19/01/2018

சென்னையில் குட்கா விற்க லஞ்சம்: போலீஸ் இணை கமி‌ஷனர்கள் 2 பேர் சிக்குகிறார்கள்...


தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தடையை மீறி குட்கா மிக அதிக அளவில் தங்கு தடையின்றி சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2016-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. குறிப்பாக சென்னை புறநகரான செங்குன்றத்தில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு குட்கா விற்கப்படுவதாக மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து 2016-ம் ஆண்டு மே மாதம் செங்குன்றத்தில் ரகசியமாக இயங்கி வந்த குட்கா குடோன்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குட்கா நிறுவன பங்குதாரர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் என்பவர் வீட்டில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அந்த டைரியில், சென்னையில் குட்கா விற்பனை செய்வதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரூ. 40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அந்த டைரியை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் குட்கா விற்பனை பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மாதவராவ் “குட்கா லஞ்சம்“ தொடர்பான முழு தகவல்களையும் வாக்கு மூலமாகக் கொடுத்தார். அதைப் பதிவு செய்து கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தகவல் கொடுத்தனர்.

தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பிய வருமான வரித்துறையினர், தமிழக அமைச்சரும், போலீஸ் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை இணைத்திருந்தனர். அதன் அடிப்படையில் லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், குட்கா லஞ்சம் குறித்த கடிதம் மீது அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதம் இந்த விவகாரத்தை இந்து ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியது.

இதுபற்றி விளக்கம் அளித்த தமிழக அரசு, “வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள் காணாமல் போய் விட்டது என்று கூறியது” இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குட்கா விற்க அமைச்சரும், போலீஸ் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே குட்கா லஞ்சம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு பக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த விவகாரம் பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் குட்கா விற்க லஞ்சம் வாங்கியவர்களில் மேலும் இரண்டு இணைப்போலீஸ் கமி‌ஷனர்களுக்கு தொடர்பு இருப்பதை ஆங்கில நாளிதழ் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

சென்னையில் குட்காவை தங்கு தடையின்றி விற்பனை செய்வதற்கும், செங்குன்றம் குடோன்களில் இருப்பு வைப்பதற்கும் அந்த இரு போலீஸ் கமி‌ஷனர்களும் ரூ.65 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரு போலீஸ் இணை கமி‌ஷனர்களும், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் ரூ.65 லட்சத்தை லஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்த லஞ்சத் தொகை எந்தெந்த தேதிகளில் கை மாறியது என்பதற்கான குறிப்புகளும் அந்த ரகசிய டைரியில் இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் உயர் அதிகாரிகள் தவிர சுங்க வரித்துறை உயர் அதிகாரிகளும் சென்னையில குட்கா விற்க லஞ்சம் வாங்கியதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஒருவருக்கு லஞ்சமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருக்கும் குறிப்பும் ரகசிய டைரியில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் குட்கா நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் மூலம் உறுதிபடுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற சமரச திட்டத்தின்படி மாதவராவ் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

எனவே லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு குட்கா ஊழல் பற்றி எழுதிய கடிதத்தை வருமான வரித் துறையினர் சமீபத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டில் உள்ள சசிகலா அறையில் இருந்து கைப்பற்றினார்கள்.

இதையடுத்து தமிழக டி.ஜி.பி.க்கு வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் சசிகலா அறைக்குள் எப்படி வந்தது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதோடு குட்கா ஊழலுக்கும் சசிகலாவுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் குட்கா விற்பனை செய்யப்படுவது தடுத்து நிறுத்த முடியாதபடி உள்ளது. குட்கா நிறுவனம் சார்பில் போலீசாருக்கு லஞ்சம் வழங்கப்பட்ட தகவல் அம்பலமான பிறகும் அதே பாணியில் குட்கா புகையிலை விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை சென்னையில் ரூ.385 கோடிக்கு குட்கா புகையிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவ்ராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரியில்தான் இந்த தகவல் கிடைத்துள்ளது.

