12/10/2018

அக்., 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை...


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்லி புயல் நாளை கரையை கடக்கும் என்றும், அரபிக் கடலில் உருவாகி உள்ள லூபன் புயல் ஓமனை நெருங்குகிறது என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு, மத்திய வடக்கு வங்கக் கடலில் வரும் 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது...

பாஜக - அதிமுக வின் திசை திருப்பும் சதி வேலைகள்...


மூலிகை பிண மனிதர்கள்...


உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்) பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.

அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.


ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.

அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொள்வார்கள்.

அவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்? எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்? என்றால் இந்த முறையில் தான்..


இறந்து போன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடை அதிகரிக்கும் வண்ணமாக பாஸ்பரஸ் தனிமம் அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும், பிராணன் (மின்காந்த சக்தி) அதிகம் உள்ள மூலிகைகள் கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.

உடல் முழுக்க பிராணாசக்தி அதிகம் உள்ள மூலிகைகளை அரைத்து தடவுவர்.

ஆனால் நெற்றிப்பொட்டில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி) இயங்ககூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.

பின் பிராணா சக்தியை கவர்ந்து இழுக்கக்கூடிய சில ஊடு மந்திரங்கள் மூலம் பிராணா சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதருக்கு செலுத்துவர்.

பிராணா சக்தியின் காரணமாகவும், பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம் விழிப்படையும்.

அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆழ்மனம் (பாஸ்பரஸ் ஆக்சைடு) ஆனது இவர்களது செயலால் உடலில் ஈர்க்கப்பட்டு அடர் பாஸ்பரஸ் ஆக்சைடாக ஸ்தூல உடலில் வெளிப்பட்டு ஸ்தூல உடலில் இயங்கும்.

பிணத்தின் உடலில் பிராணனை அதிகரித்தால் ஆழ்மன மானது உடலுடன் ஒன்றிவிடும்.

அதாவது ஆழ்மனம் ஆவி உடலுக்கும் பிணத்துக்கும் இடையே ஒரு மின்காந்த இணைப்பு சங்கிலி எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கும்.

மின்காந்த சங்கிலி இணைப்பு அறுபடுவது கிடையாது.

பிணத்தை முழுமையாக எரித்தால் தான் அந்த இணைப்பு போகும், இணைப்பு அறுபடும்.

உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்) பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.

அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.

இந்த மின்காந்த இணைப்புகள் மிக மிக மெல்லியதாக ஆகிவிட்டதால்தான் அந்த ஜீவனால் உடலை இயக்க முடியவில்லை. உடலுக்குள் புக முடியவில்லை.

அதுவே இந்த தாந்திரீக முறைகள் மூலம் அந்த பிராண இணைப்பை நல்ல வலுவாக ஆக்கிவிட்டால் அந்த ஆழ்மனம் ஜீவன் உடலில் ஈர்க்கப்பட்டு இயங்க ஆரம்பித்து விடும்.

அப்போது அவர்களது ஆழ்மனம் ஏற்கனவே பதிவாகி உள்ள எண்ணப் பதிவின் படி செயல்படுவர்.

ஆனால் மந்திரவாதிகள் அவர்களை கட்டளை மூலம் சஜக்‌ஷன் மூலம் தங்கள் விருப்பபடி செயல்பட வேண்டும் என்று அவர்களது மனதை ஹிப்னாடிஷம் செய்து விடுவர்.

அந்த பிண மனிதர்களும் மந்திரவாதிகளின் கட்டளைப்படி செயல்பட ஆரம்பிப்பர்.

ஆனால் அந்த மனிதர்களுக்கு உணவில் உப்பு போட்டு கொடுத்தால் அந்த பிண மனிதர்கள் செயல்பட மாட்டார்கள்.

காரணம் உப்பு தண்ணீரில் உள்ள எல்லாவிதமான தனிமங்களையும் வெளியேற்றும் அல்லது வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

அதனால் பிண மனிதர்களின் உடலில் இயங்கி கொண்டிருக்கும் பாஸ்பரஸ் தனிமத்தை அது குறைப்பதால் பிண மனிதர்கள் மந்திரவாதியின் கட்டுபாட்டை இழக்கிறார்கள். மீண்டும் பிணமாகவே ஆகிவிடுவார்கள்.

இப்படி ஒரு மனிதனில் புத்தியாகிய அடர் நைட்ரஜன் ஆக்சைடை இயக்காமல் அவர்களது ஆழ்மனமான சாயா புத்தியை (நைட்ரஜன் ஆக்சைடு NO) இயக்கி அவர்களை பயன்படுத்த முடியும்.

கோமாவில் இருப்பவரை கூட இது போன்று பிண மனிதராக நடமாட வைக்க முடியும். இது உண்மை...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


ஆங்கில மருத்துவமும் உண்மைகளும்...


மொழி வரைபடம் 1859...


ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய மொழிகள் வரைபடம்..

இப்படத்தில் தமிழ்ப் பகுதியில் திருவனந்தபுரமும் மைசூரும் உள்ளன..

துல்லியமான வரைபடம் இல்லையென்றாலும்..

தோராயமான வரைபடமாக இருந்தாலும்..

இது முக்கியமான வரைபடம் ஆகும்..

மீண்டும் என்னை பிரதமராக தேர்வு செய்தால் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பேன் - பாஜக மோடி...


அதிமதுரத்தின் சக்தி...


ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே..

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்...

பாஜக அடிமை அதிமுக வின் சதி வேலைகள்...


சித்தர் ஆவது எப்படி - 9...


சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்...

வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக, பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்...

இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...

அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..

இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்...

சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்....

சித்தர்கள் தோற்றுவித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...

சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..

சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது... எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....

சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே..

மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...

புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..

இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்..

அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே..

அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது..

இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்..

உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..

நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்..

நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..

அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது...

அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...

சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..

அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது..

அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..

அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்..

நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...

நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...

இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இது சாதாரணமப்பு...


திமுக கட்சியை காலி பண்ணிடலாம்.. சீக்கிரம் சொல்லுங்க....


திருட்டு திராவிட சு.ப.வீ யோக்கியத்தை...


கரிசலாங்கண்ணி மூலிகை...


கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது.

பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலைக்கு:

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

மகோதர வியாதிக்கு:

கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும்.
உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமாக:

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:

கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளின் சளி நீங்க:

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணித்தைலம்:

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:

இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர:

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

தலைப்பொடுகு நீங்க:

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

பல் உறுதிக்கு:

கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

பித்தத்தைலம் :

கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

நரை நீக்கும் தைலம்:

புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

நாள்பட்ட புண் ஆற:

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்...

