10/04/2017

சிங்கத்தின் பாசம்...


பாஜக மோடியும்.. சிங்கள ராஜபச்சே வும் ஒன்றே.. தமிழின விரோதிகளே...


சொந்த நாட்டு விவசாயிகளை நிர்வாணமாக்கி அவமதிக்கும் மோடியின் பாஜக அரசு சிங்களவர் வறட்சிக்காக துடியாய் துடிக்கிறது...

இந்திய தேசத்தின் குடிமக்களான தமிழகத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நிர்வாணமாக போராட்டம் நடத்தும் நேரத்தில் தான் இலங்கை வாழ் சிங்கள மக்களின் வறட்சியைப் போக்க 100 மெட்ரிக் டன் அரிசியை அனுப்புகிறதாம் தமிழர் விரோத மோடி தலைமையிலான பாஜக..

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலே தமிழகத்துக்கு எதிராக பச்சை துரோகம்...

படுபாதகங்கள்.. ஒன்றா இரண்டா... எத்தனை எத்தனை துரோகங்கள்?

ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய பாஜக மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்றது. ஆண்டுகள் உருண்டோடின... துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என திமிர்த்தனம் காட்டுகிறது மோடியின் பாஜக அரசு.

கேரளா அணை கட்ட, கர்நாடகா அணை, ஆந்திரா அணை கட்ட அனுமதிகளை வாரி இறைத்து தமிழர் நிலங்களை பாலைவனமாக்கிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மோடியின் பாஜக அரசு.

இன்னொரும் நாசகார மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழ் மண்ணின் எதிர்ப்புக்கும் பின்னரும் திணித்து தெனாவெட்டைக் காட்டுகிறது மோடியின் பாஜக அரசு.

நித்தம் நித்தம் வங்கக் கடலில் செத்து பிழைத்து திரும்புகிற தமிழக மீனவர்களின் துயரத்தைத் துடைக்க துளியும் விருப்பமில்லாத துரோகத்தால் இழைக்கப்பட்டது தான் மோடியின் பாஜக அரசு.


வரலாறு காணாத வறட்சியால் 300 விவசாயிகள் மாண்டு போயுள்ளனர் தமிழ் மண்ணில்.

இந்த பெருந்துயரைத் துடைக்க கை நீட்டி உதவ மறுக்கிறது மோடியின் பாஜக அரசு.

தங்களது உரிமைகளுக்கு தலைநகர் டெல்லியிலே முகாமிட்டு மாத கணக்கில் போராடும் தமிழகத்து விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்காத இரக்கமற்ற கொடியவர்களின் கூடாரமாக இருக்கிறது மோடியின் மத்திய பாஜக அரசு.

போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்த, முடிவுக்கு கொண்டுவர எத்தனை எத்தனைதான் குறுக்கு வழிகள்...

இதோ டெல்லித் தெருக்களில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக உருண்டு புரளும் பெருங்கொடுமைக்கு காரணமே மோடியின் மத்திய பாஜக அரசு தான்..

சொந்த நாட்டு குடிமகன் வாழ்வுக்கு வழிகேட்டு தலைநகர் டெல்லியிலே நிர்வாணமாக புரண்டு கொண்டிருக்கிறான்..

ஆனால் வஞ்சக மோடி அரசோ, சிங்களத்தான் வறட்சியில் வாடுகிறானாம்... அந்த தேசத்துக்கு 100 மெட்ரிக் டன் அரிசியை அனுப்பி மகிழ்ந்து கொண்டிருக்கிறதாம்...

எங்கள் தமிழரின் வயிறுகள் எரிந்து கொண்டிருக்க.... எங்கள் இனத்தின் பரம வைரிகளுக்கு பாதசேவை செய்யும் பாரத மாதாவின் பவித்ர புத்திரர்களுக்கு தமிழகம் தக்க பதிலைப் புகட்டும் நாளும் வெகு தொலைவில் இல்லை தான் என்பதை உணரட்டும்...

பாஜக கேடுகெட்ட வட நாட்டு எச்ச ராசா சர்மா வுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்...


தமிழகத்திலே தமிழ் எதிர்ப்பு பபோராட்டம் செய்வானாம்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 6...


ஸ்டாலினை வியக்க வைத்த ஆழ்மனசக்தி..

விவேகானந்தா சந்தித்த சாது அவருடைய எண்ணத்திலும், அவருடைய நண்பர்கள் எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியது போல் ரஷியாவில் ஒருவர் சர்வாதிகாரி ஸ்டாலினையே ஆச்சரியப்படுத்தினார்.

ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார். கம்யூனிஸ்டான ஸ்டாலினிற்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.

தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது.

அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.

உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.

வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது ஸ்டாலினிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த ஸ்டாலின் வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று கேட்டார்.

மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர். கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார்.

ஸ்டாலினிற்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார்.

விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரண தண்டனையை விலக்கிக் கொண்டார்.

ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார்.

ஒத்துக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ் அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர்.

அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர்.

பின் அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.

இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக்கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினிற்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார்.


அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளி வந்தன.

ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார்.

வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள் என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.

அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார்.

செவஸ்டோ போல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டு பிடித்தார்.

ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.

எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார்.

அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டுபிடிக்கவில்லை. எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம் - கோவை போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை...


பிரதமர் அலுவலகம் முன்பு முழு நிர்வாணமாக தரையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்...




பிரதரை பார்க்க வைப்பதாகக் கூறி அழைத்து சென்று விட்டு, மனுவை கொடுத்து விட்டு செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதாக அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு...

பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், தேர்தலை ரத்து செய்ததது நேர்மையாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் தண்டனையாக உள்ளது - விஜயகாந்த அறிக்கை...


சவுதி வாழ் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் இனி வருமான வரி கிடையாது - நாட்டு மக்களை இன்பத்தில் ஆழ்த்திய சவுதி நிதி அமைச்சகம்...


சவுதி மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது...

பாஜக என்பது பாகிஸ்தான் தீவிரவாதி & பயங்கரவாதி கட்சி என்று நேரடியாக சொல்லிட்டு போங்க மோடி...


சித்தர் ஆவது எப்படி - 5...


புத்தியின் கனல் தன்மை மனிதன் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறான்.. மனம் கொண்ட மனிதன் தன் மனதில் கனலாகவும் வெளிச்சமாகவும் இரண்டாக பிளவு பட்டு இருப்பதையே இதை குறிக்கின்றது...