இதுபற்றி மாதவ்ராவ் கூறுகையில், “ரூ.385 கோடி விற்பனையில் குட்கா நிறுவனத்துக்கு நிகர லாபமாக ரூ.188.13 கோடி கிடைத்தது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே வருமான வரித்துறை அதிகாரிகள் அம்பலப்படுத்திய ரூ.40 கோடி லஞ்சம் மீதும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.40 கோடிக்கும் வரி விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்கப்பட்ட தொகை செலவின வகையில் வராது என்றாலும் வருமான வரித்துறையினர் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இனி கோர்ட்டு விசாரணைக்கு பிறகு வரும் தீர்ப்பை பொறுத்தே அடுத்த நடவடிக்கைகள் அமையும்...

பாஜக வின் பங்கு சந்தை அரசியல்...


ஜெயலலிதா 5 ஆம் தேதி தான் மரணமடைந்தார், தேவையில்லாத குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றது - அப்பல்லோ அறிக்கை...


தீவிரமடையும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்: திருத்தங்கலில் இன்று ரயில் மறியல்​​...


திருத்தங்கல்: பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதனையடுத்து திருத்தங்கலில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்ட அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தங்கல், சிவகாசி, சாத்தூர் ரயில் நிலையங்களில் ஏராளமான குவிக்கப்பட்டுள்ளனர்...

மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பு என்ற இயக்கத்தை தொடங்கினார் மாவீரன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...


ஆண்டாள் ஒரு தலித்தாக பிறந்தால் என்ன தவறு? - திமுக கனிமொழி...


தமிழ்நாட்டில் தமிழ்ச்சாதிகள் சிலவற்றை தலித் அடையாளப்படுத்தும் கனிமொழி உண்மையில் தன் சாதி வரலாற்றை  சிந்திக்க வேண்டும்.

கனிமொழி தந்தை கருணாநிதி தெலுங்கு மேளம் ஆவார். கனிமொழி சாதி சார்ந்த முத்து லெட்சுமி, மூவார்மிதம் அம்மையார் எல்லாம் பொட்டு கட்டி எனும் தேவதாசி சாதி ஆவார்கள்.

சமூக மாற்றத்தில், அரசியல் அதிகாரத்தில் தேவதாசி முறையை ஒழித்து, பெயரை இசை வேளாளர் என மாற்றினாலும், வரலாற்றில் தேவதாசி சாதியாக தன் சாதி இருந்ததை கனி மொழி மறைக்க முடியுமா?

ஒரு தேவதாசி சாதியிலிருந்து மேம்படுத்திக் கொண்ட  கனிமொழி தமிழ்ச்சாதிகளை தலித் என கீழாக சொல்வது சரியா?

உண்மையில் ஒடுக்கப்பட்ட தலித் யார்? உழைக்கும் சாதிகளா? பார்ப்பனர்களுக்கும் ஜமிந்தார்களுக்கும் ஆசை நாயகியாக நேர்ந்து விடப்பட்ட சாதிகளா?

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

தற்சார்பு தமிழர் இனம்...


மனம்...


பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.

அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.

புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.

ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.

நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.

ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.

மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.

மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.

முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும். வேறு வழியே இல்லை...

வெயிலில் நின்று போராட வேண்டியதில்லை.. தொண்டை வறண்டு போக முழங்கமிட வேண்டியதில்லை. நிழலில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தை வழிநடத்த இயலுமென்றால், அதற்கு ஒரே வழி கிராமசபை தான்...


கிராமசபை மூலம் நமது கிராமத்தின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு  தீர்வுகளை ஏற்படுத்த முடியும்.

ஆனால் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு, நாம் ஒன்று சேர்வதில்லை என்பதற்கு கிராம சபையே சிறந்த உதாரணம்.

நமது கிராமத்தின் வளர்ச்சி சார்ந்த பணிகளை செயல்படுத்தவும், அவற்றை கண்காணிக்கவும் நம்மால் முடியுமென்றால், அதற்கான ஒரே அதிகாரம் கிராம சபை மட்டுமே..

