17/07/2018
வெள்ளையன் வெளியேறினால்.. விஞ்ஞானம் வெளியேறிவிடும்.. திமுக தெலுங்கர் அண்ணாதுரை...
1942ல் காந்தி.. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி.. செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள் என்றார்.
அப்போது அண்ணா, என்ன சொன்னார்..
தம்பி (கருணாநிதி) காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.
இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை.
வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும்.
கார் ஓடாது,
பஸ் ஓடாது,
ரயில் ஓடாது,
தந்தி கூட இருக்காது,
ஏரொப்ளேன் இருக்காது.
ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது என்றார்.
இவர் அறிஞராம்? ப்ப்ப்ப்பா அடிக்கிற வெயிலில் கறுப்புச்சட்டை போடும் திராவிட பகுத்தறிவு...
24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்...
உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
பல நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து.
இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.
இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.
இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.
இந்த மருந்தை உபயோகித்த சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.
பிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து பேசிய QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.
மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்...
உங்களுக்குத் தெரியுமா.? உயிரினங்களில் சில வியப்பு...
பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது.
கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.
நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
பெண் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்ட உடனே இறந்துவிடும்.
உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.
நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று இருக்காது.
உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரியது நீலத்திமிங்கலம். இதன் உடம்பிலிருந்து 120 பேரல்கள் வரை எண்ணெய் எடுக்கிறார்கள்.
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட்டிருப்பது இந்திய காண்டாமிருகம்....
தமிழகத்தை அழிக்க மாவட்டத்திற்கொரு நாகசார திட்டம்...
வேலூர் - தோல் தொழிற்சாலைகள்..
காஞ்சிபுரம் - அணுவுலை..
நீலகிரி - யூகலிப்டஸ் மரங்களின் பெருக்கம்..
அரியலூர் - சிமெண்ட் ஆலை..
மதுரை - கிரானைட் கொள்ளை..
தேனி - நியூட்ரினோ..
டெல்டா மாவடங்கள் - ஹைட்ரோகார்பன்..
தூத்துக்குடி - ஸ்டெர்லைட்..
கன்னியாகுமரி - இனையம் துறைமுகம்..
சேலம் மற்றும் சென்னை - 8 வழிச் சாலை....
சுற்றுச் சூழலை பாதிக்கும் பல பிரச்சனைகள் அந்த வரைபடத்தில் இடம்பெறவில்லை.
அதில் விடுபட்டவை கீழே...
1. மீத்தேன், ஹட்ரோகார்பன் திட்டம் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வரை திட்டமிடப்பட்டுள்ளது.
2. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் கோவை மாவட்டம் பாலக்காடு முடிய உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வளங்களை அழித்தல், வனவிலங்களுக்கு துன்புறுத்தல்
3. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை.
4. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவு.
5. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் மணல் கொள்ளை.
6. நாமக்கல் மாவட்டம் சித்தாம்பூண்டியில் பிளாட்டினம் உருக்கி எடுத்தல்.
7. திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்.
8. பாலக்காடு, செங்கோட்டை போன்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் நச்சுக் கழிவுகளை குப்பை, குப்பையாக்கொட்டுவது.
9. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் கெயில் குழாய் பதிப்புகள்.
(இதே போல திருவள்ளூரில் இருந்து மதுரை வரையும்,
கடலூரில் இருந்து சேலம் வரையும் திட்டமிடப்பட்டுள்ளது)
10. தமிழகத்தின் நீராதாரங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகள்.
11. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் சுற்றுச் சூழல் பாதிப்புகள்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி: தாமதமானால் ரூ. 1000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வருமான வரித் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு...
வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.
தாமதக் கட்டணம்: வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராதக் கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.
மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.
நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்: வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் செயல்படும் வருமான வரி அலுவலகத்தில் முன் தயாரிப்பு கவுன்ட்டர்கள் செயல்படும். இந்த கவுன்ட்டர்கள் வரும் திங்கள்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது...