வெளிச்சமான உருவ பூதங்களான மண் நீர் பூதங்களை காட்டவும், கனலாய் அருவ பூதங்களான புத்தி அறிவினை வலு ஊட்டவும்,ஆக இரு செயல்களை மனம் செய்கிறது...

வெளிச்சத்தை மனம் காட்ட காட்ட மனிதன் விலங்கியல் நிலைக்கும், கனலாய் மாற மாற மனிதன், தெய்வநிலைக்கும் செல்லுவதை முன்பே பார்த்தோம்..

இயல் நிலையில் மனிதன் வெளிச்சமாய் உள்ள நிலையில் யோக பயிற்சியின் மூலம் கனலை பெருக்கி தெய்வீக நிலைக்கு போகிறான்..

கனலை பெருக்காத நிலையில் தெய்வ நிலையை அடைய முடியாமல், மனிதன் மனிதனாக ஜென்ம ஜென்மாக பிறவி எடுக்கிறான் என மகான்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்...

பிரபஞ்ச ஆற்றலை புத்தியின் மூலம் சுத்த கனலாக பெற்றுக்கொண்ட மனம் அதை வெளிச்சமாக மாற்றி உலகியலில் தொடர்புக்கு தன்னுடைய பஞ்ச பொறி புலன்களுக்கு செலவழிக்கிறது..

அப்படி செலவு செய்து பழக்கப் பட்ட மனம், பெற்ற மொத்த ஆற்றலையும், பொறி புலன்களுக்கே செலவு செய்ய துடிக்கிறது..

ஆனால் புத்தி அதனை தடுத்து விட்டாலும், புத்தியின் செயலில் தோய்வு ஏற்பட்டாலும், புத்தியின் பலத்தைக் காட்டிலும் மனம் மிகுந்த பலத்தோடு செயல் படுகின்ற பொழுது, புத்தி செயல் இழந்து போகும் போது, மனம் தான் பெற்ற கனல் சக்தி முழுமையையும் பொறி புலன் வாயிலாக தான் பெற்ற அனைத்து கனலையும் வெளிச்சமாக மாற்றி விடுகிறது...

அப்படி வெளிச்சமாக மாறும் போது, எண்ண அலைகளை உருவாக்குகின்றது..

அப்படி உருவான எண்ண அலைகள் சித்தத்தில் உள்ள அதற்கு ஒத்த பழைய எண்ண பதிவுகளையும் தூண்டி எண்ண குவியல்களை ஏற்படுத்துகிறது..

இந்த எண்ண குவியலின் ஆதிக்கமே புத்தியும் அறிவும் தாராளமாக செயல் பட முடியாமல் தடையாய் அமைகிறது.. இந்த நிலையில் தான் புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் ஏற்படுகின்றது...

மனம் புத்தியிடம் இருந்து பெற்ற ஆற்றலை அதாவது கனலை வெளிச்சமாக மாற்றுவதை குறைக்க, குறைக்க; புத்தியில் கனல் பெருகி புத்தியின் செயல் திறன் அதிகமாகிறது.... வலுவடைந்த புத்தி அறிவினை முழுமையாக பயன் படுத்திகொள்ளும்..

ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்தமாக சிக்கி கொண்ட நாம், மனதின் செயல் பாட்டால் அதாவது கனலை வெளிச்சமாக பூரணமாக மாற்றிய விதத்தால், அனைவரும் ஒட்டு மொத்தமாக புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் உடையவர்களாக உள்ளோம்...

முதலில் எண்ண குவியலில் இருந்து விடுபட்டு பின் தனி தனி எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால் ஒழிய வெளிச்சம் மூலமாக ஆற்றல் குறைந்த அவல நிலையிலிருந்து மீள முடியாது...

இப்போது நம்மை யார் மீட்பது என்பது தான் மிக பெரிய கேள்வி... தடு மாற்றம் அற்ற திடமாற்றம் காண என்ன வழி ?

புத்தி என்பது பூரண கனல்.. கனலான ஒன்றே ஆற்றலானது.. புத்தியில் கனல் நிறைந்து புத்தி வலு பெற வேண்டும் என்றால் புத்தியிடமிருந்து கனலை கிரகிக்கும் மனதின் செயல் பாட்டை நிறுத்த வேண்டும்..

புத்தியிலிருந்து ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் மனம் கனலை பெற முடியாது.. புத்தியானது தன் தேவைக்கு வேண்டிய அவசியமான கனலை தன் பால் வைத்துக் கொண்டு சதாகாலமும் செயல் பட்டுக் கொண்டு இருக்கும்..

மனம் ஆனது புத்தியின் தேவைக்கு மேல் உள்ள கனலை பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கனல் இல்லாமல் சோர்ந்து தூங்கி விடும்.. ஆனால் புத்தி மட்டும் சதா காலமும் விழித்துக் கொண்டே இருக்கும்..

தூக்கத்தில் ஏதாவது சத்தம், அதிக வெளிச்சம் அல்லது தட்டி எழுப்புதல் மூலம், தேக உணர்வு அதிகமானால் புத்தி மனதை விழிப்பு அடைய செய்து வெளிச்சத்திற்கு வரும்.. அதாவது பொறிகள் மூலம் புலன்கள் வேலை செய்ய தொடங்கும்...

தியானத்தின் ஒரு செயல், பெற்ற கனலை மனம் வெளிச்சம் ஆக்காமல் புத்தி தடுத்து தன்பால் புத்தியானது கனலை தக்க வைத்துக் கொள்வது தான்...

புத்தியானது வேண்டிய அளவிற்கு மட்டுமே மனதிற்கு கனலை கொடுக்க தொடங்கி விட்டால் மனம் புத்தியின் பூரண கட்டுப் பாட்டில் வந்து விடும்...

மனதிற்கு தொல்லை கொடுப்பது, சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமே..

இந்த எண்ண பதிவுகளை மனம் கையாள அல்லது கட்டு படுத்த எந்த வகையிலும் முடியாது...

ஆனால் சித்தத்தை கட்டு படுத்த புத்தியால் மட்டுமே முடியும்.. பொறி புலன்களை ஆதிக்கம் செய்வதற்காகவே மனம் படைக்கப் பட்டு இருக்கிறது..

பொறி புலங்களின் மேல் புத்தி, மனம் இல்லாத போது மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.. இப்படியான கட்டமைப்பினை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்...

நமக்கு இப்பொழுது முக்கியமான தேவை, தனக்கு தேவையான கனலை தக்க வைத்து உள்ள , ஆனால் மனத்தின் ஆதிக்கத்தால் செயல் பாடு குறைந்துள்ள, புத்தியை தட்டி எழுப்புவதே... புத்திமதி யார் வழங்குவார்.. ஒரு குரு தானே வழங்குவார்.. குருவின் துணை யின்றி எதுவும் நடக்காது..

புத்திமதி என்பது புத்தியின் விழித்து எழுந்த நிலை.. ஆம் புத்தியின் நிலையிலே இருந்து கொண்டு குரு செய்யும் பணியை செய்வது இந்த புத்தி என்ற எழுந்த பூதம் தான், முதலில் எழ வேண்டும்.. எழுந்த புத்தியே குருவாக முடியும்.... எழுந்து பலப்பட வேண்டும்.. பலப் பட்ட பின் தான் குருவினுடைய ஆதிக்கம் தொடங்கும்..

பின் ஒவ்வொன்றாக சீர் அடைய தொடங்கும்.. சதா காலமும் விழித்து கொண்டு இருக்கும் இந்த புத்தி என்ற பூதம் முதலில் தான் செய்ய வேண்டியது இன்னதென்று அறியாத, புத்தி கெட்ட நிலையில் உள்ளது..

அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய ஒரு இடத்தை காண்பித்து விட்டால், போதும் மற்றவை எல்லாவற்றையும் சித்தராகக் கூடிய நிலைவரை அதுவே குருவாக இருந்து வழி நடத்தி செல்லும்..

ஒரு தீக்குச்சி பெரும் காட்டு தீயிக்கு வழி வகுப்பது போல், அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய தகுந்த ஒரே ஒரு இடத்தையும் அங்கு புத்தி பலம்கெட்ட நிலையிலிருந்து புத்தி பலப்பட்ட நிலையை அடையும் நுணுக்கத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்...

SHEL எண்ணெய் நிறுவனம் செய்த படுகொலை.. மறைக்கப்பட்ட கொடூர வரலாறு...


5 இலட்சம் விவாசிகளின் உயிரை குடித்த ஒரு நிறுவனத்தின் மரண போராட்ட பதிவு ..

இப்பதிவு அந்நிய நாட்டில் என்று யோசித்தாலும் நாளை நமக்கும் இதான் நிலை. பதிவின் இறுதியில் இது புரியும்..

நைஜீரியாவில் கறுப்பர்கள் என்பதை தாண்டி என்னை வளம் என்ற ஒரு விஷயம் உள்ளது.

இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதும் இல்லை எந்த ஊடகமும் இதை பற்றிய செய்தியை வெளியிடவும் இல்லை.

காரணம் அவர்களுக்கு தான் தெரியும்.. நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான பெரிய நாடு தொழில் வளம் என்பதை தாண்டி பாரம்பரியமும் இங்குள்ளவர்களுக்கு உண்டு.

நைஜீரியாவில் என்னை வளம் என்பது எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளை போன்று இங்கும் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கின்றது.

போன நூற்றாண்டு வரைகும் எண்ணைக்காக உலக முதலாளித்துவ நாடுகள் பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

நமக்கு ஷெல் [SHELL] என்ற  பெட்ரோலியம் நிறுவனம் பற்றி நமக்கு தெரியும் தானே..

இந்தியாவில் கூட ஆங்காங்கே இந்த நிறுவனங்களை நீங்கள் பார்க்கலாம்..

இந்த ஷெல் நிறுவனம் நெதர்லாந்தின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது இதில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு..

உலக பொருளாதாரத்தை இவனுக
சுரண்டுவதற்கு ஒரு பெயர் அது தான் SHELL..

பெட்ரோலிய நிறுவனம் என்று சொல்லி கொண்டு நைஜீரியாவில் உள்ள அமைச்சர்கள் ஆட்சியாளர்களை கையில் போட்டு கொண்டு அடிக்கும் கூத்துக்கள் ஏராளம் ...

எடுக்கும் எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தம் போடப்பட்டுக் கொண்டு கிட்டத்தட்ட 110 வருடங்களாக சுரண்டி கொண்டுள்ளது ..

இதன் பாதிப்பு எண்ணையை எடுக்க கூடிய நைஜீரிய நாடு தமது எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் கொடுத்துவிட்டு..

தமது தேவைக்கு அந்நிய நாட்டில் இருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறது..

[நம்பினால் நம்புங்கள் இதான் உண்மை]

இது நாள் வரைக்கும் இதான் நிலை நைஜீரியாவில்.

நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தமது சுரண்டலை சுரண்டி கொண்டு உள்ளது இந்த ஷெல் நிறுவனம்..

இதில் பங்குதாரராக பிரிட்டிஷுக்கு 40 % சதவீதமும் 60% அரச குடும்பத்திற்காகவும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக திருடி கொண்டுள்ளது.

இதை உணர்ந்த நைஜீரிய வாலிபர்கள் இதை தட்டி கேட்டால் புரட்சியாளன் என்ற முத்திரை குத்தி அவனை சிறையில் அடைப்பதாக இருந்தது..

பொறுத்துப் பார்த்த மக்கள் எண்ணெய் கடந்து செல்லும் குழாய்களை அடித்து நொறுக்கி தங்களது தேவைக்கு எடுத்து கொண்டனர் .

சில நேரங்களில் குழாய்களை சேதப்படுத்தி விட்டு அந்நிறுவனத்தின் ஆட்கள் வந்து சரி செய்ய வரும் வரை மறைந்து இருந்து..

ஷெல் நிறுவனத்தின் ஆட்களை சிறை பிடித்து அரசுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் பலமுறை எச்சரிக்கை செய்து விட்டார்கள் நைஜீரிய பொது மக்கள்..

இருப்பினும் பணத்தாசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனமான ஷெல்லும் இவனுக்கு வழியமைத்து கொடுக்கும்  உள்ளூர் ஆட்சியாளர்களும் மதிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை ..

இதன் உச்சக்கட்டம் என்னவாக இருந்தது தெரியுமா ?

SHEL நிறுவனத்தின் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்று கத்தி கூப்பாடு போட்டு இவர்களுக்கென்று தனியார் பாதுகாப்பு படை துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது ...

நினைத்து பாருங்கள் என் நாட்டை சுரண்டி விவசாயிகளின் உயிரை மாய்க்க வைத்து என் அரசுக்கு பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கி என் மக்களால் உனக்கு ஆபத்து என்று தனி இராணுவம் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு திராணி வந்து விட்டது என்றால் இதற்கெல்லாம் காரணமான நைஜீரிய மண் சார்ந்த நாங்கள் என்ன செய்வோம் ?

என்று பலரது கேள்வி ?

இந்நிலையில் தான் நைஜீரிய எழுத்தாளர் கென் சரோ விவா என்பவர் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்..

இவர் சுற்றுசூழல் ஆய்வாளர் கவிஞர் மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பழமை வாய்ந்த ஓகோனி பழங்குடி இன மக்களின் தலைவராகவும் இருந்தார்.

இவர் சுற்றுச் சூழல் சீர்கெட்டது என்றும்  எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன என்றும்..

இந்த ஷெல் நிறுவனத்தால் எண்ணெய் எடுக்கிறேன் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்ததால் கடந்த 100 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 இலட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் மாண்டனர் என்ற ஆய்வு உண்மையை உலகிற்கு போட்டு உடைத்தார்..

இனியும் சரிவராது என்று உணர்ந்த ஷெல் நிறுவனம் . நைஜீரிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து Ken Saro Wiwa மற்றும் இவரது கூட்டாளிகள் 8 அப்பாவி மக்களையும் 1995 வருடம் தூக்கிலிட்டது ..

இதோடு ஒரு நூற்றாண்டுக்கான போராட்டம் வெற்றியடையாமலே முடிந்தது....

இன்றுவரைக்கும் தொடர்ந்து தங்களது வயிற்றை நிரப்பி கொண்டு தான் உள்ளது..

ஒரு 100 வருடத்தில் 5.5 இலட்சம் விவசாயிகளை காவு வாங்கிக்கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி கொண்டுட்டு தான் இருக்கிறது இந்த SHEL நிறுவனம்....

நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று இதையெல்லாம் மக்களிடம் சொல்லவோ விவாதம் செய்யாவோ ஊடகங்களுக்கு நேரம் இருக்காது சமூக ஊடகங்கள் நமது கையில் உள்ளது .

நைஜீரிய மக்களது 100 வருட போராட்டம் தமிழகத்திற்கும் பொருந்தும்..

சிந்திப்பவர்கள் கிரகித்து கொள்ளட்டும்...

இந்திய தேர்தல் ஆணையம் உ.பி. ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தல் நடத்துமா.?


ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து பாஜக விற்கு ஆதரவாக செயல்பட்டது உ.பி. தேர்தல் ஆணையம்.. ஆகையால் அந்த தேர்தல் செல்லாது என்று  ஆட்சியை கலைக்க வேண்டும்...

செய்யுமா உத்தமபுத்திர தேர்தல் ஆணையம்...

இதுவரை இந்தியாவில் நடந்த தேர்தல்கள் எல்லாம் பணம் கொடுக்காமல் தான் நடந்தது என்ற அதிச்சிகர உண்மையை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து மூலம் அறிந்து கொண்ட தினம் இன்று.

தேர்தல் ஆணையத்தின் வேலை என்ன.. முறைகேடு இல்லாமல் தேர்தலை நடத்துவது. அதற்குதான் ஆணையத்திற்கு அத்தனை அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது.

முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடை செய்யலாம்.

ஆனால் பணம் கொடுக்கப்பட்டது என்பதால் தேர்தலை ரத்து செய்கிறார்கள் என்பது காதில் பூக்கூடையை சொருகும் வேலை.

அந்த மோடி கேடி கொண்டையை மறைங்கப்பா...

அனைவரும் வழக்கு பதிவு செய்து உ.பி ஆட்சியை கலைக்க வழிச் செய்யுங்கள்...

ஆர்.கே. நகர் மக்கள் .. மைண்ட் வாய்ஸ்.. மீண்டும் எப்படா தேர்தல் வரும்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 5...


எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி. ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார்.

அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்...

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார்.

விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.


நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள்.

இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் யோக சூத்திரங்களில் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

இனியும் ஆழமாய் பயணிப்போம்...

டிடிவி. தினகரனுக்கு வைகோ ஆதரவு அளித்தது நினைவிருக்கிறதா...


பாஜக வெட்டிய ஆடு...


புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்....


ஆகாயத்தில் ஒரு ஒளி - 6...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனத்தின் தொடரில் இன்று விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தீர்க்க தரிசனம் வெளியிடப்படுகிறது..

அதாவது பூமியில் உள்ளது போன்று மற்ற கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி உலக நாடுகளின் மக்களுக்குள்ளும் ஒரு ஆச்சர்யமூட்டும் கேள்வியாக உள்ளது.

இன்றைய ஆறாவது தீர்க்க தரிசனம் மனிதர்களின் உருவ அமைப்பை ஒத்த ஆனால் சில மாறுபட்ட அங்க அமைப்புகள் உடைய, ஆற்றலில் மேம்பட்ட சில ஜீவராசிகளும், மனிதனை போன்றவர்களும், பல கிரகங்களில் வசித்து வருகின்றனர் என்ற குறிப்பை இந்த தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

அதாவது பூலோக அமைப்பில் உள்ள வட, தென் துருவங்களில் எங்கு அதிகமான உறைபனி உள்ளதோ அதன் நேர் ஒளிப்புள்ளி செல்லும் திசையில் சுற்றிவரும் வான்மண்டல கோள்களில் மனிதனைப் போன்ற வேற்றுகிரக வாசிகள் வாழ்ந்து வருவதாக இந்த தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.


அதுமட்டுமின்றி செவ்வாய், சனி, புளுட்டோ, சந்திரன் போன்ற கோள்களில் வேற்று கிரகவாசிகள் வாழ்வதாக இந்த ஆறாவது தீர்க்க தரிசனம் ஒரு விளக்கத்தை தருகிறது.

இவர்கள் பூமிக்கு பயணிக்கும் வழிமுறைகளை முழுமையாக அறிந்து விட்டனர் என்றும், விரைவில் இப்புவியில் இவர்கள் நடமாடும் காட்சியை முழுமையாக இந்த மனித சமூகம் காணும் என்றும் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

இவர்கள் பூமியில் குடிகொள்ளும் பகுதிகள் குளிர்ச்சி மிகுந்தவையாகவும், நீர் நிறைந்த ஏரி, கடல் போன்ற பகுதியில் வாழ்வார்கள் என்றும், இவர்கள் ஒளி வாசிகள் என்றும், இரவு நேரத்தில் மட்டுமே இவர்கள் மக்கள் கண்களுக்கு தெரிவார்கள் என்றும் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

இந்த வேற்று கிரகவாசிகள் மரணத்தை சந்திக்கும் சமயத்தில் மட்டுமே இவர்களின் உடல்களை மக்கள் சாதாரணமாக கண்களால் காண முடியும் என்றும்,


பகலில் இவர்கள் மற்றவர்களுக்கு தங்களை தெரியப்படுத்திட தமது விஞ்ஞான அறிவால் உடைகளை கண்டறிந்துவிட்டார்கள் என்றும்,

மேலும் அத்தகைய ஆடைகளை அணிந்த சமயத்தில் மட்டுமே இவர்களை பூமியில் பகலில் மக்கள் காணமுடியும் என்றும் இந்த ஆறாவது தீர்க்க தரிசனம் மேலும் பல விளக்கங்களை தருகிறது.

இங்கு வெளிப்படுத்தப்படும் தீர்க்க தரிசனங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ (அ) நம்ப வேண்டும் என்றோ இங்கு வெளிப்படுத்தப் படவில்லை.

இதுபோன்ற தீர்க்க தரிசனங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எமக்கு வழங்கப்பட்டுள்ளன, அவைகளில் ஆனேக தீர்க்க தரிசனங்கள் நடந்து முடிந்துள்ளன.

ஆகவே இன்றைய காலக்கட்டத்தில் இவைகளில் உள்ள நம்பகத்தன்மையை நானும் உங்களோடு இணைந்து அறிய வேண்டும், அதே சமயத்தில் இதனை இங்கு பதிவுகளாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த தொடர் வெளியிடப்படுகிறது.

மாற்றங்களே மக்களை வாழ வைக்கும், மாற்றம் இல்லாத ஒன்றை மக்கள் தங்கள் நினைவுகளிலிருந்து நீக்கி விடுவார்கள்.


இதுவே உண்மையும் கூட, இத்தொடர் உங்களிடையே சில மனப்பதிவுகளாக பதிந்து கிடந்தாலும் காலத்தால் இதன் உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளும் சமயத்தில் இந்த தீர்க்க தரிசனங்கள் ஒரு நாள் நீங்காத ஒரு ஒளியாக ஆகாயத்தில் ஒளி வீசும். அன்று உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும்.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இத்தொடரில் இடம் பெறும் விளக்கங்கள் மற்றும் தீர்க்க தரிசனங்கள் மொத்தம் 66 தீர்க்க தரிசனங்கள்.. இந்த தீர்க்க தரிசனங்களை மெய்பட காண வேண்டுமெனில் அதன் காலத்திற்காக நாம் காத்திருப்போம்.

தீர்க்க தரிசனங்களில் உள்ள நிகழ்வுகள் நடக்கும் காலம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழக்கூடும், இது இறைவனின் வருகைக்கு முன்பாக இப்புவியின் மீது நடக்கும் நியாயத் தீர்ப்புகளின் மாற்று வடிவங்களே என்பதை நாம் இங்கு உணரவேண்டும்...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

தருண்விஜய் போன்ற வடகிந்தியர்கள் செகப்பா இருக்க காரணமான, மங்கோலிய இனத்தைச்சேர்ந்த துருக்கி மன்னன் தைமூர் இவருதானாம்...


இது ஒரு பெருமையாடா நாதாரிப்பயலே.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு.. இது ஒரு ஜனநாயக படுகொலை - டிடிவி தினகரன் கருத்து...


ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு தினகரன் மட்டும் காரணமல்ல ஒபிஎஸ் மற்றும் திமுகவும் காரணம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...


தில்லியில் விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம்...


பிரதமரை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி பார்க்க விடாமல் தடுத்ததால், நிர்வாணமாக போராடிய தமிழக விவசாயிகள் கைது.

தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அய்யாகண்ணு தகவல்.


நடிகைகளையும் மற்ற அனைவரையும் சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமருக்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாக போராடும் ஏழை விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா...

குரங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தையின் அதிர்ச்சி பின்னணி...


நேற்றைய தினம் இந்தியா உட்பட சர்வதேச செய்தி ஊடகங்கள் பலவற்றிலும் 'குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண் குழந்தை' எனும் செய்தி பல ஊடகங்களில்  இடம் பெற்றிருந்தது. ஆனால் இன்று அக்குழந்தை பற்றி மாற்று வகையான அதிர்ச்சிகர கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இக்குழந்தை அண்மைய காலத்தில் தான் அதன் பெற்றோர்களால் காட்டின் ஓரம் வீசப்பட்டிருக்கலாம் என்ற புதிய கருத்தும் வெளியாகியுள்ளது.

இக்குழந்தை மீட்கப்பட்டபோது குரங்குகள் அவள் அருகே இருந்ததை மறுக்கவில்லை என்றாலும் குரங்குகளால் நீண்டகாலமாக வளர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் இவள் எப்போது தனித்து விடப்பட்டாள் என அறுதியிட்டு சொல்லவும் முடியவில்லை என்ற கருத்தும் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

உ.பி.யின் பஹ்ரைச் மாவட்ட மருத்துவ அதிகாரி அன்குர் லால் கூறும்போது, இக்குழந்தை மீட்கப்பட்டபோது மிகுந்த சீற்றம் உடையவளாக இருந்தாள், பிற குழந்தைகளைப் போல் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் பெற்றவளாக இருக்கவில்லை என்றும், மனிதர்களுடன் பழகவும் உரையாடவும் தேவையான குணத்தையும் பெற்றிருக்கவில்லை என்பதாலேயே இவள் மிக நீண்டகாலத்திற்கு முன்பாகவே காட்டிற்குள் விடப்பட்டிருக்க வேண்டும் என சிலரால் நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது தவழ்ந்தவள் தற்போது பயிற்சிக்குப் பின் நடப்பதாலும் இவள் பிறந்தது முதல் காட்டிற்குள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் சமூக ஆர்வலர் ரஞ்ஜனா குமாரி அவர்கள் கூறும் போது, இந்திய சமூகத்தில் ஆண் குழந்தையை போல் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை அதிலும் உடற்குறையுடன் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளின் நிலை இன்னும் மோசமானது, அவ்வாறான சமூக காரணங்களாலேயே இக்குழந்தை காட்டிற்குள் கைவிடப்பட்டிருக்கலாம் எனக்கூறினார்.

மீட்கப்பட்ட பெண் குழந்தை தொடர் சிகிச்சைக்குப் பின் தேறி வருவதை தொடர்ந்து லக்னோவில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையுடனும் அக்கறையுடனும் கண்காணிக்கப்பட்டு வருகிறாள்...

திராவிடக் கழகத்தின் சுயநலத்தின் பகுத்தறிவும் சுயமரியாதையும்...


சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ - அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடை பிடிக்கவில்லை.

ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா?

ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்தி வைத்தார்.

இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்?

திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயது தான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.

தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.

இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்து கொண்டார்.

சொத்துக்களுக்காக - இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா?

கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா?

திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா?

திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா?

திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா?

சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்..

அதே சொத்தை - இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக - சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்?

அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா?
சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால்..

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டு தான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார். இது தானா கொள்கைப் பிடிப்பு?

சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே..

ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா?

தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு..

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?

ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே. ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ.. அவர்களுக்கே வெளிச்சம்..

தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்..

பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக் கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா? (விடுதலை 20-04-1962).

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்டர் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடை பிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?

அன்றே முத்துராமலிங்கத்தேவர் சொல்லியுள்ளார்........


இராமாயணம் என்கின்ற புழுகு மூட்டை...


சுகேசன் என்ற அரசன் குமரிக் கண்டத்தில் ஒரு பெரிய மலையில் இருந்து ஒரு பேரரசை ஆண்டான் இவன் மகேந்திர மலை அல்லது மணி மலை என்று சொல்லப்படுகின்ற நாகர்களின் அரச பரம்பரையில் தெய்வவதி என்ற பெண்ணை திருமணம் செய்தான்.

இவர்களுக்கு மாலியவான், சுமாலி என இரண்டு புத்திரர்கள். இவர்களில் பராயம் வந்ததும் மாலியவான் ஈழத்துக்கு அரசன் ஆனான். இவனே பத்து நாடுகளை வென்று முதலில் தனது கிரீடத்தில் பத்து நாடுகளின் முடியையும் பதித்து ஒரு கிரீடத்தை அணிந்து இருந்தான்.

இவனே இராமாயணம் வர்ணனை செய்ததை விட மேன்மையான இலங்கா புரியை அமைத்து இருந்தான். இவனது ஆட்சியின் முடிவில் இவன் தம்பி சுமாலி நாட்டை ஆண்டான். சுமாலி மாதோட்ட நாகர் குல இளவரசி கேது மதியை திருமணம் செய்தான்.

இவர்களுக்கு ஆண்பிள்ளை இல்லை ஒரே ஒரு மகள் அவள் பெயர் கை கேசி. (தசரதன் மனைவி கைகேயி அல்ல) இதனால் மாதோட்ட அரசை ஆண்ட புலஸ்தியர் குணவதி ஆகியோரது மகனும் கேது மதியின் அண்ணனும் ஆகிய வச்சிர வாகு என்பவன் நாட்டை ஆண்டான்.

வச்சிர வாகு அழகா புரி இயக்கர் குல தேவ கன்னி என்ற இளவரசியை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனே வச்சிர வாணன் இவன் தந்தைக்கு பின் அழகாபுரியையும் இலங்காபுரியையும் ஆண்டான்.

இவன் நாட்டில் பெருமளவு செல்வம் இருந்த தாலும் பூமியின் மிகப்பெரிய தேசத்தை ஆண்டதாலும் இவனுக்கு காலப்போக்கில் குபேரன் என்ற புகழ் பெயர் வரலாயிற்று.

இவனே முதன் முதலில் சூரிய பிரகாசம், என்றும் புட்பக விமானம் என்று இரு கடல் விமானங்களை வைத்திருந்தான். குபேரனுக்காக மண்டோதரியின் தந்தை மாயன் என்பவரே இவ்விரு விமானங்களையும் வடிவமைத்தான்.


குபேரன் காலத்திலேயே மயனின் தொழில் நுட்பத்தில் ஈழத்தில் முதன் முதலில் கோபுரங்களை கொண்ட சிவாலயங்கள் கட்டப்பட்டதாகவும் அறியப்படுகின்றது..

இவன் ஆட்சி புரிந்த காலத்திலேயே அழகா புரியில் இருந்து இயக்கர் குலத்தவர் ஈழத்துக்கு வந்ததாகவும் வரலாறு உண்டு. இவன் தந்தை வச்சிர வாகு சுமாலி கேதுமதியின் மகள் கைகேசியையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தான்.

இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே. இலக்கிய ரசனைக்காக ஆரியர் தம்மை உயர்வாய் காட்ட அரக்கர்களாய் சித்தரிக்கப்பட்ட இராவணன், கும்மகர்ணன், விபூசணன், சூர்ப்பனகை..

இவர்களுக்கு பெற்றவர்கள் இட்ட பெயர் முறையே சிவதாசன், பரமன், பசுபதி , உமை அம்மை..

சிவதாசன் வளர்ந்ததும் குபேரன் அதாவது வச்சிர வாணன் வம்சத்தில் தம்பிக்கே உரிமை உள்ள ஈழதேசத்தை கொடுத்து விட்டு, புட்பக விமானம் என்ற ஆகாய ஊர்தியையும் கொடுத்துவிட்டு தான் அழகா புரி அரசை ஆள செல்கின்றான்.

கால ஓட்டத்தில் ஆரியர்கள் தென்னிந்தியர்களை ஏமாற்றி அவர்களை தங்கள் கைபோம்மைகள் ஆக்கி ஈழத்தின் மீது படை எடுத்து பத்து தேசங்களுக்கு முடிக்கு உரிய அரசனாய் இருந்த சிவதாசனை வஞ்சகமாய் அவன் தம்பி பசுபதியையே தங்களுக்கு சாதக மாக்கி அவனது போரியல் நுணுக்கங்களையும் படை பல. இரகசியங்களையும் அறிந்து சிவாதாசன் என்கின்ற உலக மகா வீரனை வென்றார்கள்.


அன்பான உறவுகளே உங்களுடன் இன்னும் சில நிமிடம்.. ஈழத்தவர்களை அழிப்பதற்கு பல்வேறு வழிகளில் தென் இந்தியர்களை ஆரியர்கள் பயன்படுத்தினார்கள்.

தென்னிந்தியர்களின் உதவியே சிவதாசன் என்கின்ற இராவணனின் ஈழதேசம் வீழ்சி அடைய காரணம். அவர்களே பசுபதி ஆகிய விபூசணனையும் ஆரியர்கள் பக்கம் மாற்றினார்கள்.

திராவிட மாயையில் தெளிவில்லாமல் மயங்கி நிற்கும் தென்னிந்திய உறவுகளே.. இராமாயணம் உண்மை என்று உணர்ச்சி போங்க வாதிடும் உறவுகளே..

இராமாயணம் கடைசியில் உங்களை குரங்குகள் என்றும் எங்களை அரக்கர்கள் என்றும் தான் சொன்னதே தவிர உயர் குல அரசுகள் என்று சொல்லி மாலை போடவில்லை...

திராவிட ஆட்சியின் 50 ஆண்டு கால சாதனை...


பாஜக இந்த ஏலம் முறையை உ.பி யில் விட்டிருக்கலாம்...


பஸ் சம்பவம், வித விதமாய் பறக்கும் மீம்ஸ்...


1500 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் ரூ 150 விலையில்...


காரணம் சின்னம்மா சத்தியம் தானாமே...



இலுமினாட்டி களும் உலகமும்...


உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் வரும் காலங்களில் அனைவரும்
ஒரு ஆட்சிக்குள் நுழைவார்கள்...

உதாரணமாக இந்தியாவில் ஆதார் கார்டு.. வங்கியில் உள்ள டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு.. இதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் படுகின்றார்கள்..

இதனை இன்னும் மிக எளிதாக கொண்டு வரப்படும்..

அது மிக முக்கியமாக.. மருத்துவர்கள் துணை கொண்டு.. தடுப்பூசி போட்டால் தான் நோய்களை தடுக்க முடியும்.. நோய் இல்லாமல் வாழ முடியும்  என்பதை போல..

மக்கள் மனதில் பயத்தை சாதகமாக்கி அதே போன்று வரும் காலங்களில் bio chip போன்ற ஒரு சிறு ஊசி குழுந்தைகளுக்கு போடப்படும்..

ஏன் என்றால் அந்த குழந்தைகள் தான் இவர்களது ஆட்சியில் வாழும் சந்ததினர்கள்,

அதன் மூலம் வரும் கால சந்ததினர்கள் அனைவரும் இவர்களது ஆளுகைக்குள்
கொண்டு வரப்படுவார்கள்..

அப்படியானல் உதாரணமாக ஒவ்வொரு மனிதனுடைய அனைத்து பணிகளும் ஒருவருடைய வரவு ,செலவு , எந்த ஒரு சிறு பொருட்களை வாங்கினாலும், விற்றாலும்.. எங்கு போனாலும், வந்தாலும்..

இப்படி காலை முதல் இரவு தூங்கும் வரை.. நம் செயல்கள் அனைத்தும் கண்காணிக்கும் ஒருவன் ஆட்சிக்குள் நுழையப்படுவார்கள்.

அந்த ஒருவனின் ஆட்சி காலம் வந்தே தீரும்..

இந்த ஆட்சியில் இருந்து தப்பிப்பவர்களும் இருப்பார்கள்..

அவர்கள் தான் நம்பிக்கையுடையவர்கள், அந்த நம்பிக்கையாளர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்துவது என்னவென்றால் தடுப்பூசியை நம்பாதீர்கள் மற்றும் அதே தடுப்பூசி போல தான் வரும் காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு ஊசி போடப்படும்..

அதை உங்கள் குழந்தைகளுக்கு போட வேண்டாம்.. அவர்கள் தான் நாளை பெரியவர்களாக இந்த ஆட்சியில் கீழ்
வாழ கூடியவர்கள்..

உங்களை நீங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்...

முதலில் தமிழ் மொழியை காப்பாத்துங்க.. தமிழ்நாட்ட அப்புறம் பார்க்கலாம்...


சித்தர் ஆவது எப்படி - 4...


வெளிச்சத்தின் விரையத்தில் மனிதன்..

கனல் ஒன்றே உயிர் ஆற்றல்.. ஆன்மா முழுமைக்கும் தூய கனலாக உள்ளது...

இந்த கனல் பூமியில் படும் பொழுது பஞ்சபூதங்கள் கனலை பெறுவதில் உள்ள வேறு பாட்டினால் பல்வேறு உயிர் இனங்கள் தோன்றுகின்றன, மனித தேகத்தில் மட்டும் காற்று ஆகாயம் என்ற பூதங்கள் கனலை அதிகமாக பெற்று இருக்கின்றன... மனம் என்ற பூதம் மிக அதிக பட்ச கனலை பெற்று இருக்கின்றது...

அப்படி கனலை பெற்ற மனம், வலுவான பூதமான சித்தத்திற்கு அடிமையாகி உள்ளதால், மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது...

மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது... இதுதான் மனிதனின் மிக பெரிய ஆன்மீக தடை...

சித்தத்தின் தன்மையே மனதை வசப்படுத்துவது தான்..

சித்தம் என்ற நீர் பூதம் நீரின் தன்மை போல் ஓடி ஓடி பள்ளத்தில் தங்க முயலுவது போல் மனம் என்ற பாத்திரத்திரமான பள்ளத்தை நோக்கியே சித்தம் போய் கொண்டு இருக்கும்..

சித்தத்திற்கு மனதை விட்டால் வேறு புகலிடம் இல்லை.. அது மேல் நோக்கி நகர முடியாததால் கீழ் நோக்கி செல்லும் பொழுது, மண்ணின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே நகர தொடங்குவதால், மனதை சதா காலமும் சித்தம் மண் என்ற பூதத்தின் பக்கமே இழுத்து செல்லும்...

மண் அம்சமான ஆணவ குணம் சதா காலமும் ஒடுக்கத்தை நோக்கியே நோக்கியே போய் கொண்டு இருக்கும்...

அதனால் தான் மனம் முழுமைக்கும் சித்தத்தின் எண்ண ஆதிக்கமாகவே இருக்கும்.. குறுகிய வட்டமாகிய ஆணவத்தில் சதா காலமும் மனம் சிக்குண்டதாகவே இருக்கும்..

பழைய பதிவுகளான சித்தத்தின் எண்ண ஆதிக்கம் பழைய வாழ்க்கையே வாழ தொடங்குவதால் அது பழக்கமாகவும், குணமாகவும், இயல்பாகவும் மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு புதிய நிகழ் காலத்தில் மனதை ஈடு பட விடாது..

இறந்த கால வாழ்க்கையை வாழும் மனிதன் செத்தாரை போன்று இருக்கின்றான்.. நிகழ் காலத்தில் இந்த உலகில் உள்ள புதுமைகளில், மனம் மலர இந்த சித்தம் விடுவதில்லை...

நிகழ் காலத்தின் ஈடுபாட்டையே சி என்ற உயிர் மெய் எழுத்து குறிக்கிறது... அதில் வன்மையாக பொருந்தி இணைந்து கொள்வதையே வம் என்ற சொல்..

இறந்த கால எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நிகழ் காலத்தில் இணைவதையே சிவம் என்றனர்..

சிவத்தை கைகொண்டால் சிவன் ஆகலாம்..

சிவன் பெற்ற அத்தனை சக்திகளையும் நிகழ்கால இணைப்பால் பெறலாம் என்பதே உண்மை அறிந்தோரின் சத்திய வாக்கு..

ஆனால் கனலாக அனுபவக்கூடிய சிவம் இன்று மதத்தில் சடங்காக
மாறி வெளிச்சமாக விரையமாகி விட்டதே.. சடங்கு என்பதே ச் + அடங்கு என்பதாகும்..

நிகழ் கால இணைப்பு அதாவது சிவ கலப்பு இன்று அடங்கி போய் விட்டதே..

அதை விட மிக பெரிய கொடுமை என்றும் எங்கும் நீக்கமற உள்ள இறைவனையே இன்று இல்லாதது போலும் நாளை தீர்ப்பு நாளில் வருவார் என்று இறைவனையே நிகழ் காலத்திலேயே சவமாக்கி விட்டார்களே...

கனல் ஒளியை போன்றது.. ஒளிக்கும் வெளிச்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

தேவையான ஒன்றிலே ஒன்றித்து பயிலுவது ஒளி ஆகும்.. அது தேவையை நிறை வேற்ற ஆற்றலை கொடுத்து தேவையை முடித்து வைக்கும்...

தேவை எது என்று தெரியாமல், குறிக்கோள் அற்று, சும்மா இருக்க முடியாமல், எதையாவது தேடி, வெளியே உள்ள பொருள்களில் ஆற்றலை சிதறி போக செய்து, பின் வாழ்வின் தேவை என்று ஒன்று வரும் போது அதை நிறை வேற்ற ஆற்றலற்று போய் தோல்வி அடைவது வெளிச்சம்...

ஒளி வாழ்வையும் உயர்வையும் கொடுக்கும்.. வெளிச்சமோ தாழ்வையும் பலவீனத்தை கொடுக்கும்..

ஒளி என்பது 'ஒ' (ஒன்றித்தல்) + 'ளி' ( பயிலல் ) ஆகும்.. வெளிச்சம் என்பது வெளி ( வெளியே உள்ள அனைத்தும் ) + எச்சம் ( மலம் விரையம் ) என்பதாகும்...

உணர்வு என்பது ஒளி தன்மை உடையது.. எண்ணம் சிதறு போகும் தன்மையால் வெளிச்சமாக உள்ளது.. மனம் இரண்டாக பிரிந்து இருக்கிறது..

உணர்வு என்ற ஒளியால் மேல் நிலை பூதங்களான காற்று, ஆகாயம் புலப்படுகிறது..

நினைத்தல் என்ற வெளிச்சத்தால் உருவ அமைப்புகளான கீழ் நிலைபூதங்களான நீர் மண் புலப்படுகிறது..

உணர்வால் மனிதன், மேல் நிலையும் நினைத்தலால் மனிதன் கீழ் நிலையும் அடைகிறான்..

இன்றைய மனிதன் நிலை என்ன ?

பூர்வீக ஜென்மங்களின் உணர்வுகளை தாங்கி நிற்கும் வல்லமை உடைய சித்தம் என்ற பூதம், இந்த பிறவியில் காலையில் உண்ட உணவின் சுவையின் உணர்வினை, மதியத்திற்குள் ஏன் இழந்து விடுகிறது..

கோவிலில் இறைவனை தொழும் போது ஏற்பட்ட பக்தி உணர்வு, கோவில் வாசலை தாண்டும் முன்பே ஏன் காணாமல் போய் விடுகிறது?

அன்பு பாசம் போன்ற உணர்வுகள் குறுகிய கால அளவிலே மறைந்து போக என்ன காரணம்?

முதியோர் இல்லங்களிலும் நடு தெருவிலும் தாய் தந்தையரை அநாதையாக விட்ட மகனின் பாச உணர்வு எப்படி காணாமல் போய் விட்டது?

வல்லமை வாய்ந்த சித்தம் எதனால் பலவீனம் அடைந்தது ?

பயன்தூய்ப்பில் நிறைவு பெறாமலே மனிதன் மீண்டும் மீண்டும் ஏன் தேடுதலையே தொழிலாக கொண்டுள்ளான் ?

இறைவனே நேரில் காட்சி அளித்தாலும் அவனால் உணர்வில் ஏன் நிறைவு கொள்ள முடியாத நிலையில் உள்ளான்?

சொர்க்கமே கிடைத்தாலும் அதனுடைய அனுபவ உணர்வுகள் விரைவில் தொலைத்து விட்டு சொர்க்கமே கசந்து போகும் நிலை ஏன் அடைகிறான் ?

எந்த சுகத்தையும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் அனுபவிக்கும் தகுதியை ஏன் இழக்கிறான்?

இந்த பிரபஞ்சத்தில் எந்த அற்புதம் கிடைத்தாலும் அது மனிதனின் மன நிலையில் விரைவில் அது தன் மகத்துவத்தை ஏன் இழந்து விடுகிறது?

நினைவு பதிவுகளமான கலங்கிய சித்தத்தில் எந்த உணர்வும் நிலைப்பதில்லை.. அது வெளிச்சமாக இருப்பதால் பெற்ற உணர்வை வெளிச்சமாக விரையம் செய்கிறது.. அதுவே காரணம்...

அப்படி விரையம் செய்யாமல் தடுத்து, சித்தத்தை கனலால் நிரப்பும் பயிற்சியான கனல் தீட்சை நயன தீட்சை திருவடி தீட்சை என பயிற்சிகளை பயின்றார்கள் நம் சித்தர் பெருமக்கள்..

இந்த மூன்றும் ஒன்றே.. வெளிச்சத்தை எவ்வாறு தடுப்பது, கனலால் உணர்வால் எப்படி நிரப்புவது என்பதை வரும் பகுதிகளில் காணலாம்... சித்தர் ஆவதில் சிரமம் ஒன்றும் இல்லை...

ஆர்கே நகர் ஆஃபிசில் சித்தி புகைப்படம் இருக்கின்றது, நேற்று கூட எனது மனைவி சிறைக்கு போய் அவரை பார்த்து விட்டு வந்தார்...


சசிகலா புகைப்படத்தை ஏன் பயன்படுத்த வில்லை என்ற கேள்விக்கு தினகரன் பதில்...

அமானுஷ்ய உண்மைகள்... தற்கொலை செய்ய தூண்டும் பாடல்.. யாரும் முயற்சிக்க வேண்டாம்...


ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து...


தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..