23/08/2017
விநாயகர் ஊர்வலம் தமிழகம் வந்த கதை...
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி விநாயக சதுர்த்திக்கு தமிழகம் தயாரானதா என்று வினா எழுகையில் யோசிக்காமல் விடை வந்து விழும் இல்லையே என்று..
தமிழர்களெல்லாம் எப்போது இந்துக்களாக மாறிப்போனார்களோ அப்போதே கருப்பராயன்களையும் சுடலையாண்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விநாயகனை முன்னுக்கு அமர வைக்க ஆரம்பித்து விட்டார்கள்..
இன்று கிராமம் தோறும் விநாயக சிலைகளை நிறுவி விழா எடுக்க ஆரம்பித்து விட்டான் தமிழன்.
தமிழனின் பாரம்பரிய பண்டிகையாம் பொங்கல், அதை கொண்டாடுவதைக் காட்டிலும் சதுர்த்தியைக் கொண்டாடும் ஆவல் என்னமோ இந்த இருபது ஆண்டுகளில் தமிழனுக்கு அதிகரிக்கத் தான் செய்திருக்கிறது.
தமிழ்க் கடவுள் என்று போற்றிக் கொண்டே முருகனை புறந்தள்ளி விநாயகனை முன்னுக்கு வைக்கிறானே தமிழன்..
பாழடைந்து சிதைந்து போய் கிடக்கும் குலதெய்வத்திற்கு சிலை திறக்காத தமிழன் வருடா வருடம் விநாயகனுக்கு சிலை திறக்க முதல் வரிசையில் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
மூத்த தமிழர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவிற்கு இளைய தமிழன் முன்னவன் ஸ்தோத்திரம் முறையாகப் பாடுகிறான். மாரியம்மன்களும் பராசக்திகளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. இங்கே யார் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் தப்பில்லை.. முன்னவன் ஆகும் அளவிற்கு விநாயகனுக்கு முக்கியத்துவம் யார் தந்தது என யோசிக்கப் பார்க்கத் தோன்றுகிறது.
விநாயகன் யார்? தெய்வம் தானா? சிவபெருமானின் பிள்ளையா?பிறப்பெப்படி? பிறப்பில் சர்ச்சை இருக்கிறதே, பல கதைகளை புராணம் சொல்லுகிறதே, என நாத்திக பேசவும் விரும்பவில்லை.
விநாயகப்பெருமான் இன்று இவ்வுலகில் அவதரித்த நாள் ஆகவே இன்றைய நாளில் நாம் எல்லோரும் இந்துக்கள் என சொல்லியபடி வாருங்கள் தமிழர்களே.. சிலை தூக்கலாம்.. கடலில் சென்று கலக்கலாம் என்று நான் போற்றுவதிலும் அர்த்தமில்லை.
மராட்டியர்களின் குலதெய்வமான விநாயகன் எப்போது தமிழகம் நோக்கி வந்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னமே ஆய்வுகளை மேற்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டை காலத்தில் இப்படி ஒரு தெய்வம் இருக்கும் செய்தி தெரியாமலே தமிழன் இருந்திருக்கிறான் என்ற உணமை பதியப்பட்டிருக்கிறது. அப்படியானால் விநாயகனை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தவன் யார்? விநாயகன் தமிழகம் வந்த பின்னணி என்ன என்பதையும் முன்னோர்களின் தேடல் நமக்கு பதிலாக நிற்கிறது.
விநாயகன் என்றொரு வடிவமே கி.பி.5 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தோன்றிருக்கும் என்று தமிழர் வேதத்தில் மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார்.
அப்படியானால் 4 ம் நூற்றாண்டில் குப்த பேரரசு ஆட்சி நடத்தியது. அது முற்றிலும் இந்து மத ஆட்சி தான். அப்போது அங்கு விநாயகன் என்றொரு இந்து கடவுள் இருந்ததாக எந்தவொரு வரலாறும் இல்லை. இடைச்செருகல் தான்.
பல்லவர் காலத்தில் தான் விநாயகன் தமிழகம் வந்திருக்கிறான் என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் 'ஞான விநாயகன்' எனும் கட்டுரை வாயிலாக முனைவர். சோ.ந. கந்தசாமி சொல்கிறார்.
முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாக
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"
என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார். நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். என்றும் சொல்கிறார். திருஞான சம்பந்தர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகனை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டு வந்ததால் 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தால் விநாயகனை போற்றுவர் என்று சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராச மாணிக்கனார் தான் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் சாளுக்கியர்கள் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று. தன் தந்தையான முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவனது தலைநகரான வாதாபி சென்று அவனை வீழ்த்தி அந்நகரை தீக்கிரையாக்கி விட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டப்பெயரோடு நரசிம்ம வர்மன் வந்தான் என்பது வரலாறு.
இது நடந்தது கி.பி 642 ம் ஆண்டு. அந்த நேரத்தில் பல்லவர்களின் கண்ணுக்குப் பட்ட வித்தியாசமான உருவச்சிலைதான் யானை முகத்தோடு இருந்த விநாயகச் சிலை. அதை தமிழகம் கொண்டு வந்திருக்கலாம் என்பது புலப்படுகிறது, அப்படி கொண்டு வந்த சிலையை வைத்த இடம் கணபதீச்சுரமாக இன்றும் நிற்கிறது.
சரி விநாயகன் தமிழகம் வந்தாகி விட்டது. விநாயக சதுர்த்தி வீறு கொண்டு எழுந்தது எப்போது?
சாளுக்கியர்கள் ஆண்ட வாதாபி இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மராட்டியத்தை சத்ரபதி சிவாஜி ஆண்ட போது தேசிய விழாவாக இதை அறிவிக்க மராட்டிய மக்கள் தத்தம் வீடுகளில் வைத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்து மத ஈர்ப்பு கொண்டவர்கள் அவ்விழாவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை குடும்ப விழாவாகக் கருதாமல் ஊர் கூடி செய்யலாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யலாம் என அறிவிக்க இந்துமத காங்கிரஸார் ஆங்காங்கு நடத்த அது மெதுவாக தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்தது.
இன்று தமிழ்ர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாக மாறிப் போயிருக்கிறது. இந்துக்கள் கூடி பக்தியைக் காட்டாமல் தங்களின் சக்தியைக் காட்டுவதாக இந்த விழா மாறிப்போனது தான் வருத்தப் பட வேண்டியதாயிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள். பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டத்தையும் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு திண்டாட்டத்தையும் கொடுக்கும் என கடந்த காலம் சொல்கிறது.
சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் இந்துக்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் சிறுபான்மை இனத்தவர் குரலெழுப்ப கேட்டிருப்போம்..
சதுர்த்தி என்பது இந்துக்களின் பக்தியைக் காட்டுவதாக இல்லாமல் இந்துக்களின் பலத்தைக் காட்டுவது போல நாளடைவில் மாறிப்போனது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.
மற்ற மதத்தினரோடு இருக்கும் பிரச்சனையை தீர்த்து கொள்ளவும் அவர்களைப் பழி வாங்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம் நாட்டைப் போற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அனைத்தும் பொய்மை என்பது புத்திக்கு புலனாகத்தான் செய்யும்.
மனிதனுக்கு மனிதன் மதச் சாயம் பூசிக்கொண்டு தான் சமத்துவம் பேசுகிறான். எந்த திருவிழாவிற்கும் இல்லாத பாதுகாப்பை அரசு இந்த விழாவிற்கு தருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலவரம் நடப்பது உறுதி என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது. கலவரம் என்றால் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது. மாறாக கலவரமே நடைபெறாமல் இருக்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறதென தெரியவில்லை.
வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்).
இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....
என்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக் கொள்ளுங்கள்...
7 தமிழர் விடுதலை வழக்கு: தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா? பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...
இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இச்சிக்கலில் ஜெயலலிதாவின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் பல்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் மட்டுமே ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனை 2000-ஆவது ஆண்டுகளின் தொடக்கத்திலேயே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இன்னும் நிலுவையில் உள்ள அந்த வழக்கில் தான் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது. இதேவழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவிலும் இதே நிலைப்பாட்டைத் தான் தமிழக உள்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அப்போது தாக்கல் செய்யப்பட்டது 2012ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மனு என்றும், அதற்கு பதிலாக புதிய மனுவைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அரசு கூறியிருந்தது. இதனால் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், அதனால் இவர்களின் விடுதலையை தாங்களும் எதிர்ப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
இது மிகவும் அபத்தமான, ஆபத்தான வாதம் ஆகும். ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எழுவரும் 23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்திருந்ததால் அவர்களை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஜெயலலிதா, அதுகுறித்த மத்திய அரசின் கருத்தைக் கேட்டார். ஆனால், கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் 7 தமிழரும் இன்னும் விடுதலையாக முடியவில்லை. ஆனாலும், 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஜெயலலிதா அரசின் நிலையாக நீடித்தது.
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை குறித்த வழக்கிலும் இதே நிலைப்பாட்டைத் தான் தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். மாறாக, தமிழர்களின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறுவதன் மூலம் மத்திய ஆட்சியாளர்களின் தமிழகத் தரகர்களாக அதிமுக அரசு மாறி வருகிறது என்பதையே காட்டுகிறது. தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான் மத்திய அரசின் வழக்கம். அதை எதிர்ப்பது தான் தமிழக அரசின் வழக்கமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை இரு தமிழர்களையும் விடுதலை செய்யத் தயார் என்று தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்து, அதை உயர்நீதிமன்றம் ஏற்காமல் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்று அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்திருந்தால் கூட நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நமக்கு துணையாக இருந்திருக்கிறது என்ற நிம்மதியாவது தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும்.
ஆனால், தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம், உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றில் ஜெயலலிதா அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை பன்னீர்செல்வம் அரசும், பழனிச்சாமி அரசு எவ்வாறு மேற்கொண்டனவோ, அதே மாற்றம் தான் 7 தமிழர் விடுதலை விவகாரத்திலும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்தால் அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராஜிவ் கொலைக்கு காரணமான வெடிகுண்டை தயாரித்தது தான் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், இலைமறை காய்மறையாக தெரியவந்துள்ள சில தகவல்கள் ராஜிவ் கொலை வழக்கின் அடித்தளத்தையே சிதைக்கக் கூடியவையாகும்.
ஆனால், இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தமிழர்கள் விடுதலைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்கமுடியாது. 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலை வழக்கை விரைவுபடுத்தி சாதகமான தீர்ப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இந்த ரெண்டு பேரும் ஒன்னா சேந்து....
1) 91 நாளா இருக்குற கதிராமங்கலம் பிரச்சனையை தீர்க்க போறாங்களா?
2) 100 நாளுக்கு மேல நெடுவாசல்ல பிரச்சனையை தீர்க்கப் போறாங்களா?
3) மத்திய பிஜேபி அரசோடு போராடி நீட் தேர்வுக்கு நிரந்தர தடை வாங்கித் தரப் போறாங்களா?
4) விவசாயிகளோட கடன தள்ளுபடி பண்ணப் போறானுங்களா?
5) மோடியோட கிறுக்குத் தனத்தால வேலைய இழந்த லட்சக் கணக்கான பேருக்கு வேலைய கொடுக்கப் போறானுங்களா?
6) ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பால அழிந்துபோன சிறு தொழில்களை தூக்கி நிறுத்தப் போறானுங்களா?
7) மத்திய பிஜேபி அரசோடு போராடி காவிரி பிரச்சனைய தீர்க்கப் போறாங்களா?
மத்திய பிஜேபி அரசோடு போராடி ஹைட்ரோகார்பன் பிரச்சனைய தீர்க்கப் போறாங்களா?
9) மத்திய பிஜேபி அரசோடு போராடி மீனவர் பிரச்சனைய தீர்க்கப் போறாங்களா?
ஒன்னும் கிடையாது...
தனித்தனியா அடிச்ச கொள்ளைய இனிமே ஒன்னா அடிச்சி ரெண்டா பங்கு பிரிச்சி தொழில டெவலப் பண்ணப் போறானுங்க அவ்ளோதானே, இதுக்கு எதுக்கு இவ்ளோ பிலடப்புன்னு தெரியல?
போனவாரம் வரை, ஈபிஎஸ் தலைமையிலான அரசை ஊழல் அரசு என விமர்சித்து, அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்த தர்மயுத்த வீரர் ஓபிஎஸ், டெல்லி எஜமானர்களின் உத்தரவையடுத்து, வாலை சுருட்டிக் கொண்டு, இப்போது, பதவி, கமிஷன், மாமூல் குறித்த பேரங்களை பேசி முடித்து, A1 ஊழல் குற்றவாளி, 100 கோடி கோர்ட் அபராத புகழ் ஜெயாவின் சாமாதி முன்பு, அதே ஈபிஎஸ் ஆட்சியில் இணைகிறாராம்... மக்களை கேணையர்களாக நினைத்துவிட்டார்கள் போல...
பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காதோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து, அபராதமாக எடுக்கப்பட்ட தொகை ரூ.235 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...
இதன்படி கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை 388.74 லட்சம் வங்கிக் கணக்குகளில் இருந்து இத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்டுள்ளது.
இவ்வங்யில் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்துள்ள சேமிப்பு கணக்காளர்களுக்கு வருட வட்டி 4% லிருந்து 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வருடம் ரூபாய் 4400 கோடி இவ்வங்கிக்கு மிச்சமாகுமாம். சாதாரண மக்களிடம் இப்படி பாய்ந்து பாய்ந்து வசூல் செய்யும் ஸ்டேட் வங்கி 2016-17ல் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வராக் கடனாக தள்ளுபடி செய்த தொகை ரூபாய் 27000 கோடி.
இதை கண்டித்து தான் வருகின்ற ஆகஸ்ட் 22ம் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்...
யார் இந்த ஆடிட்டர் குருமூர்த்தி?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் தற்போது ஊடகங்களில் அதிகம் உலாவரும் பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி… யார் இந்த குருமூர்த்தி? எதற்காக அதிமுக உட்கட்சி விவகாரங்களில் சமீப காலமாக அதிகம் தலையிடுகிறார்? இவர் ஒரு பட்டய கணக்காளர், காவிபரிவாரங்களின் அமைப்பான RSS மற்றும் மோடியின் ஆலோசகர் என்ற பொது விவரங்களை எல்லாம் தாண்டி சில இவரை பற்றிய உண்மைகளை ஊரறிய செய்யவேண்டிய நேரமிது.
2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலா நட்பில் விரிசல் ஏற்பட்டு கார்டனை ஆட்டைய போட காவி கும்பல் ஒரு சதி வேலையை மோடி, சோ ராமசாமி மற்றும் தெஹெல்கா பத்திரிகையின் ஊடாக செய்தது, பின்னர் சசிகலா கார்டனை பிரிந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கார்டனில் ஜெயாவிற்காக நியமிக்க படுகின்றனர், பின்னரே ஜெயா உடல் நிலையில் ஒரு அசாதாரண மாற்றம் நிகழ்கிறது. நினைவிருக்கிறதா ?
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் , இந்த சோ ராமசாமியின் நாரதர் வேலை ஆரம்பித்தது…. 2011 ம் ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவின் அரசியல் பார்வை மற்றும் போக்கில் ஒரு வித அதீத மாற்றம் ஏற்பட தொடங்கியது அதன் விளைவாக ஈழம், மூவர் விடுதலை போன்ற தமிழர் நலன் சார்ந்த விவகாரத்தில் ஜெயலலிதா கொண்ட நிலைப்பாடு இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் எரிச்சலை உண்டாக்கியது … சும்மா விடுமா இந்த கேடுகெட்ட பார்ப்பனீசம்??? ஜெயாவை சுற்றியிருந்த தமிழர் அரணை உடைக்க தொடங்கியது .. அதற்காக ஏவப்பட்ட முதல் அம்பு தான் பிப்ரவரி 04 2012 ல் தெகல்கா பத்திரிக்கையின் மூலம் சசிகலாவுற்கு எதிரான ஒரு ஜோடிக்கப்பட்ட கட்டுரையை வெளிவிடுகிறது இந்திய உளவுதுறை. அந்த கட்டுரையில் சசிகலா ஜெயாவிற்கு உணவில் slow poison கலந்ததாக ஒரு கட்டுகதையை கிளப்பிவிட்டது.
அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுக்கும் ஜெயவிற்கும் இணக்கமான சூழ்நிலையில்லை எனவே இந்திய உளவு துறை ஜெயாவின் நம்பக கதாபாத்திரங்களின் ஒருவரான சோ இராமசாமியின் ஊடாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் உதவியுடன் மன்னார்குடி குரூப்பை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றி சோ ராமசாமியின் நட்பு வட்டத்தை கார்டனில் நிறுத்துகிறது…. அப்போது தான் ஜெயாவின் தனி பாதுகாவலர் முதல் சமையல்காரர் வரை அனைவரும் மாற்றப்படுகின்றனர் மேலும் சில குஜராத்தி மருத்துவர்களும் , செலியர்களும் மோடியின் மூலமாக போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் …. இதன் பிறகே ஜெயாவின் உடல்நிலையில் பல வித மாற்றங்கள் நிகழ்ந்தன … பிறகு பஜக விற்கும் ஜெயாவிற்கும் நடந்த முரண்கள் வேறு இருக்கிறது … அப்போதைய காலகட்டத்தில் போயஸ் கார்டனில் மாற்றப்பட்ட நபர்கள் யார் யார் அவர்களின் பின்புலம் என்ன ? இப்போது அவர்கள் எங்கு உள்ளார்கள்?
சரி இப்போ விஷயத்திற்கு வருவோம்.. ஏன் ஜெயலலிதா மீது இந்த காவிகளுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி ???
நினைவிருக்கிறதா 2004 ஆம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயலலிதா காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்து சிறையில் அடைத்தது ? சும்மா விடுமா காவி பரிவாரங்கள் வட இந்திய முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது, தமிழகத்தை தவிர … தமிழகத்தில் பல தரப்பட்ட மக்களும் அரசின் இந்த தைரியமான முடிவை வரவேற்ற போது ஒரு சில பார்ப்பனிய ஊடகங்கள் மட்டும் எதிர்த்தன அதில் முக்கியமான நபர் தான் இந்த “ஆடிட்டர் குருமூர்த்தி”.
அப்போது சங்கர ராமன் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு துறை சுப்பரிண்டன்ட் பிரேம்குமார் தலைமையில் விசாரித்து கொண்டிருக்கையில், இதே ஆடிட்டர் குருமூர்த்தி தான் வழக்கை திசை திருப்ப உண்மைக்கு முரணான பல தொடர் கட்டுரைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார். இவருக்கும் சங்கர ராமன் கொலைக்கும் என்ன சம்மந்தம் என்று சந்தேகமடைந்த காவல் துறை குருமூர்த்தியை விசாரிக்க ஆரம்பித்தது முன்னுக்கு பின் பல முரணான விடயங்களை குருமூர்த்தி கூறியதால் காவல் துறை இவர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி IPC 176,179,191 மற்றும் 193 சட்டத்தின் படி குருமூர்த்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அன்று இந்த குருமூர்த்தி தப்பி ஓடி மும்பையில் காவிகளின் உதவியோடு ஒளிந்து கொண்டார்… பிறகு இந்திய காவிகளின் உதவியோடு இந்த வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டு திசை மாறியது வேறு ஒரு கதை..
அன்றிலிந்து ஜெயலலிதாவை ஒழித்து கட்டி அதிமுகவை ஆட்டைய போடுவதே காவிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்து வந்தது அதற்கு இது நாள் வரை சோ ராமசாமி ஒரு துருப்பாக இருந்து வந்தார் இப்போது அதே வேலையே இந்த ஆடிட்டர் குருமூர்த்தி சோ வின் துக்ளக் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று செவ்வனே செய்கிறார்...
திராவிடமும் - திராவிடத் தலைவர்களின் மறுபக்கமும்...
அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டால்.
அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல.
அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது.
இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.
யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி.
டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.
இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப்பட்டன.
அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.
எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார்.
அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம்.
அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார்.
இதனால் சிறுமைப்படுவது கம்பன் அல்ல, தெலுங்கர் அண்ணா துரைதான்...
திமுக வும் தமிழின அழிப்பும்...
திமுக தெலுங்கர் அண்ணா துரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது...
உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.
அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.
ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது. ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார். கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.
சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.
அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.
அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.
பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...
ஆரியம் திராவிடம் ஓர் ஆராய்ச்சி...
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்.
ஆரியம் என்றால் என்ன ? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன?
இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கின்றேன்.
முதலில் ஆரியம்...
நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் ஆரிய இனத்தவருக்கு மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.
ஆரியர், அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை.
இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.. ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. இதுவும் தவறு.
வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிரமுடையவர்கலாக இருந்திருகிறார்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் இருக்கிறது. (10:31:11)
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும், யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான “கிருஷ்ணா” கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.
வேதங்களில் திராவிட என்ற சொல் இல்லை.
தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆரியர் கயிறாடு பரையிற் கால்பொரக் கலங்கி வாகைவென் நெற்றோலிக்கும் என்கிறது குறுந்தொகை.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இறைவன் வடமொழும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவ சிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது.
ஆரியம் தமிழோடிசையானவன் கூறிய குணத்தார் குறிநின்றவன் என்பது திருநாவுக்கரசர் பாடல் (176).
மாணிக்கவாசகர் (கி.பி.எட்டாம் நூற்றாண்டு) ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில் பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (64) என்று பாடுகிறார்.
பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில் “இற்றைநாள்வரை முதளியான் முன்செய்தன குற்றமுமுளவெனிற் பொறுத்தி கொற்றவர் அற்றதான் முதகத்தினில் விழித்தல் ஆரிய. பெற்றனன் விடையெனப் பெயர்த்து போயினான். (க.ரா.யு.கா. கும்பகர்ணன் வதைப் படலம்) என்று வருகிறது.
இந்த இடத்தில் உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன் என்று எழதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் (1370-1443) வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேசரத்தின மாலை) என்று எழுதுகிறார் வேதாந்த தேசிகர் (1269-1370) கான்பனவு முரைப்பனவு மற்றோன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பான்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வைத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நம் பெரியோமல்லோம் நான் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே (அம்ருதாஸ்வாதி 37) என்கிறார்.
இங்கே ஆரியன் என்பதை சிறப்புடையவன் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம், ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார் இதை இன அடியாளமாக மாற்றினார்.
கால்டுவெல் வழியில் வந்த சி.என். அண்ணாதுரை ஆரிய மாயை (1943) என்ற புத்தகத்தில் நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்று அறிவர் (பக்.26) என்று எழுதினார்.
பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்டிரம் ஆகியவை நர்மதையின் தெற்க்கே உள்ளன என்று தெரிந்துவிடும் சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோதியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.
அடுத்தது திராவிடம்...
திராவிடம் என்ற பொருளில் த்ராமிடம் என்ற சொல் பாகவதத்தில் (8.5.49) வருகிறது.
தமிழைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘தாமரி’ என்று எழுதினர்.
ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ‘தமிரிசி’ என்று எழுதினார்.
இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள் முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும் தமிழகத்தையும் ‘மலபார்’ என்றே அழைத்தார்கள் எனவே தமிழ் திராவிடமாக ஒழிக்க வாய்ப்புகள் இருந்தன.
சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.
பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும் சோழ தேசத்திற்கு வடக்கிலும் கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது.
இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
வேதாந்த தேசிகர் ‘த்ரமிடோபநிஷத்’ தாத்பர்ய ரத்னாவளி என்ற நூலை எழுதியிருக்கிறார்.
தாயுமானவர் (பதினெட்டாம் நூட்றாண்டு)
“வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார்.
வேதாந்த தேசிகரும், தாயுமானவரும்
‘திராவிடம்’ என்ற சொல்லை தமிழ் என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.
இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்.
இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான்.
இந்த இயக்கங்களின் அடிப்படை. கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம்தான்.
கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம்.
P.Viii … Psamls of a Saiva Saint/ T Isacc Thabiah/London. Luzee& Co./ 1925
A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, toallied people in inferior grades of culture.
The responsibility is Bishop Caldwell’s. The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an
Ethnological distinction. TheCaldwellterminology is unscientific and unsatisfactory.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.
ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவங்கி வைத்தது தான் திராவிட இனவாதம்.
ஈ.வே.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்துவிட்டது. இனவாதம் இயக்கமானது.
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது.
திரைப்படப் பாட்டுப் புத்தகங்களும் இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன.
ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.
தொல்லியல் துறை ஆய்வுகளின்படி அடிப்படையில் ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்துவிட்டது.
இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.
இலக்கியமல்லாத ஒரு சான்றையும் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடகள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். ஜனவரி 5, 2011..
இது பற்றி மேலும் அறிய...
1) புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி.வி.ஜகதீச ஐயர், 1918.
சந்தியா பதிப்பகம் 2009.
2) மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு
கே.வி.ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை: ௨௦௦௯
ஆரியர் அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிறிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதி இங்கே குறிப்பிட வேண்டு.
ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை...
தமிழ் பேசும் வந்தேறிகளுக்கு ஒரு மடல்...
நண்பர்களுக்கு வணக்கம்..
இணையத்தில் தமிழ் இன நண்பர்களுக்கும், வந்தேறிகளுக்கும் இடையேயான வாக்குவாதங்களைக் காண முடிகிறது.
தமிழ் இனத்தில் பிறந்த நண்பர்களுக்கு..
இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..
நாம் பேசும் ஈழ விடுதலைக்கும், வந்தேறிகள் பேசும் ஈழ விடுதலைக்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு. நாம் பேசுவது நிரந்தர தீர்வு. தமிழ் நாட்டில் திராவிடச் சிக்கல் தீராத வரை, ஈழத்தில் எத்தனை கட்ட போர் நடந்தாலும் , அங்கு தமிழருக்கு விடுதலை கிடைக்காது. இது நாம் கண்ட அனுபவ பாடம்.
அதற்கான அரசியலைத் தான் நாம் முன் நிறுத்தி கொண்டிருக்கிறோம்.
தமிழர் அல்லாத வேற்று இனத் தலைவர்கள் தமிழ் நாட்டை ஆளும் வரை இனப் படு கொலை ஈழத்திலும், மற்ற மாநிலங்களிலும் தொடரும்.
யார் தமிழன்? யார் வேற்று இனம்? என்ற தெளிவு தான் தமிழர்களுக்கு மிக முக்கியம்..
நமது அரசியல், ஈழ விடுதலை போராட்டம் கற்றுக் கொடுத்த பாடத்திலும், தமிழ் நாட்டில் , வேற்று இன தலைமையால் மொழியும், இனமும் அழிக்கப் படுவதை பார்த்தும், உலகில் எல்லா இடங்களிலும் , தமிழன் அடிக்கப் படும் போதும், கொல்லப் படும் போதும், தமிழ் நாடு மட்டும், எந்த சலனமும் இல்லாமல் - சின்ன திரைக்குள்ளும், மது கடைக்குள்ளும், திரை அரங்குகளிலும், அடைந்து கிடக்கும் எம் தமிழ் இனத்தைப் பார்த்து எழுந்த அரசியல்.
தெலுங்கன் தன்னை ஆந்திராவில் தெலுங்கன் என்கிறான்..
மலையாளி - கேரளாவில் தன்னை மலையாளி என்கிறான்..
கன்னடன் தன்னை கர்நாடகாவில் கன்னடன் என்கிறான்..
இவர்கள் அத்தனை பேரும் - தமிழ் நாட்டுக்கு வரும் போது - தன்னை தமிழன் என்கிறார்கள்..
ஆட்சி, அதிகாரம், தொழில் , சினிமா, என எல்லாத் துறைகளிலும் இருந்து கொண்டு, தமிழனை, மொழியை, இனத்தை கரு அறுக்கிறார்களே தவிர - நம் இனத்திற்கும் , மொழிக்கும் எந்த நன்மையும் செய்ய வில்லை. செய்யவும் மாட்டார்கள்.
இந்த புறம் போக்கு வந்தேறிகள், தமிழர்களை அடுத்த மாநிலங்களில் இரண்டாம் தர மக்களாக, அடிமைகளாக நடத்துகிறார்கள்.
வேற்று இனமும், நாடும், தமிழர்களை கொன்று குவிக்கும் போது, குடும்ப அரசியலையும், வியாபார அரசியலையும் தான் பார்ப்பார்கள், பார்த்தார்கள், பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
நம் வீட்டு நிர்வாகத்தை நாம் பார்ப்பதற்கும், அடுத்தவன் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு தான் இது.
அதனால் தமிழ் நாட்டில் வந்தேறிகள் தாங்கள் பிழைப்பதற்கு திராவிடம் தான் பேசுவார்கள். அது அவர்களுக்கு ஒரு போர்வை. தங்களை காத்துக் கொள்ளும் கருவி.
அதனால் தான் யாரெல்லாம் தமிழ் தேசியம் பேசுகிறார்களோ, அவடர்களின் இனம் கண்டு கொண்டு, அதன் பின் அவர்களைப் பின்செல்வதோ, கருத்துக்க்களை பரப்புவதோ செய்யவும்.
நம் அரசியல் தமிழ் நாட்டில் உள்ள வந்தேர்களிடம் இருந்து தமிழ் இனத்தை மீட்பதோடு, தமிழ் இனத்தில் பிறந்த தமிழ்த் தலைவர்களின் திராவிட மாயைக்குள் இருந்து அவர்களையும், அவர்களோடு உள்ள தமிழ் இனப் பிறப்புக்களை மீட்டு வருவதிலும் இருக்கிறது.
கடினமான அரசியல் நிலைப்பாடு. கடமையாய் செய்து முடிக்க வேண்டிய நிலைப்பாடு. தொடர்ந்து செய்து முடிப்போம். திராவிட சிந்தனை அழிப்போம். தமிழ் இனம் காப்போம்.
தமிழ் நாட்டில் உள்ள மனிதாபிமான வந்தேறி நண்பர்களுக்கு...
(தெலுங்கு நாயக்கர், நாயுடு , சக்கிலியர், ரெட்டியார், கௌடா, நாயர், மற்றும் மார்வாடி......) ஈழ விடுதலைக்கு நீங்கள் காட்டும் ஆதரவிற்கு நன்றிகள்.
எங்களின் தமிழ் இன பிறப்புக்கள் தான் ஈழ நண்பர்கள். அவர்களுக்கு கை உயர்த்தி பேசும் நீங்கள், தமிழ் நாட்டில் தமிழனோ, தமிழ் மொழியோ கொல்லப்படும் போது மௌனம் காப்பது ஏன்?
தமிழ் நாடு, தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், மார்வாடிகளுக்கும் அடிமையாய் இருப்பது உங்களுக்கு தெரியாதா?
இந்த வந்தேறிகளால் எல்லா துறைகளிலும் எங்கள் மொழி , இனம் அழிவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
18 மைல் கல்லுக்கு அப்பால் உள்ள ஈழம் , அதன் கொடுமை தெரியும் போது, உங்களோடு உள்ள எங்களின் நிலை தெரியவில்லையா அல்லது தெரியாமல் உள்ளது போல நடிப்பா ?
அல்லது உங்களின் வாழ்விற்கு, பிழைப்பிற்கு கேடு வந்து விடும் என்ற பயமா?
தமிழர் அல்லாத வைகோவை பற்றி ஒரு நண்பர் சொன்னார். அவரின் சேவைக்கு நன்றி. தமிழ் நாட்டில் அவரால் ஈழ அரசியல் மட்டும் தான் பேச முடியும். வேறு என்ன செய்வார்?
அதை விட்டால் அவர் ஒருவர் இருப்பதே மக்கள் மறந்து விடுவார்கள் என்பதை அவரும் அறிவார். அதனால் அவர் பேசிக்கொண்டே இருப்பார். அவர் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் சரி?
இறுதி கட்டப்போரின் போது இவர் தீ குளித்திருந்தால், மக்கள் இன்னும் சில நுற்றாண்டுகளுக்கு மறக்காமல் இருந்திருப்பார்கள். அனால் அவர் தான் தமிழ் இனத்துக்கு விடுதலை வாங்கித்தர முடியும் என்ற மாயைக்குள் செல்ல நாங்கள் தயாராக இல்லை.
நீங்கள் சொல்லுவதை எல்லாம் நம்ப நாங்கள் ஒன்றும் முட்டாள் தமிழர்கள் அல்ல.. அதனால் உங்கள் ஆதரவை ஈழ விடுதலைக்கு செய்து கொண்டே இருங்கள்...
தமிழா விழித்தெழு...
பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்..
தமிழ் பார்ப்பனராய்..
வாழ்ந்தது போதும்..
வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்..
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..
பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி.
தமிழ் சாதிகள்,
தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம்.
தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை,
ஈழத்தில் மட்டும் அல்ல,
உலகில் எந்த நாட்டிலும்,
தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.
திராவிடம் தான்
தமிழனின் முதல் எதிரி...
ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை...
பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.
அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளி தான் வைக்க வேண்டும்.
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே 'டிம்' செய்ய வேண்டும்.
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு 'இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும் போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
கார்களில் செல்வோர் 'சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...
உலகத்தில் மொத்தம் 193 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....
அதில் தனியாக தமிழர் தேசம் (தமிழீழம் + தமிழகம்) என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...
ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்... வரும் காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்....
எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர் தேசம் அமைய போராடு....
இப்போது நாம் தமிழர் தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக.. வாழ வழி செய்வோம்.....
நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றிடுவோம்.....
வாழ்ந்தால் சுகந்திரமாக வாழ்வோம்...
இல்லையேல் களமாடி சாவோம்...
Subscribe to:
Posts (Atom)