காவல்துறை கைது குறித்து விழிப்புணர்வு...


அஞ்சுகிறாரா ஆளுனர்? நேர்மை இருந்தால் உயர்கல்வி ஊழல் பற்றி விசாரணை நடத்துக - பாமக அறிக்கை...


சட்டத்தின் முன் சாமானியர்கள் பல்டி அடித்ததை இந்த நாடு பார்த்திருக்கிறது. ஆனால், அதிகாரத்தின் முன் ஓர் ஆளுனரே பல்டி அடிப்பதை இப்போது தான் இந்நாடு காண்கிறது என்று குறிப்பிடும் வகையில் தான் உயர்கல்வித்துறை ஊழல்கள் தொடர்பான ஆளுனர் பன்வாரிலாலின் நிலைப்பாடுகள் உள்ளன. ஊழலை ஒழிக்க வந்தவரைப் போன்று இரு நாட்களுக்கு முன் பேசிய ஆளுனர் பன்வாரிலால், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஊழல் காப்பாளர் வேடம் தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக நான் நேரடியாகக் கூறவில்லை; கல்வியாளர்கள்  கூறியதைத் தான் நான் கூறினேன் என்று விளக்கமளித்து இச்சிக்கலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

ஆளுனரிடம் இது எதிர்பார்த்தது தான். கடந்த 6-ஆம் தேதி நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் துணை வேந்தர் நியமன ஊழல் குறித்து விரிவாகப் பேசினார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆளுனர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஆளுனரின் உரைக் குறிப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ஊழல் குறித்த பகுதி நீக்கப்பட்டிருந்தது. யாருக்கு அஞ்சி இது நடந்தது என்பது தெரியவில்லை. இப்போது அதை விட ஒருபடி மேலே போய் யார் மீதும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையோ அல்லது பணப் பரிமாற்ற குற்றச்சாட்டையோ முன்வைக்கவில்லை என்று ஆளுனர் கூறியிருக்கிறார். ஆளுனரிடம்  நான் கேட்க விரும்பும் முதல் கேள்வி, ‘‘ துணைவேந்தர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்ததாக உங்களிடம் கல்வியாளர்கள் கூறிய குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா.... இல்லையா?’’ என்பது தான்.

* ஒருவேளை அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆளுனர் நம்பவில்லை என்றால், துணைவேந்தர் நியமனத்தில் அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள்?

* ஆளுனர் மாளிகை வெளியிட்ட விளக்க அறிக்கையின் இறுதியில், முந்தைய ஆளுனர்களால் நியமிக்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஊழலுக்காக கைது செய்யப்பட்டது,  மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லமுத்து உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டது, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஆகியவற்றை சுட்டிக் கட்டியுள்ளார். இதன் மூலம் அவர்கள் ஊழல்வாதிகள் என்கிறாரா அல்லது அப்பாவிகள் தவறாக தண்டிக்கப்பட்டனர் என்கிறாரா?

* ஆளுனர் என்பவர் அவரது பார்வைக்கு வரும் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டுகளை கூறிய அது குறித்து விசாரித்து உண்மை நிலையை அறிய வேண்டிய ஆளுனரின் கடமை. அந்தக் கடமையை ஆளுனர் செய்தாரா?

* ஒருவேளை ஆளுனர் விசாரணை நடத்தி அதில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தது உண்மை என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காதது ஏன்? தவறே நடக்கவில்லை என்றால் துணைவேந்தர்கள் நியமனம் மிகவும் நேர்மையாக நடந்தது என்று அறிவிக்காதது ஏன்?

* 2018-ஆம் ஆண்டில் தம்மால் நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர்களும் நேர்மையாக, வெளிப்படையாக, விதிகளைப் பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பன்வாரிலால் புரோகித் கூறுகிறார். ஒப்பீட்டளவில் இந்த துணைவேந்தர்கள் நியமனம் ஓரளவு நியாயமாக நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இப்போது நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களைவிட திறமையான கல்வியாளர்கள் விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டது என்றால் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது முதல்  ஆளுனரால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை அனைத்தும் எந்த அடிப்படையில் நடந்தது என்பது குறித்து ஆளுனர் மாளிகை வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

* ஆளுனர் பன்வாரிலால் அவர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் கையூட்டு பெறாதவர்களாக  இருக்கலாம். ஆனால், அவர்களில் சிலர் நேர்மையானவர்கள் அல்ல. உதாரணமாக  பெரியார் பல்கலைக் கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பணியாற்றும் 15 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் உயர்நீதிமன்ற ஆணைப்படி பணி நிலைப்பு செய்யப்பட்டனர். இதற்காக அவர்களிடமிருந்து துணைவேந்தர் ஒரு பைசா கூட வாங்கவில்லை. ஆனால், துணைவேந்தருக்கு தெரிந்தே 11 பேரிடமிருந்து உயர்கல்வி அமைச்சர் அவரது தரகர்கள் மூலம் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.1.65 கோடி கையூட்டு வசூலித்தனர். கையூட்டு தர மறுத்த 4 பேரையும்,‘‘ நீங்கள் தகுதிகாண் காலத்தை (Probationary Period)’’ நிறைவு செய்ய முடியாது என அமைச்சரின் ஆட்கள் மிரட்டுகின்றனர். இவை அனைத்தையும் தடுக்காமல் துணைவேந்தர் குழந்தைவேலு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்கு மறைமுகமாக துணை போகும் அவர் நேர்மையானவரா?

தமிழக ஆளுனர் பன்வாரிலாலின் தொடக்ககால செயல்பாடுகள் அவர் நேர்மைப் பயிருக்கு காவலாக இருப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால், இப்போதோ அவர் ஊழல் களைக்கு காவலரோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்தப் பார்வையை போக்க வேண்டியது ஆளுனர் புரோகித்தின் கடமையாகும்.

தமிழ்நாட்டில் ஆளுனரின்கீழ் உள்ள 20 பல்கலை.கள் உட்பட மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களிலும் நடந்த ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி விரிவாக தொகுத்திருக்கிறது. ஆளுனர் அழைத்தால் எந்த நேரமும் அந்த ஊழல் பட்டியலை ஆளுனரிடம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் ஆளுனராக இருந்தால் அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஆணையிட வேண்டும். செய்வாரா?

பாஜக மோடியின் வரலாற்று சாதனை...


பழந்தமிழர் திருமண மரபு...


திருமணம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது..

பழந்தமிழர் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர்.

மணச்சடங்கினை பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில், பழந்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்..

எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன; பின்னர் இந்தச் செயல்பாட்டில் பொய்மையும், வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மணத்தைக் குறிக்க பல்வேறு சொற்கள் பழந்தமிழரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடி, மணம், மன்றல், வதுவை, வதுவை மணம், வரைவு என அவை நீளும்.

சான்றாக, கல்யாணம் என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக் கோவையிலும் அமைந்துள்ளது.

கடி என்ற சொல்லுக்கு காப்பு என்று பொருள் கூறுவர். கடிமகள் வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து என்ற குறிப்பால் காப்பு என்ற பொருளில் கடி என்ற சொல் இடம் பெறுவதையும் காணலாம்.

சீவக சிந்தாமணியில் கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும், கடிமணம் எய்தும் களிப்பினால் என்றும் வருகிறது.

சங்க இலக்கியங்கள் வாயிலாக தமிழரின் மணமாக மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவிய மணம், மடலேறிய மணம் ஆகிய மண முறைகளைக் காணமுடிகிறது.

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம்பெற்ற மண முறைகளைத்தவிர, பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்களுக்கு உணர்த்துதல், மணவினை நிகழும் இடத்தை அலகங்கரித்தல், சிறப்பு இறைவழிபாடு செய்தல், மங்கல ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர் திருமணத்தை பெண் வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டனர்.

களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்வதும் மரமாக இருந்துள்ளது.

கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. இதை,

நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே!

என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம்.

ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது.

பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின்படி பரிசம் போடுதலும், பெண் வீட்டில் திருமணம் செய்தலும் இடம்பெறுவது தமிழர் வழக்கமாக இருந்திருக்கிறது.

காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்துள்ளது.

இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப இறைவன் முன்னிலையில், திருமணக்கூடம், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம்பெறுகிறது.

பழங்காலத் தமிழரின் மண மரபில் இடம்பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் காணப்பட்டாலும் புதியவைகளும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம், பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல், மங்கல நீர் கொண்டு வருதல், மண மக்கள் ஒப்பனை, மணமகன் அழைப்பு, அம்மி மிதித்தல், பாத பூசை செய்தல், அருந்ததி காட்டல், அறம் செய்தல், மங்கல அணி, சீதனம் கொடுத்தல் முதலிய புதியவைகளும் இடம்பெற்றன.

தமிழர்கள் திருமண முறைகள் பலவாக இருந்தாலும், இருமணம் ஒத்தே வாழ்க்கை நடத்திக் குடும்ப முறைகளைப் பாரம்பரியமாகப் பறைசாற்றி வருகின்றனர் தமிழர்கள்...

இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


கடவுள் படைத்தாரா ?


கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.

அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.

மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர், வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.

கி மு 483 ல் புத்தர் இறந்தபோது, அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.

புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம், மறைந்த இடம், பல், செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றால் மனித மனம் தவிக்கிறது.

உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம். ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.

பக்தி vs ஆன்மீகம்...

பக்திக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.

பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப, திரும்ப அதையே செய்வது. பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும், ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும்.

ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற , ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது. இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.

ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல். தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி).

யார் கடவுள்...?

நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான். மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது. தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழில் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.

இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம், ஜாதகம், வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றை தான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம். மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய், அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை, எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.

கடவுளை எப்படி உணர்வது..

நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்; வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்; சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது; பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?

திருச் சிற்றம்பலம்..

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.

கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து, கண்ணீர் ததும்ப்பி, பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.

இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும் போதும், அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்). அப்போது கிரிக்கெட் தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.

பாரதியின் பார்வை..

நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா.
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா.
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா.

கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை. உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.

எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்...

இயற்க்கைக்கு மாறுவோம்...


தணிகை மீட்ட தளபதி...


திராவிடச் சூழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருத்தணியை பிரித்து ஆந்திர மாநிலத்தில் சேர்க்க இருந்த போது..

இறுதி வரை எதிர்த்து நின்று போராடி அதை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் திருத்தணி விநாயகம்..

இதனால் இவர் "தணிகை மீட்ட தளபதி" என்று போற்றுதலை பெற்றவர்...

நாங்கள் அப்பெண்ணிற்க்கு ஆதரவாக பேசவில்லை.. விபச்சார ஊடகத்தின் கேவலமான சிந்தனையை தான் இங்கு வெளிபடுத்தியுள்ளோம்...


தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம்.. மாமனாரை திருமணம் செய்து கொண்ட மணப்பெண்...


பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிபோய்விட்டார்.

இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார். அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார்...

விவசாயிகளை ஏமாற்றும் பயிர் காப்பீடு...


கடவுள் இருக்கிறாரா? இல்லையா?


இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை.

முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் கடவுளை நம்புகிறவன். தினமும் காலை குளித்து முடித்தவுடன் கடவுள்கள் படங்களுக்கு முன் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசுகிறவன். ஆனாலும் இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.

சூரியன் இருக்கிறானா, சந்திரன் இருக்கிறானா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. அவை கண்ணுக்கு முன்னால் தெரிகின்றன. அவைகளின் செயல்களை உணருகிறோம். ஆகவே அவைகளின் இருப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஆனால் கடவுள் அப்படியில்லை. கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பார்த்தாகச் சொல்பவர்கள் ஒன்று பொய்யர்கள் அல்லது மனப்பிராந்தி பிடித்தவர்கள்.

அப்படியானால் கடவுள் என்ற ஒரு தத்துவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆராய வேண்டிய கேள்வி.

கடவுளை உருவாக்கியவர்கள் யார்? ஏன் உருவாக்கினார்கள்? அது மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்க்கமான பதிலை இந்த சிறு பதிவில் முடிக்க முடியாது. தவிர அந்த அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை.

ஆனால் நான் ஒரு சராசரி அறிவுள்ள ஒரு மனிதன். பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல ஆன்மீகப் பிரங்கங்களைக் கேட்டிருக்கிறேன். பல சாமியார்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலில் விழுந்தும் இருக்கிறேன்.

இந்த பின்புலத்தில் என் மனதில் தோன்றும் கேள்விகளையும் அதன் பதில்களாக என் மனதில் தோன்றும் எண்ணங்களையும்தான் இங்கே பகிர்கிறேன்.

ஆதி மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்ற விவாதத்தில் நம்பிக்கைதான் ஆதாரமே தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது.

இன்றும், கடவுளைக் காட்ட முடியுமா என்றால் அது அவரவர் நம்புக்கையின்பாற்பட்டது என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கடவுளைக் காட்டுவார் யாரும் இல்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்க வேண்டும்?

ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார்.

ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்?

அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர் தானே இன்று வரையில் இருக்க வேண்டும்?

ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?

ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவரவர்கள் தங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதுதான் முழுமுதற்கடவுள் என்று நம்பி வழிபட்டார்கள்.

தங்களின் மனம் சலனமடையும் போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?

அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா?

கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.

வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்...

மிக சிறந்த கொசு விரட்டி...


நாய் துளசி எனப்படும் கஞ்சாங்கோரை வீட்டில் வைக்கும் போது கொசு அண்டவே அண்டாது இதன் வாசம் இருக்கும் வரை...

டிடிவி தினகரா மண்ட மேல இருக்க கொண்ட வெளியில் தெரியுது பாரு...


பரியேறும் பறையர்...


சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.

அவரும் நிலம் வைத்திருந்தார். தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.

அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.

ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார். இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.

ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.

இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார். அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு. அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார். அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.

இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலை வழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு...

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)...

வங்கிகள் மக்களை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டவை...


சுகப் பிரசவம் : கடலூரைச் சேர்ந்த மூலிகை வைத்தியர் அன்னமேரி...


கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகும் நாள் வரைக்கும், முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து, "சூப்' வைத்து சாப்பிட்டால், சுகப் பிரசவ மாகும். வாயு அதிகம் உள்ள வாழைக்காய், உருளைக் கிழங்கு, இறால் மீன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

கருத்தரித்த மூன்றாவது மாதம் முதல், பிரசவமாகும் வரை, வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி இரண்டு ஸ்பூன் உடைத்து போட்டு கஞ்சியாக காய்ச்சி, பால் சேர்த்து, மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால், சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்.

ஐந்தாவது மாதம் முதல், எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதி நீரில் கலந்து, காலை அல்லது மதிய வேளையில் சாப்பிடலாம். ஏழாவது மாதத்திற்குப் பின், வடகத்தை பொரித்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து அரை டம்ளரானதும், குடிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு நாள் செய்தால், சுகப் பிரசவமாகும்.

கர்ப்ப காலங்களில் சிலருக்கு, கை - கால் வீக்கம் வரும். இதற்கு நெல்லிக்காய், முருங்கைக் காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தைசட்டியில் போட்டு வறுத்து, வெடித்ததும், தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். 10 குப்பைமேனி இலையை மென்று, சாப்பிடலாம்; இதெல்லாம் வீக்கத்தை வடித்துவிடும்.

பிரவச நாள் நெருங்கியதும், சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்போது, ஐந்து வெற்றிலை, ஒரு ஸ்பூன் ஓமம், மூன்று பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து, அது வெடித்ததும், நசுக்கிய பூண்டு, பிய்த்துப் போட்ட வெற்றிலையுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, முக்கால் டம்ளரானதும், எலுமிச்சை அளவு வெண்ணெய் அல்லது பனை வெல்லத்தை சேர்த்துக் குடித்தால், சாதாரண வலியாக இருந்தால் நின்றுவிடும்.

வலி தொடர்ந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் இருந்தே உணவில் சில வரைமுறைகளைக் கடைபிடித்தால், தாய் - சேய் நலம் சீராக இருப்பதுடன், அது சுகப் பிரசவத்திற்கும் வழி வகுக்கும்...

தமிழகத்தின் பாஜக ஆளுநர் முகமூடி கிழிகிறது...


சாதியொழிப்பு புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் இசைஞானி இளையராஜா...


தன்னோட பட்டியலில் இருக்கும் சக சக்கிலியன், குறவன், தோட்டி, வெட்டியான் இனத்தில் பெண் கொடுத்து பெண் எடுத்து சாதி மறுப்பை காட்டாத பறையனுக்கு சாதி மறுப்பை பற்றி பேச என்ன தகுதி இருக்கு...

கொள்ளைபோன கொள்ளேகால்...


தமிழகத்தின் வடக்கெல்லை என்றாலே எல்லாரும் வெங்கடத்தைக் காட்டுவர்.
அது வடகிழக்கு எல்லை மட்டுமே.

வட மத்திய எல்லை என்பது சங்ககாலத்தில் காடு. (பெரும்பாலை என்றும் குறிக்கப்படும்).

அக்காடுகளில் சிறு சிறு தமிழ் நாடுகள் இருந்தன.

(அவர்கள் தற்போது பழங்குடிகளாக, தனி மொழி பேசும் இனங்களாகத் திரிந்துவிட்டனர்).

பிறகு காடுகளுக்கு அந்தப் பக்கம் கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.

பிறகு தமிழர்கள் கன்னடரை விரட்டிவிட்டு தாம் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.

பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.

இன்றும் தென் கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் தமிழர் கணிசமாக உண்டு.

இதனாலேயே இப்பகுதி பற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழருக்கு சாதகமாகவும்,

முதல் குடியேற்ற சான்றுகள் கன்னடருக்கு சாதகமாகவும்,

கோவில் கல்வெட்டுகள் மற்றும் நகரங்களின் பெயர்கள் மற்றும் மையநகர நிலவுடைமை தமிழருக்கு சாதகமாகவும்,

புறநகர் நிலவுடைமை மற்றும் தற்போதைய மக்கட்தொகைப் பெரும்பான்மை கன்னடவருக்கு சாதகமாகவும் உள்ளன.

இவ்வாறாக வடக்கெல்லையில் மத்திய பகுதி இழுபறியில் உள்ளது.

கர்நாடகா அமைந்த பிறகு அப்பகுதி தமிழ்க் கல்வெட்டுகளை அழித்தும் மறைத்தும் வந்துள்ளது.

இதனால் நமக்கான சான்றுகள் அழிந்துவிட்டன.

நம்மிடம் இருக்கும் மண்மீட்பு சான்றுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் வெளிக்கொணரப் பட்டவையே ஆகும்.

இத்தோடு கன்னடருக்கு சாதகமான சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.

கல்வெட்டு தலைமையகம் மற்றும் வைப்பகம் மைசூரிலேயே இருப்பது இதற்கு காரணம்.

தமிழகதிற்கு தனியே கல்வெட்டு தலைமையகமும் வைப்பகமும் தராத ஹிந்திய நடுவணரசு தமிழகத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு தமிழரை தலைவராக நியமிக்காமலும் நிதி ஒதுக்காமலும் காலி பணியிடங்களை நிரப்பாமலும் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்துவருகிறது.

வரலாற்றில் நமது பகுதியாக இருந்த இடங்கள் நம் கையை விட்டு போனதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழர் 90% வாழ்ந்த சில பகுதிகளும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆந்திராவிடம் உள்ள இன்றைய சித்தூர் தென்பாதி, கேரளாவிடம் உள்ள பாலக்காடு கிழக்குபாதி போல 1956 இல் அன்றைய  பெரும்பான்மை தமிழர் வசம் இருந்தும் அநியாயமாக கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்டது சாம்ராஜ்நகர் கிழக்கான கொள்ளேகாலம்.

தமிழர் செறிந்து வாழ்ந்த இப்பகுதிகளை அண்டை மாநிலங்கள் தமது எல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொண்டனர்.

ஆனால் இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 95% தமிழர் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் கேரளாவிலேயே இருக்கிறது.

தமிழர் நடத்திய மண்மீட்பு போராட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் திருப்பதி நோக்கியே இருந்தன.

இரண்டிலும் பெரும்பாடு பட்டு பாதி வெற்றியே அடைந்தோம்.

கன்னியாகுமரி போராட்டத்தில் கேட்ட 9 தாலுகாக்களில் நான்கரை தாலுகாக்கள் கிடைத்தன.

திருப்பதி வரை கிடைக்காவிட்டாலும் திருத்தணி வரை கிடைத்தது.

கொள்ளேகால் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த,

வீரப்பனார் பிறந்த பகுதியான இது கன்னடரிடம் உள்ளது...

திராவிட வந்தேறிகளும் ஒழுக்கமும்...


திராவிட பயல்கள் பார்ப்பனர் மீது போட்ட பழியெல்லாம் வந்தேறிகள் செய்து வந்தவை..

இதற்கு சிறந்த உதாரணம் ஈ.வே.ரா மணியம்மை திருமணம்.

1928இல் வயது பொருந்தாத திருமணம் கூடாது என ஈ.வே.ரா கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்,

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்
(குடியரசு 03-06-1928)

1940 இல் அண்ணாதுரை எழுதிய "தாத்தா கட்ட இருந்த தாலி" எனும் கதை வயது பொருத்தமில்லாத திருமணம் பற்றியது.

அதில் ஒரு வயதான பார்ப்பனர் இளம் கன்னியைத் திருமணம் செய்வதுபோல எழுதியிருப்பார்.

ஆனால் அதன்பிறகு ஈ.வே.ரா 72 வயதில் 26 வயதான மணியம்மையை அதாவது வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்.

இதை எதிர்த்து அண்ணாதுரை கட்சியை விட்டு வெளியேறினார்.
ஈ.வே.ராமசாமியை விமர்சித்து கீழ்க்கண்டவாறு எழுதினார்.

'அப்பா! அப்பா!' என்று அம்மை  மனம் குளிர, வாய் குளிர,
கேட்போர் காது குளிரக் கூறவும்;
'அம்மா! அம்மா!' என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்;
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.
அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.
(திராவிட நாடு 03.07.1949)

இதைவைத்து அண்ணாதுரை ஒழுக்கமானவர் மானமுள்ளவர் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
அண்ணாதுரை இதைவிடவும் கேவலமான பின்னணி கொண்டவர்.

அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் எழுதியது வருமாறு,

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை.
அன்னையோ சென்னையில் ஐயரோடு.
(குயில் 30.09.1958)

காஞ்சிபுரம் வாராகி தெரு என்பது தேவதாசிகள் வரும் தெரு ஆகும்.
அங்கே நய்யாண்டி ஐயர் என்பவரது வைப்பாட்டி பங்காரு அம்மாள் என்கிற தேவதாசிக்கு பிறந்தவரே அண்ணதுரை.

அண்ணாதுரை பிரிந்து சென்றபோது ஈவேரா அளித்த விளக்கத்தில் பிரிந்துபோனவர்கள் ஒரே சாதி என்றும் குற்றம்சாட்டினார். (ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 1, பக்கம் 249-250).

ஆம். தேவதாசி சாதிகளான மேளக்கார (பிற்காலத்தில் இசைவேளாளர் என்று மாற்றிக்கொண்டனர்) சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை, மூவலூர் ராமாமிர்தம், கருணாநிதி ஆகியோர் பிரிந்து தொடங்கியதே தி.மு.க.

ஆக பிராமண ஆதிக்கத், உயர்சாதி வெறி, நிலவுடைமை ஆதிக்கம், விபச்சாரம், பெண்ணடிமை, ஒழுக்கமின்மை, தமிழர் வெறுப்பு என வந்தேறிகள் தாம் செய்து வந்த அனைத்தையும் பார்ப்பனத் தமிழர் மீது போட்டு அதை இவர்கள் எதிர்ப்பது போல நடித்து வந்தனர்...

பாஜக பொன். ராதா விற்கு ஆளுநர் சிக்கிக் கொள்வார் என்ற பயம் வந்துடுச்சு...


மனித உடலைப் பற்றி அறிவோம்...


மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்.

1. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 539.

2. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

3. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

4.மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.

5. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.

6.மனித மூளையின் எடை 1.4 கிலோ.

7. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி F.

8.மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.

9. உடலின் மெல்லிய சருமம் கண் இமை.

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.

ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர்.

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன்.

ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.

நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது...

மைதாவில் உள்ள தீமைகள்...


ஆண்களும் அணிந்த தாலி...


தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.

இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.

ஒரு பெண் ஒரு ஆணை நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.

ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது.

பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.

பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.

புலிப்பல் தாலி என்ற அணியை ஆண், பெண்இரு பாலாரும் அணிந்திருந்தனர்என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில்
இருந்து தெரியவருகிறது .

ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள் , பற்கள் , நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.

ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  அணிவிக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வழக்கமே பிற்காலத்தில் ஐம்படைத் தாலியாக வளர்ச்சியடைந்தது.

புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.

சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில்..

 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .

தாலம் என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.

ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்து கொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

எனவே தாலம் என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் தாலி என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது. இதை மைனர் செயின் என்கிறார்கள்)

மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.

ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.

இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.

சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது..

பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.

பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.

குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது...

பாண்டி மகன் சபரி மலை ஐயப்பன்...


நீங்கள் சபரிமலைக்கு ஜோதி தரிசனத்திற்கு போகிறீர்களா?

கேரளாவின் பதிவு எண்   (KL) கொண்ட வாகனத்தில் போனால் பம்பா நதி வரை வாகனம் போகலாம்..

இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம்படி வரையேகூட வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம்..

அதே தமிழ்நாட்டின் பதிவு எண் (TN) கொண்ட வாகனத்தில் போனால்...

