27/09/2018
தமிழ்நாடு விடுதலைக் குரல் சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் 27.9.1905...
1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் "தமிழ்நாடு தமிழருக்கே " முழக்கம் பிறந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த முழக்கம் "சுதந்திரத் தமிழ்நாடு" முழக்கமாக ஒலித்தது. அதற்கு காரணமானவர் 'தமிழர் தந்தை' எனக் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனார் ஆவார்.
சி.பா. ஆதித்தனார் திருநெல்வேலி மாவட்டம் காயாமொழி என்ற ஊரில் 27.9.1905இல் சிவந்தி ஆதித்தர்- கனகம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஆதித்தனாருக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூத்தவர் பெயர் தையல்பாசு ஆதித்தனார். இளையவர் பெயர் தனஞ்செய ஆதித்தனார். மற்ற இரு தங்கைகள் பெயர் வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார்.
சி.பா.ஆதித்தனாருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். இவர் நான்கு வயது அடைந்த போது திருவைகுண்டம் காரனேசன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார்.
ஆறாம் வகுப்பில் வடமொழி அல்லது தமிழ்மொழி விருப்பப் பாடமாக கற்றுத் தரப்பட்டது. இவர் தமிழ்மொழியை விருப்பப் பாடமாக தெரிவு செய்து கல்வியைத் தொடர்ந்தார்.
பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னை சென்று சட்டம் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1928இல் இலண்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு பாரிஸ்டர் பட்டப் படிப்பை தொடர்ந்து கொண்டே பல்வேறு நாடுகளில் இருந்து வரும் புகழ் பெற்ற ஆங்கில இதழ்களுக்கு கடிதம் எழுதி வந்தார். இதழ்களால் வெளியிடப்படும் இந்தப்பகுதிக்கு இலண்டன் கடிதம் (London Letters) என்று பெயர். அவர் பிற்காலத்தில் இதழியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு இது உரமாக அமைந்தது என்று கூறலாம்.
1933இல் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆதித்தனார் அங்கிருந்தவாறே சிங்கப்பூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு புகழ்பெற்று விளங்கினார். சிங்கப்பூரில் செல்வாக்கு பெற்ற ஓ.இராமசாமி என்பவரின் மகள் கோவிந்தம்மாள் என்பவரை 9.1.1933இல் திருமணம் செய்து கொண்டார். ஆதித்தனாருக்கு இராமச்சந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன் என்ற இரண்டு மகன்களும், சரசுவதி என்ற ஒரு மகளும் உண்டு.
தமிழ்நாட்டில் 1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வந்த போது, சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்தப் போராட்டம் மிகவும் கவர்ந்தது. சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் "தமிழ வேள்" கோ.சாரங்கபாணி அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதன்முறையாக "தனித்தமிழ்நாடு" வேண்டும் என்று முழங்கினார். தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பிய அவர் 1942இல் தமிழ்நாட்டிற்குத் திரும்பினார்.
சிங்கப்பூரில் இருக்கும் போதே தமிழ் நாளிதழ் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு தமிழ்நாட்டிற்கு வந்த போதுதான் நிறைவேறியது.
அக்காலத்தில் படித்த பெருமக்கள் வாழும் சென்னை நகரை மையமிட்டே இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. கல்வி அறிவு குறைந்த ஏனைய தமிழகத்தின் பிறபகுதிகளில் இதழ்கள் நடத்த எவரும் முன்வரவில்லை. அந்நிலையில் மிகத் துணிச்சலோடு தமது முதல் இதழை மதுரையில் தொடங்கினார். 'மதுரை முரசு' என பெயர் சூட்டப்பட்டு இதழ் வெளிவந்தது. அப்போது பிரித்தானிய அரசு கடும் தணிக்கைக்கு உட்படுத்தி இதழைத் தடை செய்தது.
23.8.1942இல் தொடங்கப்பெற்ற அவரின் இரண்டாவது இதழுக்குத் 'தமிழன்' என்று பெயரிடப்பட்டது. பெரியார் அவர்கள் "திராவிடநாடு" விடுதலையை எழுப்பி வந்த காலத்தில், இவ்விதழானது தமிழ்நாடு விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு வெளியிடப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அட்டைப்படமும், "தமிழர் என்று சொல்வோம்- பகைவர் தமை நடுங்க வைப்போம்" என்ற அவரின் பாடல் வரிகளும் தமிழர்களின் தமிழுணர்வைத் தட்டியெழுப்பியது.
ஆதித்தனாரின் புகழ்பெற்ற "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" முழக்கம் அவ்விதழில்தான் முதன்முறையாக வெளியிடப்பட்டது.
தில்லி அரசின் ஓரவஞ்சனையால் தமிழர்களின் பகல்கனவாகிப் போன திட்டமாம் "சேதுக் கால்வாய்" திட்டத்திற்கு "தமிழன் கால்வாய்" என்று பெயரிட்டு அழைத்ததும் "தமிழன்" ஏடுதான்.
அதுமட்டுமா? தமிழ்நாடு விடுதலையோடு தமிழீழமும் விடுதலை பெற வேண்டும் என்று (10-வது இதழில் ) முதன் முதலாகக் குரல் கொடுத்ததும் "தமிழன்" இதழ்தான்.
ஆயிரம் பிரதிகளோடு தொடங்கிய
"தமிழன்" இதழ் பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்று ஏழாயிரம் பிரதிகள் வரைக்கும் விற்பனையான போதிலும், தாள் பஞ்சம் காரணமாக நிறுத்தப்பட்டது.
ஆதித்தனார் தமது மூன்றாவது இதழுக்கு 'தந்தி' என்று பெயர் சூட்டினார். 1.11.1942இல் 'முத்தமிழ்க் காவலர் ' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 'தந்தி' இதழைத் தொடங்கி வைத்தார். ஆதித்தனார் தந்தி இதழுக்கு தாள் கிடைக்காத காரணத்தால் வைக்கோலை ஊற வைத்து தாமாகவே தாள் செய்தார். அதற்கு "தமிழன் கைக் காகிதம்" என்று பெயரிட்டு தந்தியை அச்சிட்டு வெளியிட்டார். மூலை முடுக்கு கிராமங்களில் எல்லாம் தந்தி படிக்கும் மக்கள் பெருமளவில் உருவானார்கள்.
இதற்குக் காரணம் 'தந்தி' இதழில் பாமரரும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் வகையில் நீளமான வாக்கியங்கள் இல்லாமல் சிறிய வாக்கியங்கள் அமைத்து வெளியிடப்பட்டது. செந்தமிழில் இல்லாமல் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டது. பிறமொழிச் சொற்கள் தவிர்க்கப்பட்டு நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
தனித்தமிழ் இயக்கத்தவர் படித்தவரிடம் பரப்பிய பல நல்ல தமிழ்ச் சொற்களையெல்லாம் கிராமங்களில் வாழும் பாமரரும் உச்சரிக்க வைத்த பெருமை "தந்தி" இதழையேச் சாரும். 1948இல் இவ்விதழ் "தினத்தந்தி" இதழாக உருமாற்றம் பெற்று இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது.
தமிழ்நாடு விடுதலையைக் காண இதழின் ஊடாகப் பேசி வந்த ஆதித்தனார் அவர்கள் ஒரு அரசியல் அமைப்பைத் தோற்றுவித்து அதன் ஊடாகவும் தமிழக விடுதலையைப் பேச விரும்பினார். 1942இல் தமிழ் இராச்சியக் கட்சியை உருவாக்கினார்.
1943இல் மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் "தமிழ்நாடு இளந்தமிழர் இயக்க மாநாடு" ஒன்றையும் சிறப்பாக நடத்தினார். மேலும், தமிழ் இராச்சியக் கட்சியின் கொள்கையை விளக்கும் "தமிழ் இராச்சியம்" பெயரில் அரிய நூலினை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப்போரும், இந்திய விடுதலைப் போரும் தீவிரம் பெற்று வந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் நடத்துவது முறையாகாது என்பதாக உணர்ந்தார். இதனால் தாம் உருவாக்கிய தமிழ் இராச்சியக் கட்சியின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தார்.
அதன் பின்னர், ஆதித்தனார் தொழிலாளர் நலப் போராட்டங்களில் கவனம் செலுத்தினார்.1952இல் கள் இறக்கும் தொழிலாளர்கள் பனைமர வரியால் பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்தார். 1955இல்
செங்கல்பட்டு மாவட்டம் மாத்தூரில் உழவர்களின் கூலி உயர்வுப் போராட்டத்திற்கும் தலைமை தாங்கிப் போராடினார்.
1956இல் ஆதித்தனார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த போது ஐரிஷ் ( அயர்லாந்து) நாட்டு விடுதலை வீரன் டிவேலரா பெயரும், அவர் நடத்திய இயக்கமான 'சின்பெயின்' பெயரும் இவரை வெகுவாகக் கவர்ந்தது.
1958இல் புதிய இயக்கம் கண்டபோது ஐரிஷ் விடுதலையை (We are Irish) நினைவுப்படுத்தும் வகையில் 'நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார்.
நாம் தமிழர் இயக்கத்தின் கொடியானது நீல வண்ணத்தின் பின்னணியில், அதன் நடுவில் வில், புலி, மீனும் பொறிக்கப்பட்டு 'தமிழ் வெல்க' என்ற வரிகளோடு உருவாக்கப்பட்டது.
ஆதித்தனார் முதன்முதலாக வெளியிட்ட நூலான 'தமிழ் இராச்சிய' நூலினை சற்று விரிவாக எழுதி 'தமிழப்பேரரசு' எனும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது.
ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்குத் 'தமிழன்' என்று பெயர் வைத்ததைப் போல, இயக்க அலுவலகத்திற்குத் 'தமிழன் இல்லம்' என்றும், இயக்க வார இதழுக்குத் 'தமிழ்க்கொடி' என்றும், பதிப்பகத்திற்குத் 'தமிழ்த்தாய்' என்றும், பெயர் சூட்டினார்.
ஆதித்தனார் இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்ததைப் போலவே ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்தார். 'உலகத்தில் நான் செல்லாத நாடுகள் இல்லை. ஆனால் இரண்டு மொழிகளில் எழுதுகிறவனை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை' என்றார்.
1956இல் மொழிவழி தமிழ் மாநிலம் உருவான பிறகும் அண்ணா "திராவிட நாடு " கோரிக்கையை எழுப்பி வந்தார். அத்தோடு, சி.பா. ஆதித்தனார் கேட்கும் 'தனித் தமிழ்நாடு' என்பது ஒரு தொழுநோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெயைப் போன்றது. அது யாருக்கும் பயன்படாது.” என்றார்.
அண்ணாவின் இந்த கடும் பேச்சைக் கண்டித்து ஆதித்தனார் பின்வருமாறு பதிலுரைத்தார்:
“மெத்தப் படித்த அண்ணாத்துரை அவர்களே! இன்று இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதைப் போல, நீங்கள் கேட்கும் திராவிடக் கூட்டாட்சியிலும் தமிழ்நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். அதை விட இந்தியக் கூட்டாட்சியிலேயே அடிமை நாடாக இருந்து விடலாமே!
அது மட்டுமன்று. ‘திராவிட நாடு’ என்ற குழந்தையைப் பெற்றவர் பெரியார். அதை வளர்த்தவரும் அவரே. பின்னர் அவரே, "அத் திராவிட நாடு என்ற குழந்தை செத்து விட்டது, அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன் " என்று அறிவித்து விட்டார். இவ்வாறு அவர் அறிவித்த பிறகும் ‘திராவிட நாடு’ பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று கதறியழுது கொண்டிருப்பதில் பொருளில்லை”
அதுபோல், தமிழன் தன்னை 'திராவிடன் ' என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்து வந்த திரி- வடுகர்களே திராவிடர்கள் ஆவார்கள், தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.
