17/01/2019

கர்ம விதிகள்...


உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்...

1. மகத்தான விதி  காரணி மற்றும் விளைவு விதி Law of Cause and Effect..

எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய்...

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு .

2 படைத்தல் விதி ( Law of creation )...

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான். நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது. ஆகவே  நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும்..

3 பணிவு விதி ( Law of Humility )...

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும். இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி. பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத் தான் இருக்கும்..

4 வளர்ச்சி விதி ( Law of Growth)...

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம் தான்.. நாம் மாறும் பொழுது நமது வாழ்க்கையும் அதற்கேற்றாற் போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது. உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது..

5 பொறுப்பு விதி ( Law of Responsibility )...

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில் தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும் பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச் சுற்றியுள்ளவற்றை மாற்ற வேண்டும் ..

6 தொடர்பு விதி ( Law of Connection )...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7 கவன விதி ( Law of Focus )...

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்த முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது. நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது. நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி ( Law of hospitality and giving)...

நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போக வேண்டும். நமது சுயநலமற்ற தன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்.. சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும் பொழுது தான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம். ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9 மாற்றம் விதி ( Law of Change )...

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும். மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10 இங்கே இப்பொழுதே விதி : Law of NOW and HERE...

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே. வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும்,  நிகழ்காலத்தை கொள்ளையடித்து விடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11 பொறுமை மற்றும் வெகுமதி  விதி ( Law of Patience and Rewards )...

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது. பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும், வேறெந்த வழியுமில்லை.  வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்வதில் தான் இருக்கிறது..

12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி ( Law of Signifigance and Inspiration )...

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை. காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..

மறுக்க முடியாத உண்மைகள்...


தமிழிசைக் கருவி - பறை (தப்பு)...


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி.

எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன...

கார்பரேட் மருத்துவத்தின் உண்மைகள்...


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


மூலிகை மருந்துகள்...

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப் பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

எப்போது எம் தமிழின் பெருமையை இந்தி யா அறியுமோ?


தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்...


உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குயில், கடுக்கை, தாண்டி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோன்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்...

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தமிழனின் நாகரிகம் தாவரத்துடன் இணைந்து தான் இருந்தது. ஊரின் பெயர்களை கூட மரங்களின் பெயர்களை வைத்து தான் அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள்..
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது உண்மை.

ஆனால், இன்று... அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்..
மரங்களை இழந்தோம்; மழையையும் இழந்தோம்..

தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பற்றி ஒரு அகராதியே உண்டு. அவ்வளவு செழிப்பான மண்.. நம் தமிழ் மண். நம் பூமி...

‪உசில்‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் உசிலம்பட்டி..

‪இலுப்பை‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் இலுப்பையூர்..

‪‎விளாமரம்‬ இருந்த இடம் தான் விளாத்திகுளம்..

‪‎வாகைமரம்‬ செழித்து வளர்ந்த ஊர் தான் வாகைக்குளம்..

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து... இப்படி பல ஊர்களின் பெயரில் மரங்களின் பெயரும் மறைந்திருக்கு..

ஆனால், இன்று அந்தந்த ஊர்களிலேயே அந்த காரண மரங்களைக் காணவில்லை.

அதுக்கெல்லாம் பதிலாக... தைலமரம், சீமைக்கருவேலம், யூஃபோடிரியம், தூங்குமூஞ்சி'னு விதவிதமான வெளிநாட்டு மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.

இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய.. அதை நம்பி வாழ்கிற கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.

பார்த்தீனியம் செடிகள் நீர் நிலைகளையும் அழித்து விட்டது. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டது.

உசில் மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.
எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

வேங்கை மரம் இன்று அரிதாகி விட்டது. இந்த. மரத்தில் ஒரு குவளை செய்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய் தமிழர் கலாசாரத்தில் ரொம்ப காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

தோதகத்தி மரத்தில் எந்த பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்தில் கண்டு பிடிச்சிருக்காங்க. அதில் தோதகத்தி மரத்துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4- ஆயிரம் வருடத்திற்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.. ஆனால், இப்போது இந்த மரம் மிகவும் அரிதாகி வரும் நிலையில்.. தமிழக அரசு இந்த மரத்தை வெட்ட தடை விதித்திருக்கிறது.

இது மாதிரி தான்... குறுஞ்செடிகளும். நம் தமிழ் மண்ணில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

இதில் ‪‎துத்தி‬ என்று ஒரு செடி, மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தால் தொடர்ந்து பார்த்தீனியம் வளராது.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்சினைகளை இந்த தலைமுறையில் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு ஏசியைப் போட்டு நம்மை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைக்கும் நாம்.. ஏன் ஒரு பாரம்பரிய மரத்தை நட்டு இந்த பூமியை குளிர்ச்சியாக வைக்கக் கூடாது..?

இந்த பூமியை வளப்படுத்த நினைத்தால்.. இந்த மாதிரி பாரம்பரிய மரங்களை நம்பி தான் ஆக வேண்டும்..

அதற்கு.. இந்த 2019- ல் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு.. கண்ட கண்ட மரங்களை நடாமல்.. பாரம்பரிய மரத்தை தேர்வு செய்து... ஒரு மரமாவது நடுங்கள்.

மரங்களில் கூட ஷாம்பு உண்டு...

உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பாவிக்கலாம்.

வழுக்கைமரம் எனப்படுகிற தடசு மரத்தின் பட்டையை சுடு நீரில் போட்டால் வழுவழு ஷாம்பு ரெடி.

இந்த இரண்டு ஷாம்பூக்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

மருத மரத்தின் பட்டையை காய வைத்து கஷாயம் பண்ணி அருந்த.. உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப்பழம் மூலத்தைக் குணப்படுத்தும்...

தெலுங்கர் விஷால் ரெட்டி விரைவில் திருமணம்...


மணப்பெண் அனீஷா ரெட்டி...

திராவிடம் என்ற பேரில் அவனவன் அவன் இனத்தின் சாதியில் மட்டுமே திருமணம் செய்துக் கொள்வான்...

ஆனால் தமிழன் மட்டும் தன் சாதியில் திருமணம் செய்தால் சாதி வெறியின்...

முட்டாள் தமிழினமே சிந்தித்துப் பார்...

திராவிடம் என்பது தமிழனை ஏமாற்றி மாற்றான் பிழைக்க உருவாக்கப்பட்டதே...

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்...


கடைகளில் விற்கப்படும் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமானது என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்.

ஏனெனில் இந்தியாவில் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் அந்த பொருட்கள் இந்தியாவில் அனைத்து மக்களும் நல்லது என்று நினைத்து அன்றாடம் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

என்ன ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் நாங்கள் சொல்வது உண்மையே. இங்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

லைஃப்பாய் சோப்பு...

உங்களுக்கு ஒன்று தெரியுமா, நாம் பயன்படுத்தும் லைஃப்பாய் சோப்புக்களானது வெளிநாடுகளில் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்யப்பட்டுவிட்டது. மேலும் வெளிநாடுகளில் ஒருசில மிருகங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலோ இதனை தான் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம்.

ரெட் புல் எனர்ஜி ட்ரிங்ஸ்...

ரெட் புல் எனர்ஜி ட்ரிங்ஸ் என்று விற்கப்படும் ரெட் புல் பிரான்ஸ், டென்மார்க் போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இந்த பானமானது இதய நோய், மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தானாம். ஆனால் இந்தியாவில் இதனை நிறைய மக்கள் ஆற்றலை அதிகரிக்கும் என்று நினைத்து டப்பா டப்பாவாக வாங்கி குடிக்கிறோம்.

டிஸ்பிரின்...

இந்தியாவில் விற்கப்படும் வலிநிவாரணி மாத்திரைகளில் ஒன்று தான் டிஸ்பிரின் என்னும் அஸ்பிரின். இதனை பெரும்பாலான வீடுகளில் காணலாம். ஆனால் இந்த மாத்திரை வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு விட்டது. ஏனெனில் இதனால் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ இன்னும் விற்கப்படுகிறது

பூச்சிக்கொல்லிகள்...

இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளில் 60-க்கும் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டுவிட்டது. தசை செய்ததற்கு காரணம், பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நிறைய மோசமான, மனிதரின் உயிருக்கே உலை வைக்கும்படியான கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தான்.

பச்சை பால்...

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்படாத பச்சை பால், அதில் தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் கிருமிகள் இருப்பதால் தடை செய்யப்பட்டுவிட்டது.

ஜெல்லி மிட்டாய்...

இந்த வகையான மிட்டாய்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அங்கு இந்த வகை மிட்டாய்கள் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் இந்த வகை மிட்டாய்கள் குழந்தைகளுக்கு தீவிர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பல ரிபோர்ட்டுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் இவை இந்தியாவில் ஏராளமாக விற்கப்படுகிறது

கிண்டர் ஜாய் சாக்லேட்...

இந்தியாவில் குழந்தைகள் கிண்டர் ஜாய் சாக்லேட்டை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வகை சாக்லேட் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது விட்டது. ஏனெனில் இதுவும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கிறது என்பதால் தான்.

டி-கோல்டு டோட்டல்...

இது மற்றொரு பிரபலமான சளி, இருமல் பிரச்சனைக்கு இந்திய மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் மாத்திரை. ஆனால் இந்த மாத்திரை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால்.

நிமுலிட்...

பொதுவாக பல வலிகளுக்கு போடப்படும் ஓர் வலி நிவாரணி மாத்திரை தான் நிமுலிட். இந்த வகை மாத்திரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் மற்றும் இதர நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதாம்...

கார்பரேட் வியாபார இரகசியம்...


ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..


விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம்.
கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்.. இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.

ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன், பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை...

யாளி - ஒரு புரியாத புதிர்...


தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம்.

சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது.

சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.

பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.

அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.

சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம்.

ராச ராசன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது.

மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.

குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?

யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா?

இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?

குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்?

பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை...

வளரி - தமிழர்கள் தொலைத்த போர் கருவி...


Subscribe The Channel...

தமிழ் நாட்டில் இந்தி ஆட்சி செய்யாமல் தடுக்க உயிர்விட்ட முதல் மொழிப்போர் வீரர் இவர்..


ஆண்டு 1939. இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்னரே இந்தி திணிக்க முயன்று தோற்றது வரலாறு...

பினராயி விஜயனுக்கு காவல்துறை அதிகாரி பதிலடி.. எனக்கும் சூடு சொரணை இருக்கிறது...


கடந்த வாரம் பிந்து கனகதுர்கா இரண்டு பெண்களையும் பாதுகாப்பாக சபரிமலைக்குள் அழைத்து செல்லும் குழுவில் பிரகாஷ் நாயரின் பெயரும் இடம் பெற்றிருந்தது, ஆனால் அவர் கடைசி நேரத்தில் விடுப்பில் சென்றுவிட்டார் இதனால் மாநில அரசு விளக்கம் கேட்டு பிரகாஷ் நாயருக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சார்பு ஆய்வாளராக இருப்பவர் பிரகாஷ் நாயர் இவருக்கு மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

நான் மட்டுமல்ல எனது குடும்பம் முழுவதும் ஐயப்பனை எங்கள் உயிருக்கும் மேலாக வணங்குபவர்கள் அப்படி இருக்கையில் அந்த ஐயப்பன் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும்
எந்த செயலையும் என்னால் மட்டுமல்ல சூடு சொரணை உள்ள எந்த ஐயப்ப பக்தர்களாலும் ஏற்று கொள்ள முடியாது. இதனால் தான் நான் அன்று கலந்து கொள்ளவில்லை இதனால் எனது பதவி பறிபோனாலும் அதைப்பற்றிய கவலை எனக்கில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இப்போது பிரகாஷ் நாயர் அளித்த விளக்கம் தான் கேரள மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த அரசு அதிகாரிகளின் எண்ணமாக இருப்பதாக கேரள மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

கேரள மாநிலத்தில் பேசு பொருளாக மாறிய பிரகாஷ் நாயரின் விளக்கம்..

பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு மீது பொதுமக்கள் மற்றுமின்றி, அரசு அதிகாரிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்...

தை 1 தான் தமிழர் புத்தாண்டு....


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பூமியின் வனப்பகுதியிலே அவர் சிங்காசனத்தில் உட்கார்ந்தார்; அதின் ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். அவர் வானத்தை அலைகளைப்போல் விரித்து, அவர்கள் கூடாரங்களைப்போலப் பரப்புகிறார்.
                                   
 -ஏசாயா 40:22...

நாடார்கள் நினைத்தால் மக்களுக்கு இயற்கை உணவுகளை எளிதில் கிடைக்க செய்யலாம்...


ஏனெனில் தமிழ்நாட்டில்  கிராமம் முதல் நகரம் வரை உணவு தேவைகள் வணிகம் அவர்கள் கைகளில் உள்ளது...

மாறுமா இந்த நிலைமை காலமே பதில் சொல்லும்...

ஒவ்வொரு தமிழனனும் இந்த கேள்வியை பிறரிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு சிந்தனையை தூண்டினால்.. திராவிடம் விரைவில் ஒழியும்...


திராவிடர்களுக்கு நதிநீர் மறுப்பு.....

திராவிடர்கள் அடித்து
விரட்டப்பட்டனர்.....

திராவிட மீனவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.....

திராவிட இனப்படுகொலை..

என்று எங்காவது ஒரு செய்தி வந்ததுண்டா ?

அல்லது...

திராவிட கழகம், திராவிட தலைவர்கள், திராவிட வியாதிகள் ஒரு மேடையிலாவது வாய் திறந்தது உண்டா?

திராவிடம் இல்லை திராவிடம் இந்த உலகில் இல்லவே இல்லை..

திராவிடத்தை கண்டுபிடித்தவன் முட்டாள்..

திராவிடத்தை கற்ப்பித்தவன் அயோக்கியன்..

திராவிடத்தை பரப்புகின்றவன் காட்டுமிராண்டி...

காங்கிரஸ் ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி...


உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும், முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும். உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...