16/01/2019

சும்மா டீ சாப்பிடுங்க.... விபத்தை தவிர்க்க போலீசாரின் புது டெக்னிக்...


சாலை விபத்துக்களை தவிர்க்க, அதிகாலை நேரத்தில் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களுக்கு டீ கொடுத்து  வருகின்றனர் அரியலூர் போலீசார்.

பொதுவாக நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகாலை நேரத்தில்தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. டிரைவர்கள் தொடர்ந்து தூக்கமின்றி தொடர்ந்து வாகனங்களை ஓட்டி வருவதே இதற்கு காரணம்.

அதிகாலை நேரத்தில் சாலை விபத்துக்களை தவிர்க்க அரியலூர் போலீசார் மேற்கொண்டுள்ள புதுமையான நடவடிக்கை அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. அாியலூர் நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை வரும் வாகனங்களை நிறுத்தும் போலீசார் அந்த வாகன டிரைவர்களுக்கு  வெந்நீர் மற்றும் டீ  கொடுக்கின்றனர். போலீசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த தினங்களுக்கு முன்பு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி ஜெயம்கொண்டான் துணைடிவிஷனுக்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு அரியலூர் எஸ்.பி. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து டி.பாலுர் போலீசார் சாலையில் டிரைவர்களுக்கு டீ வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்...

கார்பரேட் பொருளை வாங்கி நோய்களை சம்பாதிக்காதே தமிழினமே...


இலுமினாட்டி கள் ஏன் தமிழகத்தை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்..?


தமிழா எதிர்த்துக் கொண்ட இரு.. ஒரு நாள் அவர்களின் எதிர்ப்பு குறையும் நமது வெற்றியின் பயணம் தொடரும்..

இலுமினாட்டி (வணிகர்கள்) தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்...

தெலுங்கர் வைகோ நாயூடுவை நம்பும் தமிழர்களே சிந்தியுங்கள்...


ம.தி.மு.க தெலுங்கு வை. கோபால்சாமி நாயுடு ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு முதல் ஆளாக மேடை மேடையாக வாய் துப்பாக்கி சுடுவார்....

ஆனால் குறிஞ்சாக்குளம் தமிழர்களை படுகொலை செய்த தன் உடன்பிறந்த தம்பி ம.தி.மு.க தெலுங்கு ரவிச்சந்திரன் நாயுடுவுக்கு வாய்துப்பாக்கியை அப்படியே வாய்பூட்டு போட்டு ஆதரிப்பார்...

அதிமுக அரசே தயாரா.?


ரயில் வருகையை வாட்ஸ் அப்பில் அறியலாம் - இந்தியன் ரயில்வே அறிவிப்பு...


ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் இருந்தால் போதும்” என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை நேரடியாக  உடனுக்குடன் அளிக்க புதிய வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எப்படி பெற வேண்டும். அதாவது

முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும்

இரண்டாவதாக வாட்ஸ் அப் செயலிக்குச் செல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயில் எண்ணை அனுப்ப வேண்டும்.

அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அதில் ரயில் எண் என்ன?. அதன் பெயர்? எந்த தேதியில் ரயில் புறப்பட்டது? எந்த ரயில் நிலையத்தைத் தாண்டி உள்ளது? அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும்? உள்ளிட்ட தகவல்கள் அதில் வரும். அதுமட்டுமல்லாமல், ‘’நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது. இந்த சேவையை ரயில்வே துறை, ‘’மேக் மை ட்ரிப்’’ உடன் இணைந்து அளிக்கிறது. இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்...

திராவிடன் என்பவன் யார்.?


மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்...


தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்...

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

கை கால் குடைச்சல், கால் வலி, குதிங்கால் வலி, மூட்டு வலி, கண் எரிச்சல், தலை வலி, உடல் வலி – இவைகள் வருவதன் காரணம் என்ன? நீக்க என்ன செய்ய வேண்டும்?


அடுத்தவருடைய கஷ்டங்களை எல்லாம் காது கொடுத்து உற்றுக் கேட்கும் போது கேட்பவருக்குக் கை கால் குடைச்சல் வருகின்றது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம். என் பையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள்.

அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்து பேசினார்களோ அங்கே தான் அமர்ந்து பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன் இதே இராமாயணம் தான். சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்... எல்லாம் போய்விட்டது என்பார்கள்.

ஏனென்றால் எந்தக் கஷ்டமானதைக் கூர்ந்து கேட்டார்களோ இந்த உணர்வுகள் அவர்களைச் சாடிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் உதவும்.

காதிலும் கேட்டோம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம். வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலை வலி எல்லாமே வந்துவிடும். கடைசியில் டாக்டரிடம் தான் போக வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது உடனே எழுந்திருந்து விடலாம்.

ஆனால் அடிக்கடி சங்கடமாக பேசிக் கொண்டிருந்தால் உடலுக்குள் அங்கங்கே அந்த விஷம் தேங்கி நிற்கும். இந்த (சங்கடப்படும்) உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

நாம் மூச்சு (இந்தப் பிராணவாயு) எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும். அது கலந்து நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் துடிக்க வேண்டும். 

கொஞ்ச நேரம் சலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் (கை கால் தலை இடுப்பு) மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் தடைப்பட்டால் இது போய் மோதியவுடன் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.

அதைத் தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி குதிங்கால் வலி என்றெல்லாம் சொல்வார்கள். நடக்கவே முடியாமல் கூட வரும். நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படியே அந்த வலி வரும்.

1.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.

2.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.

3.உட்கார்ந்திருந்தால் எழுந்திருக்க முடியாது.

4.படுத்த நிலையிலிருந்து உடனே எழ முடியாது.

5.வேலை செய்யும் போது தெரியாது படுத்தவுடன் கால் வலி பயங்கரமாக இருக்கும்.

6.இந்த மாதிரிச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நாம் கேட்டுணர்ந்த சுவாசித்த உணர்வுகள் விஷத் தன்மையாகி நம்மைப் பலவீனப்படுத்தும். உடல் உறுப்புகளுக்குள் அங்கங்கே தேங்கி விடும்.

நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும். நாம் தவறு செய்தோமா…?

பிறருடைய கஷ்டங்களையும் சிரமங்களையும் கேட்டு அறிந்து கொண்டோம்.

1.அதைச் சுத்தப்படுத்துகின்றோமா...?

2.அல்லது அவர்கள் கஷ்டங்களைச் சொல்லும் பொழுது உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கும்.

3.இனிமேல் கஷ்டமே உங்களுக்கு வராது என்று ஏதாவது நல்லதைச் சொல்லக் கற்றிருக்கின்றோமா...?

4.சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கஷ்டத்தைக் கேட்டு நாம் வேதனைப்படத் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

என்னிடமும் நிறைய கஷ்டம் இருக்கின்றது என்று நம் கஷ்டங்களையும் பதிலுக்குச் சொல்லி கஷ்டமானவைகளைப் பேசுவதே பழக்க வழக்கமாக இருக்கின்றது.

உடல் வலி மேல் வலி எல்லாம் வந்த பிற்பாடு என் நேரம் சரியில்லை...

தெய்வம் என்னைச் சோதிக்கின்றது...  அது சரியில்லை.. இது சரியில்லை... எதை எதையோ சொல்லத் தொடங்குகின்றோம்?

நாம் நுகர்ந்த சங்கடமான உணர்வுகள் தான் இவ்வளவுக்கும் காரணம் என்று எண்ணுவதில்லை. அதைத் தூய்மைப்படுத்தாதபடி அதனால் வந்த உடல் வலியினால் வேதனையை வளர்க்கத்தான் முடிகின்றது.

இதை யார் தூய்மைப்படுத்துவது...? தெய்வம் வந்து தூய்மைப்படுத்துமா..? சாமியார் துடைப்பாரா...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

அடுத்து அது என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா உடலுக்குள் செலுத்தினாலே போதும்.

1.கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும்.

