புதுச்சேரியில் உள்ள பெரிய பேட்டையில் விவசாய மசோதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக சங்கிகளை.. மக்கள் விரட்டி அடித்த கண்கொள்ளாக்காட்சி 😂
பாஜக கூட்டணியில் வருபவர்களுக்கும் இது தான் நிலைமை 😁
புதுச்சேரியில் உள்ள பெரிய பேட்டையில் விவசாய மசோதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக சங்கிகளை.. மக்கள் விரட்டி அடித்த கண்கொள்ளாக்காட்சி 😂
பாஜக கூட்டணியில் வருபவர்களுக்கும் இது தான் நிலைமை 😁
தமிழ் மற்றும் கல்வித்துறை...
1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.
2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.
3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.
4. அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.
5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.
6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.
7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.
8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.
9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.
10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.
11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.
12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்...
குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது.
சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.
ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது. மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையானவை: மஞ்சள், ஏலக்காய், தேன்.
செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும்.
இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும்.
சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சு சளியை கரைக்கும். திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம்.
அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.
பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்சனை தீரும்.
அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். எளிதாக கிடைக்க கூடிய அருகம்புலுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசு குளிப்பதால் தோல் நோய் வராமல் தடுக்கலாம்...
அதிலும் குறிப்பாக சீக்கியர்களால் பாசக அரசு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது தான் சிறப்பான சம்பவம்...
போராட்டக்காரர்கள் இசுலாமியர்களாக இருந்திருப்பார்களேயானால் சங்கிகளின் அரசுக்கு சொல்லவே வேண்டாம் தீவிரவாதிகளை கைகாட்டி இந்நேரம் இதே சீக்கிய இராணுவத்தை வைத்து ஒடுக்கியிருப்பார்கள்...
இப்போது போராடுகிற சீக்கிய விவசாயிகள் மீது கை வைத்தால் என்ன விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று சங்கிகளுக்கு பெரும் மண்டை வலி...
ஒரே தேசம் ஒரே நாடு என்கிற முழக்கமெல்லாம் இந்திய ஒன்றியத்தின் தேசிய இனங்களின் அழிப்புக்கு பிறகே சாத்தியப்படலாம்...
அதற்கு முன் இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்பு பல தேசங்களாயிருக்கும்...
பூமியில் பொருட்கள் கீழே விழ புவியின் ஈர்ப்பு விசை தான் காரணம்..
இந்த ஈர்ப்பு விசை அனைத்து இடங்களிலும் உண்டு..
கிரகங்கள் தங்கள் பாதையில் தடம் மாறாமல் செல்வது கூட இந்த விசையால் தான்..
இந்த உண்மையை எடுத்து உரைத்தது ஒரு இங்கிலாந்து விஞ்ஞானி என்றும் அவர் பெயர் சார் இசாக் நியூட்டன் என்றும் தான் நமது அறிவியல் ஆசிரியர்களும் அறிவியல் புத்தகமும் சொல்லி இருக்கிறது..
ஆனால் இதை அவருக்கு முன்னால் ஒருவர் அதுவும் ஒரு தமிழர் சொல்லி இருக்கிறார் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் இதை நியூட்டனுக்கு முன்னால் ஒருவர் சொன்னதுண்டு.
நியூட்டனுக்கு முன்னால் என்றால் ஏதோ ஓரிரு நாட்கள் முன்னால் அல்ல, நியூட்டன் பிறப்பதற்கு 1200 தமிழ் வருடங்களுக்கு முன்னால் சுமார் கி.பி.400 - கி.பி.500 ஆண்டுகளில் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தம் எனும் நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது..
இதை இயற்றியவர் பாச்கராச்சரியா எனும் தமிழன்..
உண்மையை உலகிற்கு எடுத்துரைப்போம். தமிழர் என்று பெருமிதம் கொள்வோம்...
கார்ப்பரேட் வணிகன் தரும் பாக்கெட் எண்ணெய் எல்லாமே கலப்படம் தான்..
இவர்கள் சட்டத்தை தூக்கி குப்பையில் போடுவோம்..
கலப்படம் இல்லாத சுத்தமான முறையில் சில்லறை விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்...
போக்குவரத்து துறை...
1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.
2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.
3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்..
வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாக்க வேண்டும்..
5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகைச் செய்து கண்காணிப்போடு விபத்தை தடுக்கப்பட வேண்டும்..
6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும்...
1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:
1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.
2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.
3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி
இவைதவிர...
2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து :
சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.
என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:
1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.
2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.
3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்க வேண்டும்..
சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்க வேண்டும்...
நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடுதான் பிறப்பெடுத்துள்ளோம்.
எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.
