22/01/2019

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் 85வது முறையாக கண்ணாடி உடைந்தது...


சுவரில் பதுக்கப்பட்டிருந்த 4 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கண்ணாடி பெயர்ந்து உடைந்து விழுந்தது...

தமிழகத்தில் ஊடகங்களை உருவாக்கியதே மக்களை திசைத் திருப்பத் தான்...


வெற்றிலை...


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை.

இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத் தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் பூஜையிலிருந்து சுபகாரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலையை முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துள்ளனர், பயன் உள்ளவை என்றும் நம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்...

திருட்டு திராவிடமும் ஏமாற்று வேலையும்...


தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...


தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு.. கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும். கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.தூர்வாரும் வேலை குறைந்து விடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.? ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''.
(வரி.26 - 28)

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்" என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''.
(புறம் - 18,28 - 30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''.
(புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்''.
(83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,

"யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்"

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,
"
பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே''.
(25)

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு" என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை" என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''.
(1384 - 87)

என்கிறார். "சுருங்கை" என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு" என்பதாகும்.

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு" அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை" எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது" (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

கோத்தகிரியில் நான்கரை வயது பெண் குழந்தையை தாயே மதுபோதையில் குடிநீர் தொட்டியில் வீசி கொலை செய்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது...


ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்...

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி...

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்...

குடி வீட்டுக்கும் மோடி நாட்டுக்கும் கேடு...


கிராமசபை என்றால் என்ன?


கிராமசபை என்பது ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஜனநாயகத்தின் ஆணிவேராகும்.

கிராம ஊராட்சிகள் செவ்வனே செயல்படத் தேவையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தினை ஊக்குவிக்கவும், திட்டமிடுதல், திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்தல் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரித்தல் மற்றும் சமூகத் தணிக்கைக்கு வழிவகுத்திட செயல் திறன் மிக்க ஒரு கிராமசபை அவசியமாகிறது.

சட்டப்படி, இரண்டு கிராமசபைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் ஆறுமாதங்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆண்டில் குறைந்தது நான்கு முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராமசபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அரசு கீழ்க்கண்டவாறு குறை வெண்வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

கிராமசபை கூட்டத்திற்கான குறை வெண்வரம்பு மக்கட்தொகையின் அளவு
500 வரை மக்கள் தொகையுள்ள  ஊரில் 50 நபர் வரை கலந்து கொள்ளலாம் அதனைப் போல் 501 முதல் 3000 வரை மக்கள் தொகையுள்ள  ஊரில்
100 பேரும் 3001 முதல் 10000 வரை
200 பேரும் 10001க்குமேல்
300 பேரும் கலந்து கொள்ளலாம். கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் மற்றும் கூட்ட நடவடிக்கைகளை முறையான பதிவேடுகள் மற்றும் புகைப்படம் மூலம் பதிவு செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராமசபை பின் வரும் முக்கியமான பணிகளை நிறைவேற்றுகின்றது.

1. கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

2. கிராம ஊராட்சியின் வரவு-செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

3. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் தெரிவித்து வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குதல்.

5. திட்டப்பணிகள் செயல் பாட்டின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்.

6. தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல்.

7. கிராமத்தில் உள்ள பல்வேறு இனமக்களிடையே சமுதாய மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல். இதனால் இந்த கிராம சபையில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்...

கார்ப்பரேட் வியாபார சதிகள்...


கருகிக்கிடந்த 100 மரங்கள்... கதறி அழுத திருப்பூர் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள்...


திருப்பூர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பூங்காவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், சுமார் 100 மரங்கள் வரை எரிந்து நாசமாகியதும், அதைக் கண்டு ஆசிரியர்களும் மாணவ - மாணவிகளும் கதறி அழுததும் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக, 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்துக்குள் நடப்பட்டு, 'கலாம் பூங்கா' என்ற பெயரில் பராமரிக்கப்பட்டுவந்தது. வேம்பு, புங்கை, ஈட்டி, கொய்யா, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைக் குணங்களைக்கொண்ட அந்த மரங்கள் அனைத்தும் 4 முதல் 9 அடி வரை வளர்ந்து செழித்துக் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் இரவு, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கலாம் பூங்காவில் இருந்த மரங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இதனால், அங்கு வளர்ந்திருந்த 100-க்கும் அதிகமான மரங்கள் எரிந்து கருகிப்போயின.

தகவலைக் கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு ஓடிச்சென்ற மோகன்குமார், தீயில் கருகிய மரங்களைப் பார்த்து கதறி அழத் தொடங்கினார். அதைக் கண்டு மாணவர்களும் கண்ணீர்விட்டு அழுதார்கள். இதனால் கல்லூரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆசை ஆசையாய் மாணவர்கள் வளர்த்த மரங்கள், மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது...

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

தமிழன் கண்டுபிடிப்பான திருகை....


நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு..

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

இந்த இரண்டுக்கும் ஒரு நூல் மட்டுமே வித்தியாசம்...


சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்...

விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தான்...

வைகோ நாயூடு கலாட்டா...


சங்கம் அமைத்துக் குடியேறும் ஒரியர்...


தரப்பட்டுள்ள புகைப்படம் திருப்பூரில் எடுக்கப்பட்டது.

இதில் கீழே உள்ள பலகையைப் பாருங்கள் 'ஒரிசா குடியேற்ற உதவி மையம்' என்று ஆங்கிலத்திலும் ஒடியா மொழியிலும் எழுதியிருப்பதைக் காணலாம்.

சென்னையில் ஒரிசா மாநிலத்திற்கான சிறப்பு தூதரகமும் விருந்தினர் மாளிகையும் ஒரு பிரமாண்ட கட்டிடத்தில் இயங்கி வருவதை ஏற்கனவே முகநூலில் பதிந்தனர்.

தற்போது தொழில் நகரங்கள் அனைத்திலும் இப்படி உதவி மையங்கள் அமைத்து தனது மக்களைக் குடியேற்றி வருகிறது ஒரிசா.

ஏற்கனவே (தமிழக வளங்களைப் பொறுத்து) தமிழக மக்கட்தொகை இருக்கவேண்டியதை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒருகோடி வடவர் குடியேறியுள்ளனர்.

தன் மாநிலத்தை நாசமாக்கிவிட்ட ஒரியர் (பிற வடவர் போல இல்லாமல்) திட்டமிட்டு முறைப்படி குடியுரிமை பெற்று குடியேறிவருகின்றனர்.

இவர்களுக்கு ரேசன், கல்வி, அரசு வேலை, சுகாதாரம், வாக்குரிமை என அனைத்தும் நாம் நமது வரிப்பணத்தில் வழங்க வேண்டும்.

இவர்கள் சம்பாதிப்பதை தமது மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பி விடுவர்.

ஐயோ பாவம்.. கூலிதானே.. போனால் போகிறது என்று நினைப்போர் வரலாற்றைத் திருப்பிப் பாருங்கள்.

நம்மை ஆளும் சிங்களவரும் தெலுங்கரும் ஒரு காலத்தில் அகதிகளாக பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான்...

கார்ப்பரேட் வியாபார உண்மைகள்...


கொசுவத்தி சூருள், பட்டை, லிக்யூடு என்று விற்பனை அமோகமாக காலங்காலமாக நடைப்பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது...

மலேரியா, டைப்பாயிடு, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் என இரத்த பரிசோதனை, மருந்து என்று மருத்துவ வணிகமும் அபாரம்...

கொசுவை இயற்கை முறையில் அழிக்க தட்டான் பூச்சிகளால் மட்டுமே முடியும்...

வாங்க பொருமையாக தேனீர் பருகலாம்...


ஓவ்வொரு மனிதனும் எதற்காக தன் வாழ்வை தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் ஓடிக் கொண்டு இருக்கிறோம் ( என்னை உட்பட).

பணம் மட்டுமே நிம்மியாக இருக்க வழி என்ற மனிதனின் ஆசை ஆனால் வாழ்வு முடியும் தருணத்தில் அமைதியாக உட்கார்ந்து யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாகரிகம் சூழ்ந்த கட்டமைப்பில் இருந்து வாழ்ந்து  கொண்டு  உணவு முதல் தூங்கும் வரை..

அனைத்தும் நாகரிக கட்டமைப்பு..

ஆனால்  காடுகளில் வாழும்  பழங்குடி மக்களின் வாழ்வை மற்றும்  உணர்வை பற்றி  பேசுகிறோம் கேட்டால் நானும் பழங்குடி மனிதர்கள் என்கிறார்கள்   ( என்னை உட்பட).

இங்கு வாழ்வு மாறினால் மட்டுமே உணர்வு ஏற்படும் முதலில் அதை உணர வேண்டும் அனைவரும்..

வாழ்வு மாறவேண்டும் என்றால்  ஓன்று மனம் மாற வேண்டும்..

மனம் மாறினால் மட்டுமே இங்கு உணர்தல் சாத்தியம்..

மனம் மனிதனின் வேலை ஆட்களாக இருக்க வேண்டும் ஆனால் மனதிற்கு மனிதன் வேலையாட்களாக இருக்கிறார்கள் ( என்னை உட்பட)..

மனிதர்கள் உணரும் தருணத்தில் அவர்கள் இயற்கையாகவே வாழ்கிறார்கள்..

பருகுவோம் மேலும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மறைக்கப்படும் அரசியல் இரகசியம்...


ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்...


இந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் சாந்துபட்டர்.

1939 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த ஆலயப் போராட்டத்தின் பின்விளைவுகளை தன் வாழ்நாள் முழுவதும் சந்தித்தவர்.

ஆலயதுழைவுக்கு எதிராக அப்போது மீனாட்சியம்மன் கோவில் பூசாரிகள் 13 பேரில் 12 பேர் வேலைநிறுத்தம் தொடங்க தனியாளாக கோவிலை நடத்தியவர்.

திருநெல்வேலியில் இருந்து 12 பூசாரிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்கி கோவில் தொடர்ந்து நடக்க முக்கிய காரணம் இவரே.

1945 இல் மற்ற பூசாரிகளும் வேலைக்கு வந்துவிட்டனர்.

போராட்டம் நடத்தியோர் பெயர் வாங்கிக் கொண்டு போய்விட்டனர்.

பட்டியல் மக்களும் ஆலயத்திற்கு வந்து போக ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இவரது குடும்பம் மட்டும் அவரது சமூகத்திலிருந்தே ஒரு தலைமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கு பிறகே இவரது குடும்பம் ஒதுக்கலில் இருந்து மீண்டது.

இது பற்றி விரிவாக "லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில்" மானுடவியல் பேராசிரியராக இருக்கும் சி.ஜே. ஃபுல்லர், தனது Servants of the Goddess புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்...

நெகிழி தடை என்பது கார்ப்பரேட் கைகூலி அரசின் சதி மட்டுமே...


சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற
கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...