29/11/2018

தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி...


தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்கள் காலை மேல தூக்குங்க.

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.

பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க.

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்கியதுபோல் வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 10 முறை இப்படி செய்யுங்கள்...

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம் - பாஜக அடிமை அதிமுகவின் கார்ப்பரேட் சதி...


மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் பாஜக...


காவிரி நதியின் மீது மேகேதாட்டுப் பள்ளத்தாக்கில் 66.5 டி,எம்.சி. தண்ணீர் தேக்கும் அணையை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு இந்திய ஒன்றிய அரசின் நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது காவிரியின் மீதான தமிழ்நாட்டின் உரிமைக்கு உலை வைக்கும், காவிரிப் படுகையை பாலையாக்கும் திட்டமிட்டச் சதியாகும்.

பெங்களூரு நகர் மட்டுமின்றி, மைசூரூ, மாண்டியா மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காகவே மேகேதாட்டுவில் அணைக்கட்டும் திட்டத்தை தீட்டியிருப்பதாக கர்நாடக அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைச்சர் நிதின் கட்கரியின் பொறுப்பிலுள்ள நீர் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மைய நீர்வள ஆணையம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட நதியென்பதையும், அதன் மீது கூடுதலாக ஒரு அணைக் கட்ட ஒப்புதல் வழங்குவது காவிரி நதி நீர்த் தகராறு தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பிற்கும் அதன் மீது இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிற்கும் எதிரான என்று தெரிந்தும் சாத்தியக்கூறு (Pre-feasibility Report) அறிக்கைக்கு ஒப்புதல் தந்தது மட்டுமின்றி, அணைக் கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது என்றால் இது எவ்வளவு பெரிய சதி என்பதை தமிழர்கள் மட்டுமல்ல, இதர மாநில மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேகேதாட்டு அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டிற்குள் காவிரி ஆறு அடியெடுத்து வைக்கும் பகுதிக்குச் சற்று மேலுள்ள பள்ளத்தாக்கில் கட்டப்படுவது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். காவிரியுடன் அர்க்காவதி நதி இணைந்து பெருக்கெடுக்கும் இடத்தில் மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அது தமிழ்நாட்டிற்கு எதிரான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிடத் திட்டமிட்டுள்ளது.

ஒன்று, கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழே கபினி (ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள) அணை உள்ளது. 19.5 டி.எம்.சி. கொள்ளளவுக் கொண்ட இந்த அணை நிரம்பியவுடன் உபரி நீர் அனைத்தும் காவிரிக்கு வந்துவிடும். அதேபோல் அர்க்காவதி காவிரியுடன் இணைவதால் மழை பொழிவுக் காலங்களில் காவிரியில் நீர்ப் பெருக்கு ஏற்படுகிறது. இது அப்படியே தமிழ்நாட்டிற்கு வந்தடைவதால் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்புவதற்கு முன்னரே மேட்டூருக்கு நீர் வரத்து கிடைக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இரண்டு, மேகேதாட்டு அணையை இருப்பு அணை (Balance Reservoir) என்றே கர்நாடக அரசு கூறுகிறது. இதன் பொருள் கபினி, அர்க்காவதி உபரி நீரை சேமித்து வைக்கும் அணை என்பதே. இதனை தமிழ்நாட்டிற்கு செல்வதை விரும்பாத கர்நாடகம், அதனைத் தடுத்து மேகேதாட்டு அணையைக் கட்டி அங்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்ற நீண்ட காலமாகவே திட்டமிட்டுள்ளது. இதற்கு கால்கோள் இட்ட புண்ணியவான இந்நாட்டின் பிரதமராக இரண்டு தமிழர்களால் தூக்கி உட்கார வைக்கப்பட்ட தேவே கவுடா ஆவார். ஆனால் இப்போது பெங்களூரு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களின் குடி நீர்த் தேவையை நிறைவு செய்வதற்கு என்று நீர் வள அமைச்சகத்திடன் கோரிக்கை வைத்து ஒப்புதலையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மின்சாரம் தயாரிக்க மைய மின் சக்தி ஆணையத்திடமும், சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகத்திடமும் திட்ட வரையறையை கர்நாடக அரசு அனுப்பியுள்ளது.

இதெல்லாம் இந்திய ஒன்றிய அரசின் நீர் வள அமைச்சருக்குத் தெரியாதா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இன்றி இந்த அணைத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று தெரியாதா? காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் மேகேதாட்டு அணைத் திட்டத்தை தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது என்றும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் ஆணையத்தின் கூட்டத்தில் இதுபற்றிப் பேசப்படும் என்று அறிவித்துள்ளாரே! இது எப்படி? காவிரி ஆணையத்தின் தலைவருக்கு தெரிந்தது அவர் பணியாற்றிவரும் மைய நீர் வள ஆணையத்திற்குத் தெரியாதா?

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீரை உறுதியாக வழங்கவே (!) மேகேதாட்டுவில் அணைக்கட்டப்போதாக முதல்வர் குமாரசாமி கூறுவது வேடிக்கையின் உச்சம். அந்த அளவு தண்ணீருக்கும் அதிகமான உரிமை உடையது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற 3 மாநிலங்கள் என்பது குமாரசாமிக்குத் தெரியுமா? காவிரிப் படுகையில் பெய்யும் மழையின் 50 விழுக்காடு உறுதித் தன்மையின் அடிப்படையில்தான் இந்த 177.25 டி.எம்.சி. கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைவிட அதிகம் மழை பெய்தால் கூடுதல் தண்ணீரைப் பெற அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, தமிழ்நாடு இந்த விடயத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்று கர்நாடக அமைச்சர் சிவகுமார் கூறுவது சட்டப் பூர்வமாக ஏற்கத்தக்கதல்ல.

கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபரில் பிரதமரை நேரில் சந்தித்தபோது அளித்த மனுவிலும் எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். அப்படியிருந்தும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றால் தமிழ்நாட்டை மோடி அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்றுதானே அர்த்தம்?

இவ்வளவு அப்பட்டமாக மோடி – நிதின் கட்கரி தலைமை செயல்படுவதன் நோக்கம், காவிரிப் படுகை விவசாயத்தை முற்றிலுமாக அழிப்பதே. அப்போதுதானே அவர்களால் ஹைட்ரோகார்ப்ன் திட்டங்களை நிலத்திலும் கடலிலும் நிறைவேற்றிட முடியும்? தமிழன் தண்ணீர் கேட்டால் கோதாவரி நதியில் இருந்து 3,000 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம் என்று அமைச்சர் கட்கரி கூறுவார். அதனை வழிமொழியத்தான் தமிழக பாஜக கட்சி இருக்கிறதே.

கஜா புயலால் காவிரிப் படுகை வாழ் மக்கள் 45 இலட்சம் பேர் இன்றைக்கு வாழ்வாதாரம் இழந்து அல்லுறும் நிலையில், அதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போட முன்வராத இந்திய அரசு, வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல் காவிரியில் கிடைத்த நீதியையும் குழி தோண்டி புதைக்கும் வேலையில் ஈடுபடுகிறது, திசைதிருப்புகிறது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் உணர்வு பெற வேண்டும், நம்முடைய உரிமையை நிலைநாட்டும் அரசியலை உருவாக்க வேண்டும். அதுவே காவிரியில் மட்டுமல்ல இந்நாட்டில் நமது உரிமைகள் அனைத்தையும் முழுமையாய் நிலைநாட்ட அது ஒன்றே ஒரே வழியாகும்.

இன்று மோடி அரசு, நாளை எந்த அரசு வந்தாலும் நம்முடைய பலமின்றி நமது அரசியல் உரிமையை காத்துக்கொள்ள முடியாது, முடியவே முடியாது.

கா.ஐயநாதன்.
சென்னை, நவம்பர் 28, 2018...

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்...


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுநர் அறிக்கை தாக்கல் செய்தது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். புத்தாண்டில் ஆலை திறப்பது உறுதி. உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஆலையைத் திறக்கமுடியாது எனக் கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டாரகள். என பா.ம.க. தலைவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலுயுறுத்தி மக்களின் தொடர் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22ல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மே-28 ல் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பு. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மேகாலயா மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான இருவர் கொண்ட குழுவை நியமித்தது தீர்ப்பாயம். இக்குழு கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்ட இடம், ஆலையினுள் உள்ள யூனிட்டுகள், குடோன்கள் ஆகியவற்றில் ஆய்வினை மேற்கொண்டதுடன் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தியது.

இது குறித்த ஆய்வறிக்கை  48 தனித்தனி சீலிடப்பட்ட உறைகளில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி கோயல் தலைமையில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலை மூடியது தவறான முடிவு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும் படியாக இல்லை. ஆலை மூடப்படுவதற்கு முன்பு ஆலைத்தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுநர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். நான் முன்பே கூறியதுதான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஆலையைத் திறக்கமுடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர் எனத் தெரிவித்துள்ளார்...

அரசாங்கத்தை உருவாக்கியவன்...


சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?


இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை 'திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…..

இது உண்மைதானா என்று அறியவேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…

அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் 'திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன.

அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்) எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை.
 
ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன.

அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது.

அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன), அதிலுள்ள ஊர், பிறகு கிராமம், பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன்( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது), இயற்கைப் பெயர், பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள்தான்.

அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்.

இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.

அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)....

1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று”
என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது.

அதாவது,
'ராஜேந்திரசிம்ம' என்ற வளநாட்டின்
'தனியூரில்' உள்ள
'வீரநாராயண சதுர்வேதி மங்கலம்' என்னும் ஊரைச் சேர்ந்த
'இறையானரை சூர் மதிசூதன்' என்ற இயற்பெயரையும்
'யக்ஞப் பிரியப் பட்டன்' எனும் பட்டப்பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்களின் பெயர்கள் உள்ளன.

அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…

இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே..

இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்?

இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே?

திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்.

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி...

அதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாள்வது எப்படி?


எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது ஒன்னும் இலகுவான காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறனும். அதிகமாக கோபப்படும் குழந்தையை கையாள வேண்டும் என்றால், அவ்வகையான சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.

அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது அவர்கள் அடிக்கடி தொடர்ச்சியாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை கையாள நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாள்வது எப்படி?

குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றிவிடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள்.

இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம். அதிகமாக கோபம் கொள்ளும் குழந்தையை கையாள, இதோ உங்களுக்காக சில தகவல்கள்.

காரணத்தை கண்டுபிடியுங்கள்...

உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சில விதிமுறைகளை போடுங்கள்.

செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

சீக்கிரமாக செயல்படுங்கள்...

உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம்.

அவர்களுக்கு வழிகாட்டுங்கள்...

ஓய்வில்லாத (busy) இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

புறக்கணித்தல்...

சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

பொறுமையாக இருங்கள்...

நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.

தொழில் ரீதியான உதவியை நாடுங்கள்...

குழந்தையின் முன் கோபத்தை கட்டுப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியாகும். குழந்தைகளின் பிடிவாதங்கள் மற்றும் கோபங்களை கையாள பல தனித்தன்மையான பிணி நீக்குபவர்கள் (therapy) உள்ளது. தொழில் ரீதியான ஆலோசனை மூலம் இவ்வகை சூழ்நிலைகளை சிறப்பாக கையாளலாம்.

அவர்களை பார்த்து கத்தாதீர்கள், அடிக்காதீர்கள்...

உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கிவிடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய்விடும்...

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர்...


முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்..

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்...

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது).

2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

3. அமரும்போது வளையாதீர்கள்.

4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

6. சுருண்டு படுக்காதீர்கள்.

7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.

8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்...

தலீத் வியாபாரிகளின் கொலைகள்...


பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?


மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும்.

வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்?

அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும்.

எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான் எனபது நினைவு கூறத்தக்கவை.

ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?

கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும்.

யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்ற போது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது.

அதனால், வருபவர் கோபம் தணிந்து தான் வீட்டுக்குள்ளே வருவார்.

இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்...

அரசாங்கம்...


ஸ்டெர்லைட் மூடல் தொடர்பாக பாஜக அடிமை அதிமுக அரசு பிறப்பித்த ஆணை சட்டப்படி நிலைக்க தக்கதல்ல என்று கமிட்டி முடிவு செய்துள்ளது...


பல உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இது பெரிய பின்னடைவு.

ஸ்டெர்லைட் கழிவுகளை அப்புறப்படுத்துவது பற்றிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை இனி central pollution control board தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழக  அரசு அரசாணை பிறப்பித்த போதே இந்த அபாயத்தை அனைவருமே சுட்டிக்காட்டினோம்.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை வேதாந்தா குருப்புக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில் அதற்கு சாதகமாகத்தான் ஸ்டெர்லைட் கமிட்டி முடிவு எடுக்கும் என்பதை தமிழக அரசு ஏன் உணராமல் போனது?

இனி ஒரு சுபயோக சுப தினத்தில் ஸ்டெர்லைட் திறக்கப்பட்டு விடும்...

இலுமினாட்டி களும் திரைத்துறையும்...


தமிழகத்தை அழிக்கும் பாஜக அடிமை அதிமுக...


மேகதாதுவில் அணை கட்டுவதற்கான எகர்நாடக அரசின் அமைப்பான காவிரி நீரவரி நிகாம் லிமிடெட் குறித்த ஒப்புதலை தாங்கள்தான் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது...

இது குறித்த விழிப்புணர்ச்சியை டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக ஏற்படுத்த வேண்டும்..

இந்த சூழ்நிலையை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை..

ஹைட்ரோ கார்பன் கம்பெனிகளின் எதிர்கால நன்மைக்காக கஜாவால் பாதிக்கப்பட்ட டெல்டாவுக்குக் காவிரி நீர் கிடைக்காமல் செய்ய சதி நடக்கிறது..

 டெல்டா விவசாயிகள் வேளாண்மைத் தொழிலை விட நேரிடும்..

ஏன் என்றால் காவிரி டெல்டாவை மத்திய அரசு முற்றிலுமாக வணிக நோக்கத்துடன் அழிக்கப்பார்க்கிறது..

ஏதோ கடிதம் எழுதினால் மத்திய அரசு இதை கைவிடும் என்பதுபோல தமிழக முதல்வர் நினைக்கிறார்.

அடிமைகள் மடலுக்கு எஜமானர்கள் மரியாதை தருவது கிடையாது...

இந்த அரசாங்கம் எப்படி பட்டதுனா, உங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அழிக்கும்...


அது என்னவென்று உங்களுக்கும் தெரியும்...

ஆனா தடுப்பூசி உங்கள் குழந்தைக்கு நல்லது என உங்களை நம்ப வைக்கும்...

அதையும் நீங்கள் நம்புவீர்கள்....

இளம் வழுக்கையா? இதோ தீர்வு...


இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும்.

புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்...

இரத்தம் பற்றிய கேள்வி - பதில்கள்...


இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

இரத்தத்தில் உள்ள பிளேட்லட் அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் இரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்...

என்னுடைய பாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன்பின் பாடவேண்டும். இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும்- இளையராஜா அதிரடி...


அகில இந்திய விவசாயிகள் 30லட்சம் பேர் ஒன்றிணைத்து டெல்லியில் நாடுதழுவிய மாபெரும் டெல்லியை முற்றுகை போராட்டம்...

         
வருகின்ற 2018 நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தில் இருந்து  30 இலட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு தம் கோரிக்கையை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில் மாபெரும் புரட்சிப்போராட்டம் நடத்த உள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து ALL INDIA KISHAN SANGARSH CO-ORDINATION COMMITTEE (AIKSCC) South Indian Convenor மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்.

நோக்கம்...

விவசாய விளைபொருட்களுக்கு  இலாபகரமான விலை வழங்குதல்,

தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்தல்,

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தல், அதன்மூலம் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொடுத்தல்.

புயல் சேதத்தால் அழிந்துவிட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு விரைத்து வழங்க வேண்டும்,

60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் 5,000/- வழங்க வேண்டும்,

அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளனர்.

டெல்லி பயண விபரம்:

27.11.2018 செவ்வாய்
திருச்சி to சென்னை எழும்பூர்
வைகை எக்ஸ்பிரேஸ்
காலை 9 மணி to 3 p.m.

27.11.2018 செவ்வாய்
G.T. எக்ஸ்பிரேஸ் &
தமிழ்நாடு எக்ஸ்பிரேஸ்
இரவு 7 மணிக்கு &
இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து
29.11.2018 காலை 7.30 மணிக்கு நியூடெல்லி இரயில் நிலையம் வரை

30.11.2018 வெள்ளிக்கிழமை
G.T. எக்ஸ்பிரேஸ் &
தமிழ்நாடு எக்ஸ்பிரேஸ்
இரவு 6.40 மணிக்கு &
இரவு 10.30 மணிக்கு நியூ டெல்லி இரயில் நிலையத்தில் இருந்து
02.12.2018 காலை 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வரை

02.12.2018 ஞாயிற்றுக்கிழமை
சென்னை எழும்பூர் to திருச்சி
மதியம் 1.30மணிக்கு
வைகை எஸ்பிரேஸ்
மாலை 3.40 மணிக்கு
பல்லவன் எஸ்பிரேஸ்

இவண்...
S.பிரேம்குமார் - செய்தித்தொடற்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்...

திமுக கருணாநிதியின் பிராடு வேலைகள்...


ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்...


1990க்கு முந்தைய தலைமுறை வரைக்கும் தான் ஆப்பிள் என்றது நியூட்டனை நினைவு கூறும். அதற்கு பின் வரும் அனைவருக்குமே ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் நினைவுக்கு வருவார் என்ற வாக்கியம் எப்போதுமே இணையத்தில் வைரல்.

புதுமை என்ற விஷயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பிலும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஜாப்ஸை கேட்டால் புதுமை என்று எதையுமே கூறிவிட முடியாது. அடுத்த நொடியே இதைவிட புதுமையான விஷயம் உருவாகிவிடும் என்பாராம். இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் வீரியத்தை முன்பிலிருந்தே உலகுக்கு எடுத்து சொன்ன ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்கள்.

1. 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.

2. எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.

3. படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.

4. 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.

5. ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ்.

6. 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.

7. ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.

8. ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.

10. ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும்...

உலக விஞ்ஞானம் திகைக்கும் நமது மகான்களின் அமானுஷ்யங்கள...


யோகியின் உடல் ஆதிக்க சக்திகள்...

கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன
கேள்விகள் கேட்கப்படும் என்பதை
அறியாமலேயே, அவற்றிற்கு முன் கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியம்...

மென்னிங்கர் பவுண்டேஷனில் தன் யோக சக்தியை விஞ்ஞானக் கருவிகளால் பரிசோதனை செய்ய அனுமதித்திருந்தார் யோகி சுவாமி ராமா.

அவர் யோக சக்தியால் இன்னும் எத்தனையோ விஷயங்களை செய்து காட்ட முடியும் என்று அந்த ஆராய்ச்சியாளர்களிடம் கூறியிருந்தார்.

அவற்றில் முக்கியமானவை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதயத்துடிப்பை நிமிடத்திற்கு இருபது வரை குறைத்து, உடனடியாக அதை நிமிடத்திற்கு 250 வரை அதிகப்படுத்துவது.

இதயத்துடிப்பை ஒரேயடியாக ஒரு
நிமிடத்தில் இருந்து மூன்று நிமிடம் வரை
நிறுத்தி வைப்பது.

உடலில் செயற்கையாய் அங்கங்கே
கட்டிகளை ஏற்படுத்துவது, அந்தக்
கட்டிகளைக் கரைக்கவும் முடிவது.

உடலில் எந்தப் பகுதியில் ஊசியைக்
குத்தினாலும், ரத்தம் வெளி வராதபடி ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது.

கண்களை மூடிக் கொண்டு படிக்க முடிவது.

மூடிய புத்தகம் அல்லது உறையில் போட்டு மறைத்திருக்கும் கடிதத்தைத் தொட்டுப் பார்த்தே படிப்பது.

தூரத்தில் இருக்கும் பொருட்களை கண்களை மூடியே பார்க்க முடிவது.

தொடாமலேயே பொருட்களை நகர்த்த
முடிவது.

பிராண சக்தியுடன் சூரிய சக்தியையும்
இணைத்து அற்புதங்கள் செய்ய முடிவது.

இப்படி ஆராய்ச்சியாளர்களிடம் அவர் சொல்லி இருந்த போதிலும், பின்னர் அவரால் அந்த ஆராய்ச்சிகள் அனைத்தையும் செய்து காட்டும்
விஞ்ஞான சூழ்நிலைகள் பல காரணங்களால் அமையவில்லை.

இதற்கிடையில் அவர் இந்தியா திரும்பிப் போய்விட்டார். மறுபடியும் பல சொற்பொழிவுகள் ஆற்றவும், ஆன்மிகப்
பணிகளுக்காகவும் அமெரிக்கா வந்த போது சில ஆராய்ச்சிகளை அவரால் செய்து காட்ட முடிந்தது. அவற்றையும் 'Beyond Biofeedback' நூலில் ஆராய்ச்சியாளர்கள் எல்மர் மற்றும் அலைஸ்க்ரீன் (Elmer - Alyce Green) குறிப்பிட்டார்கள்.

அந்த சுவாரசியமான
ஆராய்ச்சிகளையும் பார்ப்போம்.

ஒரு முறை எல்மர், சுவாமி ராமாவிடம்
உடலில் ஏற்படும் கட்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செயற்கையாய் உடலில் கட்டிகளை ஏற்படுத்தவும், அந்தக் கட்டிகளை கரைத்துக் கொள்ளவும் முடியும் என்று சுவாமி ராமா சொல்லி இருந்ததை அவர்
நினைவு கூர்ந்தார்.

உடனே தன் உடலில் நான்கு வினாடிகளில் ஒரு இடத்தில் ஒரு
பறவையின் முட்டையின் அளவில் ஒரு
கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக்
காட்டினார். எல்மர் அந்த கட்டியைக் கையால் தொட்டுப் பார்த்தார். கட்டி உறுதியாக இருந்தது.

அதே போல் வேறொரு இடத்திலும் வேறு
வடிவத்தில் இன்னொரு கட்டியை சுவாமி
ராமா உருவாக்கிக் காட்டினார். அவற்றை
உருவாக்குவது யோக சக்தியால் என்றாலும் கூட, அந்தக் கட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை சுவாமி ராமாவால் சொல்லத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தக் கட்டிகளைக் கரைத்தும் காட்டினார்.

தன்னால் தொடாமல் பொருட்களை சுழல
வைக்கவோ, நகர்த்தவோ முடியும் என்று
சொல்லி இருந்ததையும் சுவாமி ராமா செய்து காட்டினார்.

ஒரு பென்சிலை கயிறில் கட்டித் தொங்கவிட்டு அதை அருகில் உற்றுப் பார்த்து சில மந்திரங்களைச் சொல்லி சுழல விட்டார்.

ஆனால் எல்மர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். 'மூச்சுக் காற்றால் கூட அப்படி சுற்ற வைக்க முடியும்' என்றார். உடனே சுவாமி ராமா, ஆராய்ச்சிகூட சூழ்நிலையிலும் கூட தன்னால் அப்படி செய்து காட்ட முடியும் என்று சொன்னார்.

உடனே வேறொரு சிறிய ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள், ஒரு வட்ட அமைப்பில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தன.

ஐந்தடி தொலைவில் சுவரை ஒட்டி ஒரு
கட்டிலில் சுவாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக் காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி அவருக்குத் தரப்பட்டது. முகமூடி இல்லாமலும் கூட வெறும் மூச்சுக் காற்றால் ஐந்தடி தூரத்தில் இருந்து அந்த ஊசிகளைச்
சுழல வைப்பது முடியாத காரியமே அல்லவா? அந்த முகமூடியை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை சுவாமி ராமா, பத்து பத்து டிகிரிகளாக அசைத்துக் காட்டினார்.

இந்த ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் ஆறு பார்வையாளர்கள் முன் நடந்தது.

ஒரு முறை சுவாமி ராமா, எல்மர் மற்றும்
அலைஸ் க்ரீனுடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பேட் நோரிஸ் (Pat Norris) என்ற அவர்களுக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருத்தி, சுவாமி ராமாவை சந்திக்க ஆர்வம் கொண்டு போன் செய்திருந்தார்.

எல்மர், சுவாமி ராமாவிடம் தங்கள் நண்பரான அந்த பெண்மணியைச் சந்திக்க முடியுமா? என்று கேட்டார். சுவாமி ராமா உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் பேட் நோரிஸ் வந்து சேர்வதாகத் தெரிவித்தார். உணவருந்தி முடிந்ததும் சுவாமி ராமா, ஒரு வெள்ளைத் தாளையும், ஒரு பென்சிலையும் தனக்குத் தரும்படி கேட்டார். அவர் கேட்டுக் கொண்டபடியே வெள்ளைத் தாளையும், பென்சிலையும் எல்மர், சுவாமி ராமாவுக்கு கொடுத்தார். சுவாமி ராமா அந்த வெள்ளைத் தாளில் என்னவோ எழுத ஆரம்பித்தார். எழுதி
முடித்து அதை மேசையில் கவிழ்த்து
வைத்தார்.

பேட் நோரிஸ் வந்தவுடன் அவரிடம் சுவாமி ராமா, தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்கும்படி சொன்னார். திடீரென்று அவர் கேள்வி கேட்கச் சொன்னதால் திகைத்தார் பேட் நோரிஸ்.

சுவாமி ராமா மேலும் வற்புறுத்தவே 'என்
மகனை தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்ப வேண்டுமா?' என்று கேட்டார்.

சுவாமி ராமா இன்னொரு கேள்வி கேட்கச் சொன்னார். பேட் நோரிஸ் 'நான் பி.எச்.டி பட்டம் பெற கல்லூரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமா?' என்று கேட்டார்.

இப்படியே மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு கேள்வி என்று ஏழு கேள்விகளைக் கேட்கச் சொன்னார் சுவாமி ராமா.

பேட் நோரிஸ் ஏழாவது கேள்வி கேட்டவுடன் தான் முன்பே எழுதி வைத்திருந்த தாளை எடுத்து அவரிடம் தந்தார். அந்தத் தாளில் சுவாமி ராமா, பேட் நோரிசின் ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுதி இருந்தார்.

அவற்றில் ஐந்து கேள்விகளுக்கான பதில்கள் மிகத் துல்லியமாகவும், ஒரு கேள்விக்கான பதில் அந்தக் கேள்வி சம்பந்தப்பட்டதாகவும், ஒரு கேள்விக்கு பதில் சிறிதும் சம்பந்தம் இல்லாததாகவும் இருந்ததாக பேட் நோரிஸ் தெரிவித்தார்.

ஏழு கேள்விகளில் ஐந்து மட்டுமே மிகச்சரியாக இருப்பினும், கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறியாமலேயே, அவற்றிற்கு முன்கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியமே அல்லவா?

'Beyond Biofeedback' நூலில் சுவாமி ராமா செய்ய முடியும் என்று சொன்ன சில ஆராய்ச்சிகளை, தங்களால் செய்ய முடியாமல் போனதற்கு எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் அப்படி செய்ய முடியாமல் போன ஆராய்ச்சிகளில் இரண்டு வேறு சில யோகிகளால் செய்து காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் நினைவு கூரலாம்.

குடா பக்ஸ் கண்களை மூடிக் கொண்டு படித்துக் காட்டியதும், சுவாமி விசுத்தானந்தர் சூரிய சக்தியைக் கொண்டு சில அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள...

நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முயலுங்கள்...


எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை...


எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள...

பூச்சியத்தை கண்டு பிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான்.

சரி, நமது தாய்மொழியான தமிழில் எண்களின் ஒளி வடிவம் என்ன வென்று உங்களுக்குத் தெரியு மா?

1 – க
2 – உ
3 – ங
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 – அ
9 – கூ
0 – 0

அப்பப்பா இதை எப்ப‍டியப்பா நினைவில் வைத்துக்கொள்வது என்றுதானே அச்ச‍ம் கொள்கிறீர்கள்.

அச்ச‍ம் எதற்கு?

கடுகு, உளுந்து, ஙனைத்து, சமைச்சு, ருசிச்சு, சாப்பிட்டேன், என, அவன், கூறினான், ஓ, என்ற இந்த வாக்கியத்தை நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொ ள்ள‍ முடியும் அல்ல‍வா?

என்ன‍ இது அதெப்படி இதில் தமிழ் எண்கள் ஒலி வடிவம் வருகிற து என்று நீங்கள் ஐயப்படுவது எனக் குத் தெரிகிறது. மேற்கூறி ய அதே வரியை கீழேயும் குறிப்பிட்டுள்ளேன்.

அதை நீங்கள் படியுங்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கீழே உள்ள‍ வரியில் வரும் அத்த‍னை வார்த் தைகளின் முதல் எழுத்துக்களை மட்டுமே படித்துப்பாருங்க ள். எண்களில் தமிழ் மொழி வடிவம் வருகிறது அல்ல‍வா?

“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“

என்ன‍ இப்ப உங்களுக்கு எளிமையாக இருக்குமே...

அடேய் கச்சா எண்ணெய்க்கு பொறந்தவனுகளா அது கஜா புயல்டா...


ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழினத்துக்கு யாரும் செய்யாத துரோகத்தைச் செய்த தமிழக அரசு; வேல்முருகன் விமர்சனம்...


ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அதன் நிர்வாகம் தொடுத்த வழக்கில் ஒவ்வொரு நிலையிலும் தமிழக அரசு தோல்வியையே சந்தித்தது. முதலில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்குத் தடை கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.

ஆனால் ஆலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், ஆலையை ஆய்வு செய்யவும் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கைப்படியே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது..

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு சீராய்வு மனு தொடுத்தது. அது விசாரணையில் இருந்துவரும் நிலையில் திங்கள்கிழமை தருண் அகர்வால் குழு தனது ஆய்வறிக்கையை 48 கவர்களில் வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்குத் தடை கோரி தொடக்கத்தில் தமிழக அரசு தொடுத்த மனுவையுமே தள்ளுபடி செய்தது.

இதன்மூலம் ஆலையை மீண்டும் திறக்கத் தடையில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இந்த சூழல் ஏற்பட்டதற்குக் காரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தமிழக அரசாக, தமிழ் மக்களின் அரசாக இல்லாமல், பிரதமர் மோடியின் பாஜக அரசாக செயல்பட்டதே. அதனால்தான் தமிழினத்திற்கு இதுநாள் வரை எவராலும் செய்யப்படாத இரண்டகம் செய்யப்பட்டிருக்கிறது.

13 பேரைச் சுட்டுக் கொன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக சீல் வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஆலையை மீண்டும் திறக்கக் கோரும் நிர்வாகத்தின் வழக்கை எதிர்கொள்வதாகப் போக்குக் காட்டி கடைசியில் சீராய்வு மனுவுக்கு வந்து, அதுவும் தள்ளுபடி என்பதை வேறு எப்படிச் சொல்ல முடியும்?

இப்போது, அடுத்து என்ன செய்யப்போகிறது அதிமுக அரசு என்பதைவிட, அது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்த அப்போதே, அமைச்சரவை கூடி கொள்கை முடிவெடுத்துதான் அதனை மூட ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாததுதான் இத்தனைக்கும் காரணம்.

எனவே இப்போதாவது உடனடியாக அமைச்சரவை கூடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கொள்கை முடிவெடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுவே முன்னர் செய்த இரண்டகத்தைத் துடைப்பதாக இருக்கும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்...

ESP என்றால் என்ன..?


Extra sensory perception...

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP -இன் வகைகள்...

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிறசக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்.

Dowsing : தங்கம், புதையல் , நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்.

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன.

ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.

தியானம், யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக் கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து...


நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்.....இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம்.

ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது...

நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .

இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள்.

நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால்.... நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?

இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர்பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது....

நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு, சுண்ணாம்புச்சத்து, பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..

ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும் , தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்.....

அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்...உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்...

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு...

நியூட்டன் விதியும் கர்மவினையும்...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின்கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில்தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி...

இது தான் தமிழகம்...


சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர். இது ஒரு நல்ல தொடக்கம் தானே...


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் தான செட்டில்மென்ட் பத்திரப் பதிவு மூலம் எழுதி வைத்தார். அதன்பிறகு, மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சோறு போடாமல் தவிக்கவிட்டனர். இளைய மகன் செல்வம், தந்தையை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். உணவுக்கும் வழியின்றி மனைவியுடன் தவித்த கண்ணன், இருவரும் தலா 60 சென்ட் நிலத்தையாவது ெகாடுங்கள், விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என கேட்டும், மகன்கள் மறுத்துவிட்டனர்.  இதனால் கண்ணன், அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர், கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின்பேரில், ஆர்டிஓ(பொறுப்பு) உமாமகேஸ்வரி, அவரது மகன்களை அழைத்து விசாரித்தார். அப்போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் தெரிவித்தார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம், ஆர்டிஓ ஓப்படைத்தார். இதை தொடர்ந்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்தை நேற்று அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். முதியவர்கள் இருவரும், அவருக்கு நன்றி தெரிவித்தனர்....

சபாஷ் கலெக்டர்...

அதிர்வலைகள்...


இந்த பிரபஞ்சமே ஒரு உடல் போல் பல உறுப்புக்கள் ஒற்றுமையுடன் இயங்கும் ஒரு உயிருள்ள ஓர்  உடல்.  இதில் எதுவும் தனியாக இல்லை, எல்லாமே ஒன்றுடன் ஓன்று தொடர்பு கொண்டது, எதுவும் தனித்தில்லை.

ஓவ்வொரு மனிதனும் தனியே நிற்கும் தனித்தீவு என்று யாரும் தவறாக கருதிவிட கூடாது. ஒவ்வொருவரும், மற்றவர்களை மற்றவற்றை பாதிக்கவே செய்கிறார்கள்.

சாலையில், ஓரு கல்லை கடந்து போகையில் தெரு ஓரத்தில் கிடக்கும் அந்த கல், தன் அதிர்வுகளை உங்களை நோக்கி வீசும். மலர்களும் கூட, தம் அதிர்வுகளை வீசவே செய்கிறது. நீங்களும் சும்மா கடந்து போய்க் கொண்டிருக்கவில்லை.

நீங்களும் உங்கள் அதிர்வுகளை வீசிக் கொண்டேதான் போகிறீர்கள்.

நிலவின் தாக்கம் அனைவரும் அறிந்ததே ஆனால் அவைகள் நம்மாலும் பாதிப்புகளை அடைகின்றன.

ஏனெனில் இந்த பிரபஞ்சமே ஒரு உடல் போல்தான் அதில் நாம் ஒருவகையான  சிறு உறுப்பு...

ராயல் என்பில்டு கோவில்...


ஓம் பன்னா, ஒரு இருசக்கர வாகன காதலர். தேர்தல் காரணமாக தனது புல்லட் பைக்கில் மக்களை சந்திக்க தனது ஊருக்கு செல்லும் வழியில் துரதிருஷ்டவசமான விபத்து ஒன்றில் காலமானார்.

பின்னர் காவல்துறையினர் வாகனத்தை கைப்பற்றி காவல்நிலையத்தில் வைத்தபோது, அடுத்த நாள் காலையில் அது காணாமல் போயிருந்தது. ஒரு சில தேடல்களுக்குப் பிறகு, அதே விபத்து தளத்தில் வாகனத்தை கண்டனர்.  மீண்டும் காவல் நிலையத்தில் வைத்தபோதும், இதே சம்பவம் மீண்டும் மீண்டும் தொடர்ந்தது.

இதனால் காவல் துறையினர், வாகனத்தை அவர் வாழ்ந்த ஊர் மக்களிடமே ஒப்படைத்தனர். அவர்களும் அதன் உரிமையாளர் அங்கேயே சவாரி செய்கிறார் என்று நம்பினர். எனவே, அவர்  நினைவிடத்தில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள்,

அங்கு அவர் மக்களை விபத்திலிருந்து தடுக்கும் காவல் தெய்வமாக  விளங்குவதாக நம்பினர். ஏனென்றால் அந்த குறிப்பிட்ட இடத்தில், அங்கு எந்தவித இருசக்கர வாகன விபத்துகள் நடக்கவில்லையாம்.

மற்றொரு சுவாரஸ்யமான விசயம், பக்தர்கள் அவருக்கு புல்லட் பீர் வைத்து வணங்குகிறார்கள். ராஜஸ்தானில் பாலி நகரத்திற்கு 20 கி.மீ. தொலைவில் இந்த இருகச்கர வாகன ஓட்டிகளின் குலதெய்வ கோவில் அமைந்துள்ளது...