6.7.1958இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மன்னார் குடியில் 'சுதந்திரத் தமிழ்நாடு' மாநாடு நடத்தினார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்ட நிலையில் மாநாட்டில் பங்கேற்க பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பேசிய பெரியார், ' தமிழக விடுதலைக் கிளர்ச்சியில் ஆதித்தனாருக்கு இருக்கிற ஆர்வமும், ஊக்கமும் நம்மையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படி செய்து விட்டது' என்றார்.
அந்த மாநாட்டில், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெரியாரும் பங்கேற்க ஒப்புக் கொண்டார். 5.6.1960இல் நடைபெற்ற பட எரிப்புப் போராட்டத்தில் ஆதித்தனாரும், பெரியாரும் முன் கூட்டியே கைது செய்யப்பட்டனர்.
அதே ஆண்டில் ஆதித்தனார் இந்தியைத் திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்தார். அந்தப் போராட்டத்தில் முன் கூட்டியே அவர் கைது செய்யப்பட்டார்.
1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதால் 9.10.1965இல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் கோயமுத்தூர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1965இல் பிரிவினைத் தடைச்சட்டம் அச்சுறுத்தி வந்ததால், சிறையை விட்டு வெளியே வந்ததும் நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு தி.மு.க.வில் இணைந்தார். இதன்மூலம் தமிழ்நாடு விடுதலையைக் கைகழுவினார். அவருடைய 'திராவிட' மறுப்பும் காணாமல் போனது. ஆதித்தனாரின் தி.மு.க. நுழைவு அவரது அரசியல் வாழ்வில் கறையாகவும் சந்தர்ப்பவாதமாகவும் ஆயிற்று.
இது அவரின் தமிழ்த் தேசிய கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.
ஆதித்தனார் எப்போதும் தேர்தல் களத்தைப் புறக்கணித்தவர் அல்ல. 1947இல் சட்ட மேலவை உறுப்பினர், 1952,1957, 1967ஆம் ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினர், அண்ணா ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் சட்டப்பேரவைத் தலைவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் என்று பல பதவிகள் வகித்தவர். ஆதித்தனாரின் தேர்தல் அணுகுமுறையும், இலட்சிய உறுதியின்மையும் அவர் முன்னெடுத்த தமிழ்த்தேசிய அரசியலை பலி கொண்டது என்பதை உறுதிபடக் கூறலாம்.
ஆதித்தனார் 21.5.1981 அன்று தமது 76வது வயதில் காலமானார்.
ஆதித்தனார் தமது உயிர் மூச்சுக் கொள்கைகளைக் கைவிட்டு கண் மூடினாலும் கூட, அவர் மூட்டிய தமிழ்த் தேசிய விடுதலைப் பெரு நெருப்பு என்பது இன்னும் அணைய வில்லை. அது ஈழ விடுதலையிலும் தமிழக விடுதலையிலும் கனன்று கொண்டிருக்கிறது...
முடி உதிர்தல், இளநரை சரியாக....
கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.
மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்...
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்..
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்..
3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...
கன்னட ஈ.வே. ராமசாமி மண் மீட்பில் உதவினாரா?
மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம்.. மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம். - விடுதலை 21.1.47..
தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுபவன் எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,
குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் - ஈ.வெ.ரா.- விடுதலை 11.01.1947..
ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில் தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர, குமரி முதல் வேங்கடம் வரை என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன் - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 723, 724..
தினத்தந்தி (11.10.55) :
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?
ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர். (மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது அண்டை மாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் மொழிவாரி தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் கொண்டனர்.
அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.
ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.
மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.
தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டு விட்டு, ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும், தனி தமிழ்நாடு கேட்டதாகவும்
மலையாளிகளைக் கண்டித்ததாகவும் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.
ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை...
வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த புத்தகம்....
ஒற்றை தானியம் என்பது ஒரு பிரபஞ்சம். ஒளி, நீர், காற்று, வெப்பம், வெளி, இருள் என இயற்கையின் அடிப்படைக்கூறுகள் அத்தனையும் ஒரு தானியத்துக்குள் திரள்கிறது. ஒன்றுமற்ற புள்ளியாக இருந்து, எல்லாம் நிறைந்ததாக ஒரு தானியமணி இருப்படைதலுக்குப் பின்னணியில் ஒரு பெரும் பயணப்பாதை இருக்கிறது. பேரியற்கையின் அறுந்துவிடாத நீள்கண்ணி, சிறுவிதை வரைக்கும் தொடர்ந்து உயிர்வாழ்க்கையை பேரற்புதமாக மாற்றுகிறது.
இந்த உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொண்டால், உலகில் எவ்வுயிருமே போராலும் பசியாலும் பிணியாலும் துயரமடையாது. பிரபஞ்சத்தின் லயத்தோடு ஒத்திசைந்து பூமிக்குள் மனித வாழ்வை தொடர்வதும், அதற்கான நன்றியை செயலாக பரிணமிக்கச் செய்வதுமே ஞானத்தின் திறவுவாசல்.
சத்தியத்தின் இவ்வார்த்தைகளை உட்சுமந்து, எண்ணற்ற மனிதர்களின் கண்ணோட்டத்தையும் வாழ்க்கை பாதையையும் மாற்றியமைத்த புத்தகம் மசானபு புகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முதற்பதிப்பாக பூவுலகின் நண்பர்கள் வாயிலாக வெளிவந்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தை எளிய திருத்தங்களுடன் புதிய வெளியீடாக தன்னறம் நூல்வெளி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து வெளியிடுகிறோம். இச்சமயத்தில், முந்தைய காலகட்டங்களில் இப்புத்தகத்தை அனைத்துத் தளங்களிலும் பதிப்பித்து கொண்டுசேர்த்த எல்லா தோழமைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால், இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது” என்கிறார் அன்றைய பிரதமர்.