ஐயோ பாவம்...வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும்..

மலையேறி சாமி கும்பிட்டு உடல் சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர் தான் உங்கள் வாகனத்தை அடைய முடியும்..

ஏனென்றால் நீங்கள் தமிழன்.

பயணப்பாதைகளிலும்
கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம்நடத்துவது தமிழர்கள் தான். அங்கு எல்லோருக்கும்சம உரிமை உண்டு.

ஆனால், மலையாளிகள் நடத்தும்
கடைகள், சன்னிதானக் கடைகள் இவற்றில்தமிழனுக்கு என்றால் விலை அதிகம்.

சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.

கண்கூடாக் காண முடிவது மலையாள போலீஸாரின் அராஜகம்.

எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்வார்கள்.

2012ல் சபரிமலையில் ஒரு சென்னைத் தமிழனை மலையாள டீக்கடைக்காரன் வெந்நீர் ஊற்றிக் கொன்றான்.

அதை கொலை முயற்சியாக பதியாமல் விபத்து என்று பதிவு செய்தது மலையாளக் காவல்துறை.

இதிலிருந்து அவர்களின் இனவெறிப் போக்கை தெரிந்து கொள்ளுங்கள்.

மலையாள போலீசார் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.

(மலையாளிகளுக்கு அதெல்லாம் கிடையாது)

தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது.

சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக் கொண்டிருக்கிறது சபரிமலையில்..

பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன் தான்.

பழசிராஜா வம்சத்திலோ,வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல.

தமிழர்கள் ஐயப்பனை நாடி அதிகம் வருவார்கள் நிறைய கல்லா கட்டலாம் என்று இதை மறைக்காமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மறைக்காமல் கூறிவந்தனர்.

இப்போது சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில் தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆனால், ஐயப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

தமிழர்களிடம் இனியும் சபரிமலையைக் கொண்டு சேர்க்க வேண்டாம் என்ற அளவுக்கு தமிழர்கள் வரத்தொடங்கிவிட்டனர் அல்லவா..

இப்போது அயாள் ஒரி பாண்டியானு... என்று மட்டும் கூறுகிறார்கள்.

பாண்டி என்ற சொல்லையே கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், ஐயப்பனே அந்தப் பாண்டி யின் மகன் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை.

சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் சாமியே சரணம் ஐயப்பா  என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் (தமிழக) செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம். அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம்.

அதைத் தடுத்தால்வேறு வழியில்லாமல் சிவன் கோவிலில் வழிபாடு செய்பவரும் கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள்,  இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்த போது..

ஐயப்பனின் தீவிர பக்தரான செங்கோட்டை குருசாமி நாடார் என்ற தமிழர் கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார்.

அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.

ஐயப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள்.

1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதிகளாகவே இருந்தன.

எனவே, சபரிமலை என்பது மலையாளிகளுக்குத் தொடர்பேயில்லாத, முழுக்க முழுக்க தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு.

70ஆண்டுகளில் எல்லாம் மாறிப்போனது.

பழனியைப் பார்த்து பொறாமை கொண்ட மலையாளிகள் மாலைபோட்டு விரதமிருந்து கடினமான பயணம் செல்லும் வழிபாட்டு முறையை காப்பியடித்து
ஏற்கனவே தமிழர்கள் சிறிய அளவில் சென்றுவந்த காட்டுக் கோவிலான ஐயப்பன் கோவிலை புது புராணக்கதை ஒன்று புனைந்து தமிழர்களிடமும் மலையாளிகளிடமும் நன்றாக விளம்பரப்படுத்தி காட்டை அழித்து வியாபாரமாக்கி இன்று தமிழன் மீதான இனவெறியைத் தீர்த்துக் கொள்ளும் இடமாகப் பயன்படுத்துகின்றனர்..

கடவுள் மறுப்புக் கொள்கையை வெளியே முழங்கிக் கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய திராவிட வாதிகளால்..

கண்ணகிக்கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் அதைச் சுற்றிய பகுதிகள் வேறு மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.

இன்று பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடிகூட சுமந்து வருவது இல்லை.

பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டு வழியாக வந்து முதல்மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள்.

ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி ஐயப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத்தமிழர்.

ஐயப்பனின் தீவிர பக்தர் அவர்.

அவரது நாடகக் குழுவில் இருந்த போதுதான், ஐயப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்தது.

1949ல் ஐயப்பன் கோயிலில் சிலர் தீவைத்து விட்டனர்.

சிலைகள் உள்பட கோயிலின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் மனம் வருந்திய கேரள பக்தர்கள் சிலர், ஐயப்ப பக்தரும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தையுமான பி.டி.ராசனிடம்
கோரிக்கை விடுத்தார்கள்.

(கோவில் தமிழருடையது அதனால் தமிழர்களிடம் புணரமைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது)அவரும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து ஐயப்பன் திருவுருவச்சிலை ஒன்றைச் செய்தார்கள்.

சிலை செய்யும் பணி கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் நடந்தது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் கண் திறக்கும் சடங்கு நடந்தது .

சுவாமிமலையில் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் தோட்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தமிழகமெங்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சபரிமலையில் நிறுவப்பட்டது.

பல கோயில்களில் ஐயப்பனை வைதீகர்கள் அனுமதிக்கவில்லை.

எல்லைச்சாமியான அய்யனார்தான் ஐயப்பன். (இது உண்மையோ) எனவே அவரை அனுமதிக்க முடியாது என்றார்கள்.

பி.டி.ராசன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஊர்வலத்தை சிறப்பாக முடித்து சபரிமலைக்கு ஐயப்பனைக் கொண்டு சென்றார்.

தற்போதைய ஐயப்பன் திருவுருவச்சிலையை செய்தவர் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதி (ஸ்தபதி=பெருந்தச்சன்)
என்ற தமிழரே..

அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற குறுகியப்பாதைகள் கூடக் கிடையாது.

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற ஐயப்ப சாமிகள் கூட்டமாக இருமுடியோடு, தீப்பந்தங்களை கொளுத்திக் கொண்டு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.

வழியெங்கும் செடிகொடிகளை வெட்டி பாதையமைத்துக் கொண்டே செல்வார்கள்.

அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள்.

தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வடஇந்தியர்கள் வந்தனர்.

இனவேறுபாடு காட்டாமல் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு மற்றவர்களுக்கும் இருமுடி ஏற்றினார்கள்.

மலையாளிகள் செய்தது விளம்பரப்படுதத்துதல் மட்டுமே.

இதன் விளைவாக 75ஆண்டுகள் முன்புவரை தமிழ் வம்சாவவழி மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது.

சபரிமலை புகழ் பெற்றது.

கல்லா நிறைய ஆரம்பித்ததும் தமிழனை வெட்டிவிட நினைக்கிறார்கள் மலையாள ஆன்மீக வியாபாரிகள்.

இதே நிலைதான் கண்ணகி கோவிலிலும்.

அதுபற்றி விரிவான ஒரு பதிவு போடுகிறேன்.

ஆக, சபரி மலையை ஆண்ட மன்னன் தமிழன்.

சிலை வைத்தவன் தமிழன்.

அங்கே கோவில் கட்டி பாதையமைத்து ஆன்மீகத் தலமாக்கியவன் தமிழன்.

அந்தப் பகுதி பெரும்பான்மை மக்கள் தமிழர்கள்.

கோவிலுக்கு சேவை செய்பவர்களும் பெருமளவில் செல்பவர்களும் காசு போடுபவர்களும் தமிழர்கள்.

நிர்வாகமும் பணமும் நிலமும் மலையாளிக்குச் சொந்தமா?

இருக்குடா உங்களுக்கெல்லாம் ஒருநாள்...

பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)...


பிராணயாமம்...

ஐவருக்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.  -- 564

பஞ்சேந்திரிய சக்திகளாகிய ஐந்து வர்ணங்களையுடைய ஒளிகளுக்கு நாயகனாகவும், அவைகளிருக்குமிடத்திற்கு முதலாகவுமுடைய மூலாக்கினியான தான் அதிகமாகப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும் குதிரையாகிய பிரணவம் ஒன்று உண்டு.  அது சத்தியமான ஞான சாதனையை யுடையவர்களுகுப் பிடி கொடுக்கும்.  மற்றவர்களாகிய பொய்யருக்குப் பிடிகொடாமல் போய் குதித்துத் தள்ளிவிடும்.

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை.
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந்தானே.  -- 565

ஆரியனாகிய அக்கினியானது மிகவும் நல்லது.  சூரியன் சந்திரன் என்னும் இரண்டு குதிரைகள் இருக்கின்றன (அவைகளை) பிரகாசிக்கச் செய்துப் பிடித்துக் கொள்ளும் உபாயத்தை அரியவர்கள் கிடையாது.  கூர்மையான அறிவையுடைய நாதனாகிய குருவின் அருளைப்பெற்றால் சேர்த்துப் பிடிக்க வசப்பட்டுவிடும்.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

திசைகளோடு கூடிய உலகமானது அடங்கியிருக்கும் பிரணவத்தினிடத்திலிருந்து சூரிய கலையைப் பதினாறு மாத்திரை யளவாக மேலேற்றுதல் பூரகம்.

வாமபாகத்திலுள்ள சந்திர கலையை முப்பத்திரண்டு மாத்திரையாக கல்ல வைத்தல் ரேசகம்.

பிரணவத்தின் நடுவீட்டில் சூரிய சந்திர கலைகளை அறுபத்திநாலு மாத்திரையளவு அசைவற்று நிறுத்தல் கும்பகம் ஆகும்.

பூரகம்:  பூரிப்பை அதாவது கலை (ஒளி) விரிவை செய்வது.

ரேசகம்: சூரிய கலையோடு, சந்திர கலையை ரேசிக்க அல்லது கலக்கும்படி செய்தல்.

கும்பகம்: பிரணவமாகிய கும்பத்தின் அகம்மென்னும் நடு வீட்டில் இரண்டு கலைகளையும் (சூரிய ஒளி, சந்திர ஒளி) சேர்த்தல்.

பிராணன் வேறு, பிராணனின் அசைவினால் ஏற்படும் வாயுவேறு.  வாசி என்பதைப் பாமரர்கள் மூக்கில் வரும் கழிவு பதார்த்தமாகிய வாயுவென்று உரை செய்வது அடாது.  அப்படி உரை செய்வதினாலே யோகமானது பாமரர்களால் அருவருக்கப்படுகிறது.

இம்மந்திரத்துக்கு மேற்கோளாக முன் ஔவையார் செய்த குரலின் சிவயோக நிலையில் முன்னமேரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம்பிடி.

முதலில் இரேசகதைச் செய்து பிறகு பூரகத்தைச் செய்து கடைசியில் கும்பத்தைச் செய்ய வேண்டுமென்பது கருத்து.

உலகத்தார்  நினைத்துக் கொண்டிருக்கும் கழிவு பதார்த்தமாகிய உஸ்வாச நிஸ்வாசத்தை இந்த முறையில் ஏலாதென்பதைக் கவனிக்கவும்.

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே -- 577

பன்னிரண்டு கலையுள்ள சூரியனுக்கு பகலும், இரவும் இருக்கிறது.  அந்த சூரியனைப் பக்குவஞ் செய்யும் சாதகன் அறியவில்லையே.  அறிந்தபின் சூரியனுக்கு இரவும் பகலும் அற்றுவிடும்.

விளக்கம்:  பிராயணாயாமமாவது சத்தியம்சமாகிய பிராணனையும், சிவ அம்சமாகிய அபானனையும் பிரணவத்தின் மத்தியிலுள்ள விஷ்ணு ஸ்தானத்தில் சேர்த்து மேலெழுப்ப வொட்டாமல் தடுத்தலாகும்.

பிராணாபானனைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் ஆசாரியன் மூலமாய்த் திருவடிகளைத் தரிசிக்க வேண்டிய தந்திரத்தை அறிந்து பிறகு அதன் மூலமாகச் சூரிய சந்திரர்களைக் கண்டு அவைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் உபாயத்தைச் செய்து அவை சேர்ந்தவுடன் எழும்பும் அக்கினியைக் கண்டு அதை மேலே நோக்கும்படி செய்தால் பிராணாபானனைக் காணக்கூடும்.

திருவடி என்பது எது என்பதை நமது  ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மெய்ஞான உபதேசம் வாயிலாக எவ்வித ரகசியமுமின்றி உலக மக்கள் அறிய "திருவடி உபதேசம் " வீடியோவாக அளித்துள்ளார் கிளிக் செய்யவும்.

பிராணாபானனைச் சேர்க்கும் தந்திரம்...

பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளுக்கு மூலகாரணமாக மூலாக்கினியானது அதிகமாய்ப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும்படியான பிரணவமாகிய குதிரையானது, உண்மையான யோக சாதனையை யுடைவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.

சூரியன், சந்திரன் என்னும் இரண்டு குதிரைகளையும் பிரகாசிக்கச் செய்யும் தந்திரத்தைச் செய்தால், அக்கினியின் பிரகாசதத்தைப் காணலாம்.