2.ஈஸ்வரா என்று புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

3.தலையிலிருந்து கால் வரை உடல் உறுப்புகள் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் அப்படியே ஒரு சர்குலேசன் மாதிரி இதே போல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதைச் செய்து வாருங்கள். உங்கள் நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். தொழில் எந்த முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும்.

நாளைய விஞ்ஞான அழிவுகளிலிருந்து வரக்கூடிய சில விஷத்தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ள உதவும்.

இவ்வளவு சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்...

சிந்தித்துப் பார் தமிழினமே...


ஸ்வர தாள குறிப்புகள்...


தாளத்தின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்கு (4) ஸ்வரங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

’           = இது ஒரு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’          = இது இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’’         = இது மூன்று அட்சர காலத்தைக் குறிக்கும்.

 .           = இது ஸ்வரத்தின் மேல் இருந்தால் “ தாரஸ்தாயி” என்றும்.. ஸ்வரத்தின் கீழ் இருந்த்தால் “மந்திரஸ்தாயி” என்றும் குறிக்கும்.

*           = இது வர்ணத்தின் ஆரம்ப இடத்தைக் குறிக்கும்.

-            = இது ஸ்வரங்களைப் பிரித்துப் பாடும் இடத்தைக் குறிக்கும்.

 |           = இது தாளத்தின் பிரிவைக் குறிக்கும்.

||           = இது தாளத்தின் முடிவைக் குறிக்கும்.

2, 3, 4,  = இந்த நம்பர்கள் எழுத்தின் பக்கத்தில் வந்தால் அந்த எழுத்தின் சப்தத்தைக் குறிக்கும்.

சாதியை நம்மிடம் சேர்த்தது ஆரியம் என்றால் அதை வளர்த்தது திராவிடம்...


பாம்படங்கள் தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும்...


இருபது வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் நம் எல்லார் வீட்டிலும் பாட்டிமார்கள்.. காது தொங்கும் நகைகளை அணிந்த வண்ணம் இருப்பார்கள்.

இதனை நாம் தண்டட்டி , பாம்படம் என்று அழைக்கிறோம்.

சிறுவயதிலேயே காதுகுத்தி மரத்துண்டு பயன்படுத்தி அல்லது குச்சம் காளி தொங்க விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காதை நீளமாக வடித்து..  தண்டட்டி , பாம்படம் அணிந்து கொண்டனர்.

இதை அணிந்த பாட்டிமார்களை பார்க்கும் போது காது விழுந்து விடுமோ என்ற பயம் ஏற்படும்.

பாம்படம் என்பது பந்து, கனசதுரம்,  வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை.

ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும். அரிதுளுவன்.. பன்னீர் செம்பு.. தாமரை கால் , சுண்ணா கலயம் என்ற பல வகைகள் உண்டு..

தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு வகையான வடிவங்களை உள்ளடக்கிய இந்த பாம்படங்களும் ஒரு அறிவியல் படைப்பே ஆகும்.

இந்த நகைகள் உள்ளீடற்ற.. இலகுவான அமைப்பில் செய்யப்படும்.. மெழுகு வார்த்து.. உட்பொருளாக சேர்கப்படும்.

அட்டியல் , காசு மாலை.. போன்ற ஆபரணங்களையும் இப்போது காண முடியவில்லை..

இன்று வெகு சில பாட்டி மார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து நம்மோடு இருகிறார்கள்..

இன்னும் சிலவருடங்கள் கழித்து நாம் புகைபடத்தில் மட்டுமே இதை காண முடியும்...

திமுக வின் சாதனைகள்...


அலையின் தொடர்பு...


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

ஓவ்வொரு வேலையும் காதல் கொண்டு செய்யுங்கள்...


அந்த காதலில் மெய் மறந்து விடுவீர்கள்...

பின் எதுவானாலும் புதுப்பொலிவுடன் இருப்பீர்கள்...

இயற்கையை நேசிப்பவன் வாழ்க்கையை தொடர்கிறான்...


இந்திய பெருஞ்சுவர்...


இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு வரலாற்றின் பல நூற்றுக்கணக்கான நூல்கள் மற்றும் நாட்டுப்புற கதைகளை தோற்றுவித்துள்ளது. ஆனால் இன்றும் கூட, அது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தெளிவற்ற நிலையிலேயே புதைக்கப்பட்டு உள்ளது. அவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சி;

மத்தியப்பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிராமத்தில், 80-120 கிமீ நீளமான, 20 அடி உயரமும், 9 அடி அகலமும் கொண்ட ஒரு சுவர் உள்ளது, அது நமது நாட்டில் நீண்ட காலமாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் புதைந்துள்ளது.

இந்த சுவர் 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை பழமையானது என்றாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டதாக கருதப்படுகிறது. பல வரலாற்றாசிரியர்கள் சுவர் ஒரு பார்மர் கோட்டையின் ஒரு மிச்சமீதியாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர், இது 1,000 ஆண்டு பழமை வாய்ந்த இராச்சியம் இருப்பதை நிரூபிக்கும் வகையில், இந்தியாவில் மிக நீளமான கோட்டையாகவும், உலகிலேயே இரண்டாவது கோட்டையாகவும் உள்ளது.

கோரக்பூர்-தியோரிலிருந்து தொடங்கி, ரெய்சன் மாவட்டத்தில் சாயன்பூர் பார்டியில் சோகிகார் வரை செல்லும் இந்த நீளமான சுவர், நவீன அனைகள் போன்றும் காணப்படுகிறது. மேலும் இந்த சுவர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல நினைவுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சுவரோவியங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சுவர்கள் பிரிட்டிஷ்ரால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என்று பலர் வாதிட்டாலும், கார்பன் கால ரேடியோ வருடங்கள் ஒத்துபோக மறுக்கிறது. இந்த சுவரின் நோக்கம் என்னவென்றால், படையெடுப்பாளர்கள் அல்லது தொற்றுநோய்கள் அல்லது இயற்கை பேரழிவுகளைத் தவிர்ப்பதற்க்கு இருக்கலாம் என்றும் ஒரு குழு கூறுகிறது. ஆனால் இந்த சுவர் யாரால்? எப்போது? எதற்க்கு? கட்டப்பட்டது. என்ற பதிலை தன்னார்வு தொல்பொருள் ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.. !!

இந்த சுவர் விரைவில் ஒரு சுற்றுலா தலமாக மாறும், ஆனால் சர்வே ஆஃப் இந்தியா, இந்த மர்ம சுவரை விசாரிக்க உடனடி திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்று செய்தி அறிக்கை கூறுகிறது...

பாஜக மோடி வருகைக்காக ஒடிசாவில் மரங்கள் அழிப்பு...


ஒடிசா மாநிலம் குர்தா - பாலாங்கிர் இடையேயான ரயில்வே போக்குவரத்தைத் தொடங்கி வைக்க நாளை பாலாங்கிர் செல்கிறார் பிரதமர் மோடி.

இதற்கிடையில், பாலாங்கிர் நகரில் ரயில்வேக்குச் சொந்தமான 2.25 ஹெக்டேர் நிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு நகர்ப்புற மரவளர்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது அங்கு மரங்கள் நன்கு வளர்ந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை பாலாங்கிர் செல்லவுள்ளதால் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க  அந்தப்பகுதியில் உள்ள 1.25 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.

மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிராக, பல இயற்கை ஆர்வலர்கள் தத்தம் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில், பாலாங்கிர் பகுதியில் மரங்களை வெட்ட எந்த அனுமதியும் பெறவில்லை என ஒடிசா மாநில வனத்துறையும் தெரிவித்துள்ளது...

சேலத்தில் ஆட்டிறைச்சி 2 கிலோ ஓசியாக கேட்டு முதியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் இவர்கள் தான்...


தும்மலை எப்போதுமே அடக்கக்கூடாது ஏன் தெரியுமா ?


தும்மல் என்பது நம் உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக்களுக்கு எதிரான இயற்கையின் தற்பாதுகாப்பாகும்.

நாம் தும்மும் போது நம் உடலுக்குள் நுழைய முயலும் பாக்டீரியா அல்லது ஏதேனும் தீமையான துகள்கள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேற்றப்படும். இந்த வழியில், ஆபத்தான தொற்றுக்கள் நம்மை அண்டாமல் தும்மல் நம்மை பாதுகாக்கும்.