இறந்தவரும்.. அவர் நினைவும்...
இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம்.
நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன. பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் பற்றிய நினைவுடன் நாம் இருப்பதால் அடிக்கடி அவரைப் பற்றிய கனவுகள் தோன்றுவது இயல்பு. அதே நேரத்தில் இறந்தவர் நமது மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி தனது எண்ணங்களை கனவுகள் மூலம் வெளிப்படுத்தவது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்.
இறந்தவர்களை அன்புடன் நினைப்பதும் அவர்களுக்கு மறுவுலகில் நற்கதி கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுவதும் அதற்கான கிரியைகள், சடங்குகள் செய்வதும் இறந்தவரின் சூட்சும சரீரத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இறந்தவர்களை நினைந்து நினைந்து அழுது புலம்புவதால் அவர்களின் சூட்சும சரீரங்களில் பாதகமான அதிர்வுகள் ஏற்பட்டு அவர்களுக்கு அமைதியின்மை உண்டாகும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். இறந்தவருக்கு நாம் மட்டும் தான் உறவினர்கள் நண்பர்கள் என்று நினைத்து விடுகின்றோம். மறு உலகில் நம்மைப் போலவே அவர் மீது அன்பு கொண்ட முற்பிறப்புத் தொடர்புகளாக நிறையப் பேர் இருப்பார்கள். இவ்வுலகிலகிலும் நாம் அறியாமலே பலர் இருப்பார்கள். சில மனிதரை நாம் சந்திக்கும் பொழுது அவர்கள் மீது காந்தக் கவர்ச்சி ஏற்படுவதற்கு முற்பிறப்பின் தொடர்பும் ஒரு காரணம்.
இறக்கும் பொழுது நாம் எப்படிப்பட்ட குணாம்சங்களுடன் மனநிலையுடன் வாழ்ந்தோமோ அவைகளின் பிரதிபலிப்பாகவே நமது மறு உலகம் அமைகின்றது. நாம் இறந்த பின் வாழ வேண்டிய வாழ்க்கைக்கு நாம் இங்கிருந்து கொண்டே வித்திடுகிறோம். இங்கு நாம் வாழும் பொழுது நமது சிந்தனைகள், செயல்கள், நோக்கங்கள் எல்லாம் தூய்மை உடையவையாக இருப்பின் மறு உலகம் இன்பகரமானதாக அமையும்.
அண்டத்தில் நிகழ்வுகள் அனைத்தும் பலவித சலனங்களுக்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரியதான அதிர்வுகள் (சலனங்கள்) உண்டு. அவனுடைய முற்பிறப்புக் கர்மவினைகள், சிந்தனைகள், செயல்களுக்கேற்ப அவனுடைய சலனங்கள் உருவகம் அடைகின்றன. எனவே, அவனுடைய ஆத்மா உடலை விட்டுச் செல்லும் பொழுது தனக்கே உரியதான சலனங்களுடனேயே செல்கின்றன.
மறு உலகைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருப்பது இயல்பு. ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்தே அவரவருடைய மறுவுலக அனுபவங்கள் அமையும். மரணத்தின் மர்மங்களைப் பூரணமாக ஆய்வு செய்ய எவராலும் இயலாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட முயற்சி இது.
எவ்வாறாயினும் எல்லா ஆய்வுகளிலும் அடிப்படைக் கருத்துக்களில் ஒற்றுமை காணப்படுகிறது. நாம் இறந்தபின் நமது ஆத்மா ஒரு சூட்சும தளத்தில் சஞ்சரிக்கின்றது. நாம் இவ்வுலகில் எத்தகைய குணாம்சங்களை உடையவர்களாக இருந்தோமோ அதற்கேற்பவே நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. நமது விருப்பு வெறுப்புக்களுக்குத் தொடர்பிசைவாக மறுபடியும் நாம் இவ்வுலகில் வந்து பிறக்கிறோம். இத்தத்துவங்கள் பெரும்பான்மையான ஆய்வுகளுக்கு அடிப்படையாக உள்ளன...
தமிழீழ கருத்தியல் பாடம்...
நான்காம்கட்ட தமிழீழப்போரில் தோற்போம் என்று புலிகளுக்கு முன்பே தெரியும்.. அதோடு புலிகள் தங்கள் பெரும்பான்மையான பலத்தை கிளிநொச்சிக்கு பிறகு எங்கும் காண்பிக்கவே இல்லை..
அது ஏன்..? என்ற கேள்வியைத்தான் உலக இராணுவங்களும், உளவுத்துறைகளும் இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கின்றன..
அதற்காக பதில்கள் அடுத்த வார தமிழீழ பதிவுகளில்...........
130-க்கும் மேலான விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையின் பிரதிகள் உவனில் இருந்தே வெளிவரும்...
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சம் கன அடி நீர் திறப்பு...
கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருவதால் தமிழகத்துக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சிப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்), கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்புக் கருதி தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயர்ந்தது.
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 7-ஆவது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரங்களில் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 83.20 அடியாக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
இஞ்சி ஒரு அற்புதமான மருந்து...
இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.
இஞ்சி மருத்துவம்...
இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?
காலை நோய் மற்றும் எரிச்சல்...
இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.
நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.
மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்...
மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.
தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்...
குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.
வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா...
வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்...
பிரபஞ்சத்தால் அதிசயம் நடக்கும்...
உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்..
விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.
அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.
நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.
உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்.
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்.
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...
வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்...
இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.
காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும்.
வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து 1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் - உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.
முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.
வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.
இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.
வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.
கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.
வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.
பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.
வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்...
நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?
தமிழருக்கு மொழிப்பற்று இல்லை என்போருக்கு இந்த பதிவு...
1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது.
1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது.
1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்).
1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது.
1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டு வந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா.ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார்.
1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன்.
1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.
1990களில் மின்னஞ்சல் காலம் தொடங்கியது.
1995ல் ஆஸ்திரேலியாவில் பாலா பிள்ளை என்பவர் முதல் தமிழ் இணையதள (மின்மடல்) குழுவை உருவாக்கினார்.
இன்று இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து மொழிகளில் தமிழும் ஒன்று.
இது சில தனிப்பட்ட தமிழரின் முயற்சி.
இனி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் செயல்பாட்டைப் பார்ப்போம்...
2000களில் கைபேசிகளின் காலம் தொடங்குகிறது.கைபேசிகளில் தமிழ் எழுத்துரு காட்டும் தொழில்நுட்பம் வரவில்லை.
இந்த நிலையில் தமிழ்மக்களின் செயல்பாட்டை, முதன்முதலில் கைபேசிகளில் தமிழைக் கொண்டு வந்த ஓபரா நிறுவனத் தலைவர் அளித்த பேட்டியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இணைய வசதி கொண்ட ‘ஓபரா மினி’யை அறிமுகப்படுத்திய போது.. தமிழர்கள் பல முனைகளில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டார்கள்.
இந்தியா, இலங்கை மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.
தமிழ் மொழியை தங்கள் அலைபேசிகளில் சரியாக பார்க்க முடியவில்லை, ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கை..
OBML என்ற வசதியை கொடுத்தோம்.
நன்றி சொல்லி வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு பதில் கடிதம் அனுப்ப ஒருவரை தனியாக நியமித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மற்ற எல்லா மொழிகளை விட யுனிகோடு வசதியை முதன் முதலில் பெற்றது தமிழ் மொழிதான்.
தமிழர்கள் தங்களுடைய மொழி மீதும்,
அந்த மொழியை நவீன ஊடகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மெனக்கெடுவதையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழக அரசு தரப்பில் இருந்து எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
அழைத்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்..
அதாவது தமிழ்மொழி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.தமிழனம் தான் வாழ வழியில்லாமல் போய்விட்டது.
மொழியை வாழவைக்க இனம் வலிமையாக இருக்க வேண்டும்.
இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.
1991ல் பிப்ரவரி 21ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஐ.நா அறிவித்தது.
இது எதனால் என்றால் 1952ல் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) உருது மொழித் திணிப்பை எதிர்த்து நடத்திய பெரிய போராட்டத்தில் பிப்ரவரி 21 அன்று 11 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆனால் தமிழினம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 1939லேயே இரு மரணங்களையும்.. 1965ல் கிட்டத்தட்ட 300 மரணங்களையும் சந்தித்துள்ளது.
1982ல் கூட கர்நாடக மாநிலம் ஆக்கிரமித்துள்ள தமிழர் பகுதிகளில் தமிழ் கல்விக்காகப் போராடிய 19 தமிழர்கள் கர்நாடகா அரசால் கொல்லப்பட்டனர்.
உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்திய முதல் இனம் தாய்மொழிக்காக இத்தனை உயிர் இழப்புகளை சந்தித்த முதல் இனம் நாம் தான்.
அதற்கான அங்கீகாரம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் வங்காளியிடம் ஒரு நாடு இருந்தது. அதனால் ஐ.நா வரை குரல் எழுப்ப முடிகிறது.
இந்தியாவில் ஒட்டுக் குடித்தனம் போடும் நம்மால் என்ன செய்ய முடியும்?
அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம் பேர் பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் தோற்றுவித்தது யார்?
கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்றுவித்தாராம்.
இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனிமலைக்கு திரும்பினாராம்...
2880 - ம் ஆண்டு மார்ச் 16 - ம் தேதி பூமிக்கு இறுதி நாள்...
உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர், இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுப்பட்டார். ‘கடவுளை’ 99.999% கண்டு பிடித்து விட்டார்கள்!, ‘கடவுள்’ இருப்பது உண்மை தான்!! பிரையன் காக்ஸ் பிபிசியுடன் இணைந்து உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக மிக எளிதாக மக்களுக்குப் புரிய வைப்பதில் கில்லாடி.
இவரது Wonders of Life, Wonders of the Universe, Wonders of the Solar System போன்ற டாகுமெண்டரிகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம். முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் இந்த சிடிக்களை ஆன்லைனில் வாங்கியாவது பாருங்கள். இவை வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள் என்பதே நிஜம்.
இந்த பிரையன் காக்ஸ் இப்போது ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் சொல்வது இது தான். பூமியையும் மனித குலத்தையும் எந்த நேரத்திலும் மொத்தமாக காலி செய்யப் போவது ஒரு விண் கல் தான் என்கிறார்.
சமீபத்தில் பூமியை ஒரு பெரிய விண் கல் மிகச் சமீபத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தக் கல் பூமியின் மீது மோதியிருந்தால் இப்போது இதை எழுத நானோ, படிக்க நீங்களோ இருந்திருக்க சாத்தியமில்லை. பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும். இதே போன்ற விண் கல் எந்த நேரத்திலும் பூமியைத் தாக்கலாம் என்று கூறும் காக்ஸ், இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மிக மந்தமான வேகத்தில் நடந்து வருவது ஆச்சரியம் தருவதாகவும், இந்த ஆபத்தை உலக நாடுகள் சரியாக உணரவில்லை என்றும் எச்சரித்துள்ளார்.
