01/06/2017

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


கூடங்குளம் 5மற்றும் 6-வது அணு உலை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது...

இப்புடி ஒன்னு ஒன்னா கையெழுத்து போடுறதுக்கு பேசாம ரஷ்யாகாரன் ஒரு அணுகுண்ட தூத்துக்குடி பக்கம் போட்டுட்டு போகலாம்ல...?

2 மணி நேரத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்படும் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி...


30 மணி நேரத்திற்கு மேலாக சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது...

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாள் இன்று நினைவு கூர்வோம்... தமிழ் அழியவில்லை அழிக்கப்படுகிறது...


டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு...


ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று சென்னை பாரிமுனையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கைது...



மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை..

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப் படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

மேகாலாய பாஜக தேர்தல் வாக்குறுதி: இறைச்சிக்காக மாட்டை அறுப்பதை தடை செய்ய மாடடோம்....


நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை... இந்த அதிபுத்திசாலிக்கு என்ன பண்ணுறது...


பாஜக மோடியை பாஜக காரனே செருப்பால் அடிக்கிறான்...


காவல்துறைக்கு தண்ணி காட்டிய விவசாயிகள்...


எகிப்த்தை ஆண்ட தமிழன்...


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

இராசராச சோழனை பற்றி வந்தேறிகளின் பொய்க் கூற்றும் அதற்கான பதிலும்....


பொய்க் கூற்று….

ராசராசசோழன் என்கிற, அய்யோக்கியனும் தொடர்கிற , அவனின் வாரிசுகளும்..

ராஜராஜ சோழன் போன்ற மக்கள் வீரோதியை, தேவதாசி முறையை கொண்டு வந்து பெண்களை இழிவு படுத்தியவனை, வட இந்தியப் பார்ப்பனர்களை தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கி, பார்ப்பனியத்தை வலுப்பெறுச் செய்தவனை,­ பல புத்தக்கோயில்களை இடித்தவனை, சைவ சமயத்திற்கு விளக்குப் பிடித்தவனை ‘தமிழ் மன்னர்களின் தலைசிறந்தவன், இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன்’ என்று கூச்சமில்லாமல் பெருமை கொள்கிறார்கள்.

இதில் பல சாதிக்காரர்கள் இவனை தங்கள் சாதிக்காரன் என்று பெருமை பொங்க உரிமை கொண்டாடுகிறார்கள்.

இதில் சில அறிவாளிகள் என்கிற அறிவு கோணையர்களும் அடக்கம்...

இதற்கானப் பதில் :

அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி செய்யும் வணிகம் தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76).

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெசுலி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விசயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 69 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 70 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 23 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்).

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் (வடுக வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி) பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஅள்ளியில் காணப்படுகிறது.

(கி.பி1113) (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராசசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது.

அடியார் என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும்.

தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருசுணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேசுவர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது (கர். கல் VAK 105).. (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை, ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

விசய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க ஆரிய மனுவாதிகளிடம் (பிராமணர்களிடம்) ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் (தெலுங்கு வந்தேறிகள், கன்னட வந்தேறிகள், மலையாள வந்தேறிகள்) காலத்தில்தான்.

இன்று நாம் காணும் மனுவாத (பிராமண) ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விசய நகர – தெலுங்க நாயக்க திராவிடர்களே...

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

வந்தேறிகளின் கை ஓங்க விட்டுக் கொண்டு இருக்கும் நம்மவர்கள் உணர்ந்து தெளிவாக வேண்டும்…

இப்போது புரிகிறதா தமிழர்களே..

திராவிடர்களுக்கு ஏன் தாலி பிடிப்பதில்லை என்று...

தாசி கலாச்சாரம் திராவிடனின் கலாச்சாரம் அதை தமிழர்களின் மேல் திணித்து தமிழர் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள்..

கெட்டி பொம்மலுவை - கட்டப் பொம்மனாக திரித்து காட்டியது போலத் தான்...

விழித்தெழு தமிழா...

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலில் உள்ள சிற்பங்களில் ஒன்று. பெண்கள் போர் பயிற்சியில் ஈடுபடுவதுப் போல் உள்ளது…


கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்...

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள்...


அதனால் நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.

 மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது...

திராவிடர்களே பதில் சொல்லுங்கள்...


இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்...


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்..

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்..

3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

இலுமினாட்டியும் டைட்டானிக் கப்பலின் உலக அரசியலும்...


இந்த உலக அரசியல் பற்றிய விழிப்புணர்வு நம்மை இலுமினாட்டிகளின் மாய வலையிலிருந்து தப்பிக்க வைக்கும். அவர்கள் நம் வாழ்வை சீரழித்து வருகிறார்கள் எல்லா வழிகளிலும்.

இப்பொழுதைய பதிவில் அட்லண்டிக் பெருங்கடல் பேரழகாய் ஒய்யாரமாக பயணம் செய்த டைட்டனிக் பற்றி பார்ப்போம்..

இவளின் ஒய்யாரப் பயணம்
15 ஏப்ரல் 1912, அதிகாலை 2:20 ல் நிறைவு ஏய்தியது..

இந்நிகழ்விற்கு காரணமாகவும் இலுமினாட்டிகளே இருந்துள்ளனர்..

இவர்கள் எப்பொழுதுமே ஒரு கல்லில் பல மாங்காய் அடிப்பவர்கள்.

விழுந்த ஒரு மாங்காவை பற்றி மட்டும் இதில் பார்ப்போம்..

US Federal Reserve bank...

இந்த மாங்காவை பற்றி தான் பார்க்க போகிறோம்.

இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தார் அடுத்து அமேரிக்காவுக்கு குறிவைக்கின்றனர்.

வங்களில் பொய்மையை அறிய எனது பழைய பதிவை வாசியுங்கள்.

நம் இலுமினாட்டிகள் அவர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிய கூடாது என்று முடித்தவரை சட்டப்படி தான் செய்வார்கள்.

சில நேரம் சட்டங்களை உருவாக்கியும் செய்வார்கள்.

அதன்படி யூனிடட் சிடேட் பெடரல் ரிசர்வ் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது அதற்கு எதிராக நின்றவர்கள் முக்கியமாக மூன்று பேர்.

Benjamin Guggenheim,  Isa strauss, Jecob Astor.  இவர்களால் 1912 ஏப்ரல் மாத தொடக்கத்தில்  அந்த வங்கி திட்டம் ஊத்தி மூடப்பட்டது.

TITANIC SECRET...

டைட்டானிக் பயணம்..

அதே ஏப்ரலில் இம்மூவரும் டைட்டானிகில் பயணம் செய்தனர். மூன்று பேரும் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் 15 தேதி கப்பலோடு மூழ்கினர்..

மீண்டும் ரிசர்வ் வங்கி..

டிசம்பர் 1913 ல் US Federal Reserve Bank செயல்பட ஆரம்பித்தது. இதுவே விழுந்த மாங்காய்களில் ஒன்று..

எப்போதுமே சொல்லிட்டு செய்கின்ற இலுமினாட்டிகள் இதையும் அப்படி தான் செய்தார்கள்..

Morgan Robertson, 1898ல் Futility என்று ஒரு நாவல் வெளியிடுகிறார்.

அதில் டைட்டன் என்ற மூழ்கடிக்க முடியாத கப்பல் ஏப்ரல் மாதத்தில் ஒரு பனிபாறையில மோதி மூழ்குகிறது,  உயிர் காக்கும் படகுகள் குறைவாக இருந்ததால் நிறைய பேர் இறந்து போகிறார்கள். இது கதை..

இது பதினான்கு ஆண்டுகள் கழித்து உண்மையானது டைட்டானிக்..

நான் ஜெகப் அஸ்டர் என சொல்லியத கவனித்தீர்களா..

அஸ்டர் குடும்பமும் இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று.

அப்போது ஏன் இவரும் அந்த வங்கி வரவிடாமல் தடுக்க முயர்ச்சித்தார்.

அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அடுத்துவரும் பதிவுகளில் இவர்களின் அடையாளங்கள் பற்றியும் சொல்ல இருக்கிறேன்...

மருதாணியின் மகத்துவங்கள்...


கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி..

பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பது மருதாணி தான்..

மருதாணியில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன..

உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நகசுத்தி வராமல் தடுக்கும்..

இதன் வேர்ப்பட்டையை அரைத்து புண்களில் தடவினால் கால் ஆணி, புண் சரியாகும்..

தூக்கமின்மைக்கு தூக்க மாத்திரை சாப்பிடுவதற்கு பதிலாக, மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி, தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் தூக்கம் வரும்..

ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்..

இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி விட்டு, இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும்..

இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும், நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் அரைத்து போட்டு காய்ச்சலாம்..

இந்த எண்ணெயை நாளும் தலைக்கு தேய்க்க முடி வளரும், நரைமாறும்..

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு குளியல் சோப்புடன் சிறிது மருதாணியையும் அரைத்து பூசி வர கருந்தேமல் சரியாகும்...

ஒரு வியாபாரக் கொள்ளை மாம்பழம்...


இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் ...

அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன் .....

இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம்..

அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை. காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.

இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.

இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்.

அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..

நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல.

ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு...

அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்.

இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...

இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..

இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?

ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி
உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..

தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...

35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க
வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?

மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?

அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?

மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...

கிளியோபட்ரா.....


வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்...பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது...நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

பன்னிக்கறி திண்ணும் போராட்டம் செய்வோம்னு சொல்றாங்களேயொழிய செய்யமாட்டேன்கிறாங்க பாஜக டவுசர் பாய்ஸ்......


வெறும் வாய்சவடால் தான் இருக்கு இவனுங்ககிட்ட...

ஐ சப்போர்ட் எச்ச ராசா சர்மா தலைமையிலான பன்னிக்கறி தின்னும் போராட்டம்...

40 சதவீத பதஞ்சலி பொருட்கள் தரம் குறைந்தவை: ஆர்.டி.ஐ. தகவல்...


சபாஸ் சரியான போட்டி...


திராவிட திருடர்களே பதில் சொல்லுங்க...


அதை போல் மலையாளி என்று எப்படி வரையறை செய்கிறீர்கள் என்று எந்த மலையாளியிடமாவது திருட்டு மீடியாவை கேட்க சொல்லுங்கள்.....

சேட்டன்கள், பிஞ்ச செருப்பாலே அடிப்பார்கள்...

அதிமுக அமைச்சர் விஞ்ஞானி செல்லூர் ராஜூ கலாட்டா...


தமிழக காவல்துறை எனும் ஏவல்துறை லட்சனம்...j


இது வரை ஆட்டோவிற்கும் குடிசைக்கும் தீ வைத்து தீவிரவாத செயலில் ஈடுபட்ட காவல்துறை மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழக காவல்துறையை கண்டித்து போராடினால்.. காவல்துறை நிலை என்னவாகும்...

ஏற்கனவே உலகத்தில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழக காவல்துறை.. ஜல்லிக்கட்டில் தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் அடி பாதளத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது...

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள செல்லப்பிள்ளை கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்று வரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி, சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன)..

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறிய பிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்த பெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத் தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

தெலுங்கு நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள்.

அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

மானங்கெட்ட மத்திய பாஜக மோடி அரசின் கவனத்திற்கு...


பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள் தண்டணை வழங்கலாம். - ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் பரிந்துரை...


மதுரை உயர்நீதி மன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு விதித்த தடைக்கு எதிர்வினையா...?

மாட்டிறைச்சி தடைக்கெதிராக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை - மாலைமுரசு இதழ்...


நாம் எவ்வளவு பெரிய இழிச்சவாயர்கள்...


தனக்கு ஒரு அடி விழுந்ததும் மலையாளி அண்டை மாநிலங்களை கூப்பிடுகிறான்
தனி நாடு கோருகிறான்..

தமிழர்கள் நாம் எத்தனை உரிமைகளை இழந்தோம்..

நம்மை ஒடுக்கிய இந்தியாவை ஒன்றுமே செய்ய அகிகாரமில்லை..

நாம் அதிகாரத்தை திராவிடத்திடம் கொடுத்திருந்தோம் அவர்கள் துரோகம் செய்தார்கள்..

நமக்கு துரோகம் இழைத்த அதே திராவிடத்தை தான் இன்றும் ஆள விட்டுக் கொண்டிருக்கிறோம்..

நாம் எவ்வளவு பெரிய இழிச்சவாயர்கள்..

இப்போதும் நாம் நமக்கான ஆட்சியை
ஆளும் உரிமையை தான் கோருகிறோம்..

திமுக வும் டூபாக்கூர் வேலையும்...


நம்ப முடியாத உண்மைகள்...



மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி...


15.09.2016 அன்று கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேனாம்பேட்டையிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் தாக்கப்பட்டதற்கு மூன்று தோழர்களை அப்போதே அரசு கைது செய்தது...

அவர்கள் பிணையிலும் வெளியே வந்துவிட்டார்கள்.

ஆனால் அந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் 8மாதங்களுக்கு பிறகு இப்போது தோழர் திருமுருகன் மீதும் தோழர் டைசன் மீதும் இரண்டு வழக்குகளை பிஜேபியின் பினாமி அரசு போட்டிருப்பதாக நேற்று சிறையில் வைத்து தோழர்களிடம் காவல்துறை கையெழுத்து வாங்கியிருக்கிறது.

உண்மையிலேயே இவர்கள் தான் தாக்கினார்களென்றால் அப்போதே இவர்கள் மீது வழக்கோ கைதோ செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

இப்போது சிறையிலிருக்கும் போது கையெழுத்து வாங்கி வழக்கு பதிகிறீர்களென்றால் இது உள்நோக்கத்தோடு போடப்படும் வழக்கு தானே...

இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் இந்த குண்டர் சட்டமே ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதற்கு....

சபாஷ் சரியான போட்டி...


ரஜினி கட்சியில் பொதுச் செயலாளர் லாரன்ஸ்… கொள்கை பரப்புச் செயலாளர் நமீதா…


ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. காலா படப்பிடிப்பிற்காக மும்பையில் இருக்கிறார்.

எந்திரன் 2 வெளியான பின்னரே ரஜினி உண்மையாகவே அரசியலுக்கு வருவாரா, இல்லையா என்பது தெரியும்.

இந்நிலையில் அவரது கட்சியில் லாரன்ஸ் இணைய உள்ளதாகவும், அவருக்கு பொதுச் செயலாளர் பதவி தர உள்ளதாகவும், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தப்படாத யூகத் தகவல்கள் பல வெளியாகி வருகின்றன.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு ரஜினிக்கு தமிழகத்தில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை என்பதால், ஓரளவு இளைஞர்களிடம் நல்ல பெயர் பெற்ற, அதே நேரம் ரஜினிக்கு விசுவாசமாக உள்ள, அதே நேரம் பிரபலமான ஒருவர் தேவையாம்.

இதனால் லாரன்ஸை அவர் பொதுச் செயலாளராக நியமிப்பார் என யூகிக்கப்படுகிறது.

நமீதாவிற்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ரஜினி வழங்கினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என சிலர் வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

மீனா, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் ரஜினி கட்சியில் துண்டு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...