17/01/2019

பினராயி விஜயனுக்கு காவல்துறை அதிகாரி பதிலடி.. எனக்கும் சூடு சொரணை இருக்கிறது...


கடந்த வாரம் பிந்து கனகதுர்கா இரண்டு பெண்களையும் பாதுகாப்பாக சபரிமலைக்குள் அழைத்து செல்லும் குழுவில் பிரகாஷ் நாயரின் பெயரும் இடம் பெற்றிருந்தது, ஆனால் அவர் கடைசி நேரத்தில் விடுப்பில் சென்றுவிட்டார் இதனால் மாநில அரசு விளக்கம் கேட்டு பிரகாஷ் நாயருக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சார்பு ஆய்வாளராக இருப்பவர் பிரகாஷ் நாயர் இவருக்கு மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

நான் மட்டுமல்ல எனது குடும்பம் முழுவதும் ஐயப்பனை எங்கள் உயிருக்கும் மேலாக வணங்குபவர்கள் அப்படி இருக்கையில் அந்த ஐயப்பன் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும்
எந்த செயலையும் என்னால் மட்டுமல்ல சூடு சொரணை உள்ள எந்த ஐயப்ப பக்தர்களாலும் ஏற்று கொள்ள முடியாது. இதனால் தான் நான் அன்று கலந்து கொள்ளவில்லை இதனால் எனது பதவி பறிபோனாலும் அதைப்பற்றிய கவலை எனக்கில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இப்போது பிரகாஷ் நாயர் அளித்த விளக்கம் தான் கேரள மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த அரசு அதிகாரிகளின் எண்ணமாக இருப்பதாக கேரள மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

கேரள மாநிலத்தில் பேசு பொருளாக மாறிய பிரகாஷ் நாயரின் விளக்கம்..

பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு மீது பொதுமக்கள் மற்றுமின்றி, அரசு அதிகாரிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.