02/11/2017

புறப்பட்டார் சகாயம் ஐஏஎஸ் , சேலத்தில் மாபேரும் மாநாடு, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கு மக்கள் பாதை அழைப்பு...


சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோடிக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி லஞ்ச ஊழலுக்கு எதிராக களத்தில் இறங்குவேன் என சகாயம் அவர்கள் பேசியது குறிப்பிடதக்கது.

சகாயம் அவர்கள் நடத்தி வரும் மக்கள் பாதை இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.

அரசியல்வாதிகளிடையே இந்த அறிவிப்பு பீதியை கிளப்பியுள்ளது குறிப்பிடதக்கது...

ஊழைலை எதிர்த்தவர் பல்வேறு பிரிவுகளில் அதிகாலையில் திடீர் கைது சிறையில் அடைப்பு - அதிமுக பாஜக வின் அடக்குமுறை...


சர்க்கரை நோய் குறைய வெந்தயம்...


வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்  தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.

வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக
வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில்
உள்ளது.

வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய
இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது.

வயிற்றுப் போக்கை குணமடைய
செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை
வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.

வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக
நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்து விட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது.

வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு
அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட  விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

இவைகளை தயார் செய்யும் போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

வெந்தயம் எடுத்துக் கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்று போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது  அதிகமாக காணப்படும்.

வெந்தயத்தை உணவாக பயன் படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்..

இப்படி பயன்படுத்தும் போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்..

இயற்கையாய் இயற்கையோடு வாழ.. இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..

ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்.. மனிதநேய விதைகளாய் மாறுவோம்...

ஏன் தேவை தனித் தமிழ்நாடு...


வைரம் பற்றிய நாம் அறியா சில தகவல்....


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன..

ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது..

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது..

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர்..

இந்தியாவிலிருந்து தான் வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது..

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது..

வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும்.

வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது.

இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்..

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்..

இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட் (Carat) முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்படுகிறது.

இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.

இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்...

அதாவது 5 காரட் 1 கிராம் எடை..

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும்.

ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். 
10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்...

நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது.

அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும்.

அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும்.

அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது..

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள்.

இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார்.

இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங்..

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

வெள்ளை (நிறமற்றது),
மஞ்சள்,
பழுப்பு நிற (brown),
சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை,
செம்மஞ்சள் நிறமான (orange),
இளஞ்சிவப்பு (pink),
நீலம்,
வெளிர்பச்சை,
ஊதா வர்ணம் (violet)

வர்ணங்களில் கிடைக்கிறது.. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது..

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது..

இதன் எடை 105.80 காரட்கள்..

இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது...

எல்லாம் இருந்தும் பயன்படுத்த தெரியாமல் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்...


திராவிடமும் தமிழின அழிப்பும்...


1956 மொழிவழி மாநிலமாக சென்னை மாகாணத்தைப் பிரித்தார்கள். அப்போது தமிழர்கள் அதிகமாக வாழும் திருப்பதி தமிழ்நாட்டுடன் இணையவேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.போ சி போராட்டங்கள் நடத்தினார் . திருப்பதியும்  தமிழ்நாட்டுடன் சேருவதாகத்தான்  இருந்தது.

அந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற கட்சி உருவாகி எட்டு ஆண்டுகள்  தொட்டிருந்தது. திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருந்த கன்னட தெலுங்கன் இராமசாமி நாயக்கனுக்கு திருப்பதி தமிழ்நாட்டுடன் இணைவதில் ஆத்திரம்  இருந்தது. திருப்பதி ஆந்திராவுக்குத்தான் சேரவேண்டும் என்று அவன் திட்டமிட்டிருந்தான். 