ஜனவரி 26. உங்கள் கிராமத்தில், உங்கள் தேவைகளுக்காக நடக்கும் கிராம சபையில் கலந்து கொள்ளுங்கள்...

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்...


புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும்.
பித்தத்தைக் குறைக்கும்
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்...

இன்றைய மீடியாக்கள் தான், தமிழ் சமூகம் அழிவதற்கு முதற்காரணம்...


மத்திய அரசின் கழுகு ஒன்று அந்த சமயத்தில் அப்பல்லோவில் இருந்தது. அவருக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது...


அவர் உயர்ந்த பதவிக்கு சென்று விட்டதால் அவர் பெயரைக் கூறவும் முடியாது; அவரைபற்றி விமர்சிக்க கூடாது. - மன்னார்குடியில் திவாகரன்...

தமிழா சாகர்மாலா திட்டத்தை விரட்டி அடிப்போம்...


உள்நாட்டிலேயே கட்டப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த், கடந்த பத்து மாதங்களாக பழுந்தடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் ஏற்பட்ட பழுதுக்கு “மனிதத் தவறே” காரணம் என கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாக “இந்து” பத்திரிகை தெரிவித்துள்ளது...


அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலின் உந்துவிசை இயந்திரப் பிரிவினுள் (Propulsion compartment) தண்ணீர் புகுந்ததே பழுதிற்கு காரணமாம். இயந்திர அறையின் கதவைச் சரியாக பூட்டாததன் காரணமாகவே அதனுள் தண்ணீர் புகுந்து விட்டதாக இந்து பத்திரிகை தெரிவிக்கிறது.

அரிஹந்த்துக்கு துணையாக ரசியாவிடமிருந்து குத்தகையாகப் பெற்றுள்ள ஐ.என்.எஸ் சக்ரா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் அரிஹந்த் பழுதாவதற்கு முன்பே செயல்படாத நிலையில் உள்ளது. இக்கப்பலில் உள்ள ஒலி வீச்சளவுக் கருவி (Sonar Dome) விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நுழையும் போது இடித்துக் கொண்டதில் சேதமடைந்துள்ளது.

இந்திய கடற்பாதுகாப்பிற்கு போர்தந்திர ரீதியில் வலுவூட்டி வந்த அரிஹந்த் நீமூழ்கிக் கப்பல் தான் அணு ஆயுத ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் ஆற்றல் பரிசோதிக்கப்பட்ட ஒரே நீர்மூழ்கிக் கப்பல் என இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் பெருமையுடன் குறிப்பிடுவார்கள். கடந்த 2016 அக்டோபரில் தான்  அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்த் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2009 -ம் ஆண்டு வெள்ளோட்டமிடப்பட்டு, பல்வேறு சோதனைகளை செய்து வந்த அரிஹந்த் கப்பல் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக தொழிநுட்ப பிரச்சினைகளையே சந்தித்து வந்துள்ளது.

இந்த லட்சணத்தில் எதிர்காலத்தில் மேலும் ஐந்து அரிஹந்த் கப்பல்களைக் கட்ட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தரைதட்டி நிற்கும் அரிஹந்த் கப்பலைக் கட்ட 14,000 கோடியும் 30 ஆண்டுகளும் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய சீன எல்லைத் தகராறு தோன்றிய நிலையில் தான் ஆட்சித் தலைமையில் உள்ளவர்களுக்கு நீர்மூழ்கிக் கப்பல் தரைதட்டி நிற்கும் கவனத்துக்கு வந்துள்ளது என ‘தேசபக்தியுடன்’ தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இப்போதும் கூட இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் சீனா குறித்த பரபரப்புச் செய்திகளை தொடர்நது வெளியிட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் தளபதியே சீனாவை வெல்வோம் என சினிமாவில் விஜயகாந்த் மிரட்டுவது போல பேசுகிறார். ஆனால் இவர்களது பலம் என்ன,திறமை என்ன என்பதை ஒக்கி புயலிலேயே பார்த்து விட்டோம். கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்ற தைரியமற்ற இந்த சிங்கங்கள்தான் நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்பதற்கு எது அளவுகோல்?