மறுநாள், கடுமையான காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த புகோகாவிடம் நண்பர்கள் உடல்நலம் விசாரித்த போது,”ஆமாம். இது நான் செய்த தவறால் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதிகார பலத்தால் ஏதாவது நன்மை சாத்தியப்படும் என நினைத்து அங்குசென்று உணவருந்தியது என் தவறுதான். அன்பால்தான் அனைத்தும் சாத்தியப்படும். இதைப் புரிய வைப்பதற்காகவே இந்தச் சிறு வாதையை இயற்கை எனக்குத் தந்திருக்கிறது. நான் மருந்து எடுத்துகொள்ளப் போவதில்லை” எனச்சொல்லி உண்ணா நோன்பிருக்கிறார் ஃபுகோகா.
சமகாலத்தில் சர்வதேச அரசமைப்புகள் பலவீனமடைந்து, அதன் அதிகாரக் கொள்கைகள் பிடிப்பிழந்து வீழ்ந்திருப்பது, ‘இயற்கைக்குத் திரும்புதல்’ எனும் அவரின் அனுபவ வாழ்முறை, உலகம் முழுமைக்குமான தீர்வாக இருப்பதை அறியமுடிகிறது. இளைய தலைமுறை கருத்தாக்கங்கள் இந்த அடிமண்ணிலிருந்தே முளைக்கத் துவங்கியிருக்கிறது.
ஃபுகோகா, இவ்வேளாண்முறைக்குள் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள தனது நிலத்திற்கு வந்துசேர்ந்த நாளின் முதற்விடியலை மனதிலேந்தி, இயற்கையின் மாறாத தத்துவத்தில் வேர்விட்டு நிற்கும் இந்நூலை அனைவரிடத்தும் கொண்டுசேர்ப்போம். மாறுதலுக்கான வாசல் எக்காலத்தும் திறந்தேயிருக்கிறது.
-தன்னறம்...
ஓம் = அ+உ+ம்...
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே..
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
-ஆசான் திருமூலர்..
அருவுருவ ஒலியொளி (நாதசுடர்) ஓம்..
ஓம் = அ+உ+ம்
இந்தப் பிரபஞ்சமே "ஓம்" என்ற அருவுருவ ஒலி(அருவம் > நாதம்), ஒளி(உருவம் > சுடர்/ சோதி)யிலேயே உருவாகி, அந்த ஓங்காரத்திலேயே ஆதி தொடங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அளவற்ற ஓங்கார நாதத்தைத் தம்முள் தட்டி எழுப்பிக் கேட்டும், அடிமுடி காணமுடியாத ஓங்காரப் பிளம்பாகியச் சுடர்/ சோதியில் இரண்டறக் கலந்தும், பேரின்பமாகிய பேரறிவெனப்படும் பேரருள் பெற்றவரே சித்தர்கள்.
"ஓம்" அதன் ஆற்றல்கள் அளவிட முடியாதளவிற்குப் பல்வேறு பேதங்களாக இருக்கின்றது. அதன் பல்வேறு ஆற்றல்களையே சித்தர்கள் பல்வேறு இறைநிலைகளாக (பல்வேறு கடவுளராக) உருவகித்து உலக மக்களுக்கு விளக்கினர். அந்த ஓங்காரமாகிய அருவுருவ நாதசோதியுடன் இரண்டறக் கலத்தலே ஈடிணையற்ற முத்திகளும், சித்திகளும் பெற்ற சிவநிலை (இறைநிலை) யாகும்.
ஓம் அழிவற்றது, அளவற்ற ஆற்றல்கள் கொண்டது. அதையடைந்த சித்தர்களும் அழிவற்றவர்கள், அளவற்ற ஆற்றல்கள் கொண்டவர்கள். அந்த அழிவற்ற நிலையான இறைநிலையையே சாகக்கல்வியாகவும் மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வாகவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
சித்தர்கள் தாம் பல்கோடி யுகங்கள் தாண்டியும் வாழ்வதாக தங்கள் பாடலில் குறிப்பிடுவதும் இதன் நிமித்தமே.
தினமும் "ஓம்" என்போம். ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் பெறுவோம்...
ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே...
உலகில் முதல் மொழி தமிழ் என்று ஏற்காவிட்டாலும்..
உலகின் முதல் மாந்தன் தமிழன் என்று ஏற்காவிட்டாலும்..
60,000 ஆண்டுகளுக்கு முன் உலகம் அழிவைச் சந்தித்தபோது தப்பிப் பிழைத்த ஒரு மாந்தர் குடும்பம் மீண்டும் இனப்பெருக்கம் செய்து உலகம் முழுவதும் பரவியது என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர். ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறியுள்ளார்.
அந்த குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பம் தான். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
ஆம். மேலும் இதுபற்றி அறிவோம்.
மனித வரலாறு காலம் பின் செல்லச் செல்ல மங்கி தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.
ஆனால் எழுதும் வழக்கம் வரும் முன்னே நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் செவிவழிப் பழங்கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக, தொன்மங்களாக, நாடகமாக, இலக்கியமாக இன்றும் பல்வேறு மாய மந்திரங்களுடன் விரவப்பட்டு இன்றும் உள்ளன.
உலகில் தொன்மையான இனங்களின் புராணங்களில் ஒரு நிகழ்வு மட்டும் தவறாமல் இடம்பெருகிறது.
அது உலகம் நீரில் மூழ்குவதும் அதிலிருந்து குறிப்பிட்ட மக்கள் பிழைப்பதும் ஆகும்.
இது பைபிளில் நோவா கதையாக உள்ளது.
குரானில் நூ கதையாக உள்ளது.
தமிழ் இலக்கியத்தில் குமரிக்கண்டம் மூழ்கியபோது மக்களை காப்பாற்றிய நெடியோன் கதையாக உள்ளது.
இது தவிர பைபிள் கூறும் முதல் மனிதன் ஆதாம். இவன் தமிழனே.
தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…- ஆதியாகமம் (2-8)
கிறித்தவ மதம் தோன்றியது மத்திய ஆசியா.
அதற்கு கிழக்கே பழமையான குடியாக தமிழர்கள்தான் இருக்கிறோம்.
ஆதாம் என்ற பெயர் ஆதிமனிதன் என்று பொருள்படும் வகையில் உள்ளது.
ஆதி என்றால் தொடக்கம்.
ஆதாம் வாழ்ந்த இடம் இலங்கைத் தீவில் இன்றும் உள்ளது.
அதனை 'ஆதாம் சிகரம்' (Adams peak) என்று அழைக்கின்றனர்.
தமிழர்கள் இதனை 'சிவனொளிபாத மலை' என்று அழைக்கின்றனர்.
மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.
மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) 'ஆதம் மலையில் நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.
(இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறதாம்.
இது உறுதியாகத் தெரியவில்லை.
இதை பிற்காலத்தில் யாராவது வைத்திருக்கலாம்).
‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று.
ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆதன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் 'ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
கந்த புராணத்தில் "ஈன்ற ஔவையும் அத்தனும்" என்று வருகிறது.
"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )
ஏவாள் என்றால் தாய் என்று பொருளாம்.
ஈவே (Eve) என்பது பைபிளை மொழி பெயர்க்கும் போது ஏவாள் என்று ஆக்கப்பட்டது.
பைபிள் எபிரேய மொழியில் (ஹீப்ரு) இருந்து தான் மற்ற மொழிகளுக்கு சென்றது.
ஈவே என்பதும் மொழிபெயர்ப்பு திரிபு.
முதல் பைபிள் ஏவாளை ஆயா என்று கூறிப்பிடுகிறது.
ஆயா, ஆய் என்பன தாயையோ அல்லது தாயின் தாயையோ குறிக்கும் தமிழ்ச்சொல்.
குரான் ஹவ்வா என்று குறிப்பிடுகிறது.
இது ஔவை என்பதன் திரிபு.
மூழ்கிய குமரிக்கண்டத்தின் எஞ்சிய ஒரு பகுதி குமரி மாவட்டம்.
இம்மாவட்டத்தில் ஔவைச் கோயில்கள் இருக்கின்றன.
தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
குமரி மாவட்டத்து தமிழ் இசுலாமியர்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை சூடிக்கொள்கின்றனர்.
(‘பாவா’என்றால் தந்தை என்று பொருள்).
ஆதமின் புதல்வர்கள் ஆபில் மற்றும் காபில் இவர்களின் கல்லறைகள் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் உள்ளன.
அதுதான் ஆபில்காபில் தர்கா.
இதுபற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவேயில்லை என்பது பெரிய வேதனை.
ஆபில் காபில் தர்காவில் அடக்கமாகி உள்ள உடலை தோண்டி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.
ஆதாம் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த சுவடுகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை அறிக.
பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவருடைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.
' பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலகக் கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.’
‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது,
கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப்பட்டு, மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது இதன் பொருள்.
நோவா கதையில் அவர்தான் உலகிலேயே கப்பல் கட்டிய முதல் மனிதர்.
அதேபோல உலகிலேயே முதன்முதலாகக் கப்பல் கட்டிய இனம் தமிழினம்.
நோவா என்ற பெயர் நாவாய் என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்துப்போகிறது.
நாவாய் என்றால் நா+வாய்.
அதாவது நாக்கின் முன்புறம்.
கப்பலின் அமைப்பை இது கூறுகிறது.
இதுதான் ஆங்கிலத்தில் Navy ஆனது.
ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கப்பலைக் குறிக்க இச்சொல் சிறுசிறு மாற்றத்துடன் வழங்கப்படுகிறது.
உலகின் பழைய துறைமுகங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரையே கொண்டுள்ளன.
உலகின் அனைத்து மொழிகளிலும் கப்பல் தொடர்பான சொற்கள் தமிழ் வடிவத்திலேயே உள்ளன.
“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.”
-ஆதியாகமம் 1.
நோவா கோபர் மரத்தில் கப்பல் செய்ததாக கூறப்பட்டுள்ளது. கோபர் என்ற சொல் மத்திய ஆசிய மொழிகளில் குறிப்பிட்ட பொருளைத் தரவில்லை.
தமிழில் காப்பெரு மரமாக இருக்கலாம்.
காப்பெரு என்றால் பெரிய காட்டுமரம் என்ற பொருள்.
நோவாவின் புதல்வர்கள் ‘ஷெம்’, ‘ஹாம்’
நோவா ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டாராம்.
ஆனால் ஹாம் அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான்.
அதனால் கோபம் கொண்ட நோவா,
காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய ஷெம் சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.
இதில் நோவாவின் ஒரு மகன் கறுப்பாகவும் மற்றொருவர் வெண்மையாகவும் இருந்ததாக அறிகிறோம்.
திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும் போது அவை ‘காமனும் சாமனும்’ (ஹாம், ஷெம்) போல இருந்ததாகக் கூறுகிறார்.
மனு எனும் அரசன் ஒரு பேசும் மீனை கண்டறிந்து வளர்ந்தானாம். அது பெரிதாக வளர்ந்துகொண்டே போனதால் கடலில் கொண்டு விட்டானாம்.
பிரளயம் வந்ததும் மனுவின் கப்பலை இழுத்துக் கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.
மகாபாரதத்தில் வைவசுத மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.
பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப்படுகிறது.
அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.
சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.
தமிழ் இலக்கியங்கள் நெடியோன் என்ற பாண்டிய மன்னன் குமரிக்கண்டம் மூழ்கியதும் கப்பலில் தப்பித்து வடக்கே பண்டைய தமிழகத்திற்கு வந்து தமிழ்மன்னர்களுடன் போரிட்டு தன் ஆட்சியைப் பரப்பி, மக்களைக் குடிவைத்து, பிறகு கப்பலில் சென்று தற்போதைய இந்தோனேசியாவின் சாலியூரைத் தாக்கி கைப்பற்றி விதைநெல் கொண்டுவந்தது வேளாண்மையை பெருக்கினான் என்று கூறுகின்றன.