கடவுளின் மறுவடிவம் தான் நாம்.
அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.
நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.
ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.
உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன்மூலம் சரி செய்யலாம்...
தமிழரின் சாதியை குறிவைப்பது தமிழின அழிப்பின் ஒரு முக்கியமான அங்கம்.
இந்த இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்திலும் சாதி ஒழிப்பு பற்றி வாய் கூட திறக்க மாட்டார்கள்.
சிந்தியுங்கள் தமிழர் இனக்குடி மக்களே இனம் அழிக்க துடிப்பவர்களே தமிழரின் அடையாளங்களை அழிக்கத் துடிக்கிறார்கள்.
ஆரிய திராவிட போலித் தமிழ்த்தேசியம் இந்த தமிழர் இனம் அழிக்கும் கயவர்கள் என்பதை உணருங்கள்...
முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் இதுவரை 5000 'க்கும் மேற்பட்ட 'பரம்வீர் சக்ரா' உள்ளிட்ட ராணுவத்தின் உயரிய விருதுகளை திருப்பி அளித்து விட்டார்கள..
வெட்கக்கேடு...
சொந்த நாட்டு எல்லையை காக்க நின்றதை அவமானமாக கருதும் நிலை ராணுவ வீரர்களுக்கு வருமா?
அம்பானியும், அதானியும் தான் முக்கியம். நாடாவது, ராணுவமாவது, தியாகமாவது? பொறுக்க மத்திய ஆசியாவில் இருந்து இங்கே வந்தோம், அதையே செய்வோம்...
தேசிய இனங்களின் ஒற்றுமை ஓங்குக...
ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிற போது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.
மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.
முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.
வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.
‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.
மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.
விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.
– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.
(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)
இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்...
தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.
தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.
தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.
நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ் கார்டன் திராவிடம்.
சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.
இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.
எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில்..
தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?
திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு...
34 ரூபாய்க்கு பெட்ரோலும், 29ரூபாய்க்கு டீசலையும் ஏற்றுமதி செய்வதை தகவலறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது...
இந்தியாவில் Rs. 80 க்கும் மேல் டீசல், பெட்ரோல் விலை விற்பதின் மூலம் 12 லட்சம் கோடி லாபமடையும் அம்பானி..
இந்திய மக்களுக்கு உலகிலேயே அதிக விலை வைத்து டீசல், பெட்ரோலை விற்கும் மக்கள் விரோதி பாஜக மோடி...
இதுவே ஒரு சாமானியனாக இருந்திருந்தால்...
இரண்டே இருந்தாலும் கூட ஏதோ ஒரு பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாக வந்து இருக்கும்.
அது ஊடக தர்மம்.
ஆனால் இதே தடுப்பூசிகள் ஆதரவாக பிரதமர் முதல் முதல்வர் வரை அனைத்து மந்திரிகளும், தன்னார்வலர்களும் முகநூலிலும் ஊடகங்களிலும் பரிந்துரை செய்து கொண்டு வருவார்கள்...
வள்ளல்கள் என்று வரலாறு பலரைக் குறித்திருந்தாலும், பெரும்பாலான மன்னர்கள் பல்வேறு கொடைகளைச் செய்திருக்கின்றனர்.
பண்டைய வரலாறு, அவர்கள் அளித்த கொடைகளைப் பொறித்து வைத்த கல்வெட்டுகளினாலும் செப்பேடுகளினாலுமே தெரிய வந்தது என்று பார்த்தோம்.
அவர்கள் அளித்த முக்கியமான தானம் நிலங்களை இறையிலி நலமாக கோவில்களுக்கும் சில சில தனிப்பட்ட மனிதர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.
இதில் தேவதானம் என்பது சிவன் கோவிலுக்கு அளிக்கப்படும் தானம்.
திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கும் பள்ளிச் சந்தம் என்பது சமண பள்ளிகளுக்கும் வழங்கப்படும் தானம்.
நம் தமிழ் மன்னர்கள் எல்லா சமயத்தையும் போற்றி வந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.
இது தவிர பிராமணர்களுக்கு கொடுக்கப்படும் தானத்தை பிரம்ம தேயம் என்றும் சோதிடர்களுக்கு வழங்கப்படுவதை கணி முற்றுட்டம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.
தானம் செய்யப் போகிற நிலத்தின் எல்லையை வகுக்க மன்னர்கள் கையாண்ட முறை விசித்திரமானது.
ஒரு பெண் யானையை குறிப்பிட்ட இடத்திலிருந்து நான்கு திசையும் நடக்கச் செய்து, அது நடந்த எல்லைகளைக் குறித்துக்கொண்டு, அதற்கு உட்பட்ட இடத்தைத் தானமாக வழங்குவது அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது...