அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.
100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
இத்தனை சிறப்பான பேரீச்சம் பழத்தினை உண்பதனால், பித்தம், பித்தநீர், பித்தசுரம், வாந்தி, குடபுரட்டல், மனக்கலக்கம், மனக்குழப்பம், உன்மதம், மதமூர்ச்சை, பைத்தியநோய், கபம், இருமல், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல், சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், நீர்க்கோர்வை, கபாஅநீர், காசம், சுவாச காசம், இரத்தகாசம், தாகம், அதிதாகம், நீரிழிவு, மதுமேகமென்னும் சர்க்கரை நோய், இரத்தபித்தம், வாய்நீர் வடிதல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்..