பூமிக்கு மிக ஆபத்தானவை என்று கிட்டத்தட்ட 1,400 விண் கற்களை நாஸா அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், இன்னும் எத்தனை கற்களோ.. யாருக்குத் தெரியும். இது வரை நாம் தப்பிப் பிழைத்திருப்பது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகத்தான். எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்தே இந்த ஆபத்துகளை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும் என்று தெரிந்திருந்தும் இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. விண் கற்களை அணு ஆயுதங்களைக் கொண்டு தகர்க்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சாத்தியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடங்கக் கூட இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் ஒரு மாபெரும் விண்கல் வந்து விழுந்து வெடித்தது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல 20, 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
அந்தக் கல் பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது கூட நமக்குத் தெரியாது. அது பூமிக்குள் வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம். ஆனால், நிலைமையே புரியாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றன என்கிறார் காக்ஸ். இதற்கிடையே நாஸா மிகக் கவலையுடன் கண்காணித்து வரும் விண் கல் 1950 DA தான். கிட்டத்தட்ட 1 கி.மீ. விட்டம் கொண்ட இந்த விண்கல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்ல் ஏ. விர்டனென் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 17 நாட்கள் மட்டுமே அப்போது இதை கண்காணிக்க முடிந்தது. பின்னர் இது மறைந்துபோனது. ஆனால், 2000ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இது விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் புலப்பட்டது.
2001ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இந்தக் கல் பூமிக்கு 7,789,950 கி.மீ. அருகே வந்துவிட்டுப் போனது. அப்போது இதை ஆராய்ந்தபோது இந்தக் கல் மிக வேகமாக சுழல்வதும், இரும்பு, நிக்கல் போன்ற ரசாயனங்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது. இந்த அதிவேகமாக சுழற்சி காரணமாக இந்தக் கல் தானாகவே உடைந்து சிதறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை இது உடையவில்லை. வினாடிக்கு 15 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் இந்த எரிகல் பூமியில் 2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அட்லாண்டிக் கடலுக்குள் மணிக்கு 60,000 கி.மீ. வேகத்தில் வந்து விழ வாய்ப்புண்டு.
இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பூமி வெறும் திட சாம்பலாகவே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் பூமியை நோக்கிய இந்தக் கல்லின் பயண திசை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை உறுதி செய்கின்றன. இது தான் இப்போதைக்கு நமக்கு உள்ள ஒரே ஆறுதல்...
தமிழீழ கருத்தியல் பாடம்...
உலகின் அனைத்து வளங்களையும் கொண்ட தலைசிறந்த இடமான திரிகோணமலை என்ற ஒன்றுக்காக தான் தமிழீழம் அழிக்கப்பட்டது என்பது தான் நிதர்சனம்..
அதன் பிறகு பல அரசியல் சூழ்ச்சிகள் கட்டமைக்கப்பட்டது..
அந்த சூழ்ச்சிகள் கட்டமைத்ததின் அடித்தளம் இந்திய பெருங்கடலில் பூகோள அரசியலில் அதிமுக்கியமான தமிழீழமும் - தமிழ்நாடும் தான்...
ஏலியன்களோடு தொடர்பில் இருந்த ஆதித்தமிழர்கள்..? : அதிர்ந்து போன அமெரிக்க ஆய்வாளர்கள்...
உலகத்திலேயே மூத்த மொழி தமிழ், மூத்த குடி தமிழ்க்குடி. அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ...
பிலேடியன் (Pleaidians) என்னும் வேற்றுகிரக வாசிகள் பூமியோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் குழுவினர் நம்புகின்றனர்.
இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.
உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது.
மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.
மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்றும் சொல்கின்றனர்.
உலகில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வையும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது.
இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்பதில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்களை அறிந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகளும் வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில், 1995 ஆம் ஆண்டு இந்த பிலேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில், திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.
தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.
உலக மொழிகளில் எல்லாம் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழர்களுடன் வேற்றுகிரக வாசிகள் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை உறுதியாக கூறுகின்றார்.
நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்.
அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக, அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.
இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ...
1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.
2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.
3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.
4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் எ.கா: செப்பு (தெலுங்கு), தா (இலத்தின்).
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை).
6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.
7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறிதுமாக ஒத்திருத்தல்.
8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.
9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொoழி உலகத்தில் இல்லாமை.
10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.
11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.
12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்து கொண்டிருத்தல். [எ.கா: இல் தெலுங்கு), மனை (கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்).
13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன.
இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும், முடிவும் ஆகும்...
Subscribe to:
Posts (Atom)