பொது இடத்தில் தும்மும் போது, தும்முபவர் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படலாம். அதனால் நாம் தும்மும் போது, நம் அருகில் உள்ளவர்களிடம் 'எக்ஸ்க்யூஸ் மீ' என கூறுவது வழக்கம். இருப்பினும், நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் 'கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்' அல்லது 'நீண்ட ஆயுளை பெறுங்கள்' என நம்மை ஏன் வாழ்த்துகிறார்கள் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

அதற்கு காரணம், தும்மலை தடுக்க முயற்சி செய்தால், அது நம் உயிருக்கே ஆபாத்தாய் போய் முடியலாம். ஆம், இது உண்மை தான்.

தும்மலை ஒரு போதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை உண்டாக்கி விடலாம். தும்மலால் எழும் காற்று அழுத்தம் காதுகள், மூளை, கழுத்து போன்ற ஏதேனும் உறுப்பிடம் திசை திரும்பி விடலாம். இதனால் அவைகளுக்கு பாதிப்பு உண்டாகும். தும்மலை நிறுத்த முயற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்தான உடல்நல தாக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அடுத்த முறை தும்மல் வரும் போது, அதை ஒருபோதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள்.

தும்மலை நிறுத்துவது ஏன் ஆபத்தில் முடிகிறது?

தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும். நீங்கள் தும்மலை நிறுத்தினால், இந்த காற்று அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும். ஒரு வேளை காதுகள் என்றால், செவிப்பறைகளில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போகலாம். தும்மலை நிறுத்துவதால் உடல்நலத்தின் மீந்தும் கூட தீமையான தாக்கங்கள் ஏற்படலாம். தும்முவதால் நம் உடலுக்குள் நுழைய முயலும் தீமையான பாக்டீரியாக்கள் பலவற்றை வெளியேற்றும். தும்மலை நிறுத்துவதால், இத்தகைய ஆபத்தான கிருமிகள் நம் உடலிலேயே தங்கி, நோய்களை உண்டாக்கும்.

தும்மலை நிறுத்துவதால் ஏற்படும் பிற தீமையான தாக்கங்கள்...

தும்மலை நிறுத்தினால் காற்றின் அழுத்தம் உள்ளே அடைபட்டு விடும். அதிகரித்த காற்று அழுத்தத்தினால், உங்கள் கண்களின் இரத்த தந்துகிகள் பாதிப்படைவதால் கண்கள் பாதிப்படையலாம் மற்றும் காதுகள் கேட்காமலும் போகலாம்.

வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது...

கழுத்து காயங்கள் மற்றும் இடைத்தடுப்பில் பாதிப்பு போன்றவைகளும் உண்டாகலாம். சில அரிய நேரங்களில், மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் முறிவுகளால் வாதமும் ஏற்படலாம்.

நாம் ஏன் தும்மலை நிறுத்துகிறோம்?

பொது இடத்தில் இருக்கும் போதோ அல்லது தும்மல் என்பது தர்மசங்கடமாக கருதப்படும் சில இடங்களில் இருக்கும் போதோ, நாம் தும்மலை நிறுத்த முயற்சி செய்வோம். பிறருக்கு தொந்தரவை அளிக்கலாம் என்ற காரணத்தினால், தும்மலை நிறுத்துவது நல்லதாகவும் ஒழுக்கமான ஒன்றாகவும் கருதப்படும். இருப்பினும், கண்டிப்பாக இது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. உயிருக்கே ஆபத்தானதாக இருப்பதால், எப்போதும் தும்மலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

தும்மல் வருவது வெட்கமாக இருந்தால், உங்கள் மூக்கில் கைக்குட்டையை வைத்து தும்மவும். இதனால் குறைந்த சத்தத்துடன் தும்முவது என தும்மும் முறைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் மூக்கையும் வாயையும் கைகளால் மூடிக்கொண்டும் தும்மலாம். அப்படி செய்யும் போது, தும்முவது முறையற்றது என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள்...