அதே நேரம் தமிழ்நாடும் ஆந்திராவும்  திருப்பதியைப் பெற  மோதிக்கொண்டு இருந்த வேளையில்   தமிழகம் வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஆந்திர போராட்டக்காரர்களுக்கு ஒரு தாக்கீது போனது. அனுப்பினவன் தெலுங்கன் ராமசாமி நாயக்கன். அதில், திருப்பதிக்காக மட்டும் நீங்கள் போராடாதீர்கள். தோற்றுப்  போவீர்கள்.  திருப்பதியோடு சென்னையையும்  ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி  போராட்டங்கள் செய்யுங்கள். தமிழர்கள் மிரண்டுப் போவார்கள். சென்னையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பதியை ஆந்திராவுக்கு கொடுக்க முன்வந்து விடுவார்கள்  அபப்டி ஒரு நெருக்கடி கொடுங்கள். நான் உங்களுக்கு உறுதுணையாக இங்கிருந்து வேலை செய்கிறேன், தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப் போக செய்கிறேன்   என்று தாக்கீது அனுப்பினான்.

அநத்த் தாக்கீதைக் கண்டு உற்சாகம் அடைந்த ஆந்திரா போராட்டக்காரர்கள், ' சென்னையையும், ஆந்திராவோடு இணைக்கவேண்டும். என்று தங்கள் போராட்டத்தை விஸ்தரித்துக் கொண்டார்கள். 'மெட்ராஸ் மனதே'என்று பெயர் சூட்டி சென்னையையும் தங்களுடன் இணைக்கக்கோரி கலவரங்களை நடத்தினார்கள்.

சென்னை மாகாணம் மூன்று புறமும் துண்டாடப்பட்டது.  ராமசாமி நாயக்கன் பெங்களூருவை, கோலார் தங்கவயலை கர்நாடகாவுடன்  சேர்த்துக்கொள்ள கன்னடர்களைத் தூண்டி விட்டான்.  இடுக்கி மாவட்டத்தை,  பீர்மேட்டை, தேவிகுளத்தை, மூணாறை பெற்றுக்கொள்ள மலையாளிகளைத் தூண்டி விட்டான். இந்த நேரத்தில் தமிழ்நாட்டைக்  காக்க போராடி இருக்கவேண்டிய திராவிட முன்னேற்றக கழகத்தினரை அழைத்து,  தமிழருக்காய், மலையாளிக்காய் , கன்னடருக்காய் , தெலுங்கருக்காய்,  இல்லாத  'திராவிட நாடு ' கேட்டு போராடுமாறு தூண்டி விட்டான். அவர்களும் சிரத்தையாய் திராவிட நாடு கேட்டு போராட்டம் செய்தார்கள்  தமிழன் தாகத்துக்கு அலைந்துக்கொண்டு இருந்த வேளையில் கானல் நீரை காட்டி, அவனை மயக்கமுறச் செய்தார்கள்.   தேவடியாள்  மகன்கள். இவர்களின் புரட்டல் தமிழகம் தனது பெரும்பாலான பகுதிகளை திராவிட மலையாளிகளிடம், திராவிட கன்னடர்களிடம்   இழந்தது.

திருப்பதி போராட்டம் சென்னையையும் கேட்டு பெரும் கலவரமாய் வெடித்தது. மத்திய அரசில் இருந்த மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ஒன்று சேர்ந்துக் கொண்டார்கள். திராவிட முன்னேற்றக கழகமோ தீவிர தேவடியாத்தனம்  செய்து கொண்டு இருந்தது. மிரண்டு போன தமிழக போராட்டக்காரர்கள் கூடி, திருப்பதியைக் கேட்பதை விட சென்னையையாவது நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். திருப்பதியை ஆந்திராவுக்கு விட்டுக்கொடுக்க இசைந்தார்கள்.

இப்படித்தான் திராவிடர்களின் துரோகத்தால் தான் தமிழகம் திருப்பதியை இழந்தது. இல்லையேல் திருப்பதி  நம்முடையதாக இருந்து  இருக்கும். தமிழர் தாயக நாளை திமுகவினர்  கொண்டாட மாட்டார்கள். ஏனெனில்  அவர்களின் துரோகம் தெரிந்து விடுமே...

117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்...


1) பொன்மேனி தரும் குப்பைமேனி - குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு - பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் - நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு -  கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு - காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி - மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் - கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும் - கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம் - ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது - புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு - பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி - மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி - நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு - அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு - கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு - பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல - ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு - உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு - மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க - கீரை கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர - எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை - புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர் - கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக - புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல் - 5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன் - புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு - முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ - துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி - மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர - வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு - மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு - பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு - மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க - கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர - கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு - வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம் - அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ - வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை - ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது - இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல் - இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர - தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர - இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர - இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு - நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு - அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு - நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய - முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு - இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற - தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க - நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய - சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு - பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக - சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு - மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக - வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக - கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க - சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு - கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு - சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு - வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர - எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்.

65) சகல விஷத்திற்கும் நசியம் - குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம் - கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக - ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல் - இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக - சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி - மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய - கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய - வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய - சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு - கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க - குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு - வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக - நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு - பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர - வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு - கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு - மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக - வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக - சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக - அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக - வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய - வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட - வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க - பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய - தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய - மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு - வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க - மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க - தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய - அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க - அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம் - நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல - ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி - தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி - ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு - சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல் - நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம் - சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு -கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம் - ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண் - மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை - வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி - வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல் - செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி - மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு - கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு - சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய் - கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல் - வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம் - கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண் - வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு - ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல் - எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள்...


தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார், பெங்களூரூ, மைசூரின் பகுதிகளில், வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer...

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்...


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

இளநீர் நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...


ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.

இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.

இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.

வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும்.

விந்துவை அதிகரிக்கும்.

குடல் புழுக்களை அழிக்கிறது.

பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 48...


உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்...

ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவை எல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)

தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.

இனி உயர் உணர்வு நிலைக்குச் செல்ல ராஜ யோகிகள் சொல்லும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

பெலூசியும் போர் (Battle of Pelusium)...


எகிப்தியர்கள் பூனையை மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகவும் அது தங்களை பாது்காப்பதாகவும் எண்ணினர்.

எகிப்தில் பூனைகளுக்கு கோவில்களும் உண்டு அதை அவர்கள் கடவுளாக வணங்கினர்.

இதை புரிந்துகொண்ட பாரசீகர்கள் பெலூசியும் நகரத்தின் மீது போர் தொடுத்தபோது தங்களது கேடயத்தில் பூனைகளை கட்டிக்கொண்டு போரிட்டனர்.

பூனைகளை புனிதமாக எண்ணிய எகிப்தியர்கள் எதிர்தாக்குதல் செய்ய திண்டாடினர் இதனால் எகிப்தியர்கள் போரில் தோற்க்கடிககபட்டனர்.

இந்த போரில் பூனை ஒரு திருப்பு முனையாக அமைந்தது...

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள் பெய்த கனமழையில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இறந்துள்ளனர்...


காட்டுமன்னார்கோயில், கீழபருத்திகுடி, எடையார், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன...

இனிமேல் எவனாவது போலி ஸ்டிக்கர் ஒட்டுவீங்க?


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆம்னி வேன் ஒன்றில் "PRESS" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுருந்ததை கண்டறிந்த பத்திரிக்கையாளர்கள் அது  குறித்து ஆம்னி வேன் ஓட்டுனரிடம் விசாரித்ததில் அவர் எந்த பத்திரிக்கை துறையிலும் வேலை செய்யவில்லை என்பதை கண்டறிந்தனர்.

மேலும் விசாரித்ததில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டீ கடைகளில் கடலை மிட்டாய், பிஸ்கட்கள், நொறுக்கு தீணிகளை சப்ளை செய்ய வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதையடுத்து பத்திரிகையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் ஆம்னி வேனில் இருந்த "PRESS" ஸ்டிக்கர் போலீசாரின் முன்னிலையில்  அகற்றப்பட்டது.

போலீசார் இது போன்ற சோதனைகளை முறையாக மேற்கொண்டால் பல போலி நிருபர்கள் பிடிபடுவார்கள். போலி  பத்திரிக்கையாளர்கள் பலபேர்  ஊரில் சர்வ சாதாரணமாக சுற்றித்திருகிறார்கள்.

போலி நிருபர்களை களை எடுக்க போலீசாரிடம் பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடி மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது...


சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது.

இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.

குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்.

எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது.

2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டு பிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்.

(Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.


கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்...

பண்டார வன்னியன்...


தாய் மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதி வரை போராடி வீர மரணம் அடைந்த வன்னி மண்ணின் இறுதி மன்னன்  மாவீரன் பண்டார வன்னியன்...

ஆகஸ்ட் 25 ஆம் நாள்..

மன்னனின் நினைவு நாளாக நினைவு கூரப்படுகிறது..

அடங்கா மண்ணின் வணங்கா முடி மன்னன் அவனது முழுப்பெயர்
குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்..

பெரிய மெய்யனார், கயிலாய வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள்.

காதலுக்கு உரியவளாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதை ஒருத்தியும் இருந்திருக்கிறாள்.

பண்டாரக வன்னியனும், அச் சமயம் கண்டி மண்ணை அரசாட்சி செய்து கொண்டிருந்த தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

பனங்காமத்தை மையமாக வைத்து பண்டார வன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்திருக்கிறது.

போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு, அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மெய்யனாரையும் கொண்ட குழுவை அமைத்து எதிரிகள் எவருக்கும் அடங்கிப் போகாத குணமும், அன்பு பாசமும் கலந்த இரக்கத்தில் ஊறிய வீரத்தோடு ஒரு அரச நிர்வாக இயந்திரத்தை இயக்கி, பேணி மக்களைப்  பரிபாலித்து வந்தான்.

இதே நேரத்தில் வன்னி நிலத்தின் வேறொரு பகுதியை ஆண்டு வந்தான் இன்னொரு குறுநில மன்னன். அவன் பெயர் தான் காக்கை வன்னியன்..

இவன் பண்டார வன்னியனின் தங்கை நாச்சாள்ளை திருமணம் செய்ய ஆசைப்பட்டான் . ஆனால் நாச்சாள், அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டிருந்தாள்.

இவர்களின் காதல் பற்றி பண்டார வன்னியன் அறிந்த வேளை, புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதையும் அறிந்து கொள்கிறான்.

இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிடுகிறான்.

ஆனால் காக்கை வன்னியன் கடுங் கோபம் கொண்டு வெகுண்டான்.  தன் ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க, அறம் சாராத தன் வீரத்தால் முடியாத நிலையில் சதி செய்து பண்டார வன்னியனை தோற்கடிக்க திட்டமிட்டான்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கி.பி. 1796ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமாகின்றது.

ஆங்கிலேயர்கள் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியங்களை இலகுவாக கைப்பற்றிக் கொண்டனர்.

டச்சுக்காரர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர்.

குறுநில மன்னர்களை அடக்கி அடாவடிகளில் ஈடுபட்டு வட்டி, வரி, கிஸ்டி என்று வசூல் வேட்டை நடத்தினார்கள், அடிமை - துரைத்னங்களை அரங்கேற்றினார்கள்..

வன்னியிலும் வசூலிப்பை ஆரம்பிக்கும் நோக்கில், பண்டார வன்னியனிடமும் அவன் குடிமக்களிடம் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் பின்னர் 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை அனுப்பினார்கள் . மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டு அடாவடிகளில் ஈடுபடுவதால் பண்டார வன்னியன் கோபம் கொண்டான் எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளைக்காரர்கள் பண்டாரக வன்னியன் மீது போர் தொடுத்தனர்.

முள்ளியவளை, கற்பூரப்புலவெளி என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின.

பண்டாரக வன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

வன்னி மறவர் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது

தாய் மண் மீது அடங்காப் பற்றுக் கொண்ட பண்டார வன்னியன் அடிமைத் தனத்துக்கு அடங்க மறுத்தான், ஆவேசமாக போரிட்டான்.

தாய் மண்ணில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி பண்டார வன்னியன் தாக்கி அப்படைத் தளத்தை நிர்மூலமாக்கியுள்ளான்.

அந்நேரம் காப்டன் ரிபேக் தலைமையில் கோட்டைப் பாதுகாப்பில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரக வன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்துள்ளது.

இதன் பின்னர் வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியிருக்கிறது.

இத் தாக்குதலில் பண்டார வன்னியன் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிச் சென்றிருக்கிறான்.

இவ்வாறான பண்டார வன்னியனின் சில செயல்கள், சம்பவங்களுக்கான நிரூபண வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகிறது.

பண்டார வன்னியன் தொடர்ந்து மேலும் பல பாரிய படையெடுப்புக்களை மேற்கொண்டு வடபகுதி வன்னி முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்ததுடன் முல்லைத் தீவையும் கைப்பற்றினான்.

மேலும் அவனது படையினர் கொட்டியாரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.


பண்டார வன்னியன் அங்கும் சில தனது படை வீரர்களை நிலை கொள்ளச் செய்தான். இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு கற்சிலை மடுவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இச் செய்தியை காக்கை வன்னியனின் ஒற்று தகவல்கள் மூலம் நன்கு ஊர்ஜிதம் செய்து கொண்ட ஆங்கிலேயத் தளபதி கப்டன் டிறிபேர்க்கின் தலைமையிலான ஆங்கிலப் படைகள் கி.பி. 1803ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரில் இருந்து கற்சிலைமடுவுக்கு வந்து கடுமையான தாக்குதல்களைக் தொடுத்தன.

இச் சமயம் உதவிக்கு திருகோணமலையில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஆங்கிலப் படைகள் வருவிக்கப்பட்டன.

சற்றும் எதிர்பாராத பண்டார வன்னியனும் அவன் சார்ந்த படைகளும் இதனால் அதிர்ச்சியடைந்தன.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரக வன்னியனின் படை மிகச் சிறியது.

இருப்பினும், அஞ்சாமல் வீர மரணம் என்பது வெற்றிக்கு நிகரான பரிசுதான் எனத் துணிந்து இறுதி வீரப்போரினில் விவேகம் காட்டினான்.

என்ன முயன்றும் காக்கை வன்னியனின் உளவு தகவல்களால் போரில் பண்டாரக. வன்னியன் திட்டங்கள் தோவியடைந்தன.

இதனால் போரில் படுகாயம் அடைந்தான்.

அவனுடைய வீரர்கள் போர்க்களத்தில் இருந்து பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரக வன்னியனை தூக்கிச் சென்றனர். அங்கு உயர் சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் கிடைக்கவில்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக் பண்டார வன்னியன் காயப்பட்ட இடத்தில் பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும், நடுகல் சின்னமும் வைத்து போற்றினான்.

குறிப்பிட்ட இந்த நடுகல்லில்...

இந்த இடத்தில் 1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நாளைத் தான் நீண்டகாலமாக பண்டார வன்னியனின் நினைவு நாளாக தமிழர்கள் கொண்டாடி வந்தார்கள்..

இவ்வாறு எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டார வன்னியனுடைய சிலை.

இதனாலேயே இச்சிலை அமைந்திருக்கும் பகுதி கற்சிலைமடு என்ற காரண சிறப்புப் பெயருடன் இன்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறான சிறப்புகளோடு இன்றழவில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தை வென்று நின்றிருந்த அந்த மறத்தமிழனின் நடுகல்லை தான் தற்போது சிங்கள இன மத வெறி ஓநாய்கள் உடைத்து சேதப் படுத்தியிருக்கின்றன.

பண்டார வன்னியனை போரிலே தோற்கடித்தமைக்கு கப்டன் டிறிபேர்க்கிற்கு வவுனியாவில் உள்ள பண்டாரக்குளம் பரிசாக வழங்கப்பட்டது என்ற கூடுதல் தகவல்களும் உள்ளன...

தமிழரின் மரபணு மிகவும் பழமையானது...


60,000 வருட பழமையான DNA தமிழகத்தில்..

உலகில் தோன்றிய முதல் குடிமக்கள் என்ற பெருமையை தமிழ் நாட்டில், மதுரையை அடுத்த கிராமமாகிய ஜோதிமாணிக்கத்தில் பதினைந்து பேர்களுக்கு கிடைத்திருக்கின்றது.

அதில் முதலாவதாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் திரு.விருமாண்டி என்னும் தமிழர் .

மேலும் ஆய்வு செய்தபோது, அதே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் மேலும் பதினான்கு பேர் அத்தகைய DNA வுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இன்னும் ஆய்வுக்குட்படாத ஏராளமான தமிழர்களிடத்தில் இத்தகைய DNA இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

கடல்கொண்ட மதுரையிலிருந்து இவர்கள் குடிபெயர்ந்து வந்ததால் இந்த இடத்திற்கும் மதுரை என்று பெயர் வந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். இவர்களுடைய மரபணுக்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூர்வகுடிகளுடைய மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.

“M130″ எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்...

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. “THE STORY OF INDIA” என்ற தலைப்பில் “Michael Wood ” என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று விருமாண்டியிடம் விஞ்ஞானிகள் கேட்டபோது,

இந்த உலகில் வாழும் எல்லாருக்கும் ஒரே அப்பாதான் இருக்கமுடியும். நிறமும் மொழியும்தான் மாறுபடும்" என்று கூறினார்.

(சரியாக சொன்னீர்கள், என்ன இருந்தாலும் அந்த ஒரு உலக தந்தையினுடைய DNA உங்களிடத்தில் அல்லவா இருக்கிறது?)

மேலும் பல விஞ்ஞானிகள் இவரை ஆய்வுக்கு அழைத்தபோது, தான் ஒரு அந்நியமான மனிதனாக காணப்படுவதை விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

வில்லியம் ஸ்காட் எலியாட் என்பவர் வரைந்துள்ள இலெமுரியாவின் வரைபடத்தை ஆய்வு செய்யாமல் ஆய்வாளர்கள் "மனித இனம் ஆதியில் எங்கே இருந்து எங்கே இடம் பெயர்ந்து சென்றது" என்று ஆய்வது அறியாமையிலும் அறியாமையே ஆகும்.

(எந்த காலத்தில் இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்களோ அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த உலக வரை படத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.)
 
உலகின் மிகவும் பழங்குடி மக்களுக்குரிய DNA வை உடைய மக்களின் இருப்பிடங்கள் அனைத்தும் இந்த இலேமுரியாவின் வரைபடத்தின் எல்லைகளின் ஒரு பகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் கவனிக்கவேண்டும்.

மேலும், இதில் ஆப்பிரிக்காவை சார்ந்த பகுதிகள், ஆஸ்திரேலியாவை சார்ந்த பகுதிகள் காடுகள் நிறைந்த பிரதேசமாக இருப்பதையும், அப்படி இருப்பதற்கான தட்ப வெப்ப நிலையினையே பெற்று இருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இலெமுரியாவின் மையப்பகுதியாக இருந்த இந்தியாவை ஒட்டிய தமிழர் பகுதிகளே உயரினம் உற்பத்தியாவதற்கு உரிய தட்பவெப்ப நிலையை கொண்டுள்ளதை ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பிற வரலாற்று ஆதாரங்களையும், தமிழர் நூல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது உலகில் 'ஜலபிரளயம்' (பைபிளில் கூறப்படுகின்ற உலகப்பேரழிவு) வருவதற்கு முன்னதாகவே இங்கு நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்துள்ளனர்.

(பைபிளில் "வெறும் கட்டுக்கதைகள் -பரிசுத்த ஆவியினால் உரைக்கப்பட்டவை அல்ல"- என்று நீக்கப்பட்ட பகுதிகளிலும் கூட இந்த இலெமுரியா கண்டத்தை பற்றிய வரலாறு இருக்கும் என்று கருதி சமீபகால ஆய்வாளர்கள் அவற்றை தேடிக் கண்டு பிடித்து ஆய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)

உலகிற்கே மூதாதையர்களாக இருந்த தமிழர்களைப் பற்றி உலகறியச் செய்வதன் மூலமாக மனித இனத்தின் வரலாறு இனிமேலாவது வெளிச்சத்திற்கு வரும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை...

சிதம்பர ரகசியம் - நம் தமிழ் சித்தர்களின் அதிசயம்...


சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்..

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜருக்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?

எப்படி இதை செய்தார்கள் - என்பதே பழம்பெரும் ரகசியம் தான்..

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..

அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம்..

பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன...

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...

அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது.

இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் சிவனடியார்களாகிய பதினெட்டு சித்தர்களைக் குறிப்பதாக உள்ளது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது...

சித்தர்களின் மருத்துவ ஞானம்...


பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்...

karpuram  சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று வீரம், பூரம், லிங்கம், தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை..

நாம் ஒரு முறையை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்..

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,

புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்..

சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்..

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்..

இப்பொழுது தைலம் தயார்.இது மிகவும் வீரியமான தைலம்..

உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்க வேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்..

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது..

பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம், ஈறுகளில் சீழ் வடிதல், வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது. இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்..

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.

சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப் பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்..

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்..

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது . எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்..

கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்...

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் பாஜக மத்திய அரசு வாதம்...


யாராவது பாஜக மோடியிடம் சொல்லுங்க பா.. இந்தியாவிலே அதிக குற்றவாளிகள் MLA, MP ஆக இருப்பது பாஜக வில் தான் என்று...

முடிச்சூரில் தேங்கும் மழை நீருக்கு கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம்...


2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை முடிச்சூர் பகுதியில், மழைநீர் வடிவதற்கு தற்போது வரை எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை...

அமெரிக்காவை விட கூடுதலாக வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி...


சென்னை ஓட்டேரி பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கும் காட்சி...


ரோடு புல்லா மழை நீர் தேங்கி இருக்கு. மக்கள் இப்போ சென்னை மாநகராட்சிக்கு அபராதம் போடணும்...

மழை பாதிப்பு அதிகாரிகள் நியமனம்...


நாமக்கல் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...


மேற்கூரை இடிந்து விழும் போது பயணிகள் யாரும் இல்லை என்பதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது...

வெளியாகியது புதிய ரூபாய் நோட்டுகள்...



மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ 92 உயர்வு , ஒரு சிலிண்டரின் விலை 742...



மேலும் மானிய விலையிலான சிலிண்டரின் விலை ரூ 4.5 உயர்த்தப்பட்டுள்ளது..

சென்ற மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 649 ஆக இருந்தது.

புகைப்படம் : காங்கிரஸ் ஆட்சியின் போது தற்போது உள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிதி ராணி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் காஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருடன் போராட்டம் நடத்தியது.

தற்போது இதே போன்று யாராவது போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு பெயர் அன்டி இந்தியன் , தேச விரோதிகள் என  கொந்தளிக்கின்றனர் விலை உயர்வை கேள்விபட்ட இல்லத்தரசிகள்.

ஏன் இவ்ளோ ஜிஎஸ்டி வரி கட்டனும் என பொதுமக்கள் கேட்கும் போது அரசியல்வாதிகள் சொல்லும் பதில் பிறகு எப்படி நாங்க மானியத்துல பொருட்கள் உங்களுக்கு வழங்க முடியும் பொதுமக்களுக்கு எப்படி நலத்திட்ட உதவி செய்ய முடியும் எனக் கூறுவது வழக்கம்.

அப்படி கூறும் அரசியல்வாதிகள் தான் ரேஷன் சர்க்கரை மானியத்தை சுத்தமா ரத்து பன்னிட்டாங்க , அடுத்து இப்ப கேசுக்கும் சுத்தமா ரத்த பன்றதுக்கு மாசா மாசம் விலையை உயர்த்திக் கொண்டு வருகின்றார்கள் , எல்லாத்தையும் மாத்த போறேன் மாத்த போறேன் சொன்னது ஏற்கனவே மக்களுக்கு இருந்த வசதிகளை சுத்தமா காலி பன்றது தானா என கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது...