க ஒருவனின் வருகை இந்தியாவில் தற்போது நிகழ இருப்பதாகவும், அவனின் வருகையை மக்கள் எதிர்நோக்கும் இக்காலமே சத்திய யுகம் என்றும் அதனை காண நாமும் காத்திருப்போமாக.
குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.
மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...