கோடிக்கணக்கில் வறுமையில் வாடும் மக்களையும், பாதாளத்தில் பாயும் பொருளாதாரத்தையும் வைத்துக் கொண்டு ‘போட்டிக்கு பிள்ளை பெற்ற கதையாக’ இராணுவத்துக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினால் அது இப்படித்தான் சந்தி சிரிப்பதாக அமையும்...

நாம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளை பொருட்களை வாங்குவதே இதற்கு தீர்வாகும்...


மத்திய அரசே கல்வியை அனைவருக்கும் இலவசமுனு அறிவியுங்க பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை சட்டத்திற்கு கடும் கண்டனம் மக்கள் சேவை இயக்கம்...


மகாகவி பாரதியார் பிறந்த தமிழ் மண்ணில் இருந்து கேட்கிறேன் தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் காட்டினைத் திருத்தி விவசாயம் செய்து உயிரைக் காப்போம் என சூளுரைத்த தமிழ் மண்ணில் இருந்து கேட்கிறோம்.

காசு தான் பிரதானம் என்றால் கல்வியே எங்களுக்கு ஏழைகளுக்கு வேணாம். இதில் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டணை கேலிக்கூத்தாக்காதீர்கள்.

பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டீங்க.  நாங்க விவசாயி விவசாயம் பன்ன ஆள் கிடைக்கல. எங்களுக்கு நியாயமான விலை கிடைக்கல. ஐயா பொருளாதார நிலையை உயர்த்தி விட்டு சட்டம் போடுங்க. கல்வியை வியாபாரம் ஆக்கிய செயல் எத்தனை குடும்பத்தால் கல்வியை தொடர தொடர முடியாத நிலை வந்திருக்கு தெரியுமா மத்திய அரசே! கல்விக் கடன் வழங்க சொத்து கேட்குது வங்கி. ஏழைக் கூலி பட்டா சொத்து பத்திரத்துக்கு எங்கு போவான்.

இந்த நிலை நாட்டில் நிலவும் போது இந்த சட்டத்தால் மேலும் ஒரு சட்டத்தில் பிரிவு கூடும். துளியும் நன்மை கிடைக்கப் போவதில்லை. மாநில அரசு உடன் தலையிட்டு அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வழி வகை செய்ய வேண்டும்.

ஐயா எங்களை வாழ விடுங்கள். தாங்கள் கூறும் கல்வியால் எனது சொந்த பந்தம் உறவு பாட்டி தாத்தா எல்லோரையும் அனாதை ஆசிரமத்தில் அடைக்கலம். பணம் மட்டுமே பிரதானமான கல்வி முறை. வாழ்வியல் தெரியலை. பாரம்பரியம் தெரியலை. உரிமையை கேட்க முடியலை. அவனவன் மொழியில் கல்வி பயில வழியில்லை.

இந்த நாடு சுதந்திரமாக இருக்கிறது என்று தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் அமைச்சர்களே.. போதும் அடகு வைக்க இனியும் எங்களிடம் எதுவும் இல்லை. சட்டம் போடும் முன் காமராசர் வாழ்க்கை வரலாறை படியுங்கள். நிறைய புரியும்.

அமைச்சர் ஜவடேகர் அவர்களுக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ஆலோசனை..

இவண்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர் தங்க சண்முக சுந்தரம்...

வேற்று கிரக வாசிகள் கிரகமா?


பேராவூரணியில் அதிசயம், ஆனால் உண்மை! திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு தேனீர்...


தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் கோவில் அருகில் சித்ரா தேனீர் நிலையம் பல வருடங்களாக இயங்கி வருகிறது.

இங்கு இன்று திருவள்ளுவர் தினத்தன்று தேனீர் சாப்பிட வந்த அனைவருக்கும் தேனில் ஒரு ரூபாய்க்கு விற்பற்னை செய்யப்பட்டது. பேராவூரணி பகுதியில் ஏழு ரூபாய் விற்பனை செய்துக் கொண்டிருக்கும் போது இந்த தேனீர் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு தேனீர் தருவது பொது மக்களுக்கு அதிசயமாக உள்ளது.

கடந்த 15 வருடங்களாக இந்த தேனீர் நிலையத்தில் திருவள்ளுவர் தினத்தன்று அதிகாலை 4 மணி முதலே தேனிர் ஒரு ரூபாய்க்கு தர ஆரம்பிக்கப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் ஆச்சரியமாக கூறுகின்றனர்.

மேலும் பேராவூரணி கடைதெருவில் எல்லா தேனீர் கடைகளும் மூடி இருக்கும் இந்நாளில் இந்த தேனீர் கடையில் மட்டும் ஒரு ரூபாய்க்கு தேனீர் வழங்குவது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இந்த கடையை நடத்தி வருபவர் இந்த பகுதியில் நன்கு அறிமுகமான பேராவூரணி திருக்குறள் பேரவையின் தலைவர் மு.தங்கவேலனார் (70)ஆவார்.

இவரின் கடையில் முன்பு எப்போதும் கரும்பலகை இருக்கும். அதில் தினமும் ஒரு குறல் எழுதப்பட்டு அதன் தெளிவுரையும் இருக்கும். இவர் இப்பகுதி பட்டி மன்ற பேச்சாளர். இவரை வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அழைத்து அங்கு விழா நடத்தி இவரின் சொற்பொழிவை கேட்பது குறிப்பிடதக்கது.பேராவூரணி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை இலவச பாடமாக கற்பிக்கிறார். இவர் படிக்க பள்ளிக்கூடம் பக்கமே போனது இல்லையாம், ஆனால் தற்போது அவர் படிக்காத புத்தகமே இல்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள் .

இதுபற்றி அவரிடம் திருவள்ளுவர் தினத்தன்று ஆண்டுகள் தோறும் ஒரு ரூபாய்க்கு தேனீர் கொடுக்கின்றீர்களே உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதா? என்று நமது நிருபர் கேட்டபோது திருக்குறளுக்காக வருடத்தில் ஒரு நாள் ஒரு ரூபாய்க்கு தேனீர் கொடுக்கிறேன். அதனால் எனக்கு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை செலவாகும் இருந்தாலும் அன்றைய தினம் மாட்டுப்பொங்கல் என்பதால் எந்த தேனீர் கடையும் திறக்கபடாத நேரத்தில் நான் மட்டும் கடை திறந்து அனைவருக்கும் தேனீர் கொடுப்பது நினைத்து மனமகிழ்வு அடைகிறேன்.

என்னுடைய நோக்கம் என்னவென்றால் திருக்குறளால் உலகத்துத் தீமைகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும், தேவையான நல வாழ்வை திருக்குறளால் ஆக்கப்பட வேண்டும் ,
தேசமெங்கும் திருக்குறளே பொதுமறையாய் திகழ வேண்டும்.

உலகம் முழுவதும் திருக்குறள் நெறியை உணர்த்தியே ஆகவேண்டும்.

உலகத்தை அழித்திடும் ஆயுதவெறியை ஒழித்தே தீர வேண்டும்.

சாதி மதமெனும் சங்கடம் நீக்கியோர் சரித்திரம் படைக்க வேண்டும்.

சரி சமமாக எல்லோரும் வாழ்ந்திடக் சங்கர்ப்பம் ஏற்க வேண்டும்.

போதையில் விழுந்து பாதையை மறக்கும் போக்கினை உடனே மாற்ற வேண்டும்.

பாதையை உணர்ந்து பயணத்தை தொடர்ந்திட திருக்குறள் படித்தே ஆக வேண்டும்.

தினம் தினம் திருக்குறள் படித்து அதன் வழி நடந்து புதுமையான ஓர் உலகம் நாளை படைக்க வேண்டும் என்றார்.

திருக்குறள் சம்பந்தமான எந்த ஒரு தகவல் குறித்து தெரிந்து கொள்ள இரவு 12 மணி என்றாலும் நான் தயார் என சொல்லும் தங்கவேலனாருக்கு சுவாசமே திருக்குறள் என்றால் மிகையில்லை.

இந்த வயதிலும் இளைஞரைப் போல செயல்படும் தங்கவேலனார் பேராவூரணி திருக்குறள் பேரவை தலைவராக செயலாற்றி வருகிறார்...

கன்னட ஈ.வே. ராமசாமி விழுதுகளின் பகுத்தறிவு...


இவர்கள் சம்பளம் உயர்வுகளுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது...


சென்னை 44 வது அரசு பொருட்காட்சி . பார்க்கிங் என்ற பெயரில் அச்சடிக்காமல் இஷ்டத்திற்கு எழுதி பொதுமக்களிடம் பணத்தை சுருட்டும் தனியார்...


பொருட்காட்சி நுழைவு டிக்கட் விலை 35 ஆனால் பார்க்கிங் (இருசக்கர) கட்டணம் 40, அச்சடிக்காமல் கட்டணத்தை மட்டும் எழுதிக் கொடுத்து இஷ்டத்திற்கு வசூல் வேட்டை..

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் என கணக்கிட்டாலும் ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் ரூபாய் ஒரு மாதத்திறகு 60 லட்சம். யாரு பணத்தை வாங்கி யாருக்கு கொடுக்கின்றீர்கள் ?

அரசு நடத்தும் பொருட்காட்சியில் இப்படி மக்களின் பணத்தை சுருட்டலாமா ?

பெரும்பாலும் இது போன்ற பார்க்கிங் கான்ட்ராக்ட்டுகள் சமபந்தப்பட்ட அமைச்சகத்தால் கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

40 ரூபாய் கொடுத்தும் உங்கள் பைக்கின் பாகங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல அதாவது பைக்கை பிரித்து பார்ட் பார்ட்டாக திருடிச் சென்றால் அதுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது என்ற அறிவிப்பு வேறு என சுற்றுலா பயணிகள் அரசு பொருட்காட்சியில் தனியார் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்...

டிக்கட் விலை 35 (பெரியவர்களுக்கு) , 20 (சிறியவர்களுக்கு)..

ஜிஎஸ்டி = 28%.

புதுசா இப்ப கார்ப்பரேஷன் வரி = 10%.

ஆக மொத்தம் 38% வரி..

பார்க்கிங் கட்டணம் 40 (இரு சக்கர). 60 (நான்கு சக்கர)...

உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு.. மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்...


இசுலாமியக் குடியரசான ஆப்கானிஸ்தானில், தலிபான் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று அங்குள்ள அரசு விரும்புகிறது. பொதுமக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்து யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை. என்று வயர்-இன் இணையதளத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

உண்மைதான். இடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் இருந்த இடத்தில், இன்று அவற்றின் முழு உருவம் முப்பரிமாண ஒளியில் எழுப்பப்பட்டு அதனை ஆப்கன் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் திரள் திரளாக வந்து பார்க்கிறார்கள். தலிபான் ஆட்சிக்காலம் என்ற அந்த அருவெறுக்கத்தக்க வரலாற்றை இடிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் வழியாக வெறுப்புடன் நினைவு கூர்கிறார்கள்.

இந்தியாவில் என்ன நடக்கிறது? இடிக்கப்பட்ட மசூதியின் கற்குவியல்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் ராமன் சிலைக்கு அயோத்தியில் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. மசூதி இடிப்பைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி உள்ளிட்ட தலைவர்களை இக்குற்றத்திலிருந்தே அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவிக்கிறது.

வழக்கிலிருந்து திட்டமிட்டே இவர்களைத் தப்பவிட்ட மத்திய உளவுத்துறையைக் கண்டித்ததுடன், அடுத்த இரண்டாண்டுகளுக்குள் இவ்வழக்குகளை விசாரித்து முடிக்கவேண்டுமென்று இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 2017 ஏப்ரல் மாதம் சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன் பின்னரும், வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகிறது சி.பி.ஐ.

உலகமே சாட்சியாகப் பார்த்து நிற்க, பகிரங்கமாக நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்ற குற்றத்துக்கு விசாரணையே நடக்காத நிலையில், எவ்வித சாட்சியமோ ஆதாரமோ இல்லாத இராம ஜென்மபூமி விவகாரத்தில், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பளிக்கிறது.

400 ஆண்டுகளாக முஸ்லிம்களின் வழிபாட்டிடமாக இருந்து வந்த மசூதி இடிக்கப்பட்ட குற்றத்தின் விசாரணையே இன்னும் முடியாதபோது, மசூதிக்கு கீழே இருக்கின்ற நிலம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

முஸ்லிம் மக்களின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான தேதியாக, மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர்-5 ஆம் தேதியை தீர்மானிக்கிறது  உச்ச நீதி மன்றம்.

வழக்கு விசாரணையை 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது அரசியல் ஆதாயத்துக்கு மோடி அரசு பயன்படுத்துமென்பதால், விசாரணையை 2019 ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறும், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்குமாறும், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே, கபில் சிபல் ஆகிய வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நிராகரிக்கிறார்.

அந்த வழக்கறிஞர்கள் கூறியது உண்மையென மறுநாளே நிரூபிக்கிறார் மோடி. கபில் சிபல் காங்கிரசு கட்சியை  சேர்ந்தவர் என்பதால், முஸ்லிம்கள் தரப்பில் அவர் வழக்கறிஞராக ஆஜராவதைக் காட்டி, காங்கிரசு கட்சி கோயிலை ஆதரிக்கிறதா, மசூதியை ஆதரிக்கிறதா என்று கேட்டு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துவெறியை பகிரங்கமாகத் தூண்டுகிறார்.

பாபர் மசூதி இடிப்புக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீரட், மலியானா, ஹசிம்புரா முதல் மும்பை, குஜராத் வரை இந்தியா முழுவதும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் துயரமான நாள் என்று அத்வானியும் வாஜ்பாயியும் அன்று நடிப்புக்காகவேனும் பேசவேண்டியிருந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குகின்ற தருணத்தில், நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மோடி, நீ மசூதியை ஆதரிக்கிறாயா, கோயிலை ஆதரிக்கிறாயா என்று எதிர்க்கட்சியை மிரட்டுகிறார். இந்த மிரட்டல், வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்துக்கும் உரியது என்பதை நீதிபதிகள் அறியமாட்டார்களா என்ன?

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி என்பன போன்ற பீற்றல்களும், சொல்லிக்கொள்ளப்படும் இந்த உன்னதங்களைப் பாதுகாத்து நிற்கும் தூண்களான நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவையும் உளுத்துப்போய் உதிர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தத் தூண்கள் மீது இந்துத்துவம் ஒரு சங்கேத மொழியாய் ஒளிந்திருக்கிறது.

பார்ப்பன பாசிசத்தின் அதிகாரத்தைக் காத்து நிற்கும் சக்திகளில் முதன்மையானவை இந்தத் தூண்களா, மக்களின் வாக்குகளா என்று கேட்டால், இந்தத் தூண்கள்தான் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். வாக்குகளைப் பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்பட வேண்டும்.

எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து மக்களின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது மோடி அரசு. இடிக்கப்பட்ட மசூதி, கொல்லப்பட்ட அக்லக்குகளைப் போலவே, பண மதிப்பழிப்பு, நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்தையும் பழகிப்போன எதார்த்தங்களாக மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அல்லது அவை மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை இராமனைத் தெருவுக்கு இழுத்து வருவதொன்றுதான் மக்களை வீழ்த்துவதற்கு மோடியின் முன் உள்ள வழி.

1992-இல் பாபர் மசூதியை இடிப்பதற்குத் தோதாக டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் மோடிக்கு உதவியிருக்கிறது.

விசாரணைக்கூண்டில் உச்சநீதிமன்றம் என்ற தலைப்பில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் பாபர் மசூதி வழக்கின் வரலாறு குறித்து விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கும் ஏ.ஜி.நூரானி, முன்னாள் அமெரிக்க நீதிபதி பெஞ்சமின் கார்டோசோவின் கீழ்க்கண்ட மேற்கோளுடன் தனது கட்டுரையை முடிக்கிறார். “நீதிபதி எத்தகையவர் என்பதற்கு மேல் நீதிக்கு வேறு உத்திரவாதம் ஏதுமில்லை”.

நீதி முட்டுச்சந்துக்கு வந்துவிட்டது. கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கலாம் என்று கருதுபவர்கள், 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெண்ணெய் உருகவில்லை என்ற உண்மையை இனிமேலாவது உணரவேண்டும். பார்ப்பன பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.

சூரியன்
நன்றி - வினவு
–புதிய ஜனநாயகம், ஜனவரி 2018...

கவிஞர். கண்ணதாசன் எழுதிய எம்ஜியாரால் தடை செய்யப்பட்ட புத்தகம் இதுதான்...


இப்போது கிடைப்பது அரிது.. இதன் பின்னர்தான் கண்ணதாசனின் வாயை அடைக்க தனது ஆட்சியில் கண்ணதாசனை 'அரசவை கவிஞர்' என்று நியமனம் செய்து அவர் வாயை அடைத்தார் எம்ஜியார்.

எம்ஜியார் காலத்தில் 'இன்னோவா' கிடையாது...

திருட்டு திராவிடம்...


தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை...

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...

தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்...

தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்.

அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிற சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.

இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.

தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...

தமிழக MLA க்களின் மாத சம்பள விபரம்...


தெலுங்கர் திருமலை நாயக்கர் எனும் திராவிட வரலாற்று இரகசியம்...


தெலுங்கர் திருமலை நாயக்கனின் மொத்த மனைவி 169 பேர்...

திருமலை நாயக்கன் செத்ததும் 169 மனைவியரையும் தீவைத்து எரித்து உடன் கட்டை ஏறச்செய்தனர்..

தமிழகத்தில் முதல் இனப்படு கொலையை நிகழ்த்தியவனும் திருமலை நாயக்கனே.

பாண்டிய அரசை வீழ்த்தியதும் பாண்டிய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தான்.

அதில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டது போல் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்...

வர்ணாசிரம பிராமணியத்தை மிகக் கடுமையாக தமிழகத்தில் புகுத்தியவனும் இந்த திருமலை நாயக்கனே.

திருமலை நாயக்கன் ஆட்சியில் தான் இடக்கை வலக்கை என்னும் சாதி சண்டைகள் கொழுந்து விட்டு எரிந்தது..

பிராமாணியத்தின் மனுவை அப்படியே தமிழகத்தில் அமல்படுத்தியவனும் இந்த திருமலை நாயக்கயனே...

https://youtu.be/_fpNijYbzSE

தமிழகத்தில்.. சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்த... நம்மை திசை திருப்பும் வேலையை தொடங்கியுள்ளனர்...


ஒரு உண்மையை சொல்கிறேன் கேள் தமிழா...



Royal Court of Justice இலண்டனில் இருக்கும்  காமன்வெல்த் கூட்டமைப்புக்கான நாடுகள் ஏற்று கொண்ட கோர்ட் இது.....

இந்திய குடியுரிமை பெற்ற தமிழர்கள் யார் வேண்டுமானாலும்.....  சென்று எம் இனம் வஞ்சிக்கப்படுவதாகவும்..  சுப்ரீம் கோர்ட்டின் காவேரி தீர்ப்பையும், முல்லை பெரியாறு தீர்ப்பையும், தற்போது திணிக்கப்படும் சாகர்மாலா வரையும்..  இந்த இந்திய குடியரசின் திணிப்பு போக்கை கண்டித்தும் ஒரு மனு போட்டு.. தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில்...

இந்திய அரசு எப்படி அலறி அடிச்சிட்டு வந்து தமிழனிடம்  நிற்கும் என்று  அழகாக பார்க்க முடியும்...

உதாரணமாக -  மலேசிய போரட்ட வெற்றி...

ஆனால் நம் தமிழக அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள்...