மச்சபுராணத்திலும், பாகவத புராணத்திலும் இதே போன்ற மீன் கதை உள்ளது.
குரானிலும் நூ கதை நோவா கதையையே ஒத்துள்ளது.
(மலைமேல் நோவா விட்டுச் சென்ற கப்பல் துருக்கியில் அராரத் மலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினர். ஆனால் அது கப்பல் இல்லை எரிமலைப் படிவம் என்று பிறகு தெரியவந்தது)
உலகத்தின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.
‘கில்கமெஷ்’ என்ற புராதனப் பாபிலோனியக் காவியத்தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.
சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.
ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது.
கண்டம் மூழ்கிய கதைகளும் உலக தொன்மங்களில் காணக்கிடைக்கின்றன.
கிரேக்கரான ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.
நோவா கப்பலில் இருந்து இறங்கிய மக்கள் செங்கலை அறுத்து கட்டிடம் செய்ததாகக் கூறுகிறது பைபிள்.
உலகில் முதன்முதலாகச் செங்கல் கட்டிடம் காணப்படுவதும் தமிழர் நாகரீக தளமான சிந்து சமவெளியில் தான்.
ஆக உலகில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம். அதிலேயே மாந்த இனம் வாழ்ந்து வந்தது. அங்கே பேசப்பட்ட மொழி தமிழ்.
அக்கண்டம் மூழ்கிய பிறகு சொற்ப எண்ணிக்கையில் தப்பித்த மக்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறி உள்ளனர்.
வரலாறு அறிந்த முதல் மனிதன் ஆதன். அவன் பேசியமொழி தமிழ்.
மூழ்கிய கண்டம் குமரிக்கண்டம்.
அதிலிருந்து மக்களைக் காப்பாற்றியவன் நெடியோன்.
நன்றி:
1) முத்துக்குளிக்க வாரீகளா? (தொடர்) _கவிக்கோ அப்துர் ரகுமான் ..
2) ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி! (தொடர்) _யாழறிவன்..
3) மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்..
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் அனைவரும் விடுதலை: கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பு...
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்படுவதாக கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனால் கடந்த 30.07.2008ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ராஜ்குமார், 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 14 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வீரப்பன் உட்பட 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையின் போது ஒருவர் உயிரிழக்க, ஒருவர் தலைமறைவாகவே உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றத்தை நிரூபிக்கும் வகையில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்...
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு...
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது.
இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
(குப்லாய் கான்)..
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான்.
தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடைலேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்...
ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்...
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்..
விளக்கம்:
பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.
மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார்.
ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது.
அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது.
அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும், ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.
இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்..
இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.
வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது?
பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும் (ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.
அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.
"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"
ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி..
இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.
இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை, பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை.
ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை...
தமிழச்சி கேப்டன் லட்சுமி...
சென்னையில் பிறந்த லட்சுமி டாக்டருக்குப் படித்து சிங்கப்பூரில் பணியாற்றினார்.
பின் நேதாஜியுடன் சில போரட்டங்களில் ஈடுபட்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
அதன் பின் ஜான்ஸி ராணி ரெஜி மெண்ட் என்ற பெண்கள் ராணுவப்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்று கேப்டன் லட்சுமி என்று அழைக்கப்பட்டார்.
பெண்களில் சிறந்ததோர் காவியம்...
தமிழ் பெயர்களையே பயன்படுத்துவோம்...
Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM -தற்காலிக* நினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers ( 0, 1 )- இரும எண்கள் / துவித* எண்கள்
Internet - இணையம்/ இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC ( Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command - கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language - கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
modem- இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Synchronise - ஒத்தியக்கம்...
காது ல இந்த இடத்துல கை வைச்சு அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை...
உடல் எடை அதிகரிப்பது தற்போது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
அதிகம் கஷ்டப்படாமல் காதில் விரல் வைத்து சிறிய பயிற்சியை செய்வதன் மூலம் கூட உடல் எடையை குறைக்க முடியும்.
காதின் கீழ் நுனி அருகில் முக்கோணம் வடிவு உள்ள இடத்தில் விரலை வைக்க வேண்டும். பின்னர் தாடையை திறந்து மூட வேண்டும்.
தாடையை திறந்து மூடும் போது நாம் விரல் வைத்திருக்கும் எந்த இடம் அதிகம் அசைகிறதோ அது தான் பயிற்சி செய்ய சரியான புள்ளியாகும்.
இது தான் காதையும், தாடையையும் இணைக்கும் புள்ளியாகும்.
அங்கு விரல் வைத்து ஒரு நிமிடம் அழுத்த வேண்டும்.
சரியான உணவு பழக்கத்துடன் இந்த எளிய பயிற்சியை தினம் செய்து வந்தால் விரைவில் உடல் எடை குறைய தொடங்கும்...
இலுமினாட்டியும் டைட்டானிக் கப்பலின் உலக அரசியலும்...
இந்த உலக அரசியல் பற்றிய விழிப்புணர்வு நம்மை இலுமினாட்டிகளின் மாய வலையிலிருந்து தப்பிக்க வைக்கும். அவர்கள் நம் வாழ்வை சீரழித்து வருகிறார்கள் எல்லா வழிகளிலும்.
இப்பொழுதைய பதிவில் அட்லண்டிக் பெருங்கடல் பேரழகாய் ஒய்யாரமாக பயணம் செய்த டைட்டனிக் பற்றி பார்ப்போம்..
இவளின் ஒய்யாரப் பயணம்
15 ஏப்ரல் 1912, அதிகாலை 2:20 ல் நிறைவு ஏய்தியது..
இந்நிகழ்விற்கு காரணமாகவும் இலுமினாட்டிகளே இருந்துள்ளனர்..