பட்சியைப் பார்க்கிலும் பறப்பதில் வல்லமையுடைய பிரணவத்தை மேலே கொண்டு போனால் தனக்குத்தானே ஆனந்தத்தைக் கொடுக்கும்.  அபானனை வெளிப்படுத்தி மேல்நோக்காகச் செலுத்தும்.  சோம்பலை ஒழித்துவிடும்.  பிராணனும் மனமும் விட்டுப் பிரியாமலழுந்திப் பிராணனிலுள்ள அசைவு நீங்கினால் பிறப்பு இறப்பு ஒழிந்து விடும்.  இதை விட்டுப் பிராணனுடைய நடையினால் ஏற்படும் பேசும் சத்தம் மாத்திரம் வெளிப்படுவதால் உண்டாகும் அற்பப் பெருமையையடைந்து உலகம் சந்தோஷிக்கின்றது.

திசைகளோடு கூடிய உலகம் அடங்கியிருக்கும் பிரணவத்திலிருந்து பிராணனாகிய சூரியகலையைப் பதினாறு  மாத்திரையளவாக மேலேற்றி மறுபடியும் பிரணவத்தின் மத்திய பாகத்தில் கொண்டு வந்து சேர்ப்பது பூரகமாகும்.

இடது பக்கத்திலுள்ள அபானனாகிய சந்திரகலையை முப்பத்திரண்டு மாத்திரையளவாக சூரியகலையோடு சேர்ப்பது இரேசகமாகும்.

இந்த இரண்டு கலைகளையும் பிரணவத்தின் மத்தியில் சேர்த்து அசைவற்றிருத்தல் கும்பகமாகும்.

பூரகம் பூரிப்பையுடையதாகும். 
இரேசகம் சூரியனோடு இரேசித்தலாகும்.
கும்பகம் பிரணவத்தின் மத்தியில் பிராணாபானனை லயிக்கச் செய்தலாகும். 

பிராணாபான வாயுக்களை இரேசக பூரக கும்பகாதிகளால் வாங்கிப் பிரணவத்தின் மத்தியில் பிரகாசிக்கும் வீட்டில் அடைத்து வைப்பதனால் முதியோனாகினும் இளையோனாய்ப் பளிங்குக் கல்லைப் போலாவான்.  மாத்திரைகள் அப்பியாசிகளுக்கு முதலில் உபயோகமானவை.

பார்வையை உபயோகப் படுத்துவதிலேயே எல்லா யோக தந்திரங்களும் அடங்கி இருக்கின்றன.  பார்வையைச் சூரியகலையினிடத்தில் நிறுத்தி, இடகலையினால் பூரகத்தைச் செய்ய, சூரியகலையானது அதிகப் பிரகாசத்தை அடையும்.  சங்குத்தொனி உண்டாகிற வரையில் சூரிய கலையைப் பார்வையோடு செலுத்திப் பூரகஞ் செய்ய வேண்டியது.

பிராணாபானன்களையும் பார்வையையும் மேல் ஏற்றுவதும் இறக்குவதுமாகிய வழியை அறிந்து கொள்பவர்கள் கிடையாது.  அறிந்து கொண்ட யோகிகளிடத்தில் எமனுக்கு வேலை கிடையாது.  பிரணவத்திற்கு மேல் பாகத்திலும், கீழ்பாகத்திலும், கலைகள் எழும்புவரை பூரித்து, லக்ஷ்மீகரம் பொருந்திய உந்திக்கமலத்தில், சூரிய கலைகள் ஆகிய இவைகள் சேரும்படி செய்தால் மாயையாகிய இருள் நீங்கப்பெற்று சிவத்தின் அருளை உடனே அடையலாம்.

பிங்கலையினால் சூரிய கலைகளைச் சந்திர கலைகளில் சேர்த்துப் பரவிமேலெழும்பும்படி பதினாறு மாத்திரை அளவு பூரிக்க வேண்டியது.  இடகலையினால் சந்திர கலைகளைச் சூரிய கலைகளில் கலக்கும்படி முப்பத்திரண்டு மாத்திரை அளவு இரேசிக்க வேண்டியது.  பிறகு இரு கலைகளும் பிரணவ பீடமாகிய உந்திக் கமலத்தில் சேரும்படி அறுபத்தினாலு மாத்திரை அளவாகக் கும்பிக்க வேண்டியது.

இவ்விதமாக எல்லாத் கலைகளும் சேர்ந்த உந்திக் கமலமானது கலைக் குறைவை அடையாதபடி சந்திரனால் அதிகமாக இரேசிக்க இடா, பிங்கலா, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி ஆகிய இந்த தசவித நாடிகளும் கனத்தை அடைந்துவிடும்.  அப்போது பிராணாபான வாயுக்கள் பிரணவ உச்சிக்குச் சென்று  பரிசுத்தமாகும்.  இதனால் தேகம் சிவந்த நிறத்தை யடைவதோடு சிவம் தேகத்தை விட்டுப் பிரியாது.  மேலும் ஐந்து இந்திரிய சத்திகளும் நக்ஷத்திர கலைகளுஞ் சேர்ந்து ஆக ஒன்பது கலைகளாகிய சத்திகளும் (நவசக்தி) பிரணவமாகிய வீட்டை ஏற்படுத்தி அதில் வகிப்பதற்காக ஓடிவரும்.  மறுபடியும் திரும்பிவிடும்.

இப்படி பலதடவைகளில் ஓடிவருவதும் திரும்பிப் போவதுமாயிருக்கும் சமயத்தில் பார்வையைத் தந்திரமாக மேல் நோக்கினால் எல்லாம் ஒன்று சேரும்.  அப்போது பன்னிரண்டு அங்குள அளவிற்குமேல் சென்று சாதகன் எட்டு அங்குல நீளத்தில்தன் பார்வையின் தந்திரத்தால் துண்டித்துப் பிரித்து விட்டால் அந்த நாளு விரற்கடை நீளமுள்ள கலைகள் ஒன்று சேர்ந்து பஞ்சாக்ஷர சொரூபமாக விளங்கி நிற்கும்.

இந்தப் பிராணாயாம அப்பியாசத்தினால் சூரிய சந்திர அக்கினிகளையும் பிரணவத்தையும் தரிசித்துப் பிரணவத்தின் மத்தியிலுள்ள உந்திக் கமலத்தையும் திறந்து விடலாம்.

உந்திக்கமலமே மௌன பீடமாகவும், நாபிக் கமலமாகவும், இருதய குகையாகவுமிருந்து திறக்கப்பட்டவுடனே ஞானச் செல்வங்கள் வெளிப்பட்டு விடும்...