இவர்கள் எப்பொழுதுமே ஒரு கல்லில் பல மாங்காய் அடிப்பவர்கள்.
விழுந்த ஒரு மாங்காவை பற்றி மட்டும் இதில் பார்ப்போம்..
US Federal Reserve bank...
இந்த மாங்காவை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தார் அடுத்து அமேரிக்காவுக்கு குறிவைக்கின்றனர்.
வங்களில் பொய்மையை அறிய எனது பழைய பதிவை வாசியுங்கள்.
நம் இலுமினாட்டிகள் அவர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிய கூடாது என்று முடித்தவரை சட்டப்படி தான் செய்வார்கள்.
சில நேரம் சட்டங்களை உருவாக்கியும் செய்வார்கள்.
அதன்படி யூனிடட் சிடேட் பெடரல் ரிசர்வ் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது அதற்கு எதிராக நின்றவர்கள் முக்கியமாக மூன்று பேர்.
Benjamin Guggenheim, Isa strauss, Jecob Astor. இவர்களால் 1912 ஏப்ரல் மாத தொடக்கத்தில் அந்த வங்கி திட்டம் ஊத்தி மூடப்பட்டது.
TITANIC SECRET...
டைட்டானிக் பயணம்..
அதே ஏப்ரலில் இம்மூவரும் டைட்டானிகில் பயணம் செய்தனர். மூன்று பேரும் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் 15 தேதி கப்பலோடு மூழ்கினர்..
மீண்டும் ரிசர்வ் வங்கி..
டிசம்பர் 1913 ல் US Federal Reserve Bank செயல்பட ஆரம்பித்தது. இதுவே விழுந்த மாங்காய்களில் ஒன்று..
எப்போதுமே சொல்லிட்டு செய்கின்ற இலுமினாட்டிகள் இதையும் அப்படி தான் செய்தார்கள்..
Morgan Robertson, 1898ல் Futility என்று ஒரு நாவல் வெளியிடுகிறார்.
அதில் டைட்டன் என்ற மூழ்கடிக்க முடியாத கப்பல் ஏப்ரல் மாதத்தில் ஒரு பனிபாறையில மோதி மூழ்குகிறது, உயிர் காக்கும் படகுகள் குறைவாக இருந்ததால் நிறைய பேர் இறந்து போகிறார்கள். இது கதை..
இது பதினான்கு ஆண்டுகள் கழித்து உண்மையானது டைட்டானிக்..
நான் ஜெகப் அஸ்டர் என சொல்லியத கவனித்தீர்களா..
அஸ்டர் குடும்பமும் இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று.
அப்போது ஏன் இவரும் அந்த வங்கி வரவிடாமல் தடுக்க முயர்ச்சித்தார்.
அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்..
அடுத்துவரும் பதிவுகளில் இவர்களின் அடையாளங்கள் பற்றியும் சொல்ல இருக்கிறேன்...
அன்பு தான் வாழ்க்கை...
நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.
அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
மதத்தின் ரகசியம்.
நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.
உன்னைப் பற்றியே சிந்திக்காதே.
சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
தீமையைச் செய்வதால், நமக்கு நாமே
தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.
சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது. நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ் என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி
அவனிடமிருந்து வெளிப்படும்.
நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு
ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.
விருப்பங்கள் நிறைவேறும்
அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய.உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும் வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது. அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்...
கிளியோபட்ரா.....
வரலாற்று பேரழகிகளின் பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....
பாலில் குளிப்பால்... பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....
முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....
எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....
அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......
அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....
எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...
தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......
எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....
11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....
தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..
தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...
எகிப்து நாட்டு வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....
எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...
அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது 54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...
இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....
அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...
இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க் ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில் தன்னை தவிர ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...
இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...
சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..
சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.....
அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு வயது 39...
அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......
உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது... நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...
எகிப்த்தை ஆண்ட தமிழன்...
எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).
இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .
அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.
இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.
ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.
இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..
இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..
எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..
உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...
சிங்கள நடனமும் தமிழன் போட்ட பிச்சைதான்...
யாழ் பல்கலையில் கண்டிய நடனமும் ஆடுவோம் என்று சிங்களவர் அடாவடி..
உண்மை என்னவென்றால்...
கண்டி தமிழர் மண் என்பதுடன் கண்டிய நடனமும் தமிழருடைய சொத்து என்பதுதான்.
சிங்களவர்களின் தேசிய நடனமான கண்டிய நடனத்தின் வேர்கள், அதன் சொற்கள், நாட்டியத்தின் விதிகள் அனைத்தும் இன்றும் தமிழ் மொழியில் தான் இருக்கின்றன.
கண்டிய நடனத்தின் முக்கியமான பாகத்துக்குப் பெயர் ‘வண்ணம’ (தமிழில் வண்ணம்).
கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம்.
சிங்கள மொழி தமிழிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அந்த சொற்கள் எல்லாம் கடைசி எழுத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்கள உச்சரிப்புக்கேற்றதாக உருமாற்றப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக..
தமிழில் அம்பலம், சிங்களத்தில் அம்பலம;
தமிழில் எதிரி, சிங்களத்தில் எதிரிய;
தமிழில் கடிவாளம், சிங்களத்தில் கடிவாளம;
தமிழில் காப்பு, சிங்களத்தில் காப்புவ;
இப்படி ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் இரவல் வாங்கப்பட்டு சிங்களமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சிங்கள நடனத்தில் பதினெட்டு விதமான வண்ணங்கள் அதாவது நாட்டிய பாரம்பரியம் உண்டு.
சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட சாதிபிரிவினர் இந்த நடனமாடுவதையும், பறை (சிங்களத்தில் 'பெற') அடிப்பதையும் அரசவையிலும் ஆலயங்களிலும், கிராமங்களிலும் செய்து வந்தனர்.
ஆனால் கண்டிய நடனத்துக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை திட்டமிட்டு மறைத்தவர்கள் அவர்களல்ல.
சுதந்திரத்துக்குப் பின்னால் சிங்களவர்களின் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க புறப்பட்ட, நகர்ப்புற, படித்த, உயர்சாதி சிங்களவர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தான் திட்டமிட்டு, தமிழ் வேர்களை மறைத்து, கண்டி நடனத்தை சிங்களவர்களுடையது மட்டுமாக்கி, அதற்கு மகாவம்சத்துப் புராணக் கதையையும் இயற்றிவிட்டனர்.
கண்டி நாட்டியக்காரார்கள் வண்ணம், சிறுமருவு, அடவு, காத்திரம், மாத்திரை எனும் தமிழ் நாட்டிய மரபுகளை எந்த விதமான சிங்களமயப் படுத்தலுமில்லாமல் தமிழ்ச் சொற்களையே இன்றும் சிங்களத்திலும் பாவிப்பதைக் காணலாம்.
அடவு:
இந்தச் சொல் தமிழர்களின் பாரம்பரிய சதிராட்டத்தைப் (இன்றைய பாரத நாட்டியம்) போன்றே கண்டிய நடனத்திலும் பாதங்களின் அசைவுகளைக் குறித்தாலும், அது பாத அசைவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
தஞ்சாவூர் பாரம்பரியத்தில் 65 அடவுகள் உண்டு.
அவை பல்வேறு விதமான நாட்டிய அசைவுகளைக் குறிக்கின்றன.
சிங்களவர்களின் தேசிய நடனமாகிய கண்டிய நடனத்திலும் ஒவ்வொரு வண்ணம்(ம) நாட்டியத்தின் முடிவிலும் ஆடப்படுவது அடவு ஆகும்.
காஸ்திரம் அல்லது காத்திரம்:
இதுவும் ஒரு பலமான அல்லது கடுமையான நாட்டிய அசைவுகளைக் குறிக்கிறது.
கண்டிய நடனத்தில் காத்திரத்தை தொடர்ந்து ஆடப்படும் அடிப்படை நாட்டிய அசைவுகளும், அதற்கேற்ப மேளத்தின் அடியும் மாத்திரை என்றே அழைக்கப்படுகிறது.
இரண்டாவது, மூன்றாவது மாத்திரைகளின் பின்னர் காத்திரம் சிக்கலான நாட்டிய அசைவாக மாறுகிறது.
நாலாவது மாத்திரையின் பின்பு காத்திரம் நீண்ட நேரத்துக்கு ஆடப்படும்.
நாலாவது மாத்திரையில் நாட்டியமாடுபவர் சுதந்திரமாக, அவரது விருப்பப்படி துள்ளவும், சுழன்றாடவும் முடியும்.
ஆனால் மேளம் அடிப்பவர் அவரது அசைவுகளைக் கவனமாக அவதானித்து, அவரது நாட்டிய அசைவுகளுக்கேற்ப மேளத்தை ஒலிக்க வேண்டும்.
சிங்கள நடனத்தில் வண்ணம் என்றழைக்கப்படும் நடனத்தின் உச்சகட்டம் இது.
சிறுமருவு:
தமிழ்ச் சொல்லாகிய சிறுமருவு என்ற சொல்லை மென்மையாக, மெதுவாக ஆடப்படும் நாட்டிய அசைவுகளுக்கு சிங்களவர்கள் இன்றும் பாவிக்கிறார்கள் (பயன்படுத்துகிறார்கள்).
காத்திரத்தின் போது பலமான நாட்டிய அசைவுகளையும், சுழன்றும், துள்ளியும் ஆடிக் களைத்துப் போன நாட்டியக்காரரும், மேளகாரரும் சிறுமருவின் போது இளைப்பாறிக் கொள்ளுவர்.
நையடி (Naiadi) அல்லது நையாண்டி:
நையாண்டி பாரம்பரியம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு.
இலங்கையிலும் சிங்களவர்களால் கதிர்காம முருகனை வேண்டி பம்பை, நையாண்டி மேளம் என்பவை ஆடப்பட்டன.
ஆனால் இன்று விஸ்ணு கோயில்களிலும் ஆடப்படுகிறது. பம்பை, நையாண்டி என்று தமிழ் பெயர்களால் அழைத்துக் கொண்டே அது வட இந்தியாவிலிருந்து மகிந்த தேரோ அறிமுகப்படுத்தினார் என்று கூறும் சிங்களவர்களுமுண்டு.
பந்தெறு (சிங்களம்)/ பந்தெறி (தமிழ்):
பந்தெறு நடனம் கண்ணகி அல்லது பத்தினி தெய்வத்த்தின் (சிங்களத்தில் பத்தினித்தெய்யோ) அருளை வேண்டி ஆடப்படுகிறது.
இது போலத்தான் உடுக்கு(தமிழ்), உடெக்கி (சிங்களம்) ஆனது.
தம்பட்டம் (தமிழ்), தம்மெட்டம் (சிங்களம்) ஆனது.
முயலடி வண்ணம் முசலடி வண்ணமானது.
கண்டியின் மல்வத்தை விகாரையின் புத்தபிக்குகளுக்கு தமிழகத்துக் கவிஞர்கள் 18ம் நூற்றாண்டில் நாட்டியத்தின் ஒவ்வொரு வண்ணத்துக்கும் எழுதிக்கொடுத்த நாலடி கவிதைகள்தான் இன்றும் பாடப்படுகின்றன. இதனை கவி என்றே அழைக்கின்றனர்.
வீரசோழியம் என்ற தமிழ் பவுத்த இலக்கண நூலைக் கொண்டே சிங்கள இலக்கணமும் வகுக்கப்பட்டது.
வந்தேறிக்கேது வரலாறு ?
சிங்கள இனத்திற்கென்று தற்சார்பாக எதுவுமே கிடையாது. அத்தனையும் தமிழர் போட்ட பிச்சை...
Subscribe to:
